அதாகப்பட்டது... :
நகைச்சுவைப் பட இயக்குநர் என்றால் சுந்தர்.சிக்கு அப்புறம் நம் நினைவுக்கு வருவது ராஜேஸ் தான். அந்த அளவுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்து நம் மனதைக் கொள்ளையடித்த அவரும் சகுனி-அலெக்ஸ்பாண்டியன் தோல்விக்குப் பின் ஹிட் கொடுக்கவேண்டிய கார்த்தியும் இணையும் படம் என்பதால் ஏக எதிர்பார்ப்பு. ஆரம்பம் படம் பார்க்கப் போகையில்கூட கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் ராஜேஸ்-கார்த்தி-சந்தானம் கூட்டணி என்றதும் குஷியாக ஓடி.......
ஒரு ஊர்ல..........:
லோக்கல் சேனல் ஒன்று நடத்திவரும் கார்த்தியின் லட்சியம், அந்த மொக்கைச் சேனலை நம்பர் 1 சேனலாக்கிவிட்டுத்தான் கல்யாணம் முடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறார். ஆனாலும் படத்தில் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பதால், காதலில் விழுகிறார். சரி, ஃபேமிலி மெம்பர்ஸை 5 ஆக்கிட்டு. சேனலை நம்பர் 1 ஆக்கலாம்னு அப்பா-அம்மா ஆசியோட முடிவு பண்றார். அப்போத்தான் அந்த பயங்கர உண்மை தெரியவருது. ஆமாங்க, ரெண்டு குடும்பத்துக்கும் ஃப்ளாஷ்பேக்லயே தகராறு. அப்புறம் என்ன, அதையும் தாண்டி காதல் ஜெயிச்சதான்னு அவங்க சொல்றதுக்குள்ள, எல்லாரும் தியேட்டர் காம்பவுண்ட்டைத் தாண்டி ஓடறாங்க!
உரிச்சா....:
யப்பா...சாமீ..இப்போத்தான் நய்யாண்டின்னு ஒரு மொக்கைகிட்ட மாட்டி சிக்கி சின்னாபின்னமானோம். அதுக்குள்ள அதைவிட டபுள் தமாக்கா-வா இதை இறக்கியிருக்காங்க. இன்னும் அதிர்ச்சியாத்தான் இருக்கு, நம்ம ராஜேஸ் படமா இதுன்னு.
சேனலை நம்பர் 1 ஆக்கவும், ஹீரோயினை கரெக்ட் பண்ணவும் ஹீரோக்கு உதவ வழக்கம்போல் சந்தானம். ஆனா படம் முழுக்க ரெண்டுபேருமே வாங்க-போங்கன்னு பேசிக்கிறதால பழைய கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங். சரி, ஏதாவது உருப்படியா பண்றாங்களான்னா அதுவும் இல்லை. படம் ஆரம்பிச்சு அரைமணி நேரம் இவங்க ரெண்டுபேரு மட்டுமே ஸ்க்ரீன்ல இருக்காங்க.ஆனாலும் சிரிப்பு..ம்ஹூம்.
இடையில் சேனல் விளம்பரத்துக்காக, சந்தானத்துக்கு பெண்வேடமிட, கோட்டா சீனிவாஸ் சந்தானம்மீதே ல்வ்ஸ் ஆவது தான் முதல்பாதியில் ஒரே ஒரு காமெடி. உண்மையில் அவர்கள் இருவர் வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் தான். ரின்காஜல் அகர்வாலுக்கு தான் ஒரு நல்ல பாடகின்னு நினைப்பு இருக்கிறதும், கார்த்தி அதை உடைக்கிறதும் ஓகே. ஆனாலும் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்க். ஒருவழியாக லவ் ஓகே ஆகி, அப்பா பிரபுவிடம் சொன்னால், அவர் இரண்டாம்பாதியில் அவரது ஃப்ளாஷ்பேக்க்கை ஓப்பன் செய்கிறார்.
