Tuesday, July 10, 2012

முருக வேட்டை_20


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீஅருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! -------- திருப்புகழ்


அதற்குப் பதிலாக சரவணன் “.......................இந்துங்கிறவன் யாரு? அவனுக்கு என்ன தனித்தன்மை இருக்கு? சொரணை கெட்ட, எந்தவித தனியான அடையாளமும் இல்லாத, கூட்டமாத் தானே ஆகியிருக்கீங்க? இந்துக்குன்னு ஏதாவது கடமைகள்னு சொல்லப்பட்டிருக்கா? ஆளுக்கு ஒன்னை எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்..இது தான், இப்படித் தான்னு தெளிவா ஏதாவது இருக்கா?..நத்திங்..” என்று ஆவேசத்துடன் பதில் சொன்னான்.

கவிதா சரவணனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். 

“இப்போ முருகர்னா யாருன்னே தெரியாமப் போயிருந்தா, நீங்க சொல்றது சரிங்கலாம். முருகரைக் கும்பிடுற உரிமை இல்லாமப் போயிருந்தாலும், ஒன்னாச் சேர்ந்தது தப்புன்னு சொல்லலாம். ஆனால் இப்பவும் ஒரு இந்து நினைச்சா முருகரை மட்டுமோ அல்லது விஷ்ணுவை மட்டுமோ வணங்கிக்கிட்டுப் போகலாமே..யாரும் அதுக்காக தலையை எடுக்கப்போறதில்லையே? அந்த சுதந்திரம் இன்னும் இருக்கத் தானே செய்யுது? ஏன் இணைச்சாங்கன்னா..அதுக்கான பதில் இப்போ என்கிட்ட இல்லை..ஆனால் இங்கே எதுவும் சும்மா வலுக்கட்டாயமா இணைக்கப்படலை..இந்து மதத்துக்கு அடிப்படையான விஷயமா ஆறு தத்துவங்கள் இருந்துச்சு. அது தான் இந்தியா முழுசையும் ஒன்னா பிணைச்சிருந்துச்சு.”

“ஆறு தத்துவமா?”

“ஆமா...ஆறு தத்துவம் தான்..அதே உங்களுக்குத் தெரியாது. ஆனாலும் துணிஞ்சு எல்லாம் தெரிஞ்ச மாதிரி இந்து மதத்தை விமர்சிக்கிறீங்க..கல்லைக் கும்பிடுற கூட்டம்ங்கிறீங்க.உண்மையில் நாங்க கும்பிடுறது கல்லையோ, அந்த உருவத்தையோ இல்லை..அதுக்குப் பின்னால இருக்கிற தத்துவத்தை..எங்க முன்னோர்களின் தத்துவ ஞானத்தை..அந்த ஆறு தத்துவ ஞானத்துக்கும் பொதுவான பிரம்மத்தை!”

கவிதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஃப்ளைட்டில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. க்யூவில் நின்று, கன்சீவ் ஆகியிருப்பதற்கான ஃபார்மை நிரப்பிக் கொடுத்துவிட்டு, ஃப்ளைட்டில் ஏறினார்கள். சென்னையில் இருந்து பஹ்ரைன் வழியாக கென்யத் தலைநகர் நைரோபி செல்வதாகத் திட்டம்.

கவிதாவிற்கு இது தான் முதல் பயணம் என்பதால், விண்டோ சீட்டில் ஆர்வத்துடன் உட்கார்ந்துகொண்டாள். ஃப்ளைட்டை உள்ளிருந்து பார்க்கும்போது பெரிய பஸ் போன்று தெரிந்தது அவளுக்கு. ஃப்ளைட் கிளம்பி டேக் ஆஃப் ஆகும்வரை கவிதாவின் கவனமெல்லாம் ஃப்ளைட்டின் மேல் தான் இருந்தது. சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தவள், குழந்தையைப் போல் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

சிறுது நேரத்தில் ஸ்நாக்ஸ் சப்ளை ஆரம்பித்தது. சரவணனும் தன் பேச்சை ஆரம்பித்தான்.

”நான் கேட்டதுக்குப் பதில் இன்னும் சொல்லலியே நீ..இந்துங்கிறவன் யாரு? இருக்கிற சாமி எல்லாத்தையும் கும்பிடுறவன் தான் இந்துவா?”

”எல்லா ஆறுகளும் கடலையே சேர்வது போல், எல்லா வழிபாடுகளும் பிரம்மத்தையே சேர்கின்றன. எந்த உருவத்தில் வழிபட்டாலும் அவர்கள் வழிபடுவது என்னையே-ன்னு கிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லியிருக்கார். கடவுள்ங்கிறது பிரம்மம். பிரம்மம்ங்கிறது வார்த்தையால் விவரிக்க முடியாததுன்னு வேதத்திலேயே சொல்லியிருக்கு. ரொம்ப எளிமைப்படுத்தினா, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தப் பூர்த்தியாகி’ங்ற தாயுமானவர் வார்த்தையை வச்சுத்தான் புரிஞ்சுக்க முடியும். இந்த பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கும் ஒரு ஆற்றல். பக்தர்கள் விரும்பும் வடிவில் அருளும் ஒரு சக்தி. அதுவே பிரம்மம். அதை முழுசாப் புரிஞ்சுக்கறதுல வர்ற சிக்கல், லாஜிக் தான்!”

