Friday, July 13, 2012

பில்லா 2 - திரை விமர்சனம்


அதாகப்பட்டது... :

பில்லா 1 படத்தின் முன்கதை என்ற அறிமுகத்துடன், மங்காத்தா வெற்றிக்குப் பின் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். படத்திற்கு அட்ராக்சன் என்று பார்த்தால், அது அஜித்..அஜித்..அஜித் மட்டுமே!

ஸ்டோரி லைன் :

பில்லா எப்படி டான் ஆனான் எனும் நாயகன் காலத்துக் கதை.

திரைக்கதை :
அந்த அரதப் பழசான கதைக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது பில்லா-1 வெற்றியும்,அஜித்தும் என்றால், அதை தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் பொறுப்பு திரைக்கதைக்குத் தான். 

படம் எளிமையாக நேர்கோட்டிலேயெ பயணிக்கிறது. இலங்கையில் இருந்து அகதியாக அஜித் ராமேஸ்வரம் வருவதில் ஆரம்பித்து, தொடர்ந்து ஏற்படும்(ஏற்படுத்திக் கொள்ளும் ) தொடர்புகளால் எப்படி இண்டர்னேசனல் போலீசால் தேடப்படும் டான் ஆகிறான் என்று இடைவேளை வரை தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். 

ஆனால் பிரச்சினை தமிழ் சினிமாவிடம் தான். தமிழ் சினிமா என்றால் ஒரே படத்திலேயே காதல், காமெடி, ஆக்சன், சோகம் எல்லாம் சொல்லியாக வேண்டிய கட்டாயம். படமும் இரண்டரை மணி நேரத்திற்காவது ஓட வேண்டியுள்ளது. இந்தக் கொடுமையை மாற்றும் தைரியம் சக்ரிக்கு இருந்திருந்தால், ஷார்ப்பான படமாக வந்திருக்கும். தேவையற்ற அக்கா மகள் காதல், புதுப் புது வில்லன்கள் என  தேவையற்ற விஷயங்களைப் புகுத்தி, படத்தை இடைவேளைக்குப் பின் இழுத்திருக்கிறார்கள். 

பில்லா-1 படத்தில் வில்லனாக வந்த ரஹ்மான் கேரக்டருக்கும் இங்கே அழகாக லீட் கொடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் தான் படம் முடிந்துவிட்டதா?, இல்லை இன்னும் புதிதாக வில்லன்கள் வருவார்களா என்று குழப்பத்துடனே அனைவரும் தியேட்டரில் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலைமை. அங்கே பில்லா-1 படத்தினை லின்க் செய்திருக்கலாம்.

அஜித் :

படம் மொத்தத்தையும் அஜித் தன் தோள்களில் தாங்க வேண்டிய கட்டாயம். ஆளும் வெயிட்டான பார்ட்டி என்பதால், எளிதாக படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இன்னும் ஹேண்ட்சமான ஹீரோ என்றால் அஜித்தை விட்டால் ஆளில்லை என்று படம் முழுக்க அடித்துச் சொல்லியிருக்கிறார். துடிப்பான ஆளாக, படம் முழுக்க கலக்குகிறார் அஜித். 

குஜிலீஸ் :

சரோஜா தேவி, பத்மினி, ராதா, குஷ்பூ, நமீதா என தமிழ்சினிமாக் கதாநாயகிகளின் பாரம்பரியத்தில் சேர்க்க முடியாத இரண்டு பீஸ்கள் (ட்ரெஸும் 2 பீஸ் தான்) பார்வதி ஓமணக்குட்டியும், ப்ரூனோ அப்துல்லாவும். எங்கே இருந்து தான் பிடிச்சுக்கிட்ட்டு வந்தார்களோ என்று நொந்துகொள்ள வேண்டிய நிலை. அரைகுறையாக நின்றால் போதும், தமிழன் ரசிப்பான் என்று தவறாக எடைபோட்டு, உடை குறைத்திருக்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால், அஜித் நிலைமை..மனுசன் ரொம்பப் பொறுமை சாலி தான் போல.

உலக அழகிகள் இரெண்டே வகை தான். ஒன்று, ஐஸ் பொன்ற உள்ளூர் அழகிகள். இரண்டாவது ப்ரியங்கா சோப்ரா போன்ற உள்ளூர் கிழவிகள்..இதில் பார்வதி, இரண்டாவது வகை. ஓமணக்குட்டி என்றால், எப்படி இருக்க வேண்டும். ஆனால்...உஸ்ஸ்!

