Saturday, October 29, 2011

மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள் - பதிவர் நிரூபனின் விமர்சனம்

போட்டி, பொறாமை நிறைந்த பதிவுலகில் என்னைஆச்சரியப்பட வைக்கும் வெகுசிலரில் நிரூபனும் ஒருவர். மன்மதன் லீலைகள் தொடர் 50 பகுதிகளைத் தாண்டியதுமே ஒரு விமர்சனப் பதிவு தொடர் முடிவில் போடுவதாகச் சொன்னார். நிரூபனின் தமிழ் மேல் நமக்குத் தனிப் பிரியம் உண்டு. எனவே நானும் எல்லாப் பாகங்களையும் எழுதி முடித்தவுடன், அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையை ப்ரூஃப் பார்க்க எனக்கு அனுப்பி வைத்தார்.

பிறகு யார் வலைப்பூவில் இதைப் பதிவேற்றுவது என்று ஒரு சிறிய அன்புச்சண்டை நடந்தது. கடைசியில் தம்பி எனக்கே விட்டுக்கொடுத்தார். விமர்சனத்திற்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் நன்றி நிரூ.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள்

யந்திர வேகமான இவ் உலகில் மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனச் சிலர் சொல்லி நிற்க, வீழும் நிலை வரினும் எம் தமிழை எத் துறையினூடாகவும் வாழ வைப்போம்! எனத் திட சங்கற்பம் பூண்டவர்களாய் தமிழ் விரும்பிகள் இன்று தரணியெங்கும் வீறு நடை போடுகின்றார்கள். தமிழ்த் தாய் அகிலத்தின் அனைத்துத் துறையினூடாகவும் ஏறி வலம் வந்து, தடைகளையும், தடங்கல்களையும் தாண்டித் தாவிப் பிடிக்க முடியாத உயரத்தில் வீற்றிருக்கிறாள். இணையத்தில் இனிமைத் தமிழில் எம் இதயத்தில் கொலுவிருக்கும் நிகழ்வுகளை எழுதிப் பதிவேற்றி அகிலமும் முழுதும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினைச் செய்து கொண்டிருப்பவை தான் வலைப் பதிவுகள்.

எம் மனதின் எண்ணங்களை, எம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கற்பனைத் தமிழ் இலக்கிய ஊற்றுக்களை, நாம் ரசிக்கும் விடயங்களை, எமைக் கடந்து போகும் அன்றாட நிகழ்வுகளை ரசனை கூட்டி, அழகு சேர்த்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் அரிய பணியினை கூகுள் எனும் மிகப் பெரும் வலை நிறுவனம் இலவசமாய் செய்து தருவதும், எம் தமிழில் எழுதும் வசதிகளை அவ் வலைப் பதிவு பெற்று நிற்பதும் நாம் அனைவரும் எம் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் ஆவலினைத் தூண்டுவதற்கான அரிய செயல் அல்லவா? என்று சில வேளை ஐயம் கொண்டுள்ளேன். வெகுஜன ஊடகமாக எம் கையருகே இருந்து விரும்பிய நேரம் விரும்பிய தகவலை உலகின் எப்பாகத்திற்கும் கணினி ஊடே கொண்டு செல்வதற்கான கருவியாக இருப்பதுவும் இந்த வலைப் பதிவு அல்லவா?

"பரபரப்புத் தலைப்புக்களும், சுண்டி இழுக்கும் சூப்பரான மேட்டர்களும் விலை போகும் இங்கே" எனும் எழுதாத வலிந்து திணிக்கப்பட்ட யதார்த்தம் வலைப் பதிவில் இருந்தாலும், இலக்கியப் படைப்புக்களும், இனிமையான விடயங்களும் பலர் மனதையும் கவரும் என்பது உண்மை தானே?" 

இத்தகைய வலைப் பதிவில் ஒவ்வோர் நாளும் வெவ்வேறு விடயங்களை வெவ்வேறு உள்ளடக்கத்தில் எழுதும் போது, வாசகர் வருகை அதிகரிக்குமாம். ஆனால் அந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டாலும் ஆழமாய் பலர் மனதில் பதியாது என்பது நிதர்சனம். இத்தகைய சூழ் நிலையில் ஒரு நெடுந் தொடரை தினந் தோறும் அதிகளவான வாசகர் பரப்பெல்லையினை நோக்கி நகர்த்துவது என்பது கடினமான விடயம். 