இரண்டாம்பாதியில் வரும் எஸ்.ஜே.பாஸ்கர்-காஜல் காமெடி சீன்கள் அட்டகாசம். அங்கே மட்டுமே ராஜேஸ் தெரிகிறார். ஃப்ளாஷ்பேக்கில் இளம்வயது பிரபுவாக கார்த்தியே நடித்திருப்பது நல்ல ஐடியா. கார்த்தியும் கலக்கியிருக்கிறார். 80களில் வந்த படம் மாதிரியே ஃப்ளாஷ்பேக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் காமெடி என்று பெரிதாக ஏதுமில்லை, குடும்பங்களுக்கிடையே சண்டைக்கான காரணமும் புஸ்ஸாக இருக்கிறது. ஃப்ளாஷ்பேக் முடிந்து மீண்டும் கார்த்தி சந்தானத்தின் உதவியுடன் எப்படியோ காதலில் ஜெயித்துத் தொலைக்கிறார். விடுங்கய்யா..
கார்த்தி:
இந்த நல்ல நடிகருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அலெக்ஸ்பாண்டியன் படத்தில் எப்படி நடித்தார் என்று அதிர்ச்சியான நமக்கு, இந்தப் படத்திலேயே நடிப்பவர் அதில் நடிக்க மாட்டாரா என்று தெளிவு பிறக்கிறது.
இளைய ‘இளைய திலகமாக’ அவர் வரும் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. முடிந்தவரை பிரபு போல் செய்திருக்கிறார். ரப்பப்பா பாடல் காட்சியில் அப்படியே 1980களை கண்முன் நிறுத்துகிறார். ஆனாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான்.
சந்தானம்:
ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது. புதிதாக டயலாக் டெலிவரி செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் எடுபடவில்லை. எப்போதும்போல் அடுத்தவரை கலாய்க்கும் கவுண்டமணி ஸ்டைல்தான் இவருக்கு ஓகே ஆகும்போல் தெரிகிறது. இவரும் கார்த்தியும் பேசும் இடங்களில் சிரிப்பே வரவில்லை.(படத்தில் 70% காட்சிகள் அது தான்!)
காஜல் அகர்வால்:
படத்தில் ஒரே ஆறுதல், இந்த ஸ்வீட் தான். படத்தில் அவர் சேலை கட்டிவரும் அழகே தனி. நஸ்ரியாவை இவரிடம் டியூசன் எடுக்க அனுப்பலாம். எஸ்.ஜே. பாஸ்கரிடம் இவர் பரத நாட்டியம் சீரியஸாக கற்றுக்கொள்ளும்போது தியேட்டரில் வெடிச்சிரிப்பு. படத்தில் உள்ள உருப்படியான 15 நிமிடங்களில் இவர் 10 நிமிடம் வருகிறார்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- அதை திரும்ப நினைச்சுப் பார்க்கக்கூட நான் விரும்பலை!
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- கார்த்தியின் பிரபு கெட்டப்
- சந்தானம்-கோட்டா காமெடி
- காஜல்-எஸ்.ஜே.பாஸ்கர் காமெடி
- இளையராஜா ஸ்டைலில் போடப்பட்டிருக்கும் பாடல்கள்..என் செல்லம், ரப்பப்பா என தமனின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர்.
பார்க்கலாமா? :
பார்க்கலாமாவா?மனசாட்சி இருந்தா இப்படிக் கேட்பீங்களாய்யா?..போங்கைய்யா!
ஃபேஸ்புக்கில் தொடர : https://www.facebook.com/sengovipage
ஃபேஸ்புக்கில் தொடர : https://www.facebook.com/sengovipage
நடு நிலையான,நல்ல விமர்சனம்!கார்த்தி +ராஜேஷ் கூட்டணி..............படம் கலகலப்பா/காமெடியா இருக்கும் னு தான் எல்லாருமே எதிர் பார்த்தாங்க,பட்.........புஸ்.ஸ்..ஸ்....
