Thursday, March 24, 2011

100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்..

நேத்து பதிவு வழக்கத்துக்கு மாறா ரொம்ப சூடாப் போயிடுச்சு. அதனால முதல்ல ரிலாக்ஸ் பண்ணிப்போம்:

ஓ.கே..இப்போ இன்றைய பதிவைப் பார்ப்போமா..

சாதிச்சுட்டேன் மக்கா, சாதிச்சிட்டேன்..புதுசா ராக்கெட் ஏதும் ஏவிட்டனா-ன்னு யோசிக்காதீங்க...பதிவு எழுத வந்து 100 ஃபாலோயர்ஸைச் சேர்த்துட்டேன்..அதாவது அவங்களாச் சேர்ந்துட்டாங்க. நண்பர் செல்வன் 100வது ஃபாலோயராகச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து எதுக்குன்னா யாருமே என் பதிவுல 100வது ஃபாலோயரா சேரலை..அவர் மட்டும் தான் 100வது ஃபாலோய்ரா ஆகி இருக்காரு. அதுக்குத் தான்!(என்னவே, நான் சரியா பேசுதனா?) அவர் 100வது ஃபாலோயராச் சேர உதவி செய்த மீதி 99 ஃபாலோயர்ஸ்-க்கும் நானே அவர் சார்புல நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

என்னோட தளத்திற்கு முதல் ஃபாலோயரா சேர்ந்தது ஈஸ்வரி ரகு-ங்கிற சகோதரி. அவங்க ரொம்ப ஸ்பெஷலான ஃபாலோயர்! எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

2010-ல ஒரு ஆறு மாசம் வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்தேன். சரி, சும்மாதானே இருக்கோம்,பதிவர் ஆகலாம்..ஹாலிவுட் பாலாண்ணன் வேற அன்பா கூப்பிட்டாரேன்னு நவம்பர்ல இந்த வலைப்பூவை உண்டாக்குனேன்!.நம்ம வலைப்பூ சும்மா இருக்கக்கூடாதேன்னு பக்திப்பூர்வமா ஒரு முருகர் படத்தையும் ‘குருவாய் வருவாய்’ போன்ற சில பாடல்களை எங்கிருந்தோ சுட்டு சும்மா போட்டுருந்தேன்.

அப்புறம் ஒரு மாசமா நானே என் ப்ளாக்கை ஓப்பன் பண்ணி முருகரைப் பாக்குறதும் ஃபீல் பண்றதுமா பொழுது போச்சு. திடீர்னு ஒருநாள் பாக்குறேன்..ஃபாலோயர் லிஸ்ட்ல ஒரு ஆளு சேர்ந்திருக்கு. என்ன அதிசயம், நாம தான் ஒன்னுமே எழுதலியே..அப்புறம் எப்படி.யாரும் நம்மளை வச்சு காமெடி பண்றாங்களோன்னு டவுட்டு. அதனால வழக்கமா அந்த வேலையைச் செய்யுற தங்க மணிகிட்டயே காட்டுனேன்..

அவங்க ‘பாத்தீங்களா.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...அதுக்காகவாவது நீங்க எழுதாம இருக்கலாமே..பாவம் இல்லையா அவங்க’ன்னு ஓட்டுனாங்க.  அப்புறமா விளக்கிச் சொன்னேன், ‘அவனவன் எம் எல் எம்காரன் மாதிரி சொந்தக்காரன்/நண்பன் கழுத்துல கத்தியை வச்சு மிரட்டி ஃபாலோயராச் சேத்துக்கிட்டிருக்கான்! நமக்கு தன்னாலயே சேர்றாங்களே’ன்னு! அப்புறமென்ன..இனியும் பொறுக்கக்கூடாதுன்னு பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்.

அந்த அன்புச் சகோதரி இப்பவும் படிக்காங்களா..இல்லே நான் போடுற படங்களைப் பார்த்து தலை தெறிக்க ஓடிட்டாங்களான்னு தெரியலை! இருந்தாலும் நான் ஒன்னும் எழுதாத போதே என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டு(?), ஃபாலோயராச் சேர்ந்து என் பதிவுலக வாழ்க்கையை குத்துவிளக்கேத்தி துவக்கி வைத்த அந்த அன்புச் சகோதரிக்கு நன்றி. நீங்க எங்கிருந்தாலும் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்னு என்னப்பன் முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். 

