Tuesday, July 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)

15. பாம் தியரி
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் விஷயம் ஏற்கனவே இந்த பதிவில் (http://sengovi.blogspot.com/2014/02/blog-post.html) பார்த்தது தான். இருப்பினும் அதை இந்த தொடரில் மீண்டும் சொல்வது அவசியம் என்பதால்..

ஓஷோவின் அறிவுரையை குறித்துக்கொண்டீர்கள் அல்லவா? இப்போது சஸ்பென்ஸ் திரைக்கதை மன்னன் ஹிட்ச்காக் சொன்ன முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
சஸ்பென்ஸ் எனும் வார்த்தையை நாம் பொதுவாக தவறான அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். ஒரு விஷயம் நமக்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டால், ‘ரொம்ப   சஸ்பென்சா கொண்டுபோயிருக்கான்யா’ என்று சொல்கிறோம். ஆனல் அது சஸ்பென்ஸ் அல்ல, சர்ப்ரைஸ். நாம் பொதுவாக இரண்டையும் ஒரே பொருளிலோ அல்லது மாற்றி மாற்றியோ தான் உபயோகிக்கிறோம்.

தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் ’பாம் தியரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இரு நபர்கள் டேபிளின் அருகே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் டேபிளுக்குக் கீழே ஒரு பாம் வைக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அது அவர்களுக்கும் ஆடியன்சுக்கும் தெரியாது. திடீரென பாம் வெடிக்கின்றது. ஆடியன்ஸ் சர்ப்ரைஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் பாம் வெடிக்கும்வரை, இது ஒரு வழக்கமான சாதாரண சீன் தான். ஆடியன்ஸ் மனதில் எந்த எதிர்பார்ப்பையும் விளைவுகளையும் உண்டாக்காத சாதாரண சீன் அது

இப்போது இப்படி வைத்துக்கொள்வோம். ஆடியன்ஸுக்கு பாம் வைக்கப்பட்டிருப்பது ஏற்கனவே தெரியும். வில்லன் வந்து பாம் வைக்கும் சீனை இதற்கு முன் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கும் அது தெரியாது. இன்னும் கால்மணி நேரத்தில் பாம் வெடிக்கும் என்பதையும் ஆடியன்ஸ் அறிவார்கள். ஆனால் அதை அறியாமல் அந்த இருவரும் கேசுவலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஆடியன்ஸ் மனநிலையை யோசித்துப்பாருங்கள். ’அட வெண்ணை வெட்டிகளா, கீழே பாம் இருக்குடா. எந்திரிங்கடா என்று பதறுவார்கள். அதே சீன் தான். அதே வழக்கமான உரையாடல்தான். ஆனால் ஆடியன்ஸும் இந்த சீனில் பங்குபெறுகிறார்கள். இது தான் சஸ்பென்ஸ். என்ன ஆகப்போகிறதோ எனும் ஆவலுடன் கூடிய தவிப்பில் ஆடியன்ஸ் சிக்கிக்கொள்கிறார்கள்.

முதல் உதாரணத்தில் ஆடியன்ஸுக்கு நாம் பாம் வெடிக்கும் 15 செகண்ட்ஸ் சர்ப்ரைஸ் மட்டுமே கிடைக்கிறது. இரண்டாவது உதாரணத்தில் 15 நிமிட சஸ்பென்ஸ் ஆடியன்ஸுக்கு கிடைக்கிறது.
இது தான் பாம் தியரி. இதை நாம் இன்னும் டெவலப் பண்ணுவோம். முதல் உதாரணத்தில் பாம் இருப்பது அவர்களுக்கும் தெரியாது, படம் பார்க்கும் நமக்கும் தெரியாது. இரண்டாவது உதாரணத்தில் நமக்கு மட்டும் பாம் இருப்பது தெரியும். இப்போது மூன்றாவது கேஸை எடுத்துக்கொள்வோம்.

ஹீரோ வீட்டில் பாம் வைக்க, நண்பனாக நடிக்கும் வில்லனின் அடியாள் வருகிறான். டேபிளின் கீழே பாம் வைக்கிறான். அப்போது ஹீரோ வந்துவிட, கேஷுவலாக பேச ஆரம்பிக்கிறார்கள். ஹீரோ நண்பனையும் உட்காரச் சொல்லி பேசிக்கொண்டே போகிறான். இப்போது பாருங்கள், நம்முடன் சேர்ந்து அந்த நண்பன்(?) கேரக்டரும் பதறிக்கொண்டிருக்கும். இண்ட்ரஸ்ட்டிங்?

