Tuesday, November 8, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_3

செங்கோவி,

//நீங்கள் அந்த நோக்கத்தில் எனக்கு அனுப்பவில்லையென்றும், பிராமணர் அல்லாத ஒருவனின் கருத்தை அறியும் ஆர்வத்துடனே எனக்கு அனுப்பினீர்கள் என்றும் அறிவேன். //

ஆமாம், மேலும் நான் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப்பற்றி படிக்கும்போது அதற்கு எதிர்க்கருத்தையும் படிப்பேன்.  அதன் காரணம் இரு தரப்பு கருத்துக்களையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்பதால்தான்.  அதனாலேயே நடுநிலையுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளை விரும்பிப்படிப்பது வழக்கம். 

உங்களுக்கு இதை அனுப்பியதும் உங்கள் கருத்துக்களை நிஜமாகவே தெரிந்துகொள்ளும் நோக்கில்தான்.  நீங்கள் நிறையப் படிப்பீர்கள் என்று தெரியும்.  மேலும் தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் நடுநிலையோடு நீங்கள் எழுதுவதும் நான் அறிந்ததே. 

//பிராமண சமூகத்தில் பிறந்ததனால் மட்டுமே அவ்வாறு ஆகிவிடமுடியும் என்று நம்பிக்கொள்கிறீர்கள். //

இதை நான் ஏற்கிறேன்.  நான் அப்படி நம்பவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் (நீங்கள் பொதுவாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது).  எனது கமெண்ட் ல் கூட நாம் இந்த ஜாதி / மதம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்றே சொல்லியிருக்கிறேன்.  நான் பள்ளியில் / கல்லூரியில் படித்தபோது இருந்த தோழிகள் (இப்போதும் கூட) யாருடைய ஜாதியும் இன்றுவரை எனக்குத்தெரியாது, நான் எப்போதும் கேட்டதும் இல்லை.  கேட்கவேண்டும் என்று தோன்றியதும் இல்லை.  


என்னைப்பொறுத்தவரை இதிலெல்லாம் மூழ்காமல் எனக்கென்று சில பாலிசி வைத்துள்ளேன்.  யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதில் தொடங்கி இன்னும் நிறைய இருக்கிறது.  என் வீட்டில் ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண்மணி உதவி செய்துகொண்டிருந்தார்.  வயதானவர்.  அதன்பின் முடியவில்லை என்று அவராகவே நின்றுவிட்டார்.  


சென்ற மாதம் வரை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எங்களைப்பார்த்துவிட்டுபோக வீட்டிற்கு வருவார்.  நாங்களும் செல்வோம்.  பிரதிபலன் பாராத அன்பு அவருடையது.  ஈத் அன்று இனிப்பு எடுத்துக்கொண்டு வருவார். இத்தனைக்கும் ஏழ்மையான குடும்ப நிலை.  இதிலிருந்தே நான் அவரிடம் நடந்துகொண்ட முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

//வைசிய ஜாதியில் பிறந்த எல்லாருமே வணிகத்தில் சிறந்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் இயல்பு அதாவது வர்ணப்படி வைசியர்கள் அல்ல.//

இதைப்பற்றி நான் நிறைய யோசித்திருக்கிறேன்.  ஜோதிடத்தில் வர்ணம் என்று குறிப்பிட்டிருப்பதில் வைசியர், ஷத்ரிய என்று குறிப்பிட்டிருக்கும்.  பிராமண சமூகத்தில் பிறந்த ஒருவருக்கு வேறு ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கலாம்.  எனக்குக்கூட வைசியர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது.  எனது இயல்பும் அப்படியே ஒத்துப்போகிறது.  ஒரு பிசினெஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. 

//வர்ணக்கலப்பு’ பல அபாயங்களைக் கொண்டுவரும் என்றே கண்ணன் சொல்கிறான். அவன் சொல்வது ஜாதிக்கலப்பு பற்றியல்ல. மல்டிபிள் பெர்சனாலிட்டி பற்றி.//

உண்மையே, பெற்ற தாயையே காலால் உதைக்கச் சென்றது போன்ற (இதற்கு மேலும் கொடுமையான) சில உதாரணங்களும் என் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன்.

எனக்கு உள்ள ஒரே ஒரு குறை தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீடு சிஸ்டம்.  அதைத் தவறு என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அதில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. 


எனது அனுபவத்தையே சொல்கிறேன்.  பதினொன்று / பனிரெண்டாம் வகுப்பில் முதல் குரூப் எடுத்துவிட்டு பிஸ்சி கணிதம் படிக்கவேண்டும் என்ற ஆவலில் apply செய்தபோது இட ஒதுக்கீட்டைக்காரணம் காட்டி முடியாது என்று சொல்லிவிட்டனர்.  அதாவது பரவாயில்லை, அதற்குப்பதில் அவர்கள் சொன்னது வேணும்னா பி ஏ வரலாறு எடுத்துக்கோ என்று.  


இரண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?  எனது குடும்ப சூழல் எப்படியாவது graduation முடித்து வேலைக்குப்போய் ஆகவேண்டிய கட்டாயம், வேறு வழியில்லாமல் அதையே படித்தேன்.  இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் மற்ற கருத்துக்களையும் படிக்க ஆவலாக இருக்கிறேன். 


இதைப்பற்றியெல்லாம் நீங்கள் ஏன் பதிவு எழுதக்கூடாது?  சீரியசாகவே கேட்கிறேன்.

இங்கணம்
-- ****
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களுக்கு,

உண்மையில் நண்பர் செங்கோவிக்கு பாராட்டுக்கள்....

***, தாங்கள் சொல்லிய விஷயத்தை இங்கே அவரும் சொல்கிறார் பாருங்கள்... வர்ணம் என்பது ஜாதகத்தில் காண்பிப்பது போல் இயற்கையில் உள்ள குலம் என்பதே... இதே விஷயத்தை தாங்களும் இதற்கு முன்பு கூறி இருந்தீர்கள்.

