Saturday, July 7, 2012

முருக வேட்டை_18


மூவிரு முகங்கள் போற்றி! 
முகம்பொழி கருணை போற்றி!
ஏவருந் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! - காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி! - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!

- கந்த புராணம்.

விதா கென்யா செல்லும் ஆர்வத்தில் பம்பரமாகச் சுழன்று வேலை செய்தாள். ஆஃபீசில் பெர்மிசன் வாங்கி, டிக்கெட்டையும் அவளே புக் செய்து, மாமாவிடம் கிளம்புவதைத் தெரிவித்துவிட்டு, சரவணனுடன் சென்னை ஏர்போர்ட் சென்று இறங்கினாள். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, இமிக்ரேசனில் ‘கென்யாவா?’ எனும் வியப்புப் பார்வையைக் கடந்து, செக்யூரிட்டி செக்கிங்கை முடித்து விட்டு, வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தார்கள்.

சரவணன் வாட்ச்சைப் பார்த்தான். இன்னும் இரண்டு மணி நெரம் இருந்தது. ‘ரொம்ப சீக்கிரமா வந்துட்டோம். இன்னும் ஒன் அவர் கழிச்சுக் கிளம்பி வந்திருக்கலாம்” என்றான்.

“லேட்டாகிடுச்சுன்னா, இப்போ நான் ஓட முடியுமா? சீக்கிரம் வந்ததால என்ன? வேடிக்கை பார்ப்போம், இல்லே ஏதாவது பேசிக்கிட்டிருப்போம்” என்றாள் கவிதா.

கொஞ்ச நேரம் சுற்றும் முற்றும் பார்த்த சரவணன், திடீரென கவிதா பக்கம் திரும்பி, “அச்சு, நான் அன்னிக்குக் கேட்டனே..மார்ஸோட காப்பி தான் முருகனான்னு? அதைப் பத்தி அப்புறம் யோசிச்சியா?” என்றான்.

“உஸ்ஸ்ஸ்..அதையெல்லாம் கொஞ்சநாளைக்கு ஒத்தி வைப்போம்னு தானே இப்போ..”

“ஆமா..ஆனா என்னால அதை மறக்க முடியலியே..உன்னால எப்படி முடியுதோ?”

”நானும் மறக்கலைங்க..ஆனா அடிப்படையிலேயே நீங்க ஏதோ மிஸ் பண்ணீட்டீங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு..அதான் கொஞ்சம் கேப் விட்டுட்டு, ஃப்ரெஷ்ஷா ஆரம்பிச்சா, உங்களுக்கே புதுசா ஏதாவது தடயம் கிடைக்கலாம்”

“சரி..ஆனால் கேஸுக்காகன்னு இல்லை..சும்மா கேட்கிறேன்..அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“தமிழ் இலக்கியத்துல எழுதப்பட்ட முதல் ஆன்மீக நூலே முருகாற்றுப்படை தான்..முருக வழிபாடுங்கிறது அந்தளவுக்கு முன்னாடி இருந்தே இருந்துக்கிட்டு வர்ற விஷயம்..எப்போ தமிழன்னு ஒரு இனம் உருவாச்சோ அப்பவே முருகன்ங்கிற கடவுளும் உருவாகியிருக்கணும். முருகன்ங்கிற பேருக்கு அழகன், குமரன்னு அர்த்தம். முருக வாழிபாடுங்கிறது கௌமாரம்-ங்கிற பேர்ல தனி மதமாவே ஆரம்பித்தல இருந்துச்சு. முருகன் மார்ஸோட காப்பின்னா வள்ளி யாரு?”

“அது இவங்களோட கற்பனையா இருக்கலாம்..எதை வச்சு இந்தக் கதையெல்லாம் உண்மைன்னு நம்புறே?”

“நம் முன்னோர்கள் சொல்லிட்டுப் போயிருக்கிறாங்க..”

“ஆங்..அதான் பிரச்சினை..முன்னாடி எவனோ எதையோ எழுதிட்டுப் போய்ட்டான்..அதை அப்படியே உண்மைன்னு நம்பி மூடநம்பிக்கைலயே கிடக்கிறீங்க..”

கவிதா சிரித்தபடியே “நாங்க மட்டும் தான் அப்படியா?” என்றாள்.

”பின்னே?”