வசனம் :

ரா.முருகன் மற்றும் முகமது ஜாஃபரின் வசனம், இந்தப் படத்திற்கு பெரும் பலம். நாயகனுக்கு பாலகுமாரன் போல், இந்த டானிற்கு இவர்கள். குறைவாகப் பேசும் ஹீரோ என்பதால், ஷார்ப்பான வசனங்களால் கலக்கி எடுக்கிறார்கள். ‘ஆசை இல்லை, பசி.....என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்..” போன்ற வசனங்கள் அட்டகாசம். 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- அஜீத்

- ஸ்டைலிஷான மேக்கிங். ஒளிப்பதிவாளரின் உழைப்பு பாராட்டப் பட வேண்டியது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- நேரடி வன்முறை. கழுத்தை வெட்டுகிற காட்சி என்றால் உண்மையிலேயே வெட்டுவது போன்றே எடுத்திருக்கிறார்கள். டெக்னிகலாக பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்றாலும், பார்க்கத் தான் கொடுமையாக இருக்கிறது.

- மேலே சொன்ன குஜிலீஸின் நடிப்பு..(ஓ...இவங்க நடிச்சது நடிப்புன்னா, சிவாஜி-கமல் நடிச்சது?)

- இடைவேளைக்கு அப்புறமும் படத்தை இழுத்தது.


அப்புறம்....:

- ஹீரோ இலங்கை அகதியாம்..ஆனால் ஹீரோ/நண்பர்கள் பேசும் ஒரு வார்த்தைகூட இனிய ஈழத்தமிழில் கிடையாது. ஒரு மிகப் பெரிய ஸ்டாரின் படம், பல கோடி பட்ஜெட் என எல்லாம் இருந்தும் எப்படி இவ்வளவு பெரிய மிஸ்டேக் செய்தார்கள்? இது என்னவகையான கவனக் குறைவு? டைரக்டர், ஹீரோ என யாருக்குமே இதிலுள்ள அபத்தம் புரியவில்லையா? அல்லது ஈழத் தமிழ் பேசினால் புரியாது என்று நினைத்தார்களா? தெனாலி படம் முழுக்க கமல் அப்படித் தானே பேசினார்? படம் ஓடவில்லையா என்ன?

- அகதி முகாம் கொடுமையைக் கண்டு கொதித்து வெளியேறும் அஜித், அந்த மக்களை அத்தோடு மறந்ததும் உறுத்துகிறது.

- குஜிலீஸ் மற்றும் மினிஸ்டர் வில்லன் வரும் போர்சனை நீக்கிவிட்டுப் பார்த்தால், படம் நீட்டாக இருக்கிறது. 

- யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பிண்ணனி சூப்பர். பாடல்கள் தான் மனதில் ஒட்டவில்லை.

பார்க்கலாமா? :

- கண்டிப்பாக (அஜித் ரசிகர்கள்)

- ஒருமுறை (மற்றவர்கள், தனியாக!)

- வேண்டாம் (குழந்தைகளுடன் போவோர், விஜய் ரசிகர்கள்!!)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. போச்சா போச்சா? இத்தோட அந்த கோட், கூலிங் கிளாசை கழட்டி எறியணும்!

    ஆரம்பத்திலயே டவுட்டா இருந்திச்சு சக்ரி மேல! பயபுள்ள ஏமாத்தாம சொதப்பிட்டான்!

    ReplyDelete
  2. //ஓமணக்குட்டி என்றால், எப்படி இருக்க வேண்டும். ஆனால்...உஸ்ஸ்!///
    எப்புடீண்ணே இருக்கணும் தனிப்பதிவு ப்ளீஸ்?

    ReplyDelete
  3. என்ன செங்கோவி...

    இந்த முறை விமர்சனம் தலைப்பு கொடுத்து எழுதியிருகிங்க?

    ReplyDelete
  4. நீங்க தனியாவா பாத்திங்க?

    ReplyDelete
  5. நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
    அந்த bottle க்கு நன்றி.
    கிரேட் எஸ்கேப்.
    விமர்சனம் அருமை..
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க அண்ணா.
    http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

    ReplyDelete
  6. ஃஃஃஅஜித் நிலைமை..மனுசன் ரொம்பப் பொறுமை சாலி தான் போலஃஃஃஃஃ

    அட இதுவேற நடந்திருக்கா... மனுசன் இப்ப என்ன நித்தியானந்தவா... அவர் பக்குவப்பட்டு ரொம்ப காலமாச்சு...

