Monday, October 31, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2

அன்புள்ள செங்கோவிக்கு,

.................................... கீழே உள்ள பதிவைப் பாருங்கள் :

பிராமணர்கள் யார்? (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )

இதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

இங்கணம்
****
---------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் அனுப்பிய கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையின் சாராம்சம் பலவருடங்களாக பிராமணர்களுக்குள் விவாதிக்கப்பட்டு/போதிக்கப்பட்டு வருவது தான். இது மீண்டும் மீண்டும் இளைய தலைமுறைப் பிராமணர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதில் பெரிய தவறொன்றும் இல்லை தான். 

ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது. நீங்கள் அந்த நோக்கத்தில் எனக்கு அனுப்பவில்லையென்றும், பிராமணர் அல்லாத ஒருவனின் கருத்தை அறியும் ஆர்வத்துடனே எனக்கு அனுப்பினீர்கள் என்றும் அறிவேன். அந்தக் கட்டுரை பெரிதென்பதால், பதிலும் பெரிதாகலாம், பொறுத்தருள்க.

பிராமண சமூகத்தின் மனமயக்கங்களில் ஒன்று தன்னையும் ‘பிராமணன்’ என்றே உணர்வது. பிராமண சமூகத்தில் பிறந்ததனால் மட்டுமே அவ்வாறு ஆகிவிடமுடியும் என்று நம்பிக்கொள்கிறீர்கள். நமது முன்னோர்களான முனிவர்களையும், ரிஷிகளையும், துறவிகளையும் உங்களைப் போன்ற பிராமணர்களாக உரிமையுடன் நினைத்துக்கொள்கிறீர்கள். 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வர்ணத்திற்கும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் குழப்பிகொள்வது தான். வர்ணம் என்பது எப்போதும், இப்போதும் நான்கு வகையே. ஜாதி என்பது எப்போதும் நான்காக இருந்தது இல்லை.

இதை உங்களுக்கு விளக்க கிருஷ்ணரைத் தான் அழைக்கவேண்டும்.

‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.

அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.

அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். விஸ்வாமித்திரர் கதை சொல்வதும் அதைத் தான். ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும், அவர் ஷத்ரியர் அல்ல. 

இயல்பின் அடிப்படையில் பிராமணராய் ஆனார். அதை அப்போதைய சமூகமும் ஏற்றுக்கொண்டது. அதற்கான வாய்ப்பு அப்போது திறந்தே இருந்தது.

“எவனொருவன் அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்” - 

---- பிராமணனுக்குரிய லட்சணங்களாக சொல்லப்படும் இந்த வரையறை, அனைத்து ஜாதி மக்களுக்குமான அழைப்பே ஆகும். அவர்களில் யாரெல்லாம் இத்தகைய இயல்பினை உடையவராய் பிறந்துள்ளாரோ, யாரெல்லாம் இத்தகைய இயல்பினைப் பெற ஆர்வத்துடன் போராடுகின்றாரோ, அவர்கள் எல்லாரும் பிராமணர்களே.

எனக்குத் தெரிந்த ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் மூன்று  ஆண்குழந்தைகள். கடைசிப் பிள்ளைக்கு ஆன்மீகத்தின் மேல் தீவிர நாட்டம். பெற்றோர் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் முடித்தார். ஆனாலும் தினமும் தியானத்தில் ஆழ்ந்தார். வேலைக்குப் போனார். நமது சாமியார்களின் ஆசிரமங்களில் ஒன்று விடாமல் சுற்றினார். 

ஒருகட்டத்தில் வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தான் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, வீட்டைவிட்டே ஓடிவிட்டார். அவரால் ஒரு அலுவலகத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு பொருளாதாரச் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அதுபற்றி அவர் கவலைப்படவேயில்லை. அவரது நாட்டம் எல்லாம் பிரம்மத்தின் மீதே.

அதே இயல்பை நீங்கள் பாரதியிடமும் பார்க்க முடியும். தேடல் நிறைந்த எல்லா மனிதர்களும் பிராமணர்களே. அலுவலக வேலையில் சுகம் கண்டுகொண்டு, அதனால் கிடைக்கும் வசதியில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, நம்மையும் பிராமணர் என்றோ, பிராமண வழித்தோன்றல் என்றோ நினைத்தால்.....சாரி!

ஆன்மீகத் தேடல் நிறைந்த அந்த நண்பரும், பாரதியும் தான் பிராமணர்கள், பிராமணர்களின் வாரிசுகள். அவர்களே அப்படி அழைத்துக்கொள்ள தகுதியானவர்கள். நிச்சயம் நாம் அல்ல. அப்படி அழைத்துக்கொள்வோரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் நாம் செய்வதற்கில்லை.

ஜாதி என்பது பலகூறுகளால் ஆனது. ஒரு ஜாதியில் எப்போதும் சில பெரிய பிரிவுகள் இருக்கும். நாயக்கர் கம்பளத்து நாயக்கர், காட்டு நாயக்கர் என பல பிரிவாகப் பிரிவர். முக்குலத்தோர் மறவர்-கள்ளர்-அகமுடையார் என பிரிவர். அந்த பிரிவுகளில் நுழைந்தால் அவை கிளைகள் என்ற பெயரில் மேலும் பிரியும். அந்தக் கிளைகளும் உள்ளுக்குள் ‘கொத்து’க்களாக மேலும் பிரிபடும். 

உண்மையில் இவை என்ன? நாம் தலைகீழாகவே இவற்றைப் பார்க்கின்றோம்.

ஆதியில் கூடி வாழத்தொடங்கிய மனித இனம், பாதுகாப்புக் காரணங்களுகாகவும், சுமூக சூழ்நிலைக்காகவும் சிறுசிறு கூட்டமாக தன்னை தொகுத்துக்கொண்டது. வாழும் இடத்தைப் பொறுத்து 

அவை தன்னை பல்வேறு பெயர்களாக அழைத்துக்கொண்டது. அவையே அடிப்படைக் கொத்துகளாக அமைந்தன. வாழ்வியல் தேவைகளினாலும், நாகரீக வளர்ச்சியினாலும் அவை தன்னை ஒத்த பிற கொத்துக்களுடன் தொகுத்துக்கொண்டு கிளைகளாக வளர்ச்சியுற்றன.

அதையடுத்துவந்த நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலகட்டத்தில், ஆட்சிநலனுக்காக ஒத்த கிளைகள் ஜாதிகளாக திரட்டப்பட்டன. மன்னர்பிரான் பெரும்பாலும் எல்லா ஜாதிகளில் இருந்தும் பெண் எடுத்து, சுமூக உறவைப் பேணினார். அந்த மரியாதைக்குப் பிரதிபலனாக அந்த ஜாதிகளும்-கிளைகளும்-கொத்துக்களும் மன்னராட்சிக்கு விசுவாசமாய் நடந்துகொண்டன.

அந்த நேரத்திலேயே வர்ணமும் ஜாதியும் ஒன்றாகக் குழப்பப்பட்டன. பிராமண வர்ணம் எப்போதும் உயர்ந்தது. புத்தர் போன்ற ஷத்ரிய குலத்தில் பிறந்த பிராமணர்கள், அனைத்துத் தரப்பாலும் மதிப்புடன் போற்றப்பட்ட காலம் அது. நிர்வாக வசதிக்காக ஜாதிகளாக மக்கள் தொகுக்கப்பட்டபோது, ஆட்சியாளர்களின் வசதிக்காகவே ’பிறப்பின் அடிப்படையில் வர்ணம்’ என்பது 
நிலைநாட்டப்பட்டது.

வைசிய ஜாதியில் பிறந்த எல்லாருமே வணிகத்தில் சிறந்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் இயல்புப்படி அதாவது வர்ணப்படி வைசியர்கள் அல்ல. ஆனாலும் ஆதிவாசிக் குழுக்களாக வாழ்ந்த நம் சமூகம் நாடு என்ற வரையறையின் கீழ் தொகுக்கப்பட, இந்த கட்டாய ’வர்ணச் சாயம் பூசுதல்’ அவசியம் ஆயிற்று.

இயல்பில் ஷத்ரியனாக இல்லாமல், ஷத்ரிய ஜாதியில் பிறந்த பலரின் வாழ்வும், இந்த வரையறையினால் பாதிக்கப்படவே செய்தது. மேலும், ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.

ஆனாலும் பெருவாரியான அளவில் இந்த சிஸ்டம் வெற்றியடைந்தது.

ஆனால் கண்ணன் பகவத் கீதையில் எச்சரித்த வர்ணக் கலப்பு அப்போதே நடந்துவிட்டது. ‘வர்ணக்கலப்பு’ பல அபாயங்களைக் கொண்டுவரும் என்றே கண்ணன் சொல்கிறான். அவன் சொல்வது ஜாதிக்கலப்பு பற்றியல்ல. மல்டிபிள் பெர்சனாலிட்டி பற்றி.

