Tuesday, November 15, 2011

பல்பு வாங்கலியோ பல்பு....


அதென்னமோ தெரியலை, சில விஷயங்களை...அது எவ்வளவு கேவலமானதா இருந்தாலும்...உங்ககிட்டச் சொன்னாத் தான் என் மனசு ஆறுது..அதனால இன்னிக்கு நான் பல்பு வாங்குன சொந்தக் கதை, சோகக்கதை..

போன மாசம் ஒரு புராஜக்ட்டை வெற்றிகரமா முடிச்சோம். கிளையயண்டுக்கும் ரொம்ப சந்தோசம். 

ஒருநாள் *** மேடத்துகிட்ட இருந்து ஃபோன். அவங்க யாருன்னா, எங்க கிளியண்ட் புராஜக்ட் மேனேஜரோட பி.ஏ. நம்ம கேரளா தான்..மேனேஜர் ஆந்திரா..

“ஹலோ செங்கோவி, நலமா?”

(ஹி..ஹி..ஹி) நலம்..தாங்கள் நலமா மேம்?

“ஓ..அந்த புரோஜக்ட்டை இவ்வளவு சீக்கிரமா முடிப்பீங்கன்னு நாங்க நினைக்கவேயில்லை. சாருக்கு ரொம்ப சந்தோசம்.”

(அதுக்கு எவ்ளோ கோல்மால் பண்ணியிருக்கோம்..அது உங்களுக்குத் தெரியாதவரைக்கும் எங்களுக்கும் சந்தோசம் தான்)..ஹி..ஹி..நாங்க எங்க கடமையைத் தானே செஞ்சோம்.

“யா..யா..அப்புறம் நாளைக்கு நைட் நீங்க ஃப்ரீயா?”

(ஆ............! ) ”ஓ..ஃப்ரீ தான்..ஃப்ரீ தான்”

“நைட் 9 மணிக்கு?”

(அது பதிவு போடற நேரமாச்சே..ஓகே, பதிவை அடுத்த நாள் போடுவோம். நாளைக்கு...மேடம் சொல்றதைக் கேட்போம்) “நோ பிராப்ளம்”

“கோஹினூர் தெரியுமா?”

(என்னடா இது..ஆண்ட்டி கோஹினூர் காண்டம் பத்தில்லாம் கேட்குது..) “தெரியும்..ஏன்?”

“டூ யு லைக் இட்?”

(அடடா..அவசரப்பட்டு ஃபேமிலியைக் கூட்டிட்டு வந்துட்டமோ....)“ம்..ஏன் திடீர்னு இதெல்லாம் கேட்கிறீங்க?”

“புராஜக்ட்டை ஃபாஸ்ட்டா முடிச்சீங்கள்ல..அதுக்காக..”

(ஆஹா..எவ்வளவு நல்ல கிளையண்ட்..இந்த மாதிரி கிளையண்ட்டுக்கு வாரம் ஒரு புராஜக்ட் முடிக்கலாமே..) “ஓ..ரியல்லி?”

“யா..அப்புறம் உங்க மேனேஜரையும் கூப்பிட்டிருக்கேன்”

(அவரு எதுக்கு..என்னடா இது..உங்களுக்கு வேணா பரந்த மனசு இருக்கலாம் மேம்..ஆனால் ஓசி பினாயில்லா இருந்தாலும் யாருக்கும் கொடுத்து எனக்குப் பழக்கம் இல்லியே..) “அவருமா?”

“ஆமா..அப்புறம் உங்க ஜூனியர் எஞ்சினியர்ஸை எனக்குத் தெரியாது. நீங்களே அவங்களையும் கூட்டிட்டு வந்திடுங்க”

(அவங்களுமா..சம்திங் டெரிப்ளி ராங்..) “எங்க வரணும்?”

“அதான் சொன்னேனே..கோஹினூர் ஹோட்டல்”

(என்னது கோஹினூர்ங்கிறது ஹோட்டலா..அடங்கொக்கமக்கா..) “யா..யா..ஓகே, நாங்க வந்திடறோம்..நன்றி.(அவ்வ்வ்வ்வ்)

அழுதுக்கிட்டே ஃபோனை வைக்கவும் டேமேஜர் கூப்பிட்டாரு. “*** மேம் கூப்பிட்டாங்களா?”