“ஒகே, அப்போ நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க..சோலார் சிஸ்டத்துல மண்டலத்தில் மொத்தம் எத்தனை பிளானட்ஸ் இருக்கு?”

“நயன்..இல்லை, இல்லை எய்ட்”

“நயனா/ எயிட்டா?”

“எயிட் தான்..2006-ல ப்ளூட்டோ ப்ளானட் இல்லேன்னு கண்டுபிடிச்சுட்டாங்களே..”

“யாரு கண்டுபிடிச்சா?”

“சைண்டிஸ்ட் தான்”

“அப்போ முதல்ல ப்ளூட்டோ ப்ளானட்னு யார் சொன்னா?”

“அது..அதுவும் சைண்டிஸ்ட் தான்”

கவிதா சிரித்தாள்.

“ஹே..சிரிக்காதே..டெக்னாலஜி இம்ரூவ் ஆகும்போது, சில விஷயம் தப்புன்னு தெரிஞ்சா மாத்திக்கிறது என்ன தப்பு?”

”தப்பு மாத்திக்கிறதுல இல்லை...1930ல ப்ளூட்டோ ஒரு ப்ளானட்னு சொன்னாங்க..1930ல இருந்து 2006 வரைக்கும் 76 வருசம் நாம அதை நம்பிக்கிட்டே இருந்திருக்கோம்..இடையில ஸ்கூல்ல. காலேஜ்ல இருந்து எவ்வளவு பேர் இதை உண்மைன்னு நம்பி, படிச்சு வெளில வந்திருக்காங்க..அதை நம்பின போன தலைமுறைல பலபேரு இப்போ அதே நம்பிக்கையோட இறந்தும் போயிருக்காங்க..எவ்வளவு பெரிய மடத்தனம்..நாளைக்கு இதே சைண்டிஸ்ட்டுங்க ப்ளூட்டோ ப்ளானட் தான்னு சொன்னா, நீங்க அதையும் ஆமான்னு ஒத்துப்பீங்க, இல்லியா? என்னே உங்க பகுத்தறிவு!”

“இதோ பார்..சைண்டிஸ்ட்டுங்க சும்ம எதையும் சொல்றதில்லை. பல கோடி செலவு பண்ணி, பலவருட ஆராய்ச்சிக்கு அப்புறம் தான் ஒரு விஷயத்தை முடிவாச் சொல்றாங்க..நம்மளை மாதிரி சாமானியர்களுக்கு தனியா ஆராய்சி பண்ணி உறுதிப்படுத்திக்க வசதியும் கிடையாது, அறிவும் கிடையாது. நமக்கு இருக்கிற ஒரே வழி, அவங்களை நம்புறது தான்”

“ஆங்..அதைத் தான் நானும் சொல்றேன்..நம்ம முன்னோர்கள் தங்கள் தவ வலிமையாலும், ஞானத்தாலும் பல விஷயங்களை உணர்ந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதை தனியா உறுதிப்படுத்திக்க நம்மை மாதிரி சாமானியர்களால முடியாது. நமக்கிருக்கும் ஒரே வழி, அவங்களை நம்புறது தான்..நாங்க முன்னோர்கள் பேச்சை அப்படியே நம்புனா மூட நம்பிக்கை. நீங்க சைண்டிஸ்ட் பேச்சை அப்படியே நம்பினா, பகுத்தறிவா?”

“முன்னோர்கள் நம்மை முட்டாளாக்க...”

கவிதா இடைமறித்தாள். ”வியாபார நோக்கத்தோட, மக்களை முட்டாளாக்கும்விதமா எத்தனை விஷயங்கள்-ஆய்வுகள் சைன்ஸ்ல நடக்குன்னு தெரியாதா உங்களுக்கு?”

“சில பேரு அப்படி இருக்காங்க தான்..”

