Thursday, November 7, 2013

பாண்டிய நாடு - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நான் இருக்கும் ஊரில் நல்ல படங்களை ரிலீஸ் பண்ணுவதில்லை என்று ஒரு நல்ல கொள்கையை வைத்திருக்கிறார்கள் போலும்..ஆரண்ய காண்டம், கும்கி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என எதுவுமே இங்கே ரிலீஸ் ஆவதில்லை. அந்த வரிசையில் பாண்டிய நாடு. அவங்க ரிலீஸ் பண்ணலேன்னாலும், நாம சும்மா இருந்திட முடியுமா?..கடமைன்னு ஒன்னு இருக்கே...!

ஒரு ஊர்ல..:
எந்த வம்பு தும்புக்கும் போகாத, பயந்த சுபாவமுள்ள விஷாலின் அண்ணன் வில்லன் கோஷ்டியினரால் கொல்லப்படுகிறார். அதற்கு ஒரு பக்கம் விஷாலும், இன்னொரு பக்கம் அவரது அப்பாவும் பழிவாங்க கிளம்புகிறார்கள். இறுதியில் வென்றார்களா என்பதே கதை.

உரிச்சா....:
ஓப்பனிங் சாங், வெறுப்பேற்றும் பஞ்ச் டயலாக் ஏதும் இல்லாமல், ஒரு சோதா ரவுடியிடம் சப்பென்று அடிவாங்கியபடியே அறிமுகம் ஆகிறார் விஷால். அந்த ஒரு காட்சியிலேயே அவரது கேரக்டர் விளக்கப்பட்டுவிடுகிறது. தன் மேல் வீட்டில் வாடகைக்கு இருக்கும் லட்சுமி மேனனை விஷால் லவ்ஸ் விடுவதும், லட்சுமி மேனனை ரூட் விடும் இன்னொரு பையனை, தனது நண்பன் விக்ராந்த் மூலம் அடித்து விரட்டிவிட்டு, லட்சுமி மேனனிடம் பெயர் வாங்குவதும் செம கலகலப்பு.

இந்த அழகான காதல்கதை ஒரு பக்கம் போகும்போதே, இன்னொரு ரவுடியின் கதையும் அவனை எதிர்த்துப் பலியாகும் விஷாலின் அண்ணனின் கதையும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் நான் மகான் அல்ல டெம்ப்ளேட் தெரிந்தாலும், இடைவேளைக்குப் பின், ஒரு சாமானியக் குடும்பம் எப்படி ஒரு தாதாவின் சாம்ராஜ்யத்தை வீழ்த்தியது என்று சொல்லியதில் ஜெயிக்கிறார் சுசீந்திரன்.

பாரதிராஜாவை விஷால் காப்பாற்றும் காட்சி, பரபரப்பின் உச்சம். முடிந்தவரை யதார்த்ததுக்கு அருகிலேயே பயணிக்கும் திரைக்கதை தான் இந்தப் படத்தின் பெரும்பலம். சூரியை அடக்கி வாசிக்க வைத்திருப்பதும் ஆறுதலாக உள்ளது.

ஹீரோ-ஹீரோயின் காதலை விடவும், விக்ராந்த்-அமுதா ஜோடியின் காதல் மனதைத் தொடுகிறது. தமிழ்சினிமாவில் இது ஒரு புதுமைக் காதல் தான்.

விஷால்:
முதலில் ஒரு தயாரிப்பாளராக விஷாலின் இந்த முயற்சிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களைச் சொல்லிவிட வேண்டும். நண்பனைச் சண்டை போட விட்டுவிட்டு டீ குடிப்பதும், கடைசிவரை ஹீரோயிசமே இல்லாமல் நடித்திருப்பதும் ஒரு வெற்றிக்காக மனிதர் எந்தளவுக்கு ஏங்கிப்போயிருக்கிறார் என்று காட்டுகிறது. முதல் கொலைமுயற்சியில் குன்னூரில் அவர் காட்டும் பதட்டம் நிறைந்த ஆக்சனாகட்டும், பாரதிராஜாவைக் காப்பாற்றுகையில் பாசத்தின்பிடியில் தன்னை மறந்து அப்பாவைக் காப்பாற்ற போராடும் பாடி லாங்குவேஜும், கிளைமாக்ஸில் ஆவேசம் கொண்டவராக வில்லனை அடித்து நொறுக்குவதாகட்டும் செம பெர்ஃபார்மன்ஸ். இந்த மூன்றுகட்டத்திலும் அவர் மாறிக்கொண்டே வருவதை வசனம் மூலமாக அல்லாமல், பாடி லாங்குவேஜ் மூலமே காட்டி அசத்துகிறார். 

