Wednesday, November 23, 2011

மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த இளம்பதிவர்(!) கிஸ்ராஜா (K.S.S.Rajh)-க்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு...


மழலை உலகம் மகத்தானது_பகுதி-1














சாரி...18+.....!!!









மழலை உலகம் மகத்தானது_பகுதி-2:
மழலைகளைப் பற்றிய பதிவென்றால், அவர்களை எப்படி வளர்ப்பது, எப்படிக் கவனிப்பது என்று எழுதவே தோன்றுகிறது. அதைவிடவும் சுவாரஸ்யமாய் இருப்பது, தற்கால குழந்தைகளின் கவனிப்புத்திறன் தான்..

எனது ஒன்றரை வயது மகனைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு பீரோவைத் திறப்பதை ஒருமுறை பார்த்துவிட்டால், அடுத்து அவனே அதைச் செய்துவிடுகிறான். எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்டில் கீழே புத்தக செல்ஃபும் உண்டு.அதை கண்ணாடிக் கதவால் பூட்டிக்கொள்ள முடியும். அதைப் பூட்ட சாவி கிடையாது. கொஞ்சம் நுணுக்கமான ப்ளாஸ்டிக் லாக் தான். அதை தெரியாமல் ஒருமுறை அவன்முன் திறந்து மூடி விட்டேன். முடிந்தது கதை. அடுத்த 5 நிமிடங்கள் போராடி, அதைத் திறந்துவிட்டான்.

இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் “அதாவது பரவாயில்லைங்க..ஒருதடவை என் மொபைல் கீழே விழுந்து மூடி,பேட்டரி, மொபைல் என மூன்றாகப் பிரிந்துவிட்டது. அதை என் பையன் முன்னாடி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.பிடிச்சது வினை..இப்போ கொஞ்சம் அசந்தா, என் மொபைலை எடுத்து தரயில ஒரே போடு..மூணாப் பிரிஞ்சதும் அவனாவே ஃபிக்ஸ் பண்ணிட்டு ‘அப்பா..இந்தா’-ன்னு பெருமையாத் தர்றான்..” என்றார்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை இப்போது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்..
எனது மகன் ஒரு வயது வரை இந்தியாவில் இருந்தான்..அங்கே அவனுடன் விளையாட குழந்தைகள் கூட்டம் அதிகம். கூட்டாஞ்சோறு சாப்பிடும் ஆசையில் அப்போதே தானே சாப்பிடவும் பழகிக்கொண்டான்..எப்போதும் விளையாட்டு, சுறுசுறுப்பு..அவனை இங்கே அழைத்து வரும்போது, எங்களுக்கே கவலையாக இருந்தது. ‘இங்கே வந்து அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறானோ’ என்று.

ஏனென்றால் இங்கே வளரும் குழந்தைகள், தாயின் இடுப்பை விட்டு இறங்குவதே இல்லை. 2 வயது தாண்டியபின்னும் சொந்தமாக எதையுமே செய்ய முடியாத் சவலைப்பிள்ளைகளாகவே இந்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் வளர்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் உடன் விளையாட யாரும் அற்ற நிலைமை தான்..ஒரு அப்பார்ட்மெண்ட்டில் எப்படியும் 3-4 குழந்தைகள் உள்ளன. அவர்களை ஒன்றாக விளையாட விட்டாலே போதுமானது. அதைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பது தான் சோகம்.

இதுபற்றி ஒருவரிடம் கேட்டபோது ‘எங்க ஃப்ளோரில் இருக்கிறவங்க ரொம்ப டீசண்டானவங்க. அமைதியா இருப்பாங்க..நம்ம குழந்தைங்க கத்துனா நியூசென்ஸா இருக்கும்..இதென்ன நம்ம ஊரா? அதான் பையனை கண்டிச்சு வளர்க்கிறோம்..சத்தம் போடவே மாட்டான்..வெரி காம்..டீசண்டா இருக்கணும், இல்லியா?’ என்றார். ‘டீசண்டா; இருக்கிறோம்ங்கிற பேரில் குழந்தைகளை அடக்குவது சரியா? குழந்தைகள் என்றால் சத்தம் போட்டு விளையாடத்தானே செய்யும்? அப்படியென்றால் எல்லாக் குழந்தைகளுமே இண்டீசண்ட் தானா?’ என மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன.

