Sunday, February 19, 2017

Facebook Posts - October 2016



நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியதோடு, இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார். அது, கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து டைரி எழுதுவது.
பிற்காலத்தில் அதுவொரு தகவல் களஞ்சியமாக ஆகும் என்றே நினைக்கிறேன். இந்த சமயத்தில் பழைய கூத்து ஒன்று ஞாபகம் வருகிறது.
நான் ஸ்கூல் படித்த காலத்தில் ஏதோவொரு வாரப்பத்திரிக்கையில் சிவகுமாரின் டைரி பற்றிய செய்தியும்டைரி எழுதுவது மிகவும் நல்ல பழக்கம்எனும் அறிவுரையும் வந்திருந்தது. நானும் அன்றே டைரி எழுத ஆரம்பித்தேன்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு...
என் வீட்டில் இருந்த பேங்க் பாஸ்புக் ஒன்றை எல்லோரும் தேட, உதவிக்கு வந்த பக்கத்து வீட்டு மாலாக்கா கையில் இந்த டைரி சிக்கியது. அப்போது நான் வீட்டில் இல்லை. அதை கையோடு எடுத்துப்போய்விட்டார் எனும் அதிர்ச்சித் தகவல் தெரிந்து அலறி ஓடினேன்.
மாலாக்கா சொன்னார், “தம்பி, டைரி எழுதுவது எல்லாம் நல்லவங்க வேலை. தயவு செஞ்சு அதை நீ செய்யாதே. ஆகஸ்ட் 14 அன்னிக்கு நீ எழுதுனதை நான் படிச்சிட்டேன்னு!
அசடு வழியஇனிமே எழுத மாட்டேன்னு உறுதிமொழி கொடுத்துட்டு டைரியை வாங்கிட்டு வந்துட்டேன்.
ஆகஸ்ட் 14 அன்னிக்கு என்ன எழுதுனோம்னு பார்த்தேன்.பெருசா ஒன்னும் எழுதலை..’தனலட்சுமி இடுப்பில் ஒரு குடத்துடனும் தலையில் ஒரு குடத்துடனும் தளுக் தமுக்கென்று நடந்து போனாள்ன்னு மட்டும் தான் எழுதியிருந்தேன்.
அப்புறம் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பிரச்சினை ஸ்மூத்தா முடிஞ்சதுக்காக அந்த பெருமூச்சு இல்லை, நல்லவேளை ஆகஸ்ட் 15 அன்னிக்கு எழுதனதை மாலாக்கா படிக்கலையேன்னு தான்!

-----------------------------------
#கொடி
ரொம்ப நாளைக்கு அப்புறம், தனுஷுக்கு ஒரு வெற்றிப்படம்..
அரசியல் படம் என்று சொல்லிக்கொண்டாலும், ட்வின்ஸ் கதையை த்ரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
கமலா காமேஷைப் பார்த்தபோது, சரஸ்வதி சபதத்தில் ராணியாக வரும் கே.ஆர்.விஜயா ஞாபகம் வந்தது! முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்கள். வி.தா.-விற்குப் பிறகு, அவர் கரியரில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு படம்!
கொடியை திடீரென அரைக்கம்பத்தில் இறக்கியதுசைக்கோத்தனமான அசாத்திய துணிச்சல். அன்பு அதிரடி ஆவது பூச்சுற்றல்.
மொத்தத்தில் திருப்திகரமான படம்..I enjoyed lot!