100 பேர் சேரும்வரை என்னைப் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று வைராக்கியத்தோடு இருந்தேன். இனி என்னைப்பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்யப்படும். இப்போதைக்கு நான் ஒரு ஆம்பிளை என்றும் குவைத்தில் பொறியாளனாக வேலை செய்கிறேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது முத்துன முகத்தைப் பார்க்க உங்களைத் தயார்ப்படுத்தும் விதமாக, என் பிஞ்சு முகத்தை இங்கே போடுகிறேன்.
மேல தமன்னா..கீழ குஷ்பூ..ம்ம்..கலக்குற செங்கோவி!
தினமும் 100 பேர் வந்தாலே போதும், சந்தோசமா எழுதலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். அதனால ஃபாலோயர்ஸ் டார்கெட்டை 100ஆ ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன். அந்த 100 பேரும் முன்னப்பின்னத் தெரியாதவங்களாத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணேன்! அதனால மொய்க்கு மொய் சிஸ்டத்தையும் ஃபாலோ செய்யவில்லை. எப்படியோ பதிவுலகிற்கு வந்த மூன்று மாதங்களில் டார்கெட்டை அச்சீவ் பண்ணீட்டேன்.(இண்ட்லியில் உள்ள ஃபாலோயர்ஸ் லிஸ்ட் தனி.) அதனால இப்போ என்ன செய்யப் போறேன்னா......
கரெக்ட்..திரும்பிப் பார்த்து ஆரம்ப காலத்தில் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றி சொல்லப் போறேன்.

முதல் பதிவிற்கு முதல் பின்னூட்டம் போட்டு மங்களகரமாகத் துவக்கி வைத்த பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்களுக்கு நன்றி. எனது ஆரம்ப காலத்தில் நான் தனியே தன்னந்தனியே இருந்த போது பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப்படுத்திய பாரத்..பாரதி, கஸாலி, இரவு வானம், ஜீ, சிவகுமார், சே.குமார், சித்ரா போன்றோருக்கு நான் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது தேர்தல் ஸ்பெஷல் தொடரை தனது தளத்தில் குறிப்பிட்டு, எனக்கு விளம்பரம் தேடித்தந்த நண்பர் தொப்பிதொப்பிக்கும் அதே பதிவில் அதை ஆமோதித்து பாராட்டிய (மீண்டும்) பாரத்..பாரதி & ஆனந்தியக்காவிற்கும் நன்றிகள்.

வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கும் கஸாலிக்கும் நன்றிகள் பல. அது என்னைப் பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது.

மேலும் பல உற்சாகமான நண்பர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த நமீதா, குஷ்பூ, சிநேகா, பாவனா, சில்க் ஸ்மிதா போன்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு இத்தனை பேர் ஃபாலோயராகச் சேர்ந்தாலும், நான் இன்னும் பெரும்பாலானோருக்கு ஃபாலோயராகச் சேரவில்லை. இனி சேர முயற்சிக்கிறேன். சென்னைப்பித்தன், அமுதா கிருஷ்ணா, இக்பால் செல்வன், ராஜராஜேஸ்வரி போன்ற பலரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை..நேரமின்மையே காரணம். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதுவரை எழுதியதில் எனக்குப் பிடித்தது முந்து சிறுகதை தான். எனது பதிவுகளில் அட்டர் ஃப்ளாப்பும் அதுவே!

பொதுவாக யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன் நான். ஆனாலும் நான் நடிகைகளின் படத்தைப் போடுவது சிலருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்கி இருப்பதை அறிவேன். நான் எந்தவிதமான சமூகப் புரட்சியும் செய்ய பதிவுலகிற்கு வரவில்லை. சும்மா ரிலாக்ஸ் பண்ணவே வந்தேன். 

