டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.
இன்று நாம் பார்க்கப் போவது QUALITY ASSURANCE AND QUALITY CONTROL டிபார்ட்மெண்ட் பற்றி...
எதுக்கு இது?
நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, டிசைன் டிபார்ட்மெண்ட்ல தந்த டிராயிங்கை வச்சு, உற்பத்தி செய்றாங்க. அது அந்த டிராயிங்ல உள்ள அதே டைமன்சனோட இருக்கா, ASME/ASTM போன்ற ஸ்டேண்டர்ட்களின் படி இருக்கா போன்றவற்றை செக் பண்றதும், அதுப்படி பொருள் தயாராகுதான்னு ப்ராச்சை க்ளோசா கண்காணிக்கிறதுக்குத் தான் இந்த QC டிபார்ட்மெண்ட்.
என்ன செய்வாங்க?
QC-ன்னா பொருள் தயாரான பிறகு பண்ற இன்ஸ்பெக்சன் மட்டும் கிடையாது. ஒரு பொருளின் உற்பத்தி ஸ்டேஜ் ஒவ்வொன்னும் கரக்டான ப்ரொசியூசர் படி நடக்குதான்னு கண்காணிக்கறதும் இவங்கா வேலை.
உதாரணமா ஒரு ஃபவுண்ட்ரில மெட்டலை உருக்கி, மோல்டுல ஊத்தி, தேவைப்பட்டா கோர் வச்சு, அதுல உருக்குன மெட்டலை ஊத்துவாங்க.
QC என்ன செய்யும்னா, மெட்டல் சரியான மெட்டீரியல் காம்பினேசன்ல உருக்கப்பட்டிருக்கான்னு உருக்குன இரும்புக் குழம்பை எடுத்து டெஸ்ட் பண்ணும்.
மோல்டு சரியான ஹார்ட்னெஸ்ல செய்யப்பட்டிருக்கான்னு ‘ப்ரினெல் ஹார்ட்னெஸ் டெஸ்ட்’ மற்றும் மோல்ட் சேண்ட் பிராபர்ட்டியை டெஸ்ட் பண்ணும். கோருக்கும் அதே மாதிரி இன்னொரு QC டீம் டெஸ்ட் செய்யும். இரும்புக் குழம்பு சரியான வெப்பநிலையில் ஊத்தப்படுதான்னும் டெஸ்ட் நடக்கும். எல்லாமே சரியா இருந்தா வெளில வ்ர்ற கேஸ்டிங் (பொருள்)-ம் சரியா இருக்கும். அப்படி இல்லேன்னா, ஏன் அப்படி ஆச்சுன்னு மேலே சொன்ன டெஸ்ட் ரிப்போர்ட்களை சரி பார்த்தாத் தெரிஞ்சு போகும்.
பொருளோட டைமன்சனை அளந்து செக் பண்றது, போராசிட்டி போன்ற மெட்டலர்ஜிகல் பிராப்ளம் இருக்கான்னு ரேடியோகிராஃபி டெஸ்ட் பண்றது போன்ற வேலைகளும் செய்வர்.
இதே மாதிரி வெறும் டிராயிங் மட்டும் தயாரிக்கிற டிசைன் கம்பெனிகள்லயும் QC இருக்கும். (சில நேரங்கள்ல உங்க பாஸே QC வேலையைப் பார்ப்பார்). தயாராகிற டிராயிங்கை கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு செக் பண்ணுவாங்க!
இது போக ISO Certified Company-ன்னா அதுக்குத் தேவையான டாகுமெண்ட்ஸை மெயிண்டெய்ன் பண்றதும் QC வேலை தான்..
இங்கே சேரணும்னா..
ஒரு QC Jobக்கு இண்டர்வியூ போறீங்கன்னா, நீங்க காலேஜ்ல படிச்ச Qulaity Control மற்றும் ASME/ASTM போன்ற ஸ்டேண்டர்களின் பிராக்டிகல் உபயோகம் பற்றித் தெரிஞ்சுகிட்டுப் போங்க!
டப்பு தேறுமா
சம்பளத்தைப் பொறுத்தவரை புரடக்சனுக்கும் QCக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் மேலும் சில QC Related எக்ஸாம்களை (AWS, MAS போன்ற) எழுதி உங்களை நீங்க த்குதிப்படுத்திக்கிட்டா ஓரளவு நல்ல சம்பளத்தோட நல்ல கம்பெனிக்குத் தாவலாம்!