அடிப்படையில் ஷத்ரிய குணமுள்ள ஒருவன், பிராமண குலத்தில் பிறந்தால், மூர்க்கன் என்றே அவர்களால் அழைக்கப்படுவான். அதன்பிறகு அவன் ஆன்மீக ஈடுபாடு உள்ளவனாக நடிக்க ஆரம்பிப்பான். முழுமையான ஷத்ரியனாகவும் இல்லாமல், பிராமணனாகவும் ஆகாமல் வர்ணக்கலப்பால் சீரழிவான். (அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான ஆட்களை திருச்செந்தூர் முருகன் 
கோவில் கருவறையிலேயே பார்த்திருக்கிறேன்.)

அந்த முறையின்மூலம் ஆட்சியாளர்களும், பிராமணர்களும் சமூகத்தின் மேல்மட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பெரிய சதித் திட்டம் ஏதும் காரணம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது எப்படி பிற்படுத்தப்பட்ட சாதிகள், அதிகாரத்தில் தங்களை மட்டுமே நிலைநாட்டியுள்ளனவோ, அதே போன்று இயல்பாகவே அது நடந்தேறியது. சமூகக் கட்டுமானம் சாதிமுறை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

நிலப்பிரபுத்துவக் காலம்வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் அந்த அமைப்பு சிதறடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதைவிட வலுவான அமைப்பான ஜனநாயகம் அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருந்தது. எனவே நிலப்பிரபுத்துவ அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக மலர்ந்தது.

காந்தியும் ஆரம்பக் கட்டங்களில் வர்ணம், ஜாதி இரண்டையும் குழப்பிக்கொண்டிருந்தார். நம் முன்னோர்களைப் போலவே அவரும் ஜாதி அமைப்பே நம் சமூகக்கட்டுமானத்திற்கு அடிப்படை, அதுவே நம்மை ஒன்றிணைத்துக் காக்கும் என்று நம்பினார். 

ஆனால் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர், ஜாதி மேல்கீழாக மக்களை பிரித்து வைத்திருப்பதையும், அதனால் விளைகின்ற அதர்மங்களையும் கண்டார். அதன்பின், தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்னது தான் இன்றளவும் உண்மை :

நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே. 

அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்
செங்கோவி

டிஸ்கி: சென்ற பகுதிக்கு குறிப்பிடத்தக்க பின்னூட்டங்கள் அளித்த ஸ்பீடு மாஸ்டர், டாக்டர்.வடிவுக்கரசி, கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

215 comments:

 1. வெளியில் கிளம்புகிறேன்..முடிந்தால் இரவில் சந்திப்போம்.

  ReplyDelete
 2. தெளிவான பார்வை.

  ReplyDelete
 3. என்ன ஒரு விளக்கம்? விளக்கம் அருமை... அவருக்கு புரியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 4. //ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது//சத்தியமான வார்த்தைகள்! ஜாதி கலவரங்களுக்கு காரணம் இது தான்

  ReplyDelete
 5. // கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.//
  சந்தேகமென்ன! சரியான விளக்கங்களுடன் பகிர்வு.

  ReplyDelete
 6. போன பதிவும் படித்தேன்.. நல்ல வெளிப்படையான விவாதம், ஜாதியை பற்றியோ இட ஒதுக்கீடு பற்றியோ பேசவே தயக்கம் உள்ள காலம் இது... அதைப்பற்றிய விவாதம் ஒரு நல்ல முயற்சி... :))

  ReplyDelete
 7. ஆரோக்கியமான விவாதம். நடத்துங்க...

  ReplyDelete
 8. விவாதம் தொடரட்டும்....

  ReplyDelete
 9. சூப்பர்ணே! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. அற்புதமான பதிவு.

  மிகுந்த ஒரு sensitive issue வை மிகக் கவனமாக முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறீர்கள்.

  வர்ணம், சாதி , மற்ற பிற கட்டமைப்புகள் எல்லாமே survival குறித்துத்தான். ஒருவருக்கு இது பிழைக்கும் வழி மற்றவருக்கு இது சூழ்ச்சி. இவைகள் மாறிக்கொண்டே யிருக்கும். வென்றவைகள் நின்றாளும். தோற்றவைகள் செத்து மாளும். இதைத் தெரிந்துதான் தற்போது பிராமணர்களே தங்களது stand அய் மாற்றிக் கொண்டு வருகின்றனர். பழமை விரும்பிகளான மூத்தோர் இந்த ஆட்டத்தில் தங்களின் பங்கு முடிந்து விட்டதால் இனி survival பற்றி கவலைப்படாமல் பழமை பேசி வருகின்றனர்.

  எல்லாமே முன்னோக்கி நகர்வது குறித்தும் வெற்றி பெற்று பிழைத்தல் குறித்துமானதுதான்.

  அருமையான பதிவு.தீர்க்கமான நடை.

  வாழ்த்துக்கள்.

  God Bless You.

  ReplyDelete
 11. பதிலில் நல்ல மெட்சுரிட்டி பாஸ்...ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
  இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

  தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!

  ReplyDelete
 12. //சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.//

  அலகாபாதில் நான் முடி வெட்டிக் கொள்ளச் சென்றபோது எனக்கு முடி வெட்டியவர் தான் ஒரு தாகுர்(உயர் வகுப்பு) என்று கூறினார்.இப்போது எந்தத்தொழிலும் சாதி அடிப்படையில் நடப்பது மாறித்தான் இருக்கிறது.இது காலத்தின் கட்டாயம்.

  ReplyDelete
 13. //15 comments://

  என்னது செங்கோவி ப்ளாக்ல 15 comment மட்டும் தானா நம்ப முடியலையே.. யாராவது டெலிட் பண்ணிட்டாங்களா...

  ReplyDelete
 14. நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே. // ரொம்ப உண்மை மாப்ள..

  ReplyDelete
 15. நல்ல பதிவு. வெளிப்படையாக எடுத்துவைக்கப்பட்ட வாதங்கள்.இதுதான் மிகச் சில பேருக்காவது தெளிவைக் கொடுக்கும்.

  பிராமண சமூகத்தில் ஆதிகாலம் தொட்டே வைதீகர்கள் என்றும், லெள‌கீகர்கள் என்றும் ஓர் இடைவெளி உண்டு. வைதீகர்களை ஆன்மீகவாதிகள் என்று வேண்டுமானால் ஒரு புரிதலுக்காகச் சொல்லிக் கொள்ளலாம்.லெள‌கீகர்கள் என்றால் உலகாயதத்தில் உழல்பவர்கள்.

  வேதம் ஓதிக்கொண்டே லெள‌கீகனாகவும் இருப்பவன் உண்டு. (திருச்செந்தூர் கோவில் முக்காணியரைப்போல, போத்தியரைப்போல) இறைச் சன்னிதியில் இருந்தும் இறைவுணர்வு இல்லாமல் உலக இன்பத்திற்கு ஆதாரமான பொருள் தேடும் ஆசை உள்ள‌வனாக இருப்பவனும் உண்டு.'கோவில் வாசலிலே குடியிருந்தும் கெட்டேனே' என்று பின்னால் பிலாக்கணம் பாட வேண்டியதுதான்.

  லெளகீகனாக இருந்தும் இறை உணர்வும் சக மனிதர்களிடம் மனித நேயமும் சேவை மனப்பானமை உள்ளவனும் உண்டு.

  சில அப்பாவிப் பிராமணர்களின் குடுமி அறுப்பு போன்றவைகள் செய்யப்பட்ட போது,தந்தைப் பெரியார் அதனை நிறுத்தத் தனது படைக்குச் சொன்னதாகச் சொல்வார்கள்:"நமது போராட்டம் வைதீகப் பிராமணனுக்கு எதிரானது அல்ல. லெள‌கீகப் பிராமண‌னுக்கு எதிரானது.குடுமி வைத்தவனுடன் அல்ல. கிராப் வைத்தவனுடன் தான்". (என்னிடம் ஆதாரம் இல்லை. அது கிடைப்பவர்கள் பகிர்ந்து கொள்க)

  நான் சொல்லும் செய்தியை எத்தனை பேர் உள் வாங்கி கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

  காஞ்சி மகாப்பெரியவரும், அலுவலக வேலை, வியாபாரம் என்று உலகாயதத்தில் ஈடுபடும் பிராமணனை 'பிராமணன்' என்று சொல்லாமல்
  'பிராமண பந்து' என்றே கூறினார்.அதாவது உண்மையான ஆன்மீக வாதிகளான சில பிராமணர்களுக்கு இவன் உறவினன்.அம்மட்டே!இவனே பிராமணன் அல்லன்.

  கீதையில் நான்கு வர்ணங்கள் குணத்தையும் அதனால் விளையும் செயல்பாடுகளையும் வைத்தே வகுக்கப்பட்டதாகவே காண்கிறது.


  //அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.//

  ஆம் மிகச் சிலர் உள்ளனர். அப்படி ஒரு சிலர் ஆவதற்கு ஒரு வகுப்பார் முழுவதும் முயற்சி செய்தால் ஓரிருவர் தேருவர். சில பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்,பல்லாண்டு அனுபவத்தால் நிலை நாட்டப்பட்ட மரபுகளைப் பேணித்தான் ஒரு சில நல்ல ஆன்மாக்களை உருவாக்க முடிகிறது.
  அந்த மரபுகளின் உட் பொருள் அறியாதவர்கள் வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பார். அதனால் (தவிர்க்கக் கூடியவையான) புரிதலில் குழப்பங்கள் மன வேற்றுமைகள் ஒற்றுமைக் குறைவு எல்லாம் பொது சமூகத்தில் ஏற்பட்டு விடுகிறது.


