Thursday, March 17, 2011

வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!

அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் வைகோவிற்கு அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முதலில் இதற்காக ’மூன்று மாத கால்ஷீட்டுடன் சென்னை வந்திருக்கும் ‘ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
ஏழு வருடங்களாக கூட்டணி தர்மத்தை மீறாமல், கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்காக கடும் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோவிற்கு அன்புச்சகோதரி காட்டியுள்ள மரியாதை, பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக ஆகியுள்ளது. 

தீவிர அதிமுகவாசிகளான என் நண்பர்களே அதிர்ச்சியில் உள்ளார்கள். ‘இந்தம்மா என்ன தான் நினைச்சுக்கிட்ட்டு இருக்கு’என புலம்புகிறார்கள்.  வைகோவும் கார்த்திக்கும் சேர்ந்தால் விஜயகாந்த் ஏற்படுத்திய அதே இழப்பை அதிமுக கூட்டணிக்கு ஏற்படுத்த முடியும். விஜயகாந்த்தின் வரவால் தான் இந்தத் தெனாவட்டு என்றால் இது சுத்த மடத்தனம்.
வி..டு..த..லை...விடுதலை!
மதிமுக ஓட்டுகளையும் நம்பியே கம்யூனிஸ்ட்டுகள் இருந்தனர். இப்போது மதிமுகவும் நாமகவும்(அதாங்க கார்த்திக் கட்சி) இல்லையென்றால், அவர்களுக்கு இழப்பே ஏற்படும். தற்பொழுது கம்யூனிஸ்ட்களும் தேமுதிகவும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் பெரிய பலம் உற்சாகமான விசுவாசமான தொண்டர்கள். வைகோ என்ற தனி மனிதரின் மேல் உள்ள மரியாதையில் திரண்ட கூட்டம் அது. தேர்தல் வேலை செய்வதில் அவர்கள் காட்டும் தீவிரத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். அந்த தொண்டர் படை இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவிற்கு பேரிழப்பே.

கார்த்திக் திமுகவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு தனியே நின்று ஓட்டைப் பிரித்து உதவினார். அவரையும் சீட்டு தருவதாகச் சொல்லி கூப்பிட்டு, கழுத்தறுத்து நடு ரோட்டில் நிறுத்தியுள்ளார் ஜெ. வைகோவை விட கார்த்திக் பரவாயில்லை, நேற்றே வெளியேறி விட்டார். வைகோவையும் வெளியேறி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்! ’தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்து தேவரினத்தை அவமதித்து விட்டதாக’ கார்த்திக் தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அதிமுகவின் ஓட்டு வங்கியான தேவரின ஓட்டுகள் கலையும்.

திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் மட்டுமல்லாது கோவில்பட்டி, சிவகாசி, விளாத்திகுளம் போன்ற மதிமுக செல்வாக்கு பெற்ற தென்மாவட்ட தொகுதிகளில் நின்றால் நிச்சயம் மரியாதையான வெற்றியைப் பெற முடியும். குறைந்தது அதிக வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரத்தையும் மீட்க முடியும். முதலில் காங்கிரசுக்கு மாற்றாகவாவது மதிமுகவை நிலை நிறுத்த முடியும்.

பொதுஜனங்கள் மத்தியில் ஜெயலலிதாவின் போக்கு கடும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது.  வேறு வழியின்றி ஜெ.வை ஆதரிக்கத் துணிந்த தமிழின உணர்வாளர்களும் வைகோவின் நிலையைப் பார்த்து வருத்தப் படுகின்றனர். மதிமுக தொண்டர்களும் விட்டது சனியன் என உற்சாகமாக உள்ளனர். ஆனால் தலைவர் தயாரா?


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

 1. புதியன புகுதலும் பழையன கழிதலும்...ஜகமம்தானே!

  ReplyDelete
 2. ஆட்சி அமைச்சதும் அடுத்த அவ மரியாதை கேப்டனுக்கு

  ReplyDelete
 3. ஆடு வளர்க்கறது எதுக்கு ஹி ஹி!

  ReplyDelete
 4. பாவம் வைகோ....இன்று அவரை பிடிக்காதவர்கள் கூட அவருக்காக பரிதாப படுகிறார்கள்.

  ReplyDelete
 5. எல்லாம் அரசியல் தலைவா?
  அவர் தனியா நிக்கனும்...

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார் கேப்டன் வசமா மாட்டிக்கிட்டி இருக்காரு..கஷ்டம் தான்.