-----------------

நான் தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டதே விகடன், குமுதம், வாரமலர்(தினமலர்) படித்துத்தான்..
அப்போது ஊரில் பெட்டிக்கடை வைத்திருந்தோம். கடைக்கு பார்சல் செய்ய வரும் எல்லா புத்தகங்களையும் படிப்பது எனக்கு விவரம் அறியா வயதிலேயே ஆரம்பித்துவிட்ட விஷயம்..
பழைய விகடனில் ஆரம்பித்து 90களில் உருமாற்றம் கண்ட விகடன்வரை கடையிலேயே படித்து வளர்ந்தேன். அதனாலாயே எட்டு-ஒன்பது படிக்கும்போதே கதை எழுதி விகடன் - குமுததிற்கு அனுப்ப ஆரம்பித்திருந்தேன்.
பெரும்பாலான தமிழர்களுக்கு விகடன் என்பது இன்னொரு குடும்ப உறுப்பினர் போல தான். விகடனில் எனது கட்டுரை வந்தது, எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
90 அகவையைத் தொட்ட விகடன் தாத்தாவிற்கு அன்பு முத்தங்களுடன் வாழ்த்துகள்!
தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு, தரத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் பேலன்ஸ் செய்தபடியே வளர்வது விகடனின் ஸ்பெஷாலிட்டி.
விகடனுக்கு ஒரு சிறு வேண்டுகோள்..
பேட்டிகளில் முன்பெல்லாம்சந்தித்தோம்..பேட்டி கண்டோம்என்று எழுதுவார்கள். சமீபகாலமாகசந்தேத்தேன்...கேட்டேன்என்று வருகிறது. ‘சந்தித்தோம்என்று சொல்லும்போது விகடன் குழுமமே சந்தித்து பேட்டி எடுத்த ஃபீலிங் வந்தது. ‘சந்தித்தேன்எனும்போது Blog படிக்கிற ஃபீலிங் தான் வருகிறது. எல்லா விகடன் இதழ்களிலும் இதைப் பார்க்கிறேன். இதைச் சரிசெய்தால் மகிழ்வேன்!
#I_love_Vikatan_Thatha

-------------------------
ஆயிரம் சொல்லுங்கள்...
இப்படி ஒரு நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் நட்புக்குப் பின், இது தான் சரித்திரத்தில் நட்புக்கு இலக்க்கணமாக நிற்கப் போவது!

----------------------

சின்ன வயசுல எனக்குதீபாவளின்னு சொல்ல வராது. ’தீவாளிதான்.
நாய்க்கர் வாத்தியார் என் பட்டக்ஸ்லயே ரெண்டு போட்டுஓலையை எடுத்து டெய்லி நாக்கை வழிலே..அப்பத்தான் வார்த்தை சுத்தமா வரும்னார்.
நானும் கடும் முயற்சிக்கு அப்புறம் கொஞ்சவருசமாதீபாவளின்னு சொல்லப் பழகிட்டேன்.
இப்போ என்னடான்னு யாரைப் பார்த்தாலும்ஹேப்பி தீவாளின்னு சொல்லிட்டுத் திரியறாங்க. தீபாவளின்னு சொன்னால் ஓல்டு பேஷனாம், தீவாளின்னு தான் சொல்லணுமாம். என்றா இது?
உங்களையெல்லாம் நாயக்கர் வாத்தியார்கிட்டே வரிசையில் நிக்க வைச்சு, ரெண்டு போட்டால் தான் சரி வருவீங்கடே!

--------------
 இந்தியாவில் பிச்சைக்காரர்களின் தேசிய கீதம் எது என்று கேட்டால், தாரளமாக ‘DDLJ'வில் வந்ததுஜே தேக்கா தோ ஜானா சனம்பாடலைச் சொல்லிவிடலாம். குறிப்பாக, ரயிலில் பாடிப் பிச்சை எடுப்போருக்கு கடந்த இருபது வருடங்களாக சோறு போடுவது இந்த பாட்டு தான்.
சமீபத்தில் திருச்சிக்கு ரயிலில் சென்றபோது, ஒரு பெண்மணி அருமையாக பாடினார். அங்கே இருந்த பெரும்பாலானோர் அவருக்கு காசு போட்டோம். அந்த மெட்டில் ஏதோ ஒரு வசீகரம் உண்டு.
பத்து வருடங்களுக்கு முன்பு, இங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் போனோம். ஒவ்வொரு ஸ்டேசனிலும் யாராவது ஒரு பிச்சைக்காரர் வந்து இந்தப் பாட்டை பாடினார். ஹிந்தி தெரியாத என் அம்மாவே பாடலில் மயங்கிகாசு போடுடாஎன்று சொன்னதும் நடந்தது.
பிறகு டெல்லியில் ஒருநாள் டிவியில் இந்த பாட்டு வந்தது. ஷாருக்கான் ஸ்லோவாக பாட ஆரம்பித்தார், ‘துஜே தேக்கா தோ ஜானா சனம்’.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா சீரியஸாக என்னிடம் கேட்டார் : “என்னடா இது, இந்தப் பையன் பிச்சைக்காரங்க பாட்டை பாடுறான்?”
https://www.facebook.com/images/emoji.php/v7/f4c/1/16/1f642.png:)
புவர் ஷாருக் பாய்!!
-------------------

