Saturday, November 5, 2011

அடிப்படைக் குழாயியல் (Basics of Piping) - அறிமுகமும் முன்னுரையும்

தொடர் அறிமுகம் :

பல மொழிகளில் உள்ள சாத்திரங்கள் தமிழுக்கு வரவேண்டும் என்றான் பாரதி.

அந்த வகையில் என் தாய் கொடுத்த தமிழாலேயே தமிழுக்கு நான் சூட்டும் அணிகலனே இந்தத் தொடர்.

இதை பாடப்புத்தகமாகவே சொல்லப்போவதால், கதை சொல்லும் பாணியிலோ, உரையாடல் பாணியிலோ இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை. பொறியியல் சம்பந்தப்படாத மனிதராக நீங்கள் இருந்தால், இதைப் படிப்பது உங்களுக்கு நேர விரயமே. அதனைத் தவிர்க்கவும். எனக்கு வழக்கமாக மொய்க்கு மொய் செய்யும் அன்பர்களும் இதற்கு கமெண்ட்டோ, ஓட்டோ போட வேண்டிய அவசியம் இல்லை. தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வராமல் அப்படியே ஓடி விடவும்.

உங்களுக்குத் தெரிந்த மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர் இருந்தால், அவருக்கு இந்தத் தொடரை அறிமுகப்படுத்துங்கள். அதுவே போதும். மற்றபடி இதைப் படித்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். சீரியஸாகவே இதைச் சொல்கின்றேன்.
மெக்கானிகல் எஞ்சினியரிங் டிகிரி என்பது நான்கு வருடங்கள்/எட்டு செமஸ்டர்களில் பல பாடங்களைப் படித்துக் கிடைப்பது. அப்படிப் படித்த பின், படித்த எல்லாப் பாடங்களும் எல்லோருக்கும் உபயோகமாகிறதா என்றால், இல்லையென்று தான் சொல்லவேண்டும். இருக்கும் துறைக்கு ஏற்ப, தேவைப்படும் பாடங்கள் மாறுபடுகின்றன. இதைப் பற்றி விரிவாக நான் முன்பு எழுதிய பொறியியல் தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.

மெக்கானிகல் எஞ்சினியரிங் துறை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் ஐ.டி.க்கு நிகரான சம்பளத்தை கொடுக்கும் துறையாகவும் உள்ளது குழாயியல் (பைப்பிங்) ஆகும். பெட்ரோலிய சுத்திகரிப்புத் துறை, கப்பல் கட்டுமானம், தொழிற்சாலை/கட்டடக் கட்டுமானம் என எல்லாத் துறைகளிலும் குழாயியலுக்கான தேவை மிக அதிகம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழாயியல் நமது கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே கிடையாது. திரவங்களின் பரவும் தன்மை குறித்து விளக்கும் பாடத்தில் மட்டும் சில பக்கங்கள் ஹை-டெக் நடையில் சொல்லப்பட்டிருக்கும்.

குழாயியல் பற்றிய அடிப்படை எதுவும் நான்கு வருடம் கல்லூரியில் படித்தாலும் சொல்லித்தரப்படுவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் சில கம்யூட்டர் கோச்சிங் செண்டர்கள் இவற்றை ஒரு மாத கோர்ஸாக 15,000 முதல் 30,000 வரை வாங்கிக் கொண்டு நடத்துகின்றன.

அவர்கள் என்ன பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு நடத்துகிறார்களோ, அதையே இங்கே எளிய தமிழில் சொல்ல விழைகின்றேன்.

கடும் வறுமையிலும் போராடி என்னைப் படிக்க வைத்த என் தாய்-தந்தைக்கு இந்தத் தொடரை சமர்ப்பிக்கின்றேன்.

எப்போதும் என்னோடு துணையிருக்கும் என்னப்பன் முருகன், இப்போதும் துணை வருவான் என்ற நம்பிக்கையுடன் இந்த பெரிய முயற்சியில் இறங்குகின்றேன்.

முருகனருள் முன்னிற்கட்டும்.

குழாயியல் - முன்னுரை:

அன்பு நண்பர்களே,

ஏற்கனவே கல்லூரியில் பல பாடங்களைப் படித்து களைத்துவிட்ட நிலையில், புதிதாக இன்னுமொரு பாடமா என்று களைப்புடன் நீங்கள் இருப்பது தெரிகின்றது.