  //ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.//

  இக்கருத்து ஆய்வுக்கு உரியது.

  தர‌ம்பால் என்ற காந்தீய ஆய்வாளரைப் படித்துப்பாருங்கள்.
  காந்தி இன்று தளத்திலும், தமிழ்பேப்பரிலும் அவருடைய பழைய நேர்காணல்
  பிரசுரம் ஆகி உள்ளது.

  அதிலிருந்து சில கீழே கொடுக்கிறேன்.
  "
  கே:இந்திய நிலப்பிரபுத்துவத்தால் புதிதாகப் பிறந்திருந்த மேற்கத்திய முதலாளித்துவ சமூக அமைப்பை எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாமா?"

  ப‌:நம்மிடம் நிலபிரபுத்துவம் இருந்தாதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இது போன்ற முத்திரை குத்தல்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள், அனுமானங்கள் மறைந்து காணப்படுகின்றன.

  .....
  தஞ்சாவூரில் 1805-ல் மிராசுதார்களின் (நில உடமையாளர்களின்) எண்ணிக்கை 62,000. அதில் 42,000 பேர் சூத்ரர்கள் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியினராக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் எண்ணிக்கை 32,474 ஆக இருந்திருக்கிறது. 1799-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த மொத்த மிராசுதார்களின் எண்ணிக்கை 8300 என்று கலெக்டர் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷாரின் ஆவணங்களை இன்னும் ஆழமாக ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் இந்திய சமூகம் பற்றிய விரிவான முற்றிலும் மாறுபட்ட சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

  உதாரணமாக, மதராஸ் வருவாய் திட்டத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் ரீட் சொல்கிறார்: 1780 வாக்கில் ஹைதராபாத்தில் இருந்த பிரபுக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்று பார்த்தால் முன்னவருடைய ஆடை கொஞ்சம் கூடுதல் தூய்மையாக இருந்தது… அவ்வளவுதான்...."

  ReplyDelete
 16. காலை வணக்கம்.குட் மோர்னிங்.மன்னிக்கவும்,கடல் தாண்டி வந்து விட்டதால் இணையப்பக்கம் உலாவ முடியவில்லை.பதிவுகள் எதுவும்(வேலா.......தவிர)படிக்கவில்லை.எனது கூகிள் கணக்கு இங்கு வேலை செய்யுமா தெரியவில்லை,அத்தோடு இதுவும்.......////என்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா..///ஹி,ஹி,ஹி.

  ReplyDelete
 17. @Yoga.S.FRபொன் ஜூர் ஐயா.

  ரெண்டு மூணு நாளா தலை சுத்தலா இருக்குன்னு சொல்லிட்டு, திடீர்னு காணாமப் போனா, எங்களுக்கு தலை சுத்துது இல்லையா?..இப்படியா செய்றது?..

  கடல் கடந்த பயணத்தை எஞ்சாய் பண்ணுங்க ஐயா..நேரமும் இணையமும் இருக்கும்போது வாங்க.

  ReplyDelete
 18. //ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
  இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

  தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!//

  இந்தப் பின்னூட்டத்தினை இட்ட‌ அனபர் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பதிவினைப் படிக்க வேண்டும் என்று கோருகிறேன். எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்ப்பதால்தான் இந்தக் குழப்பம்.மெனெக்கிட்டு எழுதிய பதிவிலேயே ஏதோ பிராமண‌ர்களுக்கு சவால் போலத் தோற்ற‌ம் எல்லாம் கொடுத்துக் கொண்டு.... என்னமோ போங்கள். அவர் சொன்ன "தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா"வை என்னமோ ஏதோ என்று போய் பார்த்தால்
  புஸ்வாணம்.

  ReplyDelete
 19. //kmr.krishnan said...
  //ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
  இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

  தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!//

  இந்தப் பின்னூட்டத்தினை இட்ட‌ அனபர் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பதிவினைப் படிக்க வேண்டும் என்று கோருகிறேன். எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்ப்பதால்தான் இந்தக் குழப்பம்.மெனெக்கிட்டு எழுதிய பதிவிலேயே ஏதோ பிராமண‌ர்களுக்கு சவால் போலத் தோற்ற‌ம் எல்லாம் கொடுத்துக் கொண்டு.... என்னமோ போங்கள். அவர் சொன்ன "தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா"வை என்னமோ ஏதோ என்று போய் பார்த்தால்
  புஸ்வாணம்.//

  ஐயா, வழக்கமாக அவர் தன் பதிவின் லின்க்கை கீழே கொடுப்பார்..எனவே “தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!”-க்கும் இந்தப் பதிவிற்கும், அவர் கமெண்ட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

  ReplyDelete
 20. //வர்ணம், சாதி , மற்ற பிற கட்டமைப்புகள் எல்லாமே survival குறித்துத்தான். ஒருவருக்கு இது பிழைக்கும் வழி மற்றவருக்கு இது சூழ்ச்சி. இவைகள் மாறிக்கொண்டே யிருக்கும். வென்றவைகள் நின்றாளும். தோற்றவைகள் செத்து மாளும். இதைத் தெரிந்துதான் தற்போது பிராமணர்களே தங்களது stand அய் மாற்றிக் கொண்டு வருகின்றனர். பழமை விரும்பிகளான மூத்தோர் இந்த ஆட்டத்தில் தங்களின் பங்கு முடிந்து விட்டதால் இனி survival பற்றி கவலைப்படாமல் பழமை பேசி வருகின்றனர்.//

  வெட்டிப்பேச்சு எப்போதும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் நல்ல கருத்துக்களைக் கூறுகிறார்.

  அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.

  ReplyDelete
 21. @kmr.krishnan

  /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

  அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

  மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

  பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

  இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

  ReplyDelete
 22. @kmr.krishnan

  /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

  அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

  மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

  பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

  இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

  ReplyDelete
 23. @kmr.krishnan

  /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

  அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

  மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

  பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

  இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

  ReplyDelete
 24. அப்புடீல்லாம் பட்டுன்னு போயிட மாட்டேன்.திடீருன்னு இங்க (லண்டன்)வர வேண்டியதாப் போச்சு.இங்க பசங்க படிக்க கம்பியூட்டர் யூஸ் பண்ணிட்டிருப்பாங்க.லீவு விட்டு நேத்து ஸ்கூல் ஆரம்பம்.இப்பதான் காலையில ஒக்காந்தேன். நானே பதறிட்டேன்,என்னடா இது புள்ளைங்க ஏங்கிப் போயிட்டாங்களேன்னு.நைட்டு பாக்கலாம்.

  ReplyDelete
 25. அப்பாடா ஐயா வந்துட்டார்...... வணக்கம்....!

  ReplyDelete
 26. @kmr.krishnan
  oops..my bad...it is my usual style..I am planning to add ./-

  ReplyDelete
 27. நல்ல முயற்சி அண்ணே, நமக்கும் இப்பதான் பல விஷயம் விளங்க ஆரம்பிக்குது, கோடி நன்றிகள்.

  ReplyDelete
 28. அப்புறம் மீண்டும் ஐயாவை கண்டது மகிழ்ச்சி. கடல் தாண்டிய பயணத்தை இணைய குறுக்கீடு இன்றி என்ஜாய் பண்ணுங்க ஐயா.

  ReplyDelete
 29. BTW, title was not intentional :-) ...I made it up according to my post even before seeing Sengovi's post. Please continue.

  ReplyDelete
 30. \\‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.
  அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.\\ இதுதான் பாயின்ட்.ஒரு இன்ஜினீயருக்கு மகனைப் பிறந்த ஒரே காரணத்தாலேயே ஒருத்தன் இன்ஜினீயராகிவிட முடியாது, அதற்க்கான தகுதிகளையும் அடைய வேண்டும். பிராமண குலத்தில் பிறப்பதாலேயே ஒருத்தன் பிராமணன் ஆக முடியாது, அதற்க்கான தகுதிகளைப் பெறுவதோடு, செயல் பாட்டிலும் பிராமணனாக இருக்க வேண்டும். பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் அதற்க்கான தகுதிகள் அவனிடத்தில் இல்லையென்றால் அவனை பிரம்ம பந்து என்று அழைப்பார்கள்.

  “Brahmanas, ksatriyas, vaisyas and sudras are distinguished by the qualities born of their own natures in accordance with the material modes, O chastiser of the enemy.

  “Peacefulness, self-control, austerity, purity, tolerance, honesty, knowledge, wisdom and religiousness–these are the natural qualities by which the brahmanas work.

  “Heroism, power, determination, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities of work for the ksatriyas.

  “Farming, cow protection and business are the natural work for the vaisyas, and for the sudras there is labor and service to others.

