Sunday, February 19, 2017

Facebook Posts - July 2016

தமிழ் ஹிந்து: மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல் :

உங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் சினிமா இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு உறைநிலையில் - கிட்டத்தட்ட ஈடுபாடின்மைபோல - நீங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒருவேளை ‘உதிரிப்பூக்கள்’ படமே உச்சம் என்று திருப்தியடைந்துவிட்டீர்களா?

வழக்கமாகப் பலரும் திரைப்படங்களுக்குள் நுழையும் போது பெரும் கனவுகளுடனும் சினிமா மீது ஈடுபாட்டுடனும் வருவார்கள். நான் இதற்கெல்லாம் நேரெதிர். தமிழ் சினிமா மீது ஈடுபாடே இல்லாமல் இருந்தவன் நான். கட்டாயமாகத்தான் அழைத்துவரப்பட்டேன். இங்கே வந்த பிறகும்கூட எனக்குக் கிடைத்த ஸ்தானத்தை ஒரு வியாபாரஸ்தலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதனால், நான் மற்றவர்களைக் குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவுதான். ஒரு படம் முடிந்துவிட்டால் நான் பாட்டுக்கும் போய்த் தூங்குவேன், புத்தகங்களைப் படிப்பேன், அடுத்து என்ன வேலை என்பதில் நான் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்|

-----------------------
கபாலி - விமர்சனம் அல்ல!

அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் தன்னையே ஒரு இயக்குநரிடம் ஒப்படைத்திருக்கிறார். அதே போன்று இயக்குநரும் தன் கம்பெனி ஆர்டிஸ்ட்களை விட்டுவிட்டு நல்ல நடிகர்களை நடிக்க வைத்திருந்தால், அவர்களுடைய தேவையற்ற காட்சிகளை குறைத்திருந்தால், நல்ல வசனகர்த்தா இருந்திருந்தால், ரஜினி படங்களில் ஒரு மைல் கல்லாக இது ஆகியிருக்கும். இப்போது வெறும் ஹிட் படமாக மட்டும் ஆகியிருக்கிறது.

ஆரம்ப & இறுதி அரைமணி நேரங்களைத் தவிர்த்து மீதி நேரங்களில் நடிகராக மட்டுமே சூப்பர் ஸ்டார் வருகிறார். மகளையும் மனைவியையும் சந்திக்கும் காட்சிகளுக்கே கொடுத்த காசு செத்தது! (ஓசி டிக்கெட் என்றாலும்!!)

குறியீடு, ஓவர் பில்டப் விளம்பரங்கள், 1000 ஓவா டிக்கெட் அட்ராசிட்டிகளை மறந்துவிட்டுப் பார்த்தால், இதுவொரு நல்ல படமே!

முதல் பாதி - மகிழ்ச்சி

இரண்டாம்பாதி - கொஞ்சம் இழுவை என்றாலும், ...கி...ழ்..ச்..சி!
------------

தியேட்டரில் படம் முடிந்ததும் இரண்டு மூன்று பேர் சொன்ன கமெண்ட் : படம் நல்லாத்தானே இருக்கு, ஏன் ஆன்லைனில் திட்டுறாங்க?

கமல் ஒருமுறை சொன்னார், ‘ஒரு விமர்சனத்தைப் படித்தால், படத்தைப் பற்றி மட்டுமல்ல, விமர்சகனைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்!’. ஆன்லைன் விமர்சனங்களின் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே நேர்மையாக, உண்மையை உடைத்துச் சொல்வது தான். ’தியேட்டர் பக்கமே போய்டாதீங்கஎன்று சொன்னவர்கள், தங்களை மறுபரிசீலனை செய்ய இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் உண்மையான நிலவரத்தைப் பார்க்கலாம்...தப்பில்லை!..ஏனெனில் ரஞ்சித் மட்டுமல்ல, நாமும் மனுசங்க தானே..ஸ்லிப் ஆவது சகஜம்!

ரஜினி-அஜித்-விஜய் படங்கள் வரும்போது, இப்படி மாறி மாறி உள்நோக்கத்துடன் கலாய்த்துக்கொண்டிருந்தால், ஆன்லைன் விமர்சனங்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடவே வாய்ப்பு அதிகம்.
--------------
தீபாவளி வந்துவிட்டால் போதும், சில போராளீஸ் கிளம்புவார்கள்.
காசை கரியாக்குறாங்க - இது தமிழர் பண்டிகையே அல்ல - ஆரிய சதி - எனக்குப் பிடிக்காது, என் பிள்ளைக்காக வெடி வெடித்தோம் என்றெல்லாம் விதவிதமாக பொங்கல் நடக்கும். ஆனால் தமிழன் தீபாவளியைக் கொண்டாடித் தீர்ப்பான்.

