Tuesday, March 8, 2011

டி.ராஜேந்தரும் டண்டணக்காவும் (தேர்தல் ஸ்பெஷல்)

டிஸ்கி-1: முதல்ல டி.ஆரைப் பத்தி தேர்தல் ஸ்பெஷல் எழுதலாம்னு தான் நினைச்சேன்..ஆனா தலைவரு ஆனந்த விகடனை கிழிகிழின்னு கிழிக்கிற வீடியோவைப் பார்த்து பயந்து போயிட்டேன்..அதான் எதுக்கு வம்புன்னு அவரையே பேச விட்டுட்டேன்..இனி நீங்களாச்சு..அவராச்சு..

தினம் தினம் சாகும் ஈசலு!
இந்த தேர்தல்ல நாந்தான் ஸ்பெஷலு!
ஏ..டண்டனக்கா..டணக்குணக்கா!
டிஸ்கி-2 : இது 18+  ஸ்டில்லு!
 வாங்க சார்..தேர்தல் ஸ்பெஷல் தொடருக்காக வந்திருக்கீங்களா..சார்..சரியான ஆள்கிட்டதான் வந்திருக்கீங்க..ஏன்னா இந்தத் தேர்தல்ல ஸ்பெஷலே நான் தான் சார். நான் ஏதோ நேத்துப்பேஞ்ச மழைக்கு இன்னைக்கு முளைச்ச காளான் இல்ல. நான் அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் பண்ணவன் சார்.(இது எம்.ஜி.ஆருக்குத் தெரியுமா?)

நான்லாம் சென்னைக்கு வெறும் தாடியோட வரலை சார்..தன்னம்பிக்கையோட வந்தேன். வந்து ஜெயிச்சேன். என் மகனை லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக்குனேன். இன்னைக்குப் பாருங்க யாருமே எட்ட முடியாத உச்சத்துல அவர் இருக்காரு.(எவரெஸ்ட்ல சூட்டிங்கோ?)
தோள்மீது தாலாட்ட...
என்னைக்குமே கலைஞர் தான் சார் என் தலைவரு. அவர் ஒரு மொள்ளமாறியா இருக்கலாம். முடிச்சவிக்கியாக்கூட இருக்கலாம். நானே அவரை மோசமா திட்டியிருக்கேன். ஆனாலும் என் நாக்கு அவரைத் தவிர யாரையும் தலைவர்னு சொல்லாது. நான் அந்தளவுக்குக் கேவலமானவான்னு கேட்காதீங்க..அவ்வளவு அப்பாவி சார் நான். ஆனாலும் ஜெயலலிதா எனக்கு சகோதரி மாதிரி சார். வாஜ்பாய்ல இருந்து வைகோ வரைக்கும் அது எவ்வளவோ பேரை எப்படியெல்லாமோ கேவலப்படுத்தியிருக்கு. ஆனா எனக்கு அப்படியெல்லாம் நடக்கலை.ஏன்..(நீங்க அதுக்குக் கூட ஒர்த் இல்லையா)..அவங்களுக்குத் தெரியும் சார்..ராஜேந்தர் மானஸ்தன்னு.

கொள்கைன்னா உயிரைக் கொடுப்பான் சார் இந்த டி.ராஜேந்தரு..ஈழத் தமிழர் பிரச்சினையப்போ எல்லாரும் பதவியைக் காப்பாத்த துடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா நான் சிறுசேமிப்புத் திட்ட தலைவர் பதவியையே தூக்கி எறிஞ்சவன் சார். மனுசனுக்கு பதவியா சார் முக்கியம்..இந்த சிறுசேமிப்பு இல்லேன்னா இன்னொரு சிறுநீர் சேமிப்பு..
ஒருத்தராவது என்னைப் பாக்காங்களா..
வர்ற தேர்தல்ல நான் யார்கூட கூட்டுன்னு இன்னும் முடிவு பண்ணல சார்(அதை அவங்கள்ல முடிவு பண்ணனும்!)..கலைஞர் என் தலைவர்..ஜெயலலிதா என் சகோதரி மாதிரி..நான் என்ன சார் செய்வேன்..யாரை எதிர்ப்பேன்..ஆனா என்னை அம்போன்னு கழட்டி விட்டுட்டாங்கன்னா கடுப்பாயிருவேன் சார்..கடுப்பாயிருவேன்.