கடைசியில் நானும்ஸ்நேக் பாபுஆகிவிட்டேன்!!
கொஞ்ச மாதங்களாகவே எங்கு பார்த்தாலும் நாகினி பற்றிய பேச்சு. ஆனாலும் நான் கெத்தாக தப்பித்து வந்தேன்.
இடையில் ஒருநாள், ஒரே ஒருநாள் நாகினி பார்த்தேன். அன்று முதல் நாகினி (சீரியல்) ரசிகன் ஆனேன்.
ஆடியன்ஸ் சிக்கிட்டாங்க என்று இழுஇழுவென இழுக்கிற வேலையெல்லாம் இல்லை. கதையை பரபரவென நகர்த்திக்கொண்டே போகிறார்கள். அதிலும் கதையில் வரும் ட்விஸ்ட்டுகள் அட்டகாசம்.
ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்சன் என எதிலும் சீரியலுக்கான அறிகுறி இல்லை.
ஆனாலும் டிவியில் போடும்போதுஇதுவரைஎன்று ஐந்து நிமிடம், ஒவ்வொரு இடைவேளைக்குப் பின்பும் 2 நிம்டம் என சீன்களை ரிப்பீட் செய்வது கொடுமை. எனவே ஆன்லைனில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.
ஆன்லைனில் தமிழை விட ஹிந்தியில் அருமையான குவாலிட்டியில் காணக்கிடைக்கிறது :
https://www.youtube.com/watch…
ஹிந்தி கத்துக்க எளிய வழி ஹிந்திப்படம் பார்க்கிறது தான்என்று முன்பு நண்பர் ஒருவர் சொன்னார். அதனால்மேரா நாம் ஜோக்கர்பார்க்க ஆரம்பித்து, நண்பரின் திட்டம் பத்மினியால் நாசமானதை முன்பே எழுதியிருக்கிறேன்.
இப்போது மௌனி ராயால் கெட்டுவிடுமோ என்று தான் சற்றுப் பயமாக இருக்கிறது.
ஹே நாகின், துமாரேஸே கித்னி தடை ஆனே தா, மே ஹிந்தி சீக்தாவும்.. தின் துமாரா டைரி மே நோட் க்ரோ!

------------
கமர்சியல் சினிமாவில் எனக்குப் பிடித்த விஷயமே, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அது உருவாக்கப்படுவது தான். ஸ்டோரி டிஸ்கசனில் ஆரம்பித்து எடிட்டிங்வரைஇது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா?’ எனும் கேள்விக்கு முக்கிய இடம் உண்டு.
சென்ற வாரம் வெளியான ரெமோ படத்தின் நெகடிவ் அம்சமாக பலரும் சொல்வது, ஒரு பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து காதலிக்கும்படி தொந்தரவு செய்யும் ரவுடித்தனத்தை ஹீரோயிசமாக படம் முன்வைக்கிறது என்பதையே!
எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சுற்றுவது, எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒரு பெண்ணின் பின்னால் தொடர்ந்து செல்வது, தன் நண்பர்களிடம்அவ தாண்டா என் ஆளுஎன்று பீற்றிக்கொள்வது, பிறகு அதையே ஈகோ பிரச்சினையாக எடுத்துக்கொள்வது, ’இப்போ ஒத்துக்கப்போறியா இல்லையா?’என்று மிரட்டுவது, முடிவில் ஒத்துக்கொள்ளாத பெண்ணை வெட்டிக்கொல்வது அல்லது ஆசிட் அடிப்பது என்பது தான் நடைமுறையில் இருக்கும் இந்த பொறுக்கித்தன வாழ்க்கை முறை.
இதை ஏதோ பெரிய சாதனையாகவும் ஹீரோயிசமாகவும் காட்டி வந்த தமிழ்சினிமா, தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது. வேதாளம் படம், மிக மென்மையாக இந்த மாற்றத்தைக் காட்டியது. ரெமோவுக்கு கிடைத்திருக்கும் எதிர்ப்பு, தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் பல திரைக்கதைகளில் மாற்றத்தை உண்டாக்கும் என்றே நம்புகிறேன். மெதுவாகவேனும் இது நடந்தே தீரும்.
பெண்களை நிம்மதியா படிக்கப் போக விடுங்க..பெண்களை நிம்மதியா வேலைக்குப் போக விடுங்க சார்.

