’காந்தி ஜெயந்தி இப்படி அநியாயமாக ஞாயிற்றுக்கிழமை வந்திடுச்சே..அடுத்த வருசமாவது வேலை நாள்ல வரட்டும்’ என்ற வேண்டுதலுடன் காந்தி ஜெயந்தி சிறப்புப் பதிவைஆரம்பிப்போம்.
பள்ளியில் படிக்கும்போது சுதந்திரப்போராட்டம் பற்றிய பாடங்களைப் பார்த்துவிட்டு, எங்கள் ஊரில் இருந்த பெரியோர்களிடம் ‘நீங்களும் சொதந்திரத்துக்குப் போராடியிருக்கீங்களா?...வெள்ளைக்காரன் உங்களையும் அடிச்சிருக்கானா?” என்று கேட்டிருக்கிறேன். ‘சோத்துக்கே வழியைக் காணோம், இதுல சுதந்திரம் ஒரு கேடா?’ என்பதில் ஆரம்பித்து ‘வெள்ளைக்காரன் நல்லாத்தான ஆட்சி பண்ணான்..இவனுக தேவையில்லாம போராட்டம் பண்ணி அடி வாங்குனானுக’ என்பது வரை பலதரப்பட்ட பதில்களை சந்தித்திருக்கிறேன். இப்போது அதைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நம் மக்களில் பெரும்பாலோனோர் ஏன் அப்படியிருந்தார்கள்? வறுமை மட்டுமே காரணமா? வறுமையையை விட அறியாமையே முக்கியக்காரணம் என்று தோன்றுகிறது. எங்கள் பகுதி ஒரு ஜமீனுக்கு உட்பட்டது. ஜமீன் ஆட்சிமுறை பற்றியும் நிறைய விசாரித்திருக்கிறேன். ‘ராசா ஏதாவது நல்லது பண்ணியிருக்காரா? பாதை, தண்ணி வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறாரா?” என்பது போன்ற கேள்விகளுக்கு ‘ராசாகிட்டக் கேட்கலாம். விண்ணப்பிக்கலாம். அவர் மனசு வச்சுச் செஞ்சாச் சரி. இல்லேன்னா, நாமளே பண்ணிக்கிறது தான்’ என்பதே பதில்.
இந்தப் பதில்களுக்குப் பின்னே ஒளிந்திருப்பது தான் அப்போதைய யதார்த்த நிலை. ‘அரசு என்பது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது. ஒரு பெரிய காவல்காரன். அதற்கு வரி கொடுப்பது நம் கடமை. அது சரியான முறையில் செலவளிக்கப்படும் என்பது நம்பிக்கை. அது அந்தப்புரத்தை அழகுபடுத்த செலவளிக்கப்பட்டாலும், எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால், ராஜத் துரோகம். நாம் வேலை பார்த்து, நாம் சாப்பிடுவோம்’ - இதுவே அப்போதைய மக்களின் மனநிலை.
அப்போதிருந்த அரசுகளும் ‘தன் நாடு’ என்பதைத் தாண்டி சிந்தித்ததேயில்லை. பூலித்தேவன் வெள்ளையருக்கெதிராகப் போரிட்டபோது, திருவாங்கூர் மன்னன் துணைக்கு வரவில்லை. கட்டபொம்மன் போரிட்டபோது, எட்டப்பன் துணைக்கு வரவில்லை. அது பொதுவான போர் என்ற புரிதலே இல்லை. அவர்களுக்குள் ஏற்கனவே எல்லைப்பிரச்சினைகள் இருந்தன. அதற்குப் பழிவாங்க, ஆங்கிலேயருக்குத் துணை போனார்கள். அவர்களைப் பொறுத்தவரை நாடு என்பது தனது ஆட்சிக்கு உட்பட்ட சிறு நிலப்பகுதி மட்டுமே. அவர்களுக்கு இந்தியா என்ற அகண்ட தேசம் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. காரணம், இந்தியாவே அப்போது இல்லை.
ஜனநாயகம் பற்றி ஏதுமறியாத விசுவாசமிக்க குடிமக்கள், தன் நிலப்பகுதியைக் காக்க அன்னியருக்கு ஆதரவளிக்கத் துணியும் மன்னர்கள் என்பதே அப்போதைய இந்திய தேச நிலைமை. அந்த சூழ்நிலையே வெள்ளையர் இந்தியாவை அடிமைப்படுத்த உதவியது. அப்போது இந்தியா முழுமைக்கும் பொதுவான விஷயம் என்றால் அது இந்து மதம் தான். இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதமல்ல என்பதாலும், பழங்குடி நம்பிக்கைகளின் தொகுப்பு என்பதாலும், அது அரசியல்ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க முயலவில்லை.
அதனாலேயே 200 வருடங்களுக்கு மேல் இந்தியா ஆங்கிலேயரிடம் சலனமேயில்லாமல் அடிமைப்பட்டுக்கிடந்தது. ஒருங்கிணைந்த நிலப்பரப்பும், வரி வசூலை எளிமைப்படுத்த வேண்டிய அவசியமும் ’இந்தியா’ என்ற தேசத்தை ஆங்கிலேயர் கட்டியெழுப்ப தூண்டியது. அதன்பின் இந்தியா முழுமைக்குமான பொது விஷயங்களாக இந்து மதத்தை அடுத்து, ஆங்கிலேயரும் ஆனார்கள்.
ஆங்கிலேயர் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்த பரந்த நிலப்பரப்பை இணைத்திருந்தும், அரசியல்ரீதியாக மக்களைத் திரட்ட அது உதவவில்லை. மக்கள் பிளவுபட்டே கிடந்தார்கள். ஆரம்பக்காலங்களில் காங்கிரஸ் என்பது மேல்மட்ட படித்த கனவான்கள் கூடி சுதந்திரம் வாங்க ஆலோசிக்கும் அமைப்பாக மட்டுமே இருந்தது. மக்கள் எண்ணங்களில் உருவாகியிருக்காத இந்திய தேசத்திற்கு விடுதலை வாங்க, மக்களை கூவி அழைத்தார்கள். அது சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது. பெரிய அளவில் போராட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. காரணம், போராட்டம் ஏதும் நடத்தி நம் மக்களுக்கு பழக்கம் ஏதும் இல்லை.
அந்தச் சூழ்நிலையிலேயே ஒரு ஒளி தோன்றியது. தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்திமுடித்துவிட்டு, இந்தியா வந்தது காந்தி எனும் காந்த ஒளி.
இந்தியா வந்த காந்தி தேசம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். முடிவில் அவர் கண்டுகொண்ட உண்மையே மேலே விவரிக்கப்பட்ட ‘ஜனநாயகம் பற்றிய புரிதல் அற்ற மக்களும், உருவாகியிராத இந்தியாவும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயணங்கள், பொதுக்கூட்டம், போராட்டங்கள் மூலம் இந்த மக்களை ஒன்றிணைத்து, ஒரே தேசமாக கட்டியெழுப்பினார் காந்தி. அப்படி மக்களின் மனங்கள் இணைக்கப்படாமல், அரசுரீதியாக அதிகார வர்க்கம் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தால், சுதந்திரத்திற்குப் பின் இந்தியா சிதறி இருக்கும்.
காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே. மக்களே தேசம் என்ற அடிப்படைப் புரிதல் காந்தியிடம் இருந்தது. மக்கள் ஆதரவைப் பெறாத, மக்களிடம் வலுப்பெறாத ஒரு கருத்து நிலைக்காது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். எனவே தான் தொடர்ந்து இந்த மக்களிடம் பேசி ‘இந்தியா’ என்ற தேசத்தை அவர்கள் மனதில் விதைத்தார். இந்தியாவை இணைக்கும் மையச் சரடாக காந்தி ஆனார்.
சுதந்திரம் கொடுத்தபோது, ஆங்கிலேயர் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் என்றே நம்பினர். ஆனால் அப்படிச் சிதறாமல் காத்தது காந்தியமே. அதனாலேயே பிரிவினை சக்திகளால் இன்றளவும் கடுமையாக வசை பாடப்படுகிறார் காந்தி.
காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது என்பதாலேயே அன்னிய நாட்டுக் கைக்கூலிகளான பிரிவினை சக்திகள் காந்தி அளவிற்கு அவதூறுகளால் வசபாடப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. சர்ச்சில்கூட இந்த அளவிற்கு வசை பாடப்பட்டதில்லை.
அதற்கான அடிப்படைக் காரணம் இந்த தேசத்தின் மையக் கருத்தோட்டமாக காந்தியம் இருப்பது தான். காந்தி என்ற பிம்பத்தை உடைப்பதே, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் பல்வேறு அமைப்புகளின் நிதிஉதவியுடன் இந்த வசைபாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அவர்கள் சொல்வது இரண்டே விஷயங்களைத் தான், முதலாவது ‘இந்தியா ஒரு தேசமே அல்ல. ஒட்டுப் போட்ட துணி’. இரண்டாவது ‘காந்தி நல்ல தலைவரே அல்ல. அயோக்கியர்’. உண்மையில் இரண்டும் ஒரே கருத்தே! இந்தியாவிற்கு எதிரான எல்லா பிரிவினை சக்திகளின் முதல் டார்கெட் ‘காந்தி’ தான். எது ஒரு தேசத்தின் அடிநாதமோ, அதைச் சிதைப்பதே அவர்களின் குறிக்கோள்.
ஆனாலும் உண்மை வலுவானது. தாமதமாகவேனும் உண்மை தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவே காந்தியையும் இந்தியாவையும் இன்று வரை காக்கின்றது, இனியும் காக்கும்!
போனஸ் :
சென்ற சுதந்திர தினத்தன்று எனது வலைப்பூவில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து..என்ற பதிவு வெளியிடப்பட்டது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த டைரி விரிவான தகவல்களுடன் இங்கே கிடைக்கிறது : காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
போனஸ் :
சென்ற சுதந்திர தினத்தன்று எனது வலைப்பூவில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து..என்ற பதிவு வெளியிடப்பட்டது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த டைரி விரிவான தகவல்களுடன் இங்கே கிடைக்கிறது : காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
//’காந்தி ஜெயந்தி இப்படி அநியாயமாக ஞாயிற்றுக்கிழமை வந்திடுச்சே..அடுத்த வருசமாவது வேலை நாள்ல வரட்டும்’///
ReplyDeletesame blood!!
SDFS
ReplyDeleteதெளிவாக சொன்னீர்கள்
ReplyDeleteகாந்தி செய்தது ஒற்றுமையின் வலிமையை உணர்த்தியது மட்டுமே
//SDFS//
ReplyDeleteஅப்படீன்னா என்னய்யா?
டாக்டர் புட்டிப்பால் FDFSன்னு போடுறாருல்ல.. அதன் ரெண்டாவது கமெண்ட் SDFS... மேலதிக விபரங்களுக்கு அவரையே அணுகவும்... இதோ வர்றாரு...
ReplyDeleteகாந்தியை பற்றி யாரும் தவறாக சொல்ல வேண்டிய அவசியமில்லை
ReplyDeleteஏனெனில் தன்னை பற்றி அவரே எல்லாத்தையும் சொல்லிவிட்டார்
//காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே//
ReplyDeleteதேசங்கள் நிலப்பரப்பாலல்ல மக்களாலேயே கட்டி எழுப்பப்படுகிறது. மக்களிக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லையெனில், எவ்வளவு பலம் வாய்ந்த அரசு இருப்பினும்
//‘இந்தியா ஒரு தேசமே அல்ல. ஒட்டுப் போட்ட துணி’. //என்பதுதான் மிஞ்சும்.
//Speed Master said...
ReplyDeleteகாந்தியை பற்றி யாரும் தவறாக சொல்ல வேண்டிய அவசியமில்லை
ஏனெனில் தன்னை பற்றி அவரே எல்லாத்தையும் சொல்லிவிட்டார்//
ஆமாம் மாஸ்டர், அவர் தன் வாழ்க்கையை சோதனை(எக்ஸ்பரிமெண்ட்)ஆகப் பார்த்தவர். எங்கெல்லாம் தவறினாரோ, அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு, திருத்திக்கொள்வது அவர் வழக்கம். இப்போது அவரைப் பற்றி தூற்றுவோர் எதையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. அவர் சொன்னதையே, கொஞ்சம் திரித்துச் சொல்கிறார்கள்.
//Dr. Butti Paul said...
ReplyDelete//காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே//
தேசங்கள் நிலப்பரப்பாலல்ல மக்களாலேயே கட்டி எழுப்பப்படுகிறது. மக்களிக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லையெனில், எவ்வளவு பலம் வாய்ந்த அரசு இருப்பினும்
//‘இந்தியா ஒரு தேசமே அல்ல. ஒட்டுப் போட்ட துணி’. //என்பதுதான் மிஞ்சும்.//
நச் புட்டி.
ஒரு தேசத்தை ஒருங்கிணைக்க, ஒரு பொதுவம்சம் நிச்சயம் தேவைப்படுகிறது, அது மதம், மொழி, இனம் சார்ந்து அல்லாது ஒரு கொள்கை சார்ந்து இருக்கும்போதே உண்மையான ஒற்றுமை தோன்றும். அரசோ, பொருளாதாரமோ தேசத்தினை கட்டி எழுப்பாது, ஒரு கொள்கையின் பால் ஒன்றிணைந்த மக்களாலேயே அது சாத்தியமாகும்.
ReplyDeleteகாந்தி ஜெயந்தி சிறப்புப்பதிவில் தேசிய ஒருமைப்பாட்டினை பற்றிய சிந்தனையை தூண்டிய பதிவை இட்ட செங்கோவி வாழ்க, அவரது சேவை நாட்டுக்குத் தேவை..
ReplyDelete//Dr. Butti Paul said...
ReplyDeleteஅரசோ, பொருளாதாரமோ தேசத்தினை கட்டி எழுப்பாது, ஒரு கொள்கையின் பால் ஒன்றிணைந்த மக்களாலேயே அது சாத்தியமாகும்.//
கரெக்ட்..அந்தக் கொள்கையும் சுயநலமற்ற, பதவி ஆசையில்லாத தலைவரால் முன்வைக்கப்படும்போது மட்டுமே, மக்களை ஒருங்கிணைக்கும்..
///செங்கோவி said...
ReplyDelete//Dr. Butti Paul said...