நீங்கள் புத்துணர்ச்சியோடு இருந்தால் தானே, பாடத்தை நானும் சுவாரஸ்யமாய் நடத்த இயலும். எனவே முதலில் போய் முகம் கழுவிவிட்டு வாருங்கள்.

அங்கே இருக்கும் வாஷ் பேசினுக்குச் செல்லுங்கள். குழாயைத் திருப்பி தண்ணீரைத் திறந்து விட்டீர்களா? இப்போது கொஞ்சம் பொறுங்கள்.

இந்தத் தண்ணீர் எப்படி இந்தக் குழாயில் வந்து சேர்கின்றது என்று கவனித்துள்ளீர்களா? 

இது தான் அனைவருக்கும் தெரியுமே என்கின்றீர்களா?

பூமியில் இருக்கும் நீரை போர் போட்டு, மேலே இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு ஏற்றி, அங்கிருந்து வாஷ் பேசினுக்கு குழாய் வழியாக கனெக்சன் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு தானே என்கின்றீர்களா?

ஆம், அவ்வளவு தான்...அது தான் குழாயியல். 

இவ்வாறு நீங்கள் விரும்பும் இடத்திற்கு நீரைக் கொண்டுவர என்னவெல்லாம் உபயோகப்படுத்தி உள்ளார்கள் என்று பாருங்கள். பூமியின் அடியில் குழாயின் அடிமட்டத்தில் ஒரு வால்வு, குழாயின் மறுப்பக்கம் நீரேற்றும் பம்பு, மீண்டும் வால்வுகள், குழாய், மேலே ஒரு நீர்த்தொட்டி. அதன் மேல் பகுதியில் தண்ணீர் விழும்படியான குழாயின் அமைப்பு, குழாய் செல்லும் திசையை திருப்ப எல்போ, டீ, ஃப்ளாஞ்ச், ரெடுயூசர் என சில இணைப்பான்கள், மீண்டும் நீர்த்தொட்டியின் அடியின் ஒரு வால்வு, தொடர்ந்து குழாய், எல்போ, டீ, வால்வு என வாஷ்பேசின் வரை வருகின்றதா?

மேலே சொல்லப்பட்டவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் , குறிப்பிட்ட காரணத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது புரிகின்றதா? அந்த மொத்த அமைப்புக்கும் பெயரே குழாயியல் அமைப்பு.

அதாவது, ஒரு நெகிழ்ச்சிப் பொருளை (அது திரவமாகவோ, வாயுவாகவோ இருக்கலாம்) ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் ஒட்டுமொத்த அமைப்பு, பைப்பிங் சிஸ்டம் / குழாயியல் அமைப்பு எனப்படும்.

பொதுவாக கட்டிடங்களில் அமைக்கப்படும் குழாயியல் அமைப்பை ப்ளம்பிங் என்றே சொல்வார்கள். கட்டிடங்கள் தவிர்த்த மற்ற இடங்களில் பயன்படும் குழாயியல் அமைப்பே பைப்பிங் எனப்படும்.

எப்படி வீடு முழுக்க குறிப்பிட்ட நோக்கத்துடன் குழாயியல் பரவி உள்ளதோ, அதே போன்றே பெரிய தொழிற்சாலைகளிலும் குழாயியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தண்ணீர் முதல் நீராவி, வாயு, பெட்ரோலியப் பொருட்கள் வரை பலவற்றையும் ஒரு தொழிற்சாலையில் ஒரு இடத்தில் (டேங்க்கில்) இருந்து, தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல குழாயியல் முக்கியப் பங்காற்றுகிறது.

நம் உடலில் எப்படி நரம்புகள் உடலெங்கிலும் பரவி மூளையுடன் இணைந்து உணர்ச்சிகளை பரப்புகின்றதோ அப்படியே குழாயியல் வீடு/தொழிற்சாலை/கப்பல்/விமானம் உள்ளிட்ட பல இடங்களில் பொருட்களை கடத்த உதவுகின்றன. கீழே உள்ளது ஒரு தொழிற்சாலையில் உள்ள குழாயியல் அமைப்பு: 

நம்மைச் சுற்றிலும், நாம் அறியாமலேயே குழாயியல் எனும் பொறியியல் நமக்கு உதவிக்கொண்டே உள்ளது.

இந்தத் தொடர், குழாயியல் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் திறமையை உங்களுக்குக் கொடுக்கும். 

