நேற்று சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக பல முருகர் கோவில்களில் நடந்தேறியுள்ளது. எனவே இன்று ஒரு சிறப்பு ஆன்மீகப் பதிவைப் பார்ப்போம்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.
அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..
இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.
உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.
அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார்.
‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.
தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.
வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.
அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது.
அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.
மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.
இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.
சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.
அது அவருக்கு எப்படித் தெரியும்?
அதை அவன் மட்டுமே அறிவான்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
கோவிலுக்குச் செல்லும் வழி:
ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.
அர ஹர, அர ஹர, ஆரோ ஹரா
ReplyDelete// siva said...
ReplyDeleteஅர ஹர, அர ஹர, ஆரோ ஹரா//
கந்தனுக்கு அரோகரா..முருகனுக்கு அரோகரா.
உங்களுக்கும் முருகன் அருள் கிடைக்க எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்
ReplyDeleteநம்பிக்கையே வாழ்க்கை
ReplyDeleteவேலுண்டு... வினையில்லை...
ReplyDelete// siva said...
ReplyDeleteநம்பிக்கையே வாழ்க்கை//
ஆமாம் சிவா..
//Sridharan said...
ReplyDeleteவேலுண்டு... வினையில்லை...//
ஆம், முருகனருள் முன்னிற்கும்.
வேலா வேலா வேலா வேலாயுதம்..
ReplyDeleteஅரகோகரா... அரகோரா.... அரகோகரா...
ReplyDeleteமொக்கராசு மாமா said...
ReplyDeleteவேலா வேலா வேலா வேலாயுதம்..//
இது கொஞ்சம் ஓவரா இல்லை??
ஆச்சரியமா இருக்கு ....!!!
ReplyDeleteபழனி மலை முருகனுக்கு ஆரோகரா ஆரோஹாரா ஆஹோகராரா ரா செங்கோவி அண்ணாச்சி!
ReplyDeleteஇப்ப எல்லாம் ஆன்மீகம் என்றால் கடையைப்பூட்ட வேண்டி இருக்கும் போது உண்மையில் நீங்கள் காலம் உணர்ந்து பதிவு போடும் குரு வாத்தியாரே!
ReplyDeleteமுருகனின் ஆறுபடை வீட்டில் 5 தரிசித்தித்தலில் எனக்கும் முருகன் மீது தனிப்பிரியம் வாத்தியாரே!
ReplyDeleteஇங்கு பாரன முடிப்பதில் கூடகுழப்பம் சிலர் செவ்வாய் சிலர் புதன் என்று முரன் படுகின்றார்கள்!
ReplyDeleteஇரவு வணக்கம் வாத்தியாரே லைனில் இருக்கிறீங்களா வேலை ஒரு புறம் என்பதால் சரியாக கவனிக்க
ReplyDeleteமுடியல!
வணக்கம் மாப்பிள
ReplyDeleteஇந்த தகவல் எனக்கு ஆச்சரியமாய் இருக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை..!!
கந்தசாமி வந்திருப்பது ஆச்சரியம் முருகா!
ReplyDeleteஅந்த மலையில் இருக்கும் காற்றில் நல்ல மூலிகைகள் இருக்கலாமல்லவா..? அவர் குடித்த தண்ணீரில் மூலிகைகள் இருக்கலாம்.. சாரி உங்களை புண்படுத்துவது என் நோக்கமல்ல.. ஆனால் அந்த மனைவியின் செயல்..!!!!????
ReplyDeleteதனிமரம் கும்மியடிப்பதும் ஆச்சரியம் இல்லை முருகா..!!!
ReplyDeleteஎங்கள் ஊர் முருகன் கோவிலில் சூரன் போருக்கு சூரன் வேசமிட்டு சிறுவர்களை பயப்படுத்தியது.. ஏனோ ஞாபகத்தில்.. முருகா இத்தோடு விடை பெறுகிறேன் அரோகரா.. கந்தனுக்கு வேல் ,முருகனுக்கு வேல் ,பழனி ஆண்டவனுக்கு வேல்..
ராஜபாளையம் முருகன் கோவில் முகவரி மற்றும் போக்குவரத்து வழியையும் தனிமெயில் போடுங்கள் வாத்தியாரே விரைவில் போகும் போது தர்சிக்கின்றேன்!
ReplyDeleteவேலை அதிகம் என்பதால் விடைபெறுகின்றேன் பாஸ்!
ReplyDeleteவேல்முருகா வேல்...........
ReplyDeleteநம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா. அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா. அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா....
ReplyDeleteகந்தனை காண எப்படி செல்வது என்ற வழிமுறைகளை சொல்லி இருக்கலாம்..