  “By following his qualities of work, every man can become perfect. Now please hear from Me how this can be done.

  “By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work.

  “It is better to engage in one’s own occupation, even though one may perform it imperfectly, than to accept another’s occupation and perform it perfectly. Duties prescribed according to one’s nature are never affected by sinful reactions.” (From Bhagavad-gita 18th chapter)

  So the Vedas recognize different people have different skills and qualifications, but it is no by birth, it is by guna [qualification] and karma [work]. So if someone born of a sudra [worker] father becomes qualified [guna] and works as [karma] a brahmana he should be accepted as a brahmana… In the same way if the son of a brahmana doesn’t have the qualifications of a brahmana or work as a brahmana then he is not a brahmana. There are so many examples of this in the Vedic scriptures.

  The current Indian system is something like accepting the sons of supreme court judges as supreme court judges… It’s nonsense. They have to be qualified, they have to attend the university and pass the course, then they have to work under a qualified judge and get the practical experience, then they may be able to become supreme court judges…

  So there is actually nothing stopping anyone from bettering his position in the Indian system in the scriptures… But also there is no need for everyone to strive to be supreme court judges. Anyone, from any social position can be liberated by performing his own work…

  ReplyDelete
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]அப்பாடா ஐயா வந்துட்டார்...... வணக்கம்....!////வணக்கம்.வணக்கம்.ஒங்க வூட்டுலயும் வருகைப் பதிவு செஞ்சிருக்கேன்.

  ReplyDelete
 32. ஒரு பிராமணன் என்றால் அவனுகென்று சில தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றுள் சில:
  1. சம்பளத்திற்கு வேலை பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் வறுமையிலேயே வாழ வேண்டும். காரணம், ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு இறை பக்தியில் நாட்டம் செலுத்துவதால் அதில் கிடைக்கும் மனநிறைவால் ஏழ்மை ஒரு பொருட்டாகப் படாது.
  2. வாத்தியார் வேலைதான் தொழிலே, அவரது மாணவர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்ல வேண்டும், கிடைப்பதை வைத்து உணவு உண்ண வேண்டும், அப்புறம் தேவைக்கு அதிகமாக ஒரு நாளில் பொருள் கிடைத்தால் அதை உடனேயே பிறருக்கு தானமாகக் கொடுத்து விட வேண்டும். [நாளைக்கு வேணும்னு சொல்லி கையில பத்து பைசா கூட வச்சுக்கக் கூடாது, அன்றன்றைய தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வான் என்ற அசையாத நம்பிக்கை இருக்க வேண்டும்.]
  3. உண்மையையே எந்த சூழ்நிலையிலும் பேச வேண்டும், நம்மை பயக்கும் எனில் பொய்யும் வாய்மையே என்பதைக் கூட கடைபிடிக்க முடியாது, டேஞ்சர் வந்தாலும் உண்மையைத்தான் பேச வேண்டும்.
  4. எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், பெரிய பதவியில் இருப்பவனாக இருந்தாலும், அவர்களுக்கு ஸ்பெஷல் டிரீட்மென்ட் கொடுக்கக் கூடாது, பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும்.
  5. பிற உயிருக்கு துன்பம் இழைக்கக் கூடாது என்பதால் மட்டன் சிக்கன் என்று வெட்ட முடியாது, he must remain strict vegetarian. [முட்டை சைவம் என்று சொல்லக் கூடாது, மீன் தண்ணீர் கத்தரிக்காய் என்று சொல்லக் கூடாது, பூணூலை கலட்டி வைத்து விட்டு எல்லா மாமிசத்தையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு மீண்டும் எடுத்து மாட்டிக் கொண்டால் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடாது.]

  இப்படி எத்தையோ இன்னும் இருக்கின்றன. இவை எதையும் கடை பிடிக்காமல் நான் பிராமணன் என்று சொல்வதில் அர்த்தமென்ன இருக்கிறது?

  ReplyDelete
 33. Throughout history, many personalities who came from non-brahmana backgrounds became brahmanas and functioned as gurus. The following is a list of personalities who were born in non-brahmana families who became qualified brahmanas and acaryas due to their qualities.

  The famous sage Visvamitra was previously known as Maharaja Gadhi of the Candra-vamsa, but became a brahmana through the strength of his austerities. This is explained in Mahabharata, Adi-parva 174:

  ksatriyo'ham bhavan vipras tapah-svadhyayah-sadhanah
  sva-dharmam na prahasyami nesyami ca balena gam
  dhig balam ksatriya-balam brahma-tejo-balam balam
  balabalam viniscitya tapa eva param balam
  tatapa sarvan diptaujah brahmanatvam avaptavan

  "Visvamitra said to Vasistha: You are a brahmana, endowed with the qualities of austerity and Vedic knowledge. I am a ksatriya, so on the basis of my nature I will forcibly take this cow (Nandini).

  "Later, when Visvamitra was defeated, he declared that the strength of the ksatriya was inferior to that of the brahmanas. He thus decided that the performance of austerities was the only way to empower one with superior strength.

  "The greatly effulgent Visvamitra thus performed all kinds of austerities and attained the position of a brahmana."

  It is well known that Visvamitra was a brahmana by conversion, yet he was also a guru with many disciples. Amongst his most famous disciples who received mantra from him were Lord Sri Ramacandra and His brother Sri Laksmana, Sunasepha, and Galava. At present many brahmana families in India trace their gotra (lineage) to Visvamitra. Furthermore, Visvamitra is the rsi (seer) of many mantras of the Rg Veda including the brahma-gayatri which is chanted by all brahmanas thrice daily.

  ReplyDelete
 34. In Chapter 30 of the Anusasana-parva of Mahabharata, the story is given of Maharaja Vitahavya who was originally a ksatriya king who became a brahmana by the mercy of Bhrgu Muni. His son, Grtsamada became a brahmacari and a brahmana sage who was equal to Brhaspati. Suceta, the son of Grtsamada, also became a brahmana. In this dynasty was born the sage Pramiti and Saunaka Rsi. Saunaka wrote many works on the Rg Veda and also wrote the Brhad-devata. He was also the guru of Sage Asvalayana. Asvalayana's disciple was Katyayana, and his disciple was Patanjali Muni.

  The caste of Satyakama Jabala was unknown, yet his guru Gautama Rsi accepted him as a brahmana simply due to his truthful nature. Satyakama went on to initiate many disciples, out of which Upakosala was the most prominent.

  Agnivesya Muni was born as the son of the king Devadatta, and the brahminical dynasty known as the Agnivesyayana sakha appeared from him.

  Both Medhatithi and Kanva Muni were born in the ksatriya dynasty of Puru.

  The sage Citramukha was born a vaisya, yet he became a brahmarsi with many disciples.

  There were also other great personalities in Vedic history that were not born in brahmana families, but acted as gurus. In the Padma Purana, the original brahmana, Lord Brahma says:

  sac-chrotriya-kule jato akriyo naiva pujitah
  asat-kstrakule pujyo vyasa-vaibhandukay yatha
  ksatriyanam kule jato visvamitro'sti matsamah
  kesyaputro vasisthas ca anye siddha dvijatayah
  yasya tasya kule jato gunavaneva tairgunaih
  saksad brahmamayo viprah pujiyah prayatnatah

  "If one is born in a family of brahmanas who are absorbed in hearing divine sound, but has bad character and behavior, he is not worshipable as a brahmana. On the other hand, Vyasa and Vaibhandaka Muni were born in unclean circumstances, but they are worshipable. In the same way, Visvamitra Muni was born a ksatriya, but he became a brahmana by his qualities and activities. Vasistha was born of a prostitute. Many other great personalities who manifested the qualities of first-class brahmanas also took birth in similar humble circumstances, but they are also called perfect. The place where one takes birth is of no importance in determining whether one is a brahmana. Those who have the qualities of brahmanas are recognized everywhere as brahmanas, and those who have such qualities are worshipable by everyone." (Padma Purana, Srsthi-kanda 43.321,322, Gautamiya-samskarana)

  ReplyDelete
 35. A similar verse is found in the Vajrasucika Upanisad of the Sama Veda:

  tarhi jatir brahmana iti cet tan na tatra jatyantara-jantusu aneka-jati-sambhava maharsayo bahavah santi rsyasrngo mrgah kasuikah kusat jambuko jambukat valmiko valmikat vyasah kaivarta-kanyayam sasa-prsthat gautamah vasisthah urvasyam agastyah kalase jata iti srutatvat etesam jatya vinapyagre jnana-pratipadita rsayo bahavah santi tasman na jatih brahmana iti

  "Does birth make a brahmana? No, this is also not the case. Many great sages have been born of other living entities. Rsyasrnga was born from a deer, Kausika was born from kusa grass, Jambuka was born from a jackal, Valmiki was born from an ant-hill, Vyasadeva was born from a fisherman's daughter, Gautama was born from the back of a rabbit, Vasistha was born from Urvasi and Agastya was born from a pot. Apart from these personalities, there are many other wise persons born from other castes who became sages. Therefore birth does not make a brahmana."

  All the great historical personages mentioned above were not born brahmanas or had mixed parentage, yet they acted as spiritual masters to thousands of disciples.

