வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.
பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.
இப்படி ஒரு பத்து நாள் தொடர்ச்சியா செலவழிக்காம இருந்தா, ஆட்டோமெடிக்கா சிக்கனமாய் இருப்பது எப்படி-ன்னு நாம தெரிஞ்சிக்கிறோம். செலவழிக்காமல் சந்தோசமாய் இருக்கும் வழி முறைகளையும் நாம அறிஞ்சுக்கிறோம். இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்.
ஸ்டார்ட்....! :
மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும். ‘அய்யோ காசு?”ன்னு பதறக்கூடாது. பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.
நல்ல ஏசி வச்ச காரை வாடகைக்கு எடுத்துக்கோங்க. தங்கமணியைக் கூட்டிக்கிட்டு தலை தீபாவளிக்குக் கிளம்புங்க.(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)
கார்ல போகும்போதே டிரைவர்கிட்ட ‘நான் தலை தீபாவளிக்குப் போறேன்’-ன்னு தெளிவாச் சொல்லிடணும். ஜல்ல்லுன்னு கார்னு போய் இறங்குறீங்க. இப்போத் தான் உஷாரா நடந்துக்கணும். அங்க போய் இறங்குனதும், டிரைவரைத் திரும்பியே பார்க்கக்கூடாது.
‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.
எண்ணெய்க் குளியல் :
குளிக்கறதே கஷ்டமான விஷயம், இதுல எண்ணெய்க்குளியல் வேறயான்னு அலுத்துக்கக்கூடாது. குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க. வேற வழியே இல்லை..ஓசி ட்ரெஸ் வேணுமா, இல்லியா? அப்போ குளிங்க.
இன்னொரு முக்கியமான விஷயம்.உங்களைக் குளிக்கக் கூப்பிடும்போது ஸ்டைலா கூப்பிடணும்னு முதல்லயே தங்கமணிகிட்டச் சொல்லிடுங்க. எப்படின்னா “ஹாட் வாட்டர் ரெடி..கம்யா..டேக் பாத்யா”.
இதைக் கேட்டதும் மாமனார்-மாமியார் உச்சி குளிர்ந்திடும். ‘அடி ஆத்தி..இங்க இருந்தவரைக்கும் ‘யெம்மா..வென்னி சுட்ருச்சாம்மா?’ன்னு கேட்ட புள்ள, இப்போ என்னென்னமோ பேசுதே..படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.
ட்ரெஸ் :
நீங்க மீட்டர் 50 ரூபாய்க்கு விக்கிற துணில சட்டை நப்பித்தனமான ஆசாமியா இருக்கலாம். ஆனால் இப்போ நீங்க பீட்டர் இங்க்லேண்ட், சியரோ மாதிரி கம்பெனி சட்டை போடற நல்ல காலமும் உங்க வாழ்க்கையில் வந்தாச்சு. அதுக்காக அவங்க ட்ரெஸ்ஸைக் கொடுக்கும்போது ஈன்னு இளிச்சுடக்கூடாது. கெத்தா “ஓ..திஸ் கலர்?..ஓகே..”-ன்னு சொல்லணும்.
சாப்பாடு :
தல தீபாவளில கஷ்டமான பகுதி இது தான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரம் செஞ்சு வச்சிருப்பாங்க. உடனே காய்ஞ்ச மாடு மாதிரி பாஞ்சிரக்கூடாது. பொண்ணு பார்க்கப்போகும்போது, எப்படி ஆக்ட் விட்டீங்களோ அப்படியே நாசூக்கா. லைட்டா சாப்பிடணும்.”அப்போ மீதி?’ன்னு அலறாதீங்கய்யா..சொல்றேன்..
சாப்பிடும்போதே “இந்தப் பணியாரம் யார் செஞ்சது?”ன்னு கேட்கணும். “இது எங்க பாட்டி செஞ்சது”ன்னு பதில் வந்தா “ஓ..ஐ லைக் இட்..நல்லா இருக்கு”ன்னு ஒரு அருமை கமெண்ட் சொல்லிட்டு, ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட்டுட்டு வச்சிடணும். அப்படியே எழுந்து கெத்தா ரூமுக்குள்ள போயிடணும்.
இப்படிப் பாராட்டிட்டுப் போனா பாட்டி விட்ருமா? உடனே உங்க தங்கமனிகிட்ட “அவரை இன்னும் சாப்பிடச் சொல்லு..இதையும் எடுத்துக்கோ”ன்னு தனியா கொடுத்துவிடுவாங்க. அப்புறம் என்ன, நீங்க ரூமுக்குள்ள மொக்கு மொக்குன்னு மொக்குறதைப் பார்த்துட்டு, தங்கமணியே ஊருக்கு வர்ற வரைக்கும் தனி கவனிப்பு கவனிச்சுடுவாங்க.
அப்புறம் கறி எடுக்கும்போதும் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்பாங்க. நீங்க மாமனார்கிட்ட நேரா எதுவும் சொல்லக்கூடாது. அப்படியே தங்கமணி பக்கம் திரும்பி “ஐ லைக் குடல் கறி..பட், யு நோ..ஐ அம் இன் டயட்..சோ யு ட்ரை சம்திங் எல்ஸ்’ன்னு சொல்லிட்டு, நகர்ந்திடணும். மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.
பட்டாசு :
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
ஊர் திரும்புதல் :
எப்பவும் ஓசிச்சோறே கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..ஆனாலும் என்ன செய்ய..விதி வலியது இல்லியா..ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வரவும், கிளம்புங்க. இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.
டிஸ்கி-1 : இது சொந்த அனுபவம் அல்ல.
டிஸ்கி-2 : இது ஆணாதிக்கப் பதிவு அல்ல.
டிஸ்கி-3 : இது பெண்ணாதிக்கப் பதிவும் அல்ல.
டிஸ்கி-4: எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
மாலை வணக்கம்,பொன் சுவார்!!!
ReplyDeleteபொன் சுவார் ஐயா.
ReplyDeleteநான் உங்க மேல கோபமா இருக்கேன் ஐயா..
ReplyDelete‘சின்ன’ பசங்க, ‘குட்டி’ பசங்களுக்கெல்லாம் தீபாவளி வாழ்த்துச் சொல்றீங்க..எனக்குச் சொல்லலை..
அந்த கமெண்ட்டை தூக்கணுமா?
ReplyDeleteஎதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.///சரி!!!!
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteஎதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.///சரி!!!!//
நல்லநாளும் அதுவுமா உஷாரா இருக்கணும்ல?
செங்கோவி said...
ReplyDeleteநான் உங்க மேல கோபமா இருக்கேன் ஐயா..
‘சின்ன’ பசங்க, ‘குட்டி’ பசங்களுக்கெல்லாம் தீபாவளி வாழ்த்துச் சொல்றீங்க..எனக்குச் சொல்லலை..///புரியுது,புரியுது! நமக்குத்தான் இன்னும் நேரமிருக்கே அப்பிடீன்னு விட்டுட்டேன்!தீபாவளி வாழ்த்துக்கள்!சின்னஞ்சிறு குடும்பத்துடன் இதுபோல் இன்னுமின்னும் பற்பல தீபாவளிகள் கொண்டாடி நீடூழி வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிய எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகிறோம்!!!
அஜீத் தீபாவளி கொண்டாடுறதை நாம ஏண்ணே தெரிஞ்சுக்கனும்?
ReplyDelete////எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்./////////
ReplyDeleteஓ அடேடே இந்த தலை தீபாவளியா?
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
நான் உங்க மேல கோபமா இருக்கேன் ஐயா..