விளையாடுவதற்கு குழந்தைகள் இல்லாத நிலையில், குழந்தையை குழந்தையாகவே வைத்திருக்க பெற்றோரும் குழந்தை போல் விளையாடுவது அவசியம் ஆகிறது. தினமும் ஆஃபீசில் இருந்து வந்தபின் குறைந்தது ஒரு மணிநேரமாவது மகனுடன் விளையாட வேண்டியுள்ளது. சினிமா பாட்டுக்கு மகனும் நானும் டான்ஸ் ஆடுவதில் ஆரம்பித்து விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாடி முடிப்போம். 
எங்கள் குழந்தை விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு தாயும் ‘மனமிரங்கி’ தன் மகனை என் மகனுடன் விளையாட அனுமதித்திருக்கிறார். ஆனாலும் பிற குழந்தைகளின் உலகம், அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோளிலுமே முடிந்து போகிறது. ‘இண்டீசண்ட்’ பேச்சு வாங்கியபின், யாரிடமும் ‘குழந்தையை விளையாட விடுங்க’ என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.

’சம்பாதிக்க வேண்டும், நம் லைஃப் ஸடைல் மாற வேண்டும், வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும்’ என பெரிய பெரிய குறிக்கோள்களுடன் வெளிநாட்டிலும் சிட்டிகளிலும் வாழ்கிறோம். அந்த குறிக்கோள்கள் நியாயமானவை தான். அதற்காக மழலைகள் உலகத்தை ஒரு அறைக்குள் சுருக்குவது சரிதானா? நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா?’ என்ற கேள்வியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது. 


----------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தப் பதிவைத் தொடரும்படி குழந்தைகள் மேல் பிரியம் உள்ள அனைத்துப் பதிவர்களையும் அழைக்கிறேன்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

  1. போட்டோக்கள் அருமை

    ReplyDelete
  2. ///ஏனென்றால் இங்கே வளரும் குழந்தைகள், தாயின் இடுப்பை விட்டு இறங்குவதே இல்லை. 2 வயது தாண்டியபின்னும் சொந்தமாக எதையுமே செய்ய முடியாத் சவலைப்பிள்ளைகளாகவே இந்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் வளர்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் உடன் விளையாட யாரும் அற்ற நிலைமை தான்..ஒரு அப்பார்ட்மெண்ட்டில் எப்படியும் 3-4 குழந்தைகள் உள்ளன. அவர்களை ஒன்றாக விளையாட விட்டாலே போதுமானது. அதைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பது தான் சோகம்.///

    ஒரு செய்தியாளன் அல்லது பத்திரிகையாளன் புதிதுபுதிதாகத் தலைப்புக்களில் எழுதுவதே அவ‌னுடைய திறனை மேம்படுத்தும்.குழந்தைகளைப் பற்றி உங்கள் மகவை வைத்துத் துவங்கியது இயல்பானதே.

    முதலில் குழந்தைக்கும்,உங்களுக்கும் ,உங்கள் இனியபாதிக்கும் என் வாழ்த்துக்கள்.

    என் 2வது பெண் பாஸ்டன் யு எஸ் ஏ,மூன்றாவது பெண் பெர்க்ஷைர் யு கே லண்டன்.இருவருமே குழந்தைகளின் இத் தனிமை வளர்ப்பினை அனுபவித்து
    உள்ள‌னர்.

    யு எஸ் ஏ பேரன் தனக்கு அமெரிக்கச் சிறார்களைக் கண்டு பிடித்து விளையாடத் துவங்கி விட்டான்.