அடுத்த வாரம் மெயிண்டனன்ஸ் டிபார்ட்மெண்ட் பற்றிப் பார்ப்போம்!
ம்ம்ம்,. தொடர்ந்து கலக்குங்க
ReplyDeleteஇன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்,
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteவந்துட்டேன்...படிச்சுட்டு வரேன் பாஸ்...
ReplyDeleteஉங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் படிக்கச் சொல்லவும். //
ReplyDeleteஎதை படிக்க சொல்றீங்க? உங்க பதிவையா இல்லை அவங்க செமெஸ்டர் பாடத்தையா?
மெக்கானிக்கல் பீல்டுல வேலை பார்த்தாலே ராஜ வாழ்க்கை பாஸ்...அதுவும் இஞ்சினியர் சார்னு மரியாதையை கெடைக்கும் பாருங்க...அடடே..
ReplyDeleteஇவண்,
காசுக்கு ஆசைப்பட்டு சாப்ட்வேர்ல வேலை சேர்ந்து தன்மானத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் மெக்கானிக்கல் இஞ்சினியர்கள் சங்கம்...
@jothiம்ம்ம்..நன்றி ஜோதி!
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்,// பாஸ், ஏதாவது நக்கல் பண்றீங்களா...
ReplyDelete@விக்கி உலகம் நன்றிக்கு நன்றி விக்கி!
ReplyDelete@டக்கால்டி //எதை படிக்க சொல்றீங்க? உங்க பதிவையா இல்லை அவங்க செமெஸ்டர் பாடத்தையா?// இரண்டையும் தான்..இன்னும் தெளிவா சொல்லணுமோ..மாத்திடறேன்!
ReplyDelete@டக்கால்டி மினி ஜமீந்தார் மாதிரியே சில மெக்கானிகல் எஞ்சினியர்ஸ் ஜூனியர்கிட்ட நடந்துப்பாங்க..ஆனா சம்பளத்தைக் கேட்டா ரொம்ப கேவலமா இருக்கும்!
ReplyDeleteUpayogamana nalla pathivu...
ReplyDeleteஎன் மச்சினன் மெக்கானிக்கல் முடிச்சிட்டு குழப்பமா இருக்கார்..அவருக்கு உங்கள் பதிவுகளை தொகுத்து தரப்போறேன்..உங்களிடமும் தொடர்புகொள்ள சொல்கிறேன் நண்பரே..
ReplyDeleteஹே ஹே ஹே.. சோ சாட்.. இதபத்தி நான் ஐ நா சபையில பேசுறன்..
ReplyDelete@சே.குமார் நன்றி குமார்!
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார் //என் மச்சினன் மெக்கானிக்கல் முடிச்சிட்டு குழப்பமா இருக்கார்..// மச்சினனா..அப்போ உதவித் தானே ஆகணும்..
ReplyDelete//அவருக்கு உங்கள் பதிவுகளை தொகுத்து தரப்போறேன்// ‘நானா யோசிச்சேன்’-பதிவுகளையுமா?..வீட்ல செம மாத்து வாங்கப்போறீரு!
//உங்களிடமும் தொடர்புகொள்ள சொல்கிறேன் நண்பரே..// நல்லது சதீஷ்..தெரிந்ததைச் சொல்கிறேன்!
@பார்வையாளன் தங்கள் அன்புக்கு நன்றி பார்வையாளன்!
ReplyDelete@தீபிகா //சோ சாட்..// ஏதோ திட்டுறீங்கன்னு தெரியுதுக்கா..என்னன்னு தெரியலை. //இதபத்தி நான் ஐ நா சபையில பேசுறன்.// கொஞ்சம் பாத்து பேசுங்கக்கா! நான் பாவம்!
ReplyDeleteநல்ல உபயோகமான பதிவு....
ReplyDeleteபயனுள்ள பதிவு. தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இந்த பதிவு பற்றி மின்னஞ்சல் செய்துள்ளேன்..
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ வந்து பாராட்டிய மனோ சாருக்கு நன்றி.
ReplyDelete@பாரத்... பாரதி... மிக்க நன்றி சார். யாருக்காவது இப்பதிவுகள் உதவினால் மிகவும் மகிழ்வேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDelete@இராஜராஜேஸ்வரிஉங்க பேரைப் பார்த்தா பயமா இருக்கே..பாராட்டுக்கு நன்றிக்கா!
ReplyDelete