‘சின்ன’ பசங்க, ‘குட்டி’ பசங்களுக்கெல்லாம் தீபாவளி வாழ்த்துச் சொல்றீங்க..எனக்குச் சொல்லலை..///புரியுது,புரியுது! நமக்குத்தான் இன்னும் நேரமிருக்கே அப்பிடீன்னு விட்டுட்டேன்!தீபாவளி வாழ்த்துக்கள்!சின்னஞ்சிறு குடும்பத்துடன் இதுபோல் இன்னுமின்னும் பற்பல தீபாவளிகள் கொண்டாடி நீடூழி வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிய எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகிறோம்!!!//
புரிஞ்சிடுத்தா..ஹி..ஹி!
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅஜீத் தீபாவளி கொண்டாடுறதை நாம ஏண்ணே தெரிஞ்சுக்கனும்?//
யோவ், அது தல..இது தலை.
/////இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்./////
ReplyDeleteஎத்தன தடவ?
ஐயையோ... பன்னிகுட்டி அண்ணனின் மொக்க கேள்விகளுக்கு மொக்க பதில் போட்டுக்கிட்டு இருந்தேன், லேட்டாயிடுச்சு...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்./////////
ஓ அடேடே இந்த தலை தீபாவளியா?//
அண்ணே, வணக்கம்.
செங்கோவி said...
ReplyDelete//Yoga.S.FR said...
எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.///சரி!!!!//
நல்லநாளும் அதுவுமா உஷாரா இருக்கணும்ல?§§§§ நமக்கு,நம்ப (இலங்கை)காலண்டரில நாளன்னிக்குத்தான்(26) தீபாவளி!ஈழத்திலும் அப்படித்தான்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////இப்போ அப்படியாப்பட்ட தலை தீபாவளியை கொண்டாடுவது எப்படின்னு பார்ப்போம்./////
எத்தன தடவ?//
அது மாமனாரின் ‘நல்ல மனசைப்’ பொறுத்தது.
/////(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)//////
ReplyDeleteஅத கூட்டிக்கிட்டு ஊட்டி, தேக்கடின்னு போகனும்ணே.... அது வேற...
// மொக்கராசு மாமா said...
ReplyDeleteஐயையோ... பன்னிகுட்டி அண்ணனின் மொக்க கேள்விகளுக்கு மொக்க பதில் போட்டுக்கிட்டு இருந்தேன், லேட்டாயிடுச்சு...//
மொக்கை கேள்வியா..பன்னியாரை இப்படியா அவமானப்படுத்திட்டீங்களே..
செங்கோவி said...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா./// நன்றி! நன்றி!! நன்றி!!!
ReplyDelete//////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்./////////
ஓ அடேடே இந்த தலை தீபாவளியா?//
அண்ணே, வணக்கம்.//////
வணக்கம் வணக்கம், அனைவருக்கும் (தலை) தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
//Yoga.S.FR said...
எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.///சரி!!!!//
நல்லநாளும் அதுவுமா உஷாரா இருக்கணும்ல?§§§§ நமக்கு,நம்ப (இலங்கை)காலண்டரில நாளன்னிக்குத்தான்(26) தீபாவளி!ஈழத்திலும் அப்படித்தான்!//
ஹி..ஹி..எங்களுக்கும் நாளன்னிக்குத் தான்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////(பின்னே, பக்கத்து வீட்டு ஆண்ட்டியை வா கூட்டிட்டுப் போக முடியும், ராஸ்கல்!)//////
அத கூட்டிக்கிட்டு ஊட்டி, தேக்கடின்னு போகனும்ணே.... அது வேற...//
அனுபவப் பகிர்வுக்கு நன்றி..நன்றி.
/////செங்கோவி said...
ReplyDelete// மொக்கராசு மாமா said...
ஐயையோ... பன்னிகுட்டி அண்ணனின் மொக்க கேள்விகளுக்கு மொக்க பதில் போட்டுக்கிட்டு இருந்தேன், லேட்டாயிடுச்சு...//
மொக்கை கேள்வியா..பன்னியாரை இப்படியா அவமானப்படுத்திட்டீங்களே..//////
யோவ் அதெல்லாம் என்னமோ நானே கண்டுபுடிச்ச கேள்விக மாதிரியே கோர்க்கிறீரே?
//குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க.///
ReplyDeleteதிரும்பவும் குளிக்க வைக்க ட்ரை பண்ணுறாரே, பிரபலமாகலாம், கோடிஸ்வரர் ஆகலாம், புது ட்ரெஸ் கெடைக்கும்.. அப்போ குளிச்சிட வேண்டியதுதான்...
வந்திருக்கிறவங்க அத்தன பேருக்கும் வணக்கம்,இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்!ப.ரா.வை கிண்டல் செய்த மொ.ரா வை கண்டிக்கிறேன்!
ReplyDeleteமொக்கராசு மாமா said...//குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க.///திரும்பவும் குளிக்க வைக்க ட்ரை பண்ணுறாரே, பிரபலமாகலாம், கோடிஸ்வரர் ஆகலாம், புது ட்ரெஸ் கெடைக்கும்.. அப்போ குளிச்சிட வேண்டியதுதான்...///சுத்தம் சுகமும் தரும்!
ReplyDelete/////‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு./////////
ReplyDeleteஎன்னா டெக்குனிக்குய்யா...... ஒருவேள மாமனாருகிட்ட அவ்ளோ காசு இல்லேன்னா....? வடிவேலும் மாதவனும் ஆட்டோவை வெச்சி மெயிண்டெயின் பண்ணுவாங்களே அந்த மாதிரி பண்ணனுமா?
///பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
// மொக்கராசு மாமா said...
ஐயையோ... பன்னிகுட்டி அண்ணனின் மொக்க கேள்விகளுக்கு மொக்க பதில் போட்டுக்கிட்டு இருந்தேன், லேட்டாயிடுச்சு...//
மொக்கை கேள்வியா..பன்னியாரை இப்படியா அவமானப்படுத்திட்டீங்களே..//////
யோவ் அதெல்லாம் என்னமோ நானே கண்டுபுடிச்ச கேள்விக மாதிரியே கோர்க்கிறீரே?///
நீங்களா யோசிக்கிறதுக்கு நீங்க என்னா "நானா யோசிச்சேன்" பார்ட்டியா? விடுங்க பாஸ்..
//////.படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.//////
ReplyDeleteஇங்க நிக்கிறாருய்யா அண்ணன்......
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க.///
திரும்பவும் குளிக்க வைக்க ட்ரை பண்ணுறாரே, பிரபலமாகலாம், கோடிஸ்வரர் ஆகலாம், புது ட்ரெஸ் கெடைக்கும்.. அப்போ குளிச்சிட வேண்டியதுதான்...//
இன்னமும் யோசிச்சுக்கிட்டுத் தான் இருக்கீங்களா..
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி...................!!!!!!///இதனை நான் வன்மையாக(மென்மையாக?)கண்டிக்...........................................!!!
ReplyDelete///Yoga.S.FR said...
ReplyDeleteமொக்கராசு மாமா said...//குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க.///திரும்பவும் குளிக்க வைக்க ட்ரை பண்ணுறாரே, பிரபலமாகலாம், கோடிஸ்வரர் ஆகலாம், புது ட்ரெஸ் கெடைக்கும்.. அப்போ குளிச்சிட வேண்டியதுதான்...///சுத்தம் சுகமும் தரும்!////
ஐயா வேற என்ன என்ன தரும்? சுகமும்ன்னு போட்டு இருக்கீங்களே?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////‘மாமா நல்லா இருக்கீஙக்ளா..அத்தை சவுக்கியமா, மச்சினி ஹி..ஹி’-ன்னு சொல்லிக்கிட்டே மாமனார் வீட்டுக்குள்ள ஓடிடணும். அங்க ஏதாவது குழந்தை இருந்தா, இன்னும் நல்லது. இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு./////////
என்னா டெக்குனிக்குய்யா...... ஒருவேள மாமனாருகிட்ட அவ்ளோ காசு இல்லேன்னா....? வடிவேலும் மாதவனும் ஆட்டோவை வெச்சி மெயிண்டெயின் பண்ணுவாங்களே அந்த மாதிரி பண்ணனுமா?//
நீங்க மெயிண்டய்ன் பண்றதுலேயே இருங்க..