  ReplyDelete
 7. @ரஹீம் கஸாலி //இன்று அவரை பிடிக்காதவர்கள் கூட அவருக்காக பரிதாப படுகிறார்கள்.// உண்மை தான் கஸாலி!

  ReplyDelete
 8. @வேடந்தாங்கல் - கருன்//அவர் தனியா நிக்கனும்// நல்ல வாய்ப்பு..செய்வாரா?

  ReplyDelete
 9. மதிமுக தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஒரு மகிழ்வு கொண்டுஇருந்தனர் அதிமுகவினர்...!

  இப்போது அம்மாவின் போக்கால் அவர்களும் அப்செட்..!

  வெற்றியோ ..! தோல்வியோ..!
  மதிமுக தனித்தன்மயுடன் இருப்பதையே
  தொண்டர்கள் விரும்புகின்றனர்..!

  ReplyDelete
 10. .வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே...

  இங்கு மட்டும் ஆட்களை நிறுத்தி 63 தொகதியிலம் வைகோ சுத்தி சுத்தி வந்து பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும், கணிசமான வாக்குகளை வாங்க முடியும்...

  ReplyDelete
 11. ammavai nambi emanthaar vaiko... pavam... nalla manithar...

  ama karthikkukku appadi enna Ottu vanki irukkunnu sathi arasiyalai izhukkuringa...?

  ReplyDelete
 12. மகா புத்திசாலி தமிழர்களே .... தி மு க - காங்கிரஸ் பூச்சாண்டி போல , இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்கலாம். பொறுத்திருங்கள்.

  ReplyDelete
 13. கூட்டணிக்காக கொள்கையை மாற்றிக்கொள்ளாத மனிதர் வைகோ. அவரை அவமதித்தது அதிமுக விற்கு பேரிழப்பே. ஈழப் பிரச்சினைக்கு அவரது போராட்டம் என்னவென்பதை பிரிட்டன் பார்லிமெண்ட் கூட சொல்லும். 3 மணி நேர உண்ணா விரதம் இருக்கும் மனிதர்கள் மத்தியில் தமிழன் என்ற சொல்லுக்கு தனி அடையாளம் அவர். முல்லை பெரியாறு அணை பேராட்டத்தில் அவரது பேராட்டத்திற்கு கலைஞர் தன்னை மறந்து சொன்ன பாராட்டே அவரது போராட்ட குணம் எப்படிபட்டது என்பதைக் காட்டும். ஊழல் கரைபடியாத, பிரச்சார பீரங்கியை இழந்தது அதிமுகவிற்கு பேழிப்பாகவே முடியும். பொறுத்திருந்து பார்க்கலாம்

  ReplyDelete
 14. வைகோ அங்கு போய் சேரும் போதே தெரியும்.இந்த அவமானம் வரும் என்பது. தெற்கே கிராமங்களில் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர் வைகோ திமுகாவினை விட்டு பிரிந்து வந்த போது.

  ReplyDelete
 15. இனி நடக்கப்போவது அனைத்தும் ஜெயவுக்கு கெட்டதே.

  ReplyDelete
 16. கொசு, ஈ இவற்றை வெளியே விரட்ட வேண்டிய கட்டாய கடமையை அம்மா செய்துள்ளார். அம்மாவை போற்றி.

  ReplyDelete
 17. //திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. //

  செங்கோவி!உங்க கடைக்கு வந்ததில் தெனாவெட்டு தறுதலை இட்ட பின்னூட்டமே வை.கோ வின் அரசியல் நிலைப்பாடு பதிவு.

  சென்ற பாராளுமன்றத்தில் முத்துக்குமார் இறப்பில் ஈகோ பார்த்து ஒரு கூட்டணிக்கான சூழலை உடைத்தது போல் இந்த முறையும் 3 வது அணிக்கான சூழலை உருவாக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
 18. சி.பி.செந்தில்குமார் said... [Reply]

  ஆட்சி அமைச்சதும் அடுத்த அவ மரியாதை கேப்டனுக்கு......./////////

  அவரு இப்பவே பெட்டிய கட்டிட்டாரு ......
  மூன்றாம் அணி நாளை உதயம் ..............

  ReplyDelete
 19. ராஜ நடராஜன் said... [Reply]

  //திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. //

  செங்கோவி!உங்க கடைக்கு வந்ததில் தெனாவெட்டு தறுதலை இட்ட பின்னூட்டமே வை.கோ வின் அரசியல் நிலைப்பாடு பதிவு.

