Friday, November 1, 2013

ஆரம்பம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
பில்லா படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்-விஷ்ணுவர்த்தன்-யுவன்சங்கர் ராஜா கூட்டணி இணையும் படம் என்பதால் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செஞ்சாங்களான்னு ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் படிச்சு குழம்பிப்போன உங்களை, என் பங்குக்கு.......

ஒரு ஊர்ல.....................:
ஆண்ட்டி-டெரரிஸ்ட் டீம்ல...ஆண்ட்டிக்கும் டெரரிஸ்டுக்கும் இன்னா லின்க்க்குன்னு கன்பியூஸ் ஆகாதீங்கய்யா..அதை தீவிரவாத தடுப்புப் படைன்னு வச்சிக்குவோம். அதுல வேலை பார்க்குற ஆப்பீசர் அஜித், அரசியல்வாதிகள்+அதிகாரிகள் பண்ற புல்லட்-புரூஃப் ட்ரெஸ் ஊழலினால் தன் நண்பனையும் நண்பனின் குடும்பத்தையும் இழக்கிறார். அதனால அதுல சம்பந்தப்பட்டவங்களை எப்படிப் பழிவாங்குறார், ஊழல் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதே கதை.

உரிச்சா....:
படம், அரசியல்வாதிகளைப் பழிவாங்க அஜித் செய்யும் அதிரடிகளுடன் ஆரம்பிக்கிறது. அஜித்துக்கு வில்லத்தனமான ரோல் நன்றாகவே செட்டாகும் என்பதால், முதல்பாதி முழுக்க ஒரு தீவிரவாதி போன்ற தோற்றத்தைத் தரும்வகையிலேயே கொண்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு ’கம்ப்யூட்டர் மூளை’ கொண்ட ஆர்யாவின் உதவி தேவைப்பட, அவரது காதலியைப் பிடித்துவைத்து மிரட்டி, எல்லா ஹேக்கிங் வேலைக்கும் ஆர்யாவை யூஸ் பண்ணுகிறார்கள்.

நயன்தாரா-ஆர்யா உதவியுடன் முதல்பாதியில் அஜித் செய்யும் வேலைகள் அட்டகாசம். சீரியஸான அஜித்தை ஜாலியான ஆர்யா சமன் செய்கிறார். கூடவே ’கெக்கேபிக்கே’ அசடாக டாப்ஸியும் சேர்ந்து கொள்ள, பல காட்சிகளில் கலகலப்பு. அதிலும் ஆர்யாவின் காலேஜ் ஃப்ளாஷ்பேக் புது சிந்தனை தான். ரசிக்க முடிகிறது. காலேஜில் மொக்கையாக இருந்த ஆர்யா, பின்னர் ஹேண்ட்சம் ஆகிவிட்டார் என்பதை லாஜிக்கலாக ஓகே என்று ஒரு ஆணாக புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆஹா..தலயை விட்டுட்டு வேற எதையோ பார்த்துக்கிட்டிருக்கமே..படம், இடைவேளை வரை செம பாஸ்ட். எதற்கும் துணிந்த அஜித்தும், எதையுமே ஜாலியாக அணுகும் ஆர்யாவும் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆர்யா, அஜித்தை போலீஸில் மாட்டிவிடுவதோடு, இடைவேளை! (அப்போது அஜித் ‘இது முடிவல்ல..ஆரம்பம்’ என்று சொல்வதால்தான், படம் ஆரம்பம் என்று பெயர்பெற்றது என்பதையும் அவசியம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.)

