Wednesday, March 23, 2011

மானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்! (தேர்தல் ஸ்பெஷல்)

எங்கள் கிராமத்தில் வாழும் பேச்சியக்கா கணவனை இழந்தவர். ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதுவும் பொறுக்கவில்லை அந்தக் கடவுளுக்கு. குழந்தையின் இதயத்தில் ஓட்டை என்றும் ஆபரேசன் செய்ய 5 லட்சமாவது வேண்டும் என்றும் டாக்டர்கள் இடியை இறக்கினார்கள். ஏழைப் பெண் இடிந்து போய் பல இடங்களில் பணம் கடனாகக் கேட்டுப்பார்த்தார். இவ்வளவு பெரிய தொகையை அந்த ஏழைப்பெண்ணை நம்பி யார் தான் கொடுப்பார்கள்? 

அப்போது தான் அந்த போஸ்டர் அக்காவின் கண்ணில் பட்டது. எங்கள் பக்கத்து ஊருக்கு கொடியேற்ற வைகோ வருவதாக அந்த போஸ்டரில் போட்டிருந்தது. வைகோவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுத்த மானங்கெட்ட அரசியல்வாதி அவர். ஆனால் நல்லவேளையாக அக்காவிற்கு அது தெரியவில்லை. அக்கா குடும்பம் அதிமுக. எனவே யாரிடமும் சொல்லாமல் ஒரு வெள்ளைப்பேப்பரில் தன் நிலைமையை எழுதினார்.

வைகோ கார் எங்கள் ஊர் வயல்காட்டுப் பாதை வழியே தான் கொடியேற்றப் போக வேண்டும். அங்கு போய் கையில் பேப்பருடன் நின்று கொண்டார். வைகோவின் கார் வந்தது. அக்கா கையை நீட்டினார். ஒரு தன்மானமுள்ள அரசியல்வாதியோ, தமிழனோ காரை நடுக்காட்டில் நிறுத்துவானா? ஆனால் வைகோ தான் சுத்த மானங்கெட்டவராயிற்றே. காரை நிறுத்தி ‘யாரும்மா நீங்க? ஏன் இங்க வெயில்ல நிக்கீங்க’ன்னு கேட்டார். அக்காவிற்கு பேச முடியவில்லை. அழுதுகொண்டே அந்த பேப்பரை நீட்டினார். மனுவா? ச்சே..ஒரு நல்ல அரசியல்வாதி நடுக்காட்டிலா மனுவை வாங்குவார்? 

நாளைக்கு ஆஃபீசுக்கு வா என்று சொல்லிவிட்டு அன்றிரவே டெல்லிக்கு பறந்தால்தானே அவர் பொழைக்கத் தெரிந்த அரசியல்வாதி. வைகோ அந்த விஷயத்திலும் சுத்த வேஸ்ட். மனுவை வாங்கிப் படித்தார். மிகுந்த வருத்தத்துடன் ‘கவலைப்படாதீங்கம்மா. நாளைக்கு எங்க கட்சி ஆபீசுக்கு வந்து இவரைப் பாருங்க. கண்டிப்பா உதவி செய்றோம்’ என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தி விட்டு விடை பெற்றார். அப்படியே ஓடிப்போயிருந்தாக் கூட பரவாயில்லை.

ஆனால் மறுநாள் சொன்னபடியே எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. அந்தக் குழந்தையை திருநெல்வேலிக்கு கட்சிக்காரர்களே அழைத்துச் சென்று ஆபரேசனும் செய்ய உதவினர். இன்று குழந்தை நலம். அந்த உதவி கட்சி நிதியில் செய்யப்பட்டதா அல்லது மானங்கெட்ட தனமாக கூட்டனி வைத்துக் கிடைத்த எம்.பி நிதியில் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
இப்படி ஒரு விவரங்கெட்ட அரசியல்வாதியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் உதவி கேட்டால் ‘நீ எந்தக் கட்சி? உறுப்பினர் அடையாள அட்டை எங்கே? ஓஹொ.அதிமுகவா? அப்புறம் என்ன இதுக்கு எங்கிட்ட வந்தே?’ன்னு தானே ஒரு மானமுள்ள அரசியல்வாதி கேட்பான்? அடுத்து ‘நீ என்ன ஜாதி? ஓஹோ.அந்த ஜாதியா..நீங்கள்லாம் எனக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே.அந்தக்கட்சிக்குத் தானே போடுவீங்க. உங்க ஊரே அப்படித்தானே? என் கட்சியா இல்லாட்டியும் பரவாயில்லை, என் ஜாதியா இருக்க வேண்டாமா?’ன்னு கேட்க வேண்டாமா? அப்படி கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் மனுவை வாங்கி தேம்பித் தேம்பி அழுதா உருப்பட முடியுமா?

குடுகுடுப்பைக்காரன் மாதிரி மக்களோடு மக்களா கெக்கேபிக்கேன்னா ஒரு அரசியல்வாதி இருக்குறது? ஜெயலலிதாவை வழில பாத்து மனு கொடுத்தவங்க யாராவது இருக்கீங்களா? கருணாநிதிகிட்ட இப்படி வேறொரு கட்சிக்காரன் உதவி வாங்குனதா சரித்திரம் இருக்கா? (அவர் நீ என்ன ஜாதின்னு கேட்கமாட்டாரு..நீ என்ன முறை.. பேரனா மகனான்னு தான் கேட்பாரு!)
அவங்களை மாதிரி தன்மானத்தோட இருக்க வேண்டாமா வைகோவும்? அப்புறம் எப்படி மக்கள் மதிப்பாங்க?

ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, நம்ம மக்கள் தன்மானச் சிங்கங்களா, மாசுமறுவற்ற தங்கங்களா இருக்குறது தான். வைகோ அந்த அக்காவிற்கு உதவி செஞ்சதைப் பார்த்ததும் அக்கா குடும்பமோ உறவினர்களோ மதிமுகவில் சேரலை. மானங்கெட்ட வைகோவும் அந்த டீலிங்-கைப் பேசாமல் உதவி செஞ்சுட்டார். எங்க ஊர்ல எல்லாருக்கும் இது தெரியும். ஆனாலும் யாரும் வைகோவிற்கு ஓட்டுப்போடலை. ஏன்? ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.

நான் சொல்றதாவது உங்களுக்குப் புதுசா இருக்கலாம். ஆனால் செய்தித்தாளில் வந்த ஒரு கூத்தைக் கேளுங்க. விருதுநகர் பக்கத்துல நெடுஞ்சாலைல நடுராத்திரியில் ஒரு விபத்து. ஒரு குடும்பமே அடிபட்டு ரத்தக்களறியாக் கிடக்கு. மானமுள்ள தமிழன்லாம் பாத்துட்டு காரை நிப்பாட்டாமல் போனார்கள். அப்பப் பார்த்து நம்ம மானங்கெட்ட வைகோ வந்துட்டார். தன் காரில் அவங்களை ஏத்தி, ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுத் தான் போனாரு. அதோட விட்டாப் பரவாயில்லை. காலைல ஃபோன் வேற. ‘நீங்க நல்லா இருக்கீங்களா’ன்னு. இப்படி வெண்ணைத்தனமா இருந்தா தமிழன் எப்படி அவரைத் தலைவரா ஏத்துக்க முடியும்? 

சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் வெட்டப்பட்டு கிடந்தப்போ, கார் ரத்தக்கரை ஆகிடுமேன்னு ஆம்புலன்சுக்கு ஃபோன் போட்ட அமைச்சரை வீடியோவில் பார்த்திருப்பீங்க. அப்படி விவரமா இருக்கப்போய்த் தான் அவர் அமைச்சரா இருக்காரு, வைகோ கலிங்கப்பட்டில கல்லு உடைக்கப் போய்ட்டாரு.

இந்த விஷயமும் விருதுநகர்காரங்களுக்குத் தெரியும். ஆனா அவங்க விவரமானவங்க. வைகோ போன தேர்தல்ல விருதுநகர்லயே நின்னாரு. நம்ம மக்கள் பார்த்தாங்க..இவர் ஜெயிச்சு டெல்லிக்குப் போய்ட்டா யாரு ஆக்ஸிடண்ட் கேஸ்களை அட்டெண்ட் பண்றது? ஜெ.வோ கலைஞரோவா வருவாங்க? அவங்கள்லாம் தலைவர்கள் ஆச்சே. அதனால நல்லபடியா வைகோவை தொகுதில தோற்கடிச்சுட்டாங்க. இப்போ கருணையே வடிவான ‘அம்மா’வும் ‘நீயே ஜெயிக்கலை..உனக்கெதுக்கு 21 தொகுதி’ன்னு வைகோவை விரட்டி விட்டிடுச்சு.

வைகோ கட்சி ஆரம்பிச்சப்போ தனியா நின்னாரு. ஆனால் நாம யாரு?  இந்த மாதிரி கூறுகெட்ட ஆளை முதல்வரா ஆக்குவோமா? டெபாசிட்டைக் காலி பண்ணோம். நாம ஓட்டுப் போடணும்னா கலர் கலரா போஸ்டர் ஒட்டணும்..வீதி வீதியா பெட்ரோல் செலவழிச்சுச் சுத்தணும். எல்லாத்துக்கும் மேல ஓட்டுக்கு காசும் கொடுக்கணும். ஆனால் அந்த தலைவர் செலவழிக்க மட்டும் தான் செய்யனும். செலவைச் சமாளிக்க ஊழல் செஞ்சாத்தான் முடியும். அதுக்கு ஆட்சில ஒரு தடவையாவது இருக்கணும். அதுக்கும் விட மாட்டோம். 

ஆனால் செலவைச் சமாளிக்க முடியாமல் யார்கூடவாவது கூட்டணியும் சேரக்கூடாது. சேர்ந்தா மானங்கெட்டவன். நம்மளை மாதிரி மானத்தோட இருக்க வேண்டாமா? எங்களுக்காக தேர்தலப்போ செலவளி. ஆனால் ஊழலோ கூட்டணியோ கூடாது. இவ்வளவு விவரமா யோசிக்கிற மக்களுக்குத் தலைவரா இருக்குற தகுதி வைகோவுக்கு இருக்கா?