மேலும்... கடைசி வர்ணத்தார்கள் நசுக்கப் பட்டார்கள் என்பதால் பெரியவர்கள் பல்வேறு வழிகளில் சொல்லியும் எடுபடாது போய் கடைசியாக பாரதி போன்றோர் தீவிரமாக இறங்கும் அவசியம் ஏற்பட்டது.. 

காரணம் ஆதி சங்கரர், ராமானுஜர் காலம் முதலே இதைத் தான் சொல்லி வந்தார்கள்... காலமும் காட்சியும் மாறும் போது, அணுகுமுறையும் மாறியது அவ்வளவு தான்.

அன்புடன்
******
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

60 comments:

  1. தொடரட்டும்...

    ReplyDelete
  2. //மொக்கராசு மாமா said...
    தொடரட்டும்.//

    மொக்கை நழுவுறாரே...

    ReplyDelete
  3. //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    தொடரட்டும்.//

    மொக்கை நழுவுறாரே..///

    ஆஹா..அண்ணன் இருக்காரு.. வழமைபோல பதிவ போட்டுட்டு வெளியில் போயிட்டாருன்னு நெனச்சேன்.. அப்புறம் நழுவல அண்ணே, தெரியாத புரியாத சீரியஸ் விஷயங்கள்.. வெறும் பார்வையாளனா மட்டும் இருந்துகிறேனே? நாளைக்கு "நானா யோசிச்சேன்" இல்ல அத விட ஒரு மொக்க பதிவுல கும்முவோம் அண்ணே....

    ReplyDelete
  4. // Dr. Butti Paul said...
    உள்ளேன் ஐயா...//

    வருக..வருக.

    ReplyDelete
  5. //மொக்கராசு மாமா said...
    //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    தொடரட்டும்.//

    மொக்கை நழுவுறாரே..///

    ஆஹா..அண்ணன் இருக்காரு.. வழமைபோல பதிவ போட்டுட்டு வெளியில் போயிட்டாருன்னு நெனச்சேன்.. அப்புறம் நழுவல அண்ணே, தெரியாத புரியாத சீரியஸ் விஷயங்கள்.. வெறும் பார்வையாளனா மட்டும் இருந்துகிறேனே? நாளைக்கு "நானா யோசிச்சேன்" இல்ல அத விட ஒரு மொக்க பதிவுல கும்முவோம் அண்ணே....//

    அதுவும் சரி தான்..நாளைக்கு நானா யோசிச்சேன் தான்..

    ReplyDelete
  6. மாலை வணக்கம்,பொன் சுவார்!படித்தேன்.விவாதிக்க எவரையும் இன்னமும் காணோமே?வருகையை எதிர் பார்த்து.........................மொ.ரா.மாமாவுக்கும் குட் ஈவினிங்!

    ReplyDelete
  7. மாலை வணக்கம்,பொன் சுவார்!படித்தேன்.விவாதிக்க எவரையும் இன்னமும் காணோமே?வருகையை எதிர் பார்த்து.........................மொ.ரா மாமாவுக்கும் குட் ஈவினிங்!ஓ,டாக்டரும் இருக்காரு!அவருக்கும் குட் ஈவினிங்!

    ReplyDelete
  8. // Yoga.S.FR said...
    மாலை வணக்கம்,பொன் சுவார்!படித்தேன்.விவாதிக்க எவரையும் இன்னமும் காணோமே?வருகையை எதிர் பார்த்து.........................மொ.ரா மாமாவுக்கும் குட் ஈவினிங்!ஓ,டாக்டரும் இருக்காரு!அவருக்கும் குட் ஈவினிங்!//

    பொன் சுவார் ஐயா..ரொம்ப நாளைக்கு அப்புறம் ஐயாவை நேருக்கு நேராப் பார்க்கிறேன்..

    அப்புறம் நீங்க கேட்ட ‘அது’ நாளை!

    ReplyDelete
  9. // Yoga.S.FR said...
    விவாதிக்க எவரையும் இன்னமும் காணோமே//

    விவாதிக்கும் குரூப், பகலில் வரும்..நம்ம ஆட்கள் நழுவிடுவாங்க..

    ReplyDelete
  10. செ பா கிராவ்!(C'est pas Grave- பரவாயில்லை)நான் என்ன "அது" கேட்டேன்?இந்த மண்டை எல்லாவற்றையும் மறந்து விடுகிறது.

    ReplyDelete
  11. //Yoga.S.FR said...
    செ பா கிராவ்!(C'est pas Grave- பரவாயில்லை)நான் என்ன "அது" கேட்டேன்?இந்த மண்டை எல்லாவற்றையும் மறந்து விடுகிறது.//

    எனக்கு உடம்பு சரியாகிடுச்சுன்னு ஃப்ரூப் பண்ணச் சொன்னீங்களே?

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா பிராமனர்களின் உள்ளக்கொதிப்பை நாகரிகமாக விவாவாதமாக வரையும் கடித்தத்துடன் வந்து இருப்போருக்கு இரவு வணக்கம் !
    மற்றும் சபையில் இருப்போருக்கும் இரவு வணக்கம்!

    ReplyDelete
  13. இந்த இட ஒதுக்கீடு உண்மையில் பல இடங்களில் குளறு படியே !

    ReplyDelete
  14. சிலர் செய்யும் விதிமுறை தவரிய செயல்கள் நல்ல அந்தனர்களையும் ஒரே வட்டத்துக்குள் வரவைக்கின்றது!

    ReplyDelete
  15. சபையில் வாத்தியார் இல்லைப்போலும் பகலில் விவாதிக்கட்டும் என்று போய் விட்டாரோ???

    ReplyDelete
  16. //தனிமரம் said...
    வணக்கம் ஐயா பிராமனர்களின் உள்ளக்கொதிப்பை நாகரிகமாக விவாவாதமாக வரையும் கடித்தத்துடன் வந்து இருப்போருக்கு இரவு வணக்கம் !
    மற்றும் சபையில் இருப்போருக்கும் இரவு வணக்கம்!//

    வணக்கம் நேசரே.