“லாஜிக்கா?”

“ஆமா..நம்மால லாஜிக்கலாத் தான் யோசிக்க முடியும். கிருஷ்ணர் மண் சாப்பிட்டார். வாயைத்திறக்கச் சொன்னப்போ, வாய்க்கு உள்ளே பூமி இருந்துச்சுன்னு புராணம் சொல்லுது. அப்போ கிருஷ்ணர் உட்கார்ந்திருந்ததும் பூமி தானே? அது எப்படி வாய்க்கு உள்ளேயும் இருக்க முடியும்? பிரம்மத்தை விளக்க முயலுற எல்லா ஞானிகளுமே உள்ளே இருப்பது எதுவோ, எதுவே வெளியேயும் பரவி இருப்பதுங்கிற சென்டன்ஸை தவறாமச் சொல்றாங்க. அதுக்கு மேல வார்த்தைகளால் சொல்ல முடியலைன்னும் சொல்றாங்க..அவங்களாலேயே சொல்ல முடியாத விஷயத்தை, நான் எப்படி உங்களுக்குப் புரியவைக்கன்னு தெரியலை!” என்றாள் கவிதா.

“என்னன்னெமோ சொல்றே..சரி, அப்போ இந்துங்கிறவன் பிரம்மத்தைக் கும்பிடுறவனா?”

“அப்படி மட்டுமே சொல்லிட முடியாது. என்னோட வழி மட்டுமே சரின்னு நினைக்காத, இறையை எந்த வடிவத்தில் கும்பிட்டாலும் அது பிரம்மத்தின் மற்றொரு வடிவமா ஏத்துக்கிறவன், அந்த வழிமுறைகளை ஏத்துக்கிறவன், எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், எந்த இனத்தில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் அவன் இந்து தான்!”

“அதனால தான் இந்துவால் வேளாங்கண்ணிக்கும் தர்காக்கும் போக முடியுதா?”

“ஆமா..அது இப்போ வந்த பழக்கம் இல்லை. சிலப்பதிகார காலத்துலேயே ஒரே நேரத்துலேயே புத்த விகாருக்கும், இந்துக் கோயிலுக்கும் போற வழக்கம் இருந்திருக்கு. அதுக்குக் காரணம், இந்த மண்ணுக்கேயுரிய பரந்த சிந்தனை. அந்த சிந்தனையைக் கொடுத்த பிரம்மம்-ங்கிற எல்லாருக்கும் பொதுவான இறை.”

“அது நல்ல விஷயம் தான். ஆனால் வெளில இருந்து பார்க்கும்போது, இந்து மதங்கிறது ஒரு குழப்படியான கூட்டமாத் தானே தெரியுது?”

“நீங்க ஏன் வெளில இருந்து பார்க்கிறீங்க? இந்து மதத்தைப் புரிஞ்சிக்க கொஞ்சம் எஃப்ஃபோர்ட் போட்டாலே போதும். அதுக்குக் கொஞ்சம் படிக்கணும். ஆனால் ஏற்கனவே எல்லாம் தெரிஞ்ச புத்திசாலின்னு ஆனப்புறம், எப்படிப் படிப்பீங்க?”

 ”ஆனாலும் இந்துக்குன்னு தெளிவா கடமைகள், அறிவுரைகள்னு எதுவும் இல்லை, இல்லியா?”

“கடமை..அறிவுரைன்னு எதைச் சொல்றீங்க? காலையில சீக்கிரமா எழுந்திரிக்கணும், டெய்லி குளிக்கணும், பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது-ங்கிற மாதிரியா? அதெல்லாம் ஆன்மீக விஷயங்களே இல்லை. அது கொஞ்சம் காமென்சென்ஸ் உள்ள மனுசனுக்கு/சொசைட்டிக்கு தானாவே தெரியற விஷயங்கள்..ஆனாலும் அதைச் சொல்லணும்னா திருவள்ளுவர், அவ்வையார், காந்தி மாதிரி சிந்தனையாளர்கள் தான், அதைப் பத்திப் பேசணும்..இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மீகம்ங்கிறது ஆன்மாவின் விடுதலையைப் பத்திப் பேசறது..அதிலேயே எல்லாக் கடமைகளும், அறிவுரைகளும் அடக்கம்”

“ஆன்மாவின் விடுதலையா? அது என்ன?”