எளிதாக, ஸ்டெப்-பை-ஸ்டெப் விளக்கங்களுடன் பாடங்கள் வெளிவரும். ஏதேனும் சந்தேகம் இருப்பின், தயங்காமல் கேளுங்கள். நன்றி.

(தொடரும்)

டிஸ்கி: இன்று ஞாயிற்றுக்கிழமை
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

 1. தமிழ் வாசி பிரகாஷ் கவனிக்க உங்களுக்கு போட்டியா இன்னொருவர் கிளம்பிட்டார்.. என் பொறியியல் படிக்கும் நண்பர்களுக்கு இதை நான் அறிமுகப் படுத்துகிறேன்

  ReplyDelete
 2. @suryajeeva
  தமிழ் வாசி பிரகாஷ் கவனிக்க உங்களுக்கு போட்டியா இன்னொருவர் கிளம்பிட்டார்.//

  அண்ணே, நான் சின்சி எழுத ஊக்குவித்ததே செங்கோவி தான். அவரு டாபிக் வேற, நம்ம டாபிக் வேற...

  ReplyDelete
 3. அந்த வகையில் என் தாய் கொடுத்த தமிழாலேயே தமிழுக்கு நான் சூட்டும் அணிகலனே இந்தத் தொடர்.//

  சும்மா ஒரு பில்டப்பு தான்... ஹே ஹே ..

  ReplyDelete
 4. தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வராமல் அப்படியே ஓடி விடவும்.//

  ஆமா ஓடிடுங்க,

  ReplyDelete
 5. கடும் வறுமையிலும் போராடி என்னைப் படிக்க வைத்த என் தாய்-தந்தைக்கு இந்தத் தொடரை சமர்ப்பிக்கின்றேன்.

  எப்போதும் என்னோடு துணையிருக்கும் என்னப்பன் முருகன், இப்போதும் துணை வருவான் என்ற நம்பிக்கையுடன் இந்த பெரிய முயற்சியில் இறங்குகின்றேன்.///

  கண்டிப்பா தொடர் நிறைய மாணவர்களை சென்றடையும்.

  ReplyDelete
 6. நான் டிப்ளோமா மெக்கானிக்கல், சி என் சி (CNC) இல வேலை பாக்கிறேன். எனக்கு இந்த பைப்பிங் யூஸ் ஆகுமா?

  ReplyDelete
 7. ஆம், அவ்வளவு தான்...அது தான் குழாயியல். //
  அட எளிமையா புரியுதே.... இப்படியே எழுதுங்கள்.

  ReplyDelete
 8. எளிதாக, ஸ்டெப்-பை-ஸ்டெப் விளக்கங்களுடன் பாடங்கள் வெளிவரும். ஏதேனும் சந்தேகம் இருப்பின், தயங்காமல் கேளுங்கள். //

  கண்டிப்பா சந்தேகம் கேட்டு இம்சை பன்னுவோம்ல...

  ReplyDelete
 9. பாஸ் ஓரு அற்புதமான தொடரை தொடங்கியிருக்கீங்க எனக்குத்தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக அறிமுகப்படுத்துகின்றேன் அதைவிட எனக்கும் உங்கள் தொடர் மிகவும் பிடித்துவிட்டது நானும் உங்கள் தொடர் வாயிலாக குழாயிழல்..கற்ற தயாராகிவிட்டேன்....

  நன்றி பாஸ்

  ReplyDelete
 10. பாஸ் மேலே போட்ட கமண்ட் மொய்க்கு மொய் இல்லை..உண்மையாகவே நான் ஆவலுடன் இந்தத்தொடரை எதிர்பார்க்கின்றேன்.......

  ReplyDelete
 11. வணக்கம் அண்ணே!
  பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை செலவு செய்து கற்கக்கூடிய விசயத்தை கற்றுக்கொடுக்க முன் வந்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது!

  ReplyDelete
 12. செல்வம் கொடுக்க கொடுக்க குறையும் .ஆனால் அது அறிவுசெல்வத்துக்கு விதிவிலக்கு.
  அதுவும் தமிழில் இத்தொடரை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்!
  நான் பணி புரிந்த,புரியும் நிறுவனங்களில் இந்த குழாயியல் இடம் பிடித்திருக்கிறது,அதனால் எனக்கும் இத்தொடர் நிச்சயம் உதவும்.எனக்குத்தெரிந்தவர்களுக்கும் விசயம் அறிமுகப்படுத்துகிறேன்!மிக்க நன்றி!