கோடிக்கணக்கில் சம்பளமும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் வைத்திருக்கும் உங்களுக்கேஎன்னை வேலை செய்ய விட மாட்டேங்கிறாங்கஎன்று அழுகாய்ச்சியாக வரும்போது, தன் சொந்தக்காலில் நிற்பதற்காக படிக்கவும் வேலைக்கும் போகும் பெண்களை காதல்ங்கிற பெயரில் தொந்தரவு செய்கிறீர்களே, அவங்களுக்கு எப்படி இருக்கும்?
கொஞ்சம் யோசிங்க பாஸ்!

-----------------
இந்த வார ஆனந்த விகடனில் திரைத்தொண்டர் தொடரில் திரைக்கதை பற்றி பஞ்சு ஐயா முக்கியமான சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அந்த பகுதி இங்கே:
திரைக்கதை எழுதுவது எப்படி?’
சினிமாவுக்கு என்று இல்லை... `இப்படித்தான் எழுத வேண்டும்' என்று யாரும் அறிவுரை சொல்லி எல்லாம் எதுவும் எழுத முடியாது. அது சிறுகதை, நாவல், சினிமா, நாடகம்... என எதை எழுதுவதாக இருந்தாலும், கற்பனையில் ஒரு விஷயத்தை உருவாக்கும் திறன் வேண்டும். அது அனுபவம், வாசிப்பு, பார்த்த படங்கள், கேட்ட இசை... என ஒவ்வொருவரைப் பொறுத்தும் கொடுக்கப்படும் வாய்ப்புகள், சுதந்திரத்தைப் பொறுத்தும் அது மாறும்.
.கே. சினிமாவில் கதை, ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் உண்டு. ஆனால் நாவல், குடும்ப நாவல், பெருங்கதை, குறுங்கதை, சிறுகதை... இவற்றுக்கு ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் எதுவும் கிடையாது. ‘கதை, ட்ரீட்மென்ட் எழுதுவதில் கல்கி கெட்டிக்காரர்’, ‘கதை, ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதில் புதுமைப்பித்தன் கெட்டிக்காரர்...’ என்று யாராவது சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது சினிமாவில் மட்டும் இந்த ஸ்க்ரீன் ப்ளே, ட்ரீட்மென்ட் எப்படி வந்தது?
ஸ்க்ரீன்ப்ளே... இதில்ப்ளேஎன ஏன் சொல்கிறார்கள்? கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் ஒன்றுதான். அதில் சிலர் டெண்டுல்கராகவும் சிலர் தோனியாகவும் சிலர் கோஹ்லியாகவும்... அந்த விளையாட்டை எத்தனைவிதமாக விளையாடுகிறார்கள். அதே கிரிக்கெட்தான். ஆனால், அதை ஒவ்வொருவரும் எத்தனைவிதமாக, எத்தனை வருடங்களாக விளையாடுகிறார்கள்? போரடிப்பதே இல்லை.
அதுபோன்ற ப்ளேவை திரையிலும் பண்ணலாம். அதுதான் ஸ்க்ரீன்ப்ளே. ‘அடுத்த பந்தை அடிப்பானா, அது சிக்ஸரா, ஃபோரா, விக்கெட்டா..?’ இப்படி விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் ப்ளே போல. ‘நல்ல கதையைச் சொல்கிறேனே...’ என எந்தவித ப்ளேயும் இல்லாமல், கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தால், ‘அடப்போய்யா... நீயும் உன் கதையும்எனக் கொட்டாவி விட்டுவிட்டு எழுந்துபோய்விடுவார்கள். அதனால் நல்ல கதைகளைக்கூட சரியாக ப்ளே பண்ண வேண்டும்.