ReplyDeleteஉண்மையில் நெகடிவ் விமர்சனம் எழுத கஷ்டமாகவே இருக்கிறது..ஆனாலும் வலிக்குதே..!
ReplyDeleteகேள்வியே கேட்கலை... நன்றி...
ReplyDeleteஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
//எல்லாரும் தியேட்டர் காம்பவுண்ட்டைத் தாண்டி ஓடறாங்க!//ஹா.. ஹா... புரிஞ்சிபோச்சி.. மயிரிழையில தப்பிச்சிட்டேன்.
ReplyDeleteஎன்ன தல.... இதுவும் கவுத்திடிச்சா?
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteராஜேஷ்- சந்தானம் காமெடி ரொம்ப போர் அடிச்சு போச்சு பாஸ்...
இந்த படம் ஊத்துனது ரொம்ப நல்லது..
யோவ் ராதிகா ஆப்தே பத்தி ஏன் எழுதலை. இந்த விமர்சனத்தை புறக்கணிக்கிறேன்
ReplyDelete//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteகேள்வியே கேட்கலை... நன்றி...
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...//
நன்றி தனபாலன்.
//Manimaran said...
ReplyDelete//எல்லாரும் தியேட்டர் காம்பவுண்ட்டைத் தாண்டி ஓடறாங்க!//ஹா.. ஹா... புரிஞ்சிபோச்சி.. மயிரிழையில தப்பிச்சிட்டேன்.//
நான் பார்த்த மாலில் ஒரே ஹால்ல 4 தியெட்டர். பக்கத்து தியெட்டரில் ஆரம்பம். இண்டர்வெல்லில் ஒருத்தரு இன்னொரு ஃப்ரெண்ட்டுகிட்ட கேட்டாரு “மாப்ள, மறுபடியும் உள்ள போகணுமா? ஆரம்பம் தியேட்டருக்கு பூந்துடுவோமா?”
// Purujoththaman Thangamayl said...
ReplyDeleteஎன்ன தல.... இதுவும் கவுத்திடிச்சா?//
ஈசன் பார்த்த எஃபக்ட்டுய்யா!
//ராஜ் said...
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ராஜேஷ்- சந்தானம் காமெடி ரொம்ப போர் அடிச்சு போச்சு பாஸ்...
//
ஆக்சுவாலா இந்தப்படத்துல அந்த ஸ்டைல் காமெடியே இல்லை பாஸ்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteயோவ் ராதிகா ஆப்தே பத்தி ஏன் எழுதலை. //
மனுசனே ஆபத்துல இருக்கான், இதுல உமக்கு ஆப்தே கேட்குதா..போய்யா!
என்னங்க இது கார்த்தி க்கு வந்த சோதனை....
ReplyDelete@கவிதை வீதி... // சௌந்தர் // கார்த்திக்கு கதை சொல்ல எத்தனையோ நல்ல உதவி இயக்குநர்கள் க்யூவில் நிற்கிறார்கள்..ஆனால் அவர் இப்படிக் கதையை விரும்புகிறார்..என்ன செய்ய!
ReplyDeleteநேரமிச்சம் என்று சொல்லுறீங்க.ம்ம்ம் தப்பிச்சேன்!ஹீ
ReplyDeleteதீபாவளிக்கு கொள்ளயடிக்க ‘மூவர் கூட்டணி’ கிளம்பி வந்திருக்கு.
ReplyDeleteஇவங்ககிட்ட 120 ரூபாய் ஏமாந்துட்டேன்.
எச்சரிக்கையாயிருங்க..இந்த லேகிய வியாபாரிகளிடம்.
//தனிமரம் said...
