Thursday, February 23, 2017

Facebook Posts - February 2017

மௌனம்
தொடர்ந்த காதலுக்குப் பதில் மௌனம்
தீட்டிய கவிதைகளுக்குப் பதில் மௌனம்
வீசிய பார்வைகளுக்குப் பதில் மௌனம்
காத்திருந்த காலத்திற்கும் பதில் மௌனம்
மௌனம் மௌனம் மௌனம்
மனதைத் தான் தர மனமில்லை
அந்த மௌனத்தையாவது கொடு என்றேன்
ங்கோத்தா..போய்டு...வாயை ஒட்ச்சை உட்ருவேன்என்றாள்
மௌனம் அறவழியில் கைமாற்றப்பட்டது!

கல்லூரியில் கடைசியாகச் சேர்ந்த எங்களுக்கு ஹாஸ்டலில் இடம் இல்லை. பிறகு ஆபீஸ் ரூம் அருகில் இருந்த ஒரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார்கள். முதலில் ஒன்றிரண்டு பேர் தான் இருந்தோம். புதிதாக வாக்கப்பட்டு வந்த பெண் போல், மிகக் கவனமாக நாங்கள் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டிருந்தபோது தான்இன்னொருத்தரும் இப்போ உங்க ரூமுக்கு வர்றார்என்று பெட்டிகளை வைத்துவிட்டுப் போனார்கள். ஆவலும் குறுகுறுப்புமாக காத்திருந்தபோது தான் 'வினையூக்கிசெல்வகுமாரின் அப்பா செல்வாவை ஒரு குழந்தை போல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். என் வாழ்க்கையில் சந்தித்த சில நல்ல அப்பாக்களில் ஒருவர் அவர்.
போலியோவால் பாதிக்கப்பட்ட கால்களுடன் செல்வா எங்கள் சி-2 ரூமில் நுழைந்தபோது கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனோம். ஆனாலும் எனக்கு செல்வா மேல் பரிதாபம் ஏதும் வரவில்லை. அதற்குக் காரணம், ஸ்கூலில் என்னுடன் படித்த கிச்சா. அவனும் போலியோவால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் ஸ்கூலுக்கு வருபவன் தான். ஆனால் ஷகீலாவையும் தாண்டி ரேஷ்மா, சிந்துஜா என பரந்துபட்ட உலகம் இருக்கிறது என்று எங்களுக்குப் போதித்த ஞானி அவன். உலகத்தில் இருக்கிற அத்தனை கோல்மால்களையும் பண்ணிவிட்டு, அப்பாவியாக வீல் சேரில் அமர்ந்திருப்பான். செல்வாவின் முழியும் கிச்சாவின் முழியும் ஒத்துப்போனதால், பார்த்தவுடனே பாம்பின் கால் பாம்பறிந்தேன். (செல்வா இப்போது ஃபேமிலி மேன் என்பதால், கிச்சா அளவிற்கு செல்வா மோசமில்லை என்பதையும் பதிவு செய்து வைப்போம்!)
அப்பா செல்வாவை எங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டுஅவனே எல்லா வேலையையும் செஞ்சிடுவான். ஆனால் சாப்பிட்ட தட்டை மட்டும் யாராவது எடுத்து கழுவி வைக்கணும்என்றார். நான் ஒருநொடிகூட தயங்காமல்அதனால என்னப்பா..நான் பார்த்துக்கறேன்என்று சொன்னபோது ஆரம்பித்தது எங்கள் நட்பு. அப்பா சொல்லாத ஒரு வேலையையும் எங்களுக்கு செல்வா வைத்தார், அதில் தான் நான் டென்சன் ஆவேன்.
