அதாகப்பட்டது... :
சன்னி லியோன் நடித்திருக்கிறார் எனும் ஒரே ஒரு செய்தியினால் எதிர்பார்க்கப்பட்ட படம். சோலாவாக ஜெய் ஹிட் அடித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவரும் இந்தப் படத்தை எதிர்பார்த்திருந்தார். என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.
ஒரு ஊர்ல..:
ஒரு நல்ல போன் வாங்க முடியாமல் கஷ்டப்படும் ஜெய், ஒரு ஐபோனை கண்டெடுக்கிறார். அந்த ஐபோனிற்கு வரும் ஒரு கால் அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார், கூடவே ஸ்வாதியுடன் காதலில் எப்படி வீழ்கிறார் என்பதே கதை.
உரிச்சா....:
படம் செம ரகளையாக ஆரம்பிக்கிறது. டைட்டில் போடும் முன்பே காமெடிப்பட்டாசு வெடிக்கிறார்கள். ஓல்டு மாடல் நோக்கியா போனை வைத்துக்கொண்டு ஜெய் கஷ்டப்படுவதும், அதிலிருந்து மீள ஒரு கொரியன் செட் வாங்கிவிட்டு ஊரையே ரணகளப்படுத்துவமாக முதல்பாதி முழுக்க காமெடியில் கலக்குகிறார்கள்.
ஸ்வாதி செட் ஆகாது என ஸ்வாதியின் ஃப்ரெண்டை ரூட் விடுவதும், அடுத்து ஸ்வாதியே ஜெய்க்கு கிடைப்பதும் ஜாலியான எபிசோட். இன்றைய மிடில் க்ளாஸ் இளைஞனின் லைஃபை இயக்குநர் அனுபவித்துச் சொல்லியிருக்கிறார். ஜெய்யின் அப்பாவித்தனமும் அதற்குச் சரியாக சூட் ஆகிறது. கீழே கிடந்த ஐபோனை திருப்பிக்கொடுப்போம் என்று ஜெய் போகும்போது, பிரச்சினை ஆரம்பிக்கிறது. பெரிய சிக்கலில் மாட்டிவிட்டார் எனும் சூழலில் இடைவேளை.
பெரிய ஆக்சன் த்ரில்லராக அடுத்து படம் மாறப்போகிறது என்று ஆவலுடன் உட்கார்ந்தால், சிக்ஸர் அடிக்க வேண்டிய இடத்தில் டக் வைத்து விளையாடுகிறார்கள். பெரிய வில்லனாக அறிமுகம் ஆகும் தயாளனையும் கொஞ்ச நேரத்தில் சப்பை ஆக்கிவிடுகிறார்கள். ரவி ஷங்கர் என்று படம் முழுக்க பில்டப் செய்யப்படும் மெயின் வில்லன், கிளைமாக்ஸில் வரும்போது இதற்கா இந்த பில்டப் என்று சலிப்பே வந்துவிடுகிறது. வில்லன்களிடம் சிக்கிய ஹீரோ பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், பதட்டமாக சென்னையைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே ஒழிய பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், அது தான்.
இயக்குநர் சரவண ராஜனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமரும், புதுமையாக காட்சிகளை அமைக்கும் திறமையும் இருக்கிறது. முதல்பாதிவரை ஒரு சூப்பர் ஹிட் படத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றியது. இரண்டாம்பாதியில் நம்மை சுற்றலில் விட்டதால், படம் ஓகே கேட்டகிரி என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நல்ல வலுவான வில்லனை இறக்கி, அடித்து விளையாடி இருக்கலாம். ஜாலியாக இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!
ஜெய்:
அப்பாவி வேடத்திற்கு ஜெய்யை விட்டால் பொருத்தமான ஆளில்லை. அவரது குரலும் அந்த கேரக்டர்க்கு பொருத்தமாக இருக்கிறது. கொடுத்த கேரக்டரை தன்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் கொரியன் செட்டை வைத்து அவர் ஊரையே கலக்குவதும், ஸ்வாதியின் அண்ணனுடன் டென்சனுடன் பேசும் காட்சியும் அருமை.
ஸ்வாதி:
நீண்டநாட்களுக்குப் பின் ஜெய்யுடன் சேர்ந்திருக்கிறார். க்ளோசப்பில் முகம் முத்திப்போனது தெரிந்தாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பு. இடைவேளைக்குப் பின் வழக்கமான லூசுப் பெண் ஹீரோயினாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் அவருக்கு இது நல்ல படம் தான்.
