Friday, March 11, 2011

சினிமா கிசுகிசுக்கள் - 1944 முதல் 2044 வரை

டிஸ்கி : இந்தப் பதிவில் உள்ள படங்கள் சும்மா குளிர்ச்சிக்காக மட்டுமே..கிசுகிசுவிற்கும் அதற்கும் சம்பந்தம் இருந்தால் கம்பெனி பொறுப்பல்ல!

1944:
ஓல்டு அட்டாக்!
பாட்டுக்கார நடிகர் செல்லும் இடமெல்லாம் தனிக்கச்சேரி நடத்துகிறாராம்..யாருடனா? ரசிகைகளுடன் தான்..இதைக் கண்டு நாடக நடிகர்கள் பொருமுகிறார்களாம்..’சினிமாவை விட எவ்வளவு கஷ்டப்பட்டு நாடகம் நடத்துகிறோம்..ஆனால் இந்த மனுஷனுக்கு மட்டும் வாழ்வைப் பாரு..நம்மளும் தான் முடி வளர்த்திருக்கோம்..ஆனாலும் எண்ணெய்ச் செலவு தான் மிச்சம்’- னு தினமும் புலம்பிக் கொண்டே திரிகிறார்களாம்!

1967 :
அந்த நடிகரை இந்த நடிகர் சுட்டதுல நாடே அல்லோலப்படுது. அந்த தலைவரைக் கொல்ல அந்த நடிகர் திட்டம் போட்டதா இந்த நடிகர் சொன்னாலும், அந்த நடிகரை அறிஞ்சவங்க அதை நம்பலை..போலீஸும் எதனால சுட்டாருன்னு குழம்பிப் போய் இருக்கு. ஆனால் எல்லாம் தெரிஞ்ச ‘பலான புத்தக ‘ நடிகை மட்டும் திருட்டு முழி முழிக்காராம்! 
கோல்டு அட்டாக்!
1951 :
திலக நடிகர் பேரொளி நடிகையோடு ஒட்டிக் கொண்டே திரிகிறாராம். சூட்டிங் முடிந்தும் டூயட் தொடருதாம். இதனால் ‘அம்மா வீட்டில்’ ஒரே கலவரம். நடிகரின் மனைவி எப்படியும் நடிகரை அந்த சாகசக்காரியிடம் இருந்து மீட்டே தீருவது என சபதம் செய்துள்ளாராம். முடிவு என்னாகுமோ!

1991:
இளைய நடிகர் பூ நடிகையோடு ஒட்டிக் கொண்டே திரிகிறாராம். சூட்டிங் முடிந்தும் டூயட் தொடருதாம். இதனால் ‘அம்மா வீட்டில்’ ஒரே கலவரம். நடிகரின் மனைவி எப்படியும் நடிகரை அந்த சாகசக்காரியிடம் இருந்து மீட்டே தீருவது என சபதம் செய்துள்ளாராம். முடிவு என்னாகுமோ!
நான் இல்லைப்பா!
2006:
விரல் நடிகர் அடுத்து எடுக்கும் பலவான் படம் நடிகரின் பள்ளிக்கால காதலி-1ஐப் பற்றிய கதையாம். பல விஷயங்களைப் புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கோடம்பாக்கமே கொந்தளித்துப் போய் உள்ளது.
அப்படிப் பாக்காதீங்க..க்கோப்ப்பால்..க்கோப்ப்பால்!
2011:

விரல் நடிகர் அடுத்து எடுக்கும் போடி-போடா படம் தன் பள்ளிக்கால காதலி-2 ஐப் பற்றிய கதையாம். பல விஷயங்களைப் புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கோடம்பாக்கமே கொந்தளித்துப் போய் உள்ளது.

2031:
விரல் நடிகர் அடுத்து எடுக்கும் ’போடி சக்களத்தி’ படம் தன் பள்ளிக்கால காதலி-3 ஐப் பற்றிய கதையாம். பல விஷயங்களைப் புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கோடம்பாக்கமே கொந்தளித்துப் போய் உள்ளது.

2044:

விரல் நடிகர் அடுத்து எடுக்கும் ’வாடி முண்.............. - இன்னுமாங்க படிக்கீங்க..போங்க பாஸு..போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க!..அப்போ தான அவங்களும் இதை வருங்காலத்துல படிக்க முடியும்!

