Wednesday, November 6, 2013

மலையாளத்திலேயே தமிழ்சினிமா எடுத்தால் என்ன?

ஒரு பக்கம் விஷ்ணுபுரம், காடு, அறம் போன்ற உயரிய படைப்புகளைப் படைத்துக்கொண்டே, இன்னொரு பக்கம் எதையாவது சொல்லி ரகளையைக் கிளப்பிவிடுவது எழுத்தாளர் ஜெயமோகனின் ஸ்டைல். அந்த வகையில் இப்போது ஒரு அற்புதமான(!) எழுத்துச் சீர்திருத்தத்தைச் சொல்லியிருக்கிறார். அதில் இருக்கும் அபத்தங்களை ஒதுக்கிவிட்டுப் பார்க்கையில், நாம் மேலும் முன்னெடுக்க வேண்டிய பல சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வந்தது. அதில் ஒன்றை இங்கே அலசுவோம்.

மிழ்நாட்டில் ஒரு மல்லு பட போஸ்டரைப் பார்த்தேன். வெற்றிகரமான இரண்டாவது வார போஸ்டர் அது. பரபரப்பாக ஓடும் ஒரு தமிழ்ப்படமே, இரண்டு வாரம் தான் ஓடுகிறது; அதில் பாதி, விமர்சனம் படிக்காமலே புக்கிங் செய்து சிக்கிக்கொள்ளும் கூட்டத்தால் ஓடுபவை.  ஏன் இந்த நிலைமை என்று சிந்தித்தேன்.

நம் இளைய தலைமுறை ஏராளமாகப் படம் பார்க்கிறது; ஆனால் தமிழ்ப்படம் பார்ப்பதில்லை. காரணம், பாலியல் கல்வி எனப்படும் வாழ்க்கைக்கல்வியை அவை போதிப்பதில்லை. வயது வந்த வாலிபருக்கு, வாழ்க்கைக் கல்வி அவசியம் என்பது நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. வாலிபத்தின் போக்கு அது. மல்லுப் படங்களே அத்தகைய கல்வியை இளைஞர்களுக்குப் புகட்டுகின்றன. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

ஆனாலும் ஃபேஸ்புக்கில் கடலை போட தமிழ்ப்படம் பார்ப்பதும் கட்டாயமாகிறது. விளைவாக, வாலிபர்கள் தமிழ்ப்படத்தையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து வருகிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு கவனம் நீடிப்பது இல்லை.

அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். அதிலும் மலையாளம் முழுதாகப் புரியாமல், அதிலிருந்து வாழ்க்கைக்கல்வியைக் கற்றுக்கொள்வதன் அபாயத்தை நீங்கள் உணர வேண்டும். நல்லவேளையாக சேட்டன்கள் தமிழ்ப்படம் போல் கில்மாப்படங்களை சிக்கலான கதை வடிவில் எடுப்பதில்லை.

எப்போதும் எளிமையான கதைகள் தான். ஒரு வயோதிக கணவன். அவனுக்கு கும்மென்று ஒரு மனைவி. பக்கத்து வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி. இந்த எளிய வடிவத்தைத் தொலைத்ததாலேயே தமிழ்சினிமா இன்று இளைஞர்களின் கவனத்தைப் பெற முடியாமல் போயிற்று எனலாம்.

மல்லு சினிமாவுக்கும் மொழிக்குமான உறவு என்பது அந்த முடியாத கணவனுக்கும் நாட்டுக்கட்டை மனைவிக்கும் இடையேயான உறவு போன்றது தான். எனவே தான் பாதி புரிந்தும் புரியாத நிலையிலும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வாலிபர்கள் அத்தகைய படங்களைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் சமூகவியல் ஆய்வாளரான ஃபூஷேல் மூக்கோ “ரசனை என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார்.

இந்நிலையில், இந்திய வாலிபர்கள் இளமையில் ஒரே சமயம் இரண்டு மொழிகளின் முன்னால் நிறுத்தப்படுகிறார்கள். இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. எனவே தான் அனைத்து தமிழ்ப்படங்களையும் மலையாளத்திலேயே எடுத்துவிட்டால், இந்த சிக்கல் தீரும் என்கிறேன். 

