Monday, November 21, 2011

அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?

உஸ்ஸ்ஸ்...அப்பப்பா..மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..’இந்தம்மா வந்தாலே இப்படித்தான்..ஏன் தான் இப்படிப் பண்ணுதோ?’ அப்படீங்கிற மாதிரி டயலாக்ஸ் திரும்பவும், திரும்பின பக்கமெல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு. ‘அம்மா திருந்திட்டாங்க’ன்னு சந்தோசமா சர்ட்டிஃபிகேட் கொடுத்த பலரும், திருதிருன்னு முழிக்க வேண்டிய நிலைமை..

உண்மையில் ஜெ.ஆட்சியில் சந்தோசமாய் வாழ முடியாதா?...முடியும்..நிச்சயம் முடியும்..அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை? அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம், வாருங்கள்.

நம்பிக்கை :
மனுசனுக்கு தும்பிக்கையைக் கொடுக்காத ஆண்டவன், நம்பிக்கையைக் கொடுத்தான். ஏன்..ஏன்..ஏன்? நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை. வேப்பங்காய் எப்படி இனிக்கும்? இந்தம்மா எப்படி நல்லது செய்யும்?-னு நினைக்கிறது தான் உங்களோட அடிப்படைப் பிரச்சினை. முதல்ல நீங்க அம்மையை நம்பணும். அதிமுககாரங்க மாதிரி அவங்க என்ன பண்ணாலும் அது சரியாத் தான் இருக்கும்னு நினைக்கணும்.

‘இவங்களுக்கு நம்ம கஷ்டம் புரியப்பொறதும் இல்லை..திருந்தப்போறதும் இல்லை’ன்னு ஒரேயடியா முடிவு பண்ணிடக்கூடாது.

ஜென் ல ஒரு தியான வழிமுறை உண்டு..என்னன்னா ஈரச்சட்டையைப் போட்டுக்கிட்டு, இமயமலைல நின்னுக்கணும். மனசுல ’சுத்திலும் ஹீட்டா இருக்கு’-ன்னு தீவிரமா நினைக்கணும். அப்படி நினைக்கிறது மூலமா, பாடி அதாவது உடம்பு ஹீட்டாகி சட்டையே காஞ்சிடணும்..அப்படிச் செய்றவன் தான் நல்ல சீடன்.

அதே மாதிரி தான் நீங்களும் செய்யணும்..நேரா பால்கனிக்குப் போங்க..உள்பக்கமா காலைப் போட்டுட்டு, வெளிப்பக்கமா உடம்பைப் போட்டு தலைகீழாத் தொங்குங்க.(பெண்கள் இதைத் தவிர்க்கவும்) இப்போ மனசுல ‘அம்மா நல்லவங்க..நல்லது தான்

செய்வாங்க’ன்னு திரும்பத் திரும்ப தீவிரமா நினைங்க..அது உங்க ஆழ்மனசுல பதிஞ்சிருச்சுன்னா, நீங்க தான் நல்ல தமிழ்க் குடிமகன்.

மீடியா:
உங்க சந்தோசத்தைப் பறிக்கிறதுல முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த மீடியாக்கள் தான்..ஜெ.ஆட்சி வந்தாச்சுன்னா சண்டிவி, கலைஞர் டிவி, முரசொலி போன்ற எதிர்க்கட்சி ஊடகங்களை பார்க்கவே பார்க்காதீங்க. ஜெயா டிவி மட்டும் பாருங்க..’தமிழ்நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுது’ன்னு சொல்வாங்க. கேட்கவே சந்தோசமா இருக்கும். என்ன ஒன்னு, தமிழ்நாட்டுல பூகம்பமே வந்தாலும் அசராம முதல்ல அம்மா அறிக்கையைத் தான் படிப்பாங்க..அதை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கணும்.

