சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் சினிமாத் துறையில் கலக்கிக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர் எப்போதும் டெக்னிகல் விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டவர். படங்களுக்கு திரைக்கதை எழுதுவது, இயக்குவது, புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பது என்று எம்.ஜி.ஆர் பல துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் சிவாஜி கணேசன், நடிப்பில் பல புதிய பரிணாமங்களைத் தொட்டுக்கொண்டிருந்தார். வித்தியாசமான கதைக்களன்கள், பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வேடங்கள் என்று சிவாஜி தனக்கான தளத்தை அமைத்துக்கொண்டார்.
அதற்கடுத்த தலைமுறை நடிகர்கள் உருவாகி வந்தபோது, எம்.ஜி.ஆர்-சிவாஜி இருவரின் செல்லப்பிள்ளையாக கமலஹாசன் இருந்தார். அதனால்தானோ என்னவோ, இருவரின் திறமைகளும் ஒருங்கே அமையப் பெற்றவராக கமல் உருவானார். எம்.ஜி.ஆர் போன்றே டெக்னிகல் விஷயங்களில் ஆர்வம், சிவாஜி போன்று நடிப்பில் வித்தியாசமான முயற்சிகள் என்று ஆச்சரியமூட்டும் நடிகராக ஆனார் கமலஹாசன்.
பொதுவாக சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யக்கூடாது என்பது சினிமா பாலபாடம். ஆனால் தன் கலைத் தாகத்தால், தன் சம்பாத்தியம் அனைத்தையும் சினிமாவுக்கே தாரை வார்த்தவர் கமல். அதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரச்சினைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனாலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களைத் தந்தவர் கமலஹாசன்.
கமலின் சினிமாக்களின் அடிப்படையாக இருப்பது, தமிழ் சினிமாவை தொழில்நுட்பரீதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலேயே விக்ரம் போன்ற படங்களில் பல பரிசோதனை முயற்சிகளை முயன்று பார்த்தவர் கமலஹாசன்.
அவரது படங்களில் என் மனதைக் கவர்ந்த படங்களாக 5 படங்களைச் சொல்லலாம் :
1. பதினாறு வயதினிலே :
பெண்களின் கனவுக் கண்ணனாக அவர் இருந்த காலகட்டத்தில், கதை மேல் உள்ள நம்பிக்கையிலும், புதிய முயற்சிகளின் மேல் உள்ள ஆர்வத்திலும் அவர் சப்பாணி வேடத்தில் நடித்தார். இன்றளவும் தமிழ்சினிமாவை தலைகீழாகப் புரட்டிப்போட்ட படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.
2. சிகப்பு ரோஜாக்கள் :
நெகடிவ் ரோலில் கமல் கலக்கிய படம். தமிழில் ‘சைக்கோ’ போன்று வெளிவந்த படம். பெண்களைக் கவர்வதும், கொல்வதுமாக ஒரு முண்ணணி ஹீரோ செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்த படம். கமலின் நிதானமான, அழுத்தமான நடிப்பிற்கு ஒரு உதாரணம் இந்தப் படம்.
3. நாயகன் :
வேலு நாயக்கர் என்ற பாத்திரமாகவே கமல் வாழ்ந்த படம். இளம்வயது ஆளாக இருந்து, படிப்படியாக வயதானவராக கமல் மாறும்போது, உண்மையிலேயே அவருக்கு வயதாகிறதோ என்று எண்ண வைத்த படம். ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ற மாதிரி, கெட்டப்பையும், பேச்சையும் மாற்றிக் காட்டி, கமல் நடிப்பின் உச்சத்தைத் தொட்ட படம்.
4. தேவர் மகன் :
தமிழில் வந்த கிராமப் படங்களில், அந்த கிராமத்து மக்களின் பிரச்சினையை யதார்த்தமாகச் சொன்ன படம். ஒரு கிராமத்தில் இருந்து படித்து வெளியேறுபவன் சந்திக்கும் மனப்போராட்டங்களை தெளிவாகச் சொன்ன படம். கமல் சிறந்த கதை-வசனகர்த்தாவாக உருவான படம் என்பதாலும் இதை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
5. அன்பே சிவம் :
நடிப்பில் கஷ்டமான விஷயம் நகைச்சுவை தான். அவ்வை சண்முகி, தெனாலி போன்ற படங்களில் நகைச்சுவை நடிப்பிலும் தேர்ந்தவராக கமல் தன்னை நிரூபித்திருந்தாலும், அன்பே சிவம் படம் முழுக்க வந்த மெல்லிய நகைச்சுவை என்னைக் கவர்ந்த ஒன்று. விபத்திற்கு முன்பும், பின்பும் கமல் தன் மேனரிசங்களில் காட்டிய வித்தியாசம், நுணுக்கமான நடிப்பிற்கு உதாரணம். மேலும் படம் சொன்ன செய்தியும் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்றாக இதை ஆக்கியது.