“கரெக்ட்..அதனால தான் சொல்றேன்..முன்னோர்களை நாங்க எப்படி நம்புறோமோ, அப்படித் தான் நீங்க சைண்டிஸ்ட்டுகளை நம்புறீங்க..முன்னோர்கள் பண்ண, சொன்ன பல விஷயங்களை சைன்ஸால ப்ரூஃப் பண்ண முடியலேன்னா அது முட்டாள்தனம்னு சொல்லி மூட்டை கட்டிடறீங்க..அஸ்ட்ராலஜீல நம்மாளுக எவ்வளவு பெரிய அறிவாளிகளா இருந்திருக்காங்க. நீங்க பலகோடி செலவழிச்சு இப்போக் கண்டுபிடிக்கிற கிரகங்களின் சுற்றுவட்டப்பாதை, சுற்றும் கால அளவு எல்லாத்தையும் அப்போவே எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்களே, அது எப்படி?..அது எப்படின்னு உங்க சைண்டிஸ்ட்டுங்க கண்டுபிடிச்சுட்டாங்களா? அது அவங்களோட ஞானத்தால, ஞானதிருஷ்டியால உணர்ந்து சொன்ன விசயங்கள்னு நாஙக் நம்புறோம். ஆதாரப்பூர்ப்வமா உங்களால மறுக்கமுடியுமா? சன்ஸால ‘தெரியாத’ விஷயங்களை உறுதிப்படுத்த முடியாது. தெரின்ச்ஜ விஷயங்களைத் தான் உறுதிப்படுத்த முடியும். இப்போ ஒரு ப்ளானட் இருக்குன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, அது பத்தின விவரங்களை துல்லியமா அப்போதுள்ள வசதிப்படி சொல்ல முடியும். ஆனா இருக்கா, இல்லையான்னே தெரியாத விஷயங்களைப் பத்தி சன்ஸால ஏதாவது சொல்ல முடியுமா?” மூச்சிரைக்கக் கேட்டாள் கவிதா.

“ம்..முடியாது” என்றான் சரவணன்.

“அப்போ கடவுள் இல்லேன்னும் எதை வச்சுச் சொல்றீங்க.’இருக்கலாம்..இன்னும் தெரியலை”-ங்கிறது தானே சரியான பதிலா இருக்க முடியும்? மத்தவங்க முன்னாடி தன்னை புத்திசாலின்னு காட்டிக்கறதுக்காக நாத்திகவாதியா இருக்காதீங்க..மத்தவங்களை இன்சல்ட் பண்றது மட்டுமே நாத்திகவாதி வேலைன்னு நினைக்காதீங்க. உண்மையில் ஆன்மீகவாதியை விடவும் அதிக தேடலோட இருக்க வேண்டியன் நாத்திகவாதி”

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

  1. இரவு வணக்கம்,செங்கோவி!கென்யா வரை தொடரும் போல?விஞ்ஞானிங்க.......................... சரி,நமக்கெதுக்கு வம்பு,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  2. நம்மளோட பேவரைட் முருகன் தானுங்க... குமாருன்னு பேர் வச்சதாலயோ என்னவோ தெரி யலை. அவர் மேல ஒரு ஈர்ப்பு. இந்த பகுதியில சயின்சையும் சாமியையும் கலந்து கட்டி விளாசியிருக்கீங்க...

    ReplyDelete
  3. செங்கோவி... நல்ல ஒரு கதைக்கான எல்ல விசயங்களும் இருக்கு... அதுவும் ரெண்டு charecteroda discussion ரொம்ப நல்ல வெச்சுருகீங்க கலக்குங்க .. waiting for the next episode.

    ReplyDelete
  4. கதை விவாத களத்துக்கு போய்டுச்சு. பல விஷயங்களை ரொம்ப எளிமையா இயல்பா சொல்லிட்டிங்க.....!

    ReplyDelete
  5. .அதைத் தான் நானும் சொல்றேன்..நம்ம முன்னோர்கள் தங்கள் தவ வலிமையாலும், ஞானத்தாலும் பல விஷயங்களை உணர்ந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதை தனியா உறுதிப்படுத்திக்க நம்மை மாதிரி சாமானியர்களால முடியாது. நமக்கிருக்கும் ஒரே வழி, அவங்களை நம்புறது தான்..நாங்க முன்னோர்கள் பேச்சை அப்படியே நம்புனா மூட நம்பிக்கை. நீங்க சைண்டிஸ்ட் பேச்சை அப்படியே நம்பினா, பகுத்தறிவா?”

    நல்ல விவாதம்! கதை சூப்பராக போகிறது!

    ReplyDelete
  6. விவாதகளத்தில் கோல்கள் எல்லாம் சிக்கிப்படுகின்றதே முருகனிடம்! தொடருங்கோ !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.