அரசோ, பொருளாதாரமோ தேசத்தினை கட்டி எழுப்பாது, ஒரு கொள்கையின் பால் ஒன்றிணைந்த மக்களாலேயே அது சாத்தியமாகும்.//
கரெக்ட்..அந்தக் கொள்கையும் சுயநலமற்ற, பதவி ஆசையில்லாத தலைவரால் முன்வைக்கப்படும்போது மட்டுமே, மக்களை ஒருங்கிணைக்கும்..////
பதவி ஆசையில்லாத தலைவரால் ???
டாக்டருக்கு ஜே.... (அஞ்சலிய தர மாதங்களாம்பாஸ்).....நான் நம்ம Dr. Butti Paulல சொல்லல..
காந்தியைப் பற்றி சரியான தெளிவான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteநான் நெனைச்சேன், நீங்க எழுதிட்டீங்க.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//Dr. Butti Paul said...
அரசோ, பொருளாதாரமோ தேசத்தினை கட்டி எழுப்பாது, ஒரு கொள்கையின் பால் ஒன்றிணைந்த மக்களாலேயே அது சாத்தியமாகும்.//
கரெக்ட்..அந்தக் கொள்கையும் சுயநலமற்ற, பதவி ஆசையில்லாத தலைவரால் முன்வைக்கப்படும்போது மட்டுமே, மக்களை ஒருங்கிணைக்கும்..///
என்னண்ணே நீங்க, நம்ம தலைவர்கள் கொள்கைகள உருவாக்குறதே அவங்களுக்கென ஒரு கூட்டத்த சேர்த்து பிரிவினைய உருவாக்கத்தானே,
/////செங்கோவி said...
ReplyDelete//SDFS//
அப்படீன்னா என்னய்யா?//////
ஓனரு வந்துட்டாரு, சண்டே முடிஞ்சிடுச்சா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகாந்தியைப் பற்றி சரியான தெளிவான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்!//
நன்றி நண்பரே! (ம்க்கும்!)
//Yoga.s.FR said...
ReplyDeleteநான் நெனைச்சேன், நீங்க எழுதிட்டீங்க.//
நீங்க நினைச்ச எல்லாத்தையும் எழுதியிருக்கனா?
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅஞ்சலிய தர மாதங்களாம் பாஸ்//
உஷ்!!!!
க்கும்...... ஐயாம் அப்பீட்.........
ReplyDelete//Dr. Butti Paul said...
ReplyDeleteஎன்னண்ணே நீங்க, நம்ம தலைவர்கள் கொள்கைகள உருவாக்குறதே அவங்களுக்கென ஒரு கூட்டத்த சேர்த்து பிரிவினைய உருவாக்கத்தானே,//
ஆமா, இப்போ தமிழ்நாட்டையே ரெண்டா பிரிக்கணும்கிற அளவுக்குள்ள முன்னேறி இருக்காங்க..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteக்கும்...... ஐயாம் அப்பீட்.........//
அண்ணன் ஃபார்மல் கமெண்ட் போட்டதுக்குத் தான் அந்த ம்க்கும்!
நல்ல ஆழமான விளக்கத்துடன் கூடிய காந்தி ஜெயந்தி தினப் பதிவு!இது நேற்றே வந்திருக்க வேண்டியது.லீலையை விடுத்து இதனையே பதிந்திருக்கலாம்.பின்னர் "போனஸ்"கொடுத்திருக்கலாம்!
ReplyDelete//இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் என்றே நம்பினர். ஆனால் அப்படிச் சிதறாமல் காத்தது காந்தியமே.///
ReplyDeleteசரியா சொன்னீங்க பாஸ்.. நம்மள விட சின்ன சின்ன நாடுகளான சூடான், இலங்கை போன்ற நாடுகளே துண்டு துண்டா போகும்போது.. இம்மாம் பெரிய நாடான இந்தியா, இன்னும் துண்டு துண்டா போகாம இருக்குன்னா அதுக்கு காரணமே காந்தியம்தான்!!
செங்கோவி said... //Yoga.s.FR said... நான் நெனைச்சேன், நீங்க எழுதிட்டீங்க.// நீங்க நினைச்ச எல்லாத்தையும் எழுதியிருக்கனா?///அது நேத்து!இது இன்னிக்கு!ஹ!ஹ!ஹா!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteநல்ல ஆழமான விளக்கத்துடன் கூடிய காந்தி ஜெயந்தி தினப் பதிவு!இது நேற்றே வந்திருக்க வேண்டியது.//
லீவுல இருந்ததால எழுத முடியலை ஐயா..இப்போது தான் எழுதினேன்..
மேலும் ஞாயிறு எழுதினால் அதிகம்பேர் படிக்க மாட்டார்கள்..
மொக்கராசு மாமா said...
ReplyDelete//இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் என்றே நம்பினர். ஆனால் அப்படிச் சிதறாமல் காத்தது காந்தியமே.///
சரியா சொன்னீங்க பாஸ்.. நம்மள விட சின்ன சின்ன நாடுகளான சூடான், இலங்கை போன்ற நாடுகளே துண்டு துண்டா போகும்போது.. இம்மாம் பெரிய நாடான இந்தியா, இன்னும் துண்டு துண்டா போகாம இருக்குன்னா அதுக்கு காரணமே காந்தியம்தான்!!///
அட, மாம்ஸ் ஒரு வழியா பதிவ படிச்சிட்டாரு போல.
//
ReplyDeleteமொக்கராசு மாமா said...
சரியா சொன்னீங்க பாஸ்.. நம்மள விட சின்ன சின்ன நாடுகளான சூடான், இலங்கை போன்ற நாடுகளே துண்டு துண்டா போகும்போது.. //
அனைத்து மக்களுக்கும் சம உரிமை இல்லையென்றால், அதைத் தவிர்க்க முடியாது..
ஓனரு வந்துட்டாரு, சண்டே முடிஞ்சிடுச்சா?////எங்க சண்ட?
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteஅனைத்து மக்களுக்கும் சம உரிமை இல்லையென்றால், அதைத் தவிர்க்க முடியாது..////
அதுவும் சரி!!!
//
ReplyDeleteYoga.s.FR said...
ஓனரு வந்துட்டாரு, சண்டே முடிஞ்சிடுச்சா?////எங்க சண்ட?//
ஐயாக்கு ரொம்ப போரடிக்குது போல..
காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது ////அவ்வாறு தொடர்ந்து வல்லரசுகளுக்கெல்லாம் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை!கழுவேற்றத் துடிக்கிறார்கள்!
ReplyDeleteYoga.s.FR said...
ReplyDeleteஓனரு வந்துட்டாரு, சண்டே முடிஞ்சிடுச்சா?////எங்க சண்ட?//
ஐயாக்கு ரொம்ப போரடிக்குது போல.///அப்புடில்லாம் ஒண்ணுமில்ல,இங்கிலிசுபிசு புரியாதில்ல?தமிழுன்னா டக்குனு புரிஞ்சுடும்!