தொடர்ந்து தேடலுடன் படம் செய்து வரும் உலகநாயகன் கமலஹாசனின் 57வது பிறந்த நாள் இன்று(நவம்பர் ஏழு). அவர் பல்லாண்டு வாழவும், தொடர்ந்து பல நல்ல படங்களை நமக்குத் தரவும் ஆண்டவன் அருள் புரியட்டும்.
இன்னிக்கு கமல் பர்த்டேல்ல!! இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்
ReplyDeleteஅன்பே சிவம் இருக்காதோன்னு
ReplyDeleteநினைச்சுக்கிட்டே scroll பண்ணேன் .மிஸ்ஸாகல.
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஇன்னிக்கு கமல் பர்த்டேல்ல!! இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்//
நன்றி..நன்றி.
:)
ReplyDelete//கோகுல் said...
ReplyDeleteஅன்பே சிவம் இருக்காதோன்னு
நினைச்சுக்கிட்டே scroll பண்ணேன் .மிஸ்ஸாகல.//
அன்பே சிவம் இல்லாமல் ஒரு லிஸ்ட்டா?
//வெளங்காதவன் said...
ReplyDelete:)//
இதுக்காய்யா நைட்டு 11.30வரை முழிச்சிருக்கீங்க?
நாயகன்
ReplyDeleteதேவர் மகன்
அன்பே சிவம்
சலங்கை ஒலி
அண்ட் பேசும் படம்...இது என்னோட லிஸ்ட்டு...
//வெளங்காதவன் said...
ReplyDeleteநாயகன்
தேவர் மகன்
அன்பே சிவம்
சலங்கை ஒலி
அண்ட் பேசும் படம்...இது என்னோட லிஸ்ட்டு...//
அதுவும் நல்ல லிஸ்ட் தான் விளங்காதவரே..
:)
ReplyDelete#மறுபடியும்...
என்னிடம் இருக்கும் டி.வி.டிக்களில் முக்கால்வாசிப்படங்கள் கமலுடையது.ஆனால் நான் கமல் ரசிகனா இல்லையா?
ReplyDeleteதெரியலையேப்பா?
//வெளங்காதவன் said...
ReplyDelete:)
#மறுபடியும்...//
சிரிங்க...சிரிங்க..சிரிச்சுக்கிட்டே இருங்க.
//கோகுல் said...
ReplyDeleteஎன்னிடம் இருக்கும் டி.வி.டிக்களில் முக்கால்வாசிப்படங்கள் கமலுடையது.ஆனால் நான் கமல் ரசிகனா இல்லையா? தெரியலையேப்பா?//
யோவ், உமக்கே தெரியலைன்னா எங்களுக்கு எப்படிய்யா தெரியும்? இங்க ஏன் கேட்கிறீங்க?
எனக்கு புடிச்ச ஐந்து படங்கள் வரிசை படி:
ReplyDelete1. பஞ்சதந்திரம்
2. வசூல்ராஜா எம்பி எம்பி எஸ்ஸு
3. தெனாலி
4. அன்பே சிவம்
5. தசாவதாரம்
ஐயையோ அவ்வை சண்முகி, காதலா காதலாவ விட்டுட்டேனே?
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஎனக்கு புடிச்ச ஐந்து படங்கள் வரிசை படி:
1. பஞ்சதந்திரம்
2. வசூல்ராஜா எம்பி எம்பி எஸ்ஸு
3. தெனாலி
4. அன்பே சிவம்
5. தசாவதாரம்//
காமெடிப் படங்களுக்கே முன்னுரிமையா...
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஐயையோ அவ்வை சண்முகி, காதலா காதலாவ விட்டுட்டேனே?//
ஐயா, கமல் ஒரு கடல்..அதை அஞ்சுக்குள்ள அடக்க முடியுமா?