“கூப்பிட்டாங்க...(ஆனா கூப்பிடலை) சார்”

“ஓகே..நாளைக்கு ஷார்ப்பா 9 மணிக்கு வந்திடுங்க”

(இனிமே ஷார்ப்பா வந்தா என்ன.....) “ஓகே சார்”

அடுத்த நாள் போனோம். அந்த மேடம் வரலை..நல்லவேளை தப்பிச்சுச்சு..

கொஞ்ச நேரம் மாத்தி மாத்திப் பாராட்டுனாங்க. அப்புறமா சாப்பிடப் போகலாம்னு சொன்னாங்க..அப்பாடி, புண்பட்ட மனசை தின்னுபோட்டு ஆத்துவோம்னு போனேன்.

சிக்கன் சூப், ரெண்டே ரெண்டு பட்டர் நாண், கொஞ்சம் சிக்கன் மசாலாவோட முதல் ரவுண்டு ஆரம்பிச்சுச்சு. அப்புறம் புரோட்டா ரெண்டும் மட்டன் கறியும் எடுத்துக்கிட்டொம். அப்புறம் மட்டன் பிரியாணியும் சிக்கன் பட்டர் மசாலாவும் சாப்பிட்டேன். அப்பவும் மனசு ஆறலை. கடைசீல சிக்கன் ஃப்ரைடு ரைஸும் கொஞ்சம் சிக்கன் மசாலாவும் சாப்பிடவும் பர்வாயில்லைங்கிற ரேஞ்சுல இருந்துச்சு. இடைஇடையில கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டதும் ஆறுதலா இருந்துச்சு. அப்புறம் கடைசீயா குலாப் ஜாமூன் எடுத்துக்கிட்டோம்.(எல்லாரும் முதல்ல ஸ்வீட் எடுத்துக்கிட்டாங்க. ஆனால் நாங்க எடுக்கலை.ஏன்னா முதல்ல இனிப்பு சாப்பிட்டா, அதிகமா சாப்பிட முடியாது. அவங்க தர்றதே அதுக்காகத் தான்..நாம யாரு?..)

அப்புறம் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு, வெளில வந்து லிஃப்ட்டுல நுழைஞ்சோம்.

‘சாப்பாடு இன்னிக்கு சூப்பர்ல?”ன்னு கேட்டுக்கிட்டே கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அமுக்குனேன். அதுக்கு என் ஜூனியர் ”ஆமா சார்..அதுவும் அந்த ஐஸ் க்ரீம்..அடடா..சூப்பர். என்னா டேஸ்ட்டு’ன்னான்.

ஐஸ் க்ரீமா? அடப்பாவிகளா..அதுவும் இருந்துச்சா..அய்யய்யோ..அதைச் சாப்பிடாம விட்டுட்டமே..திரும்ப லிஃப்ட்டை மேல ஏத்திப் போகலாமான்னு யோசனை. பசங்க கேவலமாப் பார்ப்பாங்களே, க்ளையண்ட்டும் ஏன் திரும்ப வந்தேன்னு கேட்பாங்களேன்னு ஒரே குழப்பம்.

ஏதோ இப்பத்தான் பல்பு வாங்குன சோகத்தை ஆத்துனோம், அதுக்குள்ள ஐஸ் க்ரீம் வாங்காத சோகம் வந்திடுச்சே..நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போனேன்.

அங்க என் தங்கமணி கேட்ட கேள்வில தான் கண்ணீரே வந்திடுச்சு.

“ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

85 comments:

 1. //தமிழ்வாசி - Prakash said...
  வடை உம் மகனுக்கே//

  நன்றி மாமா......

  ReplyDelete
 2. //Ashwin-WIN said...
  ஹா ஹா பல்பு பல்பு...
  ரொம்ப சுவாரசியமான பல்பா இருக்கே..//

  ஃப்யூஸ் போன பல்புங்க அது..