ஆங்கிலேயர் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்த பரந்த நிலப்பரப்பை இணைத்திருந்தும், அரசியல்ரீதியாக மக்களைத் திரட்ட அது உதவவில்லை.////அவர்களுக்கு(ஆங்கிலேயர்களுக்கு)அது தேவையற்றதும் கூட!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteகாந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது ////அவ்வாறு தொடர்ந்து வல்லரசுகளுக்கெல்லாம் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை!கழுவேற்றத் துடிக்கிறார்கள்!//
உண்மை தான் ஐயா...பல்வேறுபட்ட மதங்களும், மொழிகளும் நிரம்பிய நாடு ஒற்றுமையாக இருப்பதென்பது அன்னிய சக்திகளை ஆச்சரியப்படுத்தும் ஒன்று தான். அதனாலேயே ஊடகங்களிலும், அறிவுஜீவித்தளத்திலும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
காந்தி போன்றோரை மதிப்பவன் ஒன்னும் தெரியாத முட்டாள் என்ற எண்ணத்தை மக்களிடம் பரப்புகிறார்கள். படித்த வர்க்கமும் ஆரம்பத்தில் அதை நம்புகிறது. ரத்தத்தில் சூடு தணியத் தணிய, உண்மை புரிகிறது...
//Yoga.s.FR said...
ReplyDeleteஆங்கிலேயர் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்த பரந்த நிலப்பரப்பை இணைத்திருந்தும், அரசியல்ரீதியாக மக்களைத் திரட்ட அது உதவவில்லை.////அவர்களுக்கு(ஆங்கிலேயர்களுக்கு)அது தேவையற்றதும் கூட!//
ஆமா, அது வேலியில் போற ஓணானை...
நான் "சத்திய சோதனை" என்ற புத்தகத்தை சிறு வயதில் படித்திருக்கிறேன்,பல தடவைகள்.
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
நான் "சத்திய சோதனை" என்ற புத்தகத்தை சிறு வயதில் படித்திருக்கிறேன்,பல தடவைகள்.//
சிறுவயதில் அதைப் படிக்கும் வாய்ப்பும், மனதும் அமைவதே பெரிய விசயம் தான் ஐயா..அந்த வயது தாண்டி விட்டால் ‘கற்றுக்கொள்ளும்’ மனநிலையை பெரும்பாலானோர் இழந்துவிடுகிறார்கள்.
நான் 13 வயதில் படித்தேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇலங்கையிலும் ஒருவர்(தந்தை செல்வா) அந்தக் காலத்தில் ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்டார்!ஆனால்,இந்தக் காந்தி ஆற்றிய பணி முன்,அவர் ஆற்றியது தூசி!இந்தக் காந்தி,அரசியல் அற்ற காந்தி.அவர்,அரசியல் காந்தி!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//காந்தி போன்றோரை மதிப்பவன் ஒன்னும் தெரியாத முட்டாள் என்ற எண்ணத்தை மக்களிடம் பரப்புகிறார்கள். படித்த வர்க்கமும் ஆரம்பத்தில் அதை நம்புகிறது. ரத்தத்தில் சூடு தணியத் தணிய, உண்மை புரிகிறது...//
ஒரு பழைய பதிவில் சொல்லியிருந்தீங்களே, "எதிர் கருத்து சொல்றதுதான் அறிவுஜீவித்தனம்னு நம்புராங்கன்னு" அதுதான் இது. இப்போ கொஞ்சம் வேலையிருக்கு சார், நாளை சந்திப்போம், செங்கோவி சாருக்கு நல்ல இரவு.. யோக அய்யாவுக்கு பொன்இரவு.
Speed Master said... [Reply]
ReplyDeleteகாந்தியை பற்றி யாரும் தவறாக சொல்ல வேண்டிய அவசியமில்லை
ஏனெனில் தன்னை பற்றி அவரே எல்லாத்தையும் சொல்லிவிட்டார்
October 3, 2011 12:25 AM
உண்மைதான்..
//Yoga.s.FR said...
ReplyDeleteஇலங்கையிலும் ஒருவர்(தந்தை செல்வா) அந்தக் காலத்தில் ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்டார்!ஆனால்,இந்தக் காந்தி ஆற்றிய பணி முன்,அவர் ஆற்றியது தூசி!இந்தக் காந்தி,அரசியல் அற்ற காந்தி.அவர்,அரசியல் காந்தி!//
அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் படித்ததில்லை ஐயா.
// Dr. Butti Paul said...
ReplyDeleteஒரு பழைய பதிவில் சொல்லியிருந்தீங்களே, "எதிர் கருத்து சொல்றதுதான் அறிவுஜீவித்தனம்னு நம்புராங்கன்னு" அதுதான் இது. இப்போ கொஞ்சம் வேலையிருக்கு சார், நாளை சந்திப்போம், செங்கோவி சாருக்கு நல்ல இரவு.. யோக அய்யாவுக்கு பொன்இரவு.//
ரைட்டு, இரவு வணக்கம்.
Blogger செங்கோவி said... நான் 13 வயதில் படித்தேன்./// நான் கூட கிட்டத் தட்ட 14 அல்லது பதினைந்து வயதில் என நினைக்கிறேன்!
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteSpeed Master said... [Reply]
காந்தியை பற்றி யாரும் தவறாக சொல்ல வேண்டிய அவசியமில்லை
ஏனெனில் தன்னை பற்றி அவரே எல்லாத்தையும் சொல்லிவிட்டார்
October 3, 2011 12:25 AM
உண்மைதான்..//
ஆமாம் மாம்ஸ்..
//Yoga.s.FR said...
ReplyDeleteBlogger செங்கோவி said... நான் 13 வயதில் படித்தேன்./// நான் கூட கிட்டத் தட்ட 14 அல்லது பதினைந்து வயதில் என நினைக்கிறேன்!//
அப்போ எல்லாரும் உங்களை ஒரு மாதிரிப் பார்த்திருப்பாங்களே...
Dr. Butti Paul said.....செங்கோவி சாருக்கு நல்ல இரவு.. யோகா அய்யாவுக்கு பொன்இரவு.///இதுல கூட பாகுபாடா? நான் கிழவன் டாக்டரே!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteDr. Butti Paul said.....செங்கோவி சாருக்கு நல்ல இரவு.. யோகா அய்யாவுக்கு பொன்இரவு.///இதுல கூட பாகுபாடா? நான் கிழவன் டாக்டரே!//
ஆமா, ஐயாகு ஒருவாரமா உருளைக்கிழங்கு, கொழுக்கட்டைன்னா அலர்ஜி!
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
Blogger செங்கோவி said... நான் 13 வயதில் படித்தேன்./// நான் கூட கிட்டத் தட்ட 14 அல்லது பதினைந்து வயதில் என நினைக்கிறேன்!//
அப்போ எல்லாரும் உங்களை ஒரு மாதிரிப் பார்த்திருப்பாங்களே...////ஓஹோ,அனுபவமோ?அது,அந்த புத்தகம் ஏதோ ஒரு கட்டுரையோ,கவிதையோ,பாட்டோ மறந்து விட்டேன்.சகோதரிக்கு பரிசு கொடுத்தார்கள்!படித்தேன். நல்ல வேளை இன்னுமொரு காந்தி................!?