RJ பாலாஜி:
மனிதர் சரவெடி வசனங்களால் படம் முழுக்க பட்டாசு கொழுத்துகிறார். ‘கலாக்கா காலை மிதிச்ச மாதிரி’ போன்று வந்துவிழும் ஒன்லைன்களுக்கு தியேட்டரே அதிர்கிறது. வில்லன்கள் பிடியில் சிக்கியபின், அவர்களுக்கே ஃப்ரெண்ட் ஆவது ரகளை. (ஆனால் அது தான் படத்தின் சீரியஸ்னெஸ்ஸைக் குறைக்கிறது.) இனி அதிகப்படங்களில் நண்பன் கேரக்டரில் இவரைப் பார்க்கலாம்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பையாக முடியும் இரண்டாம்பாதி
- இப்படிச் செய்யலாமே என நாமே யூகிக்கிற விஷயங்களை ஜெய் செய்யாமல் விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் வந்து செய்வது. இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக ஹீரோ கேரக்டரைப் படைத்திருக்கலாம்
- ஸ்வாதியின் ஃப்ரெண்டில் சூசைடு அட்டெம்ப்ட் காமெடி அல்ல. அதற்கு ஜெய் & ஸ்வாதியும் பொறுப்பு. ஆனால் அதைக் காமெடியாக அப்ரோச் செய்ததை ரசிக்க முடியவில்லை
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- படம் முழுக்க வரும் காமெடி வசனங்கள் + பாலாஜி
- ஜெய் + ஸ்வாதி காதல் காட்சிகள்
- யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் இருந்து ஏனோ விலகிவிட, அறிமுக இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வினின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ஓகே தான்
- ஐ போனை வைத்து உருவாக்கப்பட்ட பாடல் காட்சி
- அண்ணனாக வரும் அருள்தாஸின் நடிப்பும் எம்.ஜி.ஆர் பற்றிய வசனங்களும்
பார்க்கலாமா? :
முதல்பாதிக்காவும் காமெடிக்காகவும் பார்க்கலாம்.
(அதுசரி, சன்னிலியோன் என்ன ஆச்சுன்னு கேட்கிறீங்களா? அடப்போங்கய்யா..வழக்கம்போல் குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)
(அதுசரி, சன்னிலியோன் என்ன ஆச்சுன்னு கேட்கிறீங்களா? அடப்போங்கய்யா..வழக்கம்போல் குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)அச்சச்சோ
ReplyDeleteநான்பார்ததுட்டேன்.முதல் பாதியில் இயக்குனர் திறமை பளிச்சிடுகிறது காதல் மற்றும் வசனங்கள் ரசித்தேன்
ReplyDeleteநானா யோசிச்சேன் பதிவுக்கு மட்டும் கமெண்ட் போடுகிறேன் என்று பொய்யுரை இட்ட செங்கோவியை வன்மையாக கண்டிக்கிறேன் .
ReplyDeleteசன்னி லியோனியை புடவை கட்டி ஆட விட்ட காரணத்தால் இந்த படத்தை அனைவரும் புறக்கணிப்புமாறு கேட்டு கொள்கிறேன் .கட்ட கடைசியாக என்னை நானே மக்கு என்று சுய விமர்சனம் செய்து கொண்ட பெருந்தன்மையை பாராட்டாமல் எள்ளி நகையாடும் செங்கோவிக்கு சன்னி லியோன் படம் காணும் பாக்கியம் கடைசி வரை கிட்டாது என சாபமிடுகிறேன் .
முக்கியமானதை விட்டுட்டு மத்ததெல்லாம் பாத்திட்டீங்க...
ReplyDelete//குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)//ஐ.. எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சுதே.. இதுக்காகவே ஒரு ட்ரிப் இந்தியா வந்துட்டு போங்க.. ஹஹஹா..
ReplyDelete//சன்னி லியோன் படம் காணும் பாக்கியம் கடைசி வரை கிட்டாது என சாபமிடுகிறேன் .//
ReplyDeleteவானரம், இந்த சாபம் கொஞ்சம் ஜாஸ்தி பா.. பாவம் செங்கோவி..
//Haja Mohaideen said...
ReplyDelete(அதுசரி, சன்னிலியோன் என்ன ஆச்சுன்னு கேட்கிறீங்களா? அடப்போங்கய்யா..வழக்கம்போல் குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)அச்சச்சோ//
அச்சச்சச்சச்சோ!
// r.v.saravanan said...
ReplyDeleteமுதல் பாதியில் இயக்குனர் திறமை பளிச்சிடுகிறது காதல் மற்றும் வசனங்கள் ரசித்தேன்//
கரெக்ட்.
வானரம் . said...
ReplyDelete//நானா யோசிச்சேன் பதிவுக்கு மட்டும் கமெண்ட் போடுகிறேன் என்று பொய்யுரை இட்ட செங்கோவியை வன்மையாக கண்டிக்கிறேன் . //
நான் இருக்குறேங்கிறதே அப்போத்தானே உங்களுக்கு ஞாபகம் வருது.
//செங்கோவிக்கு சன்னி லியோன் படம் காணும் பாக்கியம் கடைசி வரை கிட்டாது என சாபமிடுகிறேன் .//
ஓ..அது உங்க சாபத்தால் தான் அப்படி ஆச்சா? நீகுழாய் இருக்கக் கவலை ஏன்!
//ஸ்கூல் பையன் said...