அவருக்கு பேய் என்றால் பயம். இப்போது திருமணம் ஆகிவிட்டதால் பயம் விட்டிருக்கலாம். அப்போது பாத்ரூம் போக வேண்டும் என்றால்டேய்..அப்படியே வராண்டா வரைக்கும் போய்ட்டு வருவமா?’ என்று ஆரம்பிப்பார். ‘ஏண்டா, ஏழு கழுதை வயசாயிருச்சு..இன்னும் பேய்க்கு பயப்படறே?’ என்றால்எனக்கு ஏழு கழுதை வயசானது பேய்க்குத் தெரியுமா? அது வயசு கேட்டுட்டு அடிக்கும்னு நீ கேரண்டி கொடுக்க முடியுமாஎன்று பயங்கர லாஜிக்கலாக மிரட்டுவார். எனதுமன்மதன் லீலைகள்தொடரில் வந்த சிவா கேரக்டர் பலருக்கும் பிடித்த ஒன்று. அது உண்மையில் செல்வா தான்.
செல்வாவையும் என்னையும் இணைத்தது எங்கள் வாசிப்பனுபவம். பொதுவாக ஸ்கூலில் இருந்து வருபவர்கள் பாடப்புத்தகம் தாண்டி ஏதும் படித்திருப்பதில்லை. அப்போது இலக்கியம், அரசியல், தத்துவம், சினிமா என எல்லாவற்றைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசும் அளவிற்கு தேறி இருந்தோம். இன்றைக்கு சிறுகதை எழுத்தாளராக, திராவிட அரக்கனாக அவர் கம்பு சுற்றுவதற்கு அத்தகைய அடித்தளம் உண்டு. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அப்போது தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானி. தொடர்ந்த வாசிப்பும், சில நல்ல அனுபவங்களும் அவரை நேரெதிரான நிலைப்பாட்டில் கொண்டுவந்து நிறுத்தின.
ஒரு நண்பனாக என்னை செல்வா பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இரண்டே சந்தர்ப்பத்தில் தான். ஒன்று, அவருக்கு பையன் பிறந்திருக்கிறான் என்ற இனிப்பான செய்தியைச் சொன்னபோது. இரண்டாவது, சென்றவாரம் அவர் பிஹெச்டி முடித்து டாக்டர் ஆன செய்தியைச் சொன்னபோது.
படிப்பு மட்டும் தான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் எனும் தெளிவு எங்களுக்கு எப்போதும் இருந்தது. எத்தனையோ துயரங்கள்/கொண்டாட்டங்களுக்கு இடையிலும் கல்வியைக் காதலி போல் பாதுகாத்துக் கொண்டுசென்றோம். செல்வா பட்டப்படிப்புடன் முடித்துவிடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தார். ‘எப்போ தான்யா முடிப்பே..உன் பையனே படிக்கக் கிளம்பிடுவான் போலிருக்கேஎன்ற எங்கள் கிண்டலையும் தாண்டி, இன்று வெற்றிகரமாக தன் ஆராய்ச்சியை நிறைவுசெய்திருக்கிறார்.
செல்வா பற்றி தினகரன் வசந்தம் இதழில் யுவகிருஷ்ணா எழுதியிருக்கும் இந்த கட்டுரை, கல்வி மேல் அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டியது. மென்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் நண்பா! ( http://www.dinakaran.com/E_book.asp?id=25&cat=22 )
இந்த நேரத்தில் டாக்டர்.செல்வாவிடம் கேட்க ஒரு கேள்வி உண்டு. பல வருடங்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வி இது. இதற்கு ஒரு ஆராய்ச்சியாளரால் தான் பதிலளிக்க முடியும் என்பதால் காத்திருந்தேன் :
டாக்டர் சார்,
நீங்கள் ஹாஸ்டலில் தூங்கும்போது கிழக்கே தலை வைத்து படுத்திருப்பீர்கள். இரண்டுமணி நேரம் கழித்து, தூங்கிக்கொண்டே 90 டிகிரியில் ஒரு டர்ன் அடித்து தெற்கே தலைவைப்பீர்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அடுத்த டர்ன், மேற்கில் தலை. இறுதியாக விடிகாலையில் வடக்கே தலைவைத்து சயனம். முடிவில்எவன்டா என்னை வடக்கே திருப்பிப் போட்டது?’ என்ற கேள்வியுடன் எழுவீர்கள். இன்றைக்கு நீங்கள் முனைவராக உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, அந்த 90 டிகிரி திருப்பங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான காரணம் இருக்கும் என்று நம்புகிறேன்.