மண்டேலா ஆரம்பத்தில் காந்தியின் கொள்ளைகள் தென்னாபிரிக்காவிற்கு சரிவராதுன்னார்..!! கடைசியில ஜெயிலில் இருந்து விடுதலையாகியவுடன் சொன்னது ஊரறிந்தது நான்கூட காந்தியை படிக்கும்வரை கோட்சே பக்த்தந்தான்...!!!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteநல்ல வேளை இன்னுமொரு காந்தி................!?//
புரியலை..நீங்களா...?
செங்கோவி said...ஆமா, ஐயாவுக்கு ஒருவாரமா உருளைக்கிழங்கு, கொழுக்கட்டைன்னா அலர்ஜி!///சத்தம் போடாதீங்க.ஆயுத பூஜை,அப்புறம் சரஸ்வதி பூஜை எல்லாம் வருது!தங்கமணி பாண்ட் பண்ணிடப் போறாங்க!
ReplyDeleteகாட்டான் said...
ReplyDelete//மண்டேலா ஆரம்பத்தில் காந்தியின் கொள்ளைகள் தென்னாபிரிக்காவிற்கு சரிவராதுன்னார்..!! கடைசியில ஜெயிலில் இருந்து விடுதலையாகியவுடன் சொன்னது ஊரறிந்தது நான்கூட காந்தியை படிக்கும்வரை கோட்சே பக்த்தந்தான்...!!! //
ஆம், இன்று ஆப்பிரிக்க நாடுகளிலேயே ரத்த ஆறு ஓடாத ஒரே நாடு தென்னாப்பிரிக்கா தான்..அதற்குக் காரணம் மண்டேலாவின் காந்திய அணுகுமுறை தான்.
//காட்டான் said...
ReplyDeleteநான்கூட காந்தியை படிக்கும்வரை கோட்சே பக்த்தந்தான்...!!!//
நீங்களா மாம்ஸ்?
அருமையான பதிவு!!"காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே."
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... நல்ல வேளை இன்னுமொரு காந்தி................!?// புரியலை..நீங்களா...////சும்மா ஒரு பில்டப்பு தான்!ரியாக்க்ஷன் எப்புடியிருக்கும்னு பாத்தேன்!
ReplyDelete//neovasant said...
ReplyDeleteஅருமையான பதிவு!!"காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே."//
கருத்துக்கு நன்றி நண்பரே!
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... நல்ல வேளை இன்னுமொரு காந்தி................!?// புரியலை..நீங்களா...////சும்மா ஒரு பில்டப்பு தான்!ரியாக்க்ஷன் எப்புடியிருக்கும்னு பாத்தேன்!//
எனக்குப் புரியாதப்பவே தெரியலை, ரியாக்சன் படு மோசம்னு!
இன்னிக்கு எல்லாமே ஒரே ஆச்சரியமாருக்கில்ல?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஇன்னிக்கு எல்லாமே ஒரே ஆச்சரியமாருக்கில்ல?//
என்ன ஆச்சரியம் ஐயா?
செங்கோவி said.....எனக்குப் புரியாதப்பவே தெரியலை, ரியாக்சன் படு மோசம்னு!////உங்களுக்கே புரியலியா?அப்போ நான்தான் கெலிச்சனா?அடச்சே,ஜெயிச்சனா?
ReplyDeleteசெங்கோவி said..அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் படித்ததில்லை ஐயா.////பின்னொரு நாளில் விபரமாக எழுதுகிறேன்!
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
செங்கோவி said..அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிகம் படித்ததில்லை ஐயா.////பின்னொரு நாளில் விபரமாக எழுதுகிறேன்!//
மிக்க நன்றி.
செங்கோவி said... //Yoga.s.FR said... இன்னிக்கு எல்லாமே ஒரே ஆச்சரியமாருக்கில்ல?// என்ன ஆச்சரியம் ஐயா?/// நான் "காந்தி"யாக யோசிச்சது.காட்டான்,"கோட்சே"க்கு சப்போர்ட்டு பண்ணினது, நீங்க "ஷாக்"கானது...........................
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
செங்கோவி said... //Yoga.s.FR said... இன்னிக்கு எல்லாமே ஒரே ஆச்சரியமாருக்கில்ல?// என்ன ஆச்சரியம் ஐயா?/// நான் "காந்தி"யாக யோசிச்சது.காட்டான்,"கோட்சே"க்கு சப்போர்ட்டு பண்ணினது, நீங்க "ஷாக்"கானது......................//
ஆமாம்.........ஆமாம்!
Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... இன்னிக்கு எல்லாமே ஒரே ஆச்சரியமாருக்கில்ல?// என்ன ஆச்சரியம் ஐயா?/// நான் "காந்தி"யாக யோசிச்சது.காட்டான்,"கோட்சே"க்கு சப்போர்ட்டு பண்ணினது, நீங்க "ஷாக்"கானது...........................
ஹா ஹா மாப்பிள நீங்க தப்பா நினச்சாலும் ஒரு விடயத்த நான் சொல்லவா..?? காந்திய சுட்டதால மட்டும்தான் கோட்ஸேமேல எனக்கு கோவம்..!!!!!!!!!!??
யோ செங்கோவி ஐயா இப்படியான பதிவை புதன் போட்டால் நானும் கும்ம முடியும் இப்ப வேளை . பிறகு பார்ப்போம்!
ReplyDeleteகாந்திஜி நாமம் வாழ்க! காந்தி மஹானின் நினைவுகளை மீட்டியமைக்கு ரொம்ப நன்றி செங்கோவி அண்ணன்!
ReplyDeleteஇலங்கையில் எமது பாடசாலைப் புத்தங்கங்களில் காந்திஜி பற்றி பாடங்கள் உள்ளன! சிறிய வயதில் அவற்றைப் படித்திருக்கிறோம்!
காந்திஜி நம் அனைவருக்கும் பொதுவான தலைவராவார்!
செங்கோவி வாழ்க,
ReplyDeleteசெங்கோவி சேவை நாட்டுக்குத் தேவை..
நல்லா சொல்லி இருக்கீங்க பாஸ்
ReplyDeleteநேத்து எனக்கு ஒரு மனவருத்தம் பாஸ் நேத்து காந்தியுனுடைய படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் ஒரு பயபுள்ளைகூட லைக்கோ,கமண்டோ போடலை,நம்ம தனிமரம் மட்டும் கமண்ட் போட்டு இருந்தார்.
ஆனா நடிகை படம் போட்டால் ஆயிரத்து எட்டு கமண்ட் லைக் வரும் நிலமைய பாருங்க..
எனக்கு சுந்தர்சி நடித்த அந்த ஆயுதம் செய்வோம் படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சி..
என்னத்தை சொல்லுறது போங்க
மக்கள் ஆதரவைப் பெறாத, மக்களிடம் வலுப்பெறாத ஒரு கருத்து நிலைக்காது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார்.//
ReplyDeleteஅகிம்சை என்ற ஒரு அற்புத ஆயுதத்தை சிந்தித்த.. பேராத்மா... அவர் புகழ் என்றும் வாழ்க
காந்தி பற்றி ஒரு அசத்தலான பதிவு
ReplyDeleteபல விடயங்கள் எனக்கு தெரியாதவை. அதிலும் காந்தியை கூட அவதூறாக பேசியவர்களும் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்..