அப்புறம் விகடன், துக்ளக் மாதிரி அம்மாவுக்கு சொம்படிக்கிற பத்திரிக்கைகளைப் படிங்க..இப்போக்கூடப் பாருங்க..பால்விலை-மின்கட்டணம்-பஸ் கட்டணம் மூணையும் உயர்த்த முன்னாடி அவ்ளோ யோசிச்சாங்களாம்..’இப்படி ஏத்துறமே, மக்கள் கஷ்டப்படுவாங்களே’ன்னு அம்மைக்கு ஒரே கவலை. அதிகாரிங்க, மந்திரிங்கல்லாம் ’வேற வழியே இல்லைம்மா..கடும் நிதிநெருக்கடி’ன்னு எடுத்துச் சொன்னாங்களாம்..விகடன்ல போட்டிருக்காங்க..அறிவிச்சப்புறம் அம்மை மூணுநாளா சரியாச் சாப்பிட்டிருக்க மாட்டாங்க போல..இப்படி எந்த முதல்வர் இருப்பாங்க சொல்லுங்க..கேட்கவே பெருமையா இல்லை?

அதைவிட்டுட்டு, முரசொலி மாதிரி பத்திரிக்கைகளைப் படிச்சீங்க, தொலைஞ்சீங்க.’கடும் நிதிநெருக்கடியா? அப்போ ஏன் இந்தா இருக்கிற பெங்களூருக்கு ஹெலிகாப்டர்ல போனாரு? ட்ரெய்ன்ல போக வேண்டியது தானே?”-ன்னு ஆரம்பிச்சு நாறக்கேள்வி கேட்பாங்க..நீங்களும் படிச்சுட்டு ‘அதானே’-ன்னு டென்சன் ஆகிடுவீங்க..இது தேவையா?

அதனால அடுத்த நாலரை வருசத்துக்கு ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் போதும் நமக்கு!

துணிச்சல் :
அம்மையாரோட மற்ற குணநலன்களை அப்பப்போ நினைச்சுக்கிறதும், அவங்களைப் பத்தி நல்லபடியா நினைக்க உதவும். உதாரணமா அவங்களோட துணிச்சலை நினைச்சுக்கோங்க..’தைரியலட்சுமி’ன்னு சூப்பர் ஸ்டாரே பாராட்டுனதையும் ஞாபகத்துல

வைங்க. இந்த மாதிரி துணிச்சலான முதல்வர் ஆட்சியில் வாழறதை நினைச்சு, உங்க உள்மனசு பெருமைப்படும்.

கலைஞர் ‘அய்யோ..கொல்றாங்களே’ன்னு கத்துனமாதிரி அம்மையாயர் ஏன் அப்பப்போ ‘அய்யோ...புலிகள் கொல்லப்போறாங்களே’ன்னு கத்துறாங்க?...தைரியலட்சுமி ஏன் இந்தியால இருக்கிற பெங்களூருக்குப் போக பல அடுக்குப் பாதுகாப்பு கேட்டாங்க? ஏன் கோர்ட்டுக்குப் போக பயந்துக்கிட்டு 108(?) வாய்தா வாங்கி வாய்தா ராணி-ன்னு ஏன் பேர் வாங்குனாங்க? - இப்படியெல்லாம் யோசிச்சீங்கன்னா நல்லாவே இருக்க மாட்டீங்க..திரும்பவும் போங்க பால்கனிக்கு!

அறிவுஜீவி :
பொதுவா வெள்ளையா இருக்கிறவன் புத்திசாலின்னு ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. அதைத் தீவிரமா நம்ப வேண்டிய நேரம் இது. கலைஞர் மாதிரி அம்மையார் தற்குறி இல்லே..கலைஞர் மூணாப்பு தான் படிச்சிருக்காரு (9ஆம் வகுப்புன்னும் சொல்வாங்க..SSLC ஃபெயில்னும் சொல்வாங்க).ஆனால் அம்மையார் கான்வெண்ட் படிப்பை முடிச்சவர்..அதனால இவர் தானே பெரிய புத்திசாலி.