  ReplyDelete
 3. அண்ணன் இருக்காரா?

  ReplyDelete
 4. // Dr. Butti Paul said...
  அண்ணன் இருக்காரா?//

  எல்லாரும் வடை இருக்கான்னு தான் கேட்பாங்க..டாக்டர் அண்ணனைத் தேடுறாரே..

  ReplyDelete
 5. இன்னும் ஆபிஸ்ல இருக்கேன்னு பொய் சொல்லி ட்ராப்டுல இருந்த திருக்குறள் பதிவு போட்டீங்கல்ல, நல்லா கேட்டுக்கங்க, பொய் சொன்ன வாய்க்கு ஐயிஸ் க்ரீமும் கெடைக்காது

  ReplyDelete
 6. இன்னிக்கு போட்டோ சூப்பர், அண்ணே, சின்ன டவுட்டு, இது உங்க பையனா?

  ReplyDelete
 7. நலம்..தாங்கள் நலமா மேம்?///

  அந்த ஆண்டி எப்புடி இருக்கும்?

  ReplyDelete
 8. செங்கோவி said...
  // Dr. Butti Paul said...
  அண்ணன் இருக்காரா?//

  எல்லாரும் வடை இருக்கான்னு தான் கேட்பாங்க..டாக்டர் அண்ணனைத் தேடுறாரே..//

  பின்ன, சொல்லாம கொள்ளாம ஒரு வாரம் லீவு போட்டா தேடாம என்ன செய்யறது?

  ReplyDelete
 9. யா..யா..அப்புறம் நாளைக்கு நைட் நீங்க ஃப்ரீயா?”///

  நம்மாளு எப்பவும் நைட்ல பிரீ தான்... நோ டவுட்...

  ReplyDelete
 10. தமிழ்வாசி - Prakash said...
  நலம்..தாங்கள் நலமா மேம்?///

  அந்த ஆண்டி எப்புடி இருக்கும்?//

  இவரு என்ன ஆண்டி ஹீரோவா, ஆன்டிய பத்தியே கேள்வி கேக்கறாரு..

  ReplyDelete
 11. (அது பதிவு போடற நேரமாச்சே..ஓகே, பதிவை அடுத்த நாள் போடுவோம். நாளைக்கு...மேடம் சொல்றதைக் கேட்போம்) “நோ பிராப்ளம்”//

  ஓ.. அதான் கொஞ்ச நாளா சரியா பதிவு போடாம இருக்கறதுக்கு இதான் காரணமா? ரைட்டு

  ReplyDelete
 12. // Dr. Butti Paul said...
  இன்னும் ஆபிஸ்ல இருக்கேன்னு பொய் சொல்லி ட்ராப்டுல இருந்த திருக்குறள் பதிவு போட்டீங்கல்ல, நல்லா கேட்டுக்கங்க, பொய் சொன்ன வாய்க்கு ஐயிஸ் க்ரீமும் கெடைக்காது//

  நிஜம் தான்யா..

  ReplyDelete
 13. //
  Dr. Butti Paul said...
  இன்னிக்கு போட்டோ சூப்பர், அண்ணே, சின்ன டவுட்டு, இது உங்க பையனா?//

  பின்னே என் ஃபோட்டோவா அது?

  ReplyDelete
 14. Dr. Butti Paul said...
  தமிழ்வாசி - Prakash said...
  நலம்..தாங்கள் நலமா மேம்?///

  அந்த ஆண்டி எப்புடி இருக்கும்?//

  இவரு என்ன ஆண்டி ஹீரோவா, ஆன்டிய பத்தியே கேள்வி கேக்கறாரு..//

  புட்டி பாலு ஆண்ட்டி பத்தி பேசுறது தப்பா?

  ReplyDelete
 15. “கோஹினூர் தெரியுமா?”///

  பார்த்தது இல்லை. தெரியாது... ஹி..ஹி...

  ReplyDelete
 16. //தமிழ்வாசி - Prakash said...
  நலம்..தாங்கள் நலமா மேம்?///

  அந்த ஆண்டி எப்புடி இருக்கும்?//

  யோவ், ஐஸ்க்ரீம் இல்லியேன்னு நானே வருத்தத்துல இருக்கேன்..ஆண்டி பூண்டின்னுக்கிட்டு..

