Sunday, November 13, 2011

திருவள்ளுவரும் மேனேஜ்மெண்டும்

பல வருடங்களுக்கு முன் நான் ஒரு தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு பொறியாளனாக வேலை பார்த்த நேரம். திடீரென்று உற்பத்திப் பொருட்கள் அதிகளவு ரிஜெக்ட் ஆகத்தொடங்கின. அதனால் ஏற்பட்ட நஷ்டமும் லட்சங்களைத் தாண்டியது. அது எதனால் ஏற்படுகிறதென கண்டுபிடித்து நிறுத்தும் பொறுப்பை என் மேனேஜர் என் தலையில் போட்டார்.

பொதுவாக பொறியியலில் நடக்கும் தவறுகளுக்கு நான்கு Mகள் தான் காரணமாக அமையும். அவை Man, Machine, Method, Material. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொன்றாக்க் கண்காணித்ததில் Material தான் இவ்வளவுக்கும் காரணம் எனக் கண்டுகொண்டேன்.

ஃபெர்ரோசிலிக்கான் (Fe-Si) என்ற மெட்டீரியல் கடந்த சில மாதங்களாக புது சப்ளையரிடமிருந்து வாங்குவதையும் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ போன்று எந்த விதமான  விதிமுறைகளும் பின்பற்றப்படாததையும் கண்டுபிடித்தேன். பழைய சப்ளையரின் Fe-Siஐ மீண்டும் உபயோகப் படுத்திப் பார்த்து என் சந்தேகத்தை உறுதிப்படுத்தினேன்.

அதற்கான முழுக்காரணமும் என் மேனேஜர்தான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரிந்த்து. எனவே கோபத்துடன் அவரது அறைக்குள் நுழைந்து என் ரிப்போர்ட்ஸைக் காட்டினேன்.

“இதை நீங்கள் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்” என்றேன்.


அவரோ கூலாக “ தம்பி..திருவள்ளுவர்.. திருவள்ளுவர்னு ஒருத்தர் முன்னாடி இருந்தார். தெரியுமா?” என்றார்.


“தெரியும்”


“அவர் சொல்லியிருக்கார்:


சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”(664) என்றார் என் மேனேஜர்.


தன் தவறுக்கு திருக்குறளைத் துணைக்கு இழுக்கவும் என் கோபம் கூடியது.


“அதே திருவள்ளுவர்தான் சொல்லியிருக்கார் :
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(517)


உங்களை வேலைக்கு எடுக்கும்போதே இந்த வேலையை நீங்க சரியா செய்வீங்களான்னு ஆராய்ந்து எடுத்திருக்கணும். அப்படிச் செய்யாதது தான் நம்ம GM பண்ண தப்பு “என்றேன்.


அப்புறம்..என்னாச்சுன்னா..


அந்த வருசம் பெர்மனெண்ட் ஆகவேண்டிய நான் வேலை இழந்து வீட்டுக்குப் போனேன். அப்புறம்தான் எனக்கு இந்த திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது:


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(127)


டிஸ்கி : இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

  1. ஆக வேலையை தக்க வைக்க காக்கா பிடிக்கணும்? அப்படித்தானே....

    ReplyDelete
  2. //தமிழ்வாசி - Prakash said...
    எப்படியோ வந்தோம்ல//

    நீண்டநாள் கழித்து வந்த தமிழ்வாசியே வருக..வருக..

    ReplyDelete
  3. //தமிழ்வாசி - Prakash said...
    ஆக வேலையை தக்க வைக்க காக்கா பிடிக்கணும்? அப்படித்தானே....//

    அப்படியா வள்ளுவரு சொன்னாரு?

    ReplyDelete
  4. மாம்ஸ் திருக்குறளை வேலையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அருமையா சொல்லி இருக்கார்

    ReplyDelete
  5. அட அட அட... இதுதான் ஒத்த வேவ்லென்க்த்ன்னு சொல்வதா, இல்ல நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எப்புடி வர்க்அவுட் ஆகுதுன்னு சொல்வதா? இன்னிக்கு பகல்தான் நானும் திருக்குறள் நீதிக்கதை ஒன்னு போட்டேன், இரவு இங்க வந்து பார்த்தால், இங்கயும் திருக்குறள்... திருவள்ளுவர் பாஷைலையே சொல்றதுனா "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்."