எப்பத் தனியா நின்னாலும் தோற்கடிப்போம். யார்கூடவாவது கூட்டணி சேர்ற வரைக்கும் துரத்தி துரத்தி அடிப்போம். கூட்டணி வச்சுட்டா மானங்கெட்டவன்னு சொல்வோம். ஏன்னா நாங்க மானமுள்ள தமிழர்கள்.இது தான் எங்கள் கொள்கை. இது மாதிரி வைகோகிட்ட கொள்கை ஏதாவது இருக்கா? 

1991-ல ஜெ.வுக்கு ஆதரவு தெரிவிச்சு ஓட்டுப்போட்டோம். 1996ல் ச்சீ..ச்சீ..இதுவும் பொம்பளையான்னுட்டு கலைஞ்சருக்கு ஓட்டுப் போட்டோம். 2001ல் கலைஞரெல்லாம் ஒரு மனுசனா-ன்னு கேட்டுட்டு மானத்தோட புரட்சித் தலைவிக்கு ஓட்டுப் போட்டோம். 2006ல் திரும்பக் கலைஞருக்கே ஆதரவு. இதெல்லாம் நாம செய்யலாம். ஏன்னா நாம மானமுள்ள தமிழர்கள். அதுக்கான எல்லாக் காரணமும் நம்மகிட்ட இருக்கும்.  ஆனால் வைகோவும் நம்மை மாதிரியே ஜெ-கலைஞர்னு மாறலாமா? என்ன அநியாயம்..

ஜெ.வின் பாசிச ஆட்சியை ஒழிப்பேன்னு சொல்லிட்டு ஜெ.கூடயே கூட்டணி வச்சாரு மானங்கெட்ட வைகோ! ஆனால் பிறந்ததில் இருந்தே மானத்தோட வாழுற ஜெ. ஏன் இப்படிப் பேசுனவரைச் சேர்த்துக்கிச்சு? கேட்க மாட்டோம். ஏன்னா ஜெ.வும் நாங்களும் வைகோவைக் கேவலப்படுத்தி துரத்தியதில் பார்ட்னர்ஸ்.

மானங்கெட்டு திமுக கூடவே மறுபடி கூட்டணி வச்சாரு வைகோ. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒழிப்பேன்னு வீரவசனமும் அடுத்த தேர்தல்ல பேசுனாரு வைகோ. சரி, அப்படிபட வைகோவை ஏன் கலைஞர் இப்போ ’தம்பீ வா’-ன்னு அழைக்காரு. அவரும் நம்மளை மாதிரி மானமுள்ள தமிழனங்கிறதாலயா?

’மக்கள் எப்படியோ அப்படியே தலைவர்களும் உருவாகி வருவார்கள்’. எனவே  வைகோ கலிங்கப்பட்டியில் களை புடுங்கட்டும். நமக்கு விஜயகாந்த்தே அதிகம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

97 comments:

 1. True >> camps | MDMK http://mdmk.org.in/article/feb09/camps

  ReplyDelete
 2. வை.கோ.வை பத்தி இப்படி குமுறிட்டிங்களே... ஐயோ பாவம்...


  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

  ReplyDelete
 3. @தமிழ் 007 டன்..டன்..டான்னு வந்ததுக்கு நன்றி தமிழ்!

  ReplyDelete
 4. @Raguசங்கொலி லின்க் கொடுத்ததற்கு நன்றி ரகு...அந்தப் படங்கள் எனக்கு பயன்படும்.

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - பிரகாஷ்//வவை.கோ.வை பத்தி இப்படி குமுறிட்டிங்களே..// குமுற வைக்காங்கண்ணே!

  ReplyDelete
 6. //மக்கள் எப்படியோ அப்படியே தலைவர்களும் உருவாகி வருவார்கள்’. எனவே வைகோ கலிங்கப்பட்டியில் களை புடுங்கட்டும். //
  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு பழைய நாடகத்தில் கேட்ட வசனம்.. 'அவர் மிகவும் நல்லவர். நல்லவர்கள் அரசியலுக்கு வரலாமா? அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள்' அந்த வசனம் வைகோவிற்கு நன்றாக பொருந்துகிறது. தமிழக மக்கள் யோக்யதைக்கு வைகோ அதிகம். கருணாநிதி / ஜெயலலிதா / விஜயகாந்த் / ராமதாஸ் ..இவர்களே போதும்!

  ReplyDelete
 7. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அரசியலில் இருந்துகொண்டு தன்மானமும் இருந்தால் இப்படித்தான்...
  அப்போ தமிழ்நாட்டுக்கு விடிவுகாலமே கிடையாதா....

  ReplyDelete
 8. //நீ எந்தக் கட்சி? உறுப்பினர் அடையாள அட்டை எங்கே? ஓஹொ.அதிமுகவா? அப்புறம் என்ன இதுக்கு எங்கிட்ட வந்தே?’ன்னு தானே ஒரு மானமுள்ள அரசியல்வாதி கேட்பான்? அடுத்து ‘நீ என்ன ஜாதி? ஓஹோ.அந்த ஜாதியா..நீங்கள்லாம் எனக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே.//

  இன்னும் எத்தனை வருசத்துக்குதான் ஜாதியை கட்டிக்கிட்டு அழுவாங்களோ.... ஒரு ஜாதி மக்கள் அனைவரும் அதே ஜாதி வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்ற கேனைத்தனமான எண்ணத்தை மாற்ற வேண்டும். நடுநிலை மக்கள் அனைத்து ஜாதியிலும் கணிசமான அளவு உண்டு என்பதே யதார்த்தம்..எப்போது உணருவார்களோ???