ReplyDeleteநேரமிச்சம் என்று சொல்லுறீங்க.ம்ம்ம் தப்பிச்சேன்!ஹீ//
நேரம்-பணம்-மனநலம்-உடல்நலம் எல்லாம் மிச்சம் தான் நேசரே.
//உலக சினிமா ரசிகன் said... [Reply]
ReplyDeleteதீபாவளிக்கு கொள்ளயடிக்க ‘மூவர் கூட்டணி’ கிளம்பி வந்திருக்கு.
இவங்ககிட்ட 120 ரூபாய் ஏமாந்துட்டேன்.
எச்சரிக்கையாயிருங்க..இந்த லேகிய வியாபாரிகளிடம்.//
ஹா..ஹா..மூணுநாள் வசூல் வந்தாப் போதும்னு நினைச்சுட்டாங்க போல..எப்படி இப்படி எடுத்தாங்கன்னு இன்னும் அதிர்ச்சியா இருக்கு..ரொம்ப எதிர்பார்த்த கூட்டணி.
கெரகம். வேற என்னத்த சொல்ல.
ReplyDelete//! சிவகுமார் ! said... [Reply]
ReplyDeleteகெரகம். வேற என்னத்த சொல்ல.//
என்னய்யா, அங்கயும் அடி பலமா...அவ்வ்!
ஹீ ஹீ... தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteஹீ ஹீ... தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteமொதல்ல ரிலீஸ் ஆகவிருந்த பிரியாணி படத்த தள்ளி வச்சிட்டு இத ரிலீஸ் பண்ணாங்க... அப்போ பிரியாணி செம மொக்கையா இருக்கும் போல, அதுதான் அவசர அவசரமா ஆல் இன் ஆல்ல ரிலீஸ் பண்ணி கார்த்தி மார்கெட்ட சரிகட்ட பார்க்குறாங்கன்னு பார்த்தா.. இதவே இவ்வளவு மொக்கையா இருக்கே.. அதையும் பார்ப்போம்..ஆக, நீங்க கார்த்திக்கு எழுதுன கடிதத்தை இதுவரை அவரு இன்னும் வாசிக்கல
ReplyDeleteஅந்த ஆண்டவன்தான் உங்களுக்கு தைரியம் கொடுக்கணும்...
ReplyDelete"அதை திரும்ப நினைச்சுப் பார்க்கக்கூட நான் விரும்பலை!"
தெளிவான, சாதிக, பாதகமில்லாத விமர்சனம்.. அருமை..
ReplyDeleteபத்தாயிரம் ரூபா மதிப்புள்ள
கூகிள் நெக்சஸ் டேப்ளட்
இலவசமா கொடுக்கிறாங்களாம்...
லிங்கை கிளிக் பண்ணுங்க...
நீங்களும் ட்ரைப் பண்ணுங்க...
கூகிள் நெக்சஸ் 7 டேப்ளட் பிசி இலவசம்..!
//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDeleteஹீ ஹீ... தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...//
வாங்கய்யா..தீபாவளி,பொங்கலுக்குத்தான் வெளில வர்றதா?
//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDelete..ஆக, நீங்க கார்த்திக்கு எழுதுன கடிதத்தை இதுவரை அவரு இன்னும் வாசிக்கல//
அதைப் படிச்சிருந்தா திருந்தியிருப்பாரு..இந்தப் பதிவைப் படிச்சா என்ன ஆவாருன்னு தெரியலை!
// Vadivelan Palanichamy said...
ReplyDeleteஅந்த ஆண்டவன்தான் உங்களுக்கு தைரியம் கொடுக்கணும்...//
ஆறுதலுக்கு நன்றி.
//தங்கம் பழனி said...
ReplyDeleteபத்தாயிரம் ரூபா மதிப்புள்ள
கூகிள் நெக்சஸ் டேப்ளட்
இலவசமா கொடுக்கிறாங்களாம்...//
அடேங்கப்பா..இருக்கட்டும் பாஸ்..நோ தேங்க்ஸ்.