குவைத்தில் ‘இருக்கு ஆனா இல்லை’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடப்பதாக நியூஸ் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ‘யார் இவங்க..இந்த பாலைவனத்துல ஏன் ரிலீஸ் பண்றாங்க?’ என்று யோசிக்கும்போதே, பிரபல சினிமா இணையதளமான தமிழ்ஸ்ஸ்.காமில் இருந்து தொடர்பு கொண்டார்கள். நிகழ்ச்சியை கவர் செய்து தருவதாக ஒத்துக்கொண்டேன். நிகழ்ச்சி நடக்கும் இட விவரங்களையும் அளித்தார்கள். பார்த்தால், நம்ம பக்கத்து ஏரியா, மங்காஃப்.
அந்த ஏரியாவில் இருக்கும் நண்பர் சந்துருவைக் கூப்பிட்டு ‘ஏஞ்சாமி, அங்கே கேம்பிரிட்ஜ் ஸ்கூல் எங்க இருக்கு?’ என்று கேட்டேன். அவர் ‘அதை ஏன் நீ கேட்கே?’ என்றார். பிறகு விவரத்தைச் சொன்னதும், ‘ஆமா..இன்விடேசன் என்கிட்ட இருக்கு’என்றார். ‘அப்படியா..ரொம்ப தேங்ஸ் பாஸ்’ எனும்போதே ‘ஆனா, உன்னையெல்லாம் கூட்டிப்போக மாட்டேன். நீ யோக்கியன் மாதிரி விமர்சனம் எழுதுவே, அப்புறம் என்னையும் சேர்த்து கும்மிடுவாங்க. ஓடிப்போயிரு’ என்றார். அடப்பாவிகளா, யோக்கியனா இருக்கிறது ஒரு குத்தமாய்யான்னு நினைச்சுக்கிட்டு, ’படத்துக்குத்தான்யா விமர்சனம் எழுதுவோம். பங்சனுக்கெல்லாம் எழுத மாட்டோம்’ என்றேன். பிறகு பெரிய மனதுடன், ’வந்து தொலை’ என அழைத்துச் சென்றார்.
நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியம் கொஞ்ச நேரத்தில் நிறைந்துவிட்டது. எப்படியும் 500 பேர்களாவது வந்திருப்பார்கள். பிறகு தான் தெரிந்தது, படத்தின் தயாரிப்பாளர்கள் நான்குபேருமே குவைத் வாழ் தமிழர்கள் என்று. எனவே தமிழ்சொந்தங்கள் திரண்டு வந்து, தங்கள் ஆதரவைக் காட்டிவிட்டார்கள். நம்ம பி.டி...அதாங்க ப்ரியதர்ஷிணி தான் நிகழ்ச்சித் தொகுப்பு. பளிச்சென்று வந்திருந்தார்.
ஆதித்யா டிவியில் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சியில் கலக்கும் ஆதவன், இதில் ஹீரோவுக்கு ஃப்ரெண்டாக நடிக்க்கிறாராம். எனவே அவரும் பி.டி.யுடன் நிகழ்ச்சித் தொகுப்பில் சேர்ந்துகொண்டார். செம ரகளையான மனுசன். கடைசிவரை நிகழ்ச்சி சுவாரஸ்யமாகப் போனதுக்கு ஆதவனும் ஒரு காரணம். கண்ணுக்கு பி.டி, காதுக்கு ஆதவன் என நல்ல காம்பினேசன்!
ஹீரோ புதுமுகம் ஆனா புதுமுகம் இல்லை. ஜெயா டிவியில் முன்பு ‘டேக் 5 ‘ என்று ஒரு நிகழ்ச்சி வந்ததாம். அதன் வீஜே அவர் தானாம். ஜெயா டிவி பார்க்கும் அளவிற்கு நமக்கு மனதில் தெம்பில்லை என்பதால், நான் பார்த்ததில்லை. பேர் விவாந்த் என்றார்கள். ஆனால் மனுசன் நன்றாகப் பேசினார். ‘ஒரு ஹீரோவா நான் வெளில தெரியறதுக்குப் பின்னாடி கேமிரா மேன், இயக்குநர்னு எவ்வளவோ பேரோட உழைப்பு இருக்கு. அவங்களுக்கு நன்றி’ என்றார். என்ன ஒன்னு, வந்த எல்லாருமே, ஹீரோயின்ஸ் உட்பட தமிழில் பேச, அண்ணாத்த மட்டும் கொஞ்சம் பீட்டர் விட்டார்.