ரஜினி படமும் அது மாதிரி தான். என்னதான் ஆன்லைனில் ஆராய்ச்சி செய்தாலும், கொஞ்சம் நன்றாக இருந்தாலே, சூப்பர் ஹிட் ஆகிவிடும். ஜெலுசில் தான் ஒரே தீர்வு!
------------
திருச்சியில் சின்ன மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறேன். முதல்நாள் ஸ்ரீரங்கம். நேற்று மலையுச்சி பிள்ளையார் கோவிலுக்கும் கல்லணைக்கும் அழைத்துச் சென்றார்கள். இன்று கபாலி. நாளை திருவானைக்காவல் கோவில் விசிட்!

அவர்களே ப்ளான் செய்தது இது. ‘நானே எப்போதாவது தான் இங்கே வருகிறேன். எதற்கு படத்திற்கு?’என்று நான் மறுத்தும்அவன் படத்தையெல்லாம் தியேட்டரில் பார்க்கணும்ங்கஎன்று டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்துவிட்டார்கள். இத்தனைக்கும் நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

மதிய-ஈவ்னிங்-நைட் ஷோவிற்கு டிக்கெட் இல்லை. காலை 10.30 ஷோவிற்கும் டிக்கெட் இல்லை. 11 மணி ஷோவிற்கு, தியேட்டர்காரர்களிடம் பேசினார்கள். ‘இன்னும் ஒரு வாரம் சான்ஸே இல்லைஎன்று சொல்லிவிட்டார்கள். பிறகு கெஸ்ட்டுக்காக என்று சொன்னபிறகு பால்கனியில் தியேட்டர்காரர்கள் எப்போதும் தங்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கும் சில சீட்களில் மூன்றை வாங்கித் தந்தார்கள். இது தான் கள நிலவரம்.
-------------
கபாலியை நல்லாயிருக்கு/இல்லை என்று சொல்லிவிட்டு, பலர் அதை நிரூபிக்க விளக்கப்பதிவுகளாக போட்டுக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். நல்லவேளையாக எனக்கு அதற்கு நேரமில்லை.
கபாலி, குறைகள் இருந்தாலும், பார்க்க வேண்டிய படம்.
ரஜினி படம் என்பது தமிழர்களுக்கு திருவிழா.
ரஜினி படம் ஓடும் தியேட்டர் என்பது தமிழர்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்!
இது தான் யதார்த்தம்.
DOT.

-------------
July 25 :
Morning show . Watching Kabali in Sonamina theater, Trichy. No ticket for other shows. First half over. So far, so good.
Successfully housefull on 4th day.

Pimbilkka pilaappi to Online reviewers!
---------
1000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத ஏழைப் புத்திசாலி நான்.
எனவே வெள்ளிக்கிழமை 'கோடம்பாக்கத்தில் கோகிலா'வை தரிசிக்க முடிவு செய்துள்ளேன். என்னைப் போன்ற ஏழைகளை மனதில் வைத்து கோகிலாவை...அதாவது கோகிலா படத்தை தொடர்ந்து ஓட்டும்படி தியேட்டர் ஓனர்களை கேட்டுக்கொள்கிறேன்.