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. அன்புடன் வணக்கம் நண்பரே.
  என் போன்றவர்களின் எதிர்பார்ப்பை தகர்த்து விட்டார் ? ஜெ. விட்டு விலகியதும் தனித்து மற்ற கட்சிகளுடன் சேர்ந்து போட்டி இடலாம் என எண்ணினோம்.. இன்னும் ..5...வருடம் நரக வேதனைதான் .. இருப்பவர்களை கண்டால் நரகலை பூசியவர்களை போல்தான் இருக்கிறது என்ன செய்ய ????உங்கள் உள்ள குமுறலுக்கு எனது ஆறுதல் !!

  ReplyDelete
 11. வைகோவை போலத்தான் நீங்களும்ன்னு நினைக்கிறேன். அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்களே?

  ReplyDelete
 12. அன்புள்ள செங்கோவி,

  உங்கள் தளத்துக்கு இன்று தான் முதன்முறையாக வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.

  லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  ReplyDelete
 13. வெட்கமாகத் தான் இருக்கு!!

  ReplyDelete
 14. டும்டும்..டும்டும்...
  வைகோவின் வனவாசம் எது நாள் வரையோ?
  உங்கள் ஆதங்கம் சரி

  ReplyDelete
 15. தெளிவாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 16. Missed Vadai..

  I shall read,comment and vote later..sorry..bcoz i am in full mabbu...he he

  ReplyDelete
 17. நானும் எஙகள் ஊரில் இதைபோல வைகோவின் தன்னலமற்ற உதவிகளை நிறைய பார்த்திருக்கிறேன் நண்பரே.பதிவிற்க்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 18. As per your words Vaiko is a good man but he is not a proper politician .He have to judge correctly and join every election with alliance he shined .Every time he misjudged and join the alliance in a centimate where is Vaiko that alliance should be defeated in past .So all parties not interest to join with him.You think just for a seat he ran from DMK alliance before 5 years .If he was in DMK alliance that would help for Srilankan tamils before 2 years

  ReplyDelete
 19. உண்மையான தமிழன் வைகோ தான். தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட ஜெயலலிதா வருந்தும் நாள் வரும்.

  ReplyDelete
 20. @bandhu//நல்லவர்கள் அரசியலுக்கு வரலாமா? அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள்' // சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 21. @செல்வன்//அப்போ தமிழ்நாட்டுக்கு விடிவுகாலமே கிடையாதா....// அதையெல்லாம் இலவசமாக் கொடுக்க முடியாதுங்க..முடிஞ்சாக் கொடுத்திருப்பாங்க.

  ReplyDelete
 22. @! சிவகுமார் !//இன்னும் எத்தனை வருசத்துக்குதான் ஜாதியை கட்டிக்கிட்டு அழுவாங்களோ.// உண்மை தான் சிவா..உதவி கேட்டு வருவோரிடம் ஜாதி கேட்கும் எம்.எல்.ஏவை நான் அறிவேன்..இது மாதிரி பலர் உண்டு..ஆகவே அந்தக் குத்து!

  ReplyDelete
 23. @விக்கி உலகம்வருங்கால அரசியல்வாதி, ஒன்னும் சொல்லாமப் போய்ட்டாரே!

  ReplyDelete
 24. @ச்சின்னப் பையன்//We deserve Vijaykanth and Vijay only.// உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோல இருக்குறவரைக் கூட ஜெயிக்க வச்சோம் நாம்!

  ReplyDelete
 25. @hamaragana//உங்கள் உள்ள குமுறலுக்கு எனது ஆறுதல்.// உங்கள் ஆறுதலுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 26. @extra victory //அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்களே?// என்ன செய்ய பாஸ்.இதுக்குக்கூட உணர்ச்சிவசப்படலைன்னா எப்படி பாஸ்..வட மாவட்ட மக்களுக்கு வைகோ பற்றித் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் எம் போன்ற தென் மாவட்ட மக்களுக்கு இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விஷயம்.

  ReplyDelete
 27. @லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்//உங்கள் தளத்துக்கு இன்று தான் முதன்முறையாக வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.// உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள் பாராட்டியதில் மகிழ்ச்சி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்!

  ReplyDelete
 28. @middleclassmadhavi நல்லவங்களுக்குக் காலம் இல்லைக்கா!.யாரோ தெருவில் ஆக்ஸிடண்ட் ஆகிக் கிடப்பவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் மனிதரை ஒதுக்குகிறோம்..தன் கட்சிக்காக பிரச்சாரம் செய்து ஆக்ஸிடண்ட் ஆகிக்கிடக்கும் மனிதரை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லாத மனிதர்களை அரியணை ஏற்றுகிறோம்........

  ReplyDelete
 29. தமிழ்நாடும், தமிழ் மக்களும் நாசமா போகட்டும்(என்னையும் சேத்திதான்)

  ReplyDelete
 30. @Uma //தெளிவாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.// தங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 31. வைகோ அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்ல மனிதன் என்பதை ‘நச்’ சென்று சொல்லியிருக்கிறீர்கள்.
  அவர் காங்கிரசுக்கு எதிராக தனித்து நின்றால் நல்ல வாக்குகளைப் பெறுவார் என்பதே நடுநிலையானவர்களின் கருத்து.

