Wednesday, June 11, 2014

ஹிட்ச்காக்கின் Young and Innocent (1937) - விமர்சனம்

The 39 Steps படத்தில் ‘தப்பிப் பிழைத்தல்’ எனும் கான்செப்ட்டில் தெளிவானார் ஹிட்ச்காக். அடுத்து Sabotage-ல் நியாய தர்மம் பற்றி அலசினார். இடையில் Secret Agent படம் அந்த இரண்டு கான்செப்ட்டையும் இணைப்பதில் சொதப்பியது.(அதன் விமர்சனம் எனது திரைக்கதை தொடருடன் சம்பந்தப்படுவதால், பின்னால் வரும்!). இந்த காலகட்டத்தில் அவர் பிரிட்டிஷ் சினிமாவில் தான் இருந்தார். 

அவரது The 39 Steps படத்தின் வெற்றி, ஹாலிவுட்டை அவர் பக்கம் திரும்ப வைத்தது. ஹிட்ச்காக்கும் சீக்கிரமே அமெரிக்க சினிமா உலகில் நுழைந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே The 39 Steps மாதிரியே இன்னொரு சிம்பிளான த்ரில்லரை எடுப்போம் என்று அவர் எடுத்த ஒரு வெற்றிப் படமே Young and Innocent.

 Josephine Tey என்பவர் எழுதிய  A Shilling for Candles எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இதன் திரைக்கதை. ஹீரோ மற்றும் ஹீரோயின் கேரக்டரை மட்டும் எடுத்துக்கொண்டு, ஹிட்ச்காக் பாணியில் இதை ‘Run away Hero' கான்செப்ட்டில் எழுதினார்கள் இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களான Charles Bennett, Edwin Greenwood மற்றும் Anthony Armstrong.

கதைக்கரு வழக்கமானது தான். ஒரு கொலைப்பழி ஹீரோ மேல் சுமத்தப்படுகிறது. தப்பி ஓடியபடியே, தான் நிரபராதி என்று நிரூபிக்கிறான். இதில் ஹிட்ச்காக் செய்த மாற்றம் என்னவென்றால், கதையை ஹீரோயினின் பாயிண்ட் ஆஃப் வியூவில் சொன்னது. ஹீரோ எப்படி ஜெயிக்கிறான் என்பதை விட, ஹீரோயின் எப்படி மனமாற்றம் அடைந்து ஹீரோவுக்கு உதவி ஜெயிக்க வைக்கிறாள் என்பதைப் பற்றியே திரைக்கதை அமைத்தார். எனவே தான், இந்தப் படம் அமெரிக்காவில் ரிலீஸ் ஆனபோது The Girl was Young என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

படத்தின் முதல் காட்சியிலேயே வில்லனையும் கொல்லபடும் நடிகையையும் காட்டிவிடுகிறார் ஹிட்ச்காக். ஹீரோ ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதால் பண விவகாரத்தில் ஹீரோ நடிகையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்செயலாக ஹீரோவின் டை-யை வைத்துத்தான் நடிகையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது என்பதும் ஹீரோவுக்கு எதிரான ஆதாரமாக இருக்கிறது. தனது டையும் கோட்டும் காணாமல் போனதாக ஹீரோ சொல்கிறான். அதைத் திருடியவனைப் பிடித்தால், தான் நிரபராதி என்பது தெரியவரும் என்கிறான். போலீஸ் அந்தக் கதையை நம்புவதில்லை. ஒரு போலீஸ் அதிகாரியின் மகளாக வரும் ஹீரோயின் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவை நம்புகிறாள். அவளே கண்டுபிடிக்கிறாள்.