ReplyDeleteமுக்கியமானதை விட்டுட்டு மத்ததெல்லாம் பாத்திட்டீங்க...//
ஆமாப்பூ..ஆமாம்.
//கோவை ஆவி said...
ReplyDelete//குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)//ஐ.. எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சுதே.. இதுக்காகவே ஒரு ட்ரிப் இந்தியா வந்துட்டு போங்க.. ஹஹஹா.//
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமான்னு இதுக்குத் தான் சொன்னாங்களோ!
முழு நீள காமெடியாவே எடுத்துட்டாங்களா! அப்ப, கண்டிப்பா பார்த்துடணும்! பாலஜியோட ரேடியோ பேச்சுக்கே நான் ரசிகன், அந்தாள்கிட்ட ஒரு யுனிக்னஸ் இருக்கு!
ReplyDeleteஅடச்சே, சன்னிலியோன் சாரி கட்டி பார்க்குற பாக்கியம் உங்களுக்கு இல்லாம போச்சே!
@மொ.ராசு (Real Santhanam Fanz ) முழுநீள காமெடி இல்லை..படம் முழுக்க காமெடி விரவிக்கிடக்கிறது!
ReplyDelete//சன்னிலியோன் சாரி கட்டி பார்க்குற பாக்கியம் உங்களுக்கு இல்லாம போச்சே!//
ஓ..அவங்க சாரி கட்டுற சீன் வேற இருக்கா? போச்சே, போச்சே!
ஸ்வாதி:சுப்பிரமணிய புரத்திற்குப் பின் ஜெய்யுடன் சேர்ந்திருக்கிறார். //யோவ் கனிமொழின்னு ஒரு படம் சாரி ஒரு காவியம் அதுல ஜெய்க்கு ஜோடி சுவாதி. வரலாறு மிகவும் முக்கியம்
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அது எப்படிய்யா, ஒரு குப்பைப்படம் விடாம தெரிஞ்சு வச்சிருக்கீரு!
ReplyDeleteமுதல்ல தப்ப ஒத்து கொள்ளுமைய்யா
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமுதல்ல தப்ப ஒத்து கொள்ளுமைய்யா//
சரிய்யா..எடிட் பண்ணிட்டேன். ஆனாலும் அந்த படத்துப்பேரை என் வாயால் சொல்ல மாட்டேன்.
/////செங்கோவி said...
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அது எப்படிய்யா, ஒரு குப்பைப்படம் விடாம தெரிஞ்சு வச்சிருக்கீரு!/////
அவரு குப்பை படம் மட்டும்தானே பார்ப்பாரு.....
சென்சார்ல கட் பண்ணா, என்ன நெட்ல பாத்து விமர்சனம் பண்ணும்யா..... எல்லாரும் அதுக்காகத்தான் வெயிட்டிங்........
ReplyDelete/////செங்கோவி said...
ReplyDelete@மொ.ராசு (Real Santhanam Fanz ) முழுநீள காமெடி இல்லை..படம் முழுக்க காமெடி விரவிக்கிடக்கிறது!
//சன்னிலியோன் சாரி கட்டி பார்க்குற பாக்கியம் உங்களுக்கு இல்லாம போச்சே!//
ஓ..அவங்க சாரி கட்டுற சீன் வேற இருக்கா? போச்சே, போச்சே!//////
அப்போ படத்துல ஓப்பனிங் சீன கட் பண்ணிட்டு க்ளோசிங் சீன் மட்டும்தான் வெச்சிருக்காங்களா?
"வானரம், இந்த சாபம் கொஞ்சம் ஜாஸ்தி பா.. பாவம் செங்கோவி"
ReplyDeleteஉங்களுக்கு தெரியாது ஆவி , உன் சமையல் அறையில் பட விமர்சனம் பார்த்ததில் இருந்து செங்கோவி மேல பயங்கர கோவம்.
ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஸ்னேஹா படம் வருதேன்னு ஆசை ஆசையாய் இவரு போட்ட பதிவ பார்த்தா ஸ்னேஹாவோட டீசென்டான ஸ்டில் ஒன்னோ கூட இல்ல .
இதே படத்துக்கு நம்ம சிபி சித்தப்பு போட்ட ஸ்டில்ல பாருங்க http://www.adrasaka.com/2014/06/blog-post_7504.
படத்துல இல்லேனாலும் கஷ்ட பட்டு தேடி ஸ்னேஹா ஸ்டில்ல போட்டிருப்பாறு.
செங்கோவி பிரபல பதிவரா இருந்துட்டு இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி .
விமர்சனத்துக்கு/விமர்சித்தமைக்கு நன்றி!நெ..............ல். வரும்,பார்ப்போம்.
ReplyDeleteஅச்ச்சச்சச்சச்ச்சோ.....ஆரம்பிச்சு இருவதாவது நிமிட் லயே சன்னி!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteநகைச்சுவை அதிகம்ன்னா வடகறிய பாத்துடலாம்...
ReplyDeleteவிமர்சனம் நன்று.
ஆமா சன்னியைப் பாக்கலையா... அடப்பாவமே...