    ReplyDelete
  17. நல்ல ஒரு அலசல் கட்டுரையைப் படித்த உணர்வுடன் நானும் வெளியேறுகின்றேன் வேலை நிமித்தம் !

    ReplyDelete
  18. // தனிமரம் said...
    சிலர் செய்யும் விதிமுறை தவரிய செயல்கள் நல்ல அந்தனர்களையும் ஒரே வட்டத்துக்குள் வரவைக்கின்றது!//

    உண்மை தான் நேசரே..

    ReplyDelete
  19. என்ன வாத்தியாரே இப்படி நேரம் எடுக்கும் போது நீங்கள் போஜனம் நாடிப்போய் விட்டார்களா??

    ReplyDelete
  20. // தனிமரம் said...
    என்ன வாத்தியாரே இப்படி நேரம் எடுக்கும் போது நீங்கள் போஜனம் நாடிப்போய் விட்டார்களா??//

    சீரியஸ் பதிவு என்பதால், கும்மி அடிக்காமல் ஒதுங்கினோம்..

    ReplyDelete
  21. நானும் தமிழகம் போகும் போது தங்குவது அந்தனர் வீட்டில் என் நண்பன் இங்கு அந்தனர் குடும்பம் என்றாலும் ஏந்தப் பிரிவும் காட்டாமல் என்னுடன் பழகுபவன் அப்படி இருப்போரையும் எல்லோரும் ஜெயந்திரர் ரேஞ்சில் நடத்துவது கண்டிக்கப்படவேண்டும்!

    ReplyDelete
  22. அதிகம் இருந்தாலும் சொல்லுவதற்கு வேலை நேரம் பிறகு சந்திப்போம்!

    ReplyDelete
  23. //தனிமரம் said...
    நானும் தமிழகம் போகும் போது தங்குவது அந்தனர் வீட்டில் என் நண்பன் இங்கு அந்தனர் குடும்பம் என்றாலும் ஏந்தப் பிரிவும் காட்டாமல் என்னுடன் பழகுபவன் அப்படி இருப்போரையும் எல்லோரும் ஜெயந்திரர் ரேஞ்சில் நடத்துவது கண்டிக்கப்படவேண்டும்!//

    இப்படி பலதரப்பட்ட அனுபவங்கள் வெளிவர வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் நேசரே..

    ReplyDelete
  24. நானும் கிளம்புகிறேன்..இரவு வணக்கம் நேசரே..நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  25. ஓ.கே இரவு வணக்கம்,பொன் சுவாறே ! நாளை பார்க்கலாம்.

    ReplyDelete
  26. பிராமண நண்பர்களுக்கு...///

    ஹும்................. :)

    ReplyDelete
  27. ஆனாலும் நான் சின்ன பையன் என்பதால் இதில் இருந்து விலகுகிறேன்.... ஹீ ஹீ .....

    ReplyDelete
  28. சென்ற முறை 2ம் பாகத்தில் வெளியிட்ட அதே பிராமண‌ப் பெண்ணுடனான‌
    கருத்துப் பரிமாற்றம் தான் தொடர்கிறது, அல்லவா?இதை முதலில் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

    அது போலவெ 2ம் பாகத்தில் அந்தப் பெண்ணால் சுட்டப்பட்ட 'பிராமணர்கள் யார்?' (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )
    என்ற கட்டுரையை எழுதியவர் இரத்த சாதி பிராமண‌ வகுப்பைச் சேராதவர் என்பது என் அபிப்ராயம். அதுவும் உறுதி செய்யப்பட்டு இங்கே 4ம் பாகத்தில் சொல்லப் பட வேண்டும். அந்தப் பெண்ணும்,கட்டுரையை தன் பிளாகில் வெளியிட்டவரும் பிராமண வகுப்புத்தான்.அங்கே 3 பின்னூட்டங்கள் வந்துள்ளன.அவற்றில் இரண்டு தங்களுக்கு அக்கட்டுரையை சுட்டிய பெண்மணியினுடையது என்று நினைக்கிறேன். மூன்றாவது இங்கே பின்னூட்டம் இடும் ஒரு நண்பர்.அங்கே அக் கட்டுரை முரணாக இருக்கிறது என்று கூறியுள்ளர். சூர்ய ஜீவா என்ற நண்பர்.

    இப்போது இரத்த சம்பந்தப்பட்ட சாதிகள், அதாவது திருமண உறவால் ஏற்படும் சாதி முறைதான் நடைமுறையில் உள்ளது.வர்ண வகுப்ப்பில் உள்ள 'குணமும் அதனால் விளையும் செயல்களும்'என்ற வகுப்பு முறை அப்போதைப் போலவே கண்ணுக்குத் தெரியாமல் இப்போதும் உள்ளது.அந்த வர்ண‌ வகுப்பு முறையை,இரத்த சாதியைப்போல ஒரு சட்டத்திற்குள் அடைக்க முடியாது.

    இதைத்தான் 'பிராமணத்துவம்'என்கிறார்களோ என்று குழம்புகிறேன்.விடை கிடைக்கவில்லை.

    வர்ண பிராமணனின் அறிவு சார்ந்த செயலை (குண மாற்றமும் வந்துவிட்டதா என்று தெரியாத நிலையில்) நானும் தானே செய்கிறேன் நானும் தானே இப்போது பிராமணன் என்ற கேள்வியோடு இரத்த சாதிப் பிராமணனின் முன்னே தலை உயர்த்திக் கேட்டு நிற்கின்றனர் பிற இரத்த சாதியினர்.இரத்த சாதிக்காரனான பிராமணன் பதில் சொல்லத்தெரியாமல் விழிக்கிறான்.
    They are barking the wrong tree.

    அந்தக் கேள்வியை வர்ணப் பிராமண‌னிடம் அன்றோ கேட்க வேண்டும்.அவனோ எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை.அவன் கடவுளைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து இருக்கிறான்.

    தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு தன்னை வர்ணப் பிராமணன் என்று கற்பித்துக் கொண்டு சாதிப் பிராமணன் 'ஆமாம்' என்றால் அடுத்தது 'சரி உன் பெண்ணை எனக்குக்கொடுக்கலாமே' என்பதாகப் பேச்சு தொடர்கிறது.தர்ம சங்க‌டம் ஏற்படுகிறது.வர்ணமும், சாதி இரத்தமும் கலக்க வேண்டும் என்பது எண்ணிக்கையில் அதிகப்ப‌ட்ட பிற இரத்த சாதியினரின் மிரட்டலாகவே ஆகிறது.
    (to be continued)

    ReplyDelete
  29. (continuation)

    பாரதியாரை அப்படித்தான் கடையத்தில் ஒரு வேளாளர் தன் பிள்ளைக்குப் பாரதியின் பெண்ணைக் கேட்டார்.கேட்டவர் ஒழுக்கத்தில் மோசமானவர். பிறன் மனைவியான ஒரு ஏழைப் பிராமணப் பெண்ணை அவள் கணவன் முன்னிலையிலேயே பெண்டாண்டு கொண்டு இருப்பவர்.

    இந்த அயோக்கியனுடன் தனக்கு சம்பந்தி உறவு என்பதை பாரதியாரால் சகிக்க முடியவில்லை.எந்த மானம் கெட்ட சாதிப் பிராமணன் தன் மனைவியை கெட்ட குணம் கொண்ட‌ வேளாளனுக்கு போகப்பொருள் ஆக்கினானோ அவனிடம் போய்,"உன்னாலன்றோ அந்த அயோக்கியன் துணிவு பெற்று என்னைப் பெண் கேட்கிறான்" என்று அடிக்கப் போகிறார்.அவன் தன் எசமானன வேளாளரிடம் முறையிடுகிறான். தன் வைப்பாட்டியின் கணவனுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வேளாளர், மறு நாளுக்குள் 'பாரதியின் குடும்பததினைப் பூண்டோடு அழிக்கிறேன்'என்று தன் ஆட்களுக்கு அரிவாளைத்
    தயார் செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்.தன் குடும்பத்தினருக்கு உயிர் வாதை பயத்தில் அந்த வர்ணம், சாதி இரண்டாலும் மேம்பட்ட பாரதி தலை தெரிக்க சென்னைக்கு இரவோடு இரவாக ஓடிவிடுகிறார்.

    இதுதான் இன்றைய சாதிப் பிராமணன் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சனை.

    பெண்ணைப் படிக்க வைத்து சர்வதேச மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய,இரவு பகல் பாராமல் உழைக்க அனுப்புகிறான். 21 வயதுவரை தன் வீடு, அங்குள்ள மரபுசார் பழக்கங்களில் இருந்த சாதிப் பிராமணப் பெண்,
    இரவு கிளப் வாழ்க்கை,இரவு நேரத்தில் ஆண்களுடன் அலுவலகப்பணி,கை நிறையப் பணம், வரம்பற்ற சுதந்திரம், நுனிநாக்கு ஆங்கிலம் என்று மாறிப் போகிறாள்.அந்தப் புதிய கலாச்சாரம் அவளுக்கு முற்றிலும் மாறுப‌ட்ட‌ புதிது என்பதால் அதனை அனுபவிக்கும் வேட்கை கிடைத்த சுதந்திரத்தால் அதிகரிக்கிறது.

    வீட்டில் மரபுகளைக் கடைப்பிடிக்கும் தாயும்,பாட்டியும் பிற்போக்குவாதிகள். பத்தாம் பசலிகள். சாதி வித்தியாசம் பார்ப்பவர்கள்.தான் சாதி வித்தியாசம் பர்க்காத முற்போக்குவாதி.குழப்பம் நீடிக்கிறது.வீட்டில் உள்ளவர்களுடன் பேச்சு கூட நின்று போகிறது.

    வீட்டில் பேசாததை அலுவலகத்தில் வந்து பேசுகிறாள். அவளுடைய முற்போக்குத்த்னம் ஊக்குவிக்கப்பட்டு வேற்று சாதி ஆணைத் தன் முற்போக்குத் தனததினை ஊர் அறியச் செய்வதற்காக‌ அலுவலக நண்பர்களுடன்
    பதிவு அலுவலகமோ, திரு நீர்மலைக்கோ செல்கிறாள்.மணமுடிக்கிறாள்.

    சீக்கிரமே அந்தப் போலி வாழ்வு கசந்து போகிறது.வக்கீலிடம் போகிறாள்.

    நான் எதர்த்ததைச் சொல்கிறேன்.தீர்வு என்னைக் கேட்காதீர்கள்.மற்றவர்கள் சொல்லுங்கள்.

    ReplyDelete
  30. வழமை போல எனக்கு இதைப்பற்றி ஓன்றும் தெரியாததால் நான் அடுத்த பதிவுக்கு வாரன்

    ReplyDelete
  31. அண்ணே நிறைய விஷயம் சொல்றீங்க...நல்லாத்தான் சொல்றீங்க!

    ReplyDelete
  32. படித்தேன்; விவாதங்கள் தொடரட்டும்!

    என்னைப் பொறுத்தவரை கல்லூரி சென்ற போது தான் ஜாதி, இட ஒதுக்கீடு பற்றி நான் அறிந்தேன். அது வரை என் தோழிகள் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது; ஏன், இப்போதும் அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை.

    ReplyDelete
  33. பிரச்சனையான சப்ஜெட் ..

    ReplyDelete
  34. @Jayadev
    செட்டியார்கள் கணக்கில் கெட்டி. நாடர்கள் சிறந்த வியாபாரிகள். இப்படிச் சொல்லும்போது
    உங்களுக்கு வராத கோபம் சாதி பிராமணர்கள் சட்டம், ஆங்கிலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்
    என்று சொல்லும்போது வருவது ஏன்?

    ReplyDelete
  35. காலை வணக்கம்,பொன் ஜூர்!