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
எனக்கு புடிச்ச ஐந்து படங்கள் வரிசை படி:///
காமெடிப் படங்களுக்கே முன்னுரிமையா..///
ஆமாண்ணே, அப்புறம் சதிலீலாவதி, பம்மல் கே சம்பந்தம் படங்களும் ரொம்ப புடிக்கும்.. பேசிக்கலா காமெடி பிரியர்களான எங்களுக்கு இந்த படங்கள் எப்ப பார்த்தாலும் அலுக்காது.. அப்புறம் நாங்க படத்த ரசிச்சு பார்க்க ஸ்டார்ட் பண்ண வயசுல வந்த படங்கள் என்பதாலும் புடிக்கும்
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
எனக்கு புடிச்ச ஐந்து படங்கள் வரிசை படி:///
காமெடிப் படங்களுக்கே முன்னுரிமையா..///
ஆமாண்ணே, அப்புறம் சதிலீலாவதி, பம்மல் கே சம்பந்தம் படங்களும் ரொம்ப புடிக்கும்.. பேசிக்கலா காமெடி பிரியர்களான எங்களுக்கு இந்த படங்கள் எப்ப பார்த்தாலும் அலுக்காது.. அப்புறம் நாங்க படத்த ரசிச்சு பார்க்க ஸ்டார்ட் பண்ண வயசுல வந்த படங்கள் என்பதாலும் புடிக்கும்//
ஓ..நீங்க வயசுக்கு வந்தப்ப ரிலீஸான படங்களா..அப்போ பிடிக்கத்தான் செய்யும்.
Naan Virumbum Kalainayagan Kamalukku en iniya PIRANTHANAAL vazhththukkal.
ReplyDelete// சே.குமார் said...
ReplyDeleteNaan Virumbum Kalainayagan Kamalukku en iniya PIRANTHANAAL vazhththukkal.//
நன்றி குமார்.
////செங்கோவி said...
ReplyDeleteஓ..நீங்க வயசுக்கு வந்தப்ப ரிலீஸான படங்களா..அப்போ பிடிக்கத்தான் செய்யும்////
ஹீ ஹீ... இல்லண்ணே இன்னும் வயசுக்கு வரல... அது படத்த ரசிக்கிற வயசு...
ஏண்ணே போட்டோவ மாத்திடீங்க?
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஏண்ணே போட்டோவ மாத்திடீங்க?//
சும்மா அந்நியன் ஸ்டைல்ல ட்ரை பண்ணோம்..
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ஏண்ணே போட்டோவ மாத்திடீங்க?//
சும்மா அந்நியன் ஸ்டைல்ல ட்ரை பண்ணோம்..///
அது பழசு , நீங்க ஏன் நம்ம டாக்டர் வேலாயுதம் ஸ்டைல்ல ட்ரை பண்ண கூடாது!!
//
ReplyDeleteமொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
ஏண்ணே போட்டோவ மாத்திடீங்க?//
சும்மா அந்நியன் ஸ்டைல்ல ட்ரை பண்ணோம்..///
அது பழசு , நீங்க ஏன் நம்ம டாக்டர் வேலாயுதம் ஸ்டைல்ல ட்ரை பண்ண கூடாது!!//
எப்படி, சாக்குப்பையை தலையில கவுத்திட்டு ஃபோட்டோ எடுக்கவா?
//செங்கோவி said...
ReplyDelete//
மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
ஏண்ணே போட்டோவ மாத்திடீங்க?//
சும்மா அந்நியன் ஸ்டைல்ல ட்ரை பண்ணோம்..///
அது பழசு , நீங்க ஏன் நம்ம டாக்டர் வேலாயுதம் ஸ்டைல்ல ட்ரை பண்ண கூடாது!!//
எப்படி, சாக்குப்பையை தலையில கவுத்திட்டு ஃபோட்டோ எடுக்கவா?////
ச்சே ச்சே.. சிக்ஸ் பேக் வச்சிக்கிட்டு அப்புடியே ஒரு ஆக்ரோஷமான மொறைப்போட
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteச்சே ச்சே.. சிக்ஸ் பேக் வச்சிக்கிட்டு அப்புடியே ஒரு ஆக்ரோஷமான மொறைப்போட//
சிக்ஸ் பேக்கா? அது டபுள் பேக் தானய்யா? அது கண்றாவியால்ல இருக்கும்?
அட நான் phottova இப்பத்தான் பாக்குறேன்
ReplyDelete//கோகுல் said...
ReplyDeleteஅட நான் phottova இப்பத்தான் பாக்குறேன்///
அப்ப இவ்வளவு நேரம் என்னத்த பார்த்துக்கிட்டு இருந்தீங்க?
//கோகுல் said...
ReplyDeleteஅட நான் phottova இப்பத்தான் பாக்குறேன்//
எவ்வளவு நேரம்யா பார்ப்பீங்க? உங்க கருத்து மழையைப் பொழிங்கய்யா..
சீரியஸா பதிவ படிச்சுக்கிட்டு இருந்தேன் மாம்சு
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDelete//கோகுல் said...