இயக்குநர் சரவணன், மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தைச் சார்ந்தவராம். ரொம்ப அமைதியான மனிதர் என்று எல்லாரும் புகழ்ந்தார்கள். அவரும் அப்படித்தான் இருந்தார். முதல் பட ஆடியோ பங்சன் என்பதால், கொஞ்சம் நெர்வஸாக இருந்தார். பிறகு நடந்தது ஹீரோயின்ஸ் அறிமுகப்படலம். (உய்ய்..உய்ய்!)
முதல் ஹீரோயின் ஈடன், கேரள தேசத்திலிருந்து புது வரவு. பார்த்தாலே கேரளா என்று தெரியும் அளவிற்கு, தமிழனுக்குப் பிடித்த அம்சங்களுடன் இருந்தார். இரண்டாவது ஹீரோயின் மனீஷா ஸ்ரீயும் ஈடனும் சேர்ந்து ஹீரோவுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள். அதிலும் ஈடனின் ஆட்டம் அபாரம். அந்த பாட்டு முடியவும், பக்கத்து ஏரியாவான அபுஹலிபாவில் இருந்து நண்பனின் ஃபோன் வந்தது, ‘மாப்ளை..இங்க திடீர்னு பூகம்பம்..’ என்று! ஈடனின் ஆட்டத்திற்கு எர்த் குவாக் கூட வரலேன்னா எப்படி என்று நினைத்துக்கொண்டேன். நண்பன் தொடர்ந்து ‘வீடெல்லாம் குலுங்குச்சு..அங்க என்ன நிலைமை?’ன்னான். ’இங்கயும் அதே நிலைமை தான்.’ என்றேன்!
படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பானது. செமயாக எடுத்திருந்தார்கள். த்ரில்லர் மூவி. கூடவே காமெடியும் இருக்கும்போல..எல்லாரும் ரசிக்கும்படி இருந்துச்சு, அந்த ட்ரைலர். படத்தோட பாடல்களும் அருமை. ஷமீர்னு புது மியூசிக் டைரக்டர். பார்க்க சின்னப்பையனாக இருக்கிறார். ஆனால் மியூஸிக்கில் கலக்கியிருகார். ‘இது என்ன?’ என்று ஒரு பாட்டு. பாடகர் தீபக் ஸ்டேஜில் பாடினார் பாருங்கள், எல்லாரும் அசந்துவிட்டார்கள். அப்படி ஒரு லவ் ஃபீல் அந்த பாட்டில். நிச்சயம் அது ஹிட் ஆகும்! நல்ல சிம்பிளான டியூன். அதே போன்றே ‘இருக்கு..ஆனா இல்லே’ன்னு ஒரு பாட்டு. நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள்லாம், பின்னர் அந்தப் பாட்டைத்தான் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த மியூசிக் டைரக்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒரு ரவுண்டு வருவார். கடைசியில் இங்கே பிரபலமான உதயம் ரெஸ்டாரண்ட் சாப்பாடு. வந்த எல்லாருக்குமே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ரெஸ்டாரண்ட் ஓனரும் ஒரு தயாரிப்பாளராம். நன்றாக மொக்கிவிட்டு, வீடு வந்து சேர்ந்தோம்.
tamilss.com செய்திக்கு : http://tamilss.com/2013/11/23/iai-audio-from-kuwait/
tamilss.com செய்திக்கு : http://tamilss.com/2013/11/23/iai-audio-from-kuwait/
Boss.. you enjoyed the earthquake when I came to tamilnadu..
ReplyDeleteNext time don't forget to inform me. I'm in mahboula only. .
‘ஆனா, உன்னையெல்லாம் கூட்டிப்போக மாட்டேன். நீ யோக்கியன் மாதிரி விமர்சனம் எழுதுவே, அப்புறம் என்னையும் சேர்த்து கும்மிடுவாங்க. ஓடிப்போயிரு’ என்றார். அடப்பாவிகளா, யோக்கியனா இருக்கிறது ஒரு குத்தமாய்யான்னு நினைச்சுக்கிட்டு, ’படத்துக்குத்தான்யா விமர்சனம் எழுதுவோம். பங்சனுக்கெல்லாம் எழுத மாட்டோம்’ என்றேன். பிறகு பெரிய மனதுடன், ’வந்து தொலை’ என அழைத்துச் சென்றார்.///
ReplyDeleteஹா ஹா எழுத்த மாட்டேன்னு எழுதிபுட்டீகளே
‘மாப்ளை..இங்க திடீர்னு பூகம்பம்..’ என்று! ஈடனின் ஆட்டத்திற்கு எர்த் குவாக் கூட வரலேன்னா எப்படி என்று நினைத்துக்கொண்டேன். நண்பன் தொடர்ந்து ‘வீடெல்லாம் குலுங்குச்சு..அங்க என்ன நிலைமை?’ன்னான். ’இங்கயும் அதே நிலைமை தான்.’ என்றேன்!\\\\\
உங்களுக்கு ண்ணே
நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணே... நேரில் பாத்தா மாதிரி இருக்கு...