’அப்போ டிகிரி படிச்ச வைகோ - ராமதாஸ் மாதிரி ஆட்கள் அம்மையாரைவிட புத்திசாலியா?.ஹே..ஹே’-ன்னு சிரிக்கக்கூடாது. ’ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது, அனுபவமே நல்ல ஆசான்’-ன்னு கேள்விப்பட்டதில்லையா நீங்க?
சோ, இப்படி ஒரே நேரத்தில் படிப்பின் பெருமையை பறைசாற்றுபவராகவும், கல்வியின் கையாலாகாத்தனத்தை உணர்த்துபவராகவும் இருக்கும் ஒரே முதல்வர் நம் அம்மையார் தான்..அவர் காலத்தில் நாம் வாழ்வதே நமக்குப் பெருமை.(இப்படீல்லாம் யோசிக்கணும்..அப்போத் தான் மனசு ஆறுதல் ஆகி கெக்கேபிக்கே-ன்னு நாலரை வருசத்தை ஓட்டமுடியும்.)

தாயுள்ளமும் கருணையுள்ளமும் கொண்ட அம்மையார் ஏதாவது செய்கிறார் என்றால், அதில் ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கும் என்று இப்போதாவது கொஞ்சமாவது நம்புகிறீர்களா? அந்த நம்பிக்கையை இப்போ அப்ளை பண்ணுவோம்...

பால்விலை :
ஏன் அம்மையார் பால்விலையைக் கூட்டியிருப்பார்?..ம்.....

ஒரு பாட்டில் தண்ணி விலை பன்னெண்டு ரூபாய்..(எங்க..எங்க-ன்னு பறக்க்க்கூடாது..நான் சொன்னது டாஸ்மாக் தண்ணியை இல்லை..மினரல் வாட்டர்)..தண்ணி இந்த ரேட்ல வித்தா, பால்ல தண்ணி கலக்குற பால்காரங்களுக்கு எப்படிக் கட்டுபடியாகும்?..அதனால் தான் கூட்டிட்டாங்களோ?

அப்புறம், அழகு கெட்டுப்போகும்னு சில பெண்கள் தாய்ப்பால் தர்றதில்லை..ஆவின் பால் தான்..அவங்களை திருத்தறதுக்காகத் தான் அம்மையார் தாயுள்ளத்தோட பால்விலையைக் கூட்டியிருப்பாங்களோ?

காபி, டீ குடிச்சு பலபேரு உடம்பைக் கெடுத்துக்கறாங்க..அதை நிறுத்தறதுக்காக, பால் விலையை உயர்த்தி இருக்கலாம், இல்லியா?

பஸ் கட்டணம் :
நாட்டுல சின்னப் பசங்களுக்குக் கூட சர்க்கரை வியாதி மாதிரி பல பிரச்சினைகள்..காரணம் சரியான உடற்பயிற்சி இல்லை..காலையில் நடந்தாலே போதும்னு டாக்டர் சொன்னாலும் யாரும் கேட்கறதில்லை..அதான் டாக்டர்.ஜெயலலிதா தீவிரமா யோசிச்சு பஸ் டிக்கெட்டை கூட்டிட்டாங்க..

நாம நடக்கணும்..நல்லா இருக்கணும்-னு நினைக்கிற ஒரு நல்ல உள்ளத்தை பழிக்கிறது சரியான்னு உங்க மனசாட்சிகிட்டயே கேட்டுக்கோங்க..