அட நான் phottova இப்பத்தான் பாக்குறேன்///
அப்ப இவ்வளவு நேரம் என்னத்த பார்த்துக்கிட்டு இருந்தீங்க?//
அதானே..ஹன்சி ஸ்டில்லுகூட இன்னைக்குப் போடலியே...கமல் ஸ்டில்லையா அப்படிப் பார்த்தாரு?
//கோகுல் said...
ReplyDeleteசீரியஸா பதிவ படிச்சுக்கிட்டு இருந்தேன் மாம்சு//
பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆச்சு..எழுத்துக்கூட்டியா படிக்கிறீங்க?
//கோகுல் said...
ReplyDeleteசீரியஸா பதிவ படிச்சுக்கிட்டு இருந்தேன் மாம்சு///
ஐயா ஒவ்வொரு எழுத்தா கூட்டி கூட்டி படிச்சி இருந்தாலும் பத்து நிமிஷம் முன்னாடியே முடிசிருக்கலாமே? இவரு பதிவுலையே ரொம்ப சின்ன பதிவு இதுதான், இத போய் இவ்வளவு நேரம் படிக்கிறீங்கன்னா , ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா மாப்ள...
கிரேசியுடன் அவர் இணைந்து பண்ணிய படங்கள் பார்க்க பார்க்க சலிக்காதது
ReplyDelete//கோகுல் said...
ReplyDeleteகிரேசியுடன் அவர் இணைந்து பண்ணிய படங்கள் பார்க்க பார்க்க சலிக்காதது//
ஆமாமா, ஊர்ல பயங்கர மழை தான்...
பின்னே என்னய்யா, நாங்க என்ன கேட்கிறோம், நீங்க என்ன சொல்றீங்க? யார்ய் ஸ்டில்லைப் பார்த்தீங்க?
இன்னைக்கு அனுஷ்கா வுக்கும் பொறந்த நாளாம்.
ReplyDeleteஅவங்களைப்பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.இல்லேன்னா ஒரு ஸ்டில்லாவது....?
//கோகுல் said...
ReplyDeleteகிரேசியுடன் அவர் இணைந்து பண்ணிய படங்கள் பார்க்க பார்க்க சலிக்காதது///
கண்டிப்பா.. 500% ஒத்து போறேன் இந்த கருத்தோட..."நண்பர்களும் 40 திருடர்களும்"ன்னு ஒரு படம் வருது மாப்ள, கலக்கலா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
//கோகுல் said...
ReplyDeleteஇன்னைக்கு அனுஷ்கா வுக்கும் பொறந்த நாளாம்.
அவங்களைப்பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.இல்லேன்னா ஒரு ஸ்டில்லாவது....?//
ஓ...அந்த வருத்தத்துல தான் அப்படி எழுத்துக்கூட்டி வாசிச்சீங்களா...அதை நானா யோசிச்சேன்ல கவனிப்போம்..
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//கோகுல் said...
கிரேசியுடன் அவர் இணைந்து பண்ணிய படங்கள் பார்க்க பார்க்க சலிக்காதது///
கண்டிப்பா.. 500% ஒத்து போறேன் இந்த கருத்தோட..."நண்பர்களும் 40 திருடர்களும்"ன்னு ஒரு படம் வருது மாப்ள, கலக்கலா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...//
உங்க ஆளு படமாய்யா..இனிமே விளம்பரத்துக்கு காசு வாங்கப்போறேன்...
ஓகே, நான் கிளம்பறேன்..அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்..
ReplyDeleteஇரவு வணக்கங்கள்!
ReplyDelete//செங்கோவி said...
ReplyDelete//கோகுல் said...
இன்னைக்கு அனுஷ்கா வுக்கும் பொறந்த நாளாம்.
அவங்களைப்பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.இல்லேன்னா ஒரு ஸ்டில்லாவது....?//
ஓ...அந்த வருத்தத்துல தான் அப்படி எழுத்துக்கூட்டி வாசிச்சீங்களா...அதை நானா யோசிச்சேன்ல கவனிப்போம்../////
ஹன்ஷிகா ரசிகர் மன்ற தலைவர் எப்புடி ஐயா, அனுஷ்கா பர்த்டேஸ்பெஷல் போடுவாரு? ரசிகர் மன்றங்களின் பேசிக் மோரல் கூட தெரியாம பேசுறிங்களே
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
//கோகுல் said...