முருகனை நினை மனமே
ReplyDeleteவரங்கள் தருவது அவன் குணமே
என்ற பாடல் நினைவிற்கு வருகிறது நண்பரே
// மொக்கராசு மாமா said...
ReplyDeleteவேலா வேலா வேலா வேலாயுதம்..//
விஜய்யைக் காப்பாத்துன வேலாயுதம், உம்மையும் காக்கட்டும்.
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅரகோகரா... அரகோரா.... அரகோகரா...//
ரைட்டு.
//கந்தசாமி. said...
ReplyDeleteஆச்சரியமா இருக்கு ....!!!//
ஆமாம் கந்து, எல்லோருக்கும் ஆச்சரியம் தான்..அவர் காலத்திற்குப் பின் யாரும் நம்பவும் மாட்டார்கள்.
//தனிமரம் said...
ReplyDeleteஇப்ப எல்லாம் ஆன்மீகம் என்றால் கடையைப்பூட்ட வேண்டி இருக்கும் போது உண்மையில் நீங்கள் காலம் உணர்ந்து பதிவு போடும் குரு வாத்தியாரே!//
முருகரைப் பற்றி எழுத முடியாத கடை நமக்குத் தேவையில்லை நேசரே..
//காட்டான் said...
ReplyDeleteஅந்த மலையில் இருக்கும் காற்றில் நல்ல மூலிகைகள் இருக்கலாமல்லவா..? அவர் குடித்த தண்ணீரில் மூலிகைகள் இருக்கலாம்.. சாரி உங்களை புண்படுத்துவது என் நோக்கமல்ல.. ஆனால் அந்த மனைவியின் செயல்..!!!!????//
அது கல் மலை தான்..பெரிய அளவில் செடிகள் ஏதும் கிடையாது..
அவர் மனைவியை அவரே இப்போது ஏற்றுக்கொண்டு விட்டார்..அவரால்தானே இந்த நல்ல அனுபவமே கிடைத்தது!!!
//
ReplyDeleteகாட்டான் said...
எங்கள் ஊர் முருகன் கோவிலில் சூரன் போருக்கு சூரன் வேசமிட்டு சிறுவர்களை பயப்படுத்தியது.. //
மாம்ஸ், எப்பவும் இதே வேலையாத் தான் இருக்கீங்களா?
//K.s.s.Rajh said...
ReplyDeleteவேல்முருகா வேல்...........//
வேல் உமக்கு அருள் செய்யட்டும்.
//கோவை நேரம் said...
ReplyDeleteநம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா. அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா. அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா....
கந்தனை காண எப்படி செல்வது என்ற வழிமுறைகளை சொல்லி இருக்கலாம்..//
பதிவில் சேர்த்துவிட்டேன் நண்பரே..
//M.R said...
ReplyDeleteமுருகனை நினை மனமே
வரங்கள் தருவது அவன் குணமே
என்ற பாடல் நினைவிற்கு வருகிறது நண்பரே//
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே!
அழகென்ற சொல்லுக்கு முருகா...
ReplyDeleteஎனக்கு பிடிச்ச முருகன் பாட்டு.உங்கள் சித்தப்பாவின் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இன்றைய ஸ்பெஷல்:
i-Phone னால் வந்த ஆபத்து!
பக்தி பரவசமடைய வைக்கிறது !
ReplyDeleteவேலுண்டு... வினையில்லை...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் செங்கோவி அண்ணாச்சி,
ReplyDeleteமற்றும் அபையோரே
எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா?
கையில காசு இருந்தா மட்டும் ஓட்டும் உறவுகளை உதறித் தள்ளி விட்டு, எல்லோரும் கைவிட்ட நிலையிலும் கைவிடாதா இறைவனுக்கு தனது மீதமுள்ள வாழ்நாளை அவர் அர்ப்பநித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteஆச்சரியமா இருக்கு அண்ணே!
ReplyDeleteஉங்கள் தாத்தா கோவணம் கட்டியவரைத் தரிசித்த வரியினைப் படிக்கையில் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
ReplyDeleteஅரோகரா!
பாஸ், ஸ்ரீவாள சுப்பிரமணியரின் அருளை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.
ReplyDeleteஒருவரின் காசநோயைக் குணப்படுத்தி, பிள்ளைப்பாக்கியத்தையும் கொடுத்து, அவரை விட்டு விலகிய சுற்றத்தினரையும் இணைத்து வைத்திருக்கிறார்.
நானும் தமிழகம் போகும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் போக முயற்சி செய்கிறேன்,
நல்லதோர் பதிவு பாஸ்.
படித்து, சிலிர்த்து, நெகிழ்ந்து விட்டேன்!!
ReplyDeleteமுருகன் புகைப்படங்கள் மிக அருமை....