‘பஸ் கட்டணத்தை சாயந்திரம் அறிவிச்சுட்டு, நடுராத்திரியே அமுல்படுத்திட்டாங்களே..செய்தி மக்களை சென்றடையவாவது டைம் கொடுக்க வேண்டாமா? முதல்நாள் மக்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?’-ன்னு சில பொறாமைபிடிச்ச எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க..என்ன அநியாயம்யா..ஒரு முதல்வர் விரைந்து செயல்படுவதைப் பாராட்ட மனசில்லைன்னாலும், திட்டாமலாவது இருக்கலாமில்ல? பிரதமர் மாதிரியே செயல்படாத முதல்வரா அம்மையாரை ஆக்கிடலாம்னு பார்க்கிறீங்களா?

மக்கள் நலப் பணியாளர்கள் :
அடுத்து, மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு ஒரே ரகளை. இந்தப் பதிவை இதுவரைக்கும் படிச்ச உங்களுக்கு, மண்டைல பல்பு எரிஞ்சு, ஏன் தூக்குனாங்கன்னு புரிஞ்சிருக்கும்..புரியாத ஆட்கள் மட்டும் அடுத்த பத்தியைப் படிங்க..

திமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

55 comments:

 1. இண்டைக்கு பதிவு போடுற நேரம் வசமா சிக்கிட்டார் மாம்ஸ்.

  ReplyDelete
 2. வேப்பங்காய் எப்படி இனிக்கும்? இந்தம்மா எப்படி நல்லது செய்யும்?-னு நினைக்கிறது தான் உங்களோட அடிப்படைப் பிரச்சினை.//

  பின்னீட்டீங்க போங்கோ!

  ReplyDelete
 3. அப்புறம் விகடன், துக்ளக் மாதிரி அம்மாவுக்கு சொம்படிக்கிற பத்திரிக்கைகளைப் படிங்க.//

  டோட்டலி டமேச்

  ReplyDelete
 4. //கலைஞர் மூணாப்பு தான் படிச்சிருக்காரு (9ஆம் வகுப்புன்னும் சொல்வாங்க..SSLC ஃபெயில்னும் சொல்வாங்க).ஆனால் அம்மையார் கான்வெண்ட் படிப்பை முடிச்சவர்..அதனால இவர் தானே பெரிய புத்திசாலி.//

  போதும் மாஸ் என்னால சிரிப்பை அடக்க முடியல

  ReplyDelete
 5. அப்ப விஜய் அதிமுக ல சேர மாட்டாரா? (நீ திருந்தவே மாட்டியா வரோ)

  ReplyDelete
 6. பாஸ் உங்க பதிவை படிச்ச்சதும்தான் ஆத்தா எம்புட்டு நல்லவங்கன்னு புரியுது.

  ReplyDelete
 7. சந்தோசத்தையும் ஒரு ரேட் போட்டு ஏத்திட்டாங்களே அம்மா

  ReplyDelete
 8. இந்தப் பதிவு நானா யோசிச்சேன்ல வர வேண்டியது போல தெரியுது....

  ReplyDelete
 9. \\திமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்?\\ ஆஹா.... எனக்கு பல்பு எரியாமப் போச்சே......

  ReplyDelete
 10. \\அதிமுக ஆட்சியில் சந்தோசமாய் இருப்பது எப்படி?\\ ஹோட்டல் சாப்பாட்டிலும் ஆரோக்கியமாக இருப்பது எப்படிங்கிற மாதிரி இருக்கு... :(

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. இந்த வஞ்ச புகழ்ச்சி வஞ்ச புகழ்ச்சின்னு

  சொல்றாங்களே அதுக்கு அர்த்தம் என்ன நண்பரே .


  கடினமான வேலைப் பளுவிலும் வித்தியாசமான சிந்தனை தான்

  ReplyDelete
 13. மஞ்சள் துண்டு ஆட்சி.... ஐயோ சாமி.... அம்மாவே பரவாயில்லை.... அம்மா ஆட்சி......ஐயையோ தாங்க முடியலை மஞ்சள் துண்டே மேல்.... அடுத்து மஞ்சள் துண்டு ஆட்சி.... ஐயோ உசிரே போகுதே .... அடுத்து மீண்டும் அம்மா..... ஓட்டுக்கு பணம், இலவசம், டாஸ்மாக், கொள்ளை......இந்த மீளாத்துயரில் இருந்து தப்பிக்க தமிழனுக்கு வழியே இல்லையா? குத்து.... குத்து.... குத்து.... இது கும்மாங் குத்து.... குத்து.... சுத்து... சுத்து... சுத்து... நீ வாங்கி கிட்டே சுத்து......