  ReplyDelete
 36. ஜயதேவதாஸ் சென்ற முறையிட்ட பின்னூட்டத்திற்கும் இப்போது இட்டுள்ள பின்னூட்டங்களுக்கும் நிறைய மாற்றங்கள்.

  சென்ற முறை அவர் சாடியது 'சாதிப் பிராமணனை'!அல்லது பிராமண சாதியை!

  இப்போது அவர் கூறுவது வர்ண பிராமண‌னைப் பற்றி.

  வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.

  (செங்கோவி சுட்டியுள்ளதைப்போல கிருஷ்ணர் காலத்திலேயே வர்ணக் கலப்பு ஏற்படத் துவங்கிவிட்டது.)

  அதனைச் சொல்லி மீண்டும் ஒரு வர்ண பிராமணனை உருவாக்க முடியாது.அது தேவையும் இல்லை.

  இன்று பிராமண‌ சாதியில் பிறக்காத ஆன்மிக குருமார்கள் பலர் தோன்றியுள்ளனர்.

  விவேகானந்தர்(பிராமணர் அல்லதவர்) சென்னைக்கு வந்த போது முதல் ஆதரவு அவ‌ருக்குக் கிடைத்தது திருவல்லிக்கேணி ஆச்சாரமிக்க ஐயங்கார்களிடமிருந்தே.அவருடைய முக்கியமான கடிதங்கள் அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்டவை அளசிங்கப்பெருமாள் என்ற ஐயங்கார் சுவாமிக்கே!

  சத்ய சாயிபாபாவின்(பிரமணர் அல்லாதவர்) பக்தர் கூட்ட எண்ணிக்கை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அவருடைய பின்தொட‌ர்வோரில் பிராமணர் அதிகம் உள்ளனர்.

  பங்காரு அடிகளார்(பிராமணர் அல்லாத்வர்) பக்தர் கூட்டத்திலும் 9 கஜம் மடிசார் கட்டிய மாமிகளை (சிறு எண்ணிக்கையாக இருப்பினும்) காண முடிகிறது. என் பெரியப்பார் மகன், என் மைத்துனி குடும்பத்துடன் பங்காரு அடிகளாரின் அடிமைகள்.அவர்கள் மூலம் என் மனைவியும் பங்காரு அடிகளாருக்குக் காணிக்கை செலுத்துகிறாள்.சக்தி ஒளி படிக்கிறாள்.

  மாதா அமிர்தானந்த மயி(பிறப்பால் மீனவர்)அவருடைய பின் தொடர்வோரில் பிராமணர் அதிகம் உள்ளனர்.என் அண்ணன் அவருடைய பொன் மொழிகளை நிறைய வாசித்துள்ளார். அவருடைய கல்லூரியில் பணி புரிந்தார்.

  ஜக்கி வாசுதேவ்(பிராமணர் அல்லாதவர்) அவருக்கும் பிராமணர் அதிக சீடர்களாக உள்ளனர்.அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண் எழுத்தாள‌ர் வெகுஜனப் பத்திரிகையில் ஜக்கியின் புகழ் பாடினார்.

  மறைந்த சின்மயனந்தா(பிராமண‌ர் அல்லாதவர்)அவருடைய ரசிகர்களில் பிராமணர் அதிகம்.

  ஆக,வர்ணாஸ்ரமம் இருந்த போது விஸ்வாமித்ரருக்கு அளித்த பதவியை இக்காலத்திலும் சாதிப் பிராமண‌னும் தன் சாதியல்லாத பல‌ குருமார்களுக்குக் கொடுத்துத்தான் உள்ளான்.

  வர்ண பிராமண‌ன் இப்போது இல்லை. சாதிப் பிராமண‌னே இருக்கிறான். அதே போல பல சாதிகளும் உள்ளன.சாதி ஒழிய வேண்டுமா? இருக்க வேண்டுமா?

  ஒழிய வேண்டும் என்றால் அதற்காக ஒவ்வொரு சாதியினரும் கொடுக்க வேண்டிய பங்களிப்பு என்ன?

  இப்படிப் பேசலாம்.

  ReplyDelete
 37. //மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

  பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

  இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..//

  ஆம். இந்தப் புரிதலுக்காகத்தான் இந்த சம்வாதமே! எப்படியோ சாதி சமூகத்தில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டது.அதற்கு பிராமண‌ன் சொன்ன(?)
  வர்ணப் பிரிவுதான் காரணம் என்பதெல்லாம் சரியா என்று யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

  கற்பிக்கப்பட்டவை எவை?அவற்றில் கொள்ள வேண்டியவை எவை;தள்ள வேண்டியவை எவை என்று மறு ஆய்வு செய்யவே இந்த சம்வாதம்.

  சமூக ஒற்றுமை ஏற்படுத்த என்ன செய்ய வெண்டும்; வேற்றுமையை ஏற்படுத்துவது யார் என்று பேசித்தெளிய வேண்டும்.

  ReplyDelete
 38. \\சென்ற முறை அவர் சாடியது 'சாதிப் பிராமணனை'!அல்லது பிராமண சாதியை!\\ சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டதால் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.

  ReplyDelete
 39. \\வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.\\ வர்ணம் என்பது பெயரளவில் வழக்கொழிந்து போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் இல்லாமல் போகாது. பிராமணன், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்ற நான்கு குணமுள்ளவர்களை என்றென்றும் இருப்பார்கள், ஏனெனில் இந்தப் பிரிவுகளை நானே உருவாக்குகிறேன் என்று பகவானே சொல்கிறார். அவர் உருவாக்கியது எப்படி இல்லாமல் போகும்? ஒரே ஒரு வித்தியாசம், பிராமணன், ஷத்ரியர்கள் எண்ணிக்கை காலம் போகப் போக குறைந்துகொண்டே வருவார்கள், பார்ப்பதே அரிதாக இருக்கும். இன்றைக்கும் இந்த வர்ணங்களின் சாயல்களை நீங்கள் சமூகத்தில் பார்க்கலாம். என்னதான் ஆனாலும் உண்மையையே பேச வேண்டும் என்ற மனநிலை, தனக்கு தெரிந்ததை பிறருக்கு பிரதிபலன் பாராமல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், வைத்தியம் செய்வதில் திறமை, சோதிடம் பார்ப்பதில் கெட்டிக்காரராக இருத்தல் இவையெல்லாம் பிராமணனின் சாயல்கள். இவர்கள் இன்றைக்கு எந்த ஜாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் கிறிஸ்தவராகக் கூட இருக்கலாம். ராணுவத்தில் சேர விருப்பம், ஆட்சி செய்வதில் கெட்டிக் காரத்தனம் இருப்பவர்கள் ஷத்ரிய குணத்தின் வெளிப்பாடு. விவசாயம் செய்தல், வியாபாரம், மாடுகள் பாரமரிப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவர்கள் வைஷ்ய குணம் உள்ளவர்கள். இவை எவற்றிலும் ஈடுபடாமல், எங்காவது வேலை கிடைத்தால் செய்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று இருப்பவர்கள் சூத்திரர்கள். இன்றைய சூழலில் ஒருத்தரிடம் 100% இந்த குணங்களைப் பார்ப்பது கடினம் எனினும் ஒவ்வொருத்தரும் இவற்றில் ஏதோ ஒரு பிரிவில் ஓங்கி இருப்பதைக் காண முடிகிறது.

  ReplyDelete
 40. \\(செங்கோவி சுட்டியுள்ளதைப்போல கிருஷ்ணர் காலத்திலேயே வர்ணக் கலப்பு ஏற்படத் துவங்கிவிட்டது.)\\ அர்ஜுனன் தான் ஏன் போரிட விரும்பவில்லை என்னும்போது, போரில் பல்லாயிரம் வீர்கள் மடிவார்கள், அவர்களது மனைவியர் விதவையாவார்கள், கேட்பாரற்ற அவர்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்கள், அதனால் வர்ணக் கலப்பு ஏற்ப்படும் என்று சொல்கிறான். அதனாலேயே வர்ணக் கலப்பு ஏற்ப்பட்டதாக அர்த்தமில்லை. தன்னுடைய தயக்கத்துக்கு இதை ஒரு காரணமாக்கப் பார்க்கிறான், அதற்க்கு பகவான் அறிவுரைகளைச் சொல்லி அவனை போரில் ஈடுபட வைக்கிறார். அப்படிப் பார்த்தால் சண்டை இல்லாத புராண காலமே இல்லை. பாரதப் போருக்கு முன்னரே இராமாயண காலத்திலும் போர் நடந்ததே, அப்போதே வர்ணக் கலப்பு எற்ப்பட்டதாகிவிடுமா?!!

  adharmābhibhavāt kṛṣṇa
  praduṣyanti kula-striyaḥ
  strīṣu duṣṭāsu vārṣṇeya
  jāyate varṇa-saṅkaraḥ
  [Bg. 1.40]

  "When irreligion is prominent in the family, O Kṛṣṇa, the women of the family become corrupt, and from the degradation of womanhood, O descendant of Vṛṣṇi, comes unwanted progeny."

