அருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!
முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..
இது தமிழ்சினிமாவுலேயே வராத கதைன்னு தைரியமாச் சொல்லலாம்..தனுஷும் அவர் தங்கச்சியும் அப்பா-அம்மா இல்லாதவங்க..ஃப்ரெண்ட்ஸ் சப்போர்ட்ல ‘வாழ்றாங்க’..பீர் தான், சிக்கன் பிரியாணி தான்..நல்ல வாழ்வு..சுந்தர்ங்கிற மாக்கான் தான் க்ளோஸ் ஃப்ரெண்டு..அவர் அப்பாவும் ஒன்னா தண்ணி அடிக்கிற அளவுக்கு நல்லா பழகுறாரு..அந்த மாக்கான் ஃப்ரெண்டு ஒரு ஃபிகரை கூட்டிக்கிட்டு வந்து ‘இது நான் லவ் பண்ற பொண்ணு..லவ்வுக்கு ஒத்துக்கலை..டேட்டிங்குக்கு மட்டும் தான் ஒத்துக்கிச்சுன்னு சொல்றாரு..ஃப்ரெண்ட்ஸும் ரொம்ப நல்ல பொண்ணு-னு அதை குரூப்ல சேர்த்துக்கறாங்க.(குரூப்ல பொண்ணுங்களும் உண்டு).
அப்புறம் பீர், விஸ்கின்னு நல்லா பழகுறாங்க..அந்தப் பொண்ணுக்கும் தனுஷுக்கும் ஒத்துக்கலை..முட்டிக்குது..மோதல் என்ன ஆகும்?..அப்புறம் தான் ஆடியன்சுக்கே தெரியுது, அது தான் ஹீரோயின்னு..ஏன்னா அதுவரைக்கும் மாக்கான் நண்பன் தான் அதை தடவுறாரு..(இதான் கலாச்சார அதிர்ச்சியோ...)
நண்பன் காதலியை லவட்டலாமா? நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?-ன்னு தனுஷ்க்கு ஃபீலிங். கூடவே லவ் ஃபீலிங்கும். பொண்ணும் மாக்கான்கிட்ட தெளிவா மேட்டரைச் சொல்லாம அவன் காசுலேயே ஊர் ஊராச் சுத்தி தண்ணி அடிச்சுக்கிட்டே, லுக் விட்டுக்கிட்டே தனுஷை லவ் பண்ணுது..ஒரு 'அரை சீன் படம்' ரேஞ்சுக்கு இந்தக் கதை ஒரு பக்கம் போகும்போதே, மெயின் கதை(?) இன்னொரு பக்கம் ஓடுது..(கதை மட்டும் தான் அப்படி..சீனும் இல்லை!!)
அது என்னன்னா, தனுஷ் ஒரு ஃபோட்டோகிராஃபர்..புகழ்பெற்ற ஃபோட்டோகிராஃபரான ஒரு பெருசை (பேர் மறந்திடுச்சு..) ரோல் மாடலா நினைச்சு அவர் கிட்ட அசிஸ்டெண்டா சேர முயற்சி பண்றாரு..நேஷனல் ஜாக்ரஃபி, டிஸ்கவரில நம்ம ஃபோட்டோவும் வரணும்னு ஆசைப் படுறாரு..அந்த பெருசு ‘போய் பறவைகளை ஃபோட்டோ எடுத்துக் காட்டு..அதைப் பார்த்துட்டு முடிவு சொல்றேன்னு தனுஷ்கிட்டச் சொல்ல, நம்மாளும் சூப்பரா படம் எடுத்துக்கொடுத்தா, அந்தப் பெருசு அதை தன்னோட படம்னு சொல்லி ரிலீஸ் பண்ணிடுது..அந்தப் படம் என்னமோ ஒரு பெரிய பரிசையும் வாங்கிடுது..
என்னென்னமோ நடக்குதே..அப்போ கண்டிப்பா என்னமாவது நடக்கும்னு நாம நிமிர்ந்து உட்காருதோம்..கூடவே ஒரு சந்தோசம், செல்வராகவன் வக்கிரம் இல்லாம படத்தைக் கொண்டு போறாரேன்னு..அப்படில்லாம் விட்டுடுவாரா...
தனுஷும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்தியாயா (என்னா பேரு!)-வும் ஒரு சீன்ல..ச்சே..ச்சே..சீன் இல்லீங்க..ஒரு காட்சில உணர்ச்சி வசப்பட்டு டபக்குன்னு கட்டிப்பிடிக்கிறதை மாக்கான் நண்பன் பார்த்துடுறாரு...சின்ன சண்டை, நீயெல்லாம் நண்பனா டயலாக்ஸ் பேசிட்டு தனுஷ் ரிச்சாவைக் கட்டிக்கிடறாரு..மாக்கான் நண்பன், தனுஷோட தங்கச்சியை கட்டிக்கிடறாரு..(ஆமாம்யா..இதுக்கே அதிர்ச்சியானா எப்படி?)...
இப்போ தனுஷ் ஃபோட்டோவைக் காட்டி பெருசு பெரிய விருது வாங்குச்சா..அதை பேப்பர்ல பார்க்கிற தனுஷ், பால்கனில இருந்து தலைசுத்தி கீழ விழுந்து மண்டை சிதறுது..