  ReplyDelete
 17. “ஓ..ரியல்லி?”//

  சுண்டெலி பார்த்திங்களா? இல்லையா?

  ReplyDelete
 18. //தமிழ்வாசி - Prakash said...
  “கோஹினூர் தெரியுமா?”///

  பார்த்தது இல்லை. தெரியாது... ஹி..ஹி...//

  ஹி..ஹி..

  ReplyDelete
 19. அதான் சொன்னேனே..கோஹினூர் ஹோட்டல்”//

  மொத பல்பு... பியுஸ் போன பல்பு...

  ReplyDelete
 20. //தமிழ்வாசி - Prakash said...
  “ஓ..ரியல்லி?”//

  சுண்டெலி பார்த்திங்களா? இல்லையா?//

  இதுக்குத் தான் நான் இங்கிலீஸ்ல பதிவு எழுத ஆரம்பிக்கலை..

  ReplyDelete
 21. “ஓகே..நாளைக்கு ஷார்ப்பா 9 மணிக்கு வந்திடுங்க”//

  நீங்க அதுக்கு முன்னாடியே போயி ஒரு கிப்ட் கொடுத்திருக்கணும்... உங்களுக்கு ஒண்ணுமே தெரியல....

  ReplyDelete
 22. அடுத்த நாள் போனோம். அந்த மேடம் வரலை..நல்லவேளை தப்பிச்சுச்சு..//

  நீங்க தப்பிச்சிங்க? மாட்டினது யாரோ????

  ReplyDelete
 23. //தமிழ்வாசி - Prakash said...
  “ஓகே..நாளைக்கு ஷார்ப்பா 9 மணிக்கு வந்திடுங்க”//

  நீங்க அதுக்கு முன்னாடியே போயி ஒரு கிப்ட் கொடுத்திருக்கணும்... உங்களுக்கு ஒண்ணுமே தெரியல....//

  உங்ககிட்ட நிறையக் கத்துக்கணும் போலிருக்கே..

  ReplyDelete
 24. இடைஇடையில கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டதும் ஆறுதலா இருந்துச்சு.//

  ஓ.. மாம்ஸ்க்கு கூல்டிரிங்ஸ்சே போதுமா? அப்போ அதெல்லாம் இல்லையா?

  ReplyDelete
 25. சுவையான சாப்பாட்டில் ஐஸ் குடிக்க மறந்த கதையுடன் வந்திருக்கும் ஐயாவுக்கும் சபையில் இருப்போருக்கும் இரசு வணக்கம்!

  ReplyDelete
 26. // Dr. Butti Paul said...
  செங்கோவி said...
  // Dr. Butti Paul said...
  அண்ணன் இருக்காரா?//

  எல்லாரும் வடை இருக்கான்னு தான் கேட்பாங்க..டாக்டர் அண்ணனைத் தேடுறாரே..//

  பின்ன, சொல்லாம கொள்ளாம ஒரு வாரம் லீவு போட்டா தேடாம என்ன செய்யறது?//

  புது புராஜக்ட் ஒன்னு... ஆரம்ப கட்ட வேலையில பிஸி..அதான்..

  ReplyDelete
 27. ‘சாப்பாடு இன்னிக்கு சூப்பர்ல?”ன்னு கேட்டுக்கிட்டே கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அமுக்குனேன்.///

  அமுக்க வேண்டியதை கரெக்டா தான் அமுக்கியிருக்கிங்க....

  ReplyDelete
 28. ஏன் அந்த மேடம் வராமல் போனாங்க வீட்டில் நல்ல கேள்விதான் இன்று சரியா சாப்பிட்டீங்களா அண்ணாச்சி?

  ReplyDelete
 29. ஐஸ் க்ரீமா? அடப்பாவிகளா..அதுவும் இருந்துச்சா..அய்யய்யோ..அதைச் சாப்பிடாம விட்டுட்டமே..///

  ரெண்டாம் பல்பு.... பியுஸ் போயி ஒடஞ்சு போன பல்பு...