  ReplyDelete
 14. அம்மாவை வழிக்கு கொண்டு வர ஒரு வழி எனக்குத் தோணுது. தமிழ் நாட்டிலுள்ள மொத்த குடிமகன்களும், டாஸ்மாக்கை ஒரு வாரத்துக்கு புறக்கனிப்போம்னு ஒரே ஒரு அறிக்கை விட்டா போதும், அம்மா அடுத்த நாளே எல்லாத்தையும் வாபஸ் வாங்கிடுவாங்க.

  ReplyDelete
 15. அப்புறம், அழகு கெட்டுப்போகும்னு சில பெண்கள் தாய்ப்பால் தர்றதில்லை..ஆவின் பால் தான்..அவங்களை திருத்தறதுக்காகத் தான் அம்மையார் தாயுள்ளத்தோட பால்விலையைக் கூட்டியிருப்பாங்களோ?//

  ROFL

  ReplyDelete
 16. //அதனால அடுத்த நாலரை வருசத்துக்கு ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் போதும் நமக்கு!

  ///

  அது மட்டுமில்ல செங்கோவி அண்ணன் பிளாகும் இருக்கு...

  ReplyDelete
 17. ஆயிரம் சொல்லுங்க அம்மா அம்மாதான்.. ஐயா ஐயா தான்.. அய்யா அய்யா தான், அப்புறம் அம்ம்மா அம்ம்மாதான்... நீங்க நீங்கதான் நாங்க நாங்கதான்...

  ReplyDelete
 18. அண்ணே...
  இன்னிக்குத்தான் பாத்து இருக்கேன்...
  வாழுக!
  :)
  #புரிஞ்சவந்தான் பிஸ்தா............

  ReplyDelete
 19. இரவு வணக்கம்,பொன் சுவார்!!!எல்லாத்துக்கும் காரணம் "மனசு" தாங்க.ஐயா வந்திருந்தாக் கூட விலைய ஏத்தித் தானிருப்பாரு.இப்போ குய்யோ,முறையோன்னு கத்துறது "அவங்க"முறை,அம்புட்டுத்தேன்!வாயக்கட்டி,வவுத்தக்கட்டி(உங்கள சொல்லல!)வாழப் பழகிக்கட்டுமே,என்ன நாஞ் சொல்லுறது?

  ReplyDelete
 20. தமிழ்வாசி பிரகாஷ் said... இந்தப் பதிவு நானா யோசிச்சேன்ல வர வேண்டியது போல தெரியுது.////ஆமாமா,அப்போத் தானே நாலு பிகருங்க ஸ்டில்லு......................!

  ReplyDelete
 21. ////அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை?////

  அண்ணே வேலில போன ஓணானை தூக்கி மடியில விட்ட கதையாப் போச்சுதுல்ல...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

  ReplyDelete
 22. அடுத்த பேசிக்ஸ் ஆப் பைபிங் எங்க பாஸ்?

  ReplyDelete
 23. நல்ல பகடி...சிரித்தால் எல்லாம் சரியாப் போகும்..நல்லா எழுதியிருக்கிங்க.தலை கீழா நின்னாலும் இந்தம்மாவை மாத்தமுடியாது ... நாமளாவது தலை கீழ நின்னு மாறுவோம்னு சொன்ன இடத்தில்தான் செங்கோவி நிக்கிறாரு.

