Saturday, June 21, 2014

தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்

சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு மனது விரைப்பாகவே இருக்கும். எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். பிறகு மனது சொய்ங்கென்று பழைய நிலைமைக்கே போய் விடும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வித மனநிலையை நமக்கு உண்டாக்கக்கூடியவை. அந்தவகையில் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடும். எதையும் கேஷுவலாக அணுகும் Tongue-in-cheek மனநிலை சுஜாதாவைப் படித்த சிலநாட்களுக்கு இருக்கும்.
இயக்குநர் கேபிள் சங்கரைப் பார்க்கும்போதெல்லாம் தினமும் இந்த மனிதர் காலையில் ஒரு சுஜாதா நாவலைப் படித்துவிட்டுத்தான் வெளியில் வருகிறாரோ என்று தோன்றுகிறது. எப்போதும் கலகலப்புடன், அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும் உற்சாகத்துடன் வலம் வரும் மனிதர் அவர். நம்மை மாதிரி சொங்கிகளுக்கு அது பெரிய ஆச்சரியம் தான். அவரைப் பார்த்த இரண்டு முறையும் மனிதர் ஃபுல் எனர்ஜியுடன் இருந்தார். நண்பர்களைக் கேட்டால், ’அவர் எப்போதுமே அப்படித்தான்..இத்தனைக்கும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று வியப்பைக் கூட்டுகிறார்கள்.

அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, நான் ஆசைப்பட்டது அந்த கொண்டாட்ட மனநிலையை படத்திலும் மனிதர் கொண்டுவர வேண்டுமே என்று தான். இப்போது தொட்டால் தொடரும் படத்தில் இடம்பெறும் ‘பாஸு..பாஸு’ பாடலைக் கேட்டபோது, என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பாடல் இங்கே:



நாட்டு நடப்பையும் மனசாட்சியை ஆஃப் செய்துவிட்டு அலையும் பிஸி மனிதர்களான நம்மையும் திட்டுவது தான் பாடலின் கரு. அதை வேறு யாராவது செய்திருந்தால், இணையப் புரட்சியாளர்கள் பதிவைப் படித்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியிருப்பார்கள். ஆனால் கேபிளார் இந்தப் பாடலை மெல்லிய நக்கலுடன் கொடுத்திருப்பதால், நான் மேலே சொன்ன கொண்டாட்ட மனநிலையே நமக்குக் கிடைக்கிறது. ஆண்டனி தாசனின் குரல், பாடலுக்கு ஒரு புது கலரைக் கொடுக்கிறது.

‘யாருக்கும் ஈவு இல்லை..இரக்கம் இல்லை பாஸு..பாஸு’ என்று ஆரம்பிக்கும் பாடல் மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கிறது. ‘நியூசெல்லாம் ஸ்கேம் தானே..போச்சு நம்ம காசு, காசு’ என பாடல் முழுக்கவே சமூகக் கிண்டல் கொட்டிக்கிடக்கிறது. வழக்கமான இசையமைப்புப் பாணியைப் பின்பற்றாமல், ஜூஸ் ஸ்டைலில்..அது ஜூஸா, ஜாஸா..ம்ஹூம், இதற்கு மேல் நாம் இசை நுணுக்கத்தை ஆராய்ந்தால், பி.சி.சிவன் ஃபீல் பண்ணுவார். அது ஜூஸோ ஜாஸோ, நம்மை மாதிரி சாராசரி ஆட்களுக்கும் பிடிக்கும் வகையில் ’பாட்டு நல்லாயிருக்கு’ என்பது தான் இங்கே பாயிண்ட்!

நமது யூத் கேபிளாருடன் உண்மையான யூத்களான கார்க்கி பாவாவும் பி.சி.சிவனும் இணைந்து, ரகளையான பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். ’யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க, படம் எப்படி இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது. இந்தப் பாடலில் தொனிக்கும் ‘கேபிளார் எனர்ஜி’ படத்திலும் இருந்தால், படம் சூப்பர் ஹிட் தான். வாழ்த்துகள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. \\இயக்குநர் கேபிள் சங்கரைப் பார்க்கும்போதெல்லாம்\\ யோவ் நீ எங்கய்யா இவரைப் பார்த்தீரு?

    ReplyDelete
  2. \\சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும்.\\ இந்த நூல்களைப் படித்து முன்னேறுவது சாத்தியம் என்றால், நீர் எழுதும் திரைக்கதை சூத்திரங்களைப் படித்துவிட்டு கதாசிரியர் ஆவதும் சாத்தியமே.

    ReplyDelete
  3. ரைட்டு...............!

    ReplyDelete
  4. அவருக்கு(கேபிளாருக்கு)ஒரு பொண் கொழந்த இருக்குங்க!

    ReplyDelete
  5. சே. குமார் said... [Reply]
    நகைச்சுவை அதிகம்ன்னா வடகறிய பாத்துடலாம்...

    விமர்சனம் நன்று.///வணக்கம்,குமார்!நலமா?எங்கே உங்கள் 'வலைப்பூ' வைக் காணோம்?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.