நெடுந் தொடரைப் பல பாகங்கள் நோக்கிக் கொண்டு செல்லும் போது, ஒரே தலைப்பில் கொண்டு சென்றால் வலைப் பதிவிற்கு வரும் வழமையான கூட்டம் குறைந்து விடுமென்பது பதிவர்களின் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு. இவற்றையெல்லாம் எதிர்பார்க்காது, இலக்கிய வெறியோடு யதார்த்தம் கூட்டி, வாசகர்களுக்குச் சலிப்பின்றி, அத் தொடரைத் தன்னை நாடி வரும் - தன் பதிவினைப் படிக்க வரும் வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் சுவைபட எழுதி வாசக உள்ளங்களின் அமோக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் அப் படைப்பானது அமைகின்ற போது; அது தான் அத் தொடரின் வெற்றி என்பதற்கான மகுடமாகி ஒரு பதிவரின் ஆத்ம திருப்தி எனும் மன நிறைவினைப் பூர்த்தி செய்கிறது.

அதிகளவான வாசகர்களை உள் இழுத்து,  இலக்கியச் சுவையோடும், இன்ப மூட்டும் கிளு கிளு குறிப்புக்களோடும், மனதில் எழும் எண்ண அலைகளின் வேறுபாட்டிற்கமைவாக வெவ்வேறு தள வடிவிலான கதை நகர்வில் மன்மதன் லீலைகள் எனும் பெயர் கொண்ட நெடுந் தொடரினை வெற்றிகரமாகப் படைத்து இணையமூடே உலா வரும் இலக்கிய விரும்பிகளின் இலக்கியத் தாகத்திற்கு இணையில்லா விருந்தளித்திருக்கிறார் செங்கோவி அவர்கள். 

தன் கல்லூரி வாழ்வில் தான் கண்டு அனுபவித்த விடயங்களின் கோர்வையாகவும், தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களின் லீலைகள் - அட்டகாசங்கள் - அலப்பறைகள் - ரகளைகள் - கலகலப்பு நிறைந்த காலேஜ் வாழ்வின் கண் முன்னே நிற்கும் காட்சிகள், சுவையான எப்பொழு நினைத்தாலும் மனதினுள் ஒரு வித இனம் புரியா உணர்ச்சியினை வர வைக்கும் ராக்கிங் ரகளைகள்,காதல் கலாட்டாக்கள் என அனைத்து வகையான அம்சங்களையும் உள்ளடக்கிய முதற் பாதித் தொகுப்பாகவும், பின்னர் ஒரு 

மனிதன் தன் பாலியல் எனும் உணர்வின் மூலமாகவும், அடங்காத காமத்தின் வெளிப்பாடாகவும் எப்படியெல்லாம் சீர் கெட்டுத் திசை மாறி நிற்கிறான் என்பதனைச் சமூகத்திற்குச் செய்தியாகப் பிற் பாதியிலும் சொல்லி நிற்கும் அற்புதமான ஒரு தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.

சுருங்க கூறின், காலேஜ் வாழ்வில் பல பெண்களை அனுபவிக்க வேண்டும் எனத் துடிக்கும் ஒரு இளைஞன் (மதன்) காதல் லீலை செய்து, பின்னர் வசமாக ஒரு பெண்ணின் வலையில் மாட்டி (ஜமீலா) அவள் அன்பில் நனைந்து, மனந் திருந்தி; தான் தேடிப் போய் விருந்துண்ணும் பட்சிகளை விடத் தன்னைத் தேடி வரும் அன்னமே வெள்ளை மனம் உள்ளது எனப் புத்தி தெளிந்து அவளோடு வாழ வேண்டும் எனும் ஆவல் கொண்டவனாய்த் தம் திருமணத்திற்கு வேலியாகக நின்று வேரறுத்த மதத்தினை உதறித் தள்ளிக் காதற் திருமணம் செய்து இல்லற பந்தத்தில் இணைந்து கொள்கிறான்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் புலம் பெயர்ந்து சென்று திசை மாறிப் பல பெண்களிடம் தன் ஆசையினால் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் இக் கதையின் நாயகன் மதன் நிற்கும் போது, இனி மதன் திருந்துவானா? இல்லை தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவன் தண்டனை பெற்று வருந்துவானா? எனும் ஏக்க உணர்விற்கு விடை தரும் தொடர் தான் இந்த மன்மத லீலைகள்.

மதம் எனும் தடைக்கலைத் தூரத் தள்ளி வைத்து தம் வாழ்வே பெரிதென எண்ணித் திருமணம் செய்யும் காதலர்கள் ஊடாகப் பிரிவினையற்ற சமுதாயம் வேண்டும் எனும் உண்மையினையும், தீராத விளையாட்டுப் பிள்ளையாகப் பெண்களை நோக்கி அலையும் ஒரு திருமணமான இளைஞன் இறுதியில் அனைத்தையும் இழந்து தான் போடும் போலி வேசம் எல்லாம் கலைந்த பின்னர் தவிப்போடு நிற்பதனூடாக; "தான் தேடிப் போவோரை விடத் தன்னை நேசிப்போரில் தான் பாசம் அதிகம்" எனும் உண்மையினை அழகுறச் சொல்லி நிற்கிறது இந்த மன்மத லீலைகள். 