//Yoga.S.FR said...
ReplyDeleteமச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி...................!!!!!!///இதனை நான் வன்மையாக(மென்மையாக?)கண்டிக்...........................................!!!//
ஐயா ஏன் மச்சினியைக் கண்டிக்காரு?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////.படிச்ச மாப்ளைக்கு கட்டிக்கொடுத்தது வீண் போகலை பார்த்தியா’ன்னு நினைச்சு சந்தோசப்பட்டுப்பாங்க. அப்புறம் என்ன,. இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க.//////
இங்க நிக்கிறாருய்யா அண்ணன்......//
உட்காரலாமா?
////// மாமனார் பொண்ணுகிட்ட “மாப்ள, என்னம்மா சொல்லுதாரு?’ன்னு கேட்பாரு. அதுக்கு தங்கமனியும் “அவருக்கு குடல் கறி தான் வேணுமாம்”னு தெளிவா மொழிபெயர்ப்பாங்க.///////
ReplyDeleteபோட்டி சாப்பாட வாட்டமா சாப்புடலாம்......... மனுசன் என்னமா யோசிக்கிறாருய்யா....
வணக்கம் மாப்பிள மற்றும் அபையோரே என்னங்க எல்லோரும் தீவாவளி வாழ்த்து சொல்லுறீங்க அண்ண சொன்னதுபோல் நாங்க புதன் கிழமைதான் தீவாவளி கொண்டாடுகிறோம் ஏன்யா இப்படி தீபாவளியிலேயே குழப்படி செய்யுறாங்க..
ReplyDelete/////மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.//////
ReplyDeleteஏண்ணே....? சரி பெரியமனுசன் சொல்லுதாரு, கேட்டுக்குவம்.....
ரெண்டாவதா போட்டிருக்கிற ஸ்டில்லில இருக்கிற பொண்ணுதான் நகையும், நட்டு?!மா ஜெகஜோதியா மின்னுது!
ReplyDeleteகல்யாணம் ஆகாத என்னை போன்றவர்களுக்கு தலை தீபாவளி இல்லியா ..அவ்வ்வ்வ் ..)
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDelete///Yoga.S.FR said...
மொக்கராசு மாமா said...//குளிச்சாத்தான் புது ட்ரெஸைக் கொடுப்பாங்க.///திரும்பவும் குளிக்க வைக்க ட்ரை பண்ணுறாரே, பிரபலமாகலாம், கோடிஸ்வரர் ஆகலாம், புது ட்ரெஸ் கெடைக்கும்.. அப்போ குளிச்சிட வேண்டியதுதான்...///சுத்தம் சுகமும் தரும்!////
ஐயா வேற என்ன என்ன தரும்? சுகமும்ன்னு போட்டு இருக்கீங்களே?//
யோவ், என்னதான்யா வேணும் உமக்கு?
//////இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.//////
ReplyDeleteமச்சினன் அஞ்சு அன்லிமிட்டட் மீல்சை அனாசயமா சாப்புடுறவனா இருந்தா என்ன செய்வீரு?
// கந்தசாமி. said...
ReplyDeleteகல்யாணம் ஆகாத என்னை போன்றவர்களுக்கு தலை தீபாவளி இல்லியா ..அவ்வ்வ்வ் ..)//
கந்து,
/
நிகழ்வுகள் wrote: "தலையில தீபத்த வச்சு இரண்டு வாட்டி வீட்ட சுத்தி வந்தா அது தான் தல தீபாவளி ..)"/
இது நீங்க சொன்னது தானே...அதைச் செய்ங்க.
வணக்கம் - எல்லாருக்கும்
ReplyDeleteசெங்கோவிக்கு - தலை தீபாவளி வாழ்த்துக்கள்
பாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteஹி ஹி குளிச்சாதான் புது உடுப்பா என்னையா என்னையா அநியாயம் அப்பிடின்னா அந்த கருமம் எனக்கு வேண்டாம் நான் இதையே வைச்சிருக்கேன்யா..
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteஹி ஹி குளிச்சாதான் புது உடுப்பா என்னையா என்னையா அநியாயம் அப்பிடின்னா அந்த கருமம் எனக்கு வேண்டாம் நான் இதையே வைச்சிருக்கேன்யா..//
ஓ..அதுக்குப் பயந்து தான் இப்படி அலையறேளா மாமா?
காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள மற்றும் அபையோரே என்னங்க எல்லோரும் தீவாவளி வாழ்த்து சொல்லுறீங்க அண்ண சொன்னதுபோல் நாங்க புதன் கிழமைதான் தீவாவளி கொண்டாடுகிறோம் ஏன்யா இப்படி தீபாவளியிலேயே குழப்படி செய்யுறாங்க.///வணக்கம் காட்டான்!அப்படி ஒன்றுமில்லை!எங்களைவிட இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் தீபாவளி விசேஷம் தானே?ஒரு வாரம் வரை நீடிக்கும்.ஒரு தடவை தீபாவளி சமயத்தில் சென்றிருக்கிறேன்! நாம் தான் கஞ்சப் பயல்களாச்சே???
///பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
ஹீ ஹீ... நன்றி சார்....
டிஸ்கி-1 : இது சொந்த அனுபவம் அல்ல.
ReplyDeleteடிஸ்கி-2 : இது ஆணாதிக்கப் பதிவு அல்ல.
டிஸ்கி-4 : இது பெண்ணாதிக்கப் பதிவும் அல்ல.
டிஸ்கி-3 : எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.
டிஸ்கி-5: மேற்குறிப்பிட்ட ஐடியாக்களை முயற்சி செய்து சேதாரம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது.
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////இப்பவும் ஏசி வச்ச கார் தான் வேணும்னு கேட்டு வாங்கிக்கோங்க. கிளம்பிம்போது மச்சினனை கூடவே ஏத்திக்கோங்க. எதுக்கா?..அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.//////
மச்சினன் அஞ்சு அன்லிமிட்டட் மீல்சை அனாசயமா சாப்புடுறவனா இருந்தா என்ன செய்வீரு?//
அதுக்குத் தான் உடனே அதே கார்ல திருப்பி அனுப்பச் சொல்லியிருக்கேனே..
கந்து,
ReplyDelete/
நிகழ்வுகள் wrote: "தலையில தீபத்த வச்சு இரண்டு வாட்டி வீட்ட சுத்தி வந்தா அது தான் தல தீபாவளி ..)"/
இது நீங்க சொன்னது தானே...அதைச் செய்ங்க.
October 25, 2011 12:06 AM
ஹி ஹி இதுதான்யா பொல்ல கொடுத்து அடிவாங்குறதுன்னு சொல்லுவாங்க
//டிஸ்கி-2 : இது ஆணாதிக்கப் பதிவு அல்ல.
ReplyDeleteடிஸ்கி-4 : இது பெண்ணாதிக்கப் பதிவும் அல்ல.//
அப்போ இது காஞ்சனா ஆதிக்க பதிவா? ஒங்க எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா?
//அப்பு said...