விளக்கம் கேட்ட நண்பருக்காக:
தியேட்டர் கட்டணக்கொள்ளை என்னைக் கடுப்பேற்றியுள்ளது. விமல் படமானாலும் சூப்பர் ஸ்டார் படமானாலும் ஒரே டிக்கெட் விலையில் குவைத்தில் படம் பார்த்த எனக்கு, இங்கே நடக்கும் அட்டூழியம் கோபத்தையே கொடுக்கிறது.
ஆனால் இதற்கான தீர்வாக திருட்டு விசிடியை ஆதரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு தொழிலையும் அழிப்பது பெரும் பாவம்.(சினிமாவில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் சேர்த்தே சொல்கிறேன்.)
எனவே இரண்டு தீர்வுகள் தான் நம்முன் :
படத்தை ஒரு வாரம் கழித்துப் பார்ப்பது.
அதுவரை கோடம்பாக்கத்தில் கோகிலாவை ஆதரிப்பது!
இவண் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தலைவர் படம் பார்க்க இந்தியா ஓடிவந்த அப்பாவி ரசிகன்.
-------------
மன்மதன் லீலைகள் எழுதி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. திடீரென இமெயில் வரும், இன்பாக்ஸில் மெசேஜ் வரும். ‘நீங்கள் தான் லீலைகள் எழுதிய செங்கோவியா?’ என்றோ, ‘உங்ககிட்டே பேசணும்’ என்றோ கேட்பார்கள்.
சிலரை தலைப்புஅச்சுறுத்தினாலும், படித்தபின் பாராட்டவே செய்கிறார்கள்.
‘பிறந்து என்னடா கிழித்தாய்?’ என்று சித்திரகுப்தன் கேட்கும்போது, இந்த லின்க்கை கொடுக்க உசிதம்!
இது ஏன் புத்தகமாக வெளிவரவில்லை என்று நண்பர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். இது எனக்குத் தெரிந்த சில பெண்களின் உண்மைக்கதை. அதை விற்றுக் காசாக்க மனம் வரவில்லை.
- செங்கோவி
(பயணத்தில் இருக்கும்போது,இன்ப அதிர்ச்சியாக கிளிமூக்கின் பதிவு..நன்றி அரக்கரே!)
கிளிமூக்கு அரக்கன் :
பெண்கள் மற்றும் காதல் விசயத்தில் ,இலவு காத்த கிளிகள் என தங்களை அடிக்கடி ஆண் சமுதாயம் அழைத்துக் கொண்டாலும், உண்மையில் கிடைத்தப் பழங்களை எல்லாம் கொறித்துப் பார்க்கலாம் என்ற அணில் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்கள்.
காதலிலும் கன்னிகளை கவர்வதிலும் சோகமே லாபத்தைத் தரக்கூடிய முதலீடு. நட்டத்தைத் தந்தாலும் அடுத்த இலக்கிற்கான முதலீடு. அப்படியான முதலீட்டைக் கொண்டு தொடர்ந்து பெண்களைக் கவரும் ஓர் ஆணை மையமாக வைத்து, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளார் செங்கோவி எழுதி இருக்கும் ஆட்டோ பிச்கன் வகையிலான கதை தான் இந்த நாவல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், பழைய வலிகளின் மீதான வஞ்சம் இவை எப்படி ஒரு சராசரியான பாசத்திற்கு ஏங்கும் ஆணை மாற்றுகின்றது என்பதை கதையின் ஊடாக பாத்திரமாகவே இருந்து , தன் கதையுடன் சேர்த்து சொல்லுகின்றார் ஆசிரியர் செங்கோவி. படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவீர்கள். நாயகன் அல்லது வில்லன், எதுவாகினும் மதனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற யோசனையை கண்டிப்பாக இந்தப்புனைவு தரும்.
தாள் எழுத்தாளர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல , இந்த இணைய எழுத்தாளர்கள் என்பதை மற்றும் ஒருமுறை உறுதிப்படுத்தும் எழுத்து இந்தப் புதினம். செங்கோவிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது.
-----------------------

சமீபத்தில் பரவலான பாராட்டைப் பெற்ற படம், உறியடி.

கல்லூரி மாணவர்களின் துடுக்குத்தனமும் சாதிச்சங்க அரசியல்வாதியின் நயவஞ்சகமும் உரசிக்கொள்வதை மிக இயல்பாக சொன்ன படம் இது.

ஒரு ஹாஸ்டல்..தப்பும் தவறுமாகத் திரியும் சில மாணவர்கள்..சாதிச்சங்கம் அரசியல்கட்சியாக உருமாறும் காலகட்டம் என மிக நுணுக்கமான சித்தரிப்பில் உறியடி நம்மைக் கவர்ந்தது.

இந்தப் படத்தை அனைவருமே தன் நண்பர்களிடம்இதைப் பாரு மச்சிஎன்று சிபாரிசு செய்தார்கள். சமீபத்தில் வேறு படங்களுக்கு இப்படி ஒரு மவுத் டாக் வரவில்லை. சேது, காதலுக்கு மரியாதை போன்ற படங்களெல்லாம் இப்படி பிக்கப் ஆனவை தான். ஆனால் இது சேது காலம் இல்லை என்பது தான் சோகம்.
ஒரு படம் நல்ல படம் என்று கேள்விப்படுவதற்குள், காணாமல் போய்விடுகிறது. ஆனாலும் இணையத்தை படத்தின் விளம்பரத்திற்காக, படத்தின் ரிலீஸுக்கு அப்புறம், சிறப்பாகப் பயன்படுத்திய படம் என்று உறியடியைச் சொல்லலாம்.
இயக்குநர்கள் ஒரு பக்கம் பாராட்ட, ஃபேஸ்புக்கில் நண்பர்கள்இன்னும் பார்க்கலியா?’என்று மிரட்ட, இணையத்தில் களைகட்டியது. டிவி, யூடியூப், பத்திரிக்கை, ஃபேஸ்புக் என எல்லாப் பக்கமும் விஜயகுமார் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். பட ஷூட்டிங்கை விட, இதற்கு அதிக கால்ஷீட் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்!!