தமிழ்-மலையாளச் சிக்கல் மட்டுமல்லாது, இந்த இணைய உலகில் இது மேலும் பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது. யூடியூப்பில் Love Day (Hindi Movie)-Hot shakeelaa என்று பார்த்ததும் அதை ஓப்பன் செய்யும் ஒரு இளைஞன், அது தன் சிறு வயதிலேயே பார்த்துச்சலித்த லயனம் படத்தின் டப்பிங் என்று தெரியும்போது, அடையும் விரக்தியும் வேதனையும் எழுத்தில் சொல்ல முடியாதது. எனவே தான் சொல்கிறேன், எல்லாருமே மலையாளத்தில் மட்டுமே படங்களை எடுத்தால் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

’ஆஹா..இவன் தமிழ்சினிமாவை அழிக்கப் பார்க்கிறான்..தமிழ் கலாச்சாரமே பாழாகிவிடும். இனி தமிழ்க்கதாநாயகிகளும் மாராப்பு இல்லாமல் டிங்கென்று நிற்க நேரிடும்’என்றெல்லாம் சில வயதான அசடுகள் கூக்குரலிடலாம். ஆனாலும் இதில் இருக்கும் இரு நல்ல விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர்-சாமி போன்ற நல்ல இயக்குநர்களின் படங்களை மலையாளத்தில் மட்டுமே எடுக்க ஆரம்பிக்கலாம். பொருத்தமாகவும் இருக்கும். பின்னர் படிப்படியாக எல்லாப் படங்களையுமே மல்லுமயமாக்கி விடலாம்.

இதைப் படித்ததும் உங்களைப் போன்ற அசடுகளுக்கு என்னவிதமான நாறக்கேள்விகள் தோன்றும் என்பதையும் நான் யோசித்துவிட்டேன். கேட்டால், அதற்கு இன்னும் நாறத்தனமாக பதில் சொல்ல சித்தமாக இருக்கிறேன். எமது தரப்பின் நியாயத்தை நீங்கள் உணர, ஆண்டவன் அருள் பாலிக்கட்டும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

  1. ஹா ஹா ... என்னா கலாய்ப்பு ...!

    ReplyDelete
  2. அப்படி எல்லாப் படங்களும் மல்லுல எடுத்தா நஸ்ரியா அம்மிணி டூப் போட்டு எடுத்துட்டாங்கன்னு சொல்லுமே...!நான் நெசமான்னு வேற நம்பிக்குவேன்! அப்புறம் இதைக் கேள்விப்பட்டு வெம்பிப்போவேன்! அதனால இதை நான் ஆதரிக்கமாட்டேன்..!
    இதை நான் ஆதரிக்கமாட்டேன்..!
    இதை நான் ஆதரிக்கமாட்டேன்..!

    ReplyDelete
  3. அருமையான,ஆக்கபூர்வமான அலசல்!இதை அந்தப் 'பிரகிருதி' க்கு அனுப்ப வேண்டுமே?///“ரசனை என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி”.--- ஃபூஷேல் மூக்கோ.

    ReplyDelete
  4. வீடு சுரேஸ்குமார் said...இதைக் கேள்விப்பட்டு வெம்பிப்போவேன்!///"எது" 'எப்படி' இருந்தாலும்,நாங்க எடுக்கிறது,எடுக்கிறது தான்!

    ReplyDelete
  5. // Manimaran said...
    ஹா ஹா ... என்னா கலாய்ப்பு ...!//

    நன்றிய்யா.

    ReplyDelete
  6. //வீடு சுரேஸ்குமார் said...
    அப்படி எல்லாப் படங்களும் மல்லுல எடுத்தா நஸ்ரியா அம்மிணி டூப் போட்டு எடுத்துட்டாங்கன்னு சொல்லுமே...//

    நஸ்ரியாவைத் திருத்த ஒரு அரிய வாய்ப்பு..விட்டுடாதீங்க.