டாகுடரு தான்!மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. போட்டாச்சு... அப்புறம்... பதிவு அருமை...

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

  ReplyDelete
 2. என்ன போட்டாச்சு? வேறென்ன ஓட்டு தான்...

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

  ReplyDelete
 3. வந்துட்டேன்...

  படிச்சுட்டு வரேன் பாஸ்...பத்மினி மேட்டர் போல இருக்காதுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 4. விரல் நடிகரு...ஹி ஹி...கடைசி படத்தோட தலைப்பு டைப் அடிக்கறதுக்குள்ள கரென்ட் போயிடுச்சா பாஸ்?

  ReplyDelete
 5. அப்படி பாக்காதீங்க கோபால்...ஹி ஹி ..அருமை

  ReplyDelete
 6. @டக்கால்டி //கடைசி படத்தோட தலைப்பு டைப் அடிக்கறதுக்குள்ள கரென்ட் போயிடுச்சா பாஸ்?// அதை முழுசா அடிச்சா, வீட்ல பீஸை புடிங்கிடுவாங்க டகால்ட்டி!

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash நீங்க ரொம்ப நல்லவருங்கோ!

  ReplyDelete
 8. அது கோபால் இல்லிங்கண்ணா., க்க்கோப்ப்பால்

  ReplyDelete
 9. மாப்ள எனக்கு சரோசா கமெண்டு தான் புடிச்சிருக்கு ஹி ஹி!

  ReplyDelete
 10. அட்ரா சக்க... அருமை..அருமை...

  ReplyDelete
 11. கிசு கிசு ஒரு மாதத்தில் மறைஞ்சிடும்

  இத்தன வருஷம் கழித்து உங்கள் பதிவில் ம்ம்ம்ம்..........

  ReplyDelete
 12. நல்லாயிருக்கு!
  கோடம்பாக்கம் பெயர் மாறாமல் இருக்கப் போவது குறித்து சந்தோஷம்!!

  ReplyDelete
 13. அப்படிபார்க்காதீங்க கோபால? நான் கோபால் இல்லைங்கோ, ஆமா இந்த கிசுகிசுவெல்லாம் உண்மையா நண்பா? ஆனாலும் அந்த கடைசி கிசுகிசு மட்டும் உண்மையாதான் இருக்கும்னு தோணுது:-)

  ReplyDelete
 14. @வீராங்கன்://அது கோபால் இல்லிங்கண்ணா., க்க்கோப்ப்பால்//அட, ஆமால்ல..மாத்திடறேன் சார்..சரோஜாதேவியை ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணியிருப்பிங்க போல..ம்..ம்..

  ReplyDelete
 15. @விக்கி உலகம்//மாப்ள எனக்கு சரோசா கமெண்டு தான் புடிச்சிருக்கு ஹி ஹி!// கமெண்ட் மட்டும் தானா..

  ReplyDelete
 16. @வேடந்தாங்கல் - கருன்அட்ரா சக்கயா..அவரை ஏங்க இங்க இழுக்கீங்க?

  ReplyDelete
 17. @THOPPITHOPPI// இத்தன வருஷம் கழித்து உங்கள் பதிவில் ம்ம்ம்ம்....// பழசை மறக்கக்கூடாது, இல்லையா..

  ReplyDelete
 18. @middleclassmadhavi//கோடம்பாக்கம் பெயர் மாறாமல் இருக்கப் போவது குறித்து சந்தோஷம்!!// சிம்புவும் கோடம்பாக்கம் பெயரும் மாறாதுன்னு ஒரு நம்பிக்கை தான்!

  ReplyDelete
 19. @இரவு வானம் //ஆமா இந்த கிசுகிசுவெல்லாம் உண்மையா நண்பா?// அந்தக் காலத்தில் இதெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது..உண்மையான்னு சம்பந்தப்பட்டவங்களுக்குத் தான் தெரியும் நைட்!

  ReplyDelete
 20. ப‌திவில் ஒரு ச‌ந்தேக‌ம்,.. பாவனா ச‌ட்டையில் இருப்ப‌து பூனையா ஆந்தையா??

  ReplyDelete
 21. @jothi //ப‌திவில் ஒரு ச‌ந்தேக‌ம்,.. பாவனா ச‌ட்டையில் இருப்ப‌து பூனையா ஆந்தையா??// ச்சே..இந்திய ஆண்கள் ஏங்க இப்படி இருக்காங்க..சம்திங் இஸ் வெறி வெறி ராங்!