கிரேசியுடன் அவர் இணைந்து பண்ணிய படங்கள் பார்க்க பார்க்க சலிக்காதது///
கண்டிப்பா.. 500% ஒத்து போறேன் இந்த கருத்தோட..."நண்பர்களும் 40 திருடர்களும்"ன்னு ஒரு படம் வருது மாப்ள, கலக்கலா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...//
உங்க ஆளு படமாய்யா..இனிமே விளம்பரத்துக்கு காசு வாங்கப்போறேன்..////
ஐயையோ இது எங்க ஆளு படம் இல்ல... கமலும், கிரேஸி மோகனும் இணையும் புதிய படம்... விஸ்வரூபதுக்கு பிறகு வெளிவரும் படம், இதுவரைக்கும் நம்ம ஆளு அதுல இல்ல....
இது விளம்பரம் இல்லாதபடியால், செலுத்திய பணத்தை ரீபன்ட்பண்ணவும்...
ஹன்ஷிகா ரசிகர் மன்ற தலைவர் எப்புடி ஐயா, அனுஷ்கா பர்த்டேஸ்பெஷல் போடுவாரு? ரசிகர் மன்றங்களின் பேசிக் மோரல் கூட தெரியாம பேசுறிங்களே//
ReplyDeleteஓ!சரிதான்!
ஓகே கோகுல், நானும் கெளம்புறேன்.. நாளை சந்திப்போம்.. இதே நேரம் இதே இடத்தில்...இரவு வணக்கங்கள்
ReplyDeleteஎல்லாப் பேருக்கும் இரவு வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?இன்னிக்கு கமல் பொறந்த நாளு.அவருக்கு நேரடியா வாழ்த்து சொல்ல முடியாததால செங்கோவி ப்ளாக் மூலமா தெரிவிச்சுக்கிறேன்.
ReplyDeleteகெளம்பிட்டாங்களா, நாமதான் லேட்டா? ஓகே..
ReplyDeleteகமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பதினாறு வயதினிலே, கமல அண்ணார்ந்து பார்க்க வைக்கும் படம்... நானும் நெறைய இடங்கள்ள சொல்லி பார்த்திட்டேன், அண்ணனுக்கும் அந்த படம் பிடிச்சிருக்கறது ரொம்ப சந்தோசமான விஷயம்.
ReplyDeleteYoga.S.FR said...
ReplyDelete//எல்லாப் பேருக்கும் இரவு வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?இன்னிக்கு கமல் பொறந்த நாளு.அவருக்கு நேரடியா வாழ்த்து சொல்ல முடியாததால செங்கோவி ப்ளாக் மூலமா தெரிவிச்சுக்கிறேன்.//
இரவு வணக்கம் ஐயா.. எப்போ பிரான்சுக்கு போறீங்க?
//ஐயா, கமல் ஒரு கடல்..அதை அஞ்சுக்குள்ள அடக்க முடியுமா?//
ReplyDeleteஎனக்கு பிடிக்காத கமல் படம்ன்னு வேணும்னா ஒரு அஞ்சு படம் லிஸ்ட் போடலாம்னு நினைக்கிறேன், அது தவிர அவரது அனைத்து படங்களும் எதோ ஒரு வகையில் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படங்கள்தான்..
கமலின் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பதிவு தந்து அவையில் இருப்போர் எல்லோருக்கும் இரவு வணக்கம்!
ReplyDeleteகமலின் கனவுக்காவியம் மருதநாயகம் வராதது கவலையே!
ReplyDeleteஎனக்கும் நீங்கள் கூறிய ஐந்து படமும் பிடிக்கும் ஹேராமும் இன்னும் பிடிக்கும்!
ReplyDeleteவணக்கம் யோகா ஐயா மீள்வரவு நல்வரவாகட்டும்!
ReplyDeleteசபையை விட்டு பறந்தோடும் வாத்தியார் மீது கல்யானராமன் உல்லாசப்பறவை தனிமரம் விருமாண்டி மாட்டை மஹாநதியாக அனுப்பும்!ஹீ ஹீ
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட படங்களில் அன்பே சிவம் தவிர மற்ற படங்களை பார்த்துவிட்டேன்....
ReplyDeleteகமல் நடித்த படங்களுக்குள் எனக்கு மிக புடித்த படம் "அவள் அப்படித்தான்" "சிப்பிக்குள் முத்து"
ReplyDeleteஇந்த ரெண்டு படங்களும் உங்கள் தெரிவுக்குள் வரவில்லை...... அவ்வவ்
உங்கள் டாப் தெரிவில் கண்டிப்பாய் அவள் அப்படித்தான் இடம் பிடித்து இருக்கும் என்று நினைத்து கொண்டு வந்தேன் அண்ணா... :(
அப்புறம் கமலுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
ReplyDeleteEnna Anna,
ReplyDeleteThe below my list,
Mahanadhi
Sigappu Rojakal
Dasavatharam
Kakki Sattai
Virummandi
கமல்ஹாசன் பிறந்த நாள் அன்று அவர் குறித்த பதிவு அருமை. நானும் 'அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்' என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். முடிந்தால் அதையும் ஒரெட்டு வந்து பாத்துட்டு போங்க.