    ReplyDelete
  7. // Subramaniam Yogarasa said...
    அருமையான,ஆக்கபூர்வமான அலசல்!இதை அந்தப் 'பிரகிருதி' க்கு அனுப்ப வேண்டுமே?///“ரசனை என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி”.--- ஃபூஷேல் மூக்கோ.//

    கும்பிடுறேன் சாமீ!

    ReplyDelete
  8. புதுசா எடுக்க வேண்டியதில்லண்ணே, ஏற்கனவே எடுத்த படத்துக்கு மலையாள டப்பிங் கொடுத்து இதுதான் அந்த ஒரிஜினல்னு சொல்லிடலாம்ணே.......!

    ReplyDelete
  9. ஆஹா ஆஹா சூப்பர் ஐடியா சார்!ம்ம்

    ReplyDelete
  10. இதே மல்லு ஸ்டையிலில் சில இலங்கை சிங்கள திரைக்காவியம் கூட இருக்கு இப்போது சொல்ல முடியாது /ம்ம் தொட்ர்ந்து பேசலாம்!ஹீ சகிலா வகைகள்§

    ReplyDelete
  11. அந்தாளுக்கு "வெளக்குமாறன்"ன்னு பேர் வச்சாச்சு, இனி அப்படியே அழைக்க வேண்டும்.

    ReplyDelete
  12. மார்"கெட்டு போனவிங்கதான் அங்கே போகணும், நஸ்ரியா அங்கே போகத்தான் வேணுமா வீடு ?

    ReplyDelete
  13. ”உற்பத்தி”...... ”அஞ்சரைக்குள்ள வண்டி” போன்ற படங்கள் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது என்பதையும் இங்கே பதிய கடமைப்பட்டுள்ளேன்.... ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்கிற அளவில் பட காட்சிகள் நீட்சிகள் பெற வேண்டும்..... எடுத்தோம் கவிழ்த்தோமென்று திடீரென்று திணிக்கக்கூடாது.....அதனால் தான் துண்டுகள் அவிழ்ந்ததும் ரசிகனும் கழண்டு விடுகிறான்.

    ReplyDelete
  14. ஆஹா.......எல்லாம் கும்பலா ஒன்னாவுள்ள வந்து சேந்திருக்கு .......ஒடுலேய் .........

    ReplyDelete
  15. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
    புதுசா எடுக்க வேண்டியதில்லண்ணே, ஏற்கனவே எடுத்த படத்துக்கு மலையாள டப்பிங் கொடுத்து இதுதான் அந்த ஒரிஜினல்னு சொல்லிடலாம்ணே.......! //

    யோவ், நான் புதுசா எடுக்கப்போற படத்துக்கும் சேர்த்துப் பேசிக்கிட்டிருக்கேன்யா.

    ReplyDelete
  16. //தனிமரம்said...
    இதே மல்லு ஸ்டையிலில் சில இலங்கை சிங்கள திரைக்காவியம் கூட இருக்கு இப்போது சொல்ல முடியாது //

    சரி, விரதம் முடிந்தபிறகு சொல்லுங்கள் நேசரே.

    ReplyDelete
  17. //MANO நாஞ்சில் மனோsaid...
    அந்தாளுக்கு "வெளக்குமாறன்"ன்னு பேர் வச்சாச்சு, இனி அப்படியே அழைக்க வேண்டும். //

    ஒருத்தரு தப்பான கருத்துச் சொல்றாருன்னா,அந்த கருத்தை எதிர்க்கலாம்..அதிலுள்ள அபத்தத்தை இந்த மாதிரி கிண்டலடிக்கலாம். ஆனா பட்டப்பெயர் வச்சு விளைடாறதை நான் சின்ன வயசுலேயே விட்டாசுண்ணே!

