Tuesday, June 24, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)

10.குறிக்கோளும் அடிப்படைத் தேவையும்

ஒரு படம் எதைப்பற்றியது என்று தீர்மானிப்பது இந்த குறிக்கோள் தான். ஹீரோவை பார்வையாளர்களுடன் ஒருங்கிணைப்பதும் குறிக்கோள் தான். ஏதோ ஒரு நோக்கம், அதை நிறைவேற்றுவதற்காக ஹீரோ செய்யும் செயல்கள், அதற்கு எழும் தடைகள் என்று திரைக்கதையை நீங்கள் பின்னுவதற்கு முன், சில அடிப்படை விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஹீரோவின் குறிக்கோள் என்பது ஒரு எளிய சாமானியனும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். ’செவ்வாய் கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே காமா கதிர்களும் பீட்டா கதிர்களும் பாய்கின்றன. விண்வெளி வீரனான ஹீரோ, காமாக்கதிர்களை ஒழித்து..........’ என்ற ரேஞ்சில் ஒரு குறிக்கோளை உருவாக்கினால், சாமானிய ரசிகன் மண்டை காய்ந்துபோவான். நானே கூட’ காமா காமான்னு சொன்னாங்கய்யா..ஆனா ஒரு சீன்கூட இல்லை. என்ன படம் எடுக்காங்க’ என்று விமர்சனம் எழுதலாம். எனவே எளிமையான குறிக்கோளை உருவாக்குங்கள்.
அதற்காக ஹீரோ காலேஜில் படிக்கிறான். அரியர் இல்லாமல் டிகிரி முடிப்பதே அவன் குறிக்கோள் என்று வைத்தால், சப்பையாக இருக்கும். குறிக்கோள் என்பது புரிந்துகொள்ள எளிமையானதாக, அடைவதற்கு கஷ்டமானதாக இருக்க வேண்டும். ’ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுகிறான். (சரி, அதுக்கென்ன?) ஆனால் ஹீரோயினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. (அய்யோ..அப்புறம்)’ எனும் அஜித்தின் காதல் மன்னன் படத்தின் ஒன் லைனை இதற்கு உதாரணாமக் கூறலாம். ஹீரோன்னா ஹீரோயினை லவ் பண்ணத்தான் செய்வான் என்று எளிதாக புரிந்துகொள்ளவும் முடிகிறது. அதே நேரத்தில் அங்கே ஒரு பிரச்சினையும் பூதாகரமாக நிற்கிறது.

அரதப் பழசான குறிக்கோளாகக்கூட இருக்கலாம். ஆனால் அதைச் சுற்றி நீங்கள் எழுப்பும் தடைகளும், முரண்பாடுகளும் புதியதாக இருக்க வேண்டும்.

குறிக்கோளை நிறைவேற்றப் போராடும் ஹீரோவுக்கு அந்த குறிக்கோள் அத்தியாவசியமான தேவையாக இருக்க வேண்டும். இதை விரிவாகப் பார்ப்போம். மனிதனின் அடிப்படைத் தேவையாக உணவு, உடை, உறைவிடம் சொல்லப்படுகிறது. திரைக்கதை உலகிலும் சில அடிப்படைத் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை :
  • காதல்
  • செக்ஸ்
  • பாசம்
  • உயிர்பயம்/ தப்பிப்பிழைத்தல்
  • பணம்
  • அன்பிற்கு உரியவர்களை/நாட்டை காப்பாற்றுதல்
  • பழிக்குப் பழி
  • கௌரவம்

 இந்த தேவைகள் அனைத்துமே பார்வையாளனின் உனர்ச்சிகளுடன் எளிதில் ஒன்று கலக்கக்கூடியவை. எப்படி ஹீரோவுடன் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியமோ, அதே போன்றே குறிக்கோளுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு இந்த அடிப்படைத் தேவைகள் உதவும். சில உதாரணங்களைப் பார்ப்போம். 

பில்லாவின் கூட்டத்தை மொத்தமாகப் பிடிப்பதே பாலாஜி(பிரபு)வின் குறிக்கோள். அதற்கு ரஜினி(அஜித்) உதவுகிறார். இதோடு மட்டும் விட்டால், பெரிதாக ஈர்ப்பு ரசிகர்களுக்கு வராது. எனவே பாலாஜி(பிரபு) கேரக்டர் சாகடிக்கப்படுகிறது. இப்போது பில்லாவாக நடிக்கப்போனவர், தான் பில்லா அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதை நம்பாத போலீஸ் துரத்துகிறது. நம்பிய பில்லாவின் ஆட்களும் துரத்துகிறார்கள். ரன் லோலா ரன்!...உயிர்பயம், தப்பிப்பிழைக்க வேண்டிய தேவை அங்கே உருவாக்கப்படுகிறது. வெறுமனே குறிக்கோளுடன் ஹீரோ போவதற்கும், அடிப்படைத் தேவையுடன் குறிக்கோளை நோக்கிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா?