எல்லோரும் ப்ளஸ் பாயிண்ட்ஸை சொல்லிவிட்ட நிலையில், படத்தின் முக்கிய குறையை இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

படத்தில்கோபம்என்பதைத் தவிர்த்து வேறு எமோசன்ஸ் எதுவுமே பெரிதாக காட்டப்படவில்லை. அதிலும் பெண் கேரக்டர்களின் பங்களிப்பு, மசாலா படங்களை விடவும் மோசமாக இருந்தது.

பஸ்ஸில் ஹீரோயின் கிண்டல் செய்யப்படுவது தான் படத்தின் முக்கிய ப்ளாட் பாயிண்ட். அதை அவர் எப்படி உணர்கிறார், அவருடைய ஃபீலிங் என்ன என்பதற்குள் படம் போகவே இல்லை.

குட்டைநண்பனின் அம்மா கேரக்டர் வருகிறது. போகிறது. அதனுடைய வேதனையும் ஆடியன்ஸுக்கு கடத்தப்படவேயில்லை. கோபமும் வன்முறையும் தான் படத்தை நிறைத்திருந்தன

இதனால் இது ஆண்களால், ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்று ஆகிப்போனது. 50% ஆடியன்ஸான பெண்களை படம் இழந்தது. புதுப்பேட்டை போன்ற டார்க் மூவீஸ் இப்படி பெண்களின் பாயிண்ட் ஆஃப் வியூவை மிஸ் செய்திருக்கின்றன. இயக்குநரின் நோக்கமே அது தான் என்றால் இயக்குநருக்கு வெற்றி. ஆனால் இது தயாரிப்பாளர் விஜயகுமாருக்கு?

சரி, போனது போகட்டும். விஜயகுமார் தன் அடுத்த பட கதை விவாதத்தை இயக்குநர் சேரனின் ஆபீஸ் மொட்டைமாடியில் நடத்தினால் போதும், எமோசன்ஸை எப்படிக் கையாள்வது என்று தெரிந்துவிடும்!

----------------
விபரீத கேள்வியுடன் என் பையன் பேச்சை ஆரம்பித்தான்.
’அப்பா, பொண்ணு எங்க கிடைக்கும்?’
‘பொ..பொண்ணா? எந்தப் பொண்ணுடா?’
‘அதாம்ப்பா..கல்யாணம்லாம் பண்றாங்கள்ல..அந்த பொண்ணு’
‘அது... ஊருல இருப்பாங்க’
‘ஓ..ஊருல நிறைய பொண்ணுங்க இருப்பாங்க..நாம போய் ஒன்னை கல்யாணம் பண்ணிக்கலாமோ?’
‘டேய்..இப்போத்தாண்டா ஒண்ணாப்பே போயிருக்கறே..அதுக்குள்ள’ நாம’ங்கிறே?’
‘ப்ச்..சொல்லுங்கப்பா’
‘அப்படி இல்லைப்பா..பொம்பளைப்பிள்ளை இருக்கிற வீட்டில் பொண்ணும், ஆம்பிளைப்பிள்ளை இருக்கிற வீட்டில மாப்பிளையும் இருப்பாங்க. மாப்பிளளை வீட்டுக்காரங்க போய் பொண்ணு வீட்ல கேட்பாங்க’
‘ஓ..கேட்டவுடனே கொடுத்துடுவாங்களோ?’
‘அதெப்படிடா கொடுப்பாங்க. உன் அம்மாவை நிறைய பேர் பொண்ணு கேட்டாங்க. உங்க தாத்தா கொடுக்கலியே..அப்பாக்குத்தானே கொடுத்தார்’
‘ஏன் அப்படி?’
‘ஏன்னா அப்பா படிச்சிருக்கேனா, நல்ல வேலைல, ஃபாரின்ல இருக்கிறேனா? அதனால தான் கொடுத்தார். அதனால நல்லா படிச்சாத்தான் நல்ல பொண்ணு கிடைக்கும்’.
‘ஓ..அப்போச் சரி’
‘என்ன சரி?’
‘சரி..நான் நல்லாப் படிக்கிறேன்னு சொன்னேன்’.

உலகத்திலேயே நல்ல பொண்ணு வேணும்னு படிக்கப்போறது என் புள்ளையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுசரி, விதை ஒண்ணு போட்டால் சுரை ஒண்ணா முளைக்கும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.