காதற் திருமணத்தின் ஒரு படி நிலையாக பெற்றோரைப் பிரிந்து நிற்கையில் தனக்குத் தன் குழந்தையும், கணவனும் உற்ற துணையாக இருப்பார்கள் என எண்ணிச் சமூகத்தில் பெணொருத்தி வாழும் போது, கணவனின் லீலைகளால் குழந்தையோடு கைவிடப்பட்டவளாய், தன் பெற்றோர், மாமனார் - மாமியாரால் வார்த்தைகளால் சூடு வாங்கி நிர்க்கதி நிலையில் நிற்கையிலும் நம்பிக்கையினைத் தவற விடாத ஒரு ஜீவனாக இங்கே ஜமீலா எனும் பெண் பாத்திரத்தினைப் படைத்து இத் தொடரின் மூலம் சமூகத்தில் கணவனால் கை விடப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையுடன் எப்படி வாழலாம் எனும் உள உரத்தினைப் வெள்ளிடை மலையாகச் சொல்லி நிற்கிறார் கதாசிரியர்.

கதாபாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொன்றும் இத் தொடரின் உண்மைச் சம்பவத்திற்குச் சிறிதும் பங்கம் ஏற்படா வண்ணம் படைக்கப்பட்டிருப்பதும் தொடருக்கு கிடைத்திருக்கும் பெரு வெற்றி எனலாம். யதார்த்தம் கலந்த உரையாடல்கள், உள்ளதை உள்ள படி சொல்லும் அப்பழுக்கற்ற வசன அமைப்புக்கள், வட்டார மொழிச் சொற்கள், இயற்கை அழகினை மனக் கண் முன்னே கொண்டு வரும் படைப்பாளியின் கமெராக் கைவண்ணம் முதலியவை இத் தொடருக்கு அழகு சேர்த்திருக்கிறது. 

இவை அனைத்திற்கும் அப்பால் இலக்கியச் சுவை குன்றா வண்ணம் இத் தொடரை நகர்த்த வேண்டும் எனும் படைப்பாளியின் ஆவலுக்குத் தீனி போடும் இலக்கிய வசன மேற்கோள் குறிப்புக்கள்; ஆங்காங்கோ வாசம் வீசும்   அந்தரங்கச் சுவையோடு வெளி நாட்டு மதுக் கோப்பைகளின் வெளிப் புறத்தில் பட்டுத் தெறிக்கும் வெள்ளைக்கார மாதுக்களின் அங்க வர்ணனைகள், தொழில் நுட்பத்தின் உதவியோடு திசை மாறும் மதனின் லீலைகளை அம்பலப்படுத்தும் டெக்னாலஜி விசயங்கள் எனப் பல சுவையான அம்சங்களினூடாக இத் தொடருக்குச் சுவை கூட்டியிருக்கிறார் செங்கோவி அவர்கள். 

தமிழகம், நோர்வே என இரு வேறுபட்ட தளங்களைப் படைப்பின் மையப் பகுதியாகக் கொண்டு நகரும் இத் தொடர், ஆங்காங்கே அழகு கொஞ்சும் அன்னைத் தமிழ்க் கவிதை மூலம் அசத்தி நிற்கிறது. அதற்கு எடுத்துக் காட்டாகப் பின்வரும் கவிதையினைக் குறிப்பிடலாம்.

செவ்வான நிறத்தில்
மனம் மயங்குகிறது.
குளத்தில் இருமீன்களும்
துள்ளி அலைகின்றன.
இருபுறம் கனிந்திருக்கும்
ஆப்பிள் மீது வெண்பனி வேறு.
எங்கே என்கிறாய் – உன்
முகத்தில் தானடி
இவையனைத்தும்!

ஒவ்வோர் அங்கத்திலும் சிறப்பான கவிதைகளைக் கொடுத்திருக்கும் கதாசிரியர், பதின் மூன்றாம் பாகத்தின் பின்னர் இந்த நவீன யுகத்தில் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுப்பதிலும் பஞ்சம் நிலவுகிறதே எனும் ஆதங்கத்தினை வர வைத்திருக்கிறார். 

இலக்கியங்கள் மீதான தன் காதலினையும், வாசகர்களிற்கு சலிப்பின்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று இலக்கியக் குறிப்புக்களை வழங்க வேண்டும் என ஆவல் கொண்டவராய் ஆங்காங்கே சங்க இலக்கியங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில வரிகளை எடுத்து மேற்கோளாக காட்டியிருப்பதும் இத் தொடர் மூலம் பரந்து பட்ட விடயப் பரப்பெல்லையினை அலசும் பக்குவத்தினையும், தேடல் மூலம் தீராத தமிழ்த் தாகத்தைத் தீர்த்துத் தமிழ்ச் சுவையினைப் பருகலாம் எனும் உண்மையினையும் உணர்த்தி நிற்கிறார் செங்கோவி அவர்கள். பின் வரும் வரிகள் இதற்குச் சான்று பகர்கின்றது.

"அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, ஆனால் அதன் அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது. அகத்தே அன்பில்லா மாந்தருடன் இணைதல் பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இனி இந்த இழிசெயலைச் செய்வதில்லை’ என்ற முடிவுக்கு வந்தான். 

இத் தொடரின் ஊடாக பல்கலைக் கழக வாழ்வில் எம் நெஞ்சில் பசு மரத்தாணியாகப் பதியமிட்டுள்ள நினைவுகள் மீட்டப்பட்டு எம் மனங்கள் யாவும் காலேஜ் வாசலை நோக்கி மீண்டும் சிறகடித்துப் பறந்து செல்லும் என்பது ஒரு வாசகனாக இது வரை காலமும் இத் தொடரோடு பயணித்த எனது எண்ணத்தின் வெளிப்பாடாகும்.

ஒரு மனிதன் தான் எப்படி வாழ வேண்டும் எனும் நினைவினைச் சுமக்க விரும்புகிறானோ அவனுக்கு இத்தகைய வழிகளை நீ நாடக் கூடாது எனும் அறிவுரையிச் சொல்லி நிற்கும் இத் தொடரானது கூடவே பெற்றோருக்குத் தம் பெண் பிள்ளைகள் திசை மாறிச் செல்ல விடாது கண்ணியதோடு வளர்க்க வேண்டும் எனும் பொறுப்பு மிக்க உணர்வினை இக் காலத்தில் தட்டியெழுப்பும் ஒரு அலாரமாகவும், திசை மாறிச் சென்றால் வாழ்க்கையில் நாம் எத்தகைய நிலையினை அடைந்து கொள்வோம் எனும் அனுபவ வெளிப்பாட்டியினையும் தன்னகத்தே கொண்டு அழகுற மிளிர்ந்து நிற்கிறது இந்த மன்மத லீலைகள்.

ஒரு வாசகனாக இப் படைப்பினை நீங்கள் அணுகினால் உங்கள் உள்ளத்தைத் தித்திக்க வைக்கும் ஒரு தீந் தமிழ் சுவை கலந்த சிறப்பான தொடராக இம் மன்மத லீலைகள் அமைந்திருக்கும்!

ஒரு விமர்சகனாக விரல் கொண்டு வருடினால் உங்கள் உள்ளத்தில் பல தேடல்களை ஏற்படுத்தி "அடடா இத்தனை வியத்தகு விடயப் பரப்பெல்லைகள் நிறைந்த தொடரா? இது!" என உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இத் தொடர்!

நேசமுடன்,
செல்வராஜா நிரூபன்.
நட்டாங்கண்டல்,
வன்னி மாவட்டம்,
இலங்கை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

  1. இத ரெண்டு பேர் வலைபூலயும் போட்டு இருக்கலாமே? அப்புடி போட கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா?

    ReplyDelete
  2. //மொக்கராசு மாமா said...
    இத ரெண்டு பேர் வலைபூலயும் போட்டு இருக்கலாமே? அப்புடி போட கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா?//

    இங்க ஓட்டு/கமெண்ட் போடற கூட்டம் தான் அங்கயும் போடுது..அவங்க பாவம் இல்லியா..

    அப்புறம் அந்த சட்டம் பத்தி பன்னியார் தான் சொல்லணும்..

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம், என்னா ஒன்னு, ரொம்ப கஷ்டமான தமிழ்ல இருக்கு.. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சாதான் வெளங்கும் போல இருக்கு,,, எனிவே ரெண்டு அண்ணன்மாருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ///செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    இத ரெண்டு பேர் வலைபூலயும் போட்டு இருக்கலாமே? அப்புடி போட கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா?//

    இங்க ஓட்டு/கமெண்ட் போடற கூட்டம் தான் அங்கயும் போடுது..அவங்க பாவம் இல்லியா..

    அப்புறம் அந்த சட்டம் பத்தி பன்னியார் தான் சொல்லணும்..////

    ஆமா ஆமா அவரு அதையும் எங்கயாவது படிச்சி இருப்பாரு,, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து சொல்வாரு!!!

    ReplyDelete
  5. //மொக்கராசு மாமா said...
    நல்ல விமர்சனம், என்னா ஒன்னு, ரொம்ப கஷ்டமான தமிழ்ல இருக்கு.. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சாதான் வெளங்கும் போல இருக்கு,,, எனிவே ரெண்டு அண்ணன்மாருக்கும் வாழ்த்துக்கள்...//

    என்னடா..ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்..ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிச்சிருப்பீங்க போல..நிரூகிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அந்த தமிழ்நடை தான்யா.