  ReplyDelete
 30. //தனிமரம் said...
  சுவையான சாப்பாட்டில் ஐஸ் குடிக்க மறந்த கதையுடன் வந்திருக்கும் ஐயாவுக்கும் சபையில் இருப்போருக்கும் இரசு வணக்கம்!//

  வணக்கம் நேசரே..தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்திருக்கிறீர்கள்..இங்கு நன்றாக ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்..

  ReplyDelete
 31. இடையில் குடித்த யூஸ் எதுவோ நாரங்க வெல்லம்!

  ReplyDelete
 32. அங்க என் தங்கமணி கேட்ட கேள்வில தான் கண்ணீரே வந்திடுச்சு.///

  அது ஏக்க கண்ணீரா? இல்ல ஆனந்த கண்ணீரா?

  ReplyDelete
 33. //தமிழ்வாசி - Prakash said...
  ‘சாப்பாடு இன்னிக்கு சூப்பர்ல?”ன்னு கேட்டுக்கிட்டே கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அமுக்குனேன்.///

  அமுக்க வேண்டியதை கரெக்டா தான் அமுக்கியிருக்கிங்க....//

  இந்த மாதிரிக் கமெண்ட்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு தெரியாது?

  ReplyDelete
 34. உங்களைப் போன்றோரின் ஊக்கிவிப்பும் வழிகாட்டலும் தான் காரணம் தொடருக்கு .

  ReplyDelete
 35. “ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”///

  ஆமா கெடச்சது கை நழுவிருச்சு.... அதான் சரியா சாப்பிடல.....

  ReplyDelete
 36. // தனிமரம் said...
  இடையில் குடித்த யூஸ் எதுவோ நாரங்க வெல்லம்!//

  கோக் தான் சாமிகளா...நமக்கு அந்தப் பழக்கம் இல்லை.

  ReplyDelete
 37. என்றாலும் நல்ல சாப்பாடுகள் தான் சிக்கன் புரைட்ரைஸ் பட்டர் நான்!

  ReplyDelete
 38. //தமிழ்வாசி - Prakash said...
  அங்க என் தங்கமணி கேட்ட கேள்வில தான் கண்ணீரே வந்திடுச்சு.///

  அது ஏக்க கண்ணீரா? இல்ல ஆனந்த கண்ணீரா?//

  இப்படி ஒரு அப்பாவி தங்கமணி இருக்கும்போதா................

  ReplyDelete
 39. மாம்ஸ், நம்ம மாப்ஸ் அழகா இருக்காரு.... சுத்தி போடுங்க அவருக்கு......

  ReplyDelete
 40. யோகா ஐயாவைக் கானவில்லையே? எங்கே போய்விட்டார் வாத்தியார்.

  ReplyDelete
 41. //தனிமரம் said...
  உங்களைப் போன்றோரின் ஊக்கிவிப்பும் வழிகாட்டலும் தான் காரணம் தொடருக்கு .//

  நல்லது எப்போதும் ஊக்குவிக்கப்படும்.

  ReplyDelete
 42. ஓகேண்ணே, வேலை பிசியை சீக்கிரமா முடிச்சிட்டு கும்மிக்கு திரும்புங்க. ஐயாவையும் பன்னி அண்ணனையும் ரொம்ப நாளா காணோமே எங்க போனாங்க? மீண்டும் சந்திப்போம்னே..

  தமிழ்வாசி, நேசன் எல்லோருக்கும் இரவு வாக்கம், நான் கெளம்புறேன், மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 43. //தனிமரம் said...
  யோகா ஐயாவைக் கானவில்லையே? எங்கே போய்விட்டார் வாத்தியார்.//

  நான் உங்ககிட்ட கடைசியாக் கேட்போம்னு நினைச்சேன்..நீங்க முந்திக்கிட்டீங்க..எங்கேன்னு தெரியலியே..

  ReplyDelete
 44. தமிழ்வாசி அமுக்குவதில் கில்லாடி போல இப்படி தாக்குறார்!

