Friday, June 15, 2012

முருக வேட்டை_15

சரவணன் சோர்வுடன் தன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த கவிதா அமைதியாக “வாங்க “என்றாள்.

சரவணன் சோஃபாவில் போய் விழுந்தான். கண்களை மூடினான்.

கவிதா எதிரே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிடங்கள் அமைதியாக அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

பின் மெதுவாக “அகிலாக்கா ஃபோன் பண்ணாங்க..எல்லாத்தையும் சொன்னாங்க.” என்றாள்.

சரவணன் கண் விழித்துப் பார்த்தான்.

“பேசலாமா? என்ன ஆச்சு?” என்றாள்.

“ம்..பேசுவோம்.....சாரி, கவிதா..எப்பவும் கேஸோட எல்லா டீடெய்லையும் உன்கிட்டச் சொல்வேன். ஆனால் இந்த முறை நீ கன்சீவ் ஆகியிருக்கியேன்னு சிலதை மறைச்சுட்டேன்..” என்றபடி சரவணன் நடந்ததைச் சொன்னான்.

“யாருமே நான் சொல்றதை இப்போ நம்ப மாட்டேங்கிறாங்க அச்சு” என்றான்.

“யார் நம்பாட்டாலும் நான் நம்புவேன்.”என்றாள் கவிதா.

“பாண்டியன் ஏன் தன்னை கொலையாளின்னு சொல்லிக்கிறான்? அது உண்மையா அல்லது என்னை சுத்தல்ல விடறதுக்காக சொன்ன பொய்யான்னு புரியலை அச்சு. என்னை கேஸை ஒழுங்கா டீல் பண்ணாம இருக்கச் சொன்ன பொய்யின்னு வச்சுக்கிட்டா, உண்மையான கொலையாளி யாரு? இல்லே, பாண்டியன் தான் கொலையாளின்னா எதுக்காக வலிய தன் குற்றத்தை ஒத்துக்கணும்? எல்லாத்துக்கும் மேல MARS-1024-ங்கிறது என்னன்னும் தெரிய மாட்டேங்குது..”

“M - முத்துராமனா?”

“உஸ்ஸ்..அப்படி நினைச்சு கேஸை டீல் பண்ணித்தான் இந்த நிலைமைல இருக்கேன்..இப்போ என்னை இந்த கேஸ்ல இருந்து தூக்கிட்டாங்க, தெரியுமா?”

“தெரியும்..அதுக்காக விட்றுவோமா?” என்றாள் கவிதா.

அப்போது கவிதாவின் ஃபோன் ஒலித்தது.

“அழகன் என்றால் முருகன் என்று..” 

கவிதா யாரென்று பார்த்தாள்.பாண்டியன்.

சரவணன் இயர் ஃபோனை எடுக்க ஓடினான்.

“ஹலோ” என்றாள் கவிதா.

“சரவணன் இல்லியா?” என்றான் பாண்டியன். குரலில் ஒருவித இறுக்கம் தெரிந்தது.

“இருக்காங்கண்ணே..பொறுங்க” என்று கவிதா சொல்லும்போதே இயர்ஃபோனை மாட்டி, ஒன்றை கவிதாவுக்குக் கொடுத்தான் சரவணன்.

ஃபோன் அருகில் உட்கார்ந்தபடி “ஹலோ” என்றான்.

”என்ன சரவணன்..ஹா..ஹா..நான் சொன்னது சரியாகிடுச்சு பார்த்தியா? நான் அப்பவே சொன்னேன்..நீ ஒரு முட்டாள்னு...உன்னை பெரிய இவன்னு ரெகமண்ட் பண்ணி, புரமோசன் வாங்கிக் கொடுத்தவளே ஒத்துக்கிட்டா தான் செஞ்சது தப்புன்னு..இப்பவும் சொல்றேன்..அந்தக் கொலையை நாந்தான் செஞ்சேன்...இப்போ நான் செஞ்ச கொலையை நானே துப்புத் துலக்கணுமாம்..சொல்றா அகிலா..உன்னை ரெகமண்ட் பண்ணவளாச்சே.அவளுக்கு மட்டும் மூளை இருக்கவா போகுது? மறுபடியும் சவால் விடறேன்..முடிஞ்சா பிடிச்சுக் காட்டு. எனக்குத் தெரியும்..எப்படியும் நீ சும்மா இருக்க மாட்டேன்னு..உன்னோட புத்திசாலித்தனத்தை நிரூபிக்க மறுபடியும் ஒரு சான்ஸ் தர்றேன்..இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு ஆபத்துங்கவும் எப்படி ஓடி வந்தே? எவ்வளவு பரபரப்பா உன் மூளை வேலை செஞ்சுச்சு? அதே வேகத்தோட இந்த கேஸை டீல் பண்ணு..உனக்காக நான் கார்த்துக்கிட்டிருப்பேன்..பை”