காந்தி கொண்டாடப்பட வேண்டியவர்தான்... சந்தேகமில்லாமல்! ஆனால் எனது வருத்தம் காந்தியை கொண்டாடும் அளவிற்கு நேதாஜியையும் பகத்சிங்கையும் கொண்டாட வில்லை என்பதே.. சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏதோ அவர்களால் மட்டுமே இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததை போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டு பல தலைவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டது!
ReplyDeleteஅன்புள்ள செங்கோவி-
ReplyDeleteஉண்மையில் நன்றாக தொகுத்து எழுதியுள்ளீர்கள் .வாழ்த்துக்களும் நன்றிகளும் .காந்தி இந்தியாவிலிருந்து புறப்பட்ட உலக தலைவர் .இந்திய தேசியம் என்பதை கடந்து மிகப்பெரிய கனவுகளை கண்டார் .சென்ற நூற்றாண்டின் ஆகசிறந்த வரலாற்று நிகழ்வு என்பது காந்தி என்றே சொல்வேன்.ஏனெனில் கத்தியும் ரத்தமும் ஓடிய யுத்த களத்தில் தாகத்தை முன்னிறுத்தி,மனிதனின் நீதியுணர்வை உரசி எழுப்பும் போராட்டம் காந்தியுனுடயது . அது வரவில்லை என்றால்,இன்று உலக அளவில் உயிரிழப்புகள் இன்னும் பல கொடிகளை தாண்டி இருக்கும் .
// காட்டான் said...
ReplyDeleteஹா ஹா மாப்பிள நீங்க தப்பா நினச்சாலும் ஒரு விடயத்த நான் சொல்லவா..?? காந்திய சுட்டதால மட்டும்தான் கோட்ஸேமேல எனக்கு கோவம்..!!!!!!!!!!//
நீங்க முன்னாடி போட்ட ஒரு கமெண்ட்லயே அது தெரிஞ்சது மாம்ஸ்..நோ பிராப்ளம்!
// தனிமரம் said...
ReplyDeleteயோ செங்கோவி ஐயா இப்படியான பதிவை புதன் போட்டால் நானும் கும்ம முடியும் இப்ப வேளை . பிறகு பார்ப்போம்! //
இந்தப் பதிவுல கும்மி எதுக்கு..புதன் நானா யோசிச்சேன் போடறேன்ல?
// Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteகாந்திஜி நம் அனைவருக்கும் பொதுவான தலைவராவார்! //
உண்மை தான் மணி..அவரிடம் உலகம் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உண்டு.
// siva said...
ReplyDeleteசெங்கோவி வாழ்க, ...செங்கோவி சேவை நாட்டுக்குத் தேவை..//
ரைட்டு!
// K.s.s.Rajh said...
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க பாஸ்
நேத்து எனக்கு ஒரு மனவருத்தம் பாஸ் நேத்து காந்தியுனுடைய படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் ஒரு பயபுள்ளைகூட லைக்கோ,கமண்டோ போடலை,நம்ம தனிமரம் மட்டும் கமண்ட் போட்டு இருந்தார். //
திட்டாம இருந்தாங்களே, அதுவே பெரிய விஷயம் தான் கிஸ்ராஜா.
// மாய உலகம் said...
ReplyDeleteஅகிம்சை என்ற ஒரு அற்புத ஆயுதத்தை சிந்தித்த.. பேராத்மா... அவர் புகழ் என்றும் வாழ்க //
என்றும் நம் நினைவில் வாழ்வார்.
// மதுரன் said...
ReplyDeleteஅதிலும் காந்தியை கூட அவதூறாக பேசியவர்களும் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்..//
கூகுள்கிட்டக் கேளுங்க..பயங்கர ஆராய்ச்சியெல்லாம் தெரிய வரும்.
வைகை said...
ReplyDelete// காந்தி கொண்டாடப்பட வேண்டியவர்தான்... சந்தேகமில்லாமல்! ஆனால் எனது வருத்தம் காந்தியை கொண்டாடும் அளவிற்கு நேதாஜியையும் பகத்சிங்கையும் கொண்டாட வில்லை என்பதே.. //
மற்றவர்கள் கொண்டாடவிட்டால் என்ன?...நாம் கொண்டாடுவோம்.
//சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏதோ அவர்களால் மட்டுமே இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததை போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டு பல தலைவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டது! //
ReplyDeleteஇந்தக் காங்கிரஸ் வேறு..அந்தக் காங்கிரஸ் வேறு. சுதந்திரம் வாங்கியது காந்தியின் காங்கிரசால்..இது நேரு ஃபேமிலி காங்கிரஸ்.
// dr suneel krishnan said...
ReplyDeleteஅன்புள்ள செங்கோவி-
உண்மையில் நன்றாக தொகுத்து எழுதியுள்ளீர்கள் .வாழ்த்துக்களும் நன்றிகளும் .காந்தி இந்தியாவிலிருந்து புறப்பட்ட உலக தலைவர் .இந்திய தேசியம் என்பதை கடந்து மிகப்பெரிய கனவுகளை கண்டார் .சென்ற நூற்றாண்டின் ஆகசிறந்த வரலாற்று நிகழ்வு என்பது காந்தி என்றே சொல்வேன்.ஏனெனில் கத்தியும் ரத்தமும் ஓடிய யுத்த களத்தில் தாகத்தை முன்னிறுத்தி,மனிதனின் நீதியுணர்வை உரசி எழுப்பும் போராட்டம் காந்தியுனுடயது . அது வரவில்லை என்றால்,இன்று உலக அளவில் உயிரிழப்புகள் இன்னும் பல கொடிகளை தாண்டி இருக்கும் .//
உண்மை நண்பரே. வருங்காலத்தில் ஜனநாயக நாட்ட்ல் போராட சத்தியாக்கிரகமே சரியான வழியாக இருக்கும் என்று கணித்தார். இந்தியா போன்ற பல்வேறு இனங்கள்கூடி வாழும் நாட்டில், ஆயுதப்போராட்டம் என்பது அவர்களுக்குள் அடித்துக்கொண்டு சாகவே வழி வகுக்கும் என்று கண்டுணர்ந்தார். அதுவே நவீன போராட்டமுறையை உலகத்திற்குத் தந்த ஞானியாக அவரை ஆக்கியது!
உங்களைப் போன்ற ஓர் இளைஞரிடம் காந்தியைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களுக்குத் தெரிந்த செய்தியை அழ்காக,கோர்வையாக, எளிமையாகச் சொல்கிறீர்கள்.காந்தியை போன தலைமுறையினர் திட்டித் தீர்த்தார்க்ள். எங்களைப் போன்றவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க முடியவில்லை.
ReplyDeleteஎன் தந்தையாரின் நாட்குறிப்புக்கு இணைப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.கணிசமான பேர் பார்த்துள்ளனர்.
காந்திஜயந்தி 2 அக் 2011 அன்று என் ஆக்கமான'இந்தியாவுக்கான சேவகர்கள்'
வகுப்பறையில் வந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டுகிறேன்.
மீண்டும் நன்றி!