விஜயகாந்த் என்ன பெரிய இவரா....விஜயகாந்த் யாருன்னு சொல்லட்டுமா...சொன்னாத் தாங்குவாரா அந்த ஆளு..சொல்றேன் சார்...கேளுங்க..அவர் ஒரு தெலுங்கன் சார்..

என் அம்மா அப்பா ஒரே ஒரு தப்புப் பண்ணிட்டாங்க சார். (எது உங்களைப் பெத்ததா?)..என்னைத் தமிழனாப் பெத்ததுதான் சார் அவங்க பண்ண பெரிய தப்பு. சூதுவாது தெரியாத பாசக்காரங்க சார் அவங்க..அதான் விவரமில்லாம இப்படிப் பண்ணீட்டாங்க. அவங்க மட்டும் என்னை மலையாளியா, தெலுங்கனா கன்னடனாப் பெத்து இருந்தாங்கன்னா தமிழ்நாட்டுக்கே நான் பிரதமர்ஆயிருப்பேன் சார். ( என்னது.. ஆய் இருப்பீங்களா..கர்மம்..கர்மம்)...வர்ற தேர்தல்ல தனியா நின்னா என்னன்னு யோசிக்கிறேன் சார்.

தமிழ்நாட்டுல இருக்கிற 234 தொகுதியிலயும் நானே போட்டி போடப்போறேன் சார்..தேர்தல் கமிசன் மத்திய அரசோட கைக்கூலிங்க..எப்படியும் 233 தொகுதியில என் வேட்புமனுவைத் தள்ளுபடி பண்ணுவாங்க..உடனே மக்களுக்கு என் மேலே அனுதாபம் பொங்கும். 234(!) தொகுதியிலயும் ஓட்டை ராஜேந்தருக்கு குத்தோ குத்துன்னு குத்தப் போறாங்க..அப்புறம் என்ன சார், 234 தொகுதியிலயும் நானே ஜெயிப்பேன் சார்!
நான் டீசண்டு....தொட மாட்டேன்..மோந்து தான் பார்ப்பேன்!
நானே சி.எம்..நானே சபாநாயகர்..நானே உள்துறை அமைச்சர்..இதுவரைக்கும் அஷ்டவாதானின்னு பேர் எடுத்த நான் இனிமே 234அவதானின்னு பேர் எடுக்கப்போறேன் சார்.. (ரிலாக்ஸாகிறார்)

சில அறியாப் பசங்க கேட்பாங்க, எப்படி ராஜேந்தர் அவ்ளோ பெரிய சட்டசபைல தனியா உட்கார்ந்திருப்பான், பயமாயிருக்காதான்னு..சார், என் கட்சி ஆபீஸ்லயே பல வருஷமா தனியாத் தானே சார் உட்கார்ந்திருக்கேன்!


ஏ..டண்டனக்கா..டணக்குனக்கா!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

  1. @Jayadev Das ஹா..ஹா..வடை என்ன சார் வடை..மும்தாஜையே வச்சுக்கோங்க சார்!

    ReplyDelete
  2. எப்ப‌டிங்க‌ இது??