லட்சுமி மேனன்:
கும்கியில் அறிமுகம் ஆனதால், கும்கி போன்றே ஆகிவிடுவார் போல..முகம் உப்பிக்கொண்டே போகிறது. மேலும் முகம் மட்டுமே உப்பிக்கொண்டே போகிறது. இது நல்லதற்கல்ல என்று யாராவது அவரிடம் சொன்னால் தேவலை. விதவிதமான எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கும் திறமை படைத்த நல்ல நடிகை. ஆனாலும் இதில் ஊறுகாயாகத்தான் அவர் நடிப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். மெயின் கதையில் அவருக்கு வேலை இல்லை. கிடைத்த கேப்பில், நம் மனதைக் கவர்கிறார்.

பாரதிராஜா:
நாம் எதிர்பாராத ஆச்சரியம், பாரதிராஜா எனும் நடிகனை இந்தப் படம் வெளிக்கொண்டு வந்திருப்பது தான். அன்பான, நடுத்தரக் குடும்ப அப்பா கேரக்டரை கண்முன்னே நிறுத்துகிறார். உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போது, ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ சாயல் வருகிறது. அந்த நடிகர் இவரிடம் இருந்துதான், அந்த மாடுலேசனைப் பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். பையனைக் கொன்றவர்களைக் கொல்ல வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகளும் அவரது பரிதவிப்பும் அருமை. 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஓசியில் நெட்டில் பார்த்துவிட்டு, நொட்டை சொல்லலாமா? (உண்மையில் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை.)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விஷால் + பாரதிராஜா நடிப்பு
- இமானின் பாடல்கள் + கதையுடன் பயணிக்கும் பாடல்வரிகள்
- தந்தையை இழந்த குழந்தை, தன் பர்த்டே வீடியோவைப் பார்க்கும் வசனமற்ற அந்தக் காட்சி
- க்ரிப்பான + யதார்த்தமான திரைக்கதை
- நடிகர்களிடம் தேவையான ரியாக்சனை மட்டுமே பெற்றிருக்கும் சுசீந்திரனின் இயக்கம்

பார்க்கலாமா? :

 பார்க்க வேண்டிய படம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

  1. ஒரு பாசிட்டிவான விமர்சனம்... கண்டிப்பா பாக்கலாம்னு சொல்றீங்க... பாத்துருவோம்...

    ReplyDelete
  2. ஸ்கூல் பையன் - என் விமர்சனம் படிக்கலையா நீங்க?

    ReplyDelete
  3. கடைசி பாடல் படத்திற்கு ஸ்பீட் பிரேக்.. அதை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்..

    ReplyDelete
  4. - ஓசியில் நெட்டில் பார்த்துவிட்டு.......ஹி!ஹி!!ஹீ!!!!நானும்(ஓசில) பார்த்தேன்.///அங்க, இங்க கொஞ்சம் அப்புடி,இப்புடி ....................இருக்குத் தான்,இருந்தாலும் ஒரு தடவ பாக்கலாம்!(நான் ஒன்ணரத் தடவ பாத்தேன்!)

    ReplyDelete
  5. ம்ம் பார்போம் விரைவில் !

    ReplyDelete
  6. இயக்குனர் பாரதிராஜாவா விஷாலுக்கு அப்பாவா நடிப்பது!? புதுத் தகவலா இருக்கே!

    ReplyDelete
  7. பார்த்துடுவோம்! அருமையான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  8. கண்டிப்பா பாக்கலாம்னு சொல்றீங்க... பாத்துருவோம்...

    ReplyDelete
  9. தீவாளிக்கு மக்காநாள் என் பசங்களுடன் இந்த படம் போனேன். நல்ல படம் பார்த்த திருப்தி.

    ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ சாயல் வருகிறது. அந்த நடிகர் இவரிடம் இருந்துதான், அந்த மாடுலேசனைப் பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன்.

    எனக்கும் இப்படி தோன்றியது.

    ReplyDelete
  10. //ஸ்கூல் பையன்said...
    ஒரு பாசிட்டிவான விமர்சனம்... கண்டிப்பா பாக்கலாம்னு சொல்றீங்க... பாத்துருவோம்...//

    பெரிதாக குறை ஏதும் இல்லை ஸ்கூல் பாய்!

    ReplyDelete
  11. //கோவை ஆவிsaid...
    கடைசி பாடல் படத்திற்கு ஸ்பீட் பிரேக்.. அதை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்..//

    ஸ்பீட் பிரேக் தான்..அனாலும் நல்ல பாட்டு இல்லியா? வேறு இடத்தில் வைத்திருக்கலாம்.

    ReplyDelete
  12. //Subramaniam Yogarasa said...
    ஒரு தடவ பாக்கலாம்!(நான் ஒன்ணரத் தடவ பாத்தேன்!) //

    தெரியும்..கலாச்சிஃபை பாட்டை 10 தடவை பார்த்திருப்பீங்க.

    ReplyDelete
  13. //தனிமரம்said...
    ம்ம் பார்போம் விரைவில் ! //

    பாருங்கள் நேசரே.

    ReplyDelete
  14. //ராஜிsaid...
    இயக்குனர் பாரதிராஜாவா விஷாலுக்கு அப்பாவா நடிப்பது!? புதுத் தகவலா இருக்கே! //

    ஆமாங்க, காந்தி செத்துட்டாரு..அட ராமா!

    ReplyDelete
  15. //s suresh said...
    பார்த்துடுவோம்! அருமையான விமர்சனம்! நன்றி!//
    நன்றி சுரேஸ்.

    ReplyDelete
  16. //வெட்டி பையன்said...
    கண்டிப்பா பாக்கலாம்னு சொல்றீங்க... பாத்துருவோம்...//

    பாருங்க வெட்டி.

    ReplyDelete
  17. //அமுதா கிருஷ்ணாsaid...
    தீவாளிக்கு மக்காநாள் என் பசங்களுடன் இந்த படம் போனேன். நல்ல படம் பார்த்த திருப்தி.//

    ஆமாம்..தரமான கம்ர்சியல் படம்.

    ReplyDelete
  18. //harees said...
    Parkanum pole iruku //

    அப்போ பார்த்திடுங்க பாஸ்.

    ReplyDelete
  19. பார்த்தாச்சு...
    மிகவும் அருமையான படம்...
    நல்ல விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இனிமே உங்க விமர்சனத்தை முழுசா நம்பக்கூடாதுன்னு தெரியுது. :) என்ன மூட்ல இருந்தீங்களோ.. எனக்கு படம் பெருசா பிடிக்கல. நீங்கள் சொன்ன ஒரு சில வித்தியாசங்கள் தவிர பெருசா ஒண்ணுமில்ல. அது மட்டுமில்லாம, இந்த பழி வாங்கற கான்செப்ட் எனக்கு சரி வராது. அதுலேயும் ஒரு மகா மெகா வில்லனை, கமிஷனர்-அமைச்சர் எல்லாரையும் கைக்குள்ள வச்சிருக்கறவனை குருவி சுடறமாதிரி பப்ளிக்ல போட்டுத்தள்ளறவனை ஒரு பிள்ளைப்பூச்சி வெறும் ஒரு வருஷமா பாலோ பண்ணி, தனி ஆளா, அதுவும் யாருக்கும் தெரியாம முடிக்கறது.... ஸ்ஸ்ஸப்பா வில்லன் விழுந்து சாகற குழியவிட இது பெரிய லாஜிக் குழி. நீங்களே சொல்லுங்க, இப்போ மதுரை தாதா-வா இருக்கறவர் ரேஞ்சுக்கு (பெயர் சொன்னா ஆட்டோ வருமா?) ஒரு வில்லனை காட்டிட்டு இப்படி ஒரு என்டிங் குடுத்தா எப்படி?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.