இப்போது இரண்டாம் உலகம். அங்கே ஹீரோ ஆர்யாவுக்கு அடிப்படைத் தேவை என்று ஏதும் இல்லை. ஹீரோயின் அனுஷ்கா செத்தாயிற்று. இனி உயிர்பயமோ, காதலோ. யாரையும் காப்பாற்றும் அவசியமோ எதுவும் இல்லை. உயிருள்ள பிணம் தான் அந்த ஹீரோ கேரக்டர். காதல் பூ பூக்க வைக்க, ஆர்யா முயற்சிக்க காரணமே அங்கே இல்லை. அது கடவுளின் பிரச்சினை. ஆர்யாவின் பிரச்சினை இல்லை. எனவே அது நம் பிரச்சினையும் இல்லை. யார் வீட்டு இழவோ தான்.

காதல் பூ பூக்க வைத்தால், இறந்து போன அனுஷ்காவை மீட்டுத் தருவேன் என்று கடவுள் சொல்லியிருந்தால், ஆர்யாவிற்கு ஒரு குறிக்கோள் கிடைத்திருக்கும். இரண்டாம்பாதி படத்திற்கும் உயிர் வந்திருக்கும்!

ஆகவே ஒரு குறிக்கோளை உருவாக்கும்போது, அதில் ஹீரோ வெற்றியடையாவிட்டால் ஹீரோவின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று ரிஸ்க்கிற்கு ஆளாகும்படி திரைக்கதை அமைக்க வேண்டியது அவசியம். ’வந்தால் மலை..’ ரேஞ்சில் ஒரு குறிக்கோளை ஹீரோவுக்கு கொடுத்தீர்கள் என்றால், பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது. செய் அல்லது செத்துமடி போன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயம். அது தான் ஹீரோவுக்குத் தேவையான மோட்டிவேசனைக் கொடுக்கும்.
அடுத்த வீட்டில் அண்டா திருடுவது கூட குறிக்கோள் தான். ஆனால் அடுத்த வீட்டுக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? அடுத்த வீட்டு அண்டா தான் வேணுமா? கிடைக்கலேன்னா என்ன ஆகும்? என்ன அடிப்படைத் தேவையை அங்கே உண்டாக்கலாம் என்று யோசித்தால், ஒருவேளை ஒரு பயங்கரமான கதை உங்களுக்குக் கிடைத்துவிடலாம்!

அடுத்த வாரம் சில வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்கள் எப்படி குறிக்கோளை அடிப்படைத் தேவையுடன் அமைத்து ஜெயித்தார்கள் என்று மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம். அதன்பின் ஒன்லைனின் மூன்றாவது அங்கமான வில்லனை நோக்கி நகர்வோம்.


(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. ஷோக்கா சொன்னியேபா!! நெக்ஸ்ட் பார்ட்டுக்கு வெயிட்டிங்!

    ReplyDelete
  2. தொடரை எளிமை நடையில் நீங்கள் தந்திருப்பது சிறப்பான ஒன்று

    ReplyDelete
  3. ///அடுத்த வாரம் சில வெற்றிகரமான திரைக்கதை////
    அடுத்த பதிவில், அதாவது அடுத்த வெள்ளி.. ஏன் வெள்ளிகிழமை லீவா?

    ReplyDelete
  4. தொடரும் விளக்கங்கள் நன்று!

    ReplyDelete
  5. தொடர் சிறப்பாக செல்கிறது...
    உதாரணங்கள் சொல்ல நீங்கள் தேர்வு செய்த படங்கள் மிக பொருத்தம்...

    எனக்கொரு டவுட்... அந்த படங்களை மனசில வச்சுட்டு உதாரணம் சொல்றிங்களா? இல்ல உதாரனத்திர்க்காக படத்தை தேடரிங்களா?

    ReplyDelete
  6. நல்ல விளக்கங்கள் தொடரட்டும் .

    ReplyDelete
  7. இந்தப் பதிவுல மொ.ரா க்கு கேக்றதுக்கு வேற கேள்வி கிடைக்கலியா :-)

    ReplyDelete
  8. @சீனு

    இதுக்கு என் கமெண்ட் எவ்வளவோ தேவலாம்! btw நேத்து ராத்திரி தூக்கத்தில் பிழையா போட்டுட்டேன்! வெள்ளிகிழமை வரவேண்டியது நம்ம பிட்னஸ் போஸ்ட், அண்ணனோடது ஞாயிறு, அது அடுத்த வாரம்! ஹி ஹி! ஸாரி!