    ReplyDelete
  36. வேற்று சாதியினருக்கு பிராமண பெண்கள் திருமணத்திற்கு கிடைப்பது எளிதாக இருக்கும் அளவிற்கு பிராமண சாதி ஆண்களுக்கு வேற்று சாதி பெண்கள் கிடைப்பது எளிதானதல்ல. பிராமண சாதியினர் மகள் சாதி மறுப்பு திருமணம் செய்தால் சில முட்டல் மோதல்களுக்குப் பின் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் பல வேற்று சாதியினர் தங்கள் மகளை மற்ற சாதியினர் திருமணம் செய்தால் மாப்பிள்ளையைக் கொலை செய்யுமளவிற்குக் கூடப் போகின்றனர். இதுவே பிராமண சாதி ஆண்கள் சாதி மறுப்பு திருமணத்தில் பெரிய ஈடுபாடு காட்டாததற்கு ஒரு முக்கிய காரணம்.

    ReplyDelete
  37. //சிலர் செய்யும் விதிமுறை தவரிய செயல்கள் நல்ல அந்தனர்களையும் ஒரே வட்டத்துக்குள் வரவைக்கின்றது!//

    Yes... Nanbarin karuththu unmai...

    ReplyDelete
  38. பிராமணனாகப் பிறந்தவன் பிராமண‌ன் அல்ல;வைஸ்யனாகப் பிறந்தவன் வைஸ்யன் அல்ல.பிராமணனுக்கு பிராமண‌ குணம் இருக்க வேண்டும் வைஸ்யனுக்கு வைஸ்யனுடைய வியாபார குணம் இருக்க வேண்டும் நீங்களும் அதனை ஒப்புக்கொள்ளும் பிராமணப் பெண்மணியும் கூறுகிறீர்கள். என் புரிதல் சரியா?

    இன்றைய சமுதாயத்தில் எல்லோரும் எல்லாப் பணியையும் செய்யலாம் என்று வந்த பிறகு, வர்ண முறை வழக் கொழிந்து போயிற்று. அப்படியே குணத்தினால் நான் இந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவன் கூறிக் கொண்டு திரிய முடியாது.ஏன் எனில் குணத்தை ஓரிரு நாட்களில் கண்டு பிடிக்க முடியாது.பல நாட்கள் பழகி வர்ணப் பிராமணனுக்குரிய பண்புகள் இவரிடம் இருக்கிறது என்று ஊர் அங்கீகரிக்க வேண்டும்.அது 'தியரிடிக'லாகத்தான் இருக்கும். நடைமுறையில் முடியாது.

    அவ‌ன் மனத்தளவில், நான் பிராமணனுக்குரிய வர்ணத்தில் கூறிய நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். நான் இரத்த சாதியில் வேளாளன் என்றாலும், ம‌னதால் பிராமணன் என்று தனக்குத்தானே
    self esteem கொள்ளலாம்.அதன் மூலம் அவன் சார்ந்த இரத்த‌ சாதியில் மதிக்கப்படும் ஒரு நபராக ஆகலாம்.ஏன் ஒட்டு மொத்த சமுதாயமும் கூட அவன் இரத்த சாதியைக் கணக்கில் எடுக்காமல் அவனை மதிக்கலாம்.மரியாதை செய்யலாம்.

    அதுதான் காந்திஜிக்கு நடந்தது.அது தான் நாராயண குருவுக்கு நடந்தது.
    இன்னும் பல இரத்த சாதியில் பிராமணரல்லாத பல பெரியவர்களுக்கும் நடந்தது.

    மீண்டும் நாம் ய‌தார்த்ததிற்கு வந்தால் இரத்த சாதி உள்ளது. அதனை என்ன செய்ய வேண்டும்? இப்போதிருக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டுமா?அல்லது வேறு மாற்றம் கொண்டு வர வேண்டுமா?கலப்புத் திருமணத்தால்
    சாதி ஒழியுமா?இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.பதில்தான் கடினமானது.பெரும்பாலும் பதில் நேரடியாகச்சொல்லாமல் எல்லோருமே மழுப்புவார்கள். SUBVERT செய்து விவாதத்தில் வெற்றி பெறப் பார்பார்கள்.எந்த சொல்யூஷனும் கிடைக்காது.

    என் அபிபிராயம் சாதி ஒழிக கோஷம் போட வேண்டாம்.கோஷிப்பவர்கள்
    "சாதி ஒழிக!" என்று உரக்கச் சொல்லிவிட்டு (என்சாதி தவிர)என்று மனதில் சொல்லிக் கொள்வார்கள்.

    சாதிப் பிராமண‌னைத் தவிர பிறர் இரத்த சாதிக் கலப்பைக் கடுமையாக எதிர்கிறார்கள்.சாதிப் பிராமணன் தன் மகள் வேற்று சாதியில் திருமணம் செய்தால் சில நாட்கள் மன வருத்தப் படுவான். வெட்டு குத்து என்று
    இறங்க மாட்டான்.இந்த மன நிலை எல்லா சாதியிலும் வந்தால் அதுவே பெரிய முன்னேற்றம்.

    அந்த அந்த சாதிக்கு உள்ளேயே உட்பிரிவுத் திருமணங்கள் ஊக்கப் படுத்தப் படலாம்.

    பொருளாதாரத்தில் நன்கு உயர்ந்து விட்டவர்கள் தன் ஜாதிக்கு உள்ளேயே
    கை தாழ்ந்தவர்களுடன் திருமண பந்தம் செய்வதன் மூலம் இரண்டு குடும்பங்கள் சீக்கிரம் முன்னுக்கு வரும்.

    தேர்தலில் அரசியல் கட்சிகள் சாதி வேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கேளுங்கள்.

    இது போல ஆலோசனைகளை முன் வையுங்கள்.

    வெற்று கோஷத்தினால் பலன் இல்லை.

    தனிப்ப‌ட்ட முறையில் நான் சாதி பார்ப்பதில்லை என்பதெல்லாம் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு உடனே உதவாது.