  ReplyDelete
 41. \\இன்று பிராமண‌ சாதியில் பிறக்காத ஆன்மிக குருமார்கள் பலர் தோன்றியுள்ளனர்.\\ நீங்க சொன்ன லிஸ்டுல இன்னொருத்தரையும் சேர்த்திருப்பீங்க, நல்ல வேலையா ஒருத்தன் அந்தாள் ரூமுக்குள் கேமராவை வைத்தான் அதனால அவன் பேரை உங்களால் சேர்க்க முடியவில்லை. அதற்காக மற்றவர்களும் அதே ரகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனெனில், பாலியல் ரீதியாக ஒழுக்கத்தைக் காப்பது என்பதை வைத்து மட்டுமே ஒருத்தரை நல்ல ஆன்மீக வாதி என்று சொல்லிவிடமுடியாது, அப்படிப் பார்த்தால் சமூகத்தில் எண்ணற்றோர் இன்றைய சாமியார்களை விட ஒழுக்கமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் ஒன்று பாலியல் ரீதியான சுத்தம், ஆனால் ஒரு ஆன்மீக வாதிக்கு இன்னும் பல தகுதிகள் வேண்டும், நீங்கள் லிஸ்டு போட்டவர்களில் யாருக்குமே அந்தத் தகுதிகள் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

  ReplyDelete
 42. நல்லதோர் விவாதப் பதிவு,
  வெளிப்படையாக விவாதிக்கும் நோக்கோடு பொது இடத்தில் பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
 43. //சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டதால் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.//

  ஜெய தேவதாஸ்! இது பற்றி மேல் அதிகத் தகவல் தேவை.உங்கள் அலுவலகப் பாலிடிக்ஸாக இருந்தால் இங்கே பேச வேண்டாம். professional jealousy
  எல்லோருக்கும் பொதுவானது.

  வேறு எந்த அரசியல் பற்றிக் கூறுகிறீர்கள் என்று விவரிக்கவும்.

  ReplyDelete
 44. Jayadev Das said...
  ///\\வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.\\ வர்ணம் என்பது பெயரளவில் வழக்கொழிந்து போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் இல்லாமல் போகாது. பிராமணன், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்ற நான்கு குணமுள்ளவர்களை என்றென்றும் இருப்பார்கள், ஏனெனில் இந்தப் பிரிவுகளை நானே உருவாக்குகிறேன் என்று பகவானே சொல்கிறார். அவர் உருவாக்கியது எப்படி இல்லாமல் போகும்//

  சரி. உங்கள் புரிதல் உங்களுக்கு. என் புரிதல் எனக்கு.இப்படி வைத்துக் கொள்வோம்.யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. சென்னைப்பித்த‌ன் இந்தப் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டார் அலகாபாத்தில் நாவிதர் தொழிலை அந்த ஊர் பிராமணர் பார்க்கிறார் என்று.எனக்குத்தெரிந்து வங்கத்தில் பீஹாரி பிராமண‌ர்கள் பலர் கை ரிக்ஷா இழுக்கிறார்கள்.வடக்கே எப்போதுமே பிராமணர்கள் வயலில் விவசாய வேலைகள் செய்தே வந்து இருக்கின்றனர்.

  தொழில் முறையிலான, வகுப்புப் பிரிப்பு என்பது போய்விட்டது. அதனைத்தான் நான் வர்ண முறை இல்லை இப்போது என்கிறேன்.

  ஆனால் இரத்த சம்பந்தமான ஜாதி முறை இப்போது உள்ளது.இந்த சாதி முறை இருக்க வேண்டுமா, அழிய வேண்டுமா?

  இருக்க வேண்டும் என்றால் அதற்கான வரையரை என்ன?அழிய வேண்டுமானால் எப்படி அழிப்பது?

  இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.

  ReplyDelete
 45. \\வேறு எந்த அரசியல் பற்றிக் கூறுகிறீர்கள் என்று விவரிக்கவும்.\\ இது நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து நடை பெறுகிறது. என்னுடன் சில பிராமண மாணவர்கள் படித்தார்கள். படிப்பதில் அவர்களை விட நான் கொஞ்சம் சுட்டி. இது அவர்களுக்குப் பொறுக்காது. என்னை வெவ்வேறு விதத்தில் கிண்டல் கேலி செய்வார்கள், படிப்பு சம்பந்தமில்லாத மற்றவற்றை [என்னுடைய உடை, பேசும் விதம் போன்றவை] கேலி செய்து என்ன உளவியல் ரீதியாக பாதிக்குமாறு செய்வார்கள். அப்போதெல்லாம் நான் வெள்ளந்தியாகவே இருந்தேன். படித்த பின்னர், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேருவதற்கு, Reference -ஆக ஒரு பிராமண ஆசிரியரிடம் கொடுத்தேன். என்னிடம் அவர் நன்றாகப் பேசுவார், இருப்பவர்களிலேயே நீதான் புத்திசாலி என்பார். ஆனால், என்னைப் பற்றி அவர் Below average என்றும் மற்ற எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பற்றி எவ்வளவு இறக்கிப் எழுத வேண்டுமோ அவ்வளவும் செய்து அனுப்பிவிட்டார். நான் தேர்வு செய்யப் படவில்லை. இதை நான் பின்னாளில் அவருடைய செயல்பாடுகளை வைத்து கண்டுபிடித்தேன். இதே போல பல்வேறு கட்டங்களில் பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப் பட்டு வருகிறோம். அலுவலகத்தில் நடப்பதைப் பற்றி சொல்ல வேண்டாம் என்பதால் நான் இங்கே அது பற்றி எதுவும் சொல்லவில்லை.

  ReplyDelete
 46. \\யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. சென்னைப்பித்த‌ன் இந்தப் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டார் அலகாபாத்தில் நாவிதர் தொழிலை அந்த ஊர் பிராமணர் பார்க்கிறார் என்று.எனக்குத்தெரிந்து வங்கத்தில் பீஹாரி பிராமண‌ர்கள் பலர் கை ரிக்ஷா இழுக்கிறார்கள்.வடக்கே எப்போதுமே பிராமணர்கள் வயலில் விவசாய வேலைகள் செய்தே வந்து இருக்கின்றனர்.\\ கீதையில் வர்ணம் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பாருங்கள், அதில் பகவான் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் என்னென்ன தகுதிகள் என்று விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு யார் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்குள் இந்தத் தகுதிகள் ஒளிந்துகொண்டிருந்தால் அவர்கள் அந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள், அவ்வளவுதான். வர்ணம் மட்டுமே உண்மை, சாதி என்பதே இல்லை சாதி என்பது மனிதனாக உருவாக்கியது, செயற்கையானது. It has no place in Vedic tradition, it doesn't exist at all.

  ReplyDelete
 47. \\இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.\\ எல்லோரும்தான், ஆனால், இந்த முறையில் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்திருப்பவர்கள், மற்றெல்லோரையும் விட ஜாதி பிராமணர்கள்தான்.

  ReplyDelete
 48. ///அதனாலேயே வர்ணக் கலப்பு ஏற்ப்பட்டதாக அர்த்தமில்லை. தன்னுடைய தயக்கத்துக்கு இதை ஒரு காரணமாக்கப் பார்க்கிறான், அதற்க்கு பகவான் அறிவுரைகளைச் சொல்லி அவனை போரில் ஈடுபட வைக்கிறார். அப்படிப் பார்த்தால் சண்டை இல்லாத புராண காலமே இல்லை. பாரதப் போருக்கு முன்னரே இராமாயண காலத்திலும் போர் நடந்ததே, அப்போதே வர்ணக் கலப்பு எற்ப்பட்டதாகிவிடுமா?!!///

  இது வெறும் டெக்னிகல் கேள்வி. இதற்குப் பதில் சொன்னால் விவாததின் போக்கு திசை மாறிப்போகும் அபாயம் உள்ளது.

  மீண்டும் சொல்லிக்கொள்கிறேன் புராணகாலத்தில் சொன்ன வர்ணம் என்ன என்று யாராலும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது. அதனை இப்போது நடைமுறை படுத்த‌வும் முடியாது.

  இப்போது உள்ள இரத்த சம்பந்தமான சாதியைப் பற்றிப் பேசலாம். இப்போதுள்ள சாதிமுறையில் உள்ள குறை நிறைஎன்ன?

  இந்த முறை எப்படி வந்தது என்பதைவிட, யாரால் இப்போது பேணிப் பாதுகாகப்படுகிறது.இவைதான் நாம் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள்.