ReplyDeleteவணக்கம் - எல்லாருக்கும்
செங்கோவிக்கு - தலை தீபாவளி வாழ்த்துக்கள்//
வணக்கம் அப்பு..
தலைதீபாவளி என்ன வருசாவருசமா வரும்? மாமனார் பாவம் இல்லியா..
தீபாவளி தீபாவளி தான்....
ReplyDelete/////பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.////////
ReplyDeleteசெங்கோவி
கடைசில பதறிப் போய் இது பதிவே இல்லைன்னு சொல்லிட்டிங்களே?
யோவ் என்னய்யா டிஸ்கில் நம்பர் தாறுமாறா போட்டிருக்கீரு....?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
அண்ணே, உங்களுக்குக்கூட வெட்கம் வருமாண்ணே?
மொக்கை பின்னாடி ஒளியிறீங்க..
மொக்கராசு மாமா said...ஐயா வேற என்ன என்ன தரும்? "சுகமும்"ன்னு போட்டு இருக்கீங்களே?//அதான் பதிவில செங்கோவி சொல்லியிருக்காரே?ஓ...மச்சினி கேக்குதோ?
ReplyDeleteஅஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் என்னய்யா டிஸ்கில் நம்பர் தாறுமாறா போட்டிருக்கீரு....?////
இது பதிவே இல்லை... இதுல நம்பர் தப்பா இருந்தா நமக்கென்ன?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் என்னய்யா டிஸ்கில் நம்பர் தாறுமாறா போட்டிருக்கீரு....?//
அண்ணே, 3-ஐ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணி எடிட் பண்ணி...
பார்த்தீங்களா..ஒரு டிஸ்கியைக்கூட எனக்கு ஒழுங்கா காப்பி-பேஸ்ட் பண்ணத்தெரியலை..
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDeleteடிஸ்கி-5: மேற்குறிப்பிட்ட ஐடியாக்களை முயற்சி செய்து சேதாரம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது.///////
அண்ணே வணக்கம்,
உங்க டிஸ்கி அருமைண்ணே
/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
அண்ணே, உங்களுக்குக்கூட வெட்கம் வருமாண்ணே?
மொக்கை பின்னாடி ஒளியிறீங்க..//////
யோவ் இவ்ளோ டீசண்ட் படம் போட்டா அப்புறம் வெட்கமாத்தான் இருக்கும்... நம்ம ரேஞ்சு என்ன... லெவல் என்ன?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'
Yoga.S.FR said...
ReplyDeleteகாட்டான் said...
ஹி ஹி நீங்க வேற நாட்ட விட்டு வந்ததற்கு இதுவரை நான் தீபாவளி கொண்டாடினதில்லை இந்தியாவில் தீபாவளி மாத்திரமில்ல சரஸ்வதி பூசையும் பிரமாண்டமாதான் கொண்டாடுவாங்க... சரஸ்வதி பூசை நடந்த போது ஒருமுறை அங்கு இருந்தேன்..
///செங்கோவி said...
ReplyDeleteஅண்ணே, 3-ஐ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணி எடிட் பண்ணி...
பார்த்தீங்களா..ஒரு டிஸ்கியைக்கூட எனக்கு ஒழுங்கா காப்பி-பேஸ்ட் பண்ணத்தெரியலை..///
அண்ணே இம்புட்டு அப்பாவியா இருக்கீங்களே?
அப்பு said.../////பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.////////செங்கோவிகடைசில பதறிப் போய் இது பதிவே இல்லைன்னு சொல்லிட்டிங்களே?///ஊமக்காயம் பட்டுடுச்சுன்னா?அதான்!
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
தீபாவளி தீபாவளி தான்....//
என்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?
//////// அப்பு said...
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி
டிஸ்கி-5: மேற்குறிப்பிட்ட ஐடியாக்களை முயற்சி செய்து சேதாரம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது.///////
அண்ணே வணக்கம்,
உங்க டிஸ்கி அருமைண்ணே//////
பாவம் நம்ம செங்கோவிக்கு சேதாரம் எதுவும் ஆகிடக்கூடாதேன்னுதான்......
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
வேணும்னா ஓப்பனாக் கேளுங்கண்ணே..நமக்குள்ள என்ன?
செங்கோவி said...
ReplyDeleteஎன்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?///
மாமனார் வீட்டுக்கு தலை தீபாவளி மட்டும் தான் போவாங்க... உமக்கு தெரியாதா???
//அப்பு said...
ReplyDelete/////பதறிய காரியம் சிதறிப்போகும் இல்லியா..பதறாமக் கேளுங்க, சொல்றேன்.////////
செங்கோவி
கடைசில பதறிப் போய் இது பதிவே இல்லைன்னு சொல்லிட்டிங்களே?//
ஹி..ஹி..நல்ல நாள்லயாவது சொம்பு பத்திரமா இருக்கட்டும்னு தான்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
அண்ணே, உங்களுக்குக்கூட வெட்கம் வருமாண்ணே?
மொக்கை பின்னாடி ஒளியிறீங்க..//////
யோவ் இவ்ளோ டீசண்ட் படம் போட்டா அப்புறம் வெட்கமாத்தான் இருக்கும்... நம்ம ரேஞ்சு என்ன... லெவல் என்ன?//
அதாண்ணே, உங்க அறிவுக்கும் அழகுக்கும் நீங்க இங்கயே இருக்க வேண்டிய ஆள் இல்லண்ணே...இந்நேரம் நீங்க அமேரிக்கால இருந்திருந்த உங்களுக்கு சில வச்சி இருப்பாங்க..
கந்தசாமி. said...கல்யாணம் ஆகாத என்னை போன்றவர்களுக்கு தலை தீபாவளி இல்லியா ..அவ்வ்வ்வ் ..////"அந்த" மாமனார் வீட்டில தல தீபாவளி கொண்டாடுவமா?ஹி!ஹி!ஹி!
ReplyDelete////// செங்கோவி said...
ReplyDelete//
தமிழ்வாசி - Prakash said...
தீபாவளி தீபாவளி தான்....//
என்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?/////
இவர் பண்ண ஓவர் கெத்துல மாமனாரு கெளம்பி இங்க வந்திருப்பாரு......
வணக்கம் அப்பு தேர்தலைப்பற்றி அழகா விமர்சித்திருந்தீர்கள் வாழ்த்துக்கள்..
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசெங்கோவி said...
என்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?///
மாமனார் வீட்டுக்கு தலை தீபாவளி மட்டும் தான் போவாங்க... உமக்கு தெரியாதா???//
இப்போப் போனா சோறு போட மாட்டாங்களா?
//////மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅதாண்ணே, உங்க அறிவுக்கும் அழகுக்கும் நீங்க இங்கயே இருக்க வேண்டிய ஆள் இல்லண்ணே...இந்நேரம் நீங்க அமேரிக்கால இருந்திருந்த உங்களுக்கு சில வச்சி இருப்பாங்க..///
எதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன் பிச்சி.....
/////மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும்.////
ReplyDeleteபைக்கு இல்லைன்னா காருக்கு காசு குடுத்துட்டு அடுத்த முறை பைக் வாங்கிக் குடுத்துருவாரு...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// செங்கோவி said...
//
தமிழ்வாசி - Prakash said...
தீபாவளி தீபாவளி தான்....//
என்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?/////
இவர் பண்ண ஓவர் கெத்துல மாமனாரு கெளம்பி இங்க வந்திருப்பாரு......///
தலை தீபாவளி முடிஞ்சு மூணு வருசமாச்சு..... அதனால மாமனார் எதிர் பாக்க மாட்டாரு....
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.
////// செங்கோவி said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?