  ReplyDelete
 32. வைகோ அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்ல மனிதன் என்பதை ‘நச்’ சென்று சொல்லியிருக்கிறீர்கள்.
  அவர் காங்கிரசுக்கு எதிராக தனித்து நின்றால் நல்ல வாக்குகளைப் பெறுவார் என்பதே நடுநிலையானவர்களின் கருத்து.

  ReplyDelete
 33. @டக்கால்டி//Missed Vadai..// எங்களுக்கெல்லாம் என்ன கவலை..இந்த டகால்டிக்கு என்ன கவலைன்னு பாருங்க மக்களே..தெளிவாயிட்டு வாரும்யா.

  ReplyDelete
 34. @நந்தா ஆண்டாள்மகன்//நானும் எஙகள் ஊரில் இதைபோல வைகோவின் தன்னலமற்ற உதவிகளை நிறைய பார்த்திருக்கிறேன் நண்பரே.// இது மாதிரி பலநூறு சம்பவங்கள் தென்மாவட்டங்களில் உண்டு..தங்கள் பகிர்தலுக்கு நன்றி நந்தா.

  ReplyDelete
 35. @Tirupurvalu நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே..தப்பான நேரத்தில் தப்பான கூட்டணிக்குப் போனது வைகோவின் தவறுதான்..உணர்ச்சி வசப்படுவதால் வந்த தவறு அது.

  ReplyDelete
 36. @அஹோரி//தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட ஜெயலலிதா வருந்தும் நாள் வரும்.// தற்போதைய சூழ்நிலை அது தான், பார்ப்போம் சார்.

  ReplyDelete
 37. அரசியலில் இருந்துகொண்டு தன்மானமும் இருந்தால் இப்படித்தான்...

  ReplyDelete
 38. எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மனிதாபிமானியாக இருப்பார்கள் என்பதற்கு வைகோ ஒரு நல்ல சான்று

  ReplyDelete
 39. இந்த தேர்தலில் வை.கோ வின் அரசியல் துறவறம் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பிருந்த நிலைக்கு ஒரு முக்கிய திருப்பம்.இதன் பாதிப்பு தேர்தலில் பிரதிபலிக்கும்.தற்போதைய களநிலையும் மக்கள் மனநிலையும் ஊழலுக்குப் பழக்கப்படுத்திக்கொண்ட மாதிரியே தெரிகிறது.

  இலவசம் மட்டும் போதும் என்பது உண்மையா இல்லை தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லுவோம் என்கிற கோயபல்ஸ் பிரச்சாரத்தை முன்வைக்கிறதா என்பதை தேர்தல் முடிவுகள் காண்பித்து விடும்.

  முடிவுகள் எப்படியிருந்த போதிலும் தமிழக மக்களின் நிலை பரிதாபம்.

  ReplyDelete
 40. உணர்ச்சி மயமான கட்டுரை. மனம் வலிக்கத்தான் செய்கிறது. மக்களின் மனோபாவம் தான் தலைவர்களை உருவாக்குகிறது.
  எனினும் வைகோ விற்கு இன்னமும் காத்திருக்கவேண்டும் தமிழர்கள். நிச்சயம் ஒரு நாள் வருவார்.

  ReplyDelete
 41. அக்மார்க் செங்கோவி கட்டுரை, ம்ம்ம் விரிவான அலசல் ...

  ReplyDelete
 42. வைகோ.. மட்டுமல்ல நல்ல சினிமா, நல்ல இலக்கியம், நல்ல பத்திரிகை போன்றவற்றிற்கு இதுதான் விதி ....தமிழ்நாட்டில் மட்டும்...... இறங்கி அடிக்காத வரையில் யாருக்கும் சொரணை வரப்போவதில்லை.

  ReplyDelete
 43. வைகோ வாழ்கன்னு கத்தனும் போல இருக்கு.


  இந்த எலக்சன் நிச்சயம் வைகோவின் வலியை உணர்த்தும்.

  ReplyDelete
 44. செமத்தனமான விளாசல்.....

  ReplyDelete
 45. தமிழ்க் காரன் புத்தி ரொம்ப கீழ்த் தரமா வேலை செய்யும். காமராஜரைத் தோற்க்கடித்தார்கள், அதற்க்கு மாற்றாக எப்பேர்பட்ட கட்சியைத் தேர்ந்தெடுத்தாங்க தெரியுமா?? அண்ணாதுரை, கருணாநிதி. ஹா...ஹா..ஹா.. அன்னைக்கு பிடிச்சது இவனுங்களுக்கு தரித்திரம், இன்னமும் விடியவேயில்லை. எனக்கு ஒரு சந்தேகம், கருணாநிதிக்கு கொள்ளையடிப்பது, மொத்த தமிழ்நாட்டையுமே பலி கொடுத்தாவது பெண்டு பிள்ளைகளை சவுகரியமாக வைத்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு எந்த கொள்கை, கோட்பாடு என்று இருப்பதாகத் தெரியவில்லை, இந்த தமிழன் அப்படி என்னா அந்தாளோட கொள்கையை மெச்சி ஓட்டு போடுரான்னே தெரியலை. \\ஆனால் பிறந்ததில் இருந்தே மானத்தோட வாழுற ஜெ. ஏன் இப்படிப் பேசுனவரைச் சேர்த்துக்கிச்சு? \\ வை.கோ வை விடுங்க, காளிமுத்து மாதிரி ஜெ. வை கேவலமாகத் திட்டி பேசியவர்கள் உண்டா, [அதையெல்லாம் இங்கே எழுதக் கூட முடியாது...ஹா.ஹா.ஹா..] அவரையே சபாநாயகரா உட்கார வைக்கவில்லையா, அம்மாவுக்கு ராஜதந்திரம் கொஞ்சம் ஜாஸ்தி.