  சென்ற பாராளுமன்றத்தில் முத்துக்குமார் இறப்பில் ஈகோ பார்த்து ஒரு கூட்டணிக்கான சூழலை உடைத்தது போல் இந்த முறையும் 3 வது அணிக்கான சூழலை உருவாக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
  //////////////

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி என்ற பேச்சே வராத போது எப்படி ஈகோ பார்க்க முடியும் . அது மட்டுமல்லாது இப்போது கூட மூன்றாவது அணி என்ற பெயரை சொல்லி மீசையில் மண் ஒட்டாத அளவிற்கு விஜயகாந்த் , கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவிடமிருந்து தொகுதிகள் பெறுவார்கள் . மூன்றாவது அணி என்பது தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத அணியாக தான் இருக்கும் . அவர்கள் மீண்டும் அதிமுகவுடன் சமரசம் ஆக தயாராகி விட்டனர்

  ReplyDelete
 20. @தமிழ் அமுதன் //இப்போது அம்மாவின் போக்கால் அவர்களும் அப்செட்..!// உண்மை தான் சார்!

  ReplyDelete
 21. அடிமைகளுக்கு விடுதலை என்பது பகல் கனவு!

  எஜமானர் மாறலாம்...ஆனால் அடிமை எப்போதும் அடிமையே.....

  ReplyDelete
 22. @சங்கவி சரியாகச் சொன்னீர்கள் சங்கவி!

  ReplyDelete
 23. @சே.குமார் //ama karthikkukku appadi enna Ottu vanki irukkunnu sathi arasiyalai izhukkuringa...?// சென்ற தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 2000 ஓட்டு வரை கார்த்திக் கட்சி வாங்கியது. அதிமுக 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1500 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. கார்த்திக் பிரித்தது அதிமுக ஓட்டு வங்கியான தேவரின ஓட்டை..இப்போது நான் சொல்வது சரிதானே!..மேலும் ஜாதியைப் பற்றிப் பேசாமல் தேர்தல் அரசியல் பற்றிப் பேசமுடியாது என்பதே யதார்த்தம்..அவர்களே ஜாதி பார்த்துத் தானே வேட்பாளரை நிறுத்துகிறார்கள்!

  ReplyDelete
 24. @அஹோரி//இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்கலாம். // வடிவேலு சொல்வாரே ‘என் குடும்பத்தை அவன் கேவலமாப் பேசுறதும் அவன் குடும்பத்தை நான் கெவலமாப் பேசுறதும் எங்களுக்குள்ள சகஜம்..நாங்க அவ்ளோ திக் ஃப்ரண்ட்ஸ்’-ன்னு அது மாதிரி கேவலமான விளையாட்டா இருக்கும் போல!

  ReplyDelete
 25. @Bairave // ஊழல் கரைபடியாத, பிரச்சார பீரங்கியை இழந்தது அதிமுகவிற்கு பேரிழப்பாகவே முடியும். // உண்மை தான் சார்!

  ReplyDelete
 26. @அமுதா கிருஷ்ணா //வைகோ அங்கு போய் சேரும் போதே தெரியும்.இந்த அவமானம் வரும் என்பது.// உண்மை தான்..சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இது தான் நிலைமை.

  ReplyDelete
 27. @VJR //இனி நடக்கப்போவது அனைத்தும் ஜெயவுக்கு கெட்டதே.// அதிமுக் தொண்டர்கள் மனம் தளர்ந்திருப்பதே இப்போது பெரிய கெட்ட விஷயம்!

  ReplyDelete
 28. @ssk//அம்மாவை போற்றி.// புர்ச்சித் தல்வி வால்க...வால்க!

  ReplyDelete
 29. @ராஜ நடராஜன் //உங்க கடைக்கு வந்ததில் தெனாவெட்டு தறுதலை இட்ட பின்னூட்டமே வை.கோ வின் அரசியல் நிலைப்பாடு பதிவு.// உண்மை தான் சார்..அவர் நேற்றே சொன்னார்..இன்று நடந்துவிட்டது...வைகோ மீது மதிப்புள்ள எல்லோரின் கருத்தும் இது தானே!

  ReplyDelete
 30. @அஞ்சா சிங்கம்//அவரு இப்பவே பெட்டிய கட்டிட்டாரு ......
  மூன்றாம் அணி நாளை உதயம் // பொட்டிடை கட்டுதாரா..திரும்பக் கொடுக்காரா?

  ReplyDelete
 31. @Suresh Kumar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 32. @ராவணன் //எஜமானர் மாறலாம்...ஆனால் அடிமை எப்போதும் அடிமையே.....// சொல்லுங்க சார்..இன்னும் நல்லாச் சொல்லுங்க..அப்பவாவது வைகோவுக்கு உறைக்கான்னு பார்ப்போம்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.