ஹிட்ச்காக்கின் இந்தவகைப் படங்கள் போலவே இதுவும் சீகுவென்ஸ் ஸ்டைலில் நகர்கிறது. கொலை-விசாரணை-மில் போர்சன் - ஆண்ட்டி வீடு-சுரங்கம்-ஹோட்டல் என்று அந்த ஊர் இடங்களை வைத்தே கதையை நகர்த்துகிறார். ஆனால் முந்தைய மற்றும் பிந்தைய படங்களில் இருந்த பிரமாண்டம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். The 39 Steps, North by Northwest போன்ற படங்களில் அந்த இடங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டும். இதில் சாதாரணமாகவே தெரிகின்றன.
ஹீரோ காரில் தப்பி ஓடும்போது, வில்லன்/போலீஸ் இன்னொரு காரில் துரத்துதல்-ஒரு ட்ரெய்னை ஹீரோ கார் மட்டும் மயிரிழையில் கடந்துவிட வில்லன் கார் ஹீரோவை மிஸ் பண்ணிவிட்டு ‘ச்சே’ என்று ஃபீல் பண்ணும் காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்களே, அது இந்த 1937ல் வந்த படத்தில் தான் ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதே போன்றே உயரத்தில் இருந்து விழும் ஹீரோயின் ஏதோவொன்றைப் பிடித்துத் தொங்க, ஹீரோ ஹீரோயினின் கையைப் பிடித்தவுடன், ஹீரோயின் பிடித்திருந்த மரக்கிளை போன்ற வஸ்து அதளபாதாளத்தில் விழுமே, அதன் துவக்கப்புள்ளியும் இந்தப் படத்தில் தான். பின்னாளில் North by Northwest(1959) படத்தில் ஹிட்ச்காக்கும், அதே டெக்னிக்கை பயன்படுத்தினார்!

கதையின் முக்கியப்பாத்திரமாக ஹீரோயின் கேரக்டர் வருகிறது. அவர் ஒரு போலீஸ் ஆபீசரின் பெண்ணாக வருகிறார். அப்பா ஹீரோவைப் பிடிக்க முயல, ஹீரோயின் கில்லி மாதிரி ஹீரோவைக் காப்பாற்றுகிறார். ஒரே வீட்டுக்குள் இருவரும் எதிரெதிர் நோக்கத்துடன் இருப்பது, சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஒரு கட்டத்தில் மகளையே அரெஸ்ட் செய்யும் நிலைக்கு அப்பா ஆளாகிறார். அளவான செண்டிமெண்ட்டுடன் ஹிட்ச்காக் அந்தக் காட்சிகளை கடந்திருப்பார்.

குறியீடுகளில் ஒரு வகையான Motif உத்தியை ஹிட்ச்காக் இதில் தான் ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன். நாம் பார்ப்பதற்கும் உண்மைக்குமான இடைவெளியைப் பற்றி மறைமுகமாக அலசுகிறார் ஹிட்ச்காக். ஹீரோ கொலையாளியாகவே எல்லாருக்கும் தெரிய, உண்மை வேறாக இருக்கிறது எனும் கதைக்கருவுடன் அந்தக் குறியீடுகளை இணைக்கிறார் ஹிட்ச்காக். நாம் பார்ப்பது உண்மையா, பொய்யா எனது பார்க்கும் பார்வையின் கோணம்/கண்களைப் பொறுத்தது என்று கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சொல்கிறார்:

- வில்லனுக்கு அடிக்கடி தானாகவே இருகண்களையும் சிமிட்டும் வழக்கம் இருக்கிறது

- ஹீரோவுக்காக வாதாட வரும் வக்கீலுக்கு, கண்ணாடி இல்லாமல் கண் தெரிவதில்லை. ஹீரோ நிரபராதி என்று அவர் நம்புவதும் இல்லை

- பர்த் டே பார்ட்டியில் இருந்து ஹீரோ தப்பிக்க, கண்ணாமூச்சி ஆட்டம் உதவுகிறது

- ”போலீஸால் தேடப்படும் ஆள், பசியால் சாகும்போது அவனின் கண்கள் ரூக்ஸ்(Rooks) எனும் பறவைகளால் தின்னப்படும்” என்று ஹீரோயின் தம்பி ஒரு வசனம் சொல்கிறான். அது பழமொழி அல்லது பைபிள் வசனம் போல் இருக்கிறது. அதைக் கேட்டபின்பே, ஹீரோ பசியால் இருப்பான் என்று ஹீரோயின் அவன் மறைந்திருக்கும் இடத்திற்கு ஓடி வருகிறாள்

மொத்தத்தில் படம் முழுக்க, கண்கள் என்பது ஒரு முக்கியமான விஷயமாக தொடர்ந்து காட்டப்படுகிறது.

டெக்னிக்கலாக ஹிட்ச்காக் இதில் சில புதிய முயற்சிகளை மேற்கொண்டார். முதல் காட்சியில் வில்லனுக்கும் நடிகைக்குமான வாக்குவாதம் ஒரே ஷாட்டில் கட் செய்யாமல் காட்டப்படுகிறது. அதே போன்றே கிளைமாக்ஸில் வரும் புகழ்பெற்ற, அந்த நீண்ட கிரேன் ஷாட்.