    ReplyDelete
  6. //இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!////


    ஆனா நான் இன்னிக்கு புதுசா எழுதுன பதிவு, அப்புடின்னா நான் இன்னும் நல்லபுள்ளையாதான் இருக்கேன்

    ReplyDelete
  7. அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்டு,, 3 Mன்னு சொல்லிட்டு Man, Machine, Method, Materialன்னு 4 M போட்டு இருக்கீங்களே? இல்ல சும்மா ஒரு டவுட்டுக்காக கேட்டேன்...

    ReplyDelete
  8. //
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.///
    //அந்த வருசம் பெர்மனெண்ட் ஆகவேண்டிய நான் வேலை இழந்து வீட்டுக்குப் போனேன்///

    ஒஹ் இதுதான் நானு இன்னும் பெர்மனெண்ட் ஆகததுக்கு காரணமா? இனிமே எத அடக்குறோமோ இல்லையோ நாக்க அடக்கிக்கனும்..

    ReplyDelete
  9. @மொக்கராசு மாமா //அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்டு,, 3 Mன்னு சொல்லிட்டு Man, Machine, Method, Materialன்னு 4 M போட்டு இருக்கீங்களே? இல்ல சும்மா ஒரு டவுட்டுக்காக கேட்டேன்...//

    மாத்திட்டேன்யா..பிரிவியூ பார்க்கக்கூட முடியலை, அதான்....

    ReplyDelete
  10. வள்ளுவரின் குறளுக்கு ஒரு சல்யூட்! நன்றி!

    http://www.sharmaheritage.com/

    இந்த வலைதளத்தினைச் சென்று காண வேண்டுகிறேன்.

    கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தமிழகத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான‌
    ஆதாரங்களை (10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே)இந்த அகழ்வாய்வு சொல்கிறது.

    வெறும் மேடைபேச்சுடன் நின்று விடாமல் சொந்த முறையில் ஆய்வு மேற் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஆர்aaய்ச்சி முடிவுகளை அளிக்கும் ஒரு தனியார் தன் முயற்சி இது.

    சர்மா என்றபெயர் சாதாரண மாக பிராமணர்களின் 'சர்நேம்'.

    ReplyDelete
  11. ////இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!////

    ஹி.ஹி.ஹி.ஹி....

    திருவள்ளுவரின் மேனேஜ்மெட் சூப்பர் பாஸ்

    ReplyDelete
  12. ப்ரோபைல் போட்டோ ஹீரோ..அதிரடியா இருக்காரு.

    ReplyDelete
  13. வேலையை தக்கவைக்க காக்கா பிடிக்கனுமா?

    நீங்க கேப்டன் ரேஞ்சுக்க்கு பொங்கி எழுந்து தப்பை கண்டுபிடிச்சுருக்கீங்க போல....

    ReplyDelete
  14. அண்ணே, குறள் விளக்கம் வேண்டும்.. ஒண்ணுமே புரியல..

    ReplyDelete
  15. மொக்கராசு மாமா said...
    //அட அட அட... இதுதான் ஒத்த வேவ்லென்க்த்ன்னு சொல்வதா, இல்ல நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எப்புடி வர்க்அவுட் ஆகுதுன்னு சொல்வதா? இன்னிக்கு பகல்தான் நானும் திருக்குறள் நீதிக்கதை ஒன்னு போட்டேன், இரவு இங்க வந்து பார்த்தால், இங்கயும் திருக்குறள்... திருவள்ளுவர் பாஷைலையே சொல்றதுனா "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்."//

    எதக்கொண்டுவந்து எங்க சொருகுது பாருங்க.. யோவ் மாமா, நீரு என்ன அவமானப்படுத்தனும்ன்னு போட்ட பதிவுக்கு திருவள்ளுவர இழுத்ததே தப்பு, அதுல வேற இங்க வந்து விளம்பரம் குடுக்கறது மகா தப்பு.