மின்புலம், காந்தப்புலம், நினைவாற்றல், சக்தி சம்பந்தப்பட்ட விஷயமா அது? நாசா இதுபற்றிமிட் நைட் காமா கதிர்கள்எனும் தலைப்பில் ஏதேனும் ஆர்டிக்கிள் வெளியிட்டுள்ளார்களா? அல்லது உங்கள் ஆராய்ச்சியே இந்த மிட் நைட் டர்ன் பற்றித் தானா?
அன்பு நண்பன்
செங்கோவி

// ராக்கெட்டா இப்போ முக்கியம்? - சிவகுமார் ஆவேசம் //
சப்போர்ட் மார்க்கண்டேய ஜட்ஜு!
சின்ன வயசுல தீபாவளிக்கு நான் ராக்கெட் விட்டப்போ, அது சைடுல பாய்ஞ்சு, ரிட்டர்ன் ஆகி என் தொடையில உரசி, கூட இருந்த பாப்பாவோட பாவாடையில் பூந்து டொம்னு வெடிச்சிடுச்சு. அன்னியில இருந்து எனக்கும் ராக்கெட்டுனாலே வெறுப்பு.
சிவகுமார் ஃப்ளாஷ்பேக் தெரியல!
அம்மா என்பது எப்பேர்ப்பட்ட வார்த்தை. ஒரு மாநிலத்தின் பெரும் கூட்டம் ஒருவரை அம்மா என்று அழைப்பது எப்படிப்பட்ட பாக்கியம்?
ஆனால் இதையெல்லாம் ஜெயலலிதா உணர்ந்திருந்தாரா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும்.
ஊழல் செய்வது, கணக்கு வழக்கில்லாமல் சம்பாதிப்பது, சாராயம் விற்பது ஆகிய நற்செயல்களில் தான் தன் வாழ்க்கையின் பெரும்நேரத்தை செலவழித்தார்.
குடும்பம் கிடையாது என்ற போதிலும் சம்பாதித்தது போதும் என்ற நிறைவு அவருக்கு கடைசிவரை வரவேயில்லை. நீதிமன்றத்தில் ஆரம்பித்து சாமானிய மக்கள்வரை பலரும் டாஸ்மாக்கை பூட்டச் சொல்லி கெஞ்சிக் கதறியும் அதுபற்றிய சுரணை கொஞ்சமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடி வருமானத்திலேயே கண்ணாக இருந்தார்.
இன்று...? சம்பாதித்த காசெல்லாம் இங்கே இருக்கிறது. பொட்டென்று உயிர் போய்விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மானமும் போய்விட்டது.
போயஸ்கார்டனில் அவர் இருந்த கடைசிநாளில் டெல்லியில் இருந்து ஃபோன் வந்ததாகவும், அது சொன்ன தகவல் கேட்டு மயக்கம் போட்ட இரும்புப்பெண்மணி கண்விழிக்கவே இல்லையென்றும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. தீர்ப்பு பற்றிய விவரம் தான் அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வழக்கு 91-96களில் குவித்த சொத்துகளுக்காகத் தான். அதற்காக வழக்கில் சிக்கிச் சீரழிந்து, சிறையில் அடைக்கப்பட்ட பிறகாவது திருந்தியிருந்தால், ஜெயலலிதாவை கொஞ்சமாவது அனுதாபத்தோடு நம்மால் அணுக முடியும்.
ஆனால் இந்த வழக்கு பற்றிய பயமோ, கொள்ளையடிப்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் பேயாட்டம் ஆடி, கடைசியில் ஆறடியில் அடங்கினார்.
இதற்குத் தானா இத்தனை ஆட்டமும் ஆர்ப்பாட்டமும்!
ஜீ.வி.யில் வந்திருக்கும் தீர்ப்பு பற்றிய சில விவரங்கள் இங்கே :
- சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சொத்து சேர்த்து, நிழலான நிறுவனங்களில் அவற்றைப் பதுக்கி வைக்கும் சதி நிகழ்ந்திருக்கிறது.
- ஜெயலலிதா இறந்துவிட்டதாலேயே அவர் உத்தமர் என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. ஊழலிலும், கூட்டுச் சதியிலும் அவருடைய பங்கையும் விலாவாரியாக விவரித்திருக்கிறது.
- ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி என எல்லோரும் கூட்டாகச் சேர்ந்திருந்தது, ஏதோ தொண்டு செய்யும் உந்துதலில் இல்லை. ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்களை வைத்து என்ன செய்யலாம் எனக் குற்றச் சதியில் ஈடுபடவே இணைந்திருந்தார்கள்.
- ஜெயலலிதா சம்பாதித்த பணத்தைவைத்து மற்ற மூன்று பேரும் பெரிய அளவில் நிலங்களையும் சொத்துக்களையும் வாங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது
- ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்ததுஎன ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு.
இப்போ ஓபிஎஸ் இடத்தில் மம்மி இருந்திருந்தால்.....
எடப்பாடி மேலயும் சபாநாயகர் மேலயும் கவர்னர் மேலயும் பாலியல் வன்கொடுமை புகார் பாய்ஞ்சிருக்கும்.
இந்த ஓபிஎஸ் மம்மிகிட்டே என்னத்தைத் தான் கத்துக்கிட்டாரோ!
 கலைஞர் அளவிற்கு ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்ற வருத்தம்/கிண்டல் பலருக்கும் உண்டு.
இன்றைக்கு அந்த அவப்பெயரை துடைத்திருக்கிறார் ஸ்டாலின்.
இன்றைய பிரச்சினை ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் தான். ஸ்டாலின் வெறும் பார்வையாளர் தான். ஓபிஎஸ் ஜெயிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. எனவே நியாயத்திற்கு ஓபிஎஸ் தான் இன்று ரகளை செய்து, சட்டை கிழிந்து வெளியே வந்திருக்க வேண்டும்.
அப்படி வந்திருந்தால், மொத்த அதிமுகவும் ஆர்ப்பரித்திருக்கும். அவரோதர்மம்..சூது..கவ்வும்என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
இப்போது மொத்த கவனமும் ஸ்டாலின் பக்கம் திரும்பிவிட்டது. மன்னார்குடி மாஃபியாவின் அடியாளான போலீஸ் vs திமுக என்று விஷயமே வேறுபரிமாணம் எடுத்துவிட்டது.
இன்றைய ஹீரோ, ஸ்டாலின் தான்.
//ஸ்டாலின் மீது தாக்குதல் //
டேய், அவரே அப்பளம் மாதிரி தாண்டா இருப்பாரு..அவர் மேல ஏண்டா கை வச்சீங்க, லகுடபாண்டிகளா?
எத்தனை வருசம் ஆனாலும் 25 தடவைக்கு மேல் பார்த்தும் சலிக்காத ஒரே படம்..தலைவனோட மாஸ் ஆக்ட்டிங்..’உள்ளே போன்னு சொல்லும்போதும்உண்மையைச் சொன்னேன்சீன்லயும் சிலிர்த்திடும், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்!
கேடிவியில் போட்டாலே சானலை மாற்ற மனசு வராது..இப்போது டிஜிட்டல் வெர்சன், தியேட்டரில்...
Get ready Folks!
இன்னொரு நெடுஞ்செழியனா ஓபிஎஸ்?
எளிமையானவர், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்று ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ள அதிமுக தொண்டர்கள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் தவறான மூவ்!
கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியைக் கொண்டுவருவதும் ,கட்சிக்குள் தீபாவைக் கொண்டுவருவதும் ஒன்று தான்.
இது தெரிந்து தான் ஜெயலலிதாவே தீபாவை தள்ளி வைத்திருந்தார்.
ஏறக்குறைய தொண்டர்களே மறந்துவிட்ட தீபாவை எதற்காக இவர் உள்ளே இழுக்கிறார்?
ஓபிஎஸ் இமேஜில் பெரிய ஓட்டையை இது விழ வைத்திருக்கிறது! ஓபிஎஸ்ஸிற்கு தன்னம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது!
தேவையற்ற வேலை!
நன்றிகெட்ட உலகமடா இது!
சின்னம்மா ஒழிந்தார் என்று கூத்தாடுகிறார்கள் கயவர்கள்!
