Wednesday, October 19, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_1

பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை நான் பிரசுரிப்பதில்லை. அது வீண் பகட்டாகத் தெரியும் என்பதால், பொதுவில் வைக்க எனக்குத் தயக்கம் உண்டு.

ஹன்சிகா ஸ்டில்லில் ஆரம்பித்து, ஓஷோ புத்தகங்கள் வரை எனக்கு வாசக நண்பர்கள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் என் மதிப்பிற்குரிய பெரியவர் ஒருவரிடம் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மின்னஞ்சல் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு நான் பதிலளிக்க, விவாதம் நீண்டு கொண்டே சென்றது.

முடிவில் அதைப் பொதுவில் வைக்கும்படி, விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும் கேட்டுக்கொண்டார்கள். இந்த விஷயம் பற்றி, படிப்போரிடையே மேலும் பல ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் பகிர்வின் குறிக்கோள்.


பின்னூட்டத்தில் வசைச் சொல் தவிர்த்து, விவாதம் தொடர்ந்தால் மகிழ்வேன் :
-------------------------------------------------------------------------------------------------------------

செங்கோவி அவர்களே!

வணக்கம்!

காந்திஜி பற்றிய உங்க‌ள் பதிவினைப் பார்த்து உங்கள் மேல் ஒரு பரிவும், மரியாதையும் ஏற்பட்டது. வகுப்பறையில் "கோட்சேயின் வாக்குமூலம்" பற்றி நான் இட்ட பதிவில் தங்களுடைய பின்னூட்டமே உங்கள் மனவோட்டத்தைக் காண்பித்தது.

தங்க‌ள் எழுத்துக்களில் காணப்படும் பார்ப்பன எதிர்ப்புக்கு ஆன காரணிகளை நான் அறியத் தாருங்கள். நான் அந்த வகுப்பைச் சார்ந்தவனே!சுய விமர்சனத்திற்காகவே கேட்கிறேன்.எங்க‌ளிடம் தவறுகள் இருப்பின் மாற்றிக் கொள்ளவும் இது ஏதுவாகும்.இது தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் அனுப்பினாலும் சரி.பொதுவில் ஒரு விவாதமாகச் சொன்னாலும் சரியே.

கடந்த 44 ஆண்டுகளாக(கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்), அந்தணர்களுக்கு எந்த விதச் சலுகையும் இல்லாமலேயே இருந்துள்ளது.அவர்களும் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று சோற்றுகாகத் தஙளுடைய எல்லா அடையாளங்க‌ளயும் அழித்து விட்டு ஊர் ஊராகவும், நகரம் நகரமாகவும்,நாடு நாடாகவும் சிதறிப் போய் விட்டனர். 


இன்னும் அவர்கள் மீது வைத்துள்ள வெறுப்புக்கான காரணத்தை அறியலாமா?

என் தந்தையார் காந்தீய நிர்மாணப்பணி செய்தவர்.சிறை சென்ற‌ தியாகி. சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் விருந்தோம்பல் செய்தவர் என் தாய்.எனவே தாங்கள் என்னிடம் பிற அந்தணர்களிடம் காட்டும் தயக்கத்தைக் காட்ட வேண்டாம்.

நீங்கள் காந்தியிடம் அணுகும் முறையே, நீங்கள் ஞாயத்திற்குக் கட்டுப் படக்கூடியவர் எனக் காட்டுகிறது.அதனால்தான் எழுதினேன். விருப்பமும், நேரமும் இருப்பின் தொடரவும்.

நன்றி வணக்கம்

****
-------------------------------------------------------------------------------------------------------------

ஐயா,

முதலிலேயே சொல்லி விடுகின்றேன், நான் பிராமணர்கள் மேல் துவேஷம் கொண்டவன் அல்ல. நீங்கள் உபயோகிக்கும் பார்ப்பன/பார்ப்பான் போன்ற வார்த்தைகளைக் கூட நான் என் பதிவுகளிலோ அல்லது வேறெங்குமோ உபயோகித்ததில்லை தாங்கள் பிராமணர் என்பதையும் வகுப்பறையிலேயே நான் அறிவேன். ஆனாலும் தங்கள் மீது நான் மதிப்பு கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

நான் எதிர்ப்பது பிராமணீயம்/பார்ப்பனீயம் என்ற சொல்லால் அழைக்கப்படும் பிறப்பு அடிப்படையிலான தகுதிப் படுத்தலையே. நான் எனது பதிவில் ஒரு பின்னூட்ட நண்பரிடம் ‘பிராமணர்களிடம் மட்டுமா பார்ப்பனீயம் உள்ளது’ என்று வெளிப்படையாகவே கேட்டுள்ளேன்.

பிறப்பு அடிப்படையில் பேதம் பார்க்கும் பிராமணர்களை மட்டுமல்லாது, வன்னியர்/நாயக்கர்/நாடார்/தேவர்/பிள்ளைவாழ் ஜாதியைச் சேர்ந்தோரையும் கண்டிருக்கிறேன். 

ஒரு வன்னியர்/தேவர் என்பவர் தாழ்த்தப்பட்டோர் தவிர மற்றோரிடம் பெரிதாக பார்ப்பனீயத்தைக் காட்டுவதில்லை. அதனால் அது எல்லோருக்கும் பெரிதாக தெரிவதும் இல்லை. பிராமணர்கள் எல்லா ஜாதியினரிடமும் பார்ப்பனீயத்தைக் காட்டுவதால், சமூகம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்கிறது.

பிராமணர்களின் ஜாதித் துவேஷத்தை, வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்காதவர் தமிழகத்தில் குறைவே. அதற்கு என்னையே உங்களுக்கு உதாரணமாகச் சொல்வேன்.

என் கல்லூரி நண்பர், பிராமணர். சென்னையைச் சேர்ந்தவர். நாங்கள் கால்லூரியில் படிக்கும்போது இன் - ப்ளாண்ட் ட்ரெய்னிங்கிற்காக சென்னை சென்று, அவர் ஏரியா அருகில் தங்கியிருந்தோம். ஒருநாள் தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அவரது தாயும், பாட்டியும் இலையில் சோறு பரிமாறினார்கள். நண்பருக்கும், அவரது தந்தைக்கும் மட்டும் தட்டில் சாப்பாடு. 


அதை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்து எழுந்தோம். அப்போது அவரது தாயார் நாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கும்படியும், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடும்படியும் சொன்னார். நாங்கள் அதிர்ந்தோம். வேறுவழியின்றி, இலையைக் கையில் ஏந்தியபடி 4 வீடு தள்ளி தெருமுனையில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டோம். திரும்பி நாங்கள் வந்தபோது, வீடு மொழுகப்பட்டிருந்தது.

என் தாய்-தந்தையர் படிக்காதவர்கள். ஆனால், நான் எனது பள்ளி நண்பர்களை எப்போது அழைத்துச் சென்றாலும் ’என்ன ஜாதி’ என்று கேளாது உணவிட்டு விருந்தோம்பல் செய்வார்கள். சில நாட்களில் நண்பர்கள், என் வீட்டில் இரவில் படிப்பதற்காகத் தங்குவதும் உண்டு. உறவுகள் முணுமுணுத்தாலும், வீட்டிற்கு வந்தோரை என் தாய்-தந்தையர் அவமானப்படுத்தியதில்லை. 

அப்படி ஒரு பின்புலம் கொண்ட எனக்கு, சென்னை போன்ற நாகரீக நகரத்தில், பிராமணக் குடியில் பிறந்தோர் கொண்டிருக்கும் மன அழுக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. காந்தி சொன்ன தீண்டாமை பற்றிய கருத்துக்களையும் அப்போதே நான் முழுதாக புரிந்து கொண்டேன். 

எங்கள் ஊரில் பிராமணர்கள் கிடையாது. எனவே என் கல்லூரிக் காலம் வரை பிராமணர்களைப் பற்றி எந்தவொரு கருத்தும் எனக்கில்லை.அந்த சம்பவத்தை பிறரிடம் சொல்லி, வருத்தப்பட்ட போது, பலரும் அதே போன்று பல்வேறு இடங்களில் தாங்கள் பட்ட அவமானத்தைச் சொன்னார்கள். ஒரு கிராமத்தில் ஒரு பிராமணச் சிறுவனைக்கூட ‘சாமி’ என்று தான் அழைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதைச் சொன்னார்கள். 

அதன்பின் நான் பெரியாரைப் படிக்க ஆரம்பித்தேன். அவரது அரசியலுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. ஆன்மீகரீதியில் ஓஷோவை ஏற்கனவே படித்திருந்த என்னை, பெரியார் ஈர்க்கவில்லை. ஆனால் ஜாதி விஷயத்தில்,  என் பார்வை மாறியதில் அவர்களின் தாக்கத்தையும் காந்தியின் தாக்கத்தையும் இப்போது நான் உணர்கின்றேன்.
எப்படி பிற ஆதிக்க ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி வெறியர்கள் இல்லையோ, அதே போன்று எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். எனக்கு நல்ல பிராமண நண்பர்களும் உண்டு. எனவே நான் ஒட்டுமொத்தமாக எல்லா பிராமனர்களின் மீதும் வெறுப்பு கொள்வதில்லை. 

தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது என்று நம்புவதும், பிற ஜாதியினரை விட தான் உயர்ந்தவர்கள் என்று நம்புவதும், ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.