    ReplyDelete
  6. மொக்கை, பன்னியார் சவால் கதை போட்டிருக்காரு..அவர் கடைல தான் இருக்கோம்..அங்க வாங்க..

    ReplyDelete
  7. //செங்கோவி said...

    மொக்கை, பன்னியார் சவால் கதை போட்டிருக்காரு..அவர் கடைல தான் இருக்கோம்..அங்க வாங்க..///

    தேங்க்ஸ் போர் தி இன்போர்மேஷன்,, தோ வந்துட்டேன்...

    ReplyDelete
  8. நிருவின் விமர்சனம் என்னை போன்ற இத்தொடரின் வாசகர்களின் மனதை வெளிப்படுத்தி உள்ளது. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  9. நிரூவின் விமர்சனத்தைப் படிக்கும் போது, “ மன்மத லீலைகளை” மறுபடியும் படிக்கத் தோணுது முருகா! விமர்சனம் பண்ணிய நிரூவுக்கும், கதாசிரியர் மிஸ்டர்.கோபக்கரனுக்கும் வாழ்த்துக்கள் முருகா!

    ReplyDelete
  10. நேசமுடன்,
    செல்வராஜா நிரூபன்.
    நட்டாங்கண்டல்,
    வன்னி மாவட்டம்,
    இலங்கை.///////

    மச்சி நிரூ! இது உன்னுடைய புது விலாசமா? பழைய விலாசமா? ஹி ஹி ஹி ஹி அந்த ஏரியாவுல நீ இப்ப இல்லையாமே!

    அதோட வன்னி என்று ஒரு மாநிலம்தான் இருக்கு! மாவட்டம் இல்லையே!

    நிரூ, ஐ வாண்ட் விளக்கம்!

    ReplyDelete
  11. உண்மையில் அடுத்த பாகம் எப்போ வரும் என்று எல்லாரையும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்க வைத்த தொடர்........ வாழ்த்துக்கள் செங்கோவி....!

    ReplyDelete
  12. தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!

    ReplyDelete
  13. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!///

    அது மட்டுமில்ல சிறுகதை போட்டிக்கு சிறுகதை எழுதுவதும் ஒரு பெரிய சாதனைதான் அண்ணே..

    ReplyDelete
  14. ///// மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!///

    அது மட்டுமில்ல சிறுகதை போட்டிக்கு சிறுகதை எழுதுவதும் ஒரு பெரிய சாதனைதான் அண்ணே..///////

    இப்ப ஏன் இந்த வெளம்பரம்....?

    ReplyDelete
  15. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///// மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!///

    அது மட்டுமில்ல சிறுகதை போட்டிக்கு சிறுகதை எழுதுவதும் ஒரு பெரிய சாதனைதான் அண்ணே..///////

    இப்ப ஏன் இந்த வெளம்பரம்....?////

    ஹீ ஹீ.. அப்புறமா பரிசு கெடச்சாப்புறம் அதுல பங்கு கேட்கதான்... 20% போதும்ண்ணே

    ReplyDelete
  16. ////// மொக்கராசு மாமா said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///// மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!///

    அது மட்டுமில்ல சிறுகதை போட்டிக்கு சிறுகதை எழுதுவதும் ஒரு பெரிய சாதனைதான் அண்ணே..///////

    இப்ப ஏன் இந்த வெளம்பரம்....?////

    ஹீ ஹீ.. அப்புறமா பரிசு கெடச்சாப்புறம் அதுல பங்கு கேட்கதான்... 20% போதும்ண்ணே////////

    அதோட விடமாட்டேன், வாரம் 4 கதை எழுதி படிக்க சொல்லுவேன்.... எப்படி வசதி?

    ReplyDelete
  17. ////பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// மொக்கராசு மாமா said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///// மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடர் எழுதுவது என்பது ஒரு கமிட்மெண்ட், வாராவாரம் சீரான இடைவெளியில் எழுதியே ஆகவேண்டும், 60 பாகங்களுக்கும் மேல் தொய்வில்லாமல் கொண்டு சென்றது ஒரு பெரிய சாதனைதான்...!///

    அது மட்டுமில்ல சிறுகதை போட்டிக்கு சிறுகதை எழுதுவதும் ஒரு பெரிய சாதனைதான் அண்ணே..///////

    இப்ப ஏன் இந்த வெளம்பரம்....?////

    ஹீ ஹீ.. அப்புறமா பரிசு கெடச்சாப்புறம் அதுல பங்கு கேட்கதான்... 20% போதும்ண்ணே////////

    அதோட விடமாட்டேன், வாரம் 4 கதை எழுதி படிக்க சொல்லுவேன்.... எப்படி வசதி?//

    நீங்க போடுங்க அண்ணே... போன ரெண்டு மூணு வாரமா என்னென்னமோ கருமத்த எல்லாம் படிச்சி தொலைச்சோம்(கமெண்ட்ஸா), ஒங்க பதிவு வாரத்துக்கு நாலு படிக்க மாட்டோமா? (20% கன்போர்ம்ட்)