அடுத்துட்ரீட்மென்ட்’. இந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் இடம் மருத்துவமனை. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பது டாக்டர்களின் வேலை. அப்படி இருக்கையில் சினிமாவில் எங்கிருந்து வந்தது அந்த ட்ரீட்மென்ட்? நம் உடலில் செயல்படாத உறுப்புகளைச் செயல்படவைப்பதுதானே ட்ரீட்மென்ட். அதேபோல்தான் எவ்வளவு மிகச் சிறந்த கதையாக இருந்தாலும், திரைக்கதை என்ற ஒன்றை நீங்கள் எழுதி முடிக்கும்போது, நம்மை அறியாமல், ஆங்காங்கே சில வீக் பாயின்ட்ஸ் வந்துவிடும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதைட்ரீட்பண்ண வேண்டும். அப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் செய்யக்கூடியதுதான் நல்ல ட்ரீட்மென்ட்.
இன்று படம் இயக்கும் பல இயக்குநர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். ‘இது என்ன கதை?’ என ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை முடிவுபண்ணாமல், அவர்கள் சிந்திக்கும்போதே சினிமாவாகவே, அதாவது ட்ரீட்மென்டாகவே சிந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது தவறு. முதலில் முழுக் கதையைத் தயார்செய்த பிறகே ப்ளே, ட்ரீட்மென்ட்டுக்குப் போக வேண்டும்.
ஆனால் இவர்கள், கதையையே ரெடி பண்ணாமல், ‘ஓப்பன் பண்ணினா பெரிய கார் வந்து நிக்குதுஎன்று ஷாட் பை ஷாட்டாகவே சிந்தித்து, ‘இந்த இடத்தில் பாட்டு, அந்த இடத்தில் காமெடி ட்ராக்எனக் காட்சிக் காட்சியாக எடுத்துக் கோத்து சினிமா ஆக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காட்சிகளைக் கோத்துப்பார்த்தால், அதில் கதை இருக்கிறதா, இல்லையா என்றுகூட பார்ப்பது இல்லை. அப்படியே அதில் கதை இருந்தாலும், அது நன்றாக இருப்பது இல்லை.
ஆனால், நான் ஒரு படத்துக்கு முதலில் அடிப்படையான ஒரு கதையை ரெடி பண்ணுவேன். பிறகு அந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என முக்கியமான கேரக்டர்களில், யாரை நடிக்கவைக்கலாம் என நடிகர், நடிகைகளை ஃபிக்ஸ் பண்ணுவேன். அந்தக் கதையையும், அந்த நடிகர்- நடிகைகளையும் மனதில் வைத்து திரைக்கதை அமைப்பேன். அந்த ஃப்ளோ இழுவையாக இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் பரபரப்பாக இருக்கிறதா என, பிறகு ட்ரீட் பண்ணுவேன்.
இப்படி நான் எழுதியதை எஸ்பி.முத்துராமன் சார் அழகாக எடுத்துத் தருவார். அவர் தேவைக்கு அதிகமாக எடுத்து, பிறகு வெட்டித் தூக்கி எறிந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. தனித்தனியாக இருந்த நாங்கள் இருவரும், அப்படி ஒரே மாதிரியான அலைவரிசையில் இயங்கி பல வெற்றிகளைத் தந்திருக்கிறோம். ஆனால்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்என அனைத்தையும் ஒரே ஆளாக, கன்ட்ரோலில் வைத்துள்ள இன்றைய இயக்குநர்கள் எங்களைத் தாண்டியும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தரலாம். அது உங்கள் ப்ளே, ட்ரீட்மென்டைப் பொறுத்தது.

