டிஸ்கி: இந்த வாரம் ரம்ஜான் ஆரம்பிப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு இங்கே புதுப்படம் ரிலீஸ் ஆகாது; தியேட்டர்களுக்கு லீவ். எனவே புதுப்பட விமர்சனம் படித்துவிட்டு, திருட்டு சிடியில் பார்க்கும் அன்பர்கள் பொறுத்தருளவும்!
ஹாலிவுட்டில் படம் செய்ய ஹிட்ச்காக்குடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஹாலிவுட் போகும்முன் நச்சென்று ஒரு படத்தை பிரிட்டிஷ் சினிமாவுக்குக் கொடுப்போம் என்று முடிவு செய்தார் ஹிட்ச்காக். கதை மேல் இருந்த நம்பிக்கையால் அறிமுக ஹீரோ, பிரபலமில்லாத ஹீரோயினுடன் களமிறங்கி எடுத்த படம் The Lady Vanishes. அதுவரை பிரிட்டிஷ் சினிமாவின் வசூல் ரிகார்டை முறியடித்தது இந்தப் படம்.
ஹாலிவுட்டில் படம் செய்ய ஹிட்ச்காக்குடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஹாலிவுட் போகும்முன் நச்சென்று ஒரு படத்தை பிரிட்டிஷ் சினிமாவுக்குக் கொடுப்போம் என்று முடிவு செய்தார் ஹிட்ச்காக். கதை மேல் இருந்த நம்பிக்கையால் அறிமுக ஹீரோ, பிரபலமில்லாத ஹீரோயினுடன் களமிறங்கி எடுத்த படம் The Lady Vanishes. அதுவரை பிரிட்டிஷ் சினிமாவின் வசூல் ரிகார்டை முறியடித்தது இந்தப் படம்.
தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. காணாமல் போன ஒரு லேடியைத் தேடுவது தான் படத்தின் ஒன்லைன். பனிச்சரிவால் ஒரு ரயில் கிளம்புவது தடைபடுகிறது. அந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய ஹீரோயின் (Margaret Lockwood) மற்றும் பலரும் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். ஒரு வயதான லேடி மிஸ்.ஃப்ராய்(Dame May Whitty) மற்றும் ஹீரோ (Michael Redgrave)வை ஹீரோயின் அங்கே சந்திக்கிறார். வழக்கம்போல் ஹீரோவுடன் மோதல். அந்த ட்ரெய்னில் பயணம் செய்யும் இரு காமெடியன்களும் அங்கே தங்குகிறார்கள். அந்த இரவில் ஒரு கிடாரிஸ்ட் அங்கே கொலைசெய்யப்படுகிறார். அது யார் கவனத்திற்கும் வருவதில்லை.
அடுத்த நாள் ட்ரெய்ன் கிளம்பும்போது, மிஸ்.ஃப்ராய் தலையைக் குறிவைத்து மேலிருந்து போடப்பட்ட பூந்தொட்டி ஹீரோயின் தலைமேல் விழுகிறது. மிஸ்.ஃப்ராய் உதவியுடன், அந்த வலியோடு ட்ரெய்னில் ஏறும் ஹீரோயின் மயக்கமாகிறாள். விழித்துப் பார்த்தால் லேடியைக் காணவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் எல்லோரும் ‘நீ மட்டும் தான் வந்தாய்..லேடி யாரும் வரவில்லை’என்று சாதிக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் வந்த குழப்பமோ என்று ஹீரோயினே நம்பும் அளவிற்கு எல்லாரும் நாடகமாடுகிறார்கள். அதே ட்ரெய்னில் பயணிக்கும் ஹீரோ முதலில் ஹீரோயினை நம்ப மறுத்தாலும், பின்னர் நம்புகிறார். லேடிக்கு என்ன ஆனது என்பதை ஹீரோவும் ஹீரோயினும் இணைந்து கண்டுபிடிப்பதே மீதிப் படம்.
Ethel Lina White என்பவர் எழுதிய The Wheel Spins எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு Sidney Gilliat மற்றும் Frank Launder ஆகியோரால் எழுதப்பட்டது இந்தப் படத்தின் திரைக்கதை. ஹிட்ச்காக் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் ஆகும்போதே திரைக்கதை தயாராக இருந்தது. ஆனாலும் ஆரம்ப ஹோட்டல் சீகுவென்ஸையும், இறுதி கிளைமாக்ஸ் சீனையும் மாற்றி எழுதினார் ஹிட்ச்காக். நாவலில் அந்த லேடி ஒரு அப்பாவி என்று மட்டுமே வரும்; படத்தில் லேடி ஒரு நல்ல கேடியாக வருவார். அதே போன்றே ஹீரோயினுக்கு தலையில் அடிபடுவதும் நாவலில் கிடையாது; படத்தின் கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்தது அந்த சீன்.