    வர்ண பிராமணனாகத் தன்னை இரத்த சாதி பிராமண‌ன் இப்போது நினைத்துக் கொள்வதில்லை.மற்ற சாதிக் குழுக்களைப் போலத்தான் தானும் ஒரு சாதிக் குழுவை சார்ந்தவன் என்றுதான் எண்ணுகிறான்.உயர்வு தாழ்வெல்லாம் கற்பிபதில்லை. பொது இடங்களில் தன் அடையாளங்களைக் காட்டிக் கொள்ளும் பிராமணன் இல்லை. அது பெரியார் அம்பேதகருடைய வெற்றி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்களுடைய வெற்றி பிராமண‌னுடன் மட்டும் நின்று விட்டதே எல்லா சாதிக்காரர்களிடமும் போய் சேரவில்லயே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.

    சாதி ஒழிப்பா? சாதி ஒற்றுமையா?

    எது வேண்டும்? எது வேண்டும் என்பதைவிட எது நடை முறை சாத்தியம்?

    இதற்கு என்ன செய்ய வேண்டும்? உறுதியான ஆலோசனைகளை முன் வையுங்கள்.

    ReplyDelete
  39. Quote from Jeyamohan'S site

    " ஒன்று, சாதிக்கும் வருணத்துக்கும் சம்பந்தமில்லை. சாதி இந்தியாவிலிருந்த பலநூறு பழங்குடி இனங்கள், குலக்குழுக்கள் ஒரு பொது சமூகமாக திரட்டப்பட்டபோது உருவானது. மேல் கீழ் அடுக்கு உருவாகாமல் நிலவுடைமைச் சமூக அமைப்பு உருவாக முடியாது என்பதனால் சாதி அதிகார அமைப்பாகவே உருவாகி அப்படியே நீடித்தது. வருணம் என்பது அந்த சாதிகள் மேல் போடப்பட்ட ஒரு பொதுவான அடையாளம் மட்டுமே. எந்த சாதி எந்த வருணத்தைச் சேர்ந்தது என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக, தோராயமானதாக மட்டுமே இருந்தது.

    இரண்டு, சாதி ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது அல்ல. அதுதான் பலவகைப்பட்ட மக்களால் ஆன இந்திய சமூகத்தை ஒரே சமூகமாக நாடுகளாக ஆக்கியது. கூடவே அது மேல் கீழ் அமைப்பை உருவாக்கியது. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது.

    மூன்று, சாதிக்கும் நில உடைமை அதிகாரத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. எந்தச் சாதி நிலம் வைத்திருக்கிறதோ அது மேலே செல்லும். நிலத்தை இழந்தால் கீழே செல்லும்

    சாதியமுறை தமிழகத்தில் வரலாற்றின் ஆரம்பம் முதல், சங்ககாலத்துக்கும் முன்னாலேயே, இருந்து வந்தது. சொல்லப்போனால் சாதி வழியாகவே நம் சமூகம் உருவாகி வந்தது. அதுதான் நம் சமூகத்தை தொகுத்தது. நில அதிகாரம் மாறமாற சாதிகள் சில மேலே சென்றன , சில கீழே சென்றன.

    ReplyDelete
  40. கடைசி வர்ணத்தார்கள் நசுக்கப்படார்கள்?

    யார்? பி சி, எம் பி சி, யா? அல்லது எஸ் சி, எஸ்டி யா?

    எஸ் சி, எஸ்டி என்றால் அவர்களை நசுக்குவது யார்? எந்தவகையில் நசுக்கப்படுகிறார்கள்?

    ReplyDelete
  41. இட ஒதுக்கீடு குளறுபடி என்றால் எவ்வாறு?

    இட ஒதுக்கீடு தன் பணியைச்செய்து முடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
    அத‌ற்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.

    ஒதுக்கீடு தொடர வேண்டுமானால் இன்னும் எத்தனை ஆண்டுகள்?

    முதல் முறையாக ஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

    ஒதுக்கீட்டுக்குள் வருமானம் ஒரு அளவுகோல் ஆக வேண்டும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன் உரிமை கொடுக்க வேண்டும்.

    ஒதுக்கீட்டூக்கு வெளியே இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமாவது வருமான அடிப்படையில் தனி ஒதுக்கீடு வேண்டும்.

    ஒதுக்கீட்டூக்கான சதவிகிதத்தை அதிகரித்துக் கொண்டே போவதற்கு பதில் இனி குறைத்துக் கொண்டே வர வேண்டும்..

    எப்போதும் இட ஒதுக்கீடும், எப்போதும் பிற்படுததப் பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும் இருப்பார்கள் என்பது லாஜிக் இடிக்குதே.

    பின் தங்கிய நாடு என்ற பெயரில் இருந்து முன்னேறிக் கொண்டூ இருக்கும்
    நாடு என்று இந்தியா பெயர் மாறியது போல அந்த வகுப்பாரும் வேறு பெயர்களால் அழைக்கப் பட வேண்டாமா?

    ReplyDelete
  42. இனிய மதிய வணக்கம் சகோ,

    பதிவின் அடிப்படையில் நீங்கள் சொல்லும் வேறுபாடுகள் தரப்படுத்தல்களை நீக்கும் வண்ணம் பிராமணர்கள் விரும்பின் ஏனைய மக்களோடும் கலந்து பேசி, வேற்றுமையற்ற திறந்த மன உணர்வு கொண்ட சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளைச் செய்யலாம் அல்லவா?

    ReplyDelete
  43. ஈழத்துச் சாதிய முறைகள், வேறுபாடுகள் பற்றிப் பரந்துபட்ட அறிவு உண்டு,
    ஆனால் தமிழகத்து முறைகள் பற்றி எனக்கு அதிகம் அறிவு இல்லை என்பதா என் பக்க கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை.

    மன்னிக்கவும்!