  ReplyDelete
 45. //தமிழ்வாசி - Prakash said...
  மாம்ஸ், நம்ம மாப்ஸ் அழகா இருக்காரு.... சுத்தி போடுங்க அவருக்கு......//

  செஞ்சுடுவோம்..

  ReplyDelete
 46. செம்ம காமெடி...

  ReplyDelete
 47. இரவு வணக்கம் நல்ல தூக்கம் கண்களைத் தழுவட்டும் புட்டில்பால் டாக்குத்தரே!

  ReplyDelete
 48. //Dr. Butti Paul said...
  ஓகேண்ணே, வேலை பிசியை சீக்கிரமா முடிச்சிட்டு கும்மிக்கு திரும்புங்க. ஐயாவையும் பன்னி அண்ணனையும் ரொம்ப நாளா காணோமே எங்க போனாங்க? மீண்டும் சந்திப்போம்னே..//

  இரவு வணக்கம் புட்டிப்பால்..

  ReplyDelete
 49. //சிக்கன் சூப், ரெண்டே ரெண்டு பட்டர் நாண், கொஞ்சம் சிக்கன் மசாலாவோட முதல் ரவுண்டு ஆரம்பிச்சுச்சு. அப்புறம் புரோட்டா ரெண்டும் மட்டன் கறியும் எடுத்துக்கிட்டொம். அப்புறம் மட்டன் பிரியாணியும் சிக்கன் பட்டர் மசாலாவும் சாப்பிட்டேன். அப்பவும் மனசு ஆறலை. கடைசீல சிக்கன் ஃப்ரைடு ரைஸும் கொஞ்சம் சிக்கன் மசாலாவும் சாப்பிடவும் பர்வாயில்லைங்கிற ரேஞ்சுல இருந்துச்சு. இடைஇடையில கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டதும் ஆறுதலா இருந்துச்சு. அப்புறம் கடைசீயா குலாப் ஜாமூன் எடுத்துக்கிட்டோம்.(///

  இப்புடியே போனா நீங்க கேப்டன் பையன் மாதிரி ஆகிடுவீங்க

  ReplyDelete
 50. //மொக்கராசு மாமா said...
  செம்ம காமெடி...//

  யாரது கடையைச் சாத்தும்போது வர்றது?

  ReplyDelete
 51. பாரிஸ் நேரமாற்றம் அவருக்கும் வேலை நேரம் மாற்றமோ தெரியாது .எனக்கும் நேரமாற்றம் வரும் வாரம் முதல் அதனால் கொஞ்சம் தொடர்ந்து வரகஸ்ரம் அண்ணாச்சி!

  ReplyDelete
 52. //செங்கோவி said...

  //மொக்கராசு மாமா said...
  செம்ம காமெடி...//

  யாரது கடையைச் சாத்தும்போது வர்றது?//

  விடுங்க அண்ணே.. இது எல்லாரும் வேலைல பிசியா இருக்குற சீசன் போல... அதிகபடியான வேலைகள்.... நாளை சந்திப்போம் அண்ணே... புவனாவ நோட்டே

  ReplyDelete
 53. மொக்கை மாம் ஏன் கேப்படன் பையனை சொல்லுறீங்க வாசி அண்ணாச்சி அவர் ஆள்!ஹீஹீ

  ReplyDelete
 54. வருட இறுதி மற்றும் கிருஸ்மஸ் கொண்டாட்டம் இங்கு களைகட்டுகின்றது அதனால் வேலை நேரம் அதிகம்!

  ReplyDelete
 55. வணக்கம்,ஐஸ் கிரீம் சாப்பிடாத சோகம் மட்டும்தானா ... நம்பிட்டேன்.

  ReplyDelete
 56. வேலை அதிகம் விடைபெறுகின்றேன் செங்கோவி ஐயா .

  ReplyDelete
 57. கடையை மூடிட்டிங்களா,
  சரி பரவாயில்லை.
  பல்பு வாங்கினதை எல்லாம் மறக்கக் கூடாது.
  அப்பத்தான் அடுத்தமுறை கொஞ்சம் உஷாராய் இருக்க முடியும்.
  ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் பல்பு வாங்குவதை தொடர்ந்து பெறுவதைத் தவிர்க்க முடியாது.