“இப்போ எனக்கு டயர்டா இருக்கு..பஹ்ரைன்ல ஒன் அவர் வெயிட்டிங் இருக்கே..அப்போச் சொல்றேனே!” என்று சொல்லிவிட்டு, தூங்க ஆரம்பித்தாள் கவிதா.


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. good conversation sengovi,awaiting for the next.

    ReplyDelete
  2. அப்படி மட்டுமே சொல்லிட முடியாது. என்னோட வழி மட்டுமே சரின்னு நினைக்காத, இறையை எந்த வடிவத்தில் கும்பிட்டாலும் அது பிரம்மத்தின் மற்றொரு வடிவமா ஏத்துக்கிறவன், அந்த வழிமுறைகளை ஏத்துக்கிறவன், எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், எந்த இனத்தில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் அவன் இந்து தான்!
    மிக அழகாக சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  3. இரவு வணக்கம்,செங்கோவி!விவாதம் நன்றாகப் போகிறது.எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அருமையான விளக்கம்!

    ReplyDelete
  4. ஆரம்பத்துல வர்ற பாடல்கள் தொகுப்பு அருமை சார், சின்ன வயசுல தாத்தா சொல்லி கொடுத்து பாடினது

    ReplyDelete
  5. விவாதம் சூடாகவும்  சிந்திகவும் வைக்கின்றது உரையாடல் .பிரம்மம் எல்லாராலும் விளங்க முடியாது என்பது நிஜமே வெளியில் கூச்சல் போடு நாஸ்த்திகர்வட்டம் அறிந்து கொள்ள முடியாத ஒன்று!

    ReplyDelete
  6. “இப்போ முருகர்னா யாருன்னே தெரியாமப் போயிருந்தா, நீங்க சொல்றது சரிங்கலாம். முருகரைக் கும்பிடுற உரிமை இல்லாமப் போயிருந்தாலும், ஒன்னாச் சேர்ந்தது தப்புன்னு சொல்லலாம். ஆனால் இப்பவும் ஒரு இந்து நினைச்சா முருகரை மட்டுமோ அல்லது விஷ்ணுவை மட்டுமோ வணங்கிக்கிட்டுப் போகலாமே..யாரும் அதுக்காக தலையை எடுக்கப்போறதில்லையே? அந்த சுதந்திரம் இன்னும் இருக்கத் தானே செய்யுது? ஏன் இணைச்சாங்கன்னா..அதுக்கான பதில் இப்போ என்கிட்ட இல்லை..//

    (1) அக்காலத்தில் சைவம் வைணவம் இடையே இருந்த மோதல்களை நீக்க
    (2) நாத்திக மதங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின் பரவலைத் தடுக்க. ஆதிசங்கரர், சில ஆழ்வார்கள், சில நாயன்மார்கள் ஆகியோர் சமணம், பௌத்தத்தை சில இடங்களில் விமர்சிக்கிறார்கள்.

    ReplyDelete
  7. பிரம்மத்தை விளக்க முயலுற எல்லா ஞானிகளுமே உள்ளே இருப்பது எதுவோ, எதுவே வெளியேயும் பரவி இருப்பதுங்கிற சென்டன்ஸை தவறாமச் சொல்றாங்க.//

    அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்கள் கிட்டத்தட்ட இதைத்தான் சொல்கின்றன. அத்வைதம் தனக்குள் இருக்கும் பிரம்மத்தை உணர முடியாமல் ஜீவன் மாயையில் உழல்கிறது என்கிறது. விசிஷ்டாத்வைதம் ஜீவாத்மாக்கள் அனைத்தும் பரமாத்மாவின் துகள்கள் என்கிறது. பிரம்மத்தைப் பற்றி உபநிஷதங்கள் விளக்க முயல்கின்றன. கேனோபனிஷத் அவற்றில் சிறப்பான விளக்கங்களை அளிக்கிறது.

    அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்தில் உள்ளது. அண்டம் என்பது பிரம்மத்தின் ரூபம் என்று கொண்டால் இதற்கு மேல் தெளிவாக இதை விளக்க முடியாது.

    ReplyDelete
  8. கடைசி மூன்று தொடரும் வாதமாவே போயிட்டிருக்கு..புதிதாகச் சிலவற்றைத் தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  9. //அப்படி மட்டுமே சொல்லிட முடியாது. என்னோட வழி மட்டுமே சரின்னு நினைக்காத, இறையை எந்த வடிவத்தில் கும்பிட்டாலும் அது பிரம்மத்தின் மற்றொரு வடிவமா ஏத்துக்கிறவன், அந்த வழிமுறைகளை ஏத்துக்கிறவன், எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், எந்த இனத்தில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் அவன் இந்து தான்!///
    இது(வும்) புதுசா இருக்கே! நல்லாருக்கு! :-))

    ReplyDelete
  10. அப்புறம் அண்ணன் 'நானா யோசிச்சேன்' மறந்துடாதீங்க! :-)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.