------------------------
Movies to Learn Series :

உலகில் சிறந்த படங்கள் பட்டியலில் தவறாமல் இடம்பெறும் படம், In the Mood for Love.
மெல்லிய உணர்வுகளை மையப்படுத்தி வந்த ஃபீல் குட் மூவி இது.
Frame within Frame முறையில் ஷாட்களை அமைத்து, ஸ்லோமோசனில் ஒரே நேரத்தில் கேரக்டர்களும் கேமிராவும் நகர பிண்ணனியில் Yumeji's Theme ஒலிக்கும்போது, சொர்க்கத்தில் நுழைந்தது போல் நாமும் மிதக்க ஆரம்பிக்கிறோம்.
கலரையும் இசையையும் இவ்வளவு வீரியமாக பயன்படுத்திய படங்கள் சமீபத்தில் ஏதுமில்லை.
வடிவேலு டயலாக்கானஇவன் பொண்டாட்டியை அவன் வச்சிருக்கான், அவன் பொண்டாட்டியை.....’ தான் தீம். https://www.facebook.com/images/emoji.php/v7/f4c/1/16/1f642.png:)
ஆனாலும் பிரசண்டேசனில் துளியும் ஆபாசமின்றி, நெஞ்சில் வாழும் காவியத்தை கொடுத்துவிட்டார்கள்.
இந்த படத்தை ஒரு நண்பருக்கு பரிந்துரைத்தேன். படம் பார்த்த அவர்என்ன பாஸ் இது..ஹீரோவுக்கு சூடு சொரணையே கிடையாதா?’ எனும் ஒரே கேள்வியில் படத்தை காலி செய்தார்.
அடப்பாவி என்று நொந்துகொண்டு, ‘அப்போ நீங்க பார்க வேண்டிய படம் Butterfly On the Wheel' என்றேன். பார்த்துவிட்டுஆஹா..இப்படில்ல இருக்கணும்என்று கொண்டாடினார்.
ஒரே ஒன்லைன் தான். ஆனால் வேறுபட்ட கேரக்டர்கள்/திரைக்கதை, ஒளிப்பதிவு, ஃபாஸ்ட்டான ஷாட்ஸ் என்று முற்றிலும் வேறு அனுபவத்தை Butterfly On the Wheel கொடுக்கிறது.
சினிமா மாணவர்கள் ஒரே நேரத்தில் இவ்விரு படங்களையும் பார்த்து ஒப்பிட்டால், பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். கலைப்படத்திற்கும் கமர்சியல் படத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், இந்த இரு படங்களை காட்டினால் போதும்!

---------------------------
காந்தி ஏன் கொண்டாடப்படுகிறார், கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு எவ்வளவோ காரணங்கள். அதில் சில..
1. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கணக்கு வழக்கு, காந்தியின் கையிலேயே இருந்தது. நினைத்துப் பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள்வரை அவரிடம் கொடுத்த கணக்கு வழக்கற்ற பணம். அதில் இருந்து அவர் எவ்வளவு வேண்டுமானாலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ ஒதுக்கி இருக்கலாம். அல்லது, தன் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து சாமர்த்தியமாக தன் வம்சம் வாழ வழி செய்திருக்கலாம். ஆனால் அவரது கொள்கை எதிரிகளால்கூட, அவர் ஐந்து பைசாவை கையாடல் செய்தார் என்று சொல்ல முடியாது. அத்தனை பணமும் தனக்கல்ல, தன் கொள்கைக்கும் போராட்டத்திற்கும் எனும் தெளிவு!
2. உலகில் நடந்த எந்தவொரு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களும், அந்தப் போராட்டத்தின் பலனை அதிகம் அனுபவித்தவர்களாக அவர்களே இருந்திருக்கின்றனர், மன்னர்/பிரதமர்/முதல்வர் என! சுதந்திரப் போராட்டம் முடிந்ததும், காந்தியே பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ ஆகையிருக்க முடியும். ஆனால் ஒரு துறவியைப் போல, அவர் ஒதுங்கினார்.
போராட்டக் காலத்தில் தனக்கென்று பணத்தையும் சுருட்டாமல், பதவியையும் எதிர்பாராமல் மக்கள் நலனுக்காக உழைத்ததால்தான், இன்றைய இணைய புத்திசாலிகளால் அவர் தூற்றப்படுகிறார். அவர்களிடம் எப்போதும் பொதுவாக நான் கேட்கும் கேள்வி ஒன்று தான். மேலே கூறிய இரண்டு விஷயத்தில், நீங்கள் மதிக்கும் தலைமை எப்படி? அத்துடன் விவாதம் முடிந்துவிடும்!
ஹேப்பி பர்த் டே, மை டியர் காந்தி தாத்தா!
-----------------------