’நீங்கள் காசு கொடுத்து வாங்கும் குமுதம்/விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் படங்களை விட எனது பதிவில் வரும் படங்கள் பெட்டர், எனவே அதில் தவறேதும் இல்லை ’என்றே இத்தனை நாளாக நினைத்து வந்தேன். ஆனால் இப்போது அது தவறு என்பதை மனதார உணர்ந்துவிட்டேன். தவறு என்று தெரிந்தபின் மன்னிப்பு கேட்க நான் தயங்குவதில்லை.எனவே இதுவரை போட்ட கவர்ச்சிப் படங்களுக்காக அன்புச்சகோதரிகள்+நல்ல ஆத்மாக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன். இன்னும் நூறு பேர் ஃபாலோயராகச் சேர்ந்தால் மட்டுமே புது மன்னிப்பு கேட்பேன் . அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

வேறு ஏதேனும் மாற்றங்களை என் பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

என்னை, எனது கிறுக்குத்தனங்களோடு ஏற்றுக்கொண்டு பின் தொடரும் நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி! நன்றி! நன்றி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே. எழுதும் எமக்கு ஃபாலோயர்கள் சுவாசம் போன்றவர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
  visaran.blogspot.com

  ReplyDelete
 2. Vadai Just missed...Going back from office to home...will comment you soon

  ReplyDelete
 3. @விசரன் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. @டக்கால்டி//Vadai Just missed.// நீங்க வர்றதே வடை வாங்கத்தானா..நல்லது..//Going back from office to home..// இப்பத்தானே ஒரு பதிவு போட்டீங்க..ஆபீசுல இந்த வேலை தான் நடக்கா..சரி, சரி.

  ReplyDelete
 5. சதம் அடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள் செங்கோவி! கல்வி, அரசியல் என இரண்டையும் கலந்து தாங்கள் எழுதி அசத்தி வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. இளவயது போட்டோ நன்றாக உள்ளது.

  //அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன்//

  அட்வான்ஸ் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினால்..அவர்கள் 100% மன்னிப்பார்கள்.

  சீக்கிரம் டபுள் செஞ்சுரி அடிப்பீர்கள்..சந்தேகமில்லை.

  ReplyDelete
 6. அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன். இன்னும் நூறு பேர் ஃபாலோயராகச் சேர்ந்தால் மட்டுமே புது மன்னிப்பு கேட்பேன் . அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.//

  அதான பார்த்தேன்...

  ReplyDelete
 7. வேறு ஏதேனும் மாற்றங்களை என் பதிவுகளில் எதிர்பார்க்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.//

  சொன்னாலும் கேக்கப் போறது இல்ல...அப்புறம் எதுக்குண்ணே?

  ReplyDelete
 8. நீங்க வர்றதே வடை வாங்கத்தானா..நல்லது..//Going back from office to home..// இப்பத்தானே ஒரு பதிவு போட்டீங்க..ஆபீசுல இந்த வேலை தான் நடக்கா..சரி, சரி.//

  சில நேரங்களில்...நீங்க சொன்ன வெட்டியான ஆறு மாசம் இப்போ என் வசம்..அதேன்...

  ReplyDelete
 9. சதம் அடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 10. மாப்ள சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

  இந்த பிஞ்சி மூஞ்சியா இப்படியெல்லாம் எழுதுது....

  என்ன கொடும மாப்ள இது நீங்க மொதல்ல அடுத்தவங்களுக்கு பாலோயரா சேராததுக்கு நீங்க சொல்ற காரணம் கொடுமையா இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 11. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. 100 Followers..... Congratulations!

  ReplyDelete
 13. மேல தமன்னா..கீழ குஷ்பூ..ம்ம்..கலக்குற செங்கோவி!///

  அதுக்கும் கீழ சிநேகாவா? ம்ம்...

  ReplyDelete
 14. @! சிவகுமார் !//அட்வான்ஸ் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினால்..அவர்கள் 100% மன்னிப்பார்கள்.// ஏன்யா நீங்களே எடுத்துக் கொடுக்கீங்க!