ReplyDeletewww.maduraivaasagan.wordpress.com
நன்றி.
எனக்குப் பிடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன. நன்றி
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteகலைஞானியின் பிறந்த நாளை முன்னிட்டு,
அவரது சிறப்புக்களைச் சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லியதோடு,
அவர் நடித்த படங்களில் பிடித்த படங்களையும் தந்திருக்கிறீங்க.
எனக்கும் கமல் பிடிக்கும்.
உண்மையில் கலைஞானியின் திறமைக்கு ஈடு இணை - எல்லை இல்லைத் தான்!
ReplyDeleteஉண்மையில் கலைஞானியின் திறமைக்கு ஈடு இணை - எல்லை இல்லைத் தான்!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட 5 படங்களும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் நான் வரிசைபப்டுத்திய டாப்-20க்குள் இந்தப்படங்களையும் குறிப்பிட்டுள்ளேன் அதிலும் 16 வயதினிலே,அன்பேசிவம்,அற்புதமானவை...
ReplyDeleteநல்ல தெரிவுகள் அண்ணே!
ReplyDeleteஅதிலும் நாயகன், தேவர்மகன், அன்பேசிவம் பற்றி சொல்லவே வேணாம்!
//தொடர்ந்து பல நல்ல படங்களை நமக்குத் தரவும் ஆண்டவன் அருள் புரியட்டும்//
ReplyDeleteஆமாண்ணே அவர் நல்ல படங்கள் தர ஆண்டவன் அருள் புரியட்டும்! :-)
தொடர்ந்து தேடலுடன் படம் செய்து வரும் உலகநாயகன் கமலஹாசனின் 57வது பிறந்த நாள் இன்று(நவம்பர் ஏழு). அவர் பல்லாண்டு வாழவும், தொடர்ந்து பல நல்ல படங்களை நமக்குத் தரவும் ஆண்டவன் அருள் புரியட்டும். //
ReplyDeleteஎனது கருத்தும் இதுவே நண்பரே
//Yoga.S.FR said...
ReplyDeleteஎல்லாப் பேருக்கும் இரவு வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?இன்னிக்கு கமல் பொறந்த நாளு.அவருக்கு நேரடியா வாழ்த்து சொல்ல முடியாததால செங்கோவி ப்ளாக் மூலமா தெரிவிச்சுக்கிறேன்.//
ஐயாவுக்கு காலை வணக்கம்..பிரயாணக் களைப்பு நீங்கியதா?
// Dr. Butti Paul said...
ReplyDeleteகமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பதினாறு வயதினிலே, கமல அண்ணார்ந்து பார்க்க வைக்கும் படம்... நானும் நெறைய இடங்கள்ள சொல்லி பார்த்திட்டேன், அண்ணனுக்கும் அந்த படம் பிடிச்சிருக்கறது ரொம்ப சந்தோசமான விஷயம்.//
அந்தப் படத்துக்கு என்னய்யா குறை?
Dr. Butti Paul said...
ReplyDelete//இரவு வணக்கம் ஐயா.. எப்போ பிரான்சுக்கு போறீங்க?//
இப்போ பிரான்சுல தான் இருக்காரு, மறுபடியும் எப்படிப் போக?
தனிமரம் said...
ReplyDelete//கமலின் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பதிவு தந்து அவையில் இருப்போர் எல்லோருக்கும் இரவு வணக்கம்! //
வணக்கம் நேசரே..
//எனக்கும் நீங்கள் கூறிய ஐந்து படமும் பிடிக்கும் ஹேராமும் இன்னும் பிடிக்கும்!//
ஹேராம் பல மொழிகளைப் போட்டுக் குழப்பியதால், லிஸ்ட்டில் இல்லை.
//சபையை விட்டு பறந்தோடும் வாத்தியார் மீது கல்யானராமன் உல்லாசப்பறவை தனிமரம் விருமாண்டி மாட்டை மஹாநதியாக அனுப்பும்!ஹீ ஹீ//
இணைய நேரம் 11.30 டூ 12.30ஆகக் குறுகிவிட்டது, என்ன செய்ய..மன்னிக்கவும் நேசரே.
துஷ்யந்தன் said...
ReplyDelete//நீங்கள் குறிப்பிட்ட படங்களில் அன்பே சிவம் தவிர மற்ற படங்களை பார்த்துவிட்டேன்....//
அன்பே சிவம் நல்ல படம்யா..பாருங்க.