  ReplyDelete
 46. அண்ணன் கடைல இன்னைக்கு செம கூட்டம் போல.. என்ன? நடக்குது? பார்ப்போம்..

  ReplyDelete
 47. சதீஷ் கூட சேராதீங்கன்னு அண்ணன் கிட்டே சொன்னேன் .. கேட்கல.. அண்னன் செம கோபமாத்தான் இருக்கார் போல .. நைஸா எஸ்கேப் ஆகிடுவோம்..

  ReplyDelete
 48. வழக்கமா தேர்தல் வந்தாலே மக்கள் தான் ஏமாந்து போவாங்க
  மக்களுள் ஒருவரா இருக்கணும்னு நினைச்ச ஒரு தலைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.N L C , ஆகட்டும் இல்ல STERLITE கம்பெனியகட்டும் இரண்ட்டுக்கும் அதிகமா போராடுன ஒரே அரசியல் தலைவர் வைகோ தான், சமீபத்துல மக்களுக்காக போராடுன வேற கட்சிகாரர, கட்சிய யாராவது கட்டுங்க , அந்த வகையில வைகோ மக்கள் மாதிரி தான். கர்போரெட் கம்பெனிகள் தான் மக்களை ஆட்சி செயுறாங்க அப்படிங்குறது. வைகோ வோட நிலைமை எடுத்து காட்டுது


  தமிழக மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளை கண்ட நாய்களிடம் இழந்து கொண்டு இருக்கின்றனர். அதை மீட்டு எடுக்க வழி தெரியாமல் ஆட்டுக்குட்டி மறுபடி மறுபடி ஓநாய்களிடமே மாட்டி கொள்கிறது. அதை பற்றி சொல்பவர்களை மீட்டு எடுக்க வருபவர்களையும் இச் சமுகம் தெரிந்தே பலி கொடுக்கிறது

  ReplyDelete
 49. இதயத்தில் இடம் கன்பர்ம்......

  ReplyDelete
 50. pathivu neruppaga irukkirathu.samy

  ReplyDelete
 51. அருமைங்க !!!! நல்லா வஞ்சப்புகழ்ச்சி மாதிறி மற்ற தலைவர்களை விளாசியிருக்கீங்க !!!

  ReplyDelete
 52. 1991-ல ஜெ.வுக்கு ஆதரவு தெரிவிச்சு ஓட்டுப்போட்டோம். 1996ல் ச்சீ..ச்சீ..இதுவும் பொம்பளையான்னுட்டு கலைஞ்சருக்கு ஓட்டுப் போட்டோம். 2001ல் கலைஞரெல்லாம் ஒரு மனுசனா-ன்னு கேட்டுட்டு மானத்தோட புரட்சித் தலைவிக்கு ஓட்டுப் போட்டோம். 2006ல் திரும்பக் கலைஞருக்கே ஆதரவு. இதெல்லாம் நாம செய்யலாம். ஏன்னா நாம மானமுள்ள தமிழர்கள். அதுக்கான எல்லாக் காரணமும் நம்மகிட்ட இருக்கும். ஆனால் வைகோவும் நம்மை மாதிரியே ஜெ-கலைஞர்னு மாறலாமா? என்ன அநியாயம்..//
  ஹி ஹி போங்க பாஸ்...என்னை ரொம்ப புகழாதீங்க....எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு...ஹி ஹி

  ReplyDelete
 53. @சே.குமார் கருத்துக்கு நன்றி குமார்.

  ReplyDelete
 54. @ரஹீம் கஸாலி //வைகோ ஒரு நல்ல சான்று// உண்மை தான் கஸாலி. நன்றி.

  ReplyDelete
 55. @ராஜ நடராஜன்//முடிவுகள் எப்படியிருந்த போதிலும் தமிழக மக்களின் நிலை பரிதாபம்.// உண்மை தான் பாஸ்..தொடர்ந்து ஆழமான கருத்துக்களை பின்னூட்டுவதற்கு நன்றி.

  ReplyDelete
 56. @கக்கு - மாணிக்கம் //மனம் வலிக்கத்தான் செய்கிறது. // ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு சார்.

  ReplyDelete
 57. @இரவு வானம்//அக்மார்க் செங்கோவி கட்டுரை // பாராட்டுக்கு நன்றி நைட்.

  ReplyDelete
 58. @இரவு வானம்//அக்மார்க் செங்கோவி கட்டுரை // பாராட்டுக்கு நன்றி நைட்.