துக்ளக் சோ-வும் அத்தகைய துவேஷம் கொண்டவரே. அவரைப் பற்றி எனது சில பதிவுகளில் நான் தாக்கி எழுதியதால், ஒட்டுமொத்த பிராமணர்கள் மேல் நான் துவேஷம் கொண்டவன் என்று எண்ணிவிட்டீர்களோ? 

இந்து மதத்தின் மீதும், நம் முன்னோர்களின் மீதும் மரியாதை உள்ள சராசரி இந்தியன் நான், அவ்வளவே!

அன்புடன்,
செங்கோவி
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள செங்கோவி,

///சாப்பிட்டு முடித்து எழுந்தோம். அப்போது அவரது தாயார் நாங்கள் சாப்பிட்ட இலையை எடுக்கும்படியும், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடும்படியும் சொன்னார்.///

நீங்கள் சென்று உணவு சாப்பிட்ட வீட்டு பாட்டியை மாற்ற முடியுமா? உங்க‌ள் நண்பரே அப்ப‌டித்தான் என்றால் அவருக்கு ஆலோசனை அவசியம்.அவர் தன் வீட்டு நடைமுறை தெரிந்து, பாட்டியிடம் பேசி தானே விருந்தினரின் இலைகளை எடுத்துப் பாட்டியையும் திருப்தி செய்து, விருந்தினரையும் நோக அடிக்காமல் சமாளித்து இருக்கலாம்.பாவம் !


அவருக்கே கூட இது முதல் அனுபவமாக இருந்திருக்கக்கூடும்.இப்ப‌டி நடக்கும், அதை நீங்கள் தவறாக அவதானிப்பீர்கள் என்று புரிதல் இல்லாத வயது. கல்லூரியில் படித்த போது அல்லவா!என்ன 21 வயது இருக்கும். அனுபவம் பத்தாது. 

சாப்பிட்ட இடத்தை அவர்களே சுத்தம் செய்து விட்டார்கள் அல்லவா?ந‌ல்ல வேளை! அதையும் உங்க‌ளை செய்யச் சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

நான் வேலை பார்த்த அலுவலகக் கேண்டீனில்‍=நாடார் கிறித்துவர் நிர்வாகம்‍‍=இன்றளவும் இலை நாங்களே எடுக்க வேண்டும்.

இன்று வெளிநாட்டுக்குப் போகும் தன் பிள்ளை, கிடைக்கும் உணவுக்குத் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சாப்பிட்டுப் பழகுமாறு பயிற்றுவிக்கும் பிராமணப் பெண்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

தன்னை விடக் குறைந்த சம்பளம் பெரும் பிராமண இளைஞ‌னைத் திருமணம் முடிக்க மறுக்கும் பார்ப்பின யுவதிகள் பெருகி விட்டார்கள்.கலப்புத் திருமணம் பிராமணப் பெண்களே அதிகம் செய்கிறார்கள். 

நல்லது. மீண்டும் சந்திப்போம்.

-- *****


(தொடரும்)


டிஸ்கி : மின்னஞ்சலில் இது சம்பந்தமாக நிறைய பேசியுள்ளதால், பின்னூட்டத்திலும் ”விவாதிக்க” நான் விரும்பவில்லை. இது தீராத விவாதம் என்பதையும் நானறிவேன். நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

91 comments:

  1. வெளியில் போகிறேன்..பிறகு சந்திப்போம்.

    ReplyDelete
  2. டிஸ்கி : மின்னஞ்சலில் இது சம்பந்தமாக நிறைய பேசியுள்ளதால், பின்னூட்டத்திலும் ”விவாதிக்க” நான் விரும்பவில்லை. இது தீராத விவாதம் என்பதையும் நானறிவேன். நன்றி.

    //

    உண்மையில் எவ்வளவு பேசினாலும் இது தீராத விவாதமாகும்தான்!

    ReplyDelete
  3. நான் ஒரு முஸ்லீம் நான் 2 மாதம் என் பிரமாணர் நன்பரின் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன்

    அங்கே அவரின் குடும்பமே உள்ளது

    சைவம் தான் அங்கே உணவென்றாலும் நான் சாப்பிடாமல் இருந்தால் முதலில் திட்டுவது பாட்டி மட்டுமே

    தனியாக எதும் கிடையாது
    எல்லாரும் ஒன்றாக தான் சாப்பிடுவோம்

    சில இடங்களில் இந்த பிரச்சனை இருக்கிறது

    ஆனால் இளைஞர்களிடம் இது இல்லை

    எனக்கு முஸ்லீம் நண்பர்களே இல்லை
    பிரமான நண்பர்கள்
    பிரமான அக்கா, அத்திம்போல் உள்ள்னர்

    எனக்கு ஆதரவாக இருப்பதும் அவர்கள் தான்
    என்னை பொருத்தவரை பிரமானர்கள் பழகுவதில் பிறரை போன்றவர்க்ள்தான்


    நான் பார்த்தவரை

    ReplyDelete
  4. இது நமது அறிவுக்கு அப்பால்பட்டது. விவாதங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  5. நான் பெரிய அளவில் அவர்களுடன் பழகியதில்லை ஏனெனில் எங்கள் ஊரில் அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு .. 3 அல்லது 5 குடும்பங்கள் இருக்கும்.. அதும் அவர்கள் மலையாளிகள்..... அதில் ஒரு குடும்பம் இருக்கிறது.. அக்கா தங்கை இருவர் மட்டுமே... கொஞ்சம் வயதானவர்கள் தான் ....... ஆனால் ரொம்ப வாய் பேசுவார்கள் ....... இப்பவும் தெரு தண்ணி குழாயில் தண்ணி பிடிக்கும் போது யாராவது பிடித்த பின் தண்ணி பிடித்தால் அந்த குழாயை கழுவி விட்டுத்தான் பிடிப்பார்கள்.............. என்ன சொல்ல ....

    ReplyDelete
  6. அய்.. இன்னிக்கு 11.30க்கு வந்தா 10மணிக்கே போட்டுடீங்க!! இனிமே 10மணியாண்ணா?

    ReplyDelete
  7. எப்ப எப்புடின்னு தெரியலையே...

    ReplyDelete
  8. இங்கேயும் புதன்கிழமைதானுங்க....!

    ReplyDelete
  9. வணக்கம் செங்கோவியாரே இதுவும் முடிவில்லா விவாதம் .
    பார்ப்பணர்கள் எல்லோரும் இப்படி இல்லை   ஒரு சிலர் செய்யும் செயலால் ஒட்டு மொத்த  மக்கள் குழுவும் ஒரே குடையில் நோக்கப்படுகின்றது!

    ReplyDelete
  10. இங்கேயும் புதன்கிழமைதான் பன்னிக்குட்டியாரே!

    ReplyDelete
  11. எனக்கும் வேலை தொடங்கிவிடும் நாளை சந்திப்போம் அண்ணாச்சி!

    ReplyDelete
  12. செங்கோவி அண்ணனின் கருத்தோடு ஒன்றி போகிறேன்...எல்லா பிராமணர்களும் தீவிரவாதிகள் அல்ல(லாஜிக் சரியாண்ணே?)...

    ReplyDelete
  13. எல்லோருக்கும் வணக்கம்!இங்கே கருத்தோ,விவாதமோ புரியும் நிலையில் நான் இல்லை.ஈழத்தில் பொதுவாகவே பிராமணர்களை கோவிலுடன் நாம் நிறுத்தி விடுவதால் இந்தப் பேச்சுக்கே இடமில்லை!மேலும்,வேறு ஜாதிகளிடையே பாகுபாடு உண்டு தான் மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  14. இங்கு தீவிரவாதிகள் ன்னு நான் சொன்னது தீவிரபற்றாளர்களை... ஆனால் ///பிராமணர்களின் ஜாதித் துவேஷத்தை, வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்காதவர் தமிழகத்தில் குறைவே/// வழிமொழிகின்றேன்...

    ReplyDelete
  15. ///Yoga.S.FR said...

    எல்லோருக்கும் வணக்கம்!///

    வணக்கம் ஐயா!

    ReplyDelete
  16. இந்தியாவில்,தமிழ் நாட்டில் பூசகர்கள், பிராமணர்கள்,ஐயர் என்று அவர்களுக்குள்ளேயே பிடுங்குப்பாடு இருப்பதும் வெகுஜன ஊடகங்கள் ஊடாக அறிந்ததுண்டு!பொதுவாகவே,ஈழத்தில் பொதுவான நிகழ்வுகளில் ஊரவர்களை பாகுபாடின்றி அழைப்பதுண்டு.அங்கு,வாழை இலை சாப்பாடு தான்!இலை அவரவர் எடுத்துப் போட வேண்டும்.பின்னர் மொழுக எல்லாம் மாட்டார்கள்.ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  17. இந்தப் பிரச்சனையை யார் கிளப்பினார் என்று பூடகமாக சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  18. ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.///இதனை "அவர்" பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லையே?பூசி மெழுகி அல்லவா பதிலுரைத்திருக்கிறார்?

    ReplyDelete
  19. இந்து மதத்தின் மீதும், நம் முன்னோர்களின் மீதும் மரியாதை உள்ள சராசரி இந்தியன் நான், அவ்வளவே!///இது போதும்!இதனை விடவும் வேறாக இருப்பதில் பயன் எதுவும் விளைந்து விடாது.

    ReplyDelete
  20. மொக்கராசு மாமா said...///Yoga.S.FR said...எல்லோருக்கும் வணக்கம்!///வணக்கம் ஐயா!///வணக்கம் மொக்கராசு மாமா!சுகந்தன்னே?