    ReplyDelete
  44. மாப்ள ஏதாவது சாதிக்கட்சி தொடங்க போறியா.. ஹீ ஹீ

    ReplyDelete
  45. ///////////kmr.krishnan said... தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு தன்னை வர்ணப் பிராமணன் என்று கற்பித்துக் கொண்டு சாதிப் பிராமணன் 'ஆமாம்' என்றால் அடுத்தது 'சரி உன் பெண்ணை எனக்குக்கொடுக்கலாமே' என்பதாகப் பேச்சு தொடர்கிறது.தர்ம சங்க‌டம் ஏற்படுகிறது.வர்ணமும், சாதி இரத்தமும் கலக்க வேண்டும் என்பது எண்ணிக்கையில் அதிகப்ப‌ட்ட பிற இரத்த சாதியினரின் மிரட்டலாகவே ஆகிறது.
    (to be continued)////////////
    'மாமோவ்..உன் பொண்ணக் கொடு...ஆமா..சொல்லிக்கொடு...' என்ற பழைய பாடல் ஞாபகத்துக்கு வருகிறது...

    ReplyDelete
  46. ///////////kmr.krishnan said... அந்தக் கேள்வியை வர்ணப் பிராமண‌னிடம் அன்றோ கேட்க வேண்டும்.அவனோ எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை.அவன் கடவுளைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து இருக்கிறான்.//////////////////

    கண்ணாமூச்சு ரே..ரே..
    உணர்ந்து பார்த்துட வேண்டியதுதானே?கடவுளை உணர்ந்தது போல..

    ReplyDelete
  47. Half century போட்டுட்டேன்..மீதியை கண்டினியு பண்ணுங்க..

    ReplyDelete
  48. மாம்ஸ், பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. இட ஒதுக்கீடு தவறான விடயம் என்று நான் நினைக்கவில்லை. எத்தகைய சமூகத்திலும் அரசின் அனைத்து வளங்களையும் முழுவதும் பொதுப் போட்டியில் விடுவது என்பது சரியான நடைமுறையாக இருக்க முடியாது. நலிந்த பிரிவினருக்கு ஐம்பது சதவிகிதம் வரை ஒதுக்கீடு அவசியம். ஐம்பது சதவிகிதம் என்பதில் ஏன் நான் குறிப்பாக இருக்கின்றேன் என்றால் எப்பொழுதுமே பொதுப் போட்டிக்கான களம் பாதியாவது இருக்கிறது என்பதை உறுதிப் படுத்தத்தான். தமிழகத்தில் இருக்கும் 69% இட ஒதுக்கீடு ஒரு தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்துகிறது.

    நலிந்த பிரிவை பொருளாதாரத்தைக் கொண்டு தீர்மானிப்பதே சரியான முறையாக இருக்கும். ஆனால் இந்திய சூழலில் பல சமூகங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின் தங்கிய நிலையில் இருந்ததால் அது சாதி அடிப்படையில் வழங்கப்பட்டது. இப்பொழுது இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் உண்மையாக இட ஒதுக்கீடு பெறும் தகுதி கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் SC/ST மட்டும்தான். இன்றும் பல கிராமங்களில் அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவு OBC/MBC/BC என்பது ஓட்டு வங்கி அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்ட பிரிவு. அதில் பல சாதிகள் தங்கள் ஓட்டு பலத்தைப் பயன்படுத்தி இடம் பெற்றுள்ளன. கவுண்டர், சில செட்டியார், சில முதலியார், சில பிள்ளை பிரிவுகளுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

    மேலும் இட ஒதுக்கீடு என்பது நலிந்த பிரிவினர் குறைந்தபட்சம் இவ்வளவு இடம் பெற வேண்டும் என்ற முறையில் அமைய வேண்டும். அதாவது முதலில் ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி விட்டு பின்னர் பொதுப் போட்டி இடங்களை நிரப்ப வேண்டும். இப்படி செய்தால் ஒதுக்கீடு இல்லாத பிரிவினரும் போட்டி இடுவதற்கு நிறைய இடங்கள் உருவாகும். இதுதான் அமெரிக்காவில் கருப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டு நடைமுறை.

    ஆனால் நம்மூரிலோ முதலில் பொது போட்டி இடங்கள் நிரப்பப் படுவதால் அதிகபட்ச இடங்கள் இட ஒதுக்கீடு உள்ள பிரிவினர்க்கே கிடைக்கிறது.
    இதனால் ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் பாதிக்கப் படுகின்றனர். இதனால் இடஒதுக்கீட்டை ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாக உணர்கின்றனர்.

    குறைந்த பட்சம் ஒதுக்கீடு இல்லாத பிரிவினரில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீடு கொடுத்தால் இத்தகைய கசப்புணர்வுகள் நீங்கும்.

    சாதி பிராமணர்களின் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாத சாதியினரின் மக்கள் தொகை போதிய அளவிற்கு இல்லாததால் அரசாங்கம் இவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில்லை.

    ReplyDelete
  51. சாதியை தாண்டி இப்பொழுது இட ஒதுக்கீடு என்று பிரிய ஆரம்பித்து விட்டது விவாதம்...
    இட ஒதுக்கேடு மாற்றப் பட வேண்டும்...
    பொருளாதார அடிப்படையில் தாழ்த்தப் பட்டவர்கள் என்று புறப்படும் நேரம் சாதி ஒழிந்து விடும்...
    ஆனால் இதற்க்கு சாதி அரசியல் வாதிகள் விடப் போவதில்லை..
    அதே போல் ஒருவனின் உண்மையான வருமானம் என்ன என்று எவருக்கும் தெரிவதில்லை...
    குடும்ப சொத்தில் வீடு கட்டி நான்கு பகுதிகளை வாடகைக்கு விடும் ஒருவன் எளிதாக பொருளாதார தன்னிறைவு அடைகிறான்... ஆனால் இது கணக்கில் காட்டப் படாமல் எங்கோ செய்யம் வேலையில் அரை வாசி சம்பளத்தை கணக்கு காட்டி பிழைப்பு நடத்துகிறான்...
    எவ்வளவோ பணக்காரர்கள் இன்னும் பச்சை நிற குடும்ப அட்டை வைத்திருப்பதே கைப் புண்ணுக்கு கண்ணாடி...