வைகோ, கேப்டன், தா.பாண்டியன் போன்ற நம் செல்வங்கள் எல்லாம் டயர்டாகி ஓய்ந்துவிட்டநிலையில், நாம் மீம்ஸ் போடுவதற்காகவே அவதரித்த சின்னத்தாயவள் என்பதை அதற்குள்ளாகவா மறந்துவிட்டீர்கள்?
பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் பாவிகள் நம் பிபியை ஏற்றும்பொழுதெல்லாம், நம்மை எண்டர்டெய்ன் செய்த தங்கத்தையா தூற்றுகிறீர்கள்?
குறுகிய காலத்தில் எத்தனை எத்தனை பெர்ஃபார்மன்ஸ்!
அக்கா சாப்பிட்டீங்களா?’ என்று ஆரம்பித்தது அதகளம்..
உலகத்திலேயேநாளை நமதேசினிமாப் பாட்டை பேப்பரைப் பார்த்து வாசித்தது நம் சின்னம்மா தான் என்பதும் அதை நாம் கொண்டாடி மகிழ்ந்ததும் அதற்குள்ளாகவா மறந்து போய்விட்டது?...
ஆம் யுவர் ஃப்ரெண்ட்..மீ பாவம்..ப்ளீஸ் மேக் மி சிஎம்என்று கவர்னரிடம் லெட்டர் கொடுத்த தைரியலட்சுமியடா அவர்!
ஓரளவுக்குத் தான் பொறுமைஎன்றதை நாம் பொறுமையாக வைத்துச் செய்தோமே நினைவில்லையா?
அக்கா சிங்கம்..நான் குட்டிச்சிங்கம்..அப்போ நீங்களாம் குட்டிக்குட்டிச் சிங்கம் தானே?’ என்று தன்னம்பிக்கை ஊட்டிய தாரகையைவா கேலி செய்கிறீர்கள்?
அற்பப் பதர்களே!
உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், தமிழ் சமூகத்திடம் இந்த கேள்வியை அல்லவா கேட்டிருக்க வேண்டும் :
ஏண்டா, சின்னமா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை விட்டு போவோம்னு சொன்னீங்களே..இப்போ சின்னம்மா ஆட்சிக்கு வரலையே..அப்போ லாஜிக்படி, வெளிநாட்டுல இருக்கிற தமிழன்லாம் தன் வேலையை ரிசைன் பண்ணிட்டு இப்பவே தமிழ்நாட்டுக்கு ஓடி வர வேண்டாமா?
செய்வீர்களா? செய்வீர்களா?
தீர்ப்பைக்கூட தாங்கிக்கலாம்..ஆனால் தீர்ப்பு வந்தவுடன்தர்மத்தின் வாழ்வுதனைன்னு ஆரம்பிப்பானுகளே, அதை நினைச்சாத்தான்............!!
TO WHOMEVER IT MAY CONCERN :
நாங்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை.
இங்கே இருக்கும் ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக உள்ளனர்.
சந்தோசமாக உள்ளனர்.
ஒரே குடும்பமாக உள்ளனர்.
அதிமுகவின் தூண், எங்கள் தங்கம் நமீதா ஆதரவு சசிக்கா? ஓபிஎஸ்ஸுக்கா?
ஒய் சைலண்ட் பேபிம்மா?
ஸ்டாலினுக்கு உண்மையான போட்டி ஓபிஎஸ் தான்.
சசிகலா தான் போட்டி என்றால், அடுத்த தேர்தலில் ஸ்டாலின் சுலபமாக ஜெயித்திருக்க முடியும்.
ஆனால் ஓபிஎஸ் விஷயத்தில் கொஞ்சம் அசந்தாலும், போன எலக்சன் மாதிரியே கப்பல் கவிழ்ந்து மானம் போகிவிடும் அபாயம் உண்டு.
இது தெரிந்தோ அல்லது தெரியாமலோஓபிஎஸ்ஸிற்கு கும்பிடு போடுவது, நாங்க இருக்கிறோம்யா என்று பேசுவது, சிரிப்பது(!)’ என்று செய்து சசிகலாவிற்கு பீதியைக் கிளப்பிவிட்டார்கள். சசிகலாவும் எதிர்பார்த்தபடியே அவசரப்பட்டார்.