    ம்ம்ம்,.. க‌ல‌க்குங்க‌

    ReplyDelete
  3. ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களை எடுத்த மனுஷன்தான் இன்னைக்கு இப்படி ஆயிட்டாரு, என்ன பண்றது. நான் எந்த பெண்ணையும் தொட்டு நடிக்க மாட்டேன்னு சபதம் எடுப்பாரு, ஆனா படத்துல கொஞ்சம் சின்னப் பயனா பாத்து போட்டு "அத்தனையும்" பண்ண வைப்பாரு. அப்படியெல்லாம் காலத்தை தள்ளிவிட்டு, இப்போ மும்தாஜ் ஒரு படத்துல ஆடுனாறு பாருங்க ஒரு ஆட்டம், சிம்பு கெட்டாரு. தொடாமத்தான் இப்பவும் நடிச்சாரு, ஆனா கொஞ்சம் கூட இவர் வயசுக்கும் [முக்கியமா இவர் சைசுக்கும்] கொஞ்சம் கூடப் பொருந்தாத கண்ணியமில்லாத மூன்றாம்தர நடன அசைவுகள். பார்ப்பதற்கு இவர் உருவத்தை போல படு கேவலம்.

    ReplyDelete
  4. @jothi: //எப்ப‌டிங்க‌ இது??// அதுவா வருது ஜோதி!

    ReplyDelete
  5. @Jayadev Das//ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களை எடுத்த மனுஷன்தான் இன்னைக்கு இப்படி ஆயிட்டாரு..// ஆமாங்க..அவரோட பல பாடல்கள் என் ஃபேவரிட்!

    ReplyDelete
  6. \\வடை என்ன சார் வடை..மும்தாஜையே வச்சுக்கோங்க சார்! \\ இவங்கள எப்போ வாங்குனீங்க, சொல்லவேயில்ல!!

    ReplyDelete
  7. உங்க காமெடிக்கு அளவே இல்லையா !!! சந்தானத்துக்கு போட்டியா வரப்போறீங்க போல

    ReplyDelete
  8. நண்பா இதுக்கு பேரு குசும்பா அல்லது அஞ்சற அடி சொம்பா ஹி ஹி!

    ReplyDelete
  9. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
    தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
    அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

    ReplyDelete
  10. @Jayadev Das //மும்தாஜையே வச்சுக்கோங்க சார்! \\ இவங்கள எப்போ வாங்குனீங்க, சொல்லவேயில்ல!//..அது பப்ளிக் பிராபர்ட்டி தான சார்!

    ReplyDelete
  11. @இக்பால் செல்வன்: //உங்க காமெடிக்கு அளவே இல்லையா// இதுக்கெல்லாமா அளவு வச்சுக்க முடியும்...

    ReplyDelete
  12. @விக்கி உலகம்: //அஞ்சற அடி சொம்பா ஹி ஹி!// சொம்பா?..அப்போ டி.ஆரை பாக்கவேயில்லையா நீங்க..

    ReplyDelete
  13. @வேடந்தாங்கல் - கருன் ://எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?// டி.ஆரை நினைச்சாலே தானா பொங்கிடுது!

    ReplyDelete
  14. ஒரே ஆள் எல்லா post-ம் - ஊழல் குறையும்?!! :))

    ReplyDelete
  15. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா

    ReplyDelete
  16. @middleclassmadhavi அட ஆமாம்க்கா..ஊழலும் நாடும் ஒன்னா ஒழியும்!

    ReplyDelete
  17. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) வெறும் ஹி..ஹி..தானா..என்ன போலீஸ்கார் நீங்க!

    ReplyDelete
  18. @ரஹீம் கஸாலி கஸாலி, நீங்க போட்ட டிஆர் வீடியோவை ரெஃபெர் பண்ணித் தான் இதை எழுதுனேன்..நன்றி!

    ReplyDelete
  19. இவ்ளோ க்ளோசா இவரை வாட்ச் பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது பாஸ்...

    ReplyDelete
  20. //சில அறியாப் பசங்க கேட்பாங்க, எப்படி ராஜேந்தர் அவ்ளோ பெரிய சட்டசபைல தனியா உட்கார்ந்திருப்பான், பயமாயிருக்காதான்னு..சார், என் கட்சி ஆபீஸ்லயே பல வருஷமா தனியாத் தானே சார் உட்கார்ந்திருக்கேன்!
    //

    ஹா.... ஹாஹா.... ஹா....

    ஏய் டண்டணக்கா... டணக்குணக்கா...