    ReplyDelete
  16. அண்ணனும் நம்மள மாதிரியேதான் பேசுவாரோ?
    ஆகா! கவனமா இருக்கணுமோ...நம்ம கன்சல்டன்ட் மாமா ஒருவரோடு இப்பல்லாம் நான் எசகு பெசகாத்தான் கதைச்சுட்டு இருக்கேன்..!
    ம்ம்ம்ம்....யோசிக்க வச்சுட்டீங்க!

    ReplyDelete
  17. கதை அருமை அண்ணே..

    அதுவும் திருக்குறளை வச்சு எழுதிய விதம் சூப்பர்

    ReplyDelete
  18. அரசுப் பணிகளில் இதை விட மோசமான நிலைமை என நண்பர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தப் பிசாசுகளிடம் சிக்காது தப்புவதுதான் உண்மையான அனுபவம்.. வேறென்ன சொல்ல..!

    ReplyDelete
  19. //பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது//


    அடக் கொடுமையே...

    ReplyDelete
  20. உயர்தரத்தில் தரப்படும் மாணவர் தலைவர் பதவி ஒரு முள்கிரீடம் ஆனாலும் இதை தெரிவு செய்யும் போது ஆசிரியர்கள் செய்யும் அரசியல் கொஞ்சம் ஓவர் மாணவர்களிடையே பிரிவினையை வளக்கும் என்பதை அறியாதோர் .
    என் நண்பன் ஒருவதுக்கு கிடைக்க வேண்டிய மாணவர் தலைவர் பதவியை ஒரு ஆசிரியர் பிரதேசவாதம் கிளப்பி அப்பதவியை கொடுக்காத போது அந்த கோபத்தில் பின்னாலின் கிடைத்த சிறந்த மாணவன் பரிசிலை இன்று வரை வாங்க நண்பனையும் பார்த்திருக்கின்றேன்.

    ReplyDelete
  21. ஹா ஹா ஹா

    இடுக்கண் வருங்கால் நகுக...

    ReplyDelete
  22. நேரா GM கிட்டவோ அல்லது கம்பெனி ஒனர்கிட்டயோ போயி போட்டுவிட்டிருக்கலாமே செங்கோவி?

    ReplyDelete
  23. எப்பொருல் யார்வாய்லெ கேட்டாலும் அப்பொருல்க்கு மெய்யால அர்த்தம் பார்ப்பது தான் நைனா அறிவு.
    நமக்கு கவுண்டிங்க் அல்லாம் தெரியாதுபா... ஒன்லி ஃபீலிங்தான்பா

    ReplyDelete
  24. இப்பவும் நல்ல பிள்ளை தான் நண்பரே

    இடம் பொருள் ஏவல் புரிந்து செயல் படு

    என்ற கருத்து

    பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  25. வணக்கம் பாஸ்,,

    நம்மாளுங்களின் நரிக் குணம் என்பது இது தான்!

    தவறைக் கண்டு பிடித்தால் விலக்கி வைப்பது, அல்லது ஒரு மார்க்கமாகப் பார்ப்பது
    மாற்றுக் கருத்துக்கள் சொன்னால் வேற்றுக் கிரக மனிதனைப் போல நோக்குவது!

    நல்லதோர் அனுபவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  26. உண்மை தான். எப்படி பொங்கினால் பால் பாத்திரத்தினை வெட்டு வெளியேற வேண்டியுள்ளதோ அதே போல் நிறுவனத்திலுள்ள நமது மேலேயுள்ளவரிடமும் பதமாக இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. என்னுடைய முதல் இரண்டு வருட தொழிற் வாழ்க்கையில் எட்டிற்கும் மேலான மேலாண்மையை சந்தித்த பின்பு தான் எனக்கு உறைத்தது.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.