    ReplyDelete
  52. //minorwall said...
    Half century போட்டுட்டேன்..மீதியை கண்டினியு பண்ணுங்க..//

    விவாத்தத்தில் கலந்து கொண்ட மைனர்வாளுக்கு நன்றி.

    ReplyDelete
  53. ஆம்! இந்தப் பதிவின் நோக்கம் வர்ணம் சாதி இடஒதுக்கீடு என்பதனால், லீட் ஆர்டிகளில் சொல்லியிருப்பதை ஒவ்வொன்றாக எடுத்து விவாதித்து வருகிறோம். அதில் இட ஒதுக்க்கிடு பற்றி சொல்லியிருப்பதால் இங்கே அதுபற்றிக் கருத்து துவங்கிவிட்டோம். ஆனால் சாதி, வர்ணம் பற்றி மீண்டும் சொன்னாலும் அதையும் விவாதிப்போம்.

    ReplyDelete
  54. இங்கே விவாதம் தேங்கி நின்று விட்டது.

    இட ஒதுக்கீடு ஆரம்பத்தபோது பிராமண‌னனுக்கு 16% கொடுக்கப்பட்டது.அது வெள்ளையனின் காலத்தில்.

    இப்போது பிராமணனுக்கு இட ஒதுக் கீடே இல்லை.பிராமணனுக்கு மட்டும் அல்ல முதலி, பிள்ளை,நாயுடு போன்ற மற்ற பிரமணர் அல்லதோருக்கும் இட ஒதுக்கீடு இல்லை.இந்த முன்னேறிய(?) சாதிகளின் மொத்த‌ ஜனத்தொகை 13%

    இந்த சாதிகளிலும் பரம ஏழைகள் உள்ளனர்.உதாரணமாக பிராமணர்களில்
    சவுண்டி பிராமணன்,சமையற்காரன், பரிமாறுபவன்,கோவிலில் தீவட்டி சேவை செய்பவன், கோவில் மடைப்பள்ளி ஊழியன்,பிணம் தூக்கி, போன்றவரள் உள்ளனர். அடுத்து குக்கிராமத்தில் உள்ள கோவில் குருக்கள்.

    இவர்களுக்கெல்லாம் அவர்களுடைய 13% இல்லாவிட்டாலும் ஒரு 4% ஆவது ஒதுக்கீடு செய்யலாம்.அதிலும் பொருளாதார கட்டுப்பாடு விதிக்கலாம்.

    ReplyDelete
  55. //மேலும் இட ஒதுக்கீடு என்பது நலிந்த பிரிவினர் குறைந்தபட்சம் இவ்வளவு இடம் பெற வேண்டும் என்ற முறையில் அமைய வேண்டும். அதாவது முதலில் ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி விட்டு பின்னர் பொதுப் போட்டி இடங்களை நிரப்ப வேண்டும். இப்படி செய்தால் ஒதுக்கீடு இல்லாத பிரிவினரும் போட்டி இடுவதற்கு நிறைய இடங்கள் உருவாகும். இதுதான் அமெரிக்காவில் கருப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டு நடைமுறை.//

    ஜெகன்னாதின் இந்த ஆலோசனை மிகவும் நன்றாக உள்ளது.

    இங்கே இந்த ஆலோசனை என்ன காரணத்தால் நடைமுறைப் படுத்தப் படவில்லை என்று எண்ணிப்பார்த்தேன்.

    இடஒதுக்கீட்டுக்குள் அதிக மதிப்பெண் பெற்ற‌வர்கள் முன்னுரிமை பெற்று இடம் பிடித்துவிடுவார்கள்.மீதீ இருப்பபவர்களால் பொதுப் போட்டியில் வெற்றி பெறமுடியாது.

    இதற்குத் தீர்வாக இடஒதுகீட்டுக்குள் பொருளாதாரக் கட்டுப்பாடு விதிப்பதுதான் ஒரு நல்ல தீர்வு என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    அருள் கூர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  56. வள்ளுவரின் குறளுக்கு ஒரு சல்யூட்! நன்றி!

    http://www.sharmaheritage.com/

    இந்த வலைதளத்தினைச் சென்று காண வேண்டுகிறேன்.

    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தமிழகத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான‌
    ஆதாரங்களை (10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே)இந்த அகழ்வாய்வு சொல்கிறது.

    வெறும் மேடைபேச்சுடன் நின்று விடாமல் சொந்த முறையில் ஆய்வு மேற் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஆர்aaய்ச்சி முடிவுகளை அளிக்கும் ஒரு தனியார் தன் முயற்சி இது.

    சர்மா என்றபெயர் சாதாரண மாக பிராமணர்களின் 'சர்நேம்'.

    ReplyDelete
  57. இடஒதுக்கீட்டுக்குள் அதிக மதிப்பெண் பெற்ற‌வர்கள் முன்னுரிமை பெற்று இடம் பிடித்துவிடுவார்கள்.மீதீ இருப்பபவர்களால் பொதுப் போட்டியில் வெற்றி பெறமுடியாது.

    இதற்குத் தீர்வாக இடஒதுகீட்டுக்குள் பொருளாதாரக் கட்டுப்பாடு விதிப்பதுதான் ஒரு நல்ல தீர்வு என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    அருள் கூர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.//

    இதை நான் மறுக்கிறேன். இன்றைய தேதியில் பிற்படுத்திக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலர் முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

    பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ள சமூகங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

    இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கலாம்.

    முன்னேறிய சாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.

    ஐம்பது வருடம் கழித்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீதான ஒடுக்குமுறைகள் குறையும் பட்சத்தில் இட ஒதுக்கீட்டைப் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து வழங்கலாம்.

    ReplyDelete
  58. //இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கலாம்.

    முன்னேறிய சாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.

    ஐம்பது வருடம் கழித்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீதான ஒடுக்குமுறைகள் குறையும் பட்சத்தில் இட ஒதுக்கீட்டைப் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து வழங்கலாம்.///

    ஜெகன்னாதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன்.நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.