Friday, June 15, 2012

முருக வேட்டை_14


“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

சரவணன் பாய்ந்து போய், அந்த கிஃப்ட் பார்சலைப் பிடுங்கினான்.



”என்ன அவசரம்?” என்றாள் கவிதா.

சரவணன் அதைக் கவனிக்காமல், வேக வேகமாக பார்சலுக்கு உள்ளே பார்த்தான்.

உள்ளே சின்ன வால்கிளாக் இருந்தது.

10:22 என்று பீப்..பீப் என்ற மெல்லிய ஒலியுடன் டைம் காட்டியது.

சரவணன் வேகமாக திருப்பிப் பார்த்தான். பின்பக்கம் சின்ன கறுப்புக்கலர் பிளாஸ்டிக் பாக்ஸ் போன்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. பின்பக்க பிளாஸ்டிக் மூடியைப் பிரித்தான்.

உள்ளே சிவப்பு, பச்சை வயர்களுடன் டைம் பாம் மின்னியது. சரவணன் முன்பு பெற்ற பயிற்சியை நினைத்துக்கொண்டபடி, சிவப்பு வயரை அறுத்தான்.

கடிகாரம் பீப் என்ற ஒலியுடன் நின்றது.

கவிதா” என்னங்க இது? என்ன நடக்குது?” என்றாள்.

“ஒன்னுமில்லைம்மா..சும்மா..பாண்டியன் ஒரு போட்டி வச்சான்..ஒரு விளையாட்டு..நீ வீட்டுக்குப் போ..நான் அப்புறம் சொல்றேன்” என்று அவளை அனுப்பி விட்டு, அந்த கிஃப்ட் பார்சலுடன் ஆஃபீஸ் நோக்கி விரைந்தான்.

ஆஃபீசில் நுழைந்ததும் பாண்டியனின் இடத்தை நோக்கி ஓடினான் சரவணன்.

தன் சீட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் வேகமாக வரும் சரவணனைப் பார்த்து, எழுந்து நின்றான்.

சரவணன் வரும்போதே அந்த கிஃப்ட் பார்சலை பாண்டியனின் முகத்தில் எறிந்தான். பாண்டியன் நிலைதடுமாறும்போது, ஓடி வந்து பாண்டியன் மீது பாய்ந்தான்.

இருவரும் கட்டி உருள, ஆபீஸே ரணகளமானது. ரங்கசாமியும் பிறரும் ஓடி வந்து இருவரையும் பிரித்துவிட்டனர்.

அகிலா தன் ரூமில் இருந்து ஓடி வந்தாள்.

“என்னாச்சு? என்னாச்சு?” என்றாள்.

சரவணன் மூச்சிறைத்தபடி, “மேம், இவன் என் வைய்ஃபை டைம் பாம் வச்சு கொல்லப் பாத்திருக்கிறான் மேம்..இவனை முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க” என்ரான்.

அகிலா “டைம் பாமா?” என்றபடி பாண்டியனைப் பார்த்தாள்.

அவன் அமைதியாகச் சிரித்தபடி “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மேம், “என்றான்.

“ஒன்னுமில்லையா...மேம், இதோ பாருங்க” என்றபடி சரவணன் அந்த கிஃப்ட் பார்சலைக் கொடுத்தான்.

”அவர் ஏதோ உளறுதார் மேம்..அவன் ஒய்ஃபுக்கு இன்னிக்கு பர்த் டே இல்லியா? அதனால சின்னதா ஒரு வால் கிளாக் கிஃப்ட்டா வாங்கினேன்..அப்படியே கொடுத்தா சப்பையா இருக்குமேன்னு சும்மா டம்மி டைம் பாம் மாதிரி நாலஞ்சு ஒயரைச் சுத்திக் கொடுத்தேன்..அதை பிரிச்சுப் பார்த்தாலே, அது டம்மின்னு தெரியும்..ஒரு கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வைய்ஃபுக்கு கொஞ்சம் டெக்னிகலா கிஃப்ட் கொடுப்போம்னு நினைச்சேன்..இது தப்பா? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி, அவருக்கு நான் எது பண்ணாலும் தப்பாத் தெரியுது. கவிதா என் தங்கச்சி மாதிரி..அவங்களுக்கு ஏன் நான் டைம் பாம் கொடுக்கப் போறேன்?”