இரண்டாம் உலகப்போருக்கான முஸ்தீபுகள் தொடங்கிய நேரம் அது. பிரிட்டிஷ் சென்சார், ஜெர்மனி பற்றி சினிமாக்களில் எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தார்கள். எனவே Secret Agent படம் போன்று வெளிப்படையாக ஜெர்மனியை வில்லன் நாடாக சித்தரிக்காமல் ‘ஒரு நாடு’ என்று பொத்தாம்பொதுவாக படம்பிடித்தார்கள்.
படத்தின் முதல் அரைமணி நேரம், அந்த ட்ரெய்னில் பயணிக்கப்போகும் பயணிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஹிட்ச்காக். கிரிக்கெட் பைத்தியங்களான இரு காமெடியன்களும் (Naunton Wayne & Basil Radford-பின்னாளில் பிரபலமான காமெடி ஜோடியாக ஆனார்கள்) தன் ரகசியக் காதலியுடன் பயணிக்கும் ஒரு பாரிஸ்டரும் எதிலும் இன்வால்வ் ஆக விரும்புவதில்லை. எனவே லேடி ஹீரோயினுடன் வந்தார் என்று தெரிந்தும் அவர்கள் பின்னர் வாய் திறப்பதில்லை. எதிலும் இன்வால்வ் ஆகும் ஜாலி கேரக்டராக அறிமுகம் ஆகும் ஹீரோ தான், ரயிலில் ஹீரோயினுக்கு உதவ முன்வருகிறார். முதல் அரைமணி நேரம் சீரியஸ்னெஸ் இல்லாமல், ஜாலியான பொழுதுபோக்குப் படமாகவே நகர்கிறது. எந்த கேரக்டர் என்ன மாதிரி ஆட்கள் என்று ஜாலியாகவே நமக்கு உணர்த்திவிட்டு, ரயிலில் அவர்களுடன் நம்மையும் ஏற்றுகிறார் ஹிட்ச்காக்.
அங்கே ஆரம்பிக்கிறது சஸ்பென்ஸ் விளையாட்டு. ஹீரோயினுடன் லேடி வந்ததை நாம் அறிவோம். எனவே ஹீரோயின் போன்றே நாமும் ‘எங்கே அந்த லேடியை’ என்று தேட வைத்துவிடுகிறார் ஹிட்ச்காக். ட்ரெய்னில் ஒரு மேஜிக் குரூப்பும் பயணம் செய்வது, லேடி மறைந்ததை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. வில்லனிடமே ஹீரோவும் ஹீரோயினும் உதவி கேட்டு சிக்கலில் மாட்டுவதும் சஸ்பென்ஸைக் கூட்டுகிறது. படம் முழுக்க வரும் நக்கலான, ஜாலியான வசனங்கள் தான் படத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருக்க வேண்டும். ‘நான் தான் மினிஸ்டருக்கு ப்ரைன் சர்ஜரி செய்த டாக்டர்’ என்று டாக்டர் சொல்ல, அதற்கு ஹீரோ ‘ஓ..Did you find anything?'என்று கேட்பது நக்கலோ நக்கல்.
சஸ்பென்ஸை எப்படி படிப்படியாக கூட்டிக்கொண்டு செல்வது என்பதற்குச் சிறந்த உதாரணம், இந்தப் படம். லேடி அறிமுகம் ஆகிறார் - மறைகிறார்-ஹீரோயினை யாரும் நம்பவில்லை-ஹீரோயின் தான் சொன்னது உண்மை என்று நிரூபிக்கிறார்-லேடி திரும்புகிறார்-ஆனால் அதே லேடி இல்லை-இப்போதும் ஹீரோயினை யாரும் நம்புவதில்லை-ஹீரோ நம்புகிறார்-தேடுகிறார்கள்-வில்லனிடமே உதவி கேட்கிறார்கள் என ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் கதையில் ஒரு திருப்பம் வந்துகொண்டே இருக்கிறது. எனவே தான் ரயிலைவிட படம் வேகமாகச் செல்கிறது.
எடிட்டிங் டெக்னாலஜியான Dissolve-ஐ கதைக்குப் பொருத்தமாக இதில் பயன்படுத்தியிருப்பார்கள். ஹீரோயின் தலையில் அடிபட்ட மயக்கத்தையும் குழப்பத்தையும் விளக்க, Dissolve பொருத்தமாக இருக்கும். மதுக்கோப்பையில் வில்லன் எதையோ கலந்து தர, அதைக் குடிக்காமல் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக்கொள்ளும் காட்சியை முடிந்தவரை விஷுவலாகவே கொண்டு சென்றிருப்பார் ஹிட்ச்காக். அந்த கோப்பைகளும் கேரக்டர்கள் போல் நடித்திருக்கும்.
பின்னாளில் ஹிட்ச்காக்கிற்கு பெரும் புகழ் வாங்கித்தந்த இரு படங்களின் விதை, அவருக்கே தெரியாமல் இங்கே போடப்பட்டிருக்கும். மந்திரவாதியை அடித்து, பாக்ஸில் போட்டு மூடிவிட்டு ஹீரோவும் ஹீரோயினும் அதன்மேல் அமர்ந்து பேசும் காட்சி வரும். அது பின்னர் Rope படத்தின் மெயின் தீம் ஆக ஆனது. அதே சீனில் பறவைகள் ஹீரோயினை அட்டாக் செய்வதாக வரும். அது ஹிட்ச்காக்கின் இன்னொரு மாஸ்டர்பீஸான The Birds படத்தின் தீம்.