இரண்டாம்பாதி நயன்தாரா  ஆர்யாவிடம் ‘டேய் அவர் யாரு தெரியுமா..அவர் ரேஞ்சு புரியுமா’ன்னு ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுவதுடன் ஆரம்பிக்கிறது. (நமக்கு சில சிக்கல்களும் இங்கே தான் ஆரம்பம்.) அந்த ஃப்ளாஷ்பேக்கில் அஜித்-ராணா நட்பு நன்றாகவே உணர்த்தப்படுகிறது. ஆனால் ஃப்ளாஷ்பேக்கின் நீளம் அதிகம். அதில் ஒரு பாடல் வேறு. ஐந்து பாட்டு ரெகார்டு செய்தால், அதைப் படத்தில் வைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. அஜித் முதல்பாதியில் செய்யும் காரியங்களை, மிகவும் சரியாக நியாயப்படுத்துகிறது அந்த ஃப்ளாஷ்பேக். மும்பை அட்டாக்கையும் புத்திசாலித்தனமாக அதில் நுழைத்திருக்கிறார்கள். அதன்பின் ஆர்யா திருந்தி(!), அஜித்திற்கு உதவ முன்வருகிறார்.

அதன்பிறகு லாஜிக் என்பதைப்பற்றி, பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்ரூவராக ஆன ஆர்யாவும் போலீஸும் அதை சுத்தமாக மறந்து விடுகிறார்கள். மும்பை போலீஸ் பிடியிலிருந்து தப்பிய அஜித், ஏர்போர்ட் வழியே துபாய்க்கு கேஷுவலாக (ஆமாம் பாஸ், ஸ்லோமோசன் தான்!) போகிறார். அங்கே ஒரு பேங்க் மேனேஜரை அவர் ரூமிலேயே அடித்துப்போட்டுவிட்டு, மேனேஜராக உட்காருகிறார். 

மும்பையில் இருக்கும் அஜித்+அரசியல்வாதியும், துபாயில் இருக்கும் தீவிரவாதிகளின் தலைவனும் திடீரென இமயமலை(?)க்குக் கீழே சந்தித்து, டுமீலுகிறார்கள். கூடவே மும்பை போலீஸும் அங்கே ஆஜர்!..ஆனாலும் இத்தகைய லாஜிக் மீறல்கள், சராசரி ரசிகனுக்கு பெரிய பிரச்சினை இல்லை தான். 

இடைவேளையில் ஆரம்பித்து இமயமலைவரை காட்சிகள் வேகமாகவே நகர்கின்றன. சுபா திரைக்கதை எழுதும் எல்லாப் படங்களிலேயும் ஒரு பிரச்சினை உண்டு. அவர்களிடம் கொஞ்சம் சரக்கு உண்டு. எனவே கோப்பை நிறைந்து ஓடினாலும், இருப்பதை முழுவதும் ஊற்றியே தீருவோம் என்று செய்வது அவர்கள் வழக்கம். இதிலும் அப்படியே. இன்னும் கொஞ்சம் இரண்டாம்பாதியில் கத்தரி போட்டிருக்கலாம். கடைசி 20 நிமிடங்கள் தேவையற்ற-லாஜிக்கற்ற இழுவை தான்.

அஜித்:
AK  எனும் பெயரில்வரும் அஜித் குமார் எப்போதும்போல் செம ஸ்டைலாக இருக்கிறார். என்னதான் மற்றவர்கள் ஓட்டினாலும், ஸ்லோமோசனில் அவர் நடக்கும் அழகுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. முதல்பாதியில் காட்டும் அசால்ட்டான நடிப்பாகட்டும், இடைவேளைக்குப் பின் ’சீஃப்’-ஆக டைரக்ட் செய்வதாகட்டும், தல ராக்ஸ்! தமிழில் ரகுவரனுக்குப்பிறகு, ஹாலிவுட் லுக் உள்ள நடிகர் என்று அஜித்தை தாராளமாகச் சொல்லலாம். 

மல்ட்டி-ஹீரோ படங்களை யாரும் எடுப்பதில்லை. அதனாலேயே எடுக்கமுடியாமல் போன ஸ்க்ரிப்ட்டுகள் ஏராளம். ஆனால் அஜித் தான் துணிந்து அத்தகைய ஸ்க்ரிப்ட்டில் நடிக்கிறார். அதற்கு ஈகோ இல்லாத தன்மையும், அவரது தன்னம்பிக்கையும் தான் காரணம். தன்னம்பிக்கை அற்றவர்களின் வயித்தெரிச்சல் புலம்பல்களான ‘என்னய்யா..ஆர்யாக்கு அப்பாவா அஜித்து? ஆர்யா தான் ஹீரோவாமே..அஜித் இனி அவ்ளோதானா?’ போன்றவற்றை அஜித் கண்டுகொள்ளாமல், இந்த ஆரோக்கியமான விஷயத்தைத் தொடரவேண்டும். இதில் அவருக்கு ஜோடி-காதல் கண்றாவியெல்லாம் கிடையாது. இருந்தும் அவர் கலக்குகிறார்.