கவிதா நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

“அச்சு..இதே தான்..இப்படியே தான் ஆரம்பத்துல இருந்து சொல்றான். சும்மா தான் சொல்றானான்னு..”

“அவர் சொல்றது உண்மை” என்றாள் கவிதா.

“எப்படிச் சொல்றே?”

“அந்த குரல்ல ஒரு உறுதி தெரியுது..ஏதோ ஒன்னை நீங்க மிஸ் பண்றீங்க..தெளிவா ஏதோ ஒரு தடயம், அவர் விட்டு வச்சிருக்கார்..அதனால தான் திரும்பத் திரும்ப உங்களை கூப்பிடறார். உங்க பேரைக் கெடுக்கறதுக்காகத் தான் பொய் சொல்றாருன்னா. இப்போ இப்படிப் பேச வேண்டிய அவசியம் இல்லியே?”

சரவணன் யோசித்தபடியே ‘ஆம்’ என்று தலையாட்டினான்.

“என்ன தடயமாக இருக்கும்?”

“இருக்கிற ஒரே தடயம் MARS-1024 தானே?” என்றாள் கவிதா.

”ஆமா..ஆனால் அது சரியான தடயம் தானா?..அதை நம்பி பின்னால போய்த் தான் சஸ்பெண்ட் ஆகி நிற்கிறேன்..”

சஸ்பெண்ட் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே,  சரவணனுக்கு கண் கலங்கியது.

“இன்னிக்கு எவ்வளவு அவமானப்பட்டேன், தெரியுமா? அத்தனை பேர் முன்னாடியும்...ச்சே.......நான் தோத்துட்டேன், அச்சு..பாண்டியன்கிட்ட நான் தோத்துட்டேன்”


“இல்லீங்க..நீங்க தோற்க மாட்டீங்க..நான் இருக்கிறவரைக்கும் யார்கிட்டயும் நீங்க தோற்க மாட்டீங்க” என்றாள் கவிதா உறுதியுடன்.

---------- முதல் பாகம் முற்றும் --------------------


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. விசாரணை அதிகாரிக்கு ஆப்பா! ஹீ

    ReplyDelete
  2. பாண்டின் ஏன் இப்படி வலிய வருவது தொடருங்கோ பின் வருகின்றேன்.

    ReplyDelete
  3. தொடருங்கள்! தொடர்கிறேன்

    ReplyDelete
  4. வணக்கம்,செங்கோவி!தொடரட்டும்,தொடர்வோம்!

    ReplyDelete
  5. சரவணனுக்கு பாண்டியன் போன் ல பேசறத ரெகார்ட் பண்ணி அகிலா கிட்ட கொடுக்க தோணலைய

    ReplyDelete
  6. முதல் பாகம் முற்றுமா? பரபரப்பு அடுத்த பாகத்திலுமா?

    ReplyDelete
  7. யோவ் இதென்னய்யா முதல் பாகம் முற்றும்.......?

    ReplyDelete
  8. @Blackpearl Logics

    உங்களைப் போன்ற நண்பர்களின் ‘லாஜிக்’ பற்றிய கேள்விகளுக்கு நன்றி. அவையே கதையை மெருகேற்ற உதவும். இருப்பினும் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியா என் நிலையைப் புரிந்து கொள்ளவும்.

    குவைத்தில் இருக்கும் என்னிடம்கூட கால்-ஐ ரெக்கார்ட் செய்யும் ஃபோன் இல்லை. என்னைப் போன்ற கஞ்சப் பிசினாறிகளும் உலகில் உண்டு என்றும் புரிந்து கொள்ளவும். நன்றி.

    ReplyDelete
  9. @பன்னிக்குட்டி ராம்சாமி
    அண்ணே, முருக வேட்டையில் முதல் பாகம் வேட்டை...இரண்டாம் பாகம் ‘முருகா’........கந்தனுக்கு அரோகரா!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.