  ReplyDelete
 15. @டக்கால்டி//சொன்னாலும் கேக்கப் போறது இல்ல...அப்புறம் எதுக்குண்ணே?// நீங்க சொன்னா கேட்பேன்ணே...

  ReplyDelete
 16. @விக்கி உலகம்//இந்த பிஞ்சி மூஞ்சியா இப்படியெல்லாம் எழுதுது....// இது அப்போ இருந்த மூஞ்சி..இப்போ இல்லை!

  ReplyDelete
 17. @விக்கி உலகம்//நீங்க மொதல்ல அடுத்தவங்களுக்கு பாலோயரா சேராததுக்கு நீங்க சொல்ற காரணம் கொடுமையா இருக்கு// உண்மையைத் தானே சொன்னேன் விக்கி.

  ReplyDelete
 18. @Chitra வாழ்த்துக்கு நன்றிக்கா..லீவ் முடிஞ்சிருச்சு போல.

  ReplyDelete
 19. @வைகை//அதுக்கும் கீழ சிநேகாவா? ம்ம்...// ஹி..ஹி!

  ReplyDelete
 20. @!* வேடந்தாங்கல் - கருன் *! வாழ்த்துக்கு நன்றி வாத்யார்..உச்சிக்கு ஏன் போகணும்..இந்த இடமே போதும் பாஸ்..எனக்கு உச்சின்னா ரொம்ப பயம்.

  ReplyDelete
 21. நண்பா நிறைய பேர் உங்கள் தளத்தை கூகிள் ரீடர் வழியாக படிக்கின்றனர் 123
  subscribers கூகிள் ரீடரில் என்னையும் சேர்த்து நண்பா தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. நூறு பாலோயர்களை தொடர்ந்து 1000 பாலோயர்கள் பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. உங்க குழந்தை ரொம்ப cute . என்ன வயசு?

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்ணே! :-)

  ReplyDelete
 27. //அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்//
  ஆகா! இது என்ன ப்லாக்கில் உள்ள புது வசதியா? சங்கத்தலைவர் வாழ்க! :-)

  ReplyDelete
 28. பொதுவாக யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன் நான். //

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 29. \\இதுவரை போட்ட கவர்ச்சிப் படங்களுக்காக அன்புச்சகோதரிகள்+நல்ல ஆத்மாக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.\\

  இதைப் படிச்சதும் நின்னு போன உசிரு,

  \\அப்புறம் இனிமேல் போடப்போகும் கவர்ச்சிப் படங்களுக்காகவும் இப்போதே அவர்களிடம் அட்வான்ஸ் மன்னிப்பைக் கோருகிறேன்.\\

  இதைப் படிச்சதும் திரும்ப வந்துச்சு!! ஹி...ஹி...ஹி...... [இப்படியெல்லாம் தலையில குடித் தூக்கி போடுற மாதிரி ஆக்சன் குடுத்து பயமுறுத்தக் கூடாது. எத்தனை ஜீவன்கள் இதை நம்பி இருக்குதுன்னு யோசிச்சுப் பாக்கணும். ஆமா...]

  ReplyDelete
 30. @மைதீன் வாழ்த்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 31. @Vadivelan R அங்க வேற 123 பேர் இருக்கீங்களா..எனக்கு அதைப் பத்தில்லாம் தெரியாமப் போச்சே..இப்படி உலகம் தெரியாத புள்ளையா இருக்கியே செங்கோவி! அந்த 123 பேருக்கும் ஸ்பெஷலா உங்களுக்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 32. @Speed Master வாழ்த்துக்கு நன்றி மாஸ்டர்.

  ReplyDelete
 33. @Uma //உங்க குழந்தை ரொம்ப cute . என்ன வயசு? //Cute-ன்னு சொன்னதுக்கு நன்றி சகோதரி. பதிவுக்குள்ள இருக்குற குழந்தை நானு. அப்போ அந்த குழந்தையோட வயசு 10 ன்னு நினைக்கேன். ஃபுரஃபைல்ல இருக்குறது என் குழந்தை..அதுக்கு வயசு 10 மாசம்.

