டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவை அறிமுகப் படுத்தவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.
இன்று நாம் பார்க்கப் போவது MAINTENANCE டிபார்ட்மெண்ட் பற்றி...
எதுக்கு இது?
ஒரு கம்பெனியில் பல இயந்திரங்கள்/உபகரணங்கள் இருக்கும். அவற்றுக்கான பராமரிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து, இயந்திரம் பழுது படாமல் பார்த்துக் கொள்வதும் பழுதானால் அதனைச் சரி செய்வதுமே இவர்களின் முக்கியப் பணி.
என்ன செய்வாங்க?
ஒரு கம்பெனியில் உள்ள அனைத்து இயந்திரங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இயந்திரக்களுக்குத் தேவையான ஆயில் போன்றவற்றை தேவையான இடைவெளியில் செலுத்தப்படுகின்றதா, சரியான லோடில் தான் இயந்திரங்கல் இயங்குகின்றனவா என ரெகுலராகச் சோதிப்பர். ஏதேனும் இயந்திரம் பழுதானால், அதனைப் பிரித்து எந்த உதிரி பாகம் பழுதடைந்திருக்கிறது எனச் சோதித்து அதனை மாற்றுவர்.
இவர்கள் தான் உண்மையான ’இயந்திர’ப் பொறியாளர்கள் எனச் சொல்லலாம். ஏனென்றால் இயந்திரங்களைப் பற்றிய நல்ல அறிவு இவர்களுக்கு அனுபவத்தின் மூலம் கிடைக்கும்.
இந்த வேலையில் உள்ள முக்கியப் பிரச்சினையே இது நேரம் காலம் பார்க்காமல் இயந்திரம் சரியாகும்வரை வேலை பார்க்கவேண்டும் என்பதே. மேலும், தீபாவளி பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில்தான் ஷட்-டவுன் செய்து மெயிண்டனன்ஸ் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.
இங்கே சேரணும்னா..
சிறுவயதிலிருந்தே எதையாவ்து பிரித்து மேயும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?..அது போதும், இந்த வேலை கிடைக்கவும், வேலையில் நல்ல பெயர் எடுக்கவும். இந்த வேலைக்கான இண்டர்வியூவுக்கு போகும்போது, அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் & இயந்திரங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு போகவும்.
டப்பு தேறுமா
சம்பளத்தைப் பொறுத்தவரை புரடக்சனுக்கும் மெயிண்டனஸ்க்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும்போது, சில கம்பெனிகள் இன்செண்டிவ் கொடுப்பதுண்டு.
PRODUCT DEVELOPMENT:
இந்த டிபார்ட்மெண்டைப் பற்றியும் இன்று பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி பல உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வேலையை நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி புரடக்சன் & குவாலிட்டி டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும். ஆனால் புதிதாக ஒரு புராடக்ட் கிளையண்ட்டாலோ R&D டிபார்ட்மெண்ட்டாலோ அறிமுகப் படுத்தப்பட்டால், முதலில் சில மாதிரி பீஸ்களைத் தயாரித்து, அது சரியாக உள்ளதா என முடிவு செய்வர். அதன் பிறகே மாஸ் புரடக்சனுக்கு போக முடியும். அந்த மாதிரி (Sample) தயாரிப்புப் பொறுப்பை இந்த டிபார்ட்மெண்ட் பார்த்துக்கொள்ளும்.
இதில் வேலை செய்பவர்களுக்கு டிசைன், புரடக்சன், குவாலிடி & ப்ளானிங் அறிவு முக்கியம். எனவே பெரும்பாலும் ஃப்ரெஷ் என்சினியர்களை இங்கு எடுப்பதில்லை. எடுத்தால், நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.
இதைத் தவிர பெயிண்டிங், ஃபைனல் இன்ஸ்பெக்சன் & டெலிவரி போன்ற சில டிபார்ட்மெண்ட்கள் உண்டு. அவற்றின் வேலையும் சூப்பர்வைசிங்/குவாலிட்டி போன்றே இருக்கும். தனியாகச் சொல்ல ஏதுமில்லை.
இனி Resume தயாரித்தல் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
அப்பப்போ உருப்படியான இடுகைகளைப் போட்டு உங்க இமேஜை காப்பாத்திகிறீங்க...நீங்க ரெம்ப விவரமான ஆளுங்கோவ்...
ReplyDeleteவடை எனக்கே...
ReplyDeleteவந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
ReplyDeleteஅன்பு செங்கோவி, மிகவும் உபயோகமான பதிவு, வாழ்த்துகள் - ஷோபன்
ReplyDeleteஅண்ணன் கிட்டே எனகு பிடிச்சதே சனி ஞாயிறு லீவ் நாட்களை வேஸ்ட் பண்ண மாட்டாரு.. அவரோட வழக்கமான ஐயிட்டங்கலை திங்கள் டூ வெள்ளி ல வெச்சுக்குவாரு..
ReplyDeleteமற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.//
ReplyDeleteநீங்க ரொம்ப தைரியசாலி கூடங்கண்ணா
ன ஐயிட்டங்கலை திங்கள் டூ வெள்ளி ல வெச்சுக்குவாரு..//
ReplyDeleteவெச்சுக்குவாரா?