    யுகே பேத்தி அரிப்புத் தாங்கமல் அவளுக்கு ஒரு தம்பியைப் பெற்று விளையாடக் கொடுத்துவிட்டார்கள் என் மூன்றவது பெண்ணும் மாப்பிள்ளையும்.அவனுடைய சிரிப்பை இங்கே காணுங்கள்.

    http://www.youtube.com/watch?v=13zdfZQVk4E

    ReplyDelete
  3. கடைசி போட்டோ ரெம்ப க்யூட்..
    ரெம்ப ரெம்ப அழகான பையன்..
    ( நம்ம செங்கோவி அண்ணனும் உப்புடிதான் இருப்பாரோ..??!!)

    ReplyDelete
  4. வித்யாசமான கோணத்தில் பகிர்ந்திருக்கீங்க. நன்றி செங்கோவி.

    ReplyDelete
  5. மழலையர் உலகம் மடியினில் சுருங்கிற்றென்ற உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

    ReplyDelete
  6. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. குழந்தை மனங்களையும் பார்க்க வேண்டும்- சூப்பர்.

    ReplyDelete
  7. //// நாம் ஓடி விளையாடி, மண்ணில் புரண்டு அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா?’ என்ற கேள்வியே நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது. ////

    இப்பவாவது ஓரளவு இருக்கின்றது இனிவரும் காலங்களில் முற்றாக இல்லாமல் போய்விடும் இது மிகவும் கலையான விடயமே

    ReplyDelete
  8. உங்க பையன் க்யூட்
    துஷி சொன்னமாதிரி நீங்களும் இப்படிதன் இருப்பீங்களோ.....

    அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  9. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..தொழில்நுட்பப் புரட்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை இப்போது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்..

    ReplyDelete
  10. பையன் சூப்பரா இருக்கான்! :-)
    என்ன உங்க படத்தைப் பார்க்க முடியல! :-(

    ReplyDelete
  11. //இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது//
    உண்மை! எங்க வீட்டிலும் அக்காவோட வாண்டு ஒண்ணு இருக்கு! :-)

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Nice...
    Nanum ungalai thoder
    pathivukku
    kuppittu irukken......

    ReplyDelete
  14. படம் மிக அழகு. சுத்தி போட சொல்லுங்க.

    ReplyDelete
  15. ஏங்க வீட்டுக்கு ஏங்க அக்காவோடஒன்னரை வயது சுட்டி வந்திருக்கு அதனால தான் நாலைஞ்சு நாளா இணையப்பக்கம் அதிகமா வர முடியல.இங்கயும் பல சுட்டிகள் வலம் வந்துக்கிட்டு இருக்காங்க(தொடர் பதிவு)
    .
    நீங்க சொல்றது சரிதான் அண்ணே நான் வேலைக்கு கிளம்பும் போது வண்டி சாவி எடுத்து கொடுக்குது ,ஹெல்மட்டை காட்டி தலையை காட்டி சைகை செய்யுது.ஆச்சர்யம் தான் ஒரே ஒரு நாள் கிளம்பும் போது ஹெல்மெட் போட்டுக்கிட்டு டா டா சொன்னேன்,அடுத்த நாள் இப்படியெல்லாம் அமர்க்களம்.வீடே நிறைஞ்சிருக்கு.மனசும்.உங்க பதிவை பார்த்ததும் இன்னும் கொஞ்சம் கூடுதலா./
    அப்புறம் குட்டியண்ணன் செம க்யூட்.

    ReplyDelete
  16. காலை வணக்கம்,பொன் ஜூர்!!!அருமையான ஆதங்கம்.வெளி நாடு என்றால் கொஞ்சம் முன்னே,பின்னே இருக்கவே செய்கிறது.வேலைக்குப் போகும் தம்பதிகளுக்கு இந்தப் பிரச்சினை கொஞ்சம் குறைவு தான்!ஏனெனில்,குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வதால் கலந்து விடுவார்கள்,குழந்தைகள்!குழந்தைகள்படம் மிக அழகு!பையன்..ம்..ம்..ம்..ம்...!