ஹோட்டலில் தான் வில்லன் இருக்கிறான் என்று அறிந்து ஹீரோயின் பெரிய நடன ஹாலில் அமர்ந்திருக்கிறாள். பலரும் ஜோடியாக நடனமாடியபடியே இருக்கிறார்கள். வில்லனை அடையாளம் காட்ட வந்த பெரியவர் ‘இவ்வளவு கூட்டத்தில் எங்கே அந்த கண் சிமிட்டுபவனைத் தேடுவது?’ என்று கேட்கிறார். டாப் ஆங்கிளில் அவர்களின் டேபிள் மேல் இருக்கும் கேமிரா, அங்கேயிருந்து நகர்ந்து நடன ஜோடிகள் மேல் ஊர்கிறது. தொடர்ந்து ஜோடிகளை ஊடுருவி, மியூசிக்கல் குரூப்பிடம் போய் நிற்கிறது. பின்னர் இன்னும் ஜூம் இன் ஆகி, மியூசிக்கல் குரூப்பில் மூன்று பேரை மட்டும் மிட் ஷாட்டில் காட்டுகிறது. அடுத்து இன்னும் ஜூம் ஆகி, நடுவே இருக்கும் டிரம்மரின் முகத்தைக் காட்டுகிறது. அடுத்து அவன் கண்களை க்ளோஷ் அப்பில் நெருங்கும்போது, அந்த கண்கள் சிமிட்டுகின்றன. அற்புதமான ஷாட் அது. அப்போதும் இப்போதும் அந்த ஷாட் ஹிட்ச்காக்கிற்கு பெரும் பெயர் வாங்கித் தந்தது.

வில்லன் எங்கே இருக்கிறான் எனும் தகவல் நமக்கு இப்போது தெரியும். ஆனால் ஹீரோயினுக்குத் தெரியாது. ஹிட்ச்காக்கின் ஃபேவரிட்டான சஸ்பென்ஸ் உத்தி! அடுத்து கால்மணி நேரத்திற்கு, அந்த சஸ்பென்ஸிலேயே நாமும் வாழ்கிறோம். ஹீரோயின் அறிமுகக்காட்சியில் ஹீரோவுக்கு ஒரு உதவி செய்கிறாள். அது சாதாரண சீன் என்று நாம் நினைத்திருக்கும்போது, அதுவே வில்லனைக் கண்டுபிடிக்க உதவும் விஷயமாக கிளைமாக்ஸில் வருகிறது. மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை என்று அப்போது தான் நாம் உணர்கிறோம்.
படத்தின் குறை என்னவென்றால், வில்லன் கேரக்டர் தான். முதல் காட்சியில் மறையும் வில்லன், மீண்டும் வருவது இறுதிக்காட்சியில் தான். இடையில் ஹீரோ தன்னை நிரூபிக்க மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறான். வில்லன் ஹீரோவுக்கு இடைஞ்சல் செய்வதில்லை. இதே தீம் கொண்ட The 39 Steps மற்றும் Noth by Northwest படங்களில் வில்லன் கும்பலும் ஹீரோவைக் கொல்ல துரத்துவார்கள். அது படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டும். இங்கே அது மிஸ்ஸிங். வெறும் தப்பி ஓடுதல் சற்று போரடிக்கவே செய்கிறது.

"Better the Villain, Bigger the Movie " என்று பின்னாளில் ஹிட்ச்காக் சொன்னார். அது இந்தப் படத்தில் அவர் படித்த பாடமாக இருக்கலாம்! ஹாலிவுட்டில் நுழைய ஐரோப்பிய சினிமாவை இன்றைய குறும்பட ரேஞ்சுக்கு ஹிட்ச்காக் உபயோகித்தார் என்றே சொல்லலாம். இதுமாதிரி பல விஷயங்களை மேலும் சில படங்களில் இங்கேயே சோதித்துப் பார்த்துவிட்டு, ஒரு ஜீனியஸாக ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் ஹிட்ச்காக்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. செம்ம அலசல்.. ஹிட்ச்காக்கே நேரில் நின்னு படத்தை விவரிச்சது மாதிரி இருந்தது.. திரைக்கதை சூத்திரத்துக்கென ஒரு படம் "லவட்டப்பட்டதை" கண்டிக்கிறோம்..செங்கோவி பாறைகள்.. :)

    ReplyDelete
  2. @கோவை ஆவி இங்கே அந்த பாயிண்ட்டைச் சொன்னால், திரைக்கதை தொடரில் ரிப்பீட் ஆவது போல் தெரியும். எனவே தான்....!