    ReplyDelete
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said...இங்கேயும் புதன்கிழமைதானுங்க....!///இங்கயும் தான்!..............................................எங்க போயிட்டாரு?

    ReplyDelete
  22. ////Yoga.S.FR said...

    மொக்கராசு மாமா said...///Yoga.S.FR said...எல்லோருக்கும் வணக்கம்!///வணக்கம் ஐயா!///வணக்கம் மொக்கராசு மாமா!சுகந்தன்னே?////

    ஆமாம் ஐயா.. இன்னிக்கு எதாவது புது பிரெஞ்சு வார்த்தை இருக்கா ஐயா?

    ReplyDelete
  23. மொக்கராசு மாமா said...ஆமாம் ஐயா.. இன்னிக்கு எதாவது புது பிரெஞ்சு வார்த்தை இருக்கா ஐயா?/// நல்ல வார்த்தையா,கெ........வார்த்தையா?

    ReplyDelete
  24. ///Yoga.S.FR said...

    மொக்கராசு மாமா said...ஆமாம் ஐயா.. இன்னிக்கு எதாவது புது பிரெஞ்சு வார்த்தை இருக்கா ஐயா?/// நல்ல வார்த்தையா,கெ........வார்த்தையா?///

    ரொம்ப ரொம்ப நல்ல வார்த்தைகள்? அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, சின்ன வயசுல இருந்து நாங்க ரொம்ப நல்லவங்கங்களாவே வளர்ந்துட்டோம்.

    ReplyDelete
  25. ஓகே.. நண்பர்களே...புவனாவ நோட்டே நானும் தூங்க போறேன்....

    ReplyDelete
  26. மொக்கராசு மாமா said...ஓகே.. நண்பர்களே...புவனாவ நோட்டே நானும் தூங்க போறேன்....///புவனாவ நோட் பண்ணிட்டு தூங்குங்க! பொன் நுயி!பொன் சோந்தி.(bon santé)அப்புடீன்னா நலத்துக்கு வாழ்த்து!

    ReplyDelete
  27. //தமிழ்வாசி - Prakash said...
    raittu//

    ரைட்டு பிரகாஷ்.

    ReplyDelete
  28. //கோகுல் said...
    டிஸ்கி : மின்னஞ்சலில் இது சம்பந்தமாக நிறைய பேசியுள்ளதால், பின்னூட்டத்திலும் ”விவாதிக்க” நான் விரும்பவில்லை. இது தீராத விவாதம் என்பதையும் நானறிவேன். நன்றி.

    //

    உண்மையில் எவ்வளவு பேசினாலும் இது தீராத விவாதமாகும்தான்!//

    உண்மை தான் கோகுல்..

    ReplyDelete
  29. //Speed Master said...
    நான் ஒரு முஸ்லீம் நான் 2 மாதம்
    என்னை பொருத்தவரை பிரமானர்கள் பழகுவதில் பிறரை போன்றவர்க்ள்தான்
    நான் பார்த்தவரை//

    நல்ல நோக்கத்துடன் உண்மையைப் பொதுவில் வைத்ததற்கு நன்றி மாஸ்டர்.

    ReplyDelete
  30. //
    Dr. Butti Paul said...
    இது நமது அறிவுக்கு அப்பால்பட்டது. விவாதங்கள் தொடரட்டும்.//

    அப்படித் தான்..அப்படியே தான்..ரைட்டு.

    ReplyDelete
  31. // அதில் ஒரு குடும்பம் இருக்கிறது.. அக்கா தங்கை இருவர் மட்டுமே... கொஞ்சம் வயதானவர்கள் தான் ....... ஆனால் ரொம்ப வாய் பேசுவார்கள் ....... இப்பவும் தெரு தண்ணி குழாயில் தண்ணி பிடிக்கும் போது யாராவது பிடித்த பின் தண்ணி பிடித்தால் அந்த குழாயை கழுவி விட்டுத்தான் பிடிப்பார்கள்.............. என்ன சொல்ல ...//

    மாஸ்டர் சொன்ன மாதியும் ஆட்கள்...இப்படியும் ஆட்கள்...என்ன செய்ய?

    ReplyDelete
  32. //மொக்கராசு மாமா said...
    அய்.. இன்னிக்கு 11.30க்கு வந்தா 10மணிக்கே போட்டுடீங்க!! இனிமே 10மணியாண்ணா?//


    இல்லைய்யா..இன்னிக்கு வெளில போனதால சீக்கிரம் போட்டேன்.

    ReplyDelete
  33. //
    அப்பு said...
    எப்ப எப்புடின்னு தெரியலையே...//

    அப்பப்போ அப்படித்தான் அப்பு !

    ReplyDelete
  34. // Yoga.S.FR said...//


    ஐயா வணக்கம்..

    ReplyDelete
  35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இங்கேயும் புதன்கிழமைதானுங்க....!//

    ஏன் பம்மிட்டாரு...சரி பாவம், ஏற்கனவே டயர்டா இருப்பாரு!

    ReplyDelete
  36. //தனிமரம் said...
    வணக்கம் செங்கோவியாரே இதுவும் முடிவில்லா விவாதம் .//

    வணக்கம் நேசரே..நன்றி.

    ReplyDelete
  37. //
    Yoga.S.FR said...
    இந்தப் பிரச்சனையை யார் கிளப்பினார் என்று பூடகமாக சொல்லியிருக்கிறீர்கள்!//

    ஐயா, பூடகமெல்லாம் ஒன்றும் இல்லை...நீங்க வேற எதையாவது கிளப்பி விட்றாதீங்க..

    என் மதிப்பிற்குரிய பெரியவர் அனுப்பிய மெயிலுக்கு பதில் சொன்னேன்..வேறு சில நண்பர்களும் பின்னர் விவாதத்தில் இணைந்தனர்..கடந்த ஒரு மாதமாக நடந்த மின்னஞ்சல் போக்குவரத்து இது..எப்படியும் 6-7 பகுதி வரலாம்..ரெடியா இருங்க!

    ReplyDelete
  38. பொன் நுயி...பொன் சோந்தி..அ துமா.

    ReplyDelete
  39. இது நமது அறிவுக்கு அப்பால்பட்டது. விவாதங்கள் தொடரட்டும்.
    ---இந்த மாம்சை வழி மொழிகிறேன்

    ReplyDelete
  40. இதுகள் பற்றி நான் பெரிதாக அறிந்ததில்லை பாஸ் எனவே நான் இந்தவிவாதத்தில் கருத்து கூறவில்லை.

    ReplyDelete
  41. மாப்ள உம்ம போன்ற அறிவாளிகளிடம் தர்க்கம் செய்து நாளாகிப்போச்சி எனக்கு..எதுக்கு அப்புறம் அது ஒரு பஞ்சாயத்து நடக்கும்..போங்கப்பா!

    ReplyDelete
  42. வந்தேன் சென்றேன்

    ReplyDelete
  43. >தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது என்று நம்புவதும், பிற ஜாதியினரை விட தான் உயர்ந்தவர்கள் என்று நம்புவதும், ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.


    ----------

    உண்மை

    ReplyDelete
  44. மனிதனின் அழுக்கில் ஒன்று தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்வது, முன்னொரு காலத்தில் சந்நிதியில் கடவுள் என்னும் பிம்பத்தின் அருகே அனுமதிக்கப் பட்டதால் அவர்களை சாமி என்றே கூப்பிட்ட பிற இனம், இன்று காசு கொடுத்தால் சாமி பாக்கெட்டில் என்று தெரிந்து கொண்டதால் அவர்களுக்கு மரியாதை குறைந்து விட்டது... அப்படி மரியாதை குறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆச்சாரம் அனுஷ்டானம் என்று கூறி இன்னும் விலகி சென்று கொண்டே இருக்கிறார்கள் பலர்... இது அனைத்து இனங்களுக்கும் பொருந்தும்.. சுயநலம் கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்... உங்கள் கருத்தும் உங்கள் நண்பர் கருத்தும் ஒன்றே, என்ன நீங்கள் மேற்கில் இருந்து வந்து கொண்டு இருக்கிறீர்கள், அவர் கிழக்கில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்... இருவரும் எதிர் எதிராய் வருவது போல் தெரிந்தாலும் இருவரும் ஒரு எல்லையில் அடைவீர்கள்...
    சாப்பிட்ட இடத்தை கழுவி விடுவது வேறு, உட்கார்ந்த இடத்தை கழுவி விடுவது வேறு.. என்பதை மட்டும் உங்கள் நண்பருக்கு சொல்லிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  45. பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை நான் பிரசுரிப்பதில்லை. அது வீண் பகட்டாகத் தெரியும் என்பதால், பொதுவில் வைக்க எனக்குத் தயக்கம் உண்டு.//

    இனிய காலை வணக்கம்,
    அவ்வ்வ்வ்வ்வ்..
    இவற்றையெல்லாம் நான் யோசிக்காது மின்னஞ்சல்களைப் பிரசுரித்த காரணத்தினால் தான்
    வாசகர் கேள்வி பதில் ப்ளாக்கில் வாங்கிக் கட்டியிருக்கேன்.