தலை நரைத்த வயதான கேரக்டர் என்பதால் தொப்பை ஒன்றும் பெரிதாக டிஸ்டர்ப் செய்யவில்லை. மேலும் தொப்பை என்பது சராசரி தமிழனின் அடையாளம். எனவே அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனாலும் அந்த ஓப்பனிங் சாங்கை தவிர்த்திருக்கலாம். பார்க்கிற நமக்கே கஷ்டமா இருக்கு!

ஆர்யா:

இன்றைக்கு ஜாலியான பையன் கேரக்டருக்கு ஆர்யா தான் சரியான சாய்ஸ். படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதே அவர் பேசும் டயலாக்ஸ் தான். அஜித்திடம் மாட்டிக்கொண்டு, முதல்பாதியில் அவஸ்தைப்படுகையில் செமரகளை. 
நயன்தரா-டாப்ஸி:
எப்படி இருந்த நயந்தாரா இப்படி ஆகிவிட்டார்?.. இங்கே குவைத்தில் அது கட். நல்லவேளை தப்பித்தோம், இல்லையென்றால் மேலும் பல தொங்கல்களை தெரிந்துகொள்ள வேண்டி வந்திருக்கலாம். படத்தில் அவருக்கும் காதல் என்று ஏதும் இல்லை என்பதாலும், அந்த கேரக்டருக்கு செட் ஆவதாலும் ஒரு நல்ல நடிகையாக அவரை ரசிக்க முடிந்தது.

டாப்ஸி லூசுப்பெண்ணாக வந்தாலும், அந்த கேரக்டரைசேசன் சூப்பர். ஆனாலும் இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறதென்று வாய்ப்பு தருகிறார்களோ புரியவில்லை. என்னமோய்யா...!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இரண்டாம் பாதியில் தான் தெரியும் டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்கே உரிய அச்சுப்பிச்சுத்தனம். ‘இருக்கட்டும்..இருக்கட்டும்..அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க’ எனும் அசட்டு மனோபாவம் அவரது முந்தைய படங்களில் உண்டு. இதிலும் தொடர்கிறது.

- ஓப்பனிங் சாங் + பெல்லி டான்ஸ்

- இழுவையான கிளைமாக்ஸ்

- லாஜிக்கே இல்லாத பின்பாதிக் காட்சிகள்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- அஜித்..அஜித்....அஜித்

- ஜிவ்வெனப் பறக்கும் முதல்பாதி

- என் ஃபுயூஸ் போச்சே பாடலும் ஹே..ராமா(கட்டான) பாடலும்.

- கிளைமாக்ஸில் அஜித் பேசும் டயலாக்

- செம ஸ்டைலிஷான மேக்கிங்.

பார்க்கலாமா? :

தாராளமாக பார்க்கலாம் - படம் மொக்கையல்ல, ஆவரேஜும் அல்ல..அதற்கும் மேலே!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. /////வயித்தெரிச்சல் புலம்பல்களான ‘என்னய்யா..ஆர்யாக்கு அப்பாவா அஜித்து? ஆர்யா தான் ஹீரோவாமே..அஜித் இனி அவ்ளோதானா?’ போன்றவற்றை அஜித் கண்டுகொள்ளாமல், இந்த ஆரோக்கியமான விஷயத்தைத் தொடரவேண்டும். இதில் அவருக்கு ஜோடி-காதல் கண்றாவியெல்லாம் கிடையாது. இருந்தும் அவர் கலக்குகிறார்.///// :-)))

    ReplyDelete
  2. அப்பிடியே தலைக்கு டை அடிச்சு நடிக்கலாம் தல!