    ReplyDelete
  7. ஃஃஃஃஹீரோ/நண்பர்கள் பேசும் ஒரு வார்த்தைகூட இனிய ஈழத்தமிழில் கிடையாது. ஒரு மிகப் பெரிய ஸ்டாரின் படஃஃஃஃ

    பரவாயில்லை பேசி படத்தை இன்னும் சொதப்பாமல் விட்டு விட்டார்களே என சந்தோசப்படவோம்...

    ReplyDelete
  8. இரவு வணக்கம்,செங்கோவி!விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது.(தல ரசிகன் என்பதாலோ?)ஈழத் தமிழ் அப்படி ஒன்றும் சுலபமில்லை.ஈழத் தமிழருக்கு தமிழகத் தமிழ் போல் பேச்சுத் தமிழ் சிரமம் தான்.எதற்கு ரிஸ்க் என்று விட்டிருக்கலாம்!

    ReplyDelete
  9. சார்,,,,ஒரு டான் பயோகிராபிய இத விட எப்டி எடுக்க முடியும் ....சில குறைகள் இருந்தாலும் பில்லா ஒரு நல்ல படமே....

    ReplyDelete
  10. ஸ்.... அபா!!!!

    #ஜிலு ஜிலுன்னு ஹன்சிகாவப் பத்தி மேட்டர் போடுய்யா!!! அத வுட்டுட்டு...

    ReplyDelete
  11. என்னதான் குறை சொல்லிட்டு இருந்தாலும் எல்லாரும் ஒருதபா பாத்துருவாங்கன்னுதான் நினைக்கறேன், ஈழத்தமிழ் பேசி கொடுமைபடுத்தறதுக்கு பேசாமலே விட்டுடுடலாம்னு நினைச்சிருப்பாங்க செங்கு !!

    ReplyDelete
  12. ஏடோ கோபி, ஓமணேக்கு இது ஃபர்ஸ்ட்டு படமாக்கும்.... வெயிட் செய்யாம், அடுத்த படத்தில் ...... வல்லிய டெவலப்மெண்ட் நோக்காம்....! மனசிலாய்யி...?

    ReplyDelete
  13. அஜீத்து பேசுற சாதா தமிழுக்கே அவனவன் பொறிகலங்கி போய் கெடக்கான், இதுல ஈழத்தமிழ் வேற பேசனுமாக்கும்? உமக்கு ரொம்ப குசும்புய்யா........

    ReplyDelete
  14. ///சரோஜா தேவி, பத்மினி, ராதா, குஷ்பூ, நமீதா என/////

    நல்லா இரும்யா......

    ReplyDelete
  15. //உலக அழகிகள் இரெண்டே வகை தான். ஒன்று, ஐஸ் பொன்ற உள்ளூர் அழகிகள். இரண்டாவது ப்ரியங்கா சோப்ரா போன்ற உள்ளூர் கிழவிகள்.///வணக்கம்ணே.. இது போன்ற அறிய ஆரய்ச்சிகளுக்காக ஏன் உங்களுக்கு இன்னும் டாக்டர் பட்டம் குடுக்க வில்லை?

    ReplyDelete
  16. //தெனாலி படம் முழுக்க கமல் அப்படித் தானே பேசினார்? படம் ஓடவில்லையா ///

    படம் ஓடியது!! ஆனால் இலங்கை தமிழரின் கடும் கண்டனங்களுடன்.. B. H. அப்துல் ஹமீதுவின் மேற்பார்வையின் கீழும் கமலகாசன் இவ்வளவு சொதப்பி இருக்காரே என்று மறை விமர்சனகள் இலங்கையில்... அப்படத்தில் கமலகாசன் பேசியது இலங்கை தமிழே அல்ல.. இலங்கை வானொலி தமிழின் மேம்படுத்தபட்ட வடிவம்... ஆகவே அசித்குமார் பேசாத வரை நன்மையே, படத்துக்கும், அவருக்கும், நமக்கும்...

    ReplyDelete
  17. மொத்ததுல ஒரு கட்டிங் காசு(ரசிகனுக்கு) வீனாபோச்சு.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.