  ReplyDelete
 59. @VJR உங்கள் உணர்வோடு இந்தக் கட்டுரை உறவாடியதில் மகிழ்ச்சி..தமிழ்மணத்தில் 14 ஓட்டு விழுந்ததிலேயே தெரிகிறது, பலருக்கும் இந்தப் பதிவு பிடித்தது என்று.அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 60. @kama//வைகோ.. மட்டுமல்ல நல்ல சினிமா, நல்ல இலக்கியம், நல்ல பத்திரிகை போன்றவற்றிற்கு இதுதான் விதி // உண்மை பாஸ்..கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 61. @Jayadev Das//அம்மாவுக்கு ராஜதந்திரம் கொஞ்சம் ஜாஸ்தி.// ரொம்பக் கேவலமான ராஜதந்திரமால்ல இருக்கு..கலைஞர் கொள்கையை தெளிவாப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே சார்.

  ReplyDelete
 62. @சி.பி.செந்தில்குமார்//அண்னன் செம கோபமாத்தான் இருக்கார் போல .. நைஸா எஸ்கேப் ஆகிடுவோம்..// ஓவராப் பொங்கிட்டமோ..தலைவரே தலை தெறிக்க ஓடுதாரே..

  ReplyDelete
 63. @பன்னிக்குட்டி ராம்சாமி உங்க இதயத்தில் எனக்கு இடம் உண்டு தானே சார்.

  ReplyDelete
 64. @revathasan//தமிழக மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளை கண்ட நாய்களிடம் இழந்து கொண்டு இருக்கின்றனர். அதை மீட்டு எடுக்க வழி தெரியாமல் ஆட்டுக்குட்டி மறுபடி மறுபடி ஓநாய்களிடமே மாட்டி கொள்கிறது. அதை பற்றி சொல்பவர்களை மீட்டு எடுக்க வருபவர்களையும் இச் சமுகம் தெரிந்தே பலி கொடுக்கிறது.// அருமையான பின்னூட்டம். அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 65. @Samy//pathivu neruppaga irukkirathu.// நன்றி சாமி..உண்மை சுடும் தானே?

  ReplyDelete
 66. @ramalingams வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலிங்கம்!

  ReplyDelete
 67. @குறை ஒன்றும் இல்லை !!!//அருமைங்க !!!! நல்லா வஞ்சப்புகழ்ச்சி மாதிறி மற்ற தலைவர்களை விளாசியிருக்கீங்க// நன்றி சார்..நல்லாயிருக்கீங்களா..ரொம்ப நாளாச்சு..ஃபாலோ பண்றதுக்கு நன்றி.

  ReplyDelete
 68. @டக்கால்டி நீரு மப்பு தெளிஞ்சு வருமுன்ன அடுத்த பதிவே ரெடி ஆயிடுச்சு..நல்ல ஆளுய்யா.

  ReplyDelete
 69. அண்ணே !!! நான் தொடர்ந்து படிப்பேன்.. பின்னூட்டம் போட முடியும் போதெல்லாம் இடுவேன்!!!

  ReplyDelete
 70. நல்ல தலைவர்களெல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவது வேதனை அழிக்கிறது,

  ReplyDelete
 71. Ithe karanathirkkuthaan kalaignar cost arasiyal enra ayuthathai kaiyil eduththar!
  enni paarungal.1996-2001 periodil kalaignar arumaiyaga aatchi seithaar!annal enna payan? kootani enra ayuththai payan paduththi avarathu aatchiyai veelththi vittaargal!!jeyalaitha ponra costly arasiyalvaathiyai veelththa vendum enraal oottukku panam kuduppathu,ilavasam enra aythathai eduththuthaan agavendum!illai enraal vaiko vai pol kalignar kaanamal poyiruppaar!!

  ReplyDelete
 72. @zing513320உண்மை தான் சகோ, 1996-2001 ஆட்சி நன்றாகவே இருந்தது. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ReplyDelete
 73. I agree with everything. It is very sad, however his stand in Eelam tamils issue became suspectible when he joined (twice) with J.J. Past is past, now if he spend some more (his) money for showing the video he produced to as much Tamils in Tamilnadu, India (it is in the http://mdmk.org.in/) then I will accept he is one of the best Tamil leader.

  ReplyDelete
 74. @சுதேசன்//நல்ல தலைவர்களெல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவது வேதனை அழிக்கிறது,// உண்மை தான் சார்..நமக்கு விதித்தது அவ்வளவு தானா?

  ReplyDelete
 75. @zing513320நீங்கள் சொல்வது ய்தார்த்தம் தான்..கலைஞருக்கு எது நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள்..கூடவே, நாட்டுக்கு எது நல்லது என்றும் யோசிப்பேமே!

  ReplyDelete
 76. @udoitஜெ.கலைஞர் என்று மாறி மாறி கூட்டணி வைத்தது தான் அவரது இமேஜைக் காலி செய்தது..எனக்குத் தெரிந்து அவர் செய்த உதவிகளைப் பட்டியல் இட்டிருக்கிறேன்..மதிமுக வெப்சைட்டில் மேலும் பல மருத்துவ முகாம் பற்றிய செய்திகள் உள்ளன..அது போதாது, சிடியை விநியோகித்தால் தான் பெஸ்ட் தலைவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்போதிருக்கும் தலைவர்களோடு ஒப்பிட்டால், இப்போதே நாம் ஒத்துக் கொள்ளலாம்..இல்லாவிட்டாலும் பரவாயில்லை...கருத்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 77. விடுதலைப் புலிகளிடம் வாங்கிய காசுதானே..?