  ReplyDelete
 58. அனைவருக்கும் இரவு வணக்கம் நண்பர்களே...அ துமா.

  ReplyDelete
 59. வணக்கம் மாப்பிள!
  நான் எப்பவுமே கடைய மூடினாப்பிறகுதான் வருகிறேனா..? மாப்பிளையும் என்னைப்போல் "சாப்பாட்டு" விடயத்தில் தாராள மனசுதான். இந்த நிலமையில எப்படி மாப்பிள உடம்பை குறைக்கிறது...

  அது சரி ஏன்யா அந்த ஐஸ்கிறீமை விட்டுட்டு வந்தீங்க? பார்ட்டிக்கு போகும்போது  சாப்பாட்டு மேசைய நாலு ரவுண்டுகட்டுங்கோ மாப்பிள.. அப்பிடியும் என்ன என்ன அயிட்டம் இருக்குன்னு தெரியலைன்னா குசினிப்பக்கம் எட்டி பார்த்து சமையல்காரரை பார்த்து நாலு வார்த்தை பாராட்டிட்டு வாங்கோ அப்புறமா பாருங்கோ உங்க கண்ணுக்கு தெரியாத அயிட்டம் எல்லாம் சொல்லுவார்.. ஹி ஹி ஹி மாப்பிள நீங்க எப்படியோ கொலஸ்ரோல் குலுச போட முடிவு பண்ணீட்டிங்க நான் சொன்னா கேக்கவா போறீங்க..!!!??)))))

  ReplyDelete
 60. //“ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”//
  இந்த பாசம் எந்த பார்ட்டியிலும் கிடைக்காதய்யா.

  ReplyDelete
 61. செம பல்பு வாங்கியிருக்கீங்க.....அந்த மேடம் இப்படி ஏமாத்திட்டாங்களே அட நான் அவங்க பார்ட்டிக்கு வராததை சொன்னேன்......

  ReplyDelete
 62. ////////ஏதோ இப்பத்தான் பல்பு வாங்குன சோகத்தை ஆத்துனோம், அதுக்குள்ள ஐஸ் க்ரீம் வாங்காத சோகம் வந்திடுச்சே..நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போனேன்.

  அங்க என் தங்கமணி கேட்ட கேள்வில தான் கண்ணீரே வந்திடுச்சு.

  “ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”
  /////

  பாஸ் உங்களால் கடைசியில் அண்ணியும் பல்ப்பு வாங்கிட்டாங்க

  ReplyDelete
 63. நான் கூட கோகினூர் டயமண்ட் தராங்கலோன்னு நினைத்து விட்டேன்

  ReplyDelete
 64. ஏங்க டல்லா வர்றீங்க? சரியாச் சாப்பிடலியா?”


  அன்பு அன்பு அவ்வளவும் அன்பு .

  உடனேயே வீட்லயும் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டியிருப்பீங்க்களே (சாரி நீங்க டயட் இல்ல மறந்துட்டேன் )

  ReplyDelete
 65. சிக்கன் சூப், ரெண்டே ரெண்டு பட்டர் நாண், கொஞ்சம் சிக்கன் மசாலாவோட முதல் ரவுண்டு ஆரம்பிச்சுச்சு. அப்புறம் புரோட்டா ரெண்டும் மட்டன் கறியும் எடுத்துக்கிட்டொம். அப்புறம் மட்டன் பிரியாணியும் சிக்கன் பட்டர் மசாலாவும் சாப்பிட்டேன். அப்பவும் மனசு ஆறலை. கடைசீல சிக்கன் ஃப்ரைடு ரைஸும் கொஞ்சம் சிக்கன் மசாலாவும் சாப்பிடவும் பர்வாயில்லைங்கிற ரேஞ்சுல இருந்துச்சு. இடைஇடையில கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டதும் ஆறுதலா இருந்துச்சு. அப்புறம் கடைசீயா குலாப் ஜாமூன் எடுத்துக்கிட்டோம்.(எல்லாரும் முதல்ல ஸ்வீட் எடுத்துக்கிட்டாங்க. ஆனால் நாங்க எடுக்கலை.ஏன்னா முதல்ல இனிப்பு சாப்பிட்டா, அதிகமா சாப்பிட முடியாது. அவங்க தர்றதே அதுக்காகத் தான்..நாம யாரு?..)  இருந்தாலும் நீங்க கொஞ்சமா தான் சாப்பிட்டு இருப்பீங்கலோன்னு ஒரு டவுட்டு