    ReplyDelete
  46. ஹன்சிகா ஸ்டில்லில் ஆரம்பித்து, ஓஷோ புத்தகங்கள் வரை எனக்கு //

    ஆமா நீங்க ஹன்சிக்கு கோயில் கட்டப் போறாதா சொன்னாங்களே...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  47. என் கல்லூரி நண்பர், பிராமணர். சென்னையைச் சேர்ந்தவர். நாங்கள் கால்லூரியில் படிக்கும்போது இன் - ப்ளாண்ட் ட்ரெய்னிங்கிற்காக சென்னை சென்று, அவர் ஏரியா அருகில் தங்கியிருந்தோம். ஒருநாள் தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அவரது தாயும், பாட்டியும் இலையில் சோறு பரிமாறினார்கள். நண்பருக்கும், அவரது தந்தைக்கும் மட்டும் தட்டில் சாப்பாடு.
    //

    இத்தகைய இழி நிலை இன்றும் ஈழத்தின் ஒரு சில பகுதிகளில் இருக்கிறது பாஸ்.

    ReplyDelete
  48. நல்லதோர் விவாதம்,
    செங்கோவியின் பதில்கள் யதார்த்ததினைப் பிரதிபலித்து நின்றாலும்,
    பதில் அளிக்கும் ஐயாவால்
    அது அந்தப் பையனின் மன நிலையினைப் பொறுத்து எனச் சொல்லும் விடையினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    மக்களிடத்தே வேற்றுமைகளை வளர்க்கும் வண்ணம் ஒரு சிலர் செயற்படுவதை நாம் அவரவரின் மன நிலையினைப் பொறுத்து என்று சொல்லுவதில் நியாயம் உண்டு,
    ஆனால் அதிகளவான இடங்களில், ஏன் எம் இலங்கையிலும் கூட பிராமணர்களிற்கும் ஏனைய மக்களுக்குமிடையான உறவு முறையில் பாரிய இடை வெளியும், பேதங்களும் இருக்கின்றனவே?

    இது யார் குற்றம்? இது அவர்களாகவே வலிந்து தம்மைச் சமுதாயத்துடன் ஒன்றித்து வாழாது பிரித்து தனிமைப்படுத்தி வாழ.
    தாம் உயர்ந்தவர்கள் என்று காண்பிக்க எடுத்துக் கொண்ட அவதாரமா?

    ReplyDelete
  49. காலை வணக்கம்!பொன் ஜூர்!

    ReplyDelete
  50. செங்கோவி said.....இது..எப்படியும் 6-7 பகுதி வரலாம்..ரெடியா இருங்க!///ஒரு அடிம நமக்கும் சிக்காமலா போயிடுவான்?ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  51. இது எல்லாவற்றையும் விடக் கொடுமையானது,"இட ஒதுக்கீடு" என்ற பதம்!அந்த ஜாதிக்கு இத்தனை சத விகிதம்,இந்த ஜாதிக்கு அத்தனை சத விகிதமென்று அரசே சட்டத்தில் அடக்கியிருப்பது கொடுமை, இல்லையா?மனிதர்களுக்கு இருப்பதென்னவோ இரண்டு கை,இரண்டு கால் ஒரு மனது,இரத்தம் கூட சிகப்பாகத்தானே இருக்கிறது?வியர்வை வாசனை கூட வேறுபடுமோ?என்ன ஜாதியோ,மதமோ?,போங்க!

    ReplyDelete
  52. நல்ல பகிர்வு அண்ணே

    ReplyDelete
  53. //பிறப்பு அடிப்படையில் பேதம் பார்க்கும் பிராமணர்களை மட்டுமல்லாது, வன்னியர்/நாயக்கர்/நாடார்/தேவர்/பிள்ளைவாழ் ஜாதியைச் சேர்ந்தோரையும் கண்டிருக்கிறேன். //

    உண்மையான கருத்துக்கள் தாழ்த்த பட்டவர்களை அனைத்து ஜாதியினரும் தான் கேவலமாக பார்க்கின்றனர்... அப்படி என்ன தான் இருக்கு அவுங்க கிட்ட...

    ReplyDelete
  54. மாற்றங்கள் மனதுக்குள் வரவேண்டும். மற்றவைகள் பயன்தரா. அறிவுக்கண் திறக்கும் உண்மையான கல்வி ஒன்றே இதைச் செய்யும் என்பது எனது கருத்து.

    தயை செய்து காண்க.

    இந்தப் பதிவில் சொல்லப்பட்ட உண்மைச் சம்பவம் மனிதர்கள் எத்துனை இறுகிப் போய்விட்டனர் என்பதைக் காட்டுகிறது.

    ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?


    http://vettipaechchu.blogspot.com/2011/07/blog-post_19.html

    இந்த விவாதம் முடிவடையா ஒன்றுதான். மனிதர்களை முடமாக்கிப் போடக்கூடியது இந்தப் பாகுபாடு.

    ReplyDelete
  55. நண்பர் செங்கோவிக்கு...
    நீங்கள் சொல்லியிருப்பது போல் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.
    ஆனால் நான் கல்லூரியில் படித்தபோது பழகிய நண்பர்களில் இது போல் பார்க்கவில்லை. என் நண்பன் ஆதிரெத்தினம் பிராமண வகுப்பைச் சார்ந்தவந்தான். ஆனால் படிக்கும் காலத்தில் அவன் கொண்டு வரும் உணவை எங்களுக்கு கொடுத்துவிட்டு எங்களது உணவையே பெரும்பாலும் அவன் உண்பான். மேலும் ராமேஸ்வரம் சென்றபோது வழியில் அவனது வீட்டில் தங்கி இரவு சாப்பிட்டு அங்கே படுத்திருந்து சென்றிருக்கிறோம்.
    எல்லாரும் பார்ப்பதில்லை என்றாலும் இன்னும் ஆச்சாரம் என்ற போர்வைக்குள் இருக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    தொடருங்கள்... ஆக்கப்பூர்வமான... வருத்தங்களில்லாத விவாதம் தொடரட்டும்.

    ReplyDelete
  56. நாட்டின் மக்கள் தொகையில் 2% இருக்கும் ஒரு சாரார் 98% மத்திய/மாநில அரசுப் பணிகளில் இருந்த காலமும் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை இருந்திருக்கிறது. நல்ல வேலையாக அம்பேத்கர் போன்றவர்களால் இட ஒதுக்கீடு வந்தது, இல்லாவிட்டால் அது அப்படியேதான் இருந்திருக்கும். [தற்போது கூட அவர்கள் பெரும்பங்கு வகிக்கலாம், சரியான புள்ளி விபரம் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா செங்கோவி?] புத்திசாலித் தனம் என்பது எல்லா இனத்தவர்களுக்கும் சமமாகத்தானே இருக்கும்? அப்படியானால் இது எப்படி சாத்தியமானது? நாடு முழுவதும் இவர்கள் மட்டும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து மற்றவர்களை வாழ விடாமல் செய்யும் குள்ளநரித் தனமான வேலை இது. அவர்கள் அத்தனை பெரும் இப்படித்தான் என்று சொல்லவில்லை, விதி விளக்காக சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு இனம் என்பது உயர்ந்தது என்றால் எதை வைத்து என்றும் சொல்ல வேண்டும். ஒழுக்கம், உண்ணும் உணவு, மனித நேயம் இப்படி எல்லாவற்றிலும் மற்றவர்களைப் போலவே ஆகிவிட்ட பின்பு தன்னுடைய சாதி மற்றும் உயர்ந்தது என்பதற்கு அர்த்தம் என்னவென்றே புரியவில்லை.

    ReplyDelete
  57. இன்று நிலைமை மாறி விட்டது செங்கோவி.என் தாய்,வயது 93,மாறி விட்ட இந்த அணுகு முறைக்கு ஒரு அத்தாட்சி.இன்று பிராமணர்களைக் காட்டிலும் மற்ற மேல் வகுப்பு இந்துக் களிடமே இந்தப் ’பார்ப்பனீயம் ’ ஓங்கி நிற்கிறது என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  58. எனக்கும் தங்களுக்கு ஏற்ப்பட்ட விருந்தூம்பல் நிகழ்வு நிகழ்ந்து உள்ளது, இத்தனைக்கும் நண்பனின் தந்தை பெரிய அரசு நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர். அதுவரை விருந்தோம்பலில் இத்தகைய நிகழ்வை வாழ்வில் கண்டிராத எனக்கு மிக பெரிய கோபத்தை கொடுத்தது.

    ReplyDelete
  59. ///விக்கியுலகம் said...

    மாப்ள உம்ம போன்ற அறிவாளிகளிடம் தர்க்கம் செய்து நாளாகிப்போச்சி எனக்கு..எதுக்கு அப்புறம் அது ஒரு பஞ்சாயத்து நடக்கும்..போங்கப்பா///

    ஆமாங்ணா!

    ReplyDelete
  60. செங்கோவி அவர்களே இது தீரா விவாதம். புரிந்து கொண்டோர் அது பற்றி பேசுவது இல்லை. அதை பற்றி பேசுவோர் புரிந்து கொள்ள போவதும் இல்லை. அப்படியே விட்டு விடுவது உத்தமம். எல்லோரும் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முயாது.

    ReplyDelete
  61. விவாதம் தொடர்ந்தால் சரி , விதண்டாவாதம் ஆகி விட வேண்டாம்

    ReplyDelete
  62. ungal ilaiyai eduthu kuppaiyil poda sonnadhilum and idam sutham seiya pattadhilum enna thavaru? yaar ilaiyil sapitalum adhai dhan seiya solvargal..saani pottu mozhuguvargal..idhu hygine. Idhai en thavaraga paarka vendum?