    ReplyDelete
  3. நான் சேர்த்து வெச்சிருக்கற ஹிட்ச்காக் தொகுப்பில் இந்தப் படம் இல்லை... இன்னும் சொல்லப்போனா இப்படி ஒண்ணு அவர் படைப்புகள்ல இருககறதையே நான் உணரலை. எனக்கு கதையும் நீங்க விமர்சனமா சொன்ன விதமும் பிடிச்சிருக்கு. வாங்கிப் பார்த்துடுவேன் நிச்சயம்.

    யோவ் ஆவி... இவ்வளவு தமிழ் ஆர்வமா உமக்கு...? பூமி தாங்காதையா...

    ReplyDelete
  4. @பால கணேஷ் ஹிட்ச்காக் டெவலப் ஆன காலகட்டம் அது. அவரது மாஸ்டர்பீஸ்களுடன் கம்பேர் செய்யாமல் பார்த்தால், நன்றாகவே இருக்கும்.

    ReplyDelete
  5. //Subramaniam Yogarasa said...
    நல்ல அலசல்!// நன்றி ஐயா.

    ReplyDelete
  6. நாம், கடன்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது என்று சட்ட நிறுவனம் வழங்கநிதி உதவி. நீங்கள் நிதி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றால்நீங்கள் ஒரு நிதி குழப்பம் மற்றும் நீங்கள் உங்கள் சொந்த தொழிலை தொடங்க பணம் தேவைஅல்லது நீங்கள் பட்ட கடன்களை செலுத்த அல்லது உங்கள் பில்களை செலுத்தும், ஒரு நல்ல தொழில் தொடங்க கடன் வேண்டும்அல்லது பிரச்சனையில் உள்ளூர் வங்கிகளில் இருந்து கடன் பெற்று இருந்தது, மூலம் இன்று எங்களை தொடர்புமின்னஞ்சல்: frankwoodloan@gmail.comஎனவே இந்த வாய்ப்பை தவற கூடாது.அந்த தீவிர எண்ணங்கள் மற்றும் பயபக்தியுடையோரை மக்கள்.கடன் விண்ணப்பம்:பெயர்: _______முகவரி: _______கடவுச்சொல்: _______மாநிலம்: _______தொழில்: _______கோரிக்கை loan________கால loan________மாத வருமானம்: _______தொலைபேசி: _______எங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு திரும்ப பெற வேண்டும்:மின்னஞ்சல்: jameswoodloan@gmail.com

    ReplyDelete
  7. நாம், கடன்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது என்று சட்ட நிறுவனம் வழங்க
    நிதி உதவி. நீங்கள் நிதி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றால்
    நீங்கள் ஒரு நிதி குழப்பம் மற்றும் நீங்கள் உங்கள் சொந்த தொழிலை தொடங்க பணம் தேவை
    அல்லது நீங்கள் பட்ட கடன்களை செலுத்த அல்லது உங்கள் பில்களை செலுத்தும், ஒரு நல்ல தொழில் தொடங்க கடன் வேண்டும்
    அல்லது பிரச்சனையில் உள்ளூர் வங்கிகளில் இருந்து கடன் பெற்று இருந்தது, மூலம் இன்று எங்களை தொடர்பு
    மின்னஞ்சல்: frankwoodloan@gmail.com
    எனவே இந்த வாய்ப்பை தவற கூடாது.
    அந்த தீவிர எண்ணங்கள் மற்றும் பயபக்தியுடையோரை மக்கள்.
    கடன் விண்ணப்பம்:
    பெயர்: _______
    முகவரி: _______
    கடவுச்சொல்: _______
    மாநிலம்: _______
    தொழில்: _______
    கோரிக்கை loan________
    கால loan________
    மாத வருமானம்: _______
    தொலைபேசி: _______
    எங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு திரும்ப பெற வேண்டும்:
    மின்னஞ்சல்: jameswoodloan@gmail.com

    ReplyDelete
  8. HOW I GOT MY BUSINESS BACK ON TRACK
    “It has been great to know that there is someone out there that knows about falling down and getting back up. We always stay humble and never give up, and for GANNETT INTERNATIONAL FINANCE LLP to see that in us, we are truly grateful for the help and push we have received. "Gannett International Finance LLP" has been incredibly helpful to our company by providing a line of credit for our continued growth." -Richard Lawson
    Do you have a firm or company that need loan to start up a business or need a personal loan, Debt consolidation?
    Reach out to them today via
    WhatsApp:+447449373835 or
    email: loans@gannettfinancellp.com
    for more details and procedures.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.