    ReplyDelete
  18. ////// மொக்கராசு மாமா said...
    நீங்க போடுங்க அண்ணே... போன ரெண்டு மூணு வாரமா என்னென்னமோ கருமத்த எல்லாம் படிச்சி தொலைச்சோம்(கமெண்ட்ஸா), ஒங்க பதிவு வாரத்துக்கு நாலு படிக்க மாட்டோமா? (20% கன்போர்ம்ட்)///////

    செண்டிமெண்ட்டா ஆஃப் பண்றாய்ங்களே.....? ஒருவேள பங்கு கொடுக்க வேண்டி வந்துடுமோ?

    ReplyDelete
  19. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////// மொக்கராசு மாமா said...
    நீங்க போடுங்க அண்ணே... போன ரெண்டு மூணு வாரமா என்னென்னமோ கருமத்த எல்லாம் படிச்சி தொலைச்சோம்(கமெண்ட்ஸா), ஒங்க பதிவு வாரத்துக்கு நாலு படிக்க மாட்டோமா? (20% கன்போர்ம்ட்)///////

    செண்டிமெண்ட்டா ஆஃப் பண்றாய்ங்களே.....? ஒருவேள பங்கு கொடுக்க வேண்டி வந்துடுமோ?////

    ஹீ ஹீ...... :-)
    (ஸ்மைலி போடுவோர் சங்கமேதான்)

    ReplyDelete
  20. மன்மதன் லீலைக்கு பொழிப்புரை தந்து சிறப்பித்துள்ளார் நிரூபன் அவர்களுக்கு நன்றி செங்கோவியாரின் கதையின் அருமை பெருமையை இந்தத் தொடர் முற்றிலும் வித்தியாசமாக படைத்திருந்தார் வாழ்த்துக்கல் வச்த்தியாரே!
    எனக்கு முடிவில் தான் கடுப்பு!

    ReplyDelete
  21. ஐயா இன்று இரவு நேரமாற்றம் என்பதால் அதிகமான வேலைப்பளு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்!

    ReplyDelete
  22. அன்பு என்பதைச் சீக்கிரமே கண்டுபிடித்தான். சட்டென்று ‘அகத்தே அன்பிலா மாந்தரைத் தழுவிய பாவியாவேன்’ என்பது போன்ற வரி ஞாபகம் வந்தது. அது அகநானூறா புறநானூறா என்று யோசித்தான். தெரியவில்லை, // 
    நிரூபனே அது அகநானுறில் வரும் பாடல் உங்களுக்கே மயக்கம் என்றாள்  நம்ப முடியுமோ !

    ReplyDelete
  23. செங்கோவி,
    நிருபனின் கருத்துக்கள் பலவற்றை நான் வழி மொழிகிறேன். நான் இன்னும் முழுதாய் படித்து விடவில்லை எனினும், [நான் மிகவும் தாமதாமாகவே உங்கள் வலைப் பூவிற்கு வந்தேன் என்பதும்.. முற்றும் பறிக்க நேரம் கூட வில்லை என்பதும்... காரணங்கள்] - ஆனாலும் உங்கள் நடை - தமிழ் நடை மிகவும் எதார்த்தமான மற்றும் படிப்பவர்களையும் வெகுவாக ஈர்க்கின்ற நடை அது.
    எனவே உங்கள் கிழிந்த நாட்குறிப்பை படிப்பதில் எனக்குள்ள ஆர்வம் போலவே எல்லாரிடத்திலும் இருந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை.
    எனவே அடுத்த தொடர் எழுதுவது பற்றி நிச்சயம் யோசிக்கலாம்.
    இதைப் புத்தக வடிவில் வெளியிடுவது பற்றி முடிவெடுத்து வெளியிடலாம். ...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. நிரூபன்,
    அண்ணன் தம்பி இருவரும் முடிவு செய்து, உங்கள் விமர்சனம் இந்தப் பூவின் பக்கத்தில் வெளியிடப்பட்டதால் உங்களுக்கான பின்னூட்டத்தையும் இங்கேயே வெளியிடலாம் என்றே தோன்றுகிறது.

    செங்கோவி போலவே உங்களின் தமிழின் வழமை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. உங்களின் எல்லா பதிவுகளையும் எப்படியாவது படித்து விட்டாலும் பின்னூட்டமிடுவது மிகக் குறைவே. இருந்தாலும் உங்கள் வலைப் பூவும் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் வெளி வரும் நீதித் தாகமும், நண்பர்களின் வலைப் பூக்களில் வெளியிடும் வணக்கமும் நிச்சியமாய் எல்லோர் மனதிலும் நிற்கக் கூடியவை.
    நிற்க. செங்கோவியின் தொடர் பற்றிய விமர்சனம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது. மிகவும் நெருங்கி உணர்ந்திருக்கிறீர்கள் . நல்ல விமர்சனம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. செங்கோவியின் மன்மத லீலைகள்...அடுத்து புத்தக வடிவிலா?