அகிலா கீழே கிடந்த அந்த கிஃப்ட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அருகில் இருந்தோரும் வாங்கிப் பார்த்தனர். அழகாக பேக் செய்யப்பட்ட, சின்ன வால் கிளாக்..அதன் பின்னால் டம்மியாக டைம் பாம் போன்ற வேலைப்பாடுடன் கூடிய பிளாஸ்டிக் பாக்ஸ்.

“நைஸ் கிஃப்ட்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

அகிலா சரவணன் மேல் கோபமானாள்.

“சரவணன்..திஸ் இஸ் டூ மச்..ஒன்னுமில்லாத விஷயத்துக்கு ஆஃபீஸ்ல இவ்ளோ ரகளை பண்ணியிருக்கீங்க”

“பரவாயில்லை மேம்” என்றான் பாண்டியன் அப்பாவியாக!

“பாண்டியன். நீங்க வேணா உங்க ஃப்ரெண்டாச்சேன்னு சும்மா விடலாம். ஆனா, ஒரு ஹையர் அஃபிசியலா இதை நான் பொறுத்துக்க முடியாது. ஆஃபீஸ்ல இண்டீசண்டா நடந்துக்கிட்டதுக்காக சரவணனை ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்றேன். நீங்க கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா, சரவணன் மேல கேஸ் ஃபைல் பண்ணச் சொல்றேன்”

“அய்யோ..அதெல்லாம் வேண்டாம் மேம்..இவருக்காக இல்லேன்னாலும் கவிதாவுக்காகவாவது நாம விட்டுடுவோம்”

அகிலா சரவணன் பக்கம் திரும்பினாள். “ஓகே, சரவணன்..நீங்க கிளம்பலாம்..இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண வேண்டாம். அந்த கேஸ்ல இருந்து பெர்மனெண்ட்டா உங்களை தூக்கறேன். பாண்டியன் பார்த்துப்பார், அந்தக் கேஸை!”

சரவணன் பாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியன் நக்கலாகச் சிரித்தான்.

சரவணன் அவமானத்துடன் தலை குனிந்தபடி கீழே இறங்கினான்.


(வேட்டை...தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. .இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண வேண்டாம். அந்த கேஸ்ல இருந்து பெர்மனெண்ட்டா உங்களை தூக்கறேன். பாண்டியன் பார்த்துப்பார், அந்தக் கேஸை!”///

    என்னய்யா, பொசுக்குனு சரவணனை இப்படி டம்மி ஆக்கிட்டிங்க

    ReplyDelete
  2. வணக்கம்,செங்காவி!சஸ்பென்ஸ் வைக்கலேன்னா என்ன க்ரைம்?ஹ!ஹ!ஹா!!!!!ப.ரா ஷாக்காகப் போறாரு!பிரகாஷ்,ஏற்கனவே ஆயிட்டாரு,ஹி!ஹி!ஹீ!!!!!!

    ReplyDelete
  3. இந்த இடம் லாஜிக் உதைக்குதே,

    என்னதான் ஒரு டெக்னிகலான கிஃப்ட் என சொல்லப்பட்டாலும் , ஏற்கனவே நல்ல நண்பர்களாக இல்லாத இருவரிடையில் இது போன்ற கிஃப்ட் தருவது பக்கா அயோக்கியத்தனம் என பிற போலீள் மூளைகளுக்குத் தோன்றவில்லையா?.

    (அது டம்மி பாமாக இல்லாமல் ஒரு மியூஸிக் வருவது போலிருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் ஏன் "டம்மி டைம் பாம் மாதிரி ...".... தரவேண்டும்?.)

    அதே போல சரவணன் சற்று நிதானமாக அகிலாவின் அறைக்கு அந்த பார்சலை எடுத்துச் சென்றிருக்கலாம் / அகிலாவுக்குப் போன் செய்திருக்கலாம் / பாம்-ஸ்குவாடுக்கு கொடுத்து, பாண்டியன் மேல் புகார் கொடுத்திருக்கலாம். ஏன் கைகலப்பில் ஈடுபடவேண்டும், அதுவும் அலுவலகத்துக்குள்ளேயே..? இக்கட்டான சமயங்களில் யோசித்துச் செயல்பட வேண்டுமென போலீஸ் டிரெயினிங்கில் சொல்லித்தரப்படுமல்லவா...

    ReplyDelete
  4. நீண்ட நாட்கள் வராமல் இருந்ததற்கு மன்னிக்க.சுவாரஸ்யமாக இருக்கிறது கதை.இன்மேல்தான் பின்னே சென்று பார்க்க வேண்டும்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.