காந்திஜயந்தி 2 அக் 2011 அன்று என் ஆக்கமான'இந்தியாவுக்கான சேவகர்கள்'
ReplyDeleteவகுப்பறையில் வந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டுகிறேன்.
http://classroom2007.blogspot.com
இறையண்பு சொன்னது போல 'இறைமை என்பது தண்மை'. முதிர்ச்சியடைந்த காந்தியும் இறைமை தண்மை கொண்டவர். உணர்வுகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தினாலும் இன்னமும் இந்தியா என்னும் நாட்டின் எல்லைக்கோட்டுகுள் இருந்து கொண்டே உரிமக்காக போராடுவதும் காந்தியின் வழிதான்.
ReplyDeleteஇன்று 'கான்'களெல்லாம் 'காந்தி' என்று போலி வேடம் தரிப்பதால்தான் காந்தியின் பெயருக்கான வீச்சு குறைந்து வருகிறது.
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - அக் '2011)
அண்ணன் சீரியஸ் கட்டுரைல பின்றாரே?
ReplyDeleteகாந்தியைப் பற்றி சரியான தெளிவான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...(எதுக்கு?)
#காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே. # - உண்மை. மக்களுக்கு இந்திய தேசம் என்ற உணர்வை உருவாக்கினார். காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய லின்க்கை கிளிக் செய்தால் உங்கள் பதிவே வருகிறது.
ReplyDelete//தறுதலை said... [Reply]
ReplyDeleteஇன்று 'கான்'களெல்லாம் 'காந்தி' என்று போலி வேடம் தரிப்பதால்தான் காந்தியின் பெயருக்கான வீச்சு குறைந்து வருகிறது.//
காந்தி பெயரை சம்பந்தமேயில்லாமல் பின்னால் போட்டுக்கொண்டு, கெடுத்ததில் நேரு குடும்பத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.
// சி.பி.செந்தில்குமார் said... [Reply]
ReplyDeleteஅண்ணன் சீரியஸ் கட்டுரைல பின்றாரே? //
ஹி..ஹி..
// !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply]
ReplyDeleteவாழ்த்துக்கள்...(எதுக்கு?) //
நன்றி...(எதுக்கா இருந்தாலும்!)
// sontha sarakku said... [Reply]
ReplyDeleteகாந்தி ஆசிரமம் கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய லின்க்கை கிளிக் செய்தால் உங்கள் பதிவே வருகிறது. //
சரி செய்துவிட்டேன் நண்பரே..சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
அதுவே காந்தியையும் இந்தியாவையும் இன்று வரை காக்கின்றது, இனியும் காக்கும்!//
ReplyDeleteஇந்திய தேசம் உருவாக காந்தி காரணம்..அதுதான் காக்கிறது என்பது நெருடல்..அவர் துவங்கிய கட்சியே இன்று பாதுகாப்பற்ற சூழலை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது
சுதந்திரம் கொடுத்தபோது, ஆங்கிலேயர் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் என்றே நம்பினர். ஆனால் அப்படிச் சிதறாமல் காத்தது காந்தியமே. அதனாலேயே பிரிவினை சக்திகளால் இன்றளவும் கடுமையாக வசை பாடப்படுகிறார் காந்தி//
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மைதான்.. மிகவும் நல்ல பதிவு காந்தி பற்றி தூற்றூவோர் படித்து அவரைப்பற்றி தெரிந்துகொள்ளட்டும்... ஆனால் எனக்கு காந்தியின் மீது ஒரு விஷயத்தில் கோபம் இருக்கிறது.. அவர்தான் இந்த தேசத்திற்கு காங்கிரஸ் என்ற ஒரு ஒட்டுண்ணியை விட்டுச்சென்றுவிட்டார்...
காங்கிரஸ் காந்திய வழியில் இருந்தது நேருவோடு முடிந்துவிட்டது, நேருவின் வாரிசுகள் காங்கிரஸின் புனிதத்தையும் பலர் உயிர் விட்டு உருவாகிய இந்தியா என்ற தேசத்தின் பெருமையையும் கெடுத்து குட்டிச்சுவராகிவிட்டார்கள்...
இன்று நம் பதிவில்: உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள- பாகம்2...
http://vigneshms.blogspot.com/2011/10/blog-post_02.html
வந்து படித்து கருத்துக்களையும் வாக்குக்களையும் வாரிவழங்குங்கள்...
குட் மோர்னிங்கு!மண்டே வாழ்த்துக்கள்!இன்னிக்கு குட் டேயா அமையணும்னு வாழ்த்துறேன்!(பவுடர் மணி மட்டும் தான் வாழ்த்தணுமா?)பசங்க முழிச்சுக்கிட்டாங்க போலருக்கு?
ReplyDeleteCENTURY!
ReplyDeleteதங்களது வித்தியாசமான ,கூர்மையான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஇன்ட்லி ஐந்து
ReplyDeleteஅருமையான பகிர்வு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ......
ReplyDelete// ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
ReplyDeleteஅதுதான் காக்கிறது என்பது நெருடல்..அவர் துவங்கிய கட்சியே இன்று பாதுகாப்பற்ற சூழலை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது //
காங்கிரசைத் துவங்கியது காந்தியும் அல்ல.
இப்போது இருப்பது காந்தியின் காங்கிரசும் அல்ல.
‘காப்பது’ காங்கிரஸ் கட்சியும் அல்ல.
மக்கள் மனதில் வாழும் அன்பு அடிப்படையிலான காந்தியமே காக்கிறது.
// Heart Rider said...
ReplyDeleteஅவர்தான் இந்த தேசத்திற்கு காங்கிரஸ் என்ற ஒரு ஒட்டுண்ணியை விட்டுச்சென்றுவிட்டார்...//
காந்தி அப்போதே காங்கிரசைக் கலைக்கச் சொல்லிவிட்டார் தம்பி. அவர் சொன்ன அந்த நிமிடமே, அந்த காங்கிரஸ் முடிந்துபோய்விட்டது. இது வேறு காங்கிரஸ்.
மைசூர்போண்டாக்குள்ள மைசூர் கிடையாது. இந்த காங்கிரஸ்க்குள்ள காந்தியமும் கிடையாது.
// Yoga.s.FR said...
ReplyDeleteகுட் மோர்னிங்கு!மண்டே வாழ்த்துக்கள்!இன்னிக்கு குட் டேயா அமையணும்னு வாழ்த்துறேன்!(பவுடர் மணி மட்டும் தான் வாழ்த்தணுமா?)//
தாராளமா வாழ்த்துங்க ஐயா.
//M.R said...
ReplyDeleteதங்களது வித்தியாசமான ,கூர்மையான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே //
நன்றி ரமேஷ்.
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஇந்தியாவில் நிலவியிருந்த அடிமை முறையினை நீக்குவதற்கும், சுதந்திர இந்தியாவின் வளர்சிக்கும் தூண்டுகோலாகவும் இருந்தவர் காந்தி என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.
அதே போன்று இந்தியாவின் ஜனநாயக ரீதியான அரசியற் செயற்பாடுகளுக்கும் முன்னோடியாக இருந்தவர் காந்தி என்பது நான் வரலாற்றினூடாக கற்றுக் கொண்டது.
டாபிக்கோடு ஒப்பிட்டுக் கமெண்ட் போட முடியவில்லை,
மன்னிக்கவும் பாஸ்.
//அம்பாளடியாள் said...
ReplyDeleteஅருமையான பகிர்வு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ......//
நன்றி சகோ.
நிரூபன் said...