நாட்டாமை தம்பி பசுபதி டீச்சரை வெச்சுருக்காருங்க...கண்பார்ம்டுங்க...
நல்ல தரமான தளம் என்பதற்கு உதாரனம் இந்தப் பதிவு... வாழ்த்துக்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஎப்படிங்க இது செங்கோவி,.. சும்மா வூடு கட்டி அடிக்கிறீங்க??
ReplyDeleteஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்(இயந்திரப்பொறியியலில் உள்ள மென்பொருள் துறையை விளக்குவீர்கள் என எதிர்பார்த்தேன் like ansys,CFD,PDS மென்பொருட்களுக்கான தேவைகள், எதிர்காலம், வேலைவாய்ப்புகள் etc)
பதிவுன்னா மத்தவங்களுக்கு பிரயோசனமா இருக்கணும்னு நினச்சி பண்றீங்க மக்கா வாழ்த்துகள் அசத்துங்க அசத்துங்க....
ReplyDeleteபதிவுன்னா மத்தவங்களுக்கு பிரயோசனமா இருக்கணும்னு நினச்சி பண்றீங்க மக்கா வாழ்த்துகள் அசத்துங்க அசத்துங்க....
ReplyDeleteவேலை தேடும் ஒருவருக்கு தேவையான எல்லா விஷயங்களும் தெளிவாக இருக்கு... பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDelete@டக்கால்டி//அப்பப்போ உருப்படியான இடுகைகளைப் போட்டு உங்க இமேஜை காப்பாத்திகிறீங்க..// ஓஹோ..வாரத்துக்கு ஒரு நல்ல பதிவு போட்டாலே இமேஜை காப்பாத்திக்கலாமா..
ReplyDelete@ஷோபன்வாழ்த்துக்கு நன்றி ஷோபன்!
ReplyDelete@ஷோபன்வாழ்த்துக்கு நன்றி ஷோபன்!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்யோவ், நல்ல பதிவுலயும் உம்ம குசும்பைக் காட்டணுமா!
ReplyDelete@டக்கால்டி//நீங்க ரொம்ப தைரியசாலி கூடங்கண்ணா// காலம் பொன் போன்றது..இதைப் படிக்கிற நேரத்துல சிபி பதிவைப் பார்த்தா ரெண்டு படமாவது தேறுமில்ல...
ReplyDelete@டக்கால்டி//நாட்டாமை தம்பி பசுபதி டீச்சரை வெச்சுருக்காருங்க...கண்பார்ம்டுங்க...//உங்களுக்கெல்லாம் பயந்துக்கிட்டுத் தான்யா லீவு நாள்ல இதைப் போடுறேன்..அப்பவும் கும்முறீங்களே..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!//நல்ல தரமான தளம் என்பதற்கு உதாரனம் இந்தப் பதிவு// ஓஹோ...அப்போ இது தரமற்ற தளம் என்பதற்கு உதாரணம் நேற்றைய பதிவா?
ReplyDelete@விக்கி உலகம்//பகிர்வுக்கு நன்றி நண்பா//..இது பிள்ளை!..எவ்வளவு அழகா கமெண்ட் போடுது!
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ//பதிவுன்னா மத்தவங்களுக்கு பிரயோசனமா இருக்கணும்னு நினச்சி பண்றீங்க//..ஆமா சார், இந்தப் பதிவு ,மத்தவங்களுக்கு!..நேத்து பதிவு உங்களுக்கு..சர்யா?
ReplyDelete@ரஹீம் கஸாலிவருகைக்கு நன்றி கஸாலி1
ReplyDelete@jothi//(இயந்திரப்பொறியியலில் உள்ள மென்பொருள் துறையை விளக்குவீர்கள் என எதிர்பார்த்தேன்// ஐயா, அதை ஏற்கனவே விளக்கி விட்டேன் டிசைன் பற்றிய பதிவில்!..அது போதும் அல்லவா?
ReplyDelete@பாரத்... பாரதி...: உங்களை போன்ற, கருன் போன்ற கல்வியாளர்கள் பாராட்டுவதில் ரொம்ப சந்தோசம்!
ReplyDeleteஅன்பு நண்பர்களே...
ReplyDeleteஎனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
டக்கால்டி.
நண்பர்களே,
ReplyDeleteபழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
நன்றி,
டக்கால்டி
ரெஸ்யூம் தயாரிப்பதில்தான் நம் நண்பர்கள் பலர் இலக்கை தவறவிடுகின்றனர். அதை பற்றி அடுத்து நீங்கள் எழுதப்போகும் பதிவு பலருக்கு பயன்படும் என நம்புகிறேன்.
ReplyDelete@டக்கால்டி பாரத்..பாரதியின் பதிவும் ஒருநாள் காணாமல் போய், திரும்ப வந்தது..அதனால் ஏதாவது ப்ளாக்கர் பிராப்ளமாகவும் இருக்கலாம்..திரும்பக் கிடைத்ததில் சந்தோஷம் டகால்டி!
ReplyDelete@! சிவகுமார் !உண்மை தான் சிவா..அது முக்கியமான பகுதி..நான் ஏதாவது மிஸ் பண்ணாலும், உங்கள் அனுபவத்தைப் பின்னூட்டத்தில் சொல்லி உதவுங்கள்! நன்றி.
ReplyDelete