ஒவ்வொரு கட்சித்தொண்டனுக்கும் கட்சிக்குமான பந்தம் ஜாதிவெறியை விடவும் மோசமானது. அப்பட்டமாக தன் தலைமை ஒரு கொள்ளைக்கூட்டம், கொலைகாரக்கூட்டம் என்றெல்லாம் தெரிந்தாலும் அதையும் தாண்டி நேசிப்பவர்கள் தொண்டர்கள்.
அதிமுககாரனுக்கு ஜெயலலிதாவின் இறப்பு கொடுத்த வலியைவிட சசிகலா பொதுச்செயலாளர் ஆனது கொடுத்த வலி அதிகம். குட்டிம்மா தீபாஅத்தைக்கு கொடுத்த சிகிச்சையில் எந்த சந்தேகமும் இல்லைஎன்று சொன்னபோதே, இது பேரம் பேசிபெட்டிஎதிர்பார்க்கும் ஆள் என்று அதிமுகவினர் வெக்ஸ் ஆகிவிட்டார்கள்.
இந்த நேரத்தில் தான் ஜெயலலிதாவின் ஆவியுடன்(!) டிஸ்கஸ் செய்த ஓபிஎஸ், வீறுகொண்டு எழுந்தார். ‘இனி கட்சி அவ்வளவு தானா?’ என்று நினைத்தவர்களுக்கு இது பெரும் எழுச்சியைக் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
எங்கள் பகுதிகளில் அதிமுகவினர் மீண்டும் சுறுசுறுப்பு ஆகியிருக்கிறார்கள். வார்தா புயல், சென்னைக்கு குடிநீர், ஜல்லிக்கட்டு மூன்றிலும் திமுகவினரே ஓபிஎஸ்ஸை மெச்சியிருப்பது திமுகவிற்கே ஆப்பாக திரும்பும் நேரம் இது.
இப்போதைக்கு அதிமுக இரண்டாக உடைந்தாலோ அல்லது சசிகலா முதல்வர் ஆனாலோ அல்லது ஆட்சி கலைக்கட்டால் தான் திமுகவிற்கு நல்லது.
அப்படியில்லாமல் ஓபிஎஸ் கையில் ஆட்சியும் நான்கரை வருட அவகாசமும் கிடைத்துவிட்டால், ஸ்டாலினுக்கு போராட்டம் தான். அந்த மனிதர் மென்மையாக புன்னகைத்துக்கொண்டே திமுகவிற்கு தண்ணி காட்டிவிடுவார்.
எனவே திமுகவினர் எல்லாம் சசிகலாவிற்காக ப்ரே பண்ணுங்க..அதிமுகவினர் ஓபிஎஸ்ஸுக்காக ப்ரே பண்ணுங்க!
நான் பல வருடங்களாக கவனித்து வரும் விஷயம்..
சூர்யா படம் நன்றாக இல்லையென்று சொன்னால், கொண்டாடுகிறார்கள்.
நன்றாக இருக்கிறது என்றால் சண்டைக்கு வருகிறார்கள். இன்பாக்ஸில்கூட வந்துஎன்ன பாஸ், நல்லாயிருக்குன்னு சொல்றீங்க?’ என்று சட்டையைப் பிடித்து கேட்கிறார்கள்.
சூர்யா மீது ஏனோ பலருக்கும் ஒரு கசப்புணர்வு இருப்பதாக நினைக்கிறேன்.
அகரம் மூலம் பலருக்கும் உதவுபவர். அரசியலுக்கு வருவேன் என்று பம்மாத்து காட்டாதவர். ஆனால் நம் மக்கள் ஏன் சூர்யாவை தனிவிதமாக டீல் செய்கிறார்கள்?
தெரிந்தவர்கள் சொல்லவும்!
சிங்கம் 3 :
ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த டீம், மீண்டும் இணைந்தால் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைவதற்கே வாய்ப்பு அதிகம்.
ஆனால் அதே கதையின் இரண்டாம் பாகத்தில் ஜெயித்து, மீண்டும் மூன்றாம் பாகத்திலும் ஜெயித்திருக்கிறதுசிங்கம்டீம்.