    Brahmana kudumbangalil sapadu thattu endru avar avarkanadhu irukum..en amma en thattil sapida mattar..adhu polave naanum..idhuvum hygine saardhadhe..ilaiyil sapiduvadhu thattil sapiduvadhai vida better aanadhu endru engal karuthu..pandigai naatkalil ilaiyil soru kidaikum..appozhudhum nangal eduthu kuppaiyil poduvom engal ilaiyai..adhu polave edhil saptalum yaar saaptalum saapidum idam mozhuga padum. Podhuvaga judgementalaga irupadhu pola iruku..neengal ungalai medaiyil niruthi theerpu ezhudhugireer.

    Muthu

    ReplyDelete
  63. தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது என்று நம்புவதும், பிற ஜாதியினரை விட தான் உயர்ந்தவர்கள் என்று நம்புவதும், ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.

    And Iyers always thought they have only brain all others are empty.They have to review this point also.

    We have to accept they have brain power than us but they dominate because of this reason .
    Nowadays many iyer youths finished marriage with Chettiar , Pillai,Etc

    For business owners if you appointed a iyer as a manager you always grow .I saw in many companies in Tirupur ,Coimbatore, Chennai in textiles field This is my experience .Iyer guys always be honest to company mostly and they think always company growth

    ReplyDelete
  64. நீங்கள் இருவருமே மேலோட்டமாகத்தான் விவாதித்து உள்ளீர்கள். காண்டீனில் இலை எடுப்பது அனைவருக்கும் பொதுவானதே. ஒரு சிலரை மட்டும் எடுக்க சொல்வதில்லை. திமுக எப்படி தமிழ் தமிழ் என்று சொல்லி ஏமாதியதோ
    அப்படியே பிராமின் எதிர்ப்பும். தன்னை சுற்றி பிராமின் கூட்டத்தைதான் வைத்துள்ளர்கள். இன்றளவும் income tax LIC
    railways போன்ற துறைகளில் poerful post களில் பிரமிநேர் ஆதிக்கம் இருப்பது அறிந்ததே. எத்தனை பெரியார் வந்தாலும் அவர்களை அடைக்கலமே ஒழிய அளிக்கவே முடியாது. பிராமின் பெண்கள் வெட்டரு ஜாதியில் ஒயர்ந்த நிலையில் உள்ளவர்களைத்தான் மணம் புரிகின்றார்கள். பிராமின் ஆண்கள் கலப்பு மணம் அரிதே.

    ReplyDelete
  65. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..தொடர்ச்சி அடுத்த வாரம் வரும்..

    ReplyDelete
  66. >>பொதுவில் வைக்க எனக்குத் தயக்கம் உண்டு.



    அப்போ கை வைக்க எங்கே கூட்டிட்டு போவீங்க?

    ReplyDelete
  67. ஒரு கோணத்தில் பார்த்தால் ரொம்ப ஆச்சாரத்தில் ஊறியவர்களால் / அப்படி வளர்க்கப்பட்டவர்களால் சட்டென்று அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து வெளியே வந்துவிடமுடியாது (இது எந்த விஷயத்துக்குமே பொருந்தும்). ஆனால் அடுத்தவர் மனம் புண்படும்படி நடந்துகொண்டது தவறுதான். அப்படியே ஆச்சாரத்தை தொடர விரும்பினாலும் தன் வரையில் வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  68. ///எனக்கு ஆதரவாக இருப்பதும் அவர்கள் தான்என்னை பொருத்தவரை பிரமானர்கள் பழகுவதில் பிறரை போன்றவர்க்ள்தான்///தயங்காமல் உண்மையை வெளியிட்டமைக்காக ஸ்பீட் மாஸ்டரைப பாராட்டுகிறேன் . சமுக ஒற்றுமைக்கு இது போன்ற உண்மைகள் பயனுள்ளவை.

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. //Yoga.S.FR said... [Reply]
    ஈழப்படுகொலை போன்ற பாதகச்செயல்களில் மனிதநேயத்துடன் மனிதர்களுக்காக இரங்காததுமே பெரும்பாலான பிராமணர்களின் தவறு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அதுவே.///இதனை "அவர்" பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லையே?பூசி மெழுகி அல்லவா பதிலுரைத்திருக்கிறார்?//

    ஈழத்தை விடுவோம்.உள்ளூரில் தன் சாதியைத் தவிர ஏனையோருக்காகக் குரல் கொடுக்ககூடிய சாதி ஒழிப்பாளர்கள் உண்டா?

    'சாதியை ஒழிப்போம்(என் சாதியைத்தவிர)' என்பதுதானே இங்கே நிலை.

    ஈழத் தமிழருக்கு சோ மற்றும் ராம் ஆதரவு இல்லை என்றால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயமும் ஆதரிக்கவில்லை என்று எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
    ஈழத்தமிழர் பிரச்சனையில் பிராமணர் நிலை பற்றி ஏதாவது கணக்கெடுப்பு செய்து விட்டுப் பேசுகிறீர்களா?மற்ற‌ எல்லா சாதியனரும் 100 சதம் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஈடுபாடு காட்டுகிறார்களா?குறைந்த பட்சம் ஒரு 75% சதம் பிராமணர்கள் பிரச்சனை என்ன என்றாவது அறிந்து இருப்பார்கள்.ஏனையோர்
    அதுவும் கூட அறிய மாட்டார்கள்.

    ReplyDelete
  71. ///எஸ் சக்திவேல் said...
    தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது என்று நம்புவதும், பிற ஜாதியினரை விட தான் உயர்ந்தவர்கள் என்று நம்புவதும்,///

    உண்மை என்ன வென்றால் இன்று சமஸ்கிருதம் பிராமணர்களுக்குத் தெரியாது.
    சஸ்கிருதம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
    பேச்சு மொழியாக சமஸ்கிருதம் இல்லாமல் போய் ஒரு யுகாந்திரம் ஆயிற்று.
    எனவே தமிழைவிட சஸ்கிருதம் உயர்வு என்றெல்லாம் இப்போது எண்ணக் கூடிய பிராமணர்கள் உள்ளார்கள் என்ப‌து கற்பனையே.

    பிராமணர்கள் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

    மாட்டூர் என்ற கர்னாடக மாநிலம் கிராமத்தில் இந்தியாவிலேயே அனைத்து மக்களும் சமஸ்கிரதத்தில் பேசுகிறார்களாம்.அதில் பிராமணன் ஏனையோர் என்ற வேற்றுமை இல்லை.

    'தான் உயர்ந்தவன்' என்பது எல்லோரும் கைக் கொள்ள வேண்டிய ஒன்று.அதில் தவறு இல்லை.அது தன்னம்பிக்கை.

    ஆனால், 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'

    பொது இடங்களில் பிறரைத் தன் உயர்வு மனப்பான்மையால் இழிவு செய்யும் பிராமணர்கள் இப்போது இல்லை.பெரியார் மற்றவர்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வினால் உண்டான பயமாகக்கூட இருக்கலாம்.

    ஆனால் தன் குலப்பெருமையை ஒவ்வொருவரும் கைகொள்ளல் வேணும் அதில் தவறு இல்லை. பிற‌ குலங்கள் அதனால் கீழானவை என்று கருதுதல் தவறு. அப்படிப்பட்ட பிராமணர்கள் இப்போதும் இருக்கிறர்கள் என்பது கற்பனையே

    ReplyDelete
  72. ///uryajeeva said...
    மனிதனின் அழுக்கில் ஒன்று தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்வது, முன்னொரு காலத்தில் சந்நிதியில் கடவுள் என்னும் பிம்பத்தின் அருகே அனுமதிக்கப் பட்டதால் அவர்களை சாமி என்றே கூப்பிட்ட பிற இனம், இன்று காசு கொடுத்தால் சாமி பாக்கெட்டில் என்று தெரிந்து கொண்டதால் அவர்களுக்கு மரியாதை குறைந்து விட்டது... அப்படி மரியாதை குறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆச்சாரம் அனுஷ்டானம் என்று கூறி இன்னும் விலகி சென்று கொண்டே இருக்கிறார்கள் பலர்.///

    உயர்ந்தவராகவே உண்மையாக இருந்தபோது கிடைத்த மரியாதை உயர்ந்தவர்களாகக் 'காட்டிக்கொள்ள' ஆரம்பித்தபோது போய்விட்டது.ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான்.மீண்டும் 'உண்மையான உயர்ந்தவர்களாக' ஆகும் முயற்சியாகத்தான் விடுப‌ட்டுப் போன மரபுகளை இளைய தலை முறைக்கு நினைவூட்டி வருகிறார்கள் மிகச்சில பிராமண குடும்பங்களில்.நிச்சயமாக அது
    மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிடக் கூடியதாக இல்லை.

    ஒரு வேற்றுமையை உங்க‌ளுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.கோவில் பூசை செய்யும் அர்ச்சகருக்குப் பிற சாதியினரிடம் கிடைக்கும் மரியாதை அன்றும் இன்றும் பிராமணர்கள் கொடுப்பதில்லை.அர்ச்சகர்கள் பிராமண சமுதாயத்தில் கடைசி படித்தரத்திலேயே உள்ளனர். அவர்களுடன் ஏனைய பிராமணர்கள் பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது.

    வேதம் அல்லது ஆகமம் படித்துவிட்டு திருமணம் ஆகாமல் இருக்கும் பிராமணப் பிள்ளைகள் அதிக அளவில் உள்ளனர்.படித்த பிராமண யுவதிகள் மற்ற சாதியினரைத் திருமண‌ம் செய்யத் தயார். ஆனால் ஒரு சாஸ்திரியையோ, குருக்களையோ திருமணம் செய்யத் தயக்கம்.