    ReplyDelete
  17. குழல் இனிது யாழ் இனிது என்று சொல்பவர்கள் போல உங்கள் அண்டை வீட்டார்கள்.
    // ‘இண்டீசண்ட்’ பேச்சு வாங்கியபின், யாரிடமும் ‘குழந்தையை விளையாட விடுங்க’ என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.//
    குழந்தகளின் சத்தத்தை இண்டீசன்ட் என்று கூறிய இவர்கள் மனிதர்களே இல்லை, நண்பா!
    ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா அப்படீனு முண்டாசுக்கவி சொன்னது பாப்பாக்களுக்கு அல்ல இந்த முண்டங்களுக்குதான்.

    ReplyDelete
  18. பையன் மிக அழகாக இருக்கிறான். சுற்றிப் போடுங்கள்.

    இதுவரை திருமணம் ஆகாததால் மழலை விடயத்தில் நேரடி அனுபவம் இல்லை. இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளாக வளருமளவிற்கு வாழ்க்கையின் ஏற்றத்
    தாழ்வு அனுபவங்களை அறிந்து வளருவார்களா என்பது சந்தேகமே. கம்ப்யூட்டர், வீடியோ கேம்
    என்று விளையாடுவதால் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டுப் பிற்காலத்தில் பல நோய்களுக்கு
    ஆட்படும் வாய்ப்புள்ளது. பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய விடயமிது.

    ReplyDelete
  19. இந்தப் பதிவைத் தொடரும்படி குழந்தைகள் மேல் பிரியம் உள்ள அனைத்துப் பதிவர்களையும் அழைக்கிறேன்.//என்ன வில்லத்தனம்?மற்றபடி பதிவு அருமை. டெம்ப்ளேட் கமென்ட் இல்லை

    ReplyDelete
  20. மகத்தான உலகம் பற்றிய மணியான பதிவு.

    ReplyDelete
  21. /////இந்தத் தலைமுறைக் குழந்தைகள் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பதாகவே தோன்றுகிறது..இப்போதே இப்படி என்றால், வரும்காலத்தில் நமக்கே பாடம் சொல்லித் தந்து ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா’ போல் ஆவது நிச்சயம் தான்../////

    இது நிதர்சனம் அண்ணே... கண்டிப்பா இப்புடி நடக்கும்..எங்கப்பா என் வயதில் செய்யாத வேலைகளை நான் செய்கிறேன், நான் செய்யாத பல வேலைகளை பிற்காலத்தில் எனது குழந்தை செய்யும்...புத்திசாலித்தனம் ன்னு சொல்றத விட, கிடைக்கும் எக்ஸ்போஷர்தான் காரணம்ன்னு நா நெனைக்கிறேன்..

    ReplyDelete
  22. அப்புறம் உங்க பையன் ரொம்ப க்யூட்,,, தங்கமணி அக்கா கிட்ட சொல்லி திட்டி சுத்தி போட சொல்லுங்க...

    ReplyDelete
  23. வணக்கம் மாப்பிள!
    உங்கள் பதிவைப்பற்றி நாங்கள் சொல்லித்தான் தெரிய வேணுமா??

    மகனின் படங்கள் அழகு.. உண்மையாகவே சுத்திப்போடுங்கள்..!!

    ReplyDelete
  24. //தினமும் ஆஃபீசில் இருந்து வந்தபின் குறைந்தது ஒரு மணிநேரமாவது மகனுடன் விளையாட வேண்டியுள்ளது. சினிமா பாட்டுக்கு மகனும் நானும் டான்ஸ் ஆடுவதில் ஆரம்பித்து விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாடி முடிப்போம்.//
    குழந்தையுடன் விளையாடுவதால் வேலைசெய்த சோர்வு, மன அழுத்தம்போன்றவை நீங்கி எமக்கும் ஒரு புத்துணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  25. குழந்தைகள் எப்பொழுதும் நம்மை அழ வைபதில்லை .........

    நானும் என் குழந்தை பற்றி எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் என் பதிவுக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் http://pidithavai.blogspot.com/2011/11/blog-post_24.html

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.