    ReplyDelete
  26. விமர்சனம் அருமை. மேற்கோள் காட்டிய கவிதைகளும் அருமை. நிரூபனின் தமிழ் நடையையும், அவரின் ஆழமான எழுத்துக்களையும் எப்போதும் ரசிக்கலாம். குறிப்பாக ஈழம் தொடர்பான அவரது பார்வை. அப்புறம், அது என்ன முகத்துல இருபுறம் கனிந்திருக்கும் ஆப்பிள்கள், கன்னமா? இலக்கியச்சுவை என்பது இதுதானா? பின்னிட்டீங்கண்ணே,

    ReplyDelete
  27. நான் தவறாமல் படிக்கும் ஒரு தொடர்... செங்கோவி அண்ணனின் எழுத்து நடை அருமை... அண்ணன் பக்கம் நான் தொடர்ந்து வரத்தொடங்கியதே இந்த தொடர் தந்த சுவை கண்ட பின்தான்.. எனக்கு அந்த மதன் கேரக்டரை ரெம்ப புடிக்கும்... பல நேரம் ரசித்து இருக்கேன்....நிரு பாஸின் விமர்சனமும் அருமை.

    ReplyDelete
  28. பயபுள்ளை! என்னாமா நோட் பண்ணியிருக்கு..

    ReplyDelete
  29. மொத்த பாகத்தையும் படிச்சிட்டு வந்துடறன் செங்கோவி!மயக்கம் கொடுத்த விமர்சனம்!

    ReplyDelete
  30. பதிவுலக வரலாற்றிலேயே முதல்முறையாக என்று நினைக்கிறேன்!!
    வாழ்த்துக்கள் செங்கோவி,மற்றும் நிருபன்..
    இத்தகைய அர்ப்பணிப்பு இருக்கும் பட்சத்தில் தான் பதிவுலகில் சில நல்ல விடயங்களாவது நடக்கின்றன!

    ReplyDelete
  31. வார்தைகளில் புகுந்து வெலாண்டுருக்காறு நிரூ...வாழ்த்துக்கள் செங்கோவி!

    நான் போட்ட சவால்!

    ReplyDelete
  32. பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக பதிவு விமர்சனம்!

    ஒவ்வொரு வார இறுதிகளிலும் எதிர்பார்க்க வைத்த தொடர்!
    வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  33. ஆமாம் ,அது ஒரு நல்ல தொடர் ,எண்ணை செங்கோவியோடு முதன் முதலில் இணைய வைத்ததும் அதுவே

    நல்ல நடை ,அடுத்த பாகம் எதிர்நோக்கும் ஆர்வத்தை தூண்டும் தொடர் ,அவரது யதார்த்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்த நண்பர் .

    ஐ லைக் ஹிம் பிகாஸ் ஹி இஸ் எ ஜெம்

    இந்த தகவல் நண்பர் நிருபனுக்கு

    ReplyDelete
  34. நல்ல எழுத்துக்களை தேடிப்பிடித்து தனது கருத்துக்களால் மகுடம் சூட்டுவதில் நிரூபனுக்கு என்றுமே முதலிடம் தான்
    அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

    அவரது வலைக்கு சென்று பலமுறை பதிவுகளை அவரது தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன்.
    இந்த விமர்சனமும் அதே ரகம்!
    நன்றி நிரூ!

    ReplyDelete
  35. இந்த தொடரைப்பொருத்த வரை நான் பாதியில் தான் வந்து சேர்ந்தேன்.
    உங்களது எழுத்து நடை என்னை பின்னோக்கி அழைத்துச்சென்று முதலில் இருந்து படிக்கத்தூண்டியது!
    இறுதி வரை அந்த ஆவலை குறையாமல் கட்டிப்போட்டது இந்த தொடர்.அது மட்டுமில்லாமல் பதிவுலக எழுதப்படாத பல விதிகளை உடைத்த பெருமையும் இப்பதிவுக்கு உண்டு.
    வாழ்த்துக்கள் அண்ணே!
    மீண்டும் இது போன்றதொரு தொடரை எதிர் நோக்கி
    உங்கள் அன்புத்தம்பி
    ம.கோகுல்.

    ReplyDelete
  36. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    ReplyDelete
  37. பல வாசகர்கள் உள்ளத்தில் விளைந்த, அவர்களுக்குச் சொல்லத் தெரியாத எண்ணங்களையெல்லாம் அருமையாகத் தொகுத்தது போன்ற ஒரு திறனாய்வு.
    hats off to you both!