    ReplyDelete
  73. ///நிரூபன் said... [Reply]
    என் கல்லூரி நண்பர், பிராமணர். சென்னையைச் சேர்ந்தவர். நாங்கள் கால்லூரியில் படிக்கும்போது இன் - ப்ளாண்ட் ட்ரெய்னிங்கிற்காக சென்னை சென்று, அவர் ஏரியா அருகில் தங்கியிருந்தோம். ஒருநாள் தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அவரது தாயும், பாட்டியும் இலையில் சோறு பரிமாறினார்கள். நண்பருக்கும், அவரது தந்தைக்கும் மட்டும் தட்டில் சாப்பாடு.
    //

    இத்தகைய இழி நிலை இன்றும் ஈழத்தின் ஒரு சில பகுதிகளில் இருக்கிறது பாஸ்.///

    பிராமணர்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தட்டுதான்.அவை ஒன்றின் மீது ஒன்று படாமல் விலக்கி விலக்கி அடுக்கப்படும். தினசரி கழுவினலும் அது எச்சில் தட்டாகவே கருதப்படுகிறது.அந்தத் தட்டு மற்றவர்கள்
    தொடக்கூடாது.வீட்டுத் தலைவரைத் தவிர மற்றவர்கள் அவரவர் தட்டை அவர் அவர்களே கழுவி வைக்க வேண்டும். அந்தத் தட்டு உணவு பரிமாறுதல் போன்றவைகளுக்கு உபயோகமாகாது. அந்தத் தட்டை தேவையில்லாமல் தொட்டு விட்டால் கை கழுவார்கள். சென்னை போன்ற நகரங்களில் இந்த நல்ல பழக்கம் மாறிவருகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்.

    தண்ணீர் பொதுக் குடத்திலிருந்து மொண்டு நேரடியாகக் குடிக்க கூடாது.ஒரு சொம்பில் மொண்டு கொண்டு தள்ளி வந்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொண்டு உதட்டில் படாமல் உயர்த்திக் குடிக்க‌ வேண்டும். தண்ணீரை வீட்டில் உள்ளோர் எல்லோர் மேலேயும் பட்டுத் தன்னை விழுப்பு(தீட்டு)ப் பட்டுக் கொள்ளாத மூத்த பெண்மணிதான் கையாளுவார்.எல்லோரும் பொதுக் குடத்தைத் தொட முடியாது.இதெல்லாம் பழங்கால வழக்கம். பெரு நகரங்களில் கடைப்பிடிக்க முடிவதில்லை.

    இலை என்பது விருந்தினர்களுக்குக் காண்பிக்கும் மரியாதை. அவர்களுடைய எச்சில் தட்டை உங்க‌ளுக்கு வைத்திருந்தால் தான் அது தவறு.

    இந்தப் பந்திபோஜன விவகாரந்தான் பிற சாதியினருக்குப் பெரிய மன உளைச்சலைத் தந்து இருக்கிறது. பெரியாருக்கும் அதுவே ஆரம்பப்புள்ளி.

    நிலையான மாற்றங்களை அதிரடியாகச் செய்ய முடியாது.உங்க‌ளை வீட்டிற்குள் அழைத்து உணவிட்டதே அவர்களுடைய 75% மன மாற்றத்தைக் காட்டுகிறது.
    100% மாற்றம் வர இன்னும் கொஞ்சம் நாளாகும்.செங்கோவிக்கு இது நடந்து
    8 வருடங்களாவது இருக்கலாம்.இப்போது அந்த நண்பர் வீட்டில் நடை முறைகள் உங்களுக்கு உகப்பாக இருக்கும் வண்ணம் மாறியிருக்கலாம்.

    ReplyDelete
  74. ///Yoga.S.FR said... [Reply]
    இது எல்லாவற்றையும் விடக் கொடுமையானது,"இட ஒதுக்கீடு" என்ற பதம்!அந்த ஜாதிக்கு இத்தனை சத விகிதம்,இந்த ஜாதிக்கு அத்தனை சத விகிதமென்று அரசே சட்டத்தில் அடக்கியிருப்பது கொடுமை, இல்லையா?மனிதர்களுக்கு இருப்பதென்னவோ இரண்டு கை,இரண்டு கால் ஒரு மனது,இரத்தம் கூட சிகப்பாகத்தானே இருக்கிறது?வியர்வை வாசனை கூட வேறுபடுமோ?என்ன ஜாதியோ,மதமோ?,போங்க!///

    இட ஒதுக்கீடு தவறாகாது. ஓட்டப் பந்தயத்தில் விளிம்பில் இருப்பவர்களுக்கு
    கொடுக்கும் advantage
    போலத்தான்.இன்னும் எத்தனை வருடங்களுக்கு? மீண்டும் மீண்டும் பயனடைந்த குடும்பங்களே பயன் அடைய வேண்டுமா? பொருளாதாரப் பின்ன‌டைவை கருத்தில் கொள்ளலாமா கூடாதா? இதுபோன்றவையே விவாதத்திற்கு உரியவை.

    அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

    ReplyDelete
  75. ///வெட்டிப்பேச்சு said... [Reply]
    மாற்றங்கள் மனதுக்குள் வரவேண்டும். மற்றவைகள் பயன்தரா. அறிவுக்கண் திறக்கும் உண்மையான கல்வி ஒன்றே இதைச் செய்யும் என்பது எனது கருத்து.

    தயை செய்து காண்க///

    'வெட்டிப்பேச்சி'ன் குறிப்பிட்ட கட்டுரை வெட்டிப்பேச்சு இல்லை எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். படித்து சிந்திக்க வேண்டும்.

    அதில் 'வன்கொடுமை தடைச்சட்டம்' பற்றிச் சொல்லியுள்ளார்.

    ஒரு கூட்டத்தில் நான்,"தாழ்த்தப் ப‌ட்டவன் என்று திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்.என் குலம் நந்தனார் குலம் என்றும், திருப்பாணாழ்வார் குலம் என்றும், சோக்கா மேளா குலம் என்றும்,வள்ளுவனின் குலம் என்றும்,
    கனகதாசரின் குலம் என்றும்,சுவாமி சகஜானந்தரின் குலம் என்றும் வியாசனைப் பெற்றவளின் குலம் என்றும்,நாராயண குருவின் குலம் என்றும்
    குகனின் குலம் என்றும் பெருமை பேசுங்கள். யார் உங்க‌ளைத் தாழ்த்த முடியும்? உங்களைப் பற்றியும், உங்கள் குலத்தைப் பற்றியும் அறிந்து குலப் பெருமிதம் அடையுங்கள்."என்றெல்லாம் பேசினேன். தவறிப்போய் தலித் என்பதற்கு பதில் 'ஹரிஜன்' என்று சொல்லிவிட்டேன்.அதற்காக என் மீது வன்கொடுமைத் தடைச் சட்டம் பாயும் என்று மனு தயாரிக்கப்பட்டு போலிசில் புகார் கொடுக்க ஆயத்தமாயினர். இறை அருளால் அவர்களில் ஒருவருக்கு
    நியாய உணர்வு தோன்றி என்னைக் கைதில் இருந்து காப்பாற்றினார்.இனி தலித் என்றே சொல்கிறேன் என்று அவர்கள் எல்லோரிடமும் கூற வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக மன்னிப்புக் கேட்ட மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  76. ///ஆனால் நான் கல்லூரியில் படித்தபோது பழகிய நண்பர்களில் இது போல் பார்க்கவில்லை. என் நண்பன் ஆதிரெத்தினம் பிராமண வகுப்பைச் சார்ந்தவந்தான். ஆனால் படிக்கும் காலத்தில் அவன் கொண்டு வரும் உணவை எங்களுக்கு கொடுத்துவிட்டு எங்களது உணவையே பெரும்பாலும் அவன் உண்பான். மேலும் ராமேஸ்வரம் சென்றபோது வழியில் அவனது வீட்டில் தங்கி இரவு சாப்பிட்டு அங்கே படுத்திருந்து சென்றிருக்கிறோம்.///

    சே.குமாரின் இந்தப் பின்னூட்டம் ஆக்கபூர்வ்மானது. இது போன்ற தகவல்கள் தேவையற்ற காழ்ப்புணர்வைக் களைந்து சமூக ஒற்றுமையைக் கொடுக்கும்.

    ReplyDelete
  77. ///புத்திசாலித் தனம் என்பது எல்லா இனத்தவர்களுக்கும் சமமாகத்தானே இருக்கும்? அப்படியானால் இது எப்படி சாத்தியமானது? நாடு முழுவதும் இவர்கள் மட்டும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து மற்றவர்களை வாழ விடாமல் செய்யும் குள்ளநரித் தனமான வேலை இது.///

    திரு.ஜெயதேவ தாசின் இந்தப் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லாமல் வில‌குகிறேன்

    சொன்னால் சம்வாதம் போய் விதண்டாவாதம் ஆரம்பித்துவிடும்.

    திரு ஜெயதேவதாஸ் இன்னும் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வர வேண்டும் என்று பணிந்து வேண்டுகிறேன்.

    ReplyDelete
  78. திருப்பூர் வால் அவர்களின் பின்னூட்டம் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும், பெரும்பாலும் பாராட்டாகவே உள்ளது என்றே நினைகிறேன்.

    பிராமணர்கள் தான் செய்யும் பணியில் அக்கறையாக உள்ளனர் என்று கூறியுள்ளது ஆறுதலாக உள்ளது.இதுவே குஜராத் வணிகர்களின் எண்ணமும். நன்றி திருப்பூவால் அவர்களே!