    ReplyDelete
  21. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

    ReplyDelete
  22. @டக்கால்டி ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க டகால்ட்டி!

    ReplyDelete
  23. @சே.குமார் //ஏய் டண்டணக்கா... டணக்குணக்கா//என்னா ஒரு சந்தோஷம்!

    ReplyDelete
  24. @Speed Master//என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை// அதை ஏன் மாஸ்டர் அடக்குறீங்க?...ஓ, ஆஃபீஸ்ல இருக்கீங்களா..அப்படித்தான் சின்ஸியரா வேலை பார்க்கணும்...கீப் இட் அப்!

    ReplyDelete
  25. ஹா ஹா முடியல.. செம தாக்கு...

    ReplyDelete
  26. நமீதா நாட்டு நலன் கருதி கர்ப்பம் தரித்தால்.....
    பிரசவ செலவை கட்சி ஏற்க வேண்டும்!

    ReplyDelete
  27. @ttpian //நமீதா நாட்டு நலன் கருதி கர்ப்பம் தரித்தால்.....பிரசவ செலவை கட்சி ஏற்க வேண்டும்// நாட்டுநலன் கருதி கர்ப்பமா..என்னய்யா இது புதுசா இருக்கு! ஆமா, நான் இந்தப் பதிவுல மும்தாஜ் படத்தைத் தானே போட்ருக்கேன்..நமீதா-ன்னு சொல்றீங்க..உருளையா இருக்குறதெல்லாம் நமீதான்னு முடிவு பண்ணீட்டீங்களோ..

    ReplyDelete
  28. நமீதா பிரசவ செலவை விஜய் செய்வாரா?என்ன கூத்து?உழுதவன் ஒருவன்:கண்டுமுதல் வேறு ஆளா ?

    ReplyDelete
  29. வெளுத்தவன் ஒருவன்
    வள்ளாவி வைக்க இன்னொருவன்
    போட்டுக்க நானா?

    ReplyDelete
  30. //..இந்த சிறுசேமிப்பு இல்லேன்னா இன்னொரு சிறுநீர் சேமிப்பு..//

    ஹா ஹா ஹா ஹா அருமை அருமை அட்டகாசமா போட்டு தாக்கிட்டீங்க மக்கா சிரிப்பு சிரிப்பு சிரிப்புதான் போங்க ஹா ஹா ஹா...

    ReplyDelete
  31. //என்ன சார் வடை..மும்தாஜையே வச்சுக்கோங்க சார்//

    யோவ் என்னய்யா சொல்லுதீரு மும்தாஜா....
    அடடா வடை போச்சே....

    ReplyDelete
  32. @MANO நாஞ்சில் மனோ //யோவ் என்னய்யா சொல்லுதீரு மும்தாஜா....
    அடடா வடை போச்சே.... // விடுங்க சார்..மும்தாஜ் இல்லேன்னா நமீதா!..உங்களுக்கு இல்லாததா..

    ReplyDelete
  33. @MANO நாஞ்சில் மனோவிடுங்க சார்..மும்தாஜ் இல்லேன்னா நமீதா!..உங்களுக்கு இல்லாததா..

    ReplyDelete
  34. படங்கள் எல்லாம் செம கலக்கல்

    ReplyDelete
  35. மனுசனுக்கு பதவியா சார் முக்கியம்..//
    அதானே

    ReplyDelete
  36. @ஆர்.கே.சதீஷ்குமார்என்ன சார், உங்க கடையைச் சாத்துன அப்புறம் தான் இங்க பார்ப்பீங்க போல!

    ReplyDelete
  37. தேர்தல் முடியும் வரை திருவிழாதானு நினைக்கிறேன்

    ReplyDelete
  38. உங்க கவுண்டர் கமெண்ட்ஸ் எல்லாமே அட்டகாசம்..

    ReplyDelete
  39. @பாரத்... பாரதி... வாங்க பாரதி..கொஞ்சநாளா நம்மள மறந்துட்டீங்க போல..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.