  ReplyDelete
 49. //நீங்க சொன்ன லிஸ்டுல இன்னொருத்தரையும் சேர்த்திருப்பீங்க, நல்ல வேலையா ஒருத்தன் அந்தாள் ரூமுக்குள் கேமராவை வைத்தான் அதனால அவன் பேரை உங்களால் சேர்க்க முடியவில்லை. அதற்காக மற்றவர்களும் அதே ரகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனெனில், பாலியல் ரீதியாக ஒழுக்கத்தைக் காப்பது என்பதை வைத்து மட்டுமே ஒருத்தரை நல்ல ஆன்மீக வாதி என்று சொல்லிவிடமுடியாது, அப்படிப் பார்த்தால் சமூகத்தில் எண்ணற்றோர் இன்றைய சாமியார்களை விட ஒழுக்கமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் ஒன்று பாலியல் ரீதியான சுத்தம், ஆனால் ஒரு ஆன்மீக வாதிக்கு இன்னும் பல தகுதிகள் வேண்டும், நீங்கள் லிஸ்டு போட்டவர்களில் யாருக்குமே அந்தத் தகுதிகள் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.//

  இதுவும் சம்வாதம் திரும்பி விதண்டாவதம் ஆகிவிடும் நிலையே.

  விஸ்வாமித்திரர் க்ஷத்திரியரில் இருந்து பிராமணராக உயரவு பெற்றார் என்றதற்குப் பதிலாக, இன்றைய பிராமண ஜாதியனரும் ஜாதி பார்க்காமல் பல குருமார்களினை ஏற்றுள்ளனர் என்று கூறினேன்.

  சன்னியாசிகளின் தகுதியைப்பற்றிப்பேசினால் இந்த சம்வாதத்தின் போக்கு திரும்பிவிடும்.

  மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?

  ReplyDelete
 50. //இருப்பவர்களிலேயே நீதான் புத்திசாலி என்பார். ஆனால், என்னைப் பற்றி அவர் Below average என்றும் மற்ற எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பற்றி எவ்வளவு இறக்கிப் எழுத வேண்டுமோ அவ்வளவும் செய்து அனுப்பிவிட்டார். நான் தேர்வு செய்யப் படவில்லை. இதை நான் பின்னாளில் அவருடைய செயல்பாடுகளை வைத்து கண்டுபிடித்தேன். இதே போல பல்வேறு கட்டங்களில் பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப் பட்டு வருகிறோம்.//

  உங்க‌ளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் வருத்ததிற்கு உரியதே.அந்த பிராமணன்/ பிராமணர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

  இதே போன்ற அனுபவங்கள் சுய சாதிக்காரர்களிடமிருந்தும் உங்களுக்கு ஏற்படலாம்."என் சாதிகாரனே எனக்கு துரோகம் செய்கிறான் சார்" என்று
  புலமபலை நான் நிறையக் கேட்டிருக்கிறேன்.

  பொதுவாக பிராமணன் சுய சாதிக்கு ஒன்றும் செய்வதில்லை என்பது அவர்களுக்குள்ளேயே இருக்கும் பாலிடிக்ஸ்.

  நீங்கள் சொல்லியுள்ளது இந்தப் பொது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்பதை யாராவது மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.

  சென்ற பதிவில் பின்னூடத்தில் இர‌ண்டு பேர்கள் பிராமணர்கள் தங்களுக்கு உதவி செததைக்கூறியுள்ளனர். அதில் ஒருவர் முஸ்லிம்.

  ReplyDelete
 51. //வர்ணம் மட்டுமே உண்மை, சாதி என்பதே இல்லை சாதி என்பது மனிதனாக உருவாக்கியது, செயற்கையானது. It has no place in Vedic tradition, it doesn't exist at அல்ல்.//

  மிகச் சரி. மனிதனால் உருவாக்கப்பட்ட சாதியால் எல்லோரும் சமூக ஒற்றுமை குலைந்து காணப் படுகிறோமே, இதை சரி செய்ய என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

  ReplyDelete
 52. \\மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?\\ ஜாதி என்பது சனாதன தர்மத்தின் படி அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா என்பதற்கு, அங்கீகரிக்கப் படவில்லை என்ற உறுதியான பதிலை என்னால் சொல்ல முடியும். அது இருக்க வேண்டுமா, ஒழிக்கப் பட வேண்டுமா என்றால், முதலில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும், அடுத்து அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று போய், அது சமூகத்தில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் உண்டுபண்ணும் என்றால் சாதிகள் இருந்து விட்டுப் போவதே நலன், இல்லை ஒழிந்தால் நல்ல மற்றம் வரும் என்றால் இல்லாத சாதிகள் ஒழியத்தான் வேண்டும்.

  ReplyDelete
 53. // Jayadev Das said...
  \\இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.\\ எல்லோரும்தான், ஆனால், இந்த முறையில் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்திருப்பவர்கள், மற்றெல்லோரையும் விட ஜாதி பிராமணர்கள்தான்.//

  ஒரு நிலைப் பாட்டை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

  இன்றைய சாதிமுறையைத் தாங்கிப்பிடிப்பது பிராமணன் மட்டும் இல்லை. எல்லோரும்தான்.

  இந்த ஜாதி முறையால் உண்டான நன்மை/தீமைக்கு பிராமணன் மட்டுமே இதுவரை பொறுப்பாக்கப் பட்டுள்ளான்.இப்போது தான் 'எல்லோரும்' என்ற வார்த்தை வருகிறது.

  பொருளாதாரப் பலன் பற்றித் தனியாகப் பேசலாம். அதற்குத் தங்களிடம் ஏதாவது ஆய்வுஅறிக்கையோ, ஆவணங்களோ இருக்கும் எனில் தெரிவியுங்கள்.

  இந்த விவாதத்தில் பொருளாதாரம் வருமா என்று மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 54. Jayadev Das said...
  \\மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?\\ ஜாதி என்பது சனாதன தர்மத்தின் படி அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா என்பதற்கு, அங்கீகரிக்கப் படவில்லை என்ற உறுதியான பதிலை என்னால் சொல்ல முடியும். அது இருக்க வேண்டுமா, ஒழிக்கப் பட வேண்டுமா என்றால், முதலில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும், அடுத்து அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று போய், அது சமூகத்தில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் உண்டுபண்ணும் என்றால் சாதிகள் இருந்து விட்டுப் போவதே நலன்,//

  நன்றி ஜெயதேவதாஸ் அவர்களே!


  after beating about the bush, we have come to specifics.

  இந்த விவாதத்தைப் பொதுவில் வைத்தவர் நண்பர் செங்கோவி அவர்கள் தான். அவர் எப்படி மேல் எடுத்துச்செல்கிறாரோ அதனை ஒட்டியோ வெட்டியோ விவாதிப்போம்.

  எனக்கு ஈடு கொடுத்து எதிர் நின்றதற்கு மீண்டும் நன்றி.

  மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 55. \\இதே போன்ற அனுபவங்கள் சுய சாதிக்காரர்களிடமிருந்தும் உங்களுக்கு ஏற்படலாம்."என் சாதிகாரனே எனக்கு துரோகம் செய்கிறான் சார்" என்று புலமபலை நான் நிறையக் கேட்டிருக்கிறேன்.\\ ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் யாராவது கெடுதல் செய்திருக்கலாம், நிச்சயம் அவர்கள் ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். என்னுடைய அனுபவத்திலும் சில பிராமணர்கள் Gem -ஆக பார்த்திருக்கிறேன். ஆனால், பார்க்கிற எல்லோருமே சொல்வது, தாங்களும் சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே.

  ReplyDelete
 56. இன்றைய சமூகத்தில் ஒருவன் திருமண வயது வரும் வரை சாதி பற்றி யோசிக்காமலே கூட வாழ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட சாதிமறுப்பு திருமணங்கள் என்பது இன்றும் கானல் நீர்தான். ஏற்கனவே பெண்கள் முன்னேற்றத்தால் வாலிபர்களுக்குத் திருமண வாய்ப்பு கடினமாகும் நிலையில் சாதியை வேறு பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு செயற்கையான மனத்தடையை அது ஏற்படுத்துகிறது. இந்த வகையில் பார்க்கும்போது சாதி என்பது ஒரு தேவையில்லாத அமைப்பாகத் தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஒரே விதமான பழக்க வழக்கங்கள் (உணவு, கடவுள் வழிபாடு) உள்ள சாதிகள் திருமண உறவில் இணைந்து இருக்கும் சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்யலாம். உதாரணம்: ஐயர், அய்யங்கார்,சில செட்டியார் பிரிவுகள், சில முதலியார் பிரிவுகள் ஆகிய சாதிகள் சில சடங்குகளைத் தவிர ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.

  காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காதலிக்கும் எவனும் சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டு காதலிக்கவில்லை. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அப்பா சாதியில்தான் சேரும்.

  இந்தியாவில் சாதி நீடித்திருப்பதற்கு குடும்ப அமைப்புதான் காரணம். மேற்கத்திய நாடுகளில் பதினைந்து வயதில் பெரும்பாலும் பெற்றோரைப் பிரிந்து சொந்தமாக உழைத்துப் படிப்பு, வேலை என்று வாழ்க்கையை ஓட்டுவதால் அங்கு சாதி போன்ற அமைப்புகளுக்குப் பெரிய
  முக்கியத்துவம் இல்லை. இந்தியாவிலோ நாற்பது வயது வரை கூட அப்பா, அம்மா பேச்சைக் கேட்கும் மகன்கள்/மகள்கள் நிறைய உண்டு. குடும்ப பழக்க வழக்கங்கள்தான் சாதியின் ஆயுளை நீட்டித்திருக்கிறது.