    ReplyDelete
  38. இங்கே குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்,
    வேலாயுதம் பார்த்து விட்டு மழையில் நனைந்து வந்த காரணத்தினால் உடல் நிலை சரியில்லாது கொஞ்சம் முடங்கியிருந்தேன்.
    விமர்சனம் சனிக்கிழமை வரும் என்று செங்கோவி அண்ணாச்சி சொல்லியிருந்தார்,
    நான் தான் மறந்து போய் வீட்டில் உட்கார்ந்திருந்தேன்.
    ஹி....ஹி..

    இதொ மறுபடியும் வந்திட்டேன்.

    ReplyDelete
  39. மொக்கராசு மாமா said...
    நல்ல விமர்சனம், என்னா ஒன்னு, ரொம்ப கஷ்டமான தமிழ்ல இருக்கு.. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சாதான் வெளங்கும் போல இருக்கு,,, எனிவே ரெண்டு அண்ணன்மாருக்கும் வாழ்த்துக்கள்...//

    அண்ணே.
    உங்கள் அன்பிற்கு நன்றி,
    விமர்சனத்தை ஆரம்பத்தில் இலக்கணத் தமிழில் எழுதி பின்னர் இயல்புத் தமிழில் ஐ மீன் நம்ம பேச்ச்த் தமிழில் மாத்தியிருந்தேன்.

    ஆனாலும் புரியவில்லை என்று சொல்லுறீங்க.
    இனிமேல் கூடிய கவனம் செலுத்தி அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  40. Powder Star - Dr. ஐடியாமணி said...
    நேசமுடன்,
    செல்வராஜா நிரூபன்.
    நட்டாங்கண்டல்,
    வன்னி மாவட்டம்,
    இலங்கை.///////

    மச்சி நிரூ! இது உன்னுடைய புது விலாசமா? பழைய விலாசமா? ஹி ஹி ஹி ஹி அந்த ஏரியாவுல நீ இப்ப இல்லையாமே!

    அதோட வன்னி என்று ஒரு மாநிலம்தான் இருக்கு! மாவட்டம் இல்லையே!

    நிரூ, ஐ வாண்ட் விளக்கம்!//

    ஹே...ஹே..

    இது ரொம்ப ஓவர் ஐயா..
    வன்னி மாவட்டம் என்று சொல்லுவாங்கள் தானே..
    அந்த நினைப்பில எழுதினேன்,
    எப்பவுமே சொந்த ஊரைப் போடுவதில் ஒரு இன்பம் இருக்கும் தானே...

    ReplyDelete
  41. @அப்பு

    நிரூபன்,
    அண்ணன் தம்பி இருவரும் முடிவு செய்து, உங்கள் விமர்சனம் இந்தப் பூவின் பக்கத்தில் வெளியிடப்பட்டதால் உங்களுக்கான பின்னூட்டத்தையும் இங்கேயே வெளியிடலாம் என்றே தோன்றுகிறது.
    //

    ரொம்ப நன்றி அப்பு அண்ணே.

    ReplyDelete
  42. @Dr. Butti Paul
    விமர்சனம் அருமை. மேற்கோள் காட்டிய கவிதைகளும் அருமை. நிரூபனின் தமிழ் நடையையும், அவரின் ஆழமான எழுத்துக்களையும் எப்போதும் ரசிக்கலாம். குறிப்பாக ஈழம் தொடர்பான அவரது பார்வை. //

    தல ரொம்ப நன்றி தல..

    ReplyDelete
  43. அன்பிற்குரிய சொந்தங்களே,
    இங்கே உங்கள் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும்,
    என் விமர்சனத்தினை வலையேற்றிய செங்கோவி பாஸ் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  44. நிஜ வார்த்தைகள். எங்கள் தலைவர் செங்கோவிக்கு வாழ்த்துக்கள். கலக்கல் போஸ்ட்.

    ReplyDelete
  45. மன்மத லீலைகள் தொடரை பற்றி ஏற்கனவே பல கருத்துரை சொல்லிவிட்டதால்..இங்கு நிரூபன் பாஸ் பற்றி சொல்லாம் என்று நினைக்கின்றேன்.....

    நிரூபன் பாஸ் அவர்களின் தமிழ் பற்று அலாதியானது,அற்புதமானது...அவரது விமர்சணமும் அழகு.....

    என்னைப்போன்ற வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நிரூபன் பாஸ்.வழங்கும் ஆலோசனைகள் சிறப்பானது அவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. காலை வணக்கம்.விமர்சித்தவருக்கும்,எழுதியவருக்கும் வாழ்த்துக்கள்.இது ஒரு முன்மாதிரி.அங்கேயும் இங்கேயும் போடுவதில் என்ன உண்டு,என்ன இல்லை.படிக்கப்போவது ஒரே நபர்கள் தானே?

    ReplyDelete
  47. மிக சிறப்பாக இருந்தது

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.