  ReplyDelete
 24. அப்பு said... [Reply]நாமளாவது தலை கீழா நின்னு மாறுவோம்னு சொன்ன இடத்தில்தான் செங்கோவி நிக்கிறாரு.////எப்புடி,தலை கீழாவா?????????

  ReplyDelete
 25. சூப்பரண்ணே! எத்தனை பேரோட அறிவுக்கண்ணை மானாவாரியா திறந்துட்டீங்க!! :-)

  ReplyDelete
 26. >>>>>மொக்கராசு மாமா said... [Reply]
  ஆயிரம் சொல்லுங்க அம்மா அம்மாதான்.. ஐயா ஐயா தான்.. அய்யா அய்யா தான், அப்புறம் அம்ம்மா அம்ம்மாதான்... நீங்க நீங்கதான் நாங்க நாங்கதான்...<<<<<

  ஒரே பதிவுல மொக்கராசு மாமாவ இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துடீங்களே! :-)

  ReplyDelete
 27. கடைசியில மக்கள் நலப்பணியாளர்களை வேலைய விட்டு தூக்கினதுக்கு கண்டுபிடிச்சீங்க பாருங்க ஒரு காரணம்... 100% கரெக்ட்.

  ReplyDelete
 28. உங்களுக்கு நல்ல humor sense ங்க..

  ஜென் தத்துவம் சூப்பர்.

  சிரிச்சு மாளலை.
  தமிழ்நாட்டு மக்களோட கதி இப்படி சிரிப்பா சிரிக்கறத நினைச்சா..

  (பால்கனிக்கு ஓடறேங்க.. தாளாலை.)

  வாழ்த்துக்கள்.
  God Bless You.

  ReplyDelete
 29. எப்போதும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள் நாம் தான் செங்கோவி...

  உங்கள் பதிவு அருமை. அதிலும்...

  திமுக ஆட்சில மக்கள் நலமா இல்லை..அதனால அவங்களை நலமானவர்களா ஆக்கறதுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டாங்க. இப்போ அதிமுக ஆட்சில மக்கள் நலமாத் தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா மக்கள் நலப் பணியாளர்கள்?

  இது சூப்பர்

  ReplyDelete
 30. நம்ம கடையில் அடுத்த பதிவும் போட்டாச்சு....
  http://www.rahimgazzali.com/2011/11/vijayakanth-and-people.html

  ReplyDelete
 31. உள்ளேன் ஐயா!
  நடத்துங்க!

  ReplyDelete
 32. டைட்டிலை படிக்கும்போதே கும்மப்போறீங்கன்னு ஐ நோ

  ReplyDelete
 33. வொரே பதிவுலே என்ன ஃபீல் பண்ண வெச்சுடியே அண்ணாத்தே!
  பாரு அம்மா எவ்ளோ நல்லது பண்ணுது.
  இந்த எதிர்கச்சி, மீடியாகாரங்கதான்பா பேஜாரு பண்றாங்க!
  அப்பாலிகா, யெளயராஜா (யெ, ள தனித்தனியா படிங்க!) ரக்மான் அம்மாவபத்தி பாட்ன பாட்ட தபா தபா கேட்டா ரொம்ப மனசு யெதமா இர்க்கும்பா!
  அதுலேயும் பர்டிகுலரா...
  ஹே அம்மா அம்மா அம்மா....
  ஹெ அம்மா!!!(கடைசியா அந்த திகில் குரலோடு முடியும் பாரு, அதான் டாப்பு)

  ReplyDelete
 34. "அம்மானா சும்மா இல்லடா..."

  ReplyDelete
 35. நல்ல ஆர்டிகிள்..'எதுக்கும் நீங்க இருக்குற ஊர்லே PR இல்லை சிட்டிசன்ஷிப் வாங்கிடுறது நல்லது..ன்னு நினைக்குறேன்..' இப்புடி பதிவெல்லாம் போட ஆரம்பிச்சாக்க பலவிதத்திலும் இது நல்லது..ஏன்னா அம்மா ரொம்ம்ப நல்லவுங்க..