  ஆகவே சாதியை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் குடும்ப அமைப்பை ஒழிக்க வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

  குடும்ப அமைப்பை ஒழித்து சாதியை ஒழிப்பது சரியா என்பதைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

  ReplyDelete
 57. @Jagannath

  அருமையாகச் சொன்னீர்கள். சாதி மாறி திருமணம் செய்வது ஒரு பெரிய விஷயமே இல்லை, அவர்களுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அவளுக்குத் திருமணம் செய்யும்போது தான் பிரச்சினை. [இதை நான் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். ]

  //குடும்ப அமைப்பை ஒழித்து சாதியை ஒழிப்பது சரியா// மிருகங்களுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசமே இல்லாமப் போயிடும்.

  ReplyDelete
 58. /
  kmr.krishnan said...

  இந்த விவாதத்தில் பொருளாதாரம் வருமா என்று மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.//

  பொருளாதாரம் பற்றி பின்வரும் பகுதிகளில் பேசியுள்ளோம். தாங்களும் அப்போது அதுபற்றி விவாதிக்கலாம். இன்றைய பகுதி வர்ணம்-வர்ணக்கலப்பு-ஜாதிக்கும் வர்ணத்திற்குமான வித்தியாசத்தைப் பற்றி மட்டும் பேசுகிறது..

  தொடர்ந்து ஆக்கப்பூர்வமாய் விவாதிக்கும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 59. //என்னுடைய அனுபவத்திலும் சில பிராமணர்கள் Gem -ஆக பார்த்திருக்கிறேன். ஆனால், பார்க்கிற எல்லோருமே சொல்வது, தாங்களும் சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே.///

  சரி'ஜெம்' மை எடுத்துக் கொள்ளுங்கள்.குப்பைகளை ஒதுக்குங்கள்.

  'பார்க்கிற எல்லோருமே சொல்வது' என்பதில் vague generalaisation
  உள்ளது.

  நான் வேலை செய்த நிறுவனம் பற்றி ஒரு சமயத்தில் அதிக விமர்சனம் இருந்தது. சரி என்னதான் உண்மையான புகார் என்று கண்டுபிடிக்க ஒரு ஆய்வு செய்தோம்.இரண்டே கேள்விதான்.
  1.எங்கள் நிறுவனம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
  2.உங்களுக்கு ஏதாவது சொந்த முறையில் நிறுவனத்தின் மீது புகார் உள்ளதா?

  இப்படி திட்டவட்டமாகக் கேட்டபோது ஆச்சரியப்படும்படி பலரும் பெரிய அளவில் புகார் கூறவில்லை.

  உங்களுடைய 'எல்லோருமே' என்பது 200 பேர் இருக்கலாம். கேட்டோம் என்று சொன்னால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பார்கள்.

  குழு மன நிலையில் பலவிதமான மாச்சரியங்கள் மனதில் பதிந்துவிடும்.
  சமூகத்தின் எல்லா பிரச்சனகளுக்கும் பிராமணந்தான் காரணம் என்று 18ம் நூற்றான்டில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது.

  'நீ கலக்காட்டா, உன் அப்பா கலக்கிருப்பார்' என்ற கதைதான்.

  சிங்கம் ஒரு நீர் நிலைக்கு வந்தது. அங்கே ஏற்கனவே ஒரு ஆடு நீர் குடிக்க வந்திருந்தது.

  சிங்கம் ஆட்டை அடிக்க விரும்பியது. ஆனால் சட்டப்படி செய்ய வேண்டுமே.
  அதனால்,"ஏண்டா தண்ணீரைக் கலக்கினே?"என்று கேட்டது.
  "நான் கலக்கலயே ராஜாவே" என்றது ஆடு.
  "நீகலக் காட்டா, உங்க அப்பா கலக்கியிருக்கலாம்"என்று சொல்லி ஆட்டை அடித்தது.

  இது போன்ற prejudices பெரும்பாலும் யூகத்தின் அடிப்படியலேயே வருகின்றன.

  பிராமணரால் அலட்சியப் படுத்தப்பட்ட பலர் அதையே தங்களுக்கான challenge
  ஆக எடுத்துக்கொண்டு எதை அபிராமணனால் சாதிக்க முடியாது என்று
  சொன்னார்களோ அதையே சாதித்துக் காட்டினார்கள்.

  அதில் முதல் ஆள் விஸ்வாமித்ரர் என்றால் அவர் வழியில் அம்பேத்கர்.ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின்
  தனி ஸ்பெஷாலிடி ஆக இருந்த கால கட்டத்தில் மூன்றையுமே கசடறக் கற்றார்.தன்னுடைய திறமையால் சாதித்தார். தன்னம்பிக்கையால் சாதித்தார்.

  ReplyDelete
 60. \\உங்களுடைய 'எல்லோருமே' என்பது 200 பேர் இருக்கலாம். கேட்டோம் என்று சொன்னால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பார்கள்.\\ நான் சொன்னவற்றிற்கு பெயர் முகவரி, தேதியோடு யார், யாருக்கு என்னென்ன செய்தார்கள் என்ற விவரங்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு வரை 98% அரசுப் பணிகள் எப்படி 2% மக்கள் தொகையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது என்பதற்கு நீங்கள் அறிவியல் பூர்வமாக யோசியுங்களேன். இங்கே நான் சொன்ன விஷயங்களை நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை, அனுபவப் பூர்வமாகச் சொல்லியுள்ளேன். மேலும், இந்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் ரகசியம் ஒன்றுமில்லை.

  ReplyDelete
 61. \\அம்பேத்கர்.ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின்
  தனி ஸ்பெஷாலிடி ஆக இருந்த கால கட்டத்தில் மூன்றையுமே கசடறக் கற்றார்.தன்னுடைய திறமையால் சாதித்தார். தன்னம்பிக்கையால் சாதித்தார்.\\ அதெப்படி சார் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெஷாலிடி ஆச்சு? மற்றவர்கள் முட்டாள்களா?

  ReplyDelete
 62. அம்பேத்காராகவும் அப்துல் கலாமாகவும், ஆக எல்லோராலும் முடியாது சார்.

  ReplyDelete
 63. //குறைந்தபட்சம் ஒரே விதமான பழக்க வழக்கங்கள் (உணவு, கடவுள் வழிபாடு) உள்ள சாதிகள் திருமண உறவில் இணைந்து இருக்கும் சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்யலாம். உதாரணம்: ஐயர், அய்யங்கார்,சில செட்டியார் பிரிவுகள், சில முதலியார் பிரிவுகள் ஆகிய சாதிகள் சில சடங்குகளைத் தவிர ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.//

  மிக்க நன்றி ஜெகன்னாத்.இது ஒரு 'கான்க்ரிட் ஒபீனியன்'

  இந்தப் பரிசோதனையில் ஏற்கனவே பிராமண‌ சமுதாயம் இறங்கி விட்டது.
  'இந்து' போன்ற நாள் இதழ்களில் திருமண மணமகன்,மணமகள் விளம்பரங்களைப் பாருங்கள்.subsect no bar, any brahmin, caste no bar,
  any hindu, any vegetarian போன்ற சொற்கள் இடம் பிடிக்க ஆரம்பித்து பல‌ ஆண்டுகள் ஆகிவிட்டன.

  ReplyDelete
 64. சில வருடங்களுக்கு முன்பு வரை 98% அரசுப் பணிகள் எப்படி 2% மக்கள் தொகையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது என்பதற்கு நீங்கள் அறிவியல் பூர்வமாக யோசியுங்களேன். //

  இப்படி யோசிப்போம். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் குடும்பத் தொழிலை செய்து வந்த காலத்தில் படிப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் நெடுங்காலமாகக் கவனம் செலுத்தி வந்த பிராமண சாதியினர் அதிக பதவிகளில் இருந்ததில் ஏதாவது அதிசயம் இருக்கிறதா? இந்நிலையை மாற்ற வேண்டுமென்று அரசாங்கம் இட ஒதுக்கீடு போன்ற விடயங்களைக் கொண்டு வந்தது நல்ல விடயம்தான். ஆனால் இதைக் கொண்டு வந்தபோது பிராமண சாதியினருக்கு ஏன் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை? உதாரணமாக விவசாயம் செய்து கொண்டிருந்த சாதியினர் படிக்க வந்தார்கள். ஆனால் பிராமணர்களுக்கு அதற்கு ஈடாக விவசாயம் சொல்லித் தரப்பட்டதா? இட ஒதுக்கீட்டை சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான கருவியாக இப்படிப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பிராமணர்களுக்கு மாற்று வழி எதையும் காட்டாமல் ஒரு பழி வாங்கும் நடவடிக்கை போலத்தானே அது செயல்படுத்தப்பட்டது. இது மேலும் பிராமண சாதியினரும், இட ஒதுக்கீடு இல்லாத மற்ற சாதியினரும் இட ஒதுக்கீடு உள்ளவன் மேல் மேலும் கசப்புணர்வை வளர்த்துக் கொள்ளக் காரணம் ஆனது.

  ReplyDelete