  ReplyDelete
 78. @மர்மயோகி நண்பரே, பதிவில் நான் சொல்லி இருப்பது தமிழக அரசியல் தலைவர்களோடு ஒப்பிடுகையில் வைகோ சிறந்தவர், மக்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதையே!, மேலும் அவர் தமிழக மக்களுக்காக எதுவுமே செய்ய/பேசவில்லை..ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே பேசுகிறார் என்பது போன்ற கட்டுக்கதையை உடைக்கவும் இதை எழுதினேன். நான் மதிமுக உறுப்பினன் அல்ல. அந்த சிடியை ஊர் ஊராக வெளியிட ஏற்பாடு நடப்பதாகவே சென்ற மாதம் செய்திகள் வெளியாகின..அதன்பின்னர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அதை யாராவது மதிமுகவினர் வந்து தான் நமக்கு விளக்க வேண்டும்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாலேயே, மாற்றாக வரும் வாய்ப்பை இழந்தார். அவர் இழந்ததை ஒப்பிடும்போது, அவர் எவ்வளவு வாங்கியிருந்தாலும் அது ஒன்றுமில்லை தான். கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 79. Dear friend,
  Let me explain why I said like that. A leader should stand by his principle and his actions should be in-line with his principles. For example, A leader should not say there is no God, while he/she is going to temple everyday. Mr. VaiKo's association with J.J., especially for the past two years after she did following things did not make any sense.
  1. During early days of May 2009, she supported Srilankan government by saying "during war some innocent people will get killed, that is not unusual".
  2. At the same time, she openly tried (and invited) for Congress alliance.

  J.J said/did so many things before but the above two are the greatest sins she did so far, how Mr.VaiKo can tolerate those. All of Mr.VaiKo's good deeds (charity and social service that he did and continues to do now) became suspectible by his association with J.J. You can argue that people like Seeman, Ramdass and Thirumavalavan did the same, what is the big deal. My dear friend, I felt pain in heart when Mr.VaiKo also did the same because I thought he is not one of them. The video he produced has lot of Truth which most Indian Tamils do not (want to) know, it is not an easy task to show this to as much people as possible. If he achieves that then I agree he stand by his principle and a great leader.

  ReplyDelete
 80. @udoitஅன்பு நண்பரே, உங்கள் பின்னூட்டத்தை இன்று தான் பார்த்தேன்..அவரது அரசியல் வழி தவறிப் போய் ரொம்ப நாட்கள் ஆகின்றன. அதை எனது மற்ற பதிவுகளில் நான் குறிப்பிட்டும் இருக்கின்றேன்.(வைகோவும் மதிமுகவும் etc)நான் இந்தப் பதிவில் வைகோவின் மறுபக்கத்தைச் சொல்லவே முயன்றேன். அவரது மனிதநேயத்தை சந்தேகிக்க என்னால் முடியவில்லை. தங்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 81. Ayya.. Good one. Vaiko helping people at accident spot is not just once . In the last 5 years I have read more than 7 or 8. But our press will not even print it. They dont want to waste their precious space..

  ReplyDelete
 82. https://www.facebook.com/cartoonistbala ....


  இது தான் தமிழ் உணர்வார்கள் கருத்து... வைகோ போன்றவர்கள் சுத்த மக்கு ...மற்றவர்கள் எல்லாம் ரொம்ப சொக்க தங்கம் ....சும்மாவா சொன்னார் p s வீரப்பா ...இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ....!

  ReplyDelete
 83. அவரு எப்பவுமே தப்பான கூட்டணி ல சேர்த்து முக்குவார் .இப்ப எப்படியோ .உதவிகள் அனைத்து கட்சிகளும் செய்து கொண்டு இருக்கிறார்கள் வெளியே தெரிவது இல்லை .மத்தபடி இவர் இலங்கை பிரச்சனைல அடித்த நாடகம் இன்று வரைக்கும் இவர் மேல் ஒரு நம்பிக்கை இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள் .

  ReplyDelete
 84. வைகோ பாவம்தான்ய்யா !

  ReplyDelete

 85. நல்ல பதிவு நல்ல பகிர்வு.... இதை நீங்கள் முன்பாகவே எழுதி வெளியிட்டு இருக்கலாம்... பாராட்டுக்கள் & சல்யூட் உங்களுக்கு

  ReplyDelete
 86. "தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்".

  கவிழ்ந்துகிடக்கும் கட்டுமரங்கள் சொல்கின்றன: “எவ்வளவு நம்பிக்கை அவருக்கு தமிழர்களின் மீது! எவ்வளவு முடநம்பிக்கை தமிழர்களுக்கு அவரின் மீது!”

  கடல் என்ன சொல்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்
  நன்றி
  http://www.mathavaraj.com/2011/01/11.html

  ReplyDelete
 87. @Avargal Unmaigal ஏற்கனவே பலரால், பலமுறை பகிரப்பட்ட பதிவு இது. எனவே தான்........

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.