  ReplyDelete
 13. அன்பு நண்பரே,
  நானும் எண்ணெய் வள தொழிற்சாலையில்
  உற்பத்தி துறையில் பணிபுரிவதால்
  எனக்கும் இந்த பதிவுகள் உபயோகமாக இருக்கும்.
  தொடர்கிறேன்...
  நன்றி.

  ReplyDelete
 14. தான் கற்ற விஷயங்களை மற்றவர்கள் பயன்பட எழுதும் இந்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர் பலரைச் சென்று சேர வாழ்த்துக்கள். நானும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

  ReplyDelete
 15. இரவு வணக்கம்!பொன் சுவார்.அருமையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஓடச் சொல்லியிருக்கிறீங்க.இலகு தமிழில் எழுதப் போவதால் எல்லோருக்குமே உதவும் போலிருக்கிறதே?வீட்டில் சிறு திருத்த வேலைகளுக்கு பயன்படக் கூடுமே?பார்க்கலாம்.

  ReplyDelete
 16. Hai, I am working as a Piping Inspector, as you when we are in College We are not aware of piping, Since i am working in Construction Field, there is huge demand for Qualified Piping Design engineers. I Wish Mechanical Students to make Use of these articles... Best Wishes for your Great Job.... Arun

  ReplyDelete
 17. என்னமோ... நல்லா இருந்தா சரி...

  ReplyDelete
 18. என்னமோ... நல்லா இருந்தா சரி...

  ReplyDelete
 19. இந்தத் தொடரில்  தனிமரம் வரமாட்டுது வாத்தியாரே நீங்களே சொல்லி விட்டீர்கள் நேரம் மிக பிரதானம் என்று .முடிந்தால் இதில் ஆர்வம் உள்ளோருக்கு அறிமுகம் செய்கின்றேன்!
  நன்றி இரவு வணக்கம்!

  ReplyDelete
 20. நான் உங்களிடம் வருவது மொய்க்கு மொய்க்காக அல்ல உங்கள் எழுத்து நடைக்காக வாத்தியாரே !இப்படி ஒரேடியாக எல்லாரையும் சாடக்கூடாது தனிமரம் சீரிஸ் பதிவாளர் என்று யோகா ஐயாவே சொல்லிய பின்  மொய் எல்லாம் என்ன பிரஜோசனம்??அவ்வ்

  ReplyDelete
 21. தொடரை தொடருங்கள் சில அத்தியாயங்கள் படித்து விட்டு சொல்கிறேன் தொடர் எப்படி என்று... ஹீ ஹீ

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. அருமையான நடை !!! பைபிங் பற்றி தெரியாதவர்களுக்கும் புரியும்!!!

  சென்னையில் உள்ள piping கோச்சிங் சென்டர்களில் (80 % ) கற்பது பணம் விரயம்!!!

  ReplyDelete
 24. நல்ல முயற்சி பாஸ்... வாழ்த்துக்கள்...அப்பிடியே இந்த மாதிரி தொடர்களுக்கு PDF கன்வெர்ட் பண்ற வசதி பண்ணினா நிறைய பேர் சேவ் பண்ணி தேவையானப்ப படிக்கலாம்ல? அதையும் செஞ்சிருங்க :)

  ReplyDelete
 25. நல்லா நடத்தறீங்க வாத்யாரே. வசதியற்ற மாணவர்களுக்கு கோர்ஸ் பீஸ் வாங்காமலே பாடம் எடுக்கும் உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்!!

  ReplyDelete
 26. செங்கோவிக்கு,
  வணக்கம்.
  நல்ல முயற்சி. உங்கள் எழுத்தில் நிச்சயம் எல்லாருக்கும் புரியும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. மாலை வணக்கம் பாஸ்,
  காத்திரமான இரண்டு கல்வித் தொடர்களைக் கையிலெடுத்திருக்கிறீங்க.

  அவை இரண்டும் உரிய பயனர்களை உங்கள் இனிய எழுத்து நடை மூலம் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

  மொய்க்கு மொய் பற்றி செம காமெடி பண்ணியிருக்கிறீங்க

  ரசித்தேன்.

  ReplyDelete
 29. பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 30. அண்ணா அடுத்த தொடரா ? கலக்குங்க..? ரெண்டு மாச இடைவெளிக்கு அப்புறம் நானும் தொடர்கிறேன் .
  FYI
  http://anglethree.blogspot.com/2011/11/5.html
  இயந்திரப் பொறியாளர்களுக்கு-என் அனுபவம்-பாகம் 5

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.