ReplyDelete// இனிய காலை வணக்கம் பாஸ்//
வணக்கம் நிரூ.
//டாபிக்கோடு ஒப்பிட்டுக் கமெண்ட் போட முடியவில்லை//
பதிவில் சொல்லிய கருத்தைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள்..
பாஸ், மீண்டும் பதிவினை இரண்டரைத் தடவை படித்தேன்,
ReplyDeleteஉண்மையில் சிதறுண்டு கிடந்த இந்தியாவினை ஒரு கிடையின் அணி சேர்த்து ஒருங்கிணைந்த பாரத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திர இந்தியாவின் தோற்றத்திற்கும் வழி வகுத்தவர் காந்தி என்பதில் ஐயமில்லை!
காந்தியைப் பற்றி விமர்சிப்போர் எல்லாம் உண்மையில் இந்திய வரலாற்றினை முழுமையாக அறியாத,
கடந்த காலப் பாரதத்தின் வரலாற்றினை உணராதோர் என்பது தான் என் கருத்துப் பாஸ்.
ஆண்டு தோறும் இம் மகானை நாம் நினைவு கொள்வதோடு, அவரின் கனவினை வலுப்படுத்தி, இந்தியாவின் வலிமையினை அதிகரித்து, ஒற்றுமை கொண்ட இனமாக அனைவரோடும் கை கோர்த்து அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணுவதே இம் மகானிற்கு இந்தியக் குடிமக்கள் செய்யும் சிறந்த கௌரவமாகும்!
பகிர்வுக்கு நன்றி மாப்ள!
ReplyDeleteகாந்தியையும் காந்தியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும்/எடுத்துச் செல்லும் கடமை நமக்குள்ளது. அதை உணர்த்தும் வகையில் மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteசூப்பரண்ணே!
ReplyDeleteகாந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!//
ReplyDeleteதலைப்பு அருமை, அதே வேளையில் காந்திய பாதையில் இருந்து இந்தியா விலகி பலகாலமாகி விட்டது...!!! ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்...
// நிரூபன் said... [Reply]
ReplyDeleteபாஸ், மீண்டும் பதிவினை இரண்டரைத் தடவை படித்தேன் //
2 1/2 தடவையா? இந்த ஆளுக்கு இன்னைக்கு என்னாச்சு...தூக்கக்கலக்கத்துல இருக்காரா?
// விக்கியுலகம் said... [Reply]
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மாப்ள! //
நன்றிக்கு நன்றி மாப்ள.
// வேங்கட ஸ்ரீனிவாசன் said... [Reply]
ReplyDeleteகாந்தியையும் காந்தியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும்/எடுத்துச் செல்லும் கடமை நமக்குள்ளது. அதை உணர்த்தும் வகையில் மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ. //
வாழ்த்துக்கு நன்றி பாஸ்.
// ஜீ... said... [Reply]
ReplyDeleteசூப்பரண்ணே! //
சூப்பர் ஜீ.
// MANO நாஞ்சில் மனோ said... [Reply]
ReplyDeleteகாந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!//
தலைப்பு அருமை, அதே வேளையில் காந்திய பாதையில் இருந்து இந்தியா விலகி பலகாலமாகி விட்டது...!!! ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்... //
ஓஹோ...!
காந்தியம் இந்திய அரசுகிட்ட வாழவில்லை, இந்த மக்களிடையே வாழ்கிறது. அந்த மக்களின் போராட்டங்களே காந்தியிடம் கற்றுக்கொண்டது தான்.- அப்படீன்னு தான் பதிவுல சொல்லியிருக்கேன்ணே!
நல்ல பதிவு அண்ணா.... தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன்..... காத்திரமான பதிவு காத்திரமான பதிவு என்று சொல்லுவாங்களே அது இது தானா.... பதிவு அசத்தல்.
ReplyDelete//காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது//
ReplyDeleteஆணித்தரமான கருத்து.
லேட்டானாலும்,நல்ல பதிவைத் தந்து விட்டீர்கள்!
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
ReplyDeletehttp://gandhiashramkrishnan.blogspot.com/ நல்லதொரு இணைப்பு...செங்கோவி...
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எடுப்பார் கை பிள்ளைகள் என ஆணித்தரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்போதும் நம் மக்கள் அதை தானே செய்கிறார்கள்.
ReplyDeletehttp://www.gandhitoday.in/2011/10/blog-post_03.html
ReplyDeletepayanulla web page about Gandhiji
//துஷ்யந்தன் said...
ReplyDeleteநல்ல பதிவு அண்ணா.... தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன்..//
சந்தோசம் துஷ்.
//சென்னை பித்தன் said...
ReplyDelete//காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது//
ஆணித்தரமான கருத்து.
லேட்டானாலும்,நல்ல பதிவைத் தந்து விட்டீர்கள்!//
நன்றி ஐயா.
// ரெவெரி said...
ReplyDeleteகாந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
http://gandhiashramkrishnan.blogspot.com/ நல்லதொரு இணைப்பு...செங்கோவி...//
ஆமாம், அனைவரும் படிக்க வேண்டிய டைரி அது.
//FOOD said...
ReplyDelete125. காந்தி ஜெயந்தி ஸ்பெஷலா? எந்த சப்ஜக்ட் என்றாலும் கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.//
எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசீர்வாதம் தான் சார்.
//
ReplyDeleteaaa said...
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எடுப்பார் கை பிள்ளைகள் என ஆணித்தரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்போதும் நம் மக்கள் அதை தானே செய்கிறார்கள்.//
ஆம், எப்போதும் நம் மக்கள் போராட்டம் என்றால் பின்வாங்கவே செய்வர்.
இன்னிக்கு என்ன ஆராய்ச்சி பண்ணப் போறாரோ?
ReplyDelete@Yoga.s.FR
ReplyDeleteஅக்டோபர் - 1..............?
அன்புள்ள செங்கோவி உங்களது இந்த கட்டுரையை காந்தி -இன்று தளத்திற்கு பயன்படுத்திகொள்கிறோம்
ReplyDelete//dr suneel krishnan said...
ReplyDeleteஅன்புள்ள செங்கோவி உங்களது இந்த கட்டுரையை காந்தி -இன்று தளத்திற்கு பயன்படுத்திகொள்கிறோம் //
ஓகே...தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
புலியிடமிருந்து தப்பித்து வேடன் கையில் மாட்டிய கதையாகிப் போனதே, நம்ம கதை.....!! வெள்ளைக்காரன்கிட்ட அடிமையாய் இருந்திருந்தா கூட நம்ம தேசம் இவ்வளவு கேவலமான நிலைக்குப் போயிருக்குமா என்று தெரியவில்லை. போது மக்களிடம் நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது விவசாய நிலங்களை அட்மாட்டு விலைக்கு வாங்கி தாரை வார்த்தல், அடிப்படை விலங்களை வாரி அவர்களுக்கு வழங்குதல், சுரங்கங்கள் தோண்டுவதற்காக அங்கு வாழும் மக்களை கொல்லுதல் போல பல மனித உரிமை மீறல்கள், சில பணக்காரர்களுக்காக பெரும்பாலான மக்கள், உணவு, நீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வாடுதல்...... என்னத்தை கண்டோம் சுதந்திரம் வாங்கி....????
ReplyDelete