  ReplyDelete
 34. @ஜீ... //வாழ்த்துக்கு நன்றி ஜீ. //சங்கத்தலைவர் வாழ்க!// ரிப்பீட்டேய்..

  ReplyDelete
 35. ஃபுரஃபைல்ல இருக்குறது என் குழந்தை..//

  நான் அந்த குழந்தையைப் பத்திதான் கேட்டேன். பத்து வயசு ஆச்சுன்னா குழந்தையா? சிறுவன். நான்தான் தெளிவா குழந்தைன்னு எழுதிருந்தேன் இல்ல. அப்புறம் என்ன?

  ReplyDelete
 36. இனி என்னைப்பற்றிய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்யப்படும்.////
  ரகசியத்த சீக்கிரம் வெளியிடுங்க மாப்பு...

  ReplyDelete
 37. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள். எனக்கு பின்னூட்டம் போட்டால் தான் நானும் பின்னூட்டம் போடுவேன் என்ற பழிவாங்க மாட்டேன்ப்பா.

  ReplyDelete
 39. >>>சரி, சும்மாதானே இருக்கோம்,பதிவர் ஆகலாம்..ஹாலிவுட் பாலாண்ணன் வேற அன்பா கூப்பிட்டாரேன்னு

  ஓ.. அவரோட வேலைதானா>... ஹா ஹா

  ReplyDelete
 40. >>>அவனவன் எம் எல் எம்காரன் மாதிரி சொந்தக்காரன்/நண்பன் கழுத்துல கத்தியை வச்சு மிரட்டி ஃபாலோயராச் சேத்துக்கிட்டிருக்கான்!

  எதுக்கு இப்படி பப்ளிக்கா அவமானப்படுத்தறீங்க.. என்னை? ஹா ஹா

  ReplyDelete
 41. >>புது மன்னிப்பு கேட்பேன் . அதுவரை இதையே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். தொலைத்தால் எங்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

  ஹா ஹா நீங்கதான் தல. உங்களுக்கே ஒரு தலயா? அது யாரு?

  ReplyDelete
 42. >>இப்போதைக்கு நான் ஒரு ஆம்பிளை

  அடடா.. எப்போதைக்கும்னு நான் நினைச்சேன்... அப்புறம் உங்க பேரைப்பார்ட்து இத்தனை நாலா ஃபிகருன்னு நினைச்சுத்தான் வந்தேன்.. இனி சாரி.. ஹி ஹி

  ReplyDelete
 43. சரி கடைசியா ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. @Uma // நான்தான் தெளிவா குழந்தைன்னு எழுதிருந்தேன் இல்ல. அப்புறம் என்ன?// அட ஆமாம்..’உங்க குழந்தை’ன்னு கேட்டிருக்கீங்களா..ஆஃபீஸ்ல சின்ன விண்ட்டோல பாத்ததால கவனிக்கலைக்கா..போச்சு, இன்னிக்கும் உங்களை பிரம்பைத் தூக்க வச்சுட்டனா...

  ReplyDelete
 45. @ரஹீம் கஸாலி//ரகசியத்த சீக்கிரம் வெளியிடுங்க மாப்பு.// அந்த தங்கமலை ரகசியத்தை நீங்களாவது எதிர்பாக்கீங்களே, நன்றி கஸாலி!

  ReplyDelete
 46. @middleclassmadhaviநன்றிக்கா..தொடர்ந்து ஆதரவு தருவதற்கு நன்றி.

  ReplyDelete
 47. @அமுதா கிருஷ்ணா//எனக்கு பின்னூட்டம் போட்டால் தான் நானும் பின்னூட்டம் போடுவேன் என்ற பழிவாங்க மாட்டேன்ப்பா// உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதால தான் நாட்டுல மழையே பெய்யுதுக்கா.

  ReplyDelete
 48. @சி.பி.செந்தில்குமார்//உங்களுக்கே ஒரு தலயா? அது யாரு?// தலைவரே, உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.