நான்காவது கேஸ். வில்லனின் இடத்தில் ஹீரோவும் நண்பனும் வைக்கிறார்கள். வில்லன் வரும் நேரம். 15 நிமிடத்தில் வெடிக்குமாறு செட் செய்யப்பட்ட பாம் அது. அவர்கள் வெளியேற நினைக்கும்போது, வில்லன் ஒரு போலீஸ் ஜீப்பில் வந்திறங்குகிறான். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கைகுலுக்கு நன்றி சொன்னபடியே ‘வாங்க சார்..டீ சாப்பிட்டுட்டுப் போகலாம்’ என்று வில்லன் அழைக்கிறான்.

இங்கே பாம் டிக்..டிக்..டிக். இன்ஸ்பெக்டர் மறுக்க, வில்லன் வற்புறுத்த, உள்ளே இருக்கும் இருவருக்கும் பீதியாகிறது. வெளியே ஓடினால் போலீஸ், உள்ளே இருந்தால் பாம்! இந்த கேஸில் உள்ளே இருக்கும் இருவருக்குமே பாம் இருப்பது தெரிகிறது. நமக்கும் தெரிகிறது. இது சீரியஸ் படத்தில் மட்டுமின்றி, காமெடி படத்திலும் வரலாம்.

இங்கே பாம் என்பது தான் முக்கியமான தகவல். அந்த தகவலை யாருக்கும் சொல்லாமல் கதாசிரியர் மட்டுமே வைத்திருந்தால், ஒருவிதமான அனுபவம் பார்ப்போருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை கேரக்டர்களுக்கும் தெரியப்படுத்தும்போது, வேறுவிதமான அனுபவம் கிடைக்கிறது. ஒரு கதையை எழுதும்போது, உங்கள் கையில் இருப்பது தகவல்கள். அதில் எதையெல்லாம் ஆடியன்ஸ்க்கு முதலிலேயே சொல்லப்போகிறோம், எந்த ஆர்டரில் சொல்லப்போகிறோம் என்பது தான் முக்கியம்.

சர்ப்ரைஸ்க்கு உதாரணமாக முதல்வனில் வரும் பாம் வெடிக்கும் சீனை எடுத்துக்கொள்ளலாம். அம்மா-அப்பாவுடன் ஹீரோ இருக்கும்போது ஹீரோக்கு ஃபோன் வருகிறது. சிக்னல் கிடைக்கவில்லை என்று வெளியே வருகிறார். நாமும் வழக்கமான சீன் தான் என்று அசுவராஸ்யமாக உட்கார்திருக்கையில்பூம்’!. அது தான் ஹீரோவையும்அரசியல்வாதியாக ஆக்கும் நிகழ்வு. ஹீரோ அந்த அதிர்ச்சியை உணரும் அதே நேரத்தில் ஆடியன்ஸும் உணர வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்துள்ளார். எனவே அது சர்ப்ரைஸாக வருகிறது

சமீபத்தில் வந்தஇவன் வேற மாதிரியில் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயினை வில்லன், திருஷ்டி பொம்மை ஆக்கி 20 மாடி பில்டிங்கில் உயரத்தில் கட்டிவிடுகிறான். அங்கே வந்து ஹீரோ தேடும்போது, நமக்கு ஹீரோயின் இருக்கும் இடம் தெரிகிறது. ‘டேய்..அங்க தாண்டா இருக்கா..நல்லா பாருடாஎன்று மனதுக்குள் நாம் கதறுகிறோம் அல்லவா? அது தான் சஸ்பென்ஸ் காட்சியின் ஸ்பெஷாலிட்டி.

நீங்க தூங்கிடக்கூடாதுன்னு...இந்த குண்டு
தனுஷ் நடித்த நய்யாண்டி படத்தில் ஒரு சீன் வரும். ஹீரோவின் அண்ணன் சுமனுக்கு முதலில் ஒரு பெண் பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். பின்னர் சில வருடங்கள் கழித்து, சுமன் அந்தப் பெண்ணையே மணப்பது என்று முடிவு செய்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஃபோன் செய்வார். அந்தப் பெண்ணே கைக்குழந்தையுடன் வந்து எடுப்பார்அவருக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பிறந்துவிட்டது என்று நாம் புரிந்துகொள்கிறோம்.

ஆனால் சுமன் அதை அறியாமல் பேசிக்கொண்டே செல்கிறார். இது ஒரு நல்ல நகைச்சுவையாக வந்திருக்க வேண்டிய சீன். கைக்குழந்தையை முதலில் காட்டாமல் சுமன் வழிந்து முடியும்போது குழந்தையைக் காட்டலாம். அல்லது சுமன் பேசும் டயலாக்கிற்கு ஈடுகொடுத்து அப்பாவியாக அந்தப் பெண் பேசிக்கொண்டே செல்வது போல் காட்டலாம். ஆனால் சவசவ என்று எடுத்திருப்பார்கள். அந்த சீனை மீண்டும் பாருங்கள். எப்படி மாற்றலாம் என்று யோசியுங்கள்.