  ReplyDelete
 36. முதல்ல போய் தினமலர் படிங்கையா! அதுக்கு முன்னால மத்த பாயின்டெல்லாம் ஜூஜூபி!

  ReplyDelete
 37. பேசாம பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் டாக்டர்.புட்டி பால் மாதிரி ஆகிடப் போறேன்... எந்த டென்ஷனும் இல்ல

  ReplyDelete
 38. இந்த வாரம் ஜெயை பற்றி கிண்டல் செய்து வந்த பதிவு படைப்புகளில் உங்கள் படைப்பு மிகவும் தரமாகவும் நக்கல் நிறைந்தாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் சக பதிவாளரே

  ReplyDelete
 39. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 40. தலை...நம்ம பதிவுல உங்களை சொல்லிருக்கேன்.....தொடரவும்...

  ReplyDelete
 41. வணக்கம் மாப்பிள,வணக்கம் அபையோரே!

  அரசியல்ல எங்களுக்கு அம்மாவை தவிர வேறு ஒருவரையும் தெரியாதுன்னு இருந்திட்டா போச்சு..!!ஹி ஹி ஹி

  ReplyDelete
 42. JJ is a like child specialist. Dr. takes the kids into confidence with sweet talk, free chocolates and promises no injection/bitter tonic etc..And when the kid believes totally then suddenly out of nowhere, Dr. gives the injection. Kid will cry for few hours with parents/grand parents pacifying it by scolding the Dr.

  ReplyDelete
 43. ஹா ஹா ஹா.. சிரிச்சுகிட்டே அல வேண்டியது தான்.. :-)

  ReplyDelete
 44. நாம செத்து செத்து விளையாடலாம் வர்றீங்களா? (ஆட்சி மாறி மாறி)

  ReplyDelete
 45. வணக்கம்...

  இலங்கையில் இருந்து இயங்கும் வணக்கம் செய்தி இணையத் தளத்தின் இன்றைய வலைப்பதிவு அறிமுகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தாங்களின் பதிவுத் தளம் அலங்கரிக்கின்றது என்பதை மிகவும் மன மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

  http://www.vanakkamnet.com/

  ReplyDelete
 46. இரண்டு மனோபவம் இருந்தா எதையும் சமாளிக்கலாம் 1. சிரிப்பாக, 2. சிந்தனை

  சிரிப்பு:
  இந்த கஷ்டம் எல்லம் இன்னும் 1 வாரத்திற்க்கு தான்...!

  அப்புறம்...?

  பழகிபோய்டும்..!?!?

  சிந்தனை :
  கிறித்த உள்ளூர் கட்சிகாரரை கட்சி கொடியுடன் உங்களுடன் வந்து போராட்டதில் கலந்து கொள்ள செய்யாவேண்டும் அல்லது நாட்டாமை பாணில ஊரவிட்டு ஒதுக்கிவைக்கனும்.

  ReplyDelete
 47. Not to missed out.Out of thousands of MLM companies, we are one ofonly 200 to be granted membership into the prestigiousDirect Selling Association (DSA).We are also honored to be members of the DirectSelling Educational Institute in Dubai (DSEI).www.tourtalkfusion.com/1279531

  ReplyDelete
 48. Not to missed out.
  Out of thousands of MLM companies, we are one of
  only 200 to be granted membership into the prestigious
  Direct Selling Association (DSA).

  We are also honored to be members of the Direct
  Selling Educational Institute in Dubai (DSEI).

  www.tourtalkfusion.com/1279531

  ReplyDelete
 49. அட போங்க பாஸ் இதொட விஜயகாந்த் எப்போ முதலமைச்சர் ஆகுற நிலமைக்கு வருகிரா அப்பொதான் ஓட்டு போட வேண்டும். அவரும் ஒன்னும் பன்ன போறதில்லை அனால் பார்போமே

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.