//கமல் நடித்த படங்களுக்குள் எனக்கு மிக புடித்த படம் "அவள் அப்படித்தான்" "சிப்பிக்குள் முத்து" இந்த ரெண்டு படங்களும் உங்கள் தெரிவுக்குள் வரவில்லை....//
அவள் அப்படித்தான் கொஞ்சம் நாடகத்தன்மை நிறைந்தது, சிப்பிக்குள் முத்து டப்பிங் படம் என்பதால் லிஸ்ட்டில் இல்லை..ஆனாலும் நல்ல படம் தான்.
// Vathiyar Paiyan said...
ReplyDeleteEnna Anna,
The below my list,
Mahanadhi
Sigappu Rojakal
Dasavatharam
Kakki Sattai
Virummandi //
எல்லாமே நல்ல படங்கள் தான்..
//சித்திரவீதிக்காரன் said...
ReplyDeleteகமல்ஹாசன் பிறந்த நாள் அன்று அவர் குறித்த பதிவு அருமை. நானும் 'அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்' என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். முடிந்தால் அதையும் ஒரெட்டு வந்து பாத்துட்டு போங்க. //
ஓகே..
// FOOD said...
ReplyDeleteஉலக நாயகனின் பிறந்த நாள் பரிசா! நல்லாருக்கு டைமிங்க்.//
நன்றி சார்..
//விச்சு said...
ReplyDeleteஎனக்குப் பிடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன. நன்றி //
நன்றி.
நிரூபன் said...
ReplyDelete//இனிய காலை வணக்கம் பாஸ்,//
காலை வணக்கம் நிரூ..
//உண்மையில் கலைஞானியின் திறமைக்கு ஈடு இணை - எல்லை இல்லைத் தான்!//
நல்ல கலைஞன் அவர்.
// K.s.s.Rajh said...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட 5 படங்களும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் நான் வரிசைபப்டுத்திய டாப்-20க்குள் இந்தப்படங்களையும் குறிப்பிட்டுள்ளேன் அதிலும் 16 வயதினிலே,அன்பேசிவம்,அற்புதமானவை...//
பார்த்தேன் கிஸ் ராஜா..உங்க பதிவைப் பார்த்தப்புறம்தான் அவர் பிறந்தநாளே எனக்குத் தெரிஞ்சிச்சு..
ஜீ... said...
ReplyDelete//நல்ல தெரிவுகள் அண்ணே!....அதிலும் நாயகன், தேவர்மகன், அன்பேசிவம் பற்றி சொல்லவே வேணாம்! //
ஆமாம் ஜீ, இரண்டுமே கலக்கல் படங்கள், நல்ல நடிப்பு.
//ஆமாண்ணே அவர் நல்ல படங்கள் தர ஆண்டவன் அருள் புரியட்டும்! :-) //
என்னய்யா இப்படி ஆகிட்டீங்க?
// M.R said...
ReplyDeleteஎனது கருத்தும் இதுவே நண்பரே //
ஒத்த கருத்துக்கு நன்றி ரமேஷ்..
சில நடிகர்கள் நடித்தால், இந்த நடிப்பை ஏற்கெனவே இந்தப் படத்தில் பார்த்திருக்கிறோமே என்று தோன்றும் - கமலைப் பொறுத்த வரை, அவர் நடித்த கதாபாத்திரங்களில் தனித்தன்மை காட்டுவார்! எனக்கும் நீங்கள் சொன்ன படங்கள் பிடிக்கும்.
ReplyDeleteகாலை வணக்கம்,பொன் ஜூர்!!!!!!களைப்பு நீங்கி புத்துணர்வு பெற்றிரு க்கிறேன், நன்றி! நீங்களும் நன்றாக தேறிவிட்டீர்கள் என்று தெரிகிறது!இருந்தாலும் " நல்ல" ஸ்டில் ஒன்றையும் காணோமே?அப்போ தானே உங்கள் "புத்துணர்ச்சி"எப்படி இருக்கிறதென்று தெரியும்?
ReplyDeleteDr. Butti Paul said...
ReplyDelete//இரவு வணக்கம் ஐயா.. எப்போ பிரான்சுக்கு போறீங்க?//காலை(அதிகாலை)வணக்கம் டாக்டர்! திங்கள் சொந்த?!ஊர் திரும்பி விட்டேன்,சென்ற கடமையை முடித்து விட்டு நேற்றுக் காலை வந்து சேர்ந்தேன்.