படத்தின் ஹீரோ மைக்கேல் ஒரு நாடக நடிகராக இருந்தவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்க மிகவும் தயங்கியவர். ஆனாலும் ஹிட்ச்க்காக் கைபட்டபின், பிரபலமான ஹீரோவாக ஆனார். அதே போன்றே அதுவரை சுமாரான படங்களிலேயே நடித்துவந்த ஹீரோயின் மார்கரெட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது இந்தப் படம்.
வழக்கம்போல் படத்தின் அடிநாதமான சீக்ரெட்டை Maccuffin பாணியில் ஒன்றுமில்லாததாக ஆக்கியிருப்பார் ஹிட்ச்காக். நாவலை விஷூவலாக்க என்ன செய்ய வேண்டும், திரைக்கதையை விறுவிறுப்பு குறையாமல் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும், ஒவ்வொரு சீனிலும் எப்படி சுவாரஸ்யத்தைக் கூட்டுவது என்பதை இதுவரை எடுத்த படங்களின் மூலம் கற்றுத் தேர்ந்திருந்தார் ஹிட்ச்காக்.
எனவே பிரபல இயக்குநர் எனும் மரியாதையுடன் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் விதி அவரை மீண்டும் பிரிட்டிஷ் சினிமாவிற்கே கூட்டி வந்தது. அதுபற்றி அடுத்த படம் பற்றிய பதிவில் பார்ப்போம்.
Torrent Link: http://kickass.to/the-lady-vanishes-1938-bluray-720p-h264-t6593519.html
Youtube Link: http://www.youtube.com/watch?v=w1J0pUURCj8
Torrent Link: http://kickass.to/the-lady-vanishes-1938-bluray-720p-h264-t6593519.html
Youtube Link: http://www.youtube.com/watch?v=w1J0pUURCj8
சீன் பை சீன்...உன்னிப்பாக அவதானித்து,ஹிச்ட்ச்காக் படத்தைப் பிரித்து மேய்ந்து...நமக்காக...நன்று
ReplyDeleteடிஸ்கி.........எப்படியாவது(?)பார்த்து கமெண்டவும்!
ReplyDeleteகரெக்ட். திரைக்கதையில் ஹிட்ச்காக் மன்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர்களுக்குள் படபடப்பை ஏற்றுவது அவருக்குக் கைவந்த க(கொ)லை. இம்முறையும் சிறப்பாக நீங்கள் ரசித்ததை நாங்களும் உணர வெச்சுட்டீங்க உங்க எழுத்தால...
ReplyDelete//Subramaniam Yogarasa said...
ReplyDeleteடிஸ்கி.........எப்படியாவது(?)பார்த்து கமெண்டவும்!//
நல்ல படம்ன்னா பார்ப்பேன். மொக்கை என்றால் கண்டுக்காம விட்டுட வேண்டியது தான்.
@பால கணேஷ் நன்றி வாத்யாரே.
ReplyDeleteஹிட்ச்காக்கும் எனக்கும் ராசியே இல்ல செங்கோவி .
ReplyDeleteஉங்க விமர்சனம் படிக்கும் போதெல்லாம் உடனே படத்தபார்த்துடணும் நினைப்பேன் . ஆனா எதாவது ஒரு டிஸ்டர்பன்ஸ் வந்துகிட்டே இருக்கு .
@வானரம் . ஹிட்ச்காக் தப்பிச்சார்!
ReplyDeleteவாவ்.. ஹிட்ச்காக் சீரியஸ் - என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ரெடியாகுது போலிருக்கே.. அருமையான விமர்சனம் நண்பா!!
ReplyDeleteநீங்கள் போடும் ஒவ்வொரு ஹிட்ச்காக் படங்கள் டவுன்லோட் பண்ணியிருக்கிறேன். விரைவில் பார்க்க வேண்டும். நன்றி..
ReplyDelete//கோவை ஆவி said...
ReplyDeleteவாவ்.. ஹிட்ச்காக் சீரியஸ் - என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ரெடியாகுது போலிருக்கே.//
நீங்க ரொம்ப லேட்டு!
//வேடந்தாங்கல் - கருண் said...
ReplyDeleteநீங்கள் போடும் ஒவ்வொரு ஹிட்ச்காக் படங்கள் டவுன்லோட் பண்ணியிருக்கிறேன். விரைவில் பார்க்க வேண்டும். நன்றி..//
நன்றி கருண்..நேரம் இருக்கும்போது பாருங்கள்.
செங்கோவி said
ReplyDelete" ஹிட்ச்காக் தப்பிச்சார்"
ஆனா உங்க கிட்ட மாட்டிகிட்டாரே .