முந்தைய இரண்டு பாகங்களை விட, இது தான் பெஸ்ட். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
சூர்யா சிங்கம் மாதிரியே முழு எனர்ஜியுடன் உழைத்திருக்கிறார். கேமிரா ஓட்டத்தையும் எடிட்டிங்கையும் பார்க்கும்போது, ஹரி மொத்த டீமையுன் ட்ரில் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
அனுஷ்காவின் அழகும் ஸ்ருதியின் டயலாக்ஸும் அருமை.
சண்டைக்காட்சிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். என்னா அடி! அதிலும் சிங்கம் மாதிரியே சூர்யா பறப்பதெல்லாம் தெறி மாஸ்!
பொதுவாக இரண்டு மாநில ரசிகர்களை திருப்திப்படுத்துகிறேன் என்று இறங்குபவர்கள் சொதப்பிவிடுவார்கள். ஆனால் ஹரி, ஆந்திர லொகேசன்+ தமிழ் சினிமா ஸ்க்ரிப்ட் என பக்காவான காம்பினேசனால் ஜெயித்திருக்கிறார்.
ஆக்சன் பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், சிங்கம்-3.
.....க்......கா
கோ..ட்...டை..க்..கு
கி....ம்..பி..ட்...டீ...ங்....ளா?
...க்....கா
...தி.......சா...ப்....பா...ட்....டி...ற்...கு
...ன்...
வே......ண்........டு........ம்?
நல்லா கேட்ட போ...அக்கா கோட்டைக்குப் போய் அரைமணி நேரம் ஆச்சு தாயீ!

.........ந்.............
வீ..............டி.............யோ.......வை
ஃபா...........ஸ்.............ட்........டா
பா.........ர்........க்...........
.......ழி..............ரு.......க்......கா?
 

ஸ்டாலின் சிரிச்சாப் போச்சு..
புகையிலை விரிச்சாப் போச்சு!

முனி-4
காஞ்சனா - 3
லவ் யூ சார்!
ஹய்யோ...ஹய்யய்யோ...முடியலைடா சாமீ...யாருய்யா இவனுக?
குறியீடு வைங்கடா, வேணாங்கல..ஆனால் அந்த கர்மத்தை விளக்கி எழுதற மாதிரி கொஞ்சம் டீசண்டா குறியீடு வைக்கக்கூடாதா?
தமிழ்நாடு இப்போ என்ன நிலைமைல இருக்கு..இவனுக என்ன சோலி பண்ணி வச்சிருக்கானுக, பாருங்கய்யா!
துருவங்கள் பதினாறு!
கிடாரி போன்றே, ஒரு நீட்டான whodunit த்ரில்லர்.
அட்டகாசமான மேக்கிங்..ஒளிப்பதிவு, இசை, சவுண்ட்ஸ், எடிட்டிங் என அத்தனையும் கச்சிதமாக அமைந்த படம்.
ஓபனிங் சீனிலேயே மேக்கிங்கில் அசத்தினாலும், திரைக்கதை ரீதியில் அதுவொரு சீப்பான சீட்டிங். ரகுமான் தனி ஆள் அல்ல என்பதற்கும் க்ளூ இல்லை. இந்த இரண்டு குறைகளைத் தாண்டி, வேறு குறைகள் ஏதும் சொல்ல முடியாத படம்.
முடிஞ்சா கண்டுபிடிஎன்ற சவாலை ஆடியன்ஸுக்கு கொடுக்கும் படம் என்பதால், நம்முடைய முழுக்கவனத்தையும் படம் வாரி எடுத்துக்கொள்கிறது. அதற்கேற்ப, சின்ன சின்ன டீடெய்ல்ஸில் கூட கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
புரியாத புதிருக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து ரகுமானுக்கு பெயர் சொல்லும் த்ரில்லர் இது.
கார்த்திக் நரேன் - தமிழ் சினிமாவிற்கு நல்வரவு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. செங்கோவி, நல்ல பதிவுகள். நீங்க பாட்ஷா படத்துக்கு திரைக்கதை அனாலிசிஸ் எழுதுங்களேன் அது ரொம்ப நல்ல இருக்கும்ன்னு தோணுது. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.