ReplyDeleteகங்கிராலுஷேஷன்'ஸ்!நல்ல நேரடி விமர்சனம்.எல்லாரையும் 'நேரா' வே பாத்துட்டீங்க!///நிகழ்ச்சித் தொகுப்பு டீ.டீ யா?.............பாத்தா,அவங்க அக்கா மாதிரி தெரியுதே?
ReplyDelete// vivek kayamozhi said...
ReplyDeleteBoss.. you enjoyed the earthquake when I came to tamilnadu..
Next time don't forget to inform me. I'm in mahboula only. .//
நிஜமாகவே உங்க ஏரியால எர்த்குவாக் பாஸ்..தப்பிச்சோம்னு நினைச்சுக்கோங்க.
//சக்கர கட்டி said...
ReplyDeleteஹா ஹா எழுத்த மாட்டேன்னு எழுதிபுட்டீகளே//
இல்லை சக்கரை, அவர் சொன்னது சினிமா விமர்சனம் எழுதக்கூடாதுன்னு.
//ஸ்கூல் பையன் said...
ReplyDelete. நேரில் பாத்தா மாதிரி இருக்கு..//
சாமி சரணம்!
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteநிகழ்ச்சித் தொகுப்பு டீ.டீ யா?.............பாத்தா,அவங்க அக்கா மாதிரி தெரியுதே?//
எப்பவும் டிடி ஞாபகமா..இது பி.டி!
செங்கோவி said...எப்பவும் டிடி ஞாபகமா..இது பி.டி!///அதுக்கு 'மைந்தர்' வுட மாட்டாரே?
ReplyDeleteநாமெல்லாம் ஆரு ? எழுத மாட்டேம்னு எழுதுவோம்ல...
ReplyDeleteநிகழ்சிகள் அருமையாக இருந்திருப்பது உங்கள் எழுத்தில் புரிகிறது.
படம் வரட்டும் விமர்சனமும் எழுதுவோம்ல.
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteசெங்கோவி said...எப்பவும் டிடி ஞாபகமா..இது பி.டி!///அதுக்கு 'மைந்தர்' வுட மாட்டாரே?//
ஐயா, நான் பிள்ளைகுட்டிக்காரன்..என்னை விட்றுங்க!
//MANO நாஞ்சில் மனோ said... [Reply]
ReplyDeleteநாமெல்லாம் ஆரு ? எழுத மாட்டேம்னு எழுதுவோம்ல...//
பின்னே, யோக்கியன்னா சும்மாவாண்ணே!
சூப்பரா எழுதியிருக்கீங்க....
ReplyDeleteபாஸ் ஒரு ரிபோர்டர் லெவலுக்கு போயிடீங்க .வாழ்த்துக்கள் . இருந்தாலும் இப்படி நேரடி தரிசனம் கிடைப்பது அபூர்வம்தான் . அதுக்கும் ஒரு லக் வேணும் .....
ReplyDelete.
//சே. குமார் said...
ReplyDeleteசூப்பரா எழுதியிருக்கீங்க....// நன்றி குமார்.
//Manimaran said...
ReplyDeleteபாஸ் ஒரு ரிபோர்டர் லெவலுக்கு போயிடீங்க .வாழ்த்துக்கள் . இருந்தாலும் இப்படி நேரடி தரிசனம் கிடைப்பது அபூர்வம்தான் . அதுக்கும் ஒரு லக் வேணும் ..//
ஹி..ஹி..ஹி!
நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வைத்தரும் வண்ணம் பகிர்ந்ததுக்கு நன்றி. பாட்டை அடுத்த வருடம் கேட்கின்றேன் இப்போது....குலுங்க முடியாது சாமி!ஹீ
ReplyDeleteஆன்மீக உலா முடிச்சிட்டு வந்து கேளுங்க நேசரே.
ReplyDeleteஅண்ணே, நெசமாத்தான் சொல்றீகளா? பாட்டு எல்லாம் நல்லாத்தான் இருக்கா? இல்ல, சாப்பிட்ட உதயம் ரெஸ்டுரன்ட் சாப்பாட்டுக்காக சொல்றீகளா?
ReplyDelete@Dr. Butti Paul (Real Santhanam Fanz) என்னய்யா இது..இப்படி ஒரு குண்டை போடுறீங்க..நான் வேற வீட்டுச்சாப்பாடு இல்லாம நாக்கு செத்து அலையறேன்...ம், எதுக்கும் நீங்களே ஒரு தடவை கேட்டுச் சொல்லிடுங்களேன்.
ReplyDelete