ReplyDeleteஎன் இஷ்டதெய்வத்தை பத்தி எழுதி இருக்கீங்க. நன்றி நண்பா
ReplyDeleteநல்லப் பதிவு....
ReplyDeleteகாலம் மாறியதால் கடவுள் இல்லாமலா போய் விடுவார்...
கம்பியூட்டர் வந்ததால் கந்தனின் கருணை இல்லாமலா போய் விடும்...
பஞ்ச பூதங்களின் இயக்கமும் அதனை இயக்குபவனின் இருப்பும்
வேண்டி விரும்பி ஆழ்ந்து தேடினால் அறியப்படுவதும்
சாத்தியமே என்று உலகிற்கு உணர்த்திய நிகழ்வு...
அனுபவங்களை அடுத்தவர்களுக்கு உணர்த்துவது கடினமே!
அதனாலே, கண்டவர் விண்டதில்லை..
விண்டவர் கண்டதில்லை என்பர் பெரியோர்...
புசித்தவனுக்குத் தானே ருசி தெரியும்...
பசித்தவனுக்குத் தானே புசிக்கவும் தோன்றும்...
புளிச்சேப்பக் காரனுக்கு யாது தெரியும்?
அற்புதமான பதிவு...
பதிவிற்கு நன்றிகள் நண்பரே!
நம்பிக்கைதான் வாழ்க்கை மாப்ள..
ReplyDeleteபக்தி பரவசம்..
முருகனை நினைப்போம், கவலைகள் மறப்போம்..
காலை வணக்கம்,எல்லோருக்கும்.வந்தவங்க,வந்திருப்பவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும்.இப்போது தான் நேரம் கிட்டியது,கந்தன் அருள் படிக்க.பரவாயில்லை,எனக்கு அவன் பெருமை படிக்க இப்போது தான் நேரம் கிட்ட வேண்டுமென்று அவன் நினைத்தான் போலிருக்கிறது.பல பக்திப் படங்களை தயாரித்தளித்த சின்னப்பா தேவர் கூட நினைவில் நிற்கிறார்.முருகன் அருள் அனைவருக்கும் கிட்ட அவன் தாள் வணங்குவோம்.
ReplyDeleteஉணர்வுபூர்வமான சம்பவம்.கிண்டல்,கேலி விடுத்தது ஆக்கபூர்வமாக கருத்திடுங்கள் உறவுகளே.
ReplyDeleteபிரம்மிப்பா இருக்கு..
ReplyDeleteஉடல் சிலிர்த்து விட்டது!
ReplyDeleteகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
அற்புதமான அனுபவம்தான்.நன்றாக உள்ளது.
ReplyDeleteஇதைப் போல என் வாழ்க்கையில் சொந்த அனுபவம் முருகன் அளித்தது
வகுப்பறையில் 23 ஏப்ரில் 2011ல் வெளியாகியுள்ளது.
"அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை"
படித்துப்பார்க்கவும்
http://classroom2007.blogspot.com
//இன்னும் உடல்நிலை சரி வராததால், இன்று கடைக்கு விடுமுறை. நாளை நானா யோசிச்சேனுடன் சந்திப்போம்...நன்றி.//
ReplyDeleteஓகேண்ணே, சீக்கிரம் குணமாகி வர வேண்டுகிறேன்...
வணக்கம்!வைரம் பாஞ்ச கட்டைக்கு மலாத்தா?(Malade)(சுகவீனம்)த்சோ,த்சோ! நல்ல மெடிக்காமோ(Medicament)(மருந்து)எடுத்துக்குங்க.சீக்கிரம் குனமாகணும்னு அந்த முருகன வேண்டிக்கிறேன்!
ReplyDeleteஉடம்பைத் தேற்றுங்கள் வாத்தியாரே!
ReplyDeleteகந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா
ReplyDeleteஅண்ணே ஆச்சரியமாவும், பிரம்மிப்பாவும் இருக்கு அண்ணே!
ReplyDeleteகடவுள் முருகனைப் பற்றிய உண்மை நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.. எனக்கு கூட ஒரு சின்ன நிகழ்வு உண்டு. முருகனை ஆனந்தமாய் வணங்குவோம்... ஓம் சரவணபவ
ReplyDeleteஎங்க ஊர் தொன்மையான ஆலயத்திலும் சிறப்பாக நடந்ததுங்க...
ReplyDeleteவிரதம் கொண்ட அனைவருக்கும் முருகன் அருள் பாலிக்கட்டும்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணோளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)
sura samharam is takes place on 8th of this month pray for lord subramania , to receive His blessings. for successful life. , om muruga ./ / .
ReplyDeleteramalingam, chennai. 29.