    ReplyDelete
  79. ///இன்றளவும் income tax LIC
    railways போன்ற துறைகளில் poerful post களில் பிரமிநேர் ஆதிக்கம் இருப்பது அறிந்ததே. எத்தனை பெரியார் வந்தாலும் அவர்களை அடைக்கலமே ஒழிய அளிக்கவே முடியாது. பிராமின் பெண்கள் வெட்டரு ஜாதியில் ஒயர்ந்த நிலையில் உள்ளவர்களைத்தான் மணம் புரிகின்றார்கள். பிராமின் ஆண்கள் கலப்பு மணம் அரிதே.///

    திரு கோதண்டபாணியும் ஏதோ போகிறபோக்கில் சொல்கிறார். அவர் கூறியுள்ள துறைகளில் 35 வருடங்களூக்கு முன்னர் சேர்ந்தவர்கள் இப்போது பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் நிலையில் உயர் பதவி வகிக்கலாம். கடந்த 15 ஆண்டுகளாக அரசு வேலைகளில் சேரும் மன நிலையில் இருந்து பிராமண இளைஞ்ர்கள் விடுபட்டு வேறு வேறு துறைகளில் கால் பதித்துவிட்டனர்.
    இப்போதுஅந்த 3 துறைகளிலும் பிராமணர் ஆதிக்கம் என்பதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.

    "எத்தனை பெரியார் வந்தாலும் அவர்களை அடக்கலாமே தவிர அழிக்கவே முடியாது" என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    ஈழத்தில் தமிழர்களை பிராமணர்கள் மனிதாபிமானத்துடன் ஆதரிக்கவில்லை என்று சொல்பவர்களே! இங்கே கோதண்ட பாணி போன்றவர்களே மனிதாபிமானம் இல்லாமல் பிராமண‌ர்களை அழிக்க முடியவில்லையே என்று ஆதங்க‌ப்படுகிறார்.எதற்காகப் பிராமணர்களை அழிக்க வேண்டும்? இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் வரை ஆசிரியப் பணி செய்து எல்லா வகுப்பாருக்கும் கல்வி போதித்ததற்காகவா?சுவடிகளில் மறைந்திருந்த தமிழைப் பதிப்பித்த உவேசா போன்றவர்கள் பிராமணர்களாகப் பிறந்ததற்காகவா?'பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே' என்று பாடிய பாரதி பிறந்த குலம் என்பதற்காகவா?எதற்காக பிரமணர்களை அழிக்க வேண்டும்?எப்படி அழிப்பீர்கள்? சிங்க‌ளக் காடையர்கள் எப்படித் தமிழரை அழித்தார்களோ அது போலவேவா?

    "பிராமணப் பெண்கள் வேற்று ஜாதியில் உயர்ந்த நிலையில் உள்ளவ‌ர்களைத்தான் மணம் புரிகின்றார்கள்"என்கிறார்.

    ஜாதி ஒழிய கலப்புத் திருமணம் என்பதுதான் ஆகப் பெரிய வழி என்று எல்லோரும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.அந்த துணிகரச் செயலை பிராமணப் பெண்கள் செய்கிறார்கள் என்பதைப் பாராட்டாமல், அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத்தானே கட்டுகிறார்கள் என்று ஏகடியம் செய்கிறார்.என்ன சொல்ல வருகிறார்? நன்கு படித்த ஒரு பிராமணப் பெண் தானும் நல்ல வேலையில் உள்ளவள், சும்மா ரோடில் திரியும் மாற்று ஜாதிக்காரரை அல்லது
    மாட்டு வண்டி ஓட்டுபவரைக் கல்யாண‌ம் செய்ய வேண்டுமா? அந்தப் பொருந்தாத் திருமணம் நிலைக்குமா? சாதியை விட்டு வேற்று ஜாதியில் திருமணம் செய்யும் போது அந்தப் பெண் தன் சுற்றத்தார் எல்லோரையும்
    இழக்க வேண்டிவரும்.அந்த சந்தர்ப்பத்தில் பொருளாதர பலம் இல்லாத ஆளைக் கல்யாணம்ச் செய்து கொண்டால் அவளால் தாக்குப் பிடிக்க முடியுமா?
    கோதண்ட பாணி அவர்களே, உங்கள் வீட்டுப்பெண்கள் உங்கள் வீட்டு ஸ்டேடஸுக்குக் கீழே உள்ள உங்கள் சாதிக்காரனுக்கே கூட‌ கட்டிக் கொடுப்பீர்களா? மாப்பிள்ளையின் வசதியைக் கணக்கில் எடுக்க மாட்டீர்களா?

    பிராமண ஆண்கள் கலப்புத்திருமணம் செய்ய வில்லை என்கிறார்.
    பிராமணர் அல்லாதோர் திருமண விஷயத்தில் மிகவும் கறார். காதல், கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டி சாய்ப்பதற்கே திருப்பாச்சி என்ற ஊரில் அரிவாள் தயாராகிறது.இது தெரிந்து பிராமண ஆண் பிற ஜாதிப்பெண்ணை ஏறெடுத்துப் பார்ப்பானா?

    ReplyDelete
  80. ///எனக்கு பிடித்தவை said... [Reply]
    நான் பெரிய அளவில் அவர்களுடன் பழகியதில்லை ஏனெனில் எங்கள் ஊரில் அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு .. 3 அல்லது 5 குடும்பங்கள் இருக்கும்.. அதும் அவர்கள் மலையாளிகள்..... அதில் ஒரு குடும்பம் இருக்கிறது.. அக்கா தங்கை இருவர் மட்டுமே... கொஞ்சம் வயதானவர்கள் தான் ....... ஆனால் ரொம்ப வாய் பேசுவார்கள் ....... இப்பவும் தெரு தண்ணி குழாயில் தண்ணி பிடிக்கும் போது யாராவது பிடித்த பின் தண்ணி பிடித்தால் அந்த குழாயை கழுவி விட்டுத்தான் பிடிப்பார்கள்.............. என்ன சொல்ல ....///

    இது எப்போதும் நல்லது. சுத்தம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பேணப்படுகிறது.
    ஒரு நாயோ அல்லது பூனையோ அந்த இடத்தை நாம் பார்க்காத நேரத்தில் அசுத்தப் படுத்தி இருக்கலாம்.ஆகவே பொது இடங்களில் நாம் ஒரு முறை சுத்தப்படுத்தி விட்டு பயன் படுத்துவது நல்லது.இது ஏனையோரை கேவலப்படுத்துவதாக ஆகாது. ஒரு விளமபரத்தில் பாலூட்டும் ரப்பரை எலி வந்து சூப்பி விட்டுப் போகும். இதை அறியாத தாய் அந்த அசுத்தப்பட்ட ரப்பரையே குழந்தை வாயில் வைப்பதைக் காட்டுவார்கள்.இது போன்ற சிச்வேஷனைக் கருதியே அந்த சுத்தப்படுத்தும் பழக்கம்.தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்களும் அது போல சுத்தம் செய்யப் பரிந்துரைக்கிறேன்

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. மிக நல்ல பதிவு . தாமதமாக பார்த்திருந்தாலும் .. patriarchism எனப்படும் ஆதிக்க மனப்பான்மை, ஜாதி ரீதியானது மட்டுமல்ல என்பது,நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.ஆண்-பெண்,பெண்-ஆண்,ஆண்-ஆண்,பெண்-பெண், மனிதர்-மற்ற உயிரினம் என்று இது தொடரும் நோய்.நம் சகோதரர்களில், பலருக்கு, ஆணாதிக்கம் என்ற சொல்லே எரிச்சலூட்டுவதாய் இருக்கக் கூடும்.இருந்தும் அதை தவிர்க்க முடிவதில்லை.மன்னிக்கவும். ஆணாதிக்கத்தின் தாக்கத்தை உள்ளபடியே உணர்வதற்கு நீங்கள் பெண்ணாய்..சிறிதளவாவது உணர்வுள்ள-சிந்திக்கும் பெண்ணாய் இருக்க வேண்டும்.,அல்லது உங்களுக்கு பெண் குழந்தை இருக்க வேண்டும்.அது மாதிரி தான்..இந்த பிராமணீயம்.இவர்களை அவர்கள் உணராதவரை எதுவும் மாற வாய்ப்பில்லை.நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும்..அதற்கு மேலும்,நான் பார்த்திருக்கிறேன்.there were pains. i stopped suffering them eventually.செய்வதற்கு நிறைய வேலையும்,எண்ணிக்கையில்லா வாய்ப்புகளும் என் முன் இருந்ததால்.இந்த vicious cycle-ஐ என்னளவில்,நான் நிறுத்தியிருப்பதாகவே நினைக்கிறேன்.i think it is possible to forgive and love them(the patriarchs)back,when we,the victims, extend our understanding beyond theirs,encompass their stupidities..weaknesses. yes the need to dominate arises out of fear and inadequacies. u must be well versed in this area, as i understand, u read osho extensively.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  83. ///ஆணாதிக்கத்தின் தாக்கத்தை உள்ளபடியே உணர்வதற்கு நீங்கள் பெண்ணாய்..சிறிதளவாவது உணர்வுள்ள-சிந்திக்கும் பெண்ணாய் இருக்க வேண்டும்.,அல்லது உங்களுக்கு பெண் குழந்தை இருக்க வேண்டும்.அது மாதிரி தான்..இந்த பிராமணீயம்.இவர்களை அவர்கள் உணராதவரை எதுவும் மாற வாய்ப்பில்லை.நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும்..அதற்கு மேலும்,நான் பார்த்திருக்கிறேன்.there were pains. i stopped suffering them eventually.செய்வதற்கு நிறைய வேலையும்,எண்ணிக்கையில்லா வாய்ப்புகளும் என் முன் இருந்ததால்.இந்த vicious cycle-ஐ என்னளவில்,நான் நிறுத்தியிருப்பதாகவே நினைக்கிறேன்.i think it is possible to forgive and love them(the patriarchs)back,when we,the victims, extend our understanding beyond theirs,encompass their stupidities..weaknesses. yes the need to dominate arises out of fear and inadequacies. u must be well versed in this area, as i understand, u read osho extensiv.///

    இதுவரை வந்துள்ள பின்னூட்டங்களிலேயே ஆக‌ச் சிறந்தது முனைவர் டி ஜே வடிவுக்கரசி அவர்களுடையதுதான்.

    one up manship, holier than thou, big brother

    ஆகியவை இயற்கையில் எல்லோருக்கும் உண்டு, ஏன் மிருகங்களிடம் கூட உண்டு. ஒவ்வொருவரிடமும் காணப்படும் இந்த 'அக‌ம்பாவம்'(நான்,தான் என்ற கர்வம்,பெருமிதம்)இதனை வெல்வதே ஆன்மீகம். அதற்கு செங்கோவிக்கு ஒஷோ என்றால் எனக்கு வேறு யாரோ.