செங்கோவி said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
என்னய்யா இங்க? மாமனார் வீட்டுக்குப் போகலியா?///
மாமனார் வீட்டுக்கு தலை தீபாவளி மட்டும் தான் போவாங்க... உமக்கு தெரியாதா???//
இப்போப் போனா சோறு போட மாட்டாங்களா?///
ஹி..ஹி... சோறு எப்ப போனாலும் கிடைக்கும்... மருமகன்ல.....
வணக்கம் செங்கோவியாரே !
ReplyDeleteஎங்களுக்குத் தீபாவளி புதன் கிழமைதான்!
இன்றைய குளுகுளு லிங்.......
ReplyDelete//அப்பு said...
ReplyDelete/////மாமனார் வீட்டுக்கு பைக்ல.பஸ்ல, ட்ரெய்ன்ல போற ஐடியா இருந்தா, முதல்ல அதை ட்ராப் பண்ணுங்க. கண்டிப்பா கார்ல தான் போகணும்.////
பைக்கு இல்லைன்னா காருக்கு காசு குடுத்துட்டு அடுத்த முறை பைக் வாங்கிக் குடுத்துருவாரு...//
அப்படியா..அப்போச் சரி.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// செங்கோவி said...
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?///
அண்ணே படத்தை தான் போடப் போறாரு.... நீங்க வேற???????
காட்டான் said...... சரஸ்வதி பூசை நடந்த போது ஒருமுறை அங்கு இருந்தேன்..ஹி ஹி நீங்க வேற நாட்ட விட்டு வந்ததற்கு இதுவரை நான் தீபாவளி கொண்டாடினதில்லை.///ஆயுத பூஜை தான் பிரமாண்டமாக இருக்கும்! நான் கூட தீபாவளி கொண்டாடினதில்லை.
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteவணக்கம் செங்கோவியாரே !
எங்களுக்குத் தீபாவளி புதன் கிழமைதான்!//
வணக்கம் நேசரே.
தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் .
ReplyDelete@மொக்கராசு மாமா
ReplyDeleteஅதாண்ணே, உங்க அறிவுக்கும் அழகுக்கும் நீங்க இங்கயே இருக்க வேண்டிய ஆள் இல்லண்ணே...இந்நேரம் நீங்க அமேரிக்கால இருந்திருந்த உங்களுக்கு சில வச்சி இருப்பாங்க.. ////
நல்லாச் சொன்னீங்க.
சிலையும் வச்சிருப்பாக -
சிலர் நல்ல வச்சும் இருப்பாங்க...
தனிமரம் said...
ReplyDeleteவணக்கம் செங்கோவியாரே !
எங்களுக்குத் தீபாவளி புதன் கிழமைதான்!//
ஏன்யா???? தனிமரம்??
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?//
பின்னே..அஞ்........
@காட்டான்
ReplyDeleteவணக்கம்...
ரொம்ப நன்றி...
நீங்க எப்படி இருக்கீங்க? ஊரு விட்டு ஊருல எப்படித் தீபாவளி கொண்டாட முடியும்?
நான் நினைக்கிறேன் இஞ்ச துஷி இண்டைக்கு வரமாட்டார்ன்னு ஏற்கனவே பொட்டைய கட்டித்தராட்டி தீக்குளிப்பேன்னு சொல்லுறான் இப்படிபட்டவனுக்கு பொட்டைய கட்டி கொடுத்தா தலைத்தீபாவளிக்கு என்ன செய்வான்னு பயமா இருக்கையா..!!
ReplyDelete/
ReplyDeleteSpeed Master said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//
நன்றி மாஸ்டர்.
இன்னும் எண்ணைய்க்குளியல் போடுகின்றார்களா மாமா வீட்டில் மருமகன்கள் செய்யும் அலப்பாரை!
ReplyDeleteதனிமரம் said...வணக்கம் செங்கோவியாரே !எங்களுக்குத் தீபாவளி புதன் கிழமைதான்!///எல்லோருக்கும் புதன் தான்!இது அட்வான்ட்ஸ் வாழ்த்தும்,பதிவும்!
ReplyDelete///அப்பு said...
ReplyDelete@மொக்கராசு மாமா
அதாண்ணே, உங்க அறிவுக்கும் அழகுக்கும் நீங்க இங்கயே இருக்க வேண்டிய ஆள் இல்லண்ணே...இந்நேரம் நீங்க அமேரிக்கால இருந்திருந்த உங்களுக்கு சில வச்சி இருப்பாங்க.. ////
நல்லாச் சொன்னீங்க.
சிலையும் வச்சிருப்பாக -
சிலர் நல்ல வச்சும் இருப்பாங்க.////
என்ன இப்புடி சொல்றீங்க அப்பு, ஆல் இன் ஆல் அழகுராஜா ன்னா சும்மாவா?
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாவனா படம் போட்டதற்கு செங்கோவியார்க்கு மொக்கராசுமாமா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!//
அண்ணே, உங்களுக்குக்கூட வெட்கம் வருமாண்ணே?
மொக்கை பின்னாடி ஒளியிறீங்க..//////
யோவ் இவ்ளோ டீசண்ட் படம் போட்டா அப்புறம் வெட்கமாத்தான் இருக்கும்... நம்ம ரேஞ்சு என்ன... லெவல் என்ன?//
அதாண்ணே, உங்க அறிவுக்கும் அழகுக்கும் நீங்க இங்கயே இருக்க வேண்டிய ஆள் இல்லண்ணே...இந்நேரம் நீங்க அமேரிக்கால இருந்திருந்த உங்களுக்கு சில வச்சி இருப்பாங்க..//
அண்ணனை நாறடிக்கறதுல அப்படி ஒரு ஆசையா..
//செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?//
பின்னே..அஞ்......///
அஞ்சு படம் போட போறீங்களா அண்ணா?
தமிழ்வாசி எங்கள் ஊர் கலண்டர் அப்படித்தான் சொல்லுது அண்ணா.
ReplyDeleteதனிமரம் said...இன்னும் எண்ணைய்க்குளியல் போடுகின்றார்களா மாமா வீட்டில் மருமகன்கள் செய்யும் அலப்பாரை!///உஷ்!!!!!!!!! நல்ல நாளில் இப்படிப் பேசக்கூடாது!
ReplyDeleteமொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?//
பின்னே..அஞ்......///
அஞ்சு படம் போட போறீங்களா அண்ணா?//
ஐயோ அந்த குண்டு படம் இல்லை...
அஞ்சலி படம் போட போறாங்க...
தனிமரம் said...
ReplyDeleteதமிழ்வாசி எங்கள் ஊர் கலண்டர் அப்படித்தான் சொல்லுது அண்ணா..///
எங்க ஊர் காலண்டர்ல வெட்னெஸ்டே காட்டுது!!!
Yoga.S.FR said...
ReplyDeleteகாட்டான் said...... சரஸ்வதி பூசை நடந்த போது ஒருமுறை அங்கு இருந்தேன்..ஹி ஹி நீங்க வேற நாட்ட விட்டு வந்ததற்கு இதுவரை நான் தீபாவளி கொண்டாடினதில்லை.///ஆயுத பூஜை தான் பிரமாண்டமாக இருக்கும்! நான் கூட தீபாவளி கொண்டாடினதில்லை.
ஏன்ண புது வருசம் போல தீவாவளி ஈழத்தில களைகட்டுவதில்ல.. சிங்களவர்களும் புது வருசத்த கொண்டாடுவதால்தானோ..???
///தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
அண்ணே படத்த தானே போட போறீங்க?//
பின்னே..அஞ்......///
அஞ்சு படம் போட போறீங்களா அண்ணா?//
ஐயோ அந்த குண்டு படம் இல்லை...