    அப்புறம், "சூப்பரா எழுதுறீங்க"ன்னு செங்கோவி அண்ணனுக்கே நாம டார்ச் அடிக்கவும் முடியாதுல்ல, கேள்வி கேட்கவே தேவையில்லாத அளவுக்கு லெக்சர் பண்ணுறாரு, ஆனா அவரு உழைப்புக்கு பதில் மரியாதையா கமென்ட் பண்ணவும் வேணுமே!

    ReplyDelete
  9. //கோவை ஆவி said...
    ஷோக்கா சொன்னியேபா!! நெக்ஸ்ட் பார்ட்டுக்கு வெயிட்டிங்!//

    வெயிட் கரோ பாய்..ஆரஹ..ஆரஹ!

    ReplyDelete
  10. //r.v.saravanan said...
    தொடரை எளிமை நடையில் நீங்கள் தந்திருப்பது சிறப்பான ஒன்று//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  11. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    ///அடுத்த வாரம் சில வெற்றிகரமான திரைக்கதை////
    அடுத்த பதிவில், அதாவது அடுத்த வெள்ளி.. ஏன் வெள்ளிகிழமை லீவா?//

    உங்க அடுத்த கமெண்ட் பார்த்துத் தெளிந்தேன்..டிராஃப்ட்ல இருந்து வந்த பதிவு என்பதால், அப்படி இருக்கு!

    ReplyDelete
  12. // Subramaniam Yogarasa said...
    தொடரும் விளக்கங்கள் நன்று!//

    தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. //தமிழ்வாசி பிரகாஷ் said...
    எனக்கொரு டவுட்... அந்த படங்களை மனசில வச்சுட்டு உதாரணம் சொல்றிங்களா? இல்ல உதாரனத்திர்க்காக படத்தை தேடரிங்களா?//

    கருத்துக்குத் தான் படம் தமிழ்வாசி...படத்திற்கு ஏற்ற கருத்து இல்லை.

    ReplyDelete
  14. //தனிமரம் said...
    நல்ல விளக்கங்கள் தொடரட்டும் .//

    நன்றி நேசரே.

    ReplyDelete
  15. // சீனு said...
    இந்தப் பதிவுல மொ.ரா க்கு கேக்றதுக்கு வேற கேள்வி கிடைக்கலியா :-)//

    உங்களுக்கே இல்லியே சீனு!

    ReplyDelete
  16. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    @சீனு

    அப்புறம், "சூப்பரா எழுதுறீங்க"ன்னு செங்கோவி அண்ணனுக்கே நாம டார்ச் அடிக்கவும் முடியாதுல்ல, கேள்வி கேட்கவே தேவையில்லாத அளவுக்கு லெக்சர் பண்ணுறாரு, ஆனா அவரு உழைப்புக்கு பதில் மரியாதையா கமென்ட் பண்ணவும் வேணுமே!//

    புல்லரிக்குதுய்யா.

    ReplyDelete
  17. செங்கோவி அண்ணே மொ.ரா எனக்கிட்ட சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.. :-)))

    நல்ல எழுதுற உங்ககிட்ட போயி நீங்க நல்ல எழுதுறீங்கன்னு திரும்ப திரும்ப சொன்னா நீங்களே கண்ப்யுஸ் ஆகிற மாட்டீங்க :-)

    அப்புறம் மொ.ரா இந்த தொடர்ல உங்க இன்டலெக்சுவல் கெள்விகள தொடர்ந்து படிச்சிட்டு வாரேன்.. எப்படி இந்த தொடர எதிர்பார்கிறேனோ அதேபோல் இந்த தொடர்ல வர உங்க கேள்விகளையும் எதிர்பார்க்குறேன்.. நீங்க ஒரு (ஞா)யானப்பழம் :-)

    முந்தைய கேள்வி தங்கள் மனதை புண்படுத்தியிருக்காது.. ஒருவேளை படுத்தி இருந்தால் மன்னிச்சு :-)

    ReplyDelete
  18. @சீனு

    //முந்தைய கேள்வி தங்கள் மனதை புண்படுத்தியிருக்காது.. ஒருவேளை படுத்தி இருந்தால் மன்னிச்சு :-)//

    ஏன்யா திடீர்னு சீரியஸ் ஆகிட்டீங்க..நம்ம மூஞ்சிக்கு அது செட் ஆகாதுய்யா!

    ReplyDelete
  19. @சீனு
    "ஏன்யா திடீர்னு சீரியஸ் ஆகிட்டீங்க..நம்ம மூஞ்சிக்கு அது செட் ஆகாதுய்யா! " ரிப்பீட்டு!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.