  ReplyDelete
 66. இவ்வளவு கம்மியா சாப்பிட்டா உடம்புக்கு என்னாகும். இனிமேலாவது நிறையா சாப்பிட்டு உடம்ப பாத்துக்குங்க...

  உங்க மைண்ட் வாய்ஸ் எல்லாம் சூப்பர்.

  ReplyDelete
 67. இதுக்குதான்பா வூட்ல வொரு தங்கமணி இருக்கொனும்னு சொல்றது. (இல்ல அட்லீஸ்ட் தங்கமணி உள்ள வீடா பார்த்து போகனும்பா)

  ReplyDelete
 68. ஹா ஹா... சிரிச்சுகிட்டே படிச்சேன் நண்பரே!.... அனுபவ பகிர்வ நகைச்சுவை நடையுடன் அசத்திட்டீங்க.

  ReplyDelete
 69. அப்புறம் ஒருவாரமா சாப்பிடலையா நீங்க? :-)

  ReplyDelete
 70. ஹா ஹா செம.... நல்லா எழுதி இருக்கீங்க... எல்லோருக்கும் இந்த நகைச்சுவையுடன் கூடிய எழுத்து திறைமை இருப்பதில்லை.. அது உங்களுக்கு அதிகமாவே இருக்கு... உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். செங்கோவி...

  ReplyDelete
 71. //கோஹினூர் தெரியுமா?//

  தெரியாதுண்ணே ..அதுபற்றி தனியா ஒரு பதிவு போடவும்!

  ReplyDelete
 72. அவங்க கேட்டதில் என்ன தப்பு.... ஒரிஐினலா நீங்க எவ்வளவு சாப்பிடுவீங்கன்னு அவங்களுக்குத்தெரியாதா?

  ReplyDelete
 73. இதுவல்லவோ பல்பு!

  ReplyDelete
 74. அண்ணே, ஒரு வாரமா ஒர்க்லோடு ஜாஸ்தி, சாரி ஃபார் நாட் கமிங்

  ReplyDelete
 75. சூப்பர் பல்பு,ஐஸ்க்ரீமும்தான்!

  ReplyDelete
 76. //இன்றும் பிஸி...எனவே இன்று கடை விடுமுறை. நாளை சந்திப்போம்.//

  ஓகே, மீண்டும் நாளை சந்திப்போம்

  ReplyDelete
 77. ஐஸ் கிரீம் போச்சே..........
  \\\\என்னடா இது..ஆண்ட்டி கோஹினூர் காண்டம் பத்தில்லாம் கேட்குது..) “தெரியும்..ஏன்?”

  “டூ யு லைக் இட்?”

  (அடடா..அவசரப்பட்டு ஃபேமிலியைக் கூட்டிட்டு வந்துட்டமோ....)“ம்..ஏன் திடீர்னு இதெல்லாம் கேட்கிறீங்க?”\\\\

  யோவ் உமக்கு குசும்பு ஓவர் யா.

  பதிவு சூப்பர்

  ReplyDelete
 78. //அது எவ்வளவு கேவலமானதா இருந்தாலும்...உங்ககிட்டச் சொன்னாத் தான் என் மனசு ஆறுது.//

  ஏதேது , மன்மத லீலை படத்துல , கமல் மேட்டர முடிச்சிட்டு , அவர் சப் ஆர்டினேட் கிட்ட சொல்லி அவர புலம்ப விட்டுருவாறே,
  அது மாதிரியா?

  In My Blog:

  ரூம் போடுங்க ப்ளீஸ்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.