    ReplyDelete

  3. அஜித் ஸ்டைல விடுங்க .. உங்க விமர்சன ஸ்டைலே வித்தியாசம்தாம்..

    //காலேஜில் மொக்கையாக இருக்கும் பெண்கள்(நயன்தாரா), பின்னர் செம ஃபிகர் ஆவதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. சில முத்திப்போன ஃபிகர்கள், பின்னாளில் நல்ல ஆண்ட்டிகளாக உருவெடுப்பதுண்டு; ஆனால் நல்ல ஃபிகராக ஆவதென்பது அதிசயம் தான்!// ஹா..ஹா.. செம்ம...!

    ReplyDelete
  4. அருமையான நடு நிலையான விமர்சனம்!////நாயகிகளைக் குறை சொல்லா விட்டால்,உங்களுக்கு ................சரி விடுங்க.///டாப்சியிடம்,டாப்பாக(டப்பா?) எதுவோ இருப்பதால் தான்.............!?

    ReplyDelete
  5. நச் விமர்சனம் நண்பரே...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  6. //ஜீ... said...
    அப்பிடியே தலைக்கு டை அடிச்சு நடிக்கலாம் தல!//

    கதைப்படியே கொஞ்சம் வயதானவர் எனும்போது, தொப்பையும் நரையும் பிரச்சினை இல்லை ஜீ..இதை வைத்து டூயட் ஆடும்போது, நாமே ஓட்டுவோம்!

    ReplyDelete
  7. //Manimaran said...

    அஜித் ஸ்டைல விடுங்க .. உங்க விமர்சன ஸ்டைலே வித்தியாசம்தாம்..//

    அப்டியா...நன்றி.

    ReplyDelete
  8. // Subramaniam Yogarasa said...
    டாப்சியிடம்,டாப்பாக(டப்பா?) எதுவோ இருப்பதால் தான்.............!?//

    டாப்பு எம்ப்ட்டி-ங்கிறது தான் பிரச்சினை ஐயா..நான் மூளையைச் சொன்னேன்!

    ReplyDelete
  9. //மகேந்திரன் said...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..//

    உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  10. செங்கோவி said...டாப்பு எம்ப்ட்டி-ங்கிறது தான் பிரச்சினை ஐயா..நான் மூளையைச் சொன்னேன்!///மூளை 'டாப்' லயா இருக்கு,சொல்லவேயில்ல?ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  11. கலக்கல் விமர்சனம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

    ReplyDelete
  13. // s suresh said...
    கலக்கல் விமர்சனம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  14. //சக்கர கட்டி said...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*//

    நன்றி..தீபாவளியை சந்தோசமாகக் கொண்டாடுங்கள்.

    ReplyDelete
  15. //வயதானால் தொடையும் தொங்கிப்போகும் என்று இன்று தான் தெரிந்துகொண்டேன்.///

    தொடை மட்டுமா ..? இன்னும் நீங்க தெரிஞ்சிக்க நிறைய இருக்கு போல .

    ReplyDelete
  16. அஞ்சா சிங்கம், தொடை’யும்’ என்றே எழுதியிருக்கிறேன்..ஹி..ஹி!

    ReplyDelete
  17. அண்ணே நான். டாப்சி நேர்ல பாத்தேண்ணே,ஆர்யா கூட. வர்ற் சீன் பாண்டில எடுத்தாங்க

    ReplyDelete
  18. //கோகுல் said...
    அண்ணே நான். டாப்சி நேர்ல பாத்தேண்ணே,ஆர்யா கூட. வர்ற் சீன் பாண்டில எடுத்தாங்க//

    ஆர்யா பேரை ரெண்டாவதாச் சொல்றீங்க பாருங்க, அங்க தான் நீங்க நம்மாளுன்னு ப்ரூஃப் பண்றீங்க.

    ReplyDelete
  19. இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டாள் போச்சு :)))

    ReplyDelete
  20. தீபாவளி ரேசில் அப்ப இன்னொரு ஹிட்சு தலக்கு என்று சொல்லுறீங்க !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.