அஞ்சலி படம் போட போறாங்க..///
அப்புடின்னா ஓகே... அந்த களஞ்சியம் படத்துல இருந்து ஒன்னு எடுத்து விடுங்க அண்ணே,,,
// காட்டான் said...
ReplyDeleteநான் நினைக்கிறேன் இஞ்ச துஷி இண்டைக்கு வரமாட்டார்ன்னு ஏற்கனவே பொட்டைய கட்டித்தராட்டி தீக்குளிப்பேன்னு சொல்லுறான் இப்படிபட்டவனுக்கு பொட்டைய கட்டி கொடுத்தா தலைத்தீபாவளிக்கு என்ன செய்வான்னு பயமா இருக்கையா..!!//
அவரு டீக்குடிப்பேன்னு சொல்லி இருப்பாரு..
தலைத்தீபாவளி எல்லாம் புலம்பெயர்ந்து கலியாணம் முடித்தவர்களுக்கு பிரென்ஸ் நாட்டில் மிகவும் கவலையான விடயம் செங்கோவி .ஜோடிகள் இருவரும் தனித்தனிநாட்டில்.
ReplyDelete@Yoga.S.FR
ReplyDeleteஅப்ப தீபாவளி முடியிற வரைக்கும் பதிவு இல்லையா?
இது வரைக்கும் எனக்கு ஒருவாட்டி கூட திருமணம் ஆகி இல்லாததாலும், தலதீபாவளி கொண்டாடுவதற்கு இன்னும் ஐந்து முதல் பத்து வருட கால இடைவெளி இருப்பதாலும், மொக்க ராசு மாமாவாகிய நான், இக்கணம் இச்சபையில் இருந்து விடை பெற்று கொள்கிறேன்... நன்றி வணக்கம்...
ReplyDeleteநான் வடை.. ச்சி.. விடை பெறுகிறேன்.உடல் ஒத்துழைக்க மறுக்கிறது,தலைப்பாரம்!மீண்டும் பார்க்கலாம்.பொன் நுயி!அ துமா!
ReplyDeleteஅப்பு said...
ReplyDelete@காட்டான்
வணக்கம்...
ரொம்ப நன்றி...
நீங்க எப்படி இருக்கீங்க? ஊரு விட்டு ஊருல எப்படித் தீபாவளி கொண்டாட முடியும்
ஹி ஹி என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்கு புது உடுப்ப கட்டாயம் போட்டு விடுவா என்னுடைய மனைவி என்ன இருந்தாலும் அவங்க அதை தவற விடமாட்டாங்க..
அன்பு நண்பர்களே,
ReplyDeleteஉங்கள் அனைஅவ்ரின் வேண்டுகோளுக்கு இணங்க அஞ்சலியை நான்..அதாவது அஞ்சலி ஸ்டில்லை நான் இணைத்து விட்டேன்.
தமிழ்வாசி மாமனார் ஊரில் இருந்து கும்மியில் கலக்கிறார்.
ReplyDeleteதனிமரம் said...
ReplyDeleteதலைத்தீபாவளி எல்லாம் புலம்பெயர்ந்து கலியாணம் முடித்தவர்களுக்கு பிரென்ஸ் நாட்டில் மிகவும் கவலையான விடயம் செங்கோவி .ஜோடிகள் இருவரும் தனித்தனிநாட்டில்.///Pardon!
//Yoga.S.FR said...
ReplyDeleteநான் வடை.. ச்சி.. விடை பெறுகிறேன்.உடல் ஒத்துழைக்க மறுக்கிறது,தலைப்பாரம்!மீண்டும் பார்க்கலாம்.பொன் நுயி!அ துமா!//
ஓகே ஐயா..
எனக்கும் நேரம் 11.30 டூ 12.30 ஆகக் குறுகிவிட்டது..அவ்வ்..
பொன் நுயி..அ துமா.
செங்கோவி said...
ReplyDeleteஅன்பு நண்பர்களே,
உங்கள் அனைஅவ்ரின் வேண்டுகோளுக்கு இணங்க அஞ்சலியை நான்..அதாவது அஞ்சலி ஸ்டில்லை நான் இணைத்து விட்டேன்.///
ரைட்டு... மாம்ஸ்
அஞ்சலி படத்தை போட்ட அஞ்சாநெஞ்சன் வாழ்க.......
ReplyDelete@Yoga.S.FR
ReplyDeleteவடை வாங்கி விடை பெரும் ஐயாவுக்கு --- இரவு வணக்கம்: அ துமா!
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஇது வரைக்கும் எனக்கு ஒருவாட்டி கூட திருமணம் ஆகி இல்லாததாலும், தலதீபாவளி கொண்டாடுவதற்கு இன்னும் ஐந்து முதல் பத்து வருட கால இடைவெளி இருப்பதாலும், மொக்க ராசு மாமாவாகிய நான், இக்கணம் இச்சபையில் இருந்து விடை பெற்று கொள்கிறேன்... நன்றி வணக்கம்...//
சந்தோசமான விஷயம் தானே...
வணக்கம்..புவனா நோட்டே.
நானும் சிவலையன வண்டியில கட்டப்போறன் எல்லோருக்கும் மீண்டும் தீவாவளி வாழ்த்துக்கள்.. விடை பெறுகிறேன் மீண்டும் சந்திப்போம்..
ReplyDeleteஇந்தமுறை அசைவம் கிடையாது தீபாவளி அம்மவாசையில் வருவதால் வாத்தியாரே!
ReplyDeleteஅண்ணே ஆரம்பதிலயே ஹன்சிகா படம் போட்டுடீங்க!அப்பறம் எப்படி டிப்சுகளை படிக்கறது?
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅஞ்சலி படத்தை போட்ட அஞ்சாநெஞ்சன் வாழ்க.......//
அவருமா போட்டாரு?
அஞ்சலி படத்தை இந்த இடுகையில் இணைத்த செங்கோவிக்கு அஞ்சலி சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....
ReplyDeleteயோகா ஐயா உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள், பொன் நுயி அ துமா!
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போடாமல் விட்டதற்காக தமிழ்வாசி சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!///
அஞ்சலி படம் போடாமல் இருந்ததுக்காக செங்கோவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதோடு அஞ்சலி படம் ஒன்றை இந்த பதிவில் இணைக்குமாறு பன்னிக்குட்டி அண்ணன் துணையோடு கேட்டுக் கொள்கிறேன்'//
போடறேன்யா..போடறேன்.//////
அண்ணே படத்த தானே போட போறீங்க?//
பின்னே..அஞ்......///
அஞ்சு படம் போட போறீங்களா அண்ணா?////
அஞ்சுவுக்கும் ஒரு ரசிகரா..!
//காட்டான் said...
ReplyDeleteநானும் சிவலையன வண்டியில கட்டப்போறன் எல்லோருக்கும் மீண்டும் தீவாவளி வாழ்த்துக்கள்.. விடை பெறுகிறேன் மீண்டும் சந்திப்போம்..//
வணக்கம் மாம்ஸ்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போட்ட அஞ்சாநெஞ்சன் வாழ்க.......//
அவருமா போட்டாரு?///
ஐயோ.... வன்மையாக கண்டிக்கிறேன்...
//கோகுல் said...
ReplyDeleteஅண்ணே ஆரம்பதிலயே ஹன்சிகா படம் போட்டுடீங்க!அப்பறம் எப்படி டிப்சுகளை படிக்கறது?//
ஏன், ஹன்சி ஸ்டில்லுலேயே டிப்ஸ் கிடைச்சிடுச்சா?
அஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
ReplyDeletehttp://goo.gl/YyysK
சினேஹா படம் சூப்பர்!
ReplyDelete//
ReplyDeleteஅப்பு said...