  ReplyDelete
 22. @Speed Master//ஹி ஹி// அடேங்கப்பா..எவ்ளோ பெரிய பின்னூட்டம்!

  ReplyDelete
 23. @Speed Master//ஹி ஹி// அடேங்கப்பா..எவ்ளோ பெரிய பின்னூட்டம்!

  ReplyDelete
 24. என்னாது மைனர் குஞ்சை சுட்டுட்டாங்களா.....

  ReplyDelete
 25. @MANO நாஞ்சில் மனோ ஹா..ஹா..உங்களை மாதிரி பெரியவங்களுக்குப் பிடிக்குமேன்னு தான் 1944லிருந்து ஆரம்பிச்சேன் சார்!!!

  ReplyDelete
 26. செம லொள்ளு [ஜொள்ளு] பார்ட்டிதான் நீரு...

  ReplyDelete
 27. கோப்பால் கோப்பால் கோப்பால் கோப்பால்......
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 28. @MANO நாஞ்சில் மனோ ://கோப்பால் கோப்பால் கோப்பால் கோப்பால்......
  // அய்யய்யோ, யாராவது சரோஜா தேவியை மனோ சார்கிட்ட இருந்து காப்பாத்துங்க...பாவம் சார்..தாங்காது சார்..விட்டிடுங்க சார்!

  ReplyDelete
 29. அரசியல்,சினிமா ரெண்டிலும் கலந்து கட்டி அடிக்கிறீங்க செங்க்ஸ்

  ReplyDelete
 30. \\ஆனால் எல்லாம் தெரிஞ்ச ‘பலான புத்தக ‘ நடிகை மட்டும் திருட்டு முழி முழிக்காராம்!\\ "ஜாரோச விதே" புத்தகம் 1967 லில் கிடையாதுங்கண்ணா. அப்போ சனத்தோட மனசு அவ்வளவு சாக்கடையாகவில்லை. சினிமா என்றாலே நாத்தம் புடிச்சதுதானே. ஆனாலும் அந்த நாத்தத்தை முகர்ந்து பார்க்குறதுல நம்மாளுங்கக்கு அம்பூட்டு இஷ்டம்.

  ReplyDelete
 31. @ரஹீம் கஸாலி என்னை மாதிரி சராசரி தமிழனுக்கு வேற என்ன பாஸ் தெரியும்..

  ReplyDelete
 32. @Jayadev Das //"ஜாரோச விதே" புத்தகம் 1967 லில் கிடையாதுங்கண்ணா// அப்படியா சார்..நான் அப்போ பொறக்கவே இல்லை சார்..இதே மாதிரி தொடர்ந்து என் ஜீ.கே.ஐ இம்ப்ரூவ் செய்ய உதவவும்!

  ReplyDelete
 33. சூப்பர் செங்கோவி!

  ReplyDelete
 34. அண்ணனுக்கு பழசுன்னா பிடிக்கும் போல.. ஹி ஹி

  ReplyDelete
 35. @! சிவகுமார் ! சூப்பர் கமெண்ட் போட்டதுக்கு நன்றி சிவா!

  ReplyDelete
 36. @சி.பி.செந்தில்குமார் உங்களுக்கு பிடிக்காதாக்கும்?..நம்பிட்டேன்யா!

  ReplyDelete
 37. டைட்டில் அருமை..மேட்டரும் பழசானாலும் புதுசு

  ReplyDelete
 38. சிலுக்கு மேட்டர் கண்ணை கட்டுது

  ReplyDelete
 39. நம்மளும் தான் முடி வளர்த்திருக்கோம்..ஆனாலும் எண்ணெய்ச் செலவு தான் மிச்சம்’- னு தினமும் புலம்பிக் கொண்டே திரிகிறார்களாம்!//
  அப்பவேவா

  ReplyDelete
 40. இளைய நடிகர் பூ நடிகையோடு ஒட்டிக் கொண்டே திரிகிறாராம். //
  பூ நடிகை இப்பவும் பிரபலம்தான் இளைய நடிகர்தான் நகை விளம்பரத்தோட நின்னுட்டார்

  ReplyDelete
 41. @ஆர்.கே.சதீஷ்குமார் சிலுக்கு படம் மட்டும் தான் சார் போட்ருக்கேன்..மேட்டர் இல்லையே..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.