    பிராமண‌ர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் தான் அவர்கள் ஏன் தங்களைக் குறுக்கிக் கொண்டனர் என்பது மற்றவர்களுக்குப் புரியும்.அதே போல மற்றவர்களின் மன நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் எவ்வளவு புண் பட்டிருக்கிறார்கள் என்பது பிராமண‌னுக்குப் புரியும்.அந்தப் புரிதலுக்கு இது போன்ற சம்வாதங்கள் உதவும்.

    உணர்ச்சி வயப்படாமல் சற்று சிந்தித்து மேலும் வர இருக்கின்ற பதிவுகளை
    ஆழ்ந்து ஆய்வு செய்து தங்கள் விமர்சனங்களை முன் வைக்க அழைக்கிறேன்.
    குறிப்பாக முனைவர் வடிவுக்கரசி போன்றவர்களை.

    எங்கே,என் பின்னூட்டங்களை யாரும் படித்ததாகவே தெரியவில்லையே!

    ReplyDelete
  84. @dr.tj vadivukkarasi //செய்வதற்கு நிறைய வேலையும்,எண்ணிக்கையில்லா வாய்ப்புகளும் என் முன் இருந்ததால்.//

    உண்மை தான் சகோதரி..ஒரு அளவிற்கு மேல் நேரத்தையும் சக்தியையும் இந்த ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக செலவளிக்க முடிவதில்லை...நீங்கள் சொல்வது போல் அன்புடன் நட்புக்கரத்தை நீட்டிக்கொண்டே இருப்போம். என்றாவது அவர்களுக்குப் புரியாமலா போய்விடும்?

    ReplyDelete
  85. @kmr.krishnan ஐயாவின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  86. ///ஒழுக்கம், உண்ணும் உணவு, மனித நேயம் இப்படி எல்லாவற்றிலும் மற்றவர்களைப் போலவே ஆகிவிட்ட பின்பு தன்னுடைய சாதி மற்றும் உயர்ந்தது என்பதற்கு அர்த்தம் என்னவென்றே புரியவில்லை.///

    ஜெயதேவதாஸ்! கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.ஒழுக்க‌ம் உண்ணும் உணவு இரண்டிலும் மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டபின்பு....

    'தன்னுடைய சாதி உயர்ந்தது'என்று பிராமணன் வேண்டுமானால் தனக்குள் பேசிக் கொள்ளலாம். வெளியில் சொல்வதில்லை.பெரியாரின் விழிப்புணர்வு இயக்க‌மும், அது சார்ந்து எழுந்த அச்ச உணர்வினால் கூட பிராமணன் தன் உயர் நிலை குறித்து பொதுவில் வைக்கத் தயங்கி இருக்கலாம்.இப்போது இதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதில்லை. எல்லோரும் படித்து முன்னேறும் காலம் இது. போட்டி மிகுந்தது.எனவே சாதிப் பெருமை பேச‌ பிராமண இளைஞனுக்கு நேரம் இல்லை.

    நீங்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதைப் பார்த்தால் பிராமணர் அல்லாதவர் ஒழுக்கக் குறைவாக இருந்தது போலவும், அவர்களைப் போலவே பிராமண‌னும் மாறிவிட்ட பின்னர்.... என்று தொனிக்கிறது. சேம் சைட் கோல் போடலாமா?
    கற்பு என்பது தமிழர்களின் பொதுப் பண்பு அல்லாவா?கலப்புத் திருமணம் என்பது முன்னேற்றமா? பின்னடைவா? கலப்புத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்
    ஒழுக்கக் குறைவானவளா உங்கள் கருத்துப்படி?

    உண‌வில் அசைவ உணவு தவறா? சில பிராமண இளைஞர்கள் அசைவம் சாப்பிடத் துவங்கி விட்டதால்தான் மதிப்பு இழந்துவிட்டனரா?மீண்டும் சைவத்துக்குத் திரும்பிவிட்டால் அவர்களுக்கு மதிப்பு அளிப்பீர்களா?'குள்ளநரி' என்றெல்லாம் கூறாமல் இருப்பீர்களா?

    என்னமோ போங்கள். அழுத்தமான கருத்துக்களுடன் யாரும் பேசவில்லை.

    ReplyDelete
  87. ///காண்டீனில் இலை எடுப்பது அனைவருக்கும் பொதுவானதே. ஒரு சிலரை மட்டும் எடுக்க சொல்வதில்லை.///

    உண்மைதான்.நீங்கள் சொல்வது சரிதான் கோதண்டபாணி.எல்லோரும் செய்வதால் இலை எடுக்கும் செயல் என்பது அந்த இடத்தில் தவறாக நினைக்கப்படுவது இல்லைஎன்கிறீர்கள்.ஒரே செயல் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருள் என்பது உண்மையே.தனிப்பட்ட ஒருவர் கொலை செய்வதற்கும், ராணுவ வீரர் நாட்டைக் காக்கக் கொலை செய்வதற்கும் உள்ள வேறு பாடுதான்.

    பிராமணார் இல்லங்களில் விருந்தினருக்குக் கட்டாயம் இலைதான் போடுவார்கள்.அதுதான் அவர்களுக்குக் காட்டும் மரியாதை என்பது பிராமண‌ர்களுக்கு ஆழ் மனதில் பதிந்துள்ளது.

    பிராமண விருந்தினர்கள் சாப்பிட்டு முடிந்ததும் தானே இலை எடுக்க ஆயத்தம் செய்வார்கள்.விருந்தினர் இலை எடுக்க வேண்டிய வீட்டுப் பெண்மணியை விட வயதில் குறைந்த விருந்தினராயின், மூத்த பெண்மணி தடுத்தாலும் கேட்காமல் தானே இலையை எடுத்து விடுவார்கள்.

    வீட்டுப் பெண்களைவிட‌ வயதில் மூத்த விருந்தினர் இலை எடுப்பது போல பாவனை செய்வார். வீட்டூக்காரர்கள் அவரை மறுதளித்து இலையை தாங்கள் எடுத்து விடுவார்கள்.

    மனைவியும் கணவனுமாக வந்த விருந்தினரில் கணவனின் இலையையும் சேர்த்து விருந்துண்ண வந்த பெண் எடுத்துவிடுவாள்.(பெண்ணியவாதிகள்
    ஆணாதிக்கம் பற்றிப் பேச ஒரு பாயிண்ட் கொடுத்துவிட்டேன்)

    செங்கோவி சென்ற வீட்டில் அது தான் முதல் முறையாக பிற சாதியினருக்கு உணவிட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதுவரை அவர்களுக்கு அந்த 'எக்ஸ்போசரே' இல்லை என்று தோன்றுகிறது.அதனால் செங்கோவியின் மனம் புண்படும் என்றெல்லாம் அவர்களுக்கு விளங்கியிருக்காது.பிராமண விருந்தினரில் வயது குறைந்தோர் செய்யும் செயல் போலத்தானே இதுவும் என்று அந்த வயதான‌ மூதாட்டிகள் நினைத்து இருப்பார்கள்.

    எங்கள் இல்லத்தில் விருந்துண்ண வந்த, தலித் விருந்தினர் உட்பட அனைவரும், சொல்லாமலே அவர்களே இலையை எடுத்து விடுவார்கள்.இது எப்படி எனில் வீட்டுத் தலைவரான எங்கள் அப்பாவும் தன் எச்சில் தட்டை எடுத்துக்கொண்டு கழுவ வரிசையில் நிற்பார். அதைப் பார்த்த வேற்று சாதி விருந்தினரும் ,தானும் தன் இலையை தானே எடுத்துவிடுவார்.

    அடிக்கடி வரும் ஒரு தலித் விருந்தினர் சாப்பிட்டபின் கிணற்றில் நீர் இறைத்து 10 வாளிகள் தொட்டியில் ஊற்றுவார். தடுத்தால் கேட்கமாட்டார். 'சாப்பிட்ட சோறு இலவசமாகக் கிடைக்க கூடாது'என்பார். "உடல் உழைப்பால் கிடைக்கும் சோறுதான் உடம்பில் ஒட்டும். அப்படிதானே மகாத்மா சொல்லுகிறாரு?" என்பார்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.