மூன்று வருடங்களுக்குப் பிறகு...(அப்படித் தான் போட்டாங்க..)......
தனுஷ் மெண்டல் ஆகிடுதாரு..பொண்டாட்டியை (அதான்யா, ஹீரோயினை) போட்டு அடிக்காரு..(அய்யோ..) கேர்ல் ஃப்ரெண்ட் கல்யாண ரிசப்சன்ல மாப்பிளை மண்டையை உடைக்காரு..(அய்யய்யோ)..
தனுஷ் ஃப்ரெண்ட்ல ஒருத்தர் ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்து ‘உன்னை நான் வச்சிக்கிறேன்’-ங்கிறதை டீசண்டா சொல்றாரு..(இப்போ அய்யய்யோவை வாய் விட்டே சொல்லலாம்..)..அய்யய்யோ...படம் பார்க்க வந்ததுக்கு இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோன்னு பதறுனோம்..
ஆனா அந்தப் பொண்ணு பத்தினி..”டேய், எவ்னோ டேட்டிங் வான்னு கூப்பிட்டதும் நடுராத்தில அவன் பின்னாடியே வந்தவ தாண்டா நான்..அவன் காசுலேயே பீர் அடிச்சு,அவன் ஃப்ரெண்ட்டையே கரெக்ட் பண்ணவ தாண்டா..அதுக்காக என் புருசனை விட்டுக்கொடுப்பேன்னு நினைச்சுடாதே..”-ன்னு (பயப்படாதீங்க..இது என் டயலாக் தான்..அது இதையே வேற மாதிரி டீசண்டா) சொல்லிடுது. அந்த நல்ல நண்பனும் ‘சாரி’ன்னு சொல்ல இதுவும் ‘ஓகே..இதை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுவேன்..நீ எப்பவும்போல அடிக்கடி என் வீட்டுக்கு வா(!!)’ன்னு சொல்லிடுது..
அடுத்து.....................மாசமா இருக்கிற ஹீரோயின் வயித்துல மெண்டலா திரியற தனுஷ் ஒரே மிதி..கரு ரத்தமா போகுது...தரையெல்லாம் ரத்தம்..அய்யோ, அம்மா-ன்னு ஹீரோயின்கூடச் சேர்ந்து ஆடியன்சும் கத்துறாங்க.. கதறுதாங்க..அந்தம்மா உடம்பு சரியாகி வீட்டுக்கு வருது..தனுஷ் அந்த ரத்தத்துக்குப் பக்கத்துலேயே படுத்திருக்காரு..அது வாளி நிறைய தண்ணியும், ப்ரெஷும் எடுத்து தேய் தேய்னு தேய்ச்சுக் கழுவிக்கிட்டே 10 நிமிசம் பேசி அழறாங்க..சாப்பிட்டுப் போன நமக்கு குடலைப் புரட்டிடுச்சு..உஸ்ஸ்ஸ்...
இவ்ளோ விஷயம் நடக்குன்னா செல்வராகவன் என்னமோ சொல்ல வர்றாரு...என்னவா இருக்கும்-னு யோசிக்கிட்டே கண்டினியூ பண்ணா..
அடடே..என்ன ஆச்சரியம்..தனுஷ் திடீர்னு தெளிவாகிடுதாரு..அவர் ஃபோட்டோ குமுதம் அட்டைல வந்து, அப்படியே உலகம் பூரா சுத்தி, அந்த பெருசை விட பெரிய ஃபோட்டோகிராஃபர் ஆகி ஆஸ்கார் மாதிரி பெரிய பரிசை ஜெர்மன் போய் வாங்கிடுதாரு..
அப்புறம் தான் நாங்க எதிர்பார்த்த முக்கியமான விஷயமே வந்துச்சு..ஆமாங்க..படம் முடிஞ்சுடுச்சு!
எப்பவும் நான் படத்தோட கதையை விமர்சனத்துல சொல்றதில்லை..ஆனா எவ்வளவு யோசிச்சும், இந்தப் படத்தோட கதை என்ன, என்ன தான் சொல்ல வந்தாங்கன்னு புரியாததால, பார்த்ததை அப்படியே எழுதி இருக்கேன்..உங்களுக்காவது ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க..
படத்துல நல்ல விஷயம்னா பாடல்கள் தான்..ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார்..பிண்ணனி இசையும் நல்லா இருந்துச்சு..குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு குடிச்சுட்டு மாக்கான் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை.
அடுத்து ராம்ஜியின் ஒளிப்பதிவு..படமே ஃபோட்டோகிராஃப்ர் பத்தின படம் என்பதால் கேரளா-கர்நாடகான்னு அழகான லொகேசனா தேடி எடுத்திருக்காங்க..
தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..
ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக ‘நல்ல ஃபிகரா’ தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.
‘இது அடுத்த தலைமுறைக்கான படம்’னு செல்வராகவன் சொன்னாரு..அப்பவே உஷார் ஆகியிருக்கணும்..அம்பது வருசம் கழிச்சு பார்க்கவேண்டிய படத்தை அவசரப்பட்டு, இப்பவே பார்த்துட்டேன்..
வேற என்ன சொல்ல..........?
67 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.