    ReplyDelete
  18. \\எப்போதும் எளிமையான கதைகள் தான். ஒரு வயோதிக கணவன். அவனுக்கு கும்மென்று ஒரு மனைவி. பக்கத்து வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி. \\இதையும் பார்க்க மானங்கெட்ட பயல்கள் ரெடியா இருக்கானுவ. இது கூட பரவாயில்லை, கவர்ச்சி கன்னியை இரசித்தால் பரவாயில்லை, ஒரு பன்னியை போயி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு பார்க்கிறதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு....................

    ReplyDelete
  19. // Manickam sattanathan said... [Reply]
    ஆஹா.......எல்லாம் கும்பலா ஒன்னாவுள்ள வந்து சேந்திருக்கு .......ஒடுலேய் //

    அண்ணே, ஓடாதீங்க..நல்ல ஒரு தீர்ர்பு சொல்லிட்டுப் போங்க.

    ReplyDelete
  20. //வெளங்காதவன்™ said...
    யோவ்.. யோவ்.....
    //

    hi..hi.

    ReplyDelete
  21. //Jayadev Das said... //

    உமக்கு நோய் வந்த கோழி போல் இருக்கும் ஸ்லிம் பார்ட்டிகளைத்தான் பிடிக்கும் என்பதை யாம் அறிவோம். பன்னியையும் கருணையோடு நோக்கும் எமது நல்ல உள்ளத்தைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, திட்டி மன்றத்தைக் கலைக்காமல் இரும்!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
    புதுசா எடுக்க வேண்டியதில்லண்ணே, ஏற்கனவே எடுத்த படத்துக்கு மலையாள டப்பிங் கொடுத்து இதுதான் அந்த ஒரிஜினல்னு சொல்லிடலாம்ணே.......! //

    //யோவ், நான் புதுசா எடுக்கப்போற படத்துக்கும் சேர்த்துப் பேசிக்கிட்டிருக்கேன்யா//
    டிஜிட்டல்,3D ன்னு ஆக்கி Rerelease செய்யலாம்.3D நல்லாயிருக்கும்.5.1 எபெக்டுல 32இன்ச் எல்ஈடி டிவில ன்னு நெனச்சு பாக்கும் போதே ஒணர்ச்சி பொங்குதுங்க.@செங்கோவி

    ReplyDelete
  24. @MANO நாஞ்சில் மனோ
    //மார்"கெட்டு போனவிங்கதான் அங்கே போகணும்//
    மார்பு புற்றுநோயால் பாதிக்கப் பட்டவங்க அங்கே போலாமா?

    ReplyDelete
  25. @செங்கோவி
    //Manickam sattanathan said... [Reply]
    ஆஹா.......எல்லாம் கும்பலா ஒன்னாவுள்ள வந்து சேந்திருக்கு .......ஒடுலேய் //

    அண்ணே, ஓடாதீங்க..நல்ல ஒரு தீர்ர்பு சொல்லிட்டுப் போங்க//.
    தீர்ப்பெல்லாம் வேண்டாமுங்க.யூ ட்யூப் ல ஒரு நல்ல லிங்க் குடுத்துட்டு போங்க

    ReplyDelete
  26. @Jayadev Das
    //\\எப்போதும் எளிமையான கதைகள் தான். ஒரு வயோதிக கணவன். அவனுக்கு கும்மென்று ஒரு மனைவி. பக்கத்து வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி. \\இதையும் பார்க்க மானங்கெட்ட பயல்கள் ரெடியா இருக்கானுவ. இது கூட பரவாயில்லை, கவர்ச்சி கன்னியை இரசித்தால் பரவாயில்லை, ஒரு பன்னியை போயி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு பார்க்கிறதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு//
    இந்தாள புடிச்சு உள்ள போடுங்க சார்.

    ReplyDelete
  27. //இளமையில் இரண்டு மொழிகளின் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம்.//மொழி பிரச்னையே இல்லாம வர்ற படமெல்லாம் பாத்ததில்லையா.நீயெல்லாம் ஒரு பதிவன். ஒனக்கெல்லாம் ஒரு இண்டர்நெட் இணைப்பு.

    ReplyDelete
  28. கலக்கல் கலாய்த்தல்! சிரிப்பு தாளவில்லை! நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.