@Yoga.S.FR
அப்ப தீபாவளி முடியிற வரைக்கும் பதிவு இல்லையா?//
ஒருவேளை நாளைக்கு படம் பார்க்கப் போயிடலாம்..அதான் இன்றே வாழ்த்துச் சொன்னேன்.
நானும் விடை பெற்றுக் கொள்கிறேன்...
ReplyDeleteஎல்லாருக்கும் மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
http://goo.gl/YyysK//
ஆகா அண்ணே... சூப்பரு... செங்கோவிக்கு இன்னைக்கு கொண்டாட்டம் தான்...
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteபணிக்கு நேரம் என்பதால் விலகிச் செல்லின்றேன் நாளை முடிந்தாள் சந்திப்போம் உறவுகளே!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
http://goo.gl/YyysK//
ரொம்ப நன்றிண்ணே..
அது ஒரிஜினலாண்ணே?
புக்மார்க் பண்ணி வச்சிக்குறேன்!
ReplyDeleteவருங்காலத்தில் நிச்சயம் உதவும்!
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
http://goo.gl/YyysK//
ஆகா அண்ணே... சூப்பரு... செங்கோவிக்கு இன்னைக்கு கொண்டாட்டம் தான்..//
ஆமா, இவரு தொட்டுக் கும்பிட்டிட்டுப் போயிடுவாரு..
//கோகுல் said...
ReplyDeleteபுக்மார்க் பண்ணி வச்சிக்குறேன்!
வருங்காலத்தில் நிச்சயம் உதவும்!//
இங்க பாருங்கய்யா...
////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
http://goo.gl/YyysK//
ரொம்ப நன்றிண்ணே..
அது ஒரிஜினலாண்ணே?///////
100%
//////கோகுல் said...
ReplyDeleteபுக்மார்க் பண்ணி வச்சிக்குறேன்!
வருங்காலத்தில் நிச்சயம் உதவும்!///////
ஆணாதிக்கவாதி செங்கோவி ஒழிக....
நன்றி நண்பர்களே...நானும் விடை பெறுகிறேன்.
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் + தீபாவளி வாழ்த்துகள்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
ReplyDelete//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கோகுல் said...
புக்மார்க் பண்ணி வச்சிக்குறேன்!
வருங்காலத்தில் நிச்சயம் உதவும்!///////
ஆணாதிக்கவாதி செங்கோவி ஒழிக....//
பெண்ணாதிக்கவாதி பன்னியார் வாழ்க.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தை போட்ட அண்ணன் செங்கோவிக்கு இந்த படத்தை பரிசாக அளிக்கிறேன்
http://goo.gl/YyysK//
ரொம்ப நன்றிண்ணே..
அது ஒரிஜினலாண்ணே?///////
100%//
ஆமா 100% fake...
சரி கெளம்புவோம், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteடிஸ்கி-3 : எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல..
ReplyDelete//
அப்ப இது வரைக்கும் போட்டதெல்லாம் கமேண்டே அல்ல!அப்படியா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசரி கெளம்புவோம், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!//
அண்ணன் சொல்லிட்டாரு.. எல்லோரும் இடத்தை காலி பண்ணுங்க..
//இது சொந்த அனுபவம் அல்ல//
ReplyDeleteநம்புகிறேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி கெளம்புவோம், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!//
அண்ணன் சொல்லிட்டாரு.. எல்லோரும் இடத்தை காலி பண்ணுங்க..
ரைட்டு அப்ப உத்தரவு வாங்கிக்கேறேன்!
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் செங்கோவி! சொந்த அனுபவம் இல்லன்னு சொல்லும் போதே தெரியுது சேதி....ஹ்ம்ம். ஆமாம்....இது பதிவே இல்லன்னு சொல்லிடீங்க...அப்போ இது என்ன???
ReplyDeleteஅஞ்சலிய நல்ல நெஞ்சு கறி வாங்கி சாபிட்ட சொல்லுங்க
ReplyDelete//மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..//
ReplyDeleteசெங்கோவி,
மச்சினி இருக்காங்க தான். என்னா ஒன்னு, கழுத அதுக்கும் கல்யாணம் ஆகிப்போச்சி.
இப்ப சொல்லுங்க பட்டாசு பெரிசு பெரிசா வெடிக்கலாமா, வேணாமா?
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே.
நீங்க தலை தீபாவளி கொண்டாடுன கதையை சொல்ற மாதிரியே தோணுதே? அனுபவம் பேசுதோ?
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
என்னங்க உங்களுக்கு பிடிச்ச 'கமலா காமேஷ் ' மற்றும் 'பத்மினி' போட்டோஸ் விட்டுடீங்க...புதுசு வந்தவுன்னே பழச மறக்கலாமுன்களா?
ReplyDeleteமீனம்மா,மீனம்மா - உன் கண்கள் மீனம்மா!
முக்கியமான பாய்ண்ட மறந்துட்டீங்களே தல, "திருமணம் ஆகியிருக்கணும்" இல்லன்னா நீங்க சொன்ன தலை தீபாவெளி எப்புடி கொண்டாடுறது? #டவுட்டு.
ReplyDeleteசெங்கோவி அண்ணனுக்கு இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். யோகா ஐய்யா, பன்னி அண்ணன், தமிழ்வாசி, மொக்கராசு, உள்பட அண்ணனின் கடைக்கு வந்து விருந்துண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். ஆணி காரணமாக நேரத்துக்கு வரமுடியாமையை இட்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅப்புறம் அண்ணனுகளா, கும்மில இல்லன்னதும் மறந்திடாதீங்கப்பா,
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் பாஸ் உங்கள் பதிவில் நான் கும்மிஅடிச்சி நீண்ட நாட்களாகிவிட்டது...பிறகு ஓரு பதிவுக்கு வாரன் கும்மி அடிக்க........
ReplyDeleteஎதிர்காலத்தில் உங்கள் ஜடியாவை பாலோ பண்னுறன்...தீபாவளி தல தீபாவளி..............
"இதுக்காகவே கூட நாலு கிலோ கறி எடுப்பாங்க"
ReplyDelete>>>>>>
மாப்ள இது யாரு உடம்புல இருந்து...ஏன்யா புதுசா கல்யாணம் பண்ண பசங்களுக்கு வழி சொல்லி கொடுய்யான்னா...கொய்யால நேரா போய் ஆப்புல உக்கார்றா மாதிரி சொல்றே...நாமதான் பல்பு வங்குனமேன்னு இல்லாம இளைய(!) தலைமுறையையும் வாங்க வைக்க நீ முடிவு பண்ணிட்டியா ஹிஹி!
சரியா சொன்னிங்க எனக்கும் தலை தீபாவளி தான் . நன்றி நண்பா
ReplyDeleteஇனிய (பல்ப்பு இல்லாத!) தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பரே ,உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் .
ரமேஷ்
நல்லா புரியுது....நீங்க மருமகனாதிக்க சங்கத் தலைவர்தானே...- அப்பாவி மாமனார் நல்வாழ்வுச் சங்கம்
ReplyDeleteDiwali wishes... Aama thala diwalila machiniya enna pannanumnu velakama sollave illaye boss
ReplyDeletehappy diwali thala!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.com/
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
ReplyDeleteநண்பா இது சொந்த அனுபவமா?
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பறம் அந்த ஹன்சிகா பொண்ணு தீபாவளி பரிசா கிடைக்குமா
முக்கியமா உங்க மாமனாரோ அல்லது தங்கமணியோ இந்த பதிவ படிக்காம பாத்துக்குங்க
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteவணக்கம் அபையோரே,
நலமா?
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
யோகா ஐயா, உங்களுக்கும் எனக்கும் என்ன தகராறு...