எனக்கு பிடித்த கமல் படங்கள்:
ReplyDeleteவறுமையின் நிறம் சிகப்பு
மூன்றாம் பிறை
சலங்கை ஒலி
சிப்பிக்குள் முத்து
நாயகன்
உன்னால் முடியும் தம்பி
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காம ராஜன்
சிங்காரவேலன்
தேவர் மகன்
மகாநதி
நம்மவர்
சதி லீலாவதி
ஹே ராம்
பஞ்ச தந்திரம்
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு
All time favorite என்றால் அன்பே சிவம்தான். சற்று கூட தொய்வில்லாமல், அதிக தர்க்க மீறல்கள் இல்லாமல் இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.
உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் இந்த ஐந்து படங்களும்... வசூல்ராஜா MBBS மிஸ்ஸிங்... எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருக்கலாம்..
ReplyDeleteவரிசைப்படுத்த ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும் பட்டியல்..
ReplyDelete\\புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பது என்று எம்.ஜி.ஆர் பல துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கிறார்.\\ அவரோட நடனம் இருக்கே.....முதல் படத்தில இருந்து கடைசி படம் வரைக்கும் கையையும் தலையையும் அசைப்பது ஒரே மாதிரி வைத்திருந்த ஒரே ஆள் இவராத்தான் இருக்கும். இரண்டு நாயகிகள், இரண்டு பேரு கூடவும் "எல்லாமும்" பண்ணுவாரு படத்தின் கடைசியில அதுல ஒருத்தி தங்கச்சியாயிடுவா, அண்ணான்னு கத்திகிட்டே வந்து இறுக்கி இவரை கட்டிப் பிடிச்சிக்குவா... இப்படி புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் இவரேதான்.
ReplyDeleteகமல் நடிப்பில் டாப்புதான். ஆனால், கதைகளை ஆங்கிலப் படங்களில் இருந்து ரொம்ப காலமாகவே திருடி படமெடுக்கிறார் எனபது மட்டும் இவர் மீதுள்ள வருத்தம்.
ReplyDeleteஒரு கைதியின் டைரி my all time favorite
ReplyDeleteநல்ல தேர்வு.
ReplyDeleteதிறமை இருக்குற நல்ல வில்லன்களையும் தம் நிறுவனப் படத்தில் ஹீரோவாப் போட்டவரு. உதாரணம் சத்யராஜ் , நாசர்.
ReplyDeleteசத்யராஜ் ஹீரோ வா மெல்ல வளந்து வர்றப்ப ஒரு படம் ராஜ் கமல் நிறுவனம் சார்பா வந்ததே ,சத்யராஜ் அதுல ரெட்டை வேடத்துல பொளந்து காட்டியிருப்பாரு ,என்ன படமின்னு மறந்து போச்சு ...ராஜ் கமல் நிறுவனப் படம் அவர மாதிரியே ரொம்ப நல்லா இருக்கும் .
In my Blog:
என்னை ஏதோ செய்கிறாள் - 3 -கிரைம் தொடர்
அருமையான தேர்வுகள். மகாநதி, புஷ்பக் (பேசும் படம்), மூன்றாம் பிறை படங்களையும் சேர்க்கலாம்.
ReplyDeleteநாம ப்ரீயா இருக்கற நாளா பார்த்து இந்தாளு சீரியஸ் பதிவு போடுறாரு, இதெல்லாம் எதிர்க்கட்சி காரங்க செய்ற சதி.
ReplyDelete//
ReplyDeleteDr. Butti Paul said...
நாம ப்ரீயா இருக்கற நாளா பார்த்து இந்தாளு சீரியஸ் பதிவு போடுறாரு, இதெல்லாம் எதிர்க்கட்சி காரங்க செய்ற சதி.//
மொக்கைப் பதிவு போடும்போதெல்லாம், ஆப்பரேசன் பண்ணப்போயிடறீங்க போல..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅருமையான தேர்வுகள். மகாநதி, புஷ்பக் (பேசும் படம்), மூன்றாம் பிறை படங்களையும் சேர்க்கலாம்.//
ஆமாண்ணே, மகாநதியைவும் சேர்த்திருக்கலாம்..
சத்யா மற்றும் மகாநதி - விட்டுவிட்டீர்களே
ReplyDeleteboss guna,salangai oli,heyram idhellam vittuteengale
ReplyDeleteசத்தியமா சொல்றேங்க கமல் ஒரு காமெடியன்'க அவரைப் போய் உலகநாயகன் என சொல்வது தான் காமெடியின் உச்சம். சதிலீலாவதி, மை ம கா ரா, அவ்வை சண்முகி, மும்பை எக்ஸ்பிரஸ் னு வரிசையா பல படங்கள் என் மனதைத் தொட்டது. நீங்க சொன்ன படங்கள் பல என் மனசில இல்லீங்க..
ReplyDelete