ஒரு கொலை நடக்கிறது. ஹீரோ அதை துப்பறிகிறார் என்பது உங்கள் கதையாக இருக்கலாம். கொலையாளி யார் என்பதை ஆடியன்ஸுக்குச் சொல்வதா வேண்டாமா? சொன்னால் சுவாரஸ்யம் கூடுமா? கதையில் வரும் வேறு யாருக்கெல்லாம் இது தெரியலாம்? அப்படி மற்ற கேரக்டர்களுக்குத் தெரிவது சுவாரஸ்யத்தைக் கூட்டுமா, குறைக்குமா? (உதாரணம், காமெடியனுக்குத் தெரியும், ஆனால் பயத்தால் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.)

ஹீரோ ஹீரோயினைக் காதலிக்கிறான். ஆனால் அவள் ஹீரோ குடும்பம் வெறுக்கும் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்தவள். இந்த தகவலை ஆடியன்ஸ்க்கு ஹீரோயின் அறிமுகம் ஆகும்போதே சொல்லலாமா? ஹீரோவின் காதலை ஏற்றுக்கொண்டவுடன் சொல்லலாமா? முன்னது சஸ்பென்ஸ், பின்னது சர்ப்ரைஸ்.

ஓஷோவின் அறிவுரையும் ஹிட்ச்காக்கின் பாம் தியரியும் கதை-ஒரு சீன் – திரைக்கதை ஆகிய மூன்றுக்குமே அப்ளை ஆகக்கூடியவை. நம் கையில் இருக்கும் தகவல்களையும் கேரக்டர்களையும் வைத்துக்கொண்டு , நாம் ஆடும் சதுரங்க விளையாட்டே திரைக்கதை எழுதுதல்!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

  1. மிக்க நன்றிணா!! சஸ்பென்ஸ்க்கும் சர்ப்ரைசுக்கும் இருக்க வேறுபாட்ட,உங்களவிட எளிமையா யாராலயும்விளக்கமுடியாது.உங்க இந்த தொடர் முடியறப்போ,எவ்ளோ பேரு ,கதையும் திரைக்கதையும் எழுதிட்டு,சினிமா சான்ஸ்க்கு அலையப்போறாங்களோ தெரில!!!

    ReplyDelete
    Replies
    1. //சஸ்பென்ஸ்க்கும் சர்ப்ரைசுக்கும் இருக்க வேறுபாட்ட,உங்களவிட எளிமையா யாராலயும்விளக்கமுடியாது.// அதைச் சொன்னது நானில்லை, ஹிட்ச்காக். :)

      Delete
  2. ஏற்கனவே படிச்சதுதான்னுட்டு இன்னும் கொஞ்சம் உதாரணம் செர்துருக்கற மாதிரி தெரியுதே.....
    btw //தனுஷ் நடித்த நய்யாண்டி படத்தில் ஒரு சீன் வரும். ஹீரோவின் அண்ணன் சுமனுக்கு ///
    அது சுமனில்லை, ஸ்ரீமன்னு நெனைக்கிறேன்.. :-)
    அந்த மொக்க படத்த நா பார்க்கல..

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்திலும் இதே தவறைச் செய்தேன்.

      Delete
  3. ஒவ்வொரு நிகழ்வையும்/காட்சிகளையும் வெவ்வேறு கோணங்களில் எப்படி அமைக்கலாம் என்று,உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்,நன்று!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் பெரியவா ஆசீர்வாதம்.

      Delete
  4. செம சுவாரஸ்யம்..... குண்டு தேவையே இல்லை... :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்பை..அப்போ நானே வச்சுக்கறேன்.

      Delete
  5. அருமையான உதாரணங்கள்! சினிமா ஆர்வமில்லாத என்னையும் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது! தொடருங்கள்!

    ReplyDelete
  6. சுவராஸ்யமா விளக்குகிறீர்கள் செங்கோவி...

    ReplyDelete
  7. சுவராஸ்யமா விளக்குகிறீர்கள் செங்கோவி...

    ReplyDelete
  8. கலக்குறீங்க.... சில வருடங்களா படித்தாலும், அதிகம் பின்னூட்டம் இட்டதில்லை.... ஆனாலும் செம்ம டீடெயிலிங், எளிமையா சூப்பரா இருக்கு... அட போட வைக்கும் படியா...

    ReplyDelete
  9. நான் அதிகம் பின்னூட்டம் இட்டதில்லை,... இருப்பினும் ரெகுலராக படிக்கும் ஆள்... அசத்திறீங்க

    ReplyDelete
  10. ஆனா,ஹிட்ச்காக் தமிழ்ல எங்க கிட்ட சொல்லலியே!அப்படியே சொன்னாலும்,திரைக்கதை யுக்தி தெரிஞ்ஞவங்களுக்கு வேனும்னா புரிஞ்சிருக்கலாம்!!!சாமான்ய மெக்னேஷ்களுக்கு புரிய வாய்ப்பிலைனு நினைக்கிறேன்ணா

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.