ReplyDeleteஹே...ஹே..
ஏன் என் பக்கம் வருவதில்லை.
என் வன்மையான கண்டனங்கள்.
இப்பவே ப்ரான்ஸிற்கு ப்ளைட் பிடிச்சு வாரேன்.
இறங்குனதும் ‘அச்சுக்குட்டி..செல்லக்குட்டி’ன்னு அதைக் கொஞ்சறதுல மூழ்கிடணும். வேற வழியே இல்லாம டிரைவர் மாமனாரைப் பார்ப்பாரு, மாமனார் காசை அவிழ்த்துடுவாரு.
ReplyDelete//.
அடிங்........படவா...
இப்படியெல்லாம் பிழைக்கலாம் என்றிருந்தா நான் எப்பவோ கலியாணம் கட்டியிருப்பேனே...
செங்கோவி சாரின் மாமனாருக்கு இந்தப் பதிவைத் தந்தி அனுப்பப் போறேன்..
ஹி...
ஹி...
மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி, பட்டையைக் கிளப்புங்கப்பா..இல்லேன்னா பொட்டு வேட்டும், துப்பாக்கியும் போதும்.
ReplyDelete//
யாரும் மச்சினியை கிளப்பாம இருந்தால் சந்தோசம்..
ஹே...
ஹே..
.அட என்னாங்க..அப்பத்தானே மச்சினனை விட கார் திரும்ப மாமனார் வீட்டுக்கே வரும், அதுக்கும் காசு மாமனாரே கொடுப்பாரு? அதுக்காக மச்சினியைக் கூப்பிட்றாதீங்கப்பா.//
ReplyDeleteஹே...
ஹே...
இது தான் நம்ம செங்கோவியாரின் தொழில் ரகசியமா...
பக்கா ஐடியா பாஸ்...
ReplyDeleteநான் வருங்காலத்தில கடைப்பிடிச்சு சிக்கனமா வாழப் பழகிக் கொள்கிறேன்...
தல தீபாவளின்னா அஜித் வீட்ல கொண்டாடற பண்டிகைன்னு நினைச்சேன் அவ்வ்வ்
ReplyDeleteமச்சினி பற்றி சொல்றீங்களே... உங்களூக்கு.. வேணாம்.. நான் ஏதாவது கேட்டு நீங்க அதை மாடரேட் பண்ணி.. எதுக்கு?
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் பாஸ்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteNice.,
ReplyDeleteஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
இப்படியும் ஒரு பதிவா? பதிவே இல்லன்னு வேற சொல்றீங்க, அப்ப இது என்ன? அட போங்கப்பா தல சுத்துது
ReplyDeleteதங்கமணி உங்க பதிவுகளைப் படிப்பாங்களா?!!!
ReplyDelete\\எதுக்கு வம்பு, ...........இது பதிவே அல்ல...போய் தீபாவளி கொண்டாடுங்க.\\ தனுஷை நான் பார்த்து ஒரு மாசமாச்சு, ஒரு வாரமாச்சு.... என்றெல்லாம் சொல்லிவிட்டு, அட அவன் யாருன்னே எனக்குத் தெரியாதுங்கன்னு நயன் கிட்ட கருணாஸ் சொல்லுவாரே அது மாதிரி இருக்கு.
தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தார்க்கும் , எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் , செங்கோவி.
\\
ReplyDeleteஎதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன் பிச்சி.....\\ என்னது அமெரிக்காவுல காக்காவெல்லாம் இருக்குதா, எங்க பள்ளிக் கூடத்து Geography புத்தகத்துல இதப் போடாம ஏமாத்திட்டானுன்களே, பாவிப் பசங்க.
///// Jayadev Das said...
ReplyDelete\\
எதுக்கு காக்கா கக்கா போறதுக்கா? பிச்சிபுடுவேன் பிச்சி.....\\ என்னது அமெரிக்காவுல காக்காவெல்லாம் இருக்குதா, எங்க பள்ளிக் கூடத்து Geography புத்தகத்துல இதப் போடாம ஏமாத்திட்டானுன்களே, பாவிப் பசங்க./////
ங்ணா..... ஒரு பேச்சுக்கு சொன்னா போட்டுத்தளுறீங்களே? (இருந்தாலும் இதை பாருங்க http://en.wikipedia.org/wiki/American_Crow) சிங்கப்பூர்லதான் காக்கா முழுதும் ஒழிக்கப்பட்டதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்......
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDelete'மோதிரம் வந்தாத்தான் தலைல எண்ணை வச்சிப்பேன்'னு அடம் புடிக்கற மாப்பிள்ளைங்களுக்கு அட்வைஸ் இல்லையா?
ReplyDeleteஅமெரிக்காவுல காக்கா இருக்குது போல!! ஆனா காக்கா எல்லா கண்டத்திலும் இல்ல, எங்கெங்கே இல்லன்னுதான் தெரியல. நானும் கொஞ்சம் தேடினேன், வெள்ளைக் காக்கா கூட இருக்குது.
ReplyDeletehttp://carolinabirds.org/HTML/WLD_Corvidae_Crow.htm
\\சிங்கப்பூர்லதான் காக்கா முழுதும் ஒழிக்கப்பட்டதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்......\\
கொசுவை ஒழிக்கலாம், பார்த்தீனியம் செடிகளை ஒழிக்கலாம் பாவம் காக்காவை இந்தப் பாவிங்க எது ஒழிச்சானுங்க??
Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி அண்ணனுக்கு இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். யோகா ஐய்யா, பன்னி அண்ணன், தமிழ்வாசி, மொக்கராசு, உள்பட அண்ணனின் கடைக்கு வந்து விருந்துண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் இனிய தீபாவெளி வாழ்த்துக்கள். ஆணி காரணமாக நேரத்துக்கு வரமுடியாமையை இட்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.///வணக்கம் டாக்டர்!பாராட்டுக்கு,ச்சி....வாழ்த்துக்கு நன்றி!இதே போல் உங்களுக்கும் தீபாவளி(தல இல்லையே?)வாழ்த்துக்கள்!சிரித்து,மகிழ்ந்து கொண்டாட வேண்டுகிறேன்! நன்றி!!!
மாலை வணக்கம்!பொ...........................!!( நிரப்பவும்).எக்ஸ்டிரா ஸ்டில் போட்டிருக் கீங்களோ,இல்ல என்னோட கண்ணுக்கு படலியோ?///மச்சினி இருந்தா மட்டும் பெரிய பெரிய பட்டாசா கொளுத்தி///பெரிசாயிருந்தா பயப்புட மாட்டாங்க???
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteபதிவுகளும் டிஸ்கிகளும் (அதுவும் கடைசி) சூப்பர்!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்!
இப்படி நல்ல அறிவுரை யார் கொடுக்கப் போகிறார்கள்?!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்.
பொன் சுவார்..
ReplyDeleteதீபாவளி வாழ்த்துச் சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும், பெரியோர்க்கும் நன்றி.
தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்தபின், சந்திப்போம்.
அறிவிப்பு :
ReplyDeleteஇன்று இரவு பதிவு கிடையாது. இன்னும் இங்கே தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஏதாவது படம் ரிலீஸ் ஆனால், நாளை விமர்சனம் வரும். இல்லையேல், அடுத்த பதிவு வெள்ளி இரவு (சனிக்கிழமை) வரும்..தீபாவளியை எஞ்சாய் பண்ணுங்கள்..நன்றி!/// நன்றி!டாகுடர் படம்?!கூடவா ரிலீஸ் ஆவல???ஹி!ஹி!ஹி!!!எஞ்சாய் தீபாவளி!!!பொன் சுவார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்