மனிதர்கள் சகமனிதனுடன் கொள்ளும் உறவைக்கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் பணத்திற்குமான உறவு, மிகவும் சிக்கலானது!
வட இந்தியாவில் சமீபத்தில் ஒரு மூதாட்டி மரணமடைந்தார். ஆதரவற்ற அந்த பாட்டியை, அக்கம் பக்கத்தில் இருந்தோர் தான் கடைசி ஆறு மாதம் கவனித்துக்கொண்டார்கள்.
சாப்பாட்டில் ஆரம்பித்து, மருத்துவச்செலவு வரை எல்லாமே தெருவில் இருந்தோர் செலவில் தான். பிறகு ஒருநாள் அவர் மரணமடைந்தார். அவரது பொருட்களை எல்லாம் காலி செய்தபோது, ஒரு பெட்டி இருந்தது.
அது நிறையப் பணம்..ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய். இவ்வளவு பணம் வைத்திருந்த அவர் ஏன் பிச்சைக்காரி போல் வாழ்ந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.
தி ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதும் தொடரில் ஒரு யூத பழங்குடிக் கதையை எழுதியிருக்கிறார். அதைப் படித்தபோது மேற்சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்தக் கதை :
சாலையில் மாயப் பை ஒன்றைக் கண்டெடுக்கிறான் ஒரு ஏழை. அந்த மாயப் பையில் ஒரே ஒரு தங்க நாணயம் இருக்கிறது. அதை வெளியே எடுக்கும்போது ஒரு குரல் கேட்கிறது:
‘‘இது ஒரு மாயப் பை. இதில் உள்ள தங்க நாணயத்தை நீ எடுத்துக்கொண்டால் உடனே இன்னொரு புதிய நாணயம் உருவாகிவிடும். எத்தனை முறை நாணயத்தை எடுத்தாலும் நாணயங்கள் புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நாணயத்தை செலவழிக்க நினைத்தால் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட வேண்டும். அந்த மாயப் பை ஒரு மீனாக உருமாறி மறையும். அதன் பிறகே நாணயத்தை செலவழிக்க முடியும். ஒருவேளை அதற்கு முன்பு செலவழிக்க முயன்றால் தங்க காசு சாம்பலாகிவிடும்’’ என்றது அந்தக் குரல்.
ச்சே... தங்கக் காசு கிடைத்தும் செலவழிக்க முடியவில்லையே…’ என்று அந்த ஏழைக்கு ஆதங்கம்.
அவன் அந்த மாயப் பையில் இருந்து வேண்டுமான அளவு தங்க நாணயங்களை எடுத்தெடுத்து சேகரிக்கத் தொடங்கினான். பெட்டி பெட்டியாக தங்க நாணயம் சேர்ந்த போதும் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிய மனம் வரவில்லை. அதனால் அதில் இருந்து எடுக்கும் நாணயத்தை அவன் செலவழிக்கவே இல்லை. தினமும் வீதியில் யாசகம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்ந்து வந்தான். தன் வாழ்நாளின் இறுதிவரை அவனால் அந்த மாயப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு, சேகரித்த நாணயங்கள் போதும் என நினைக்கவே முடியவில்லை.
முடிவில் ஒருநாள் அந்த மனிதன் இறந்து போனான். அவன் வீட்டை சோதித்த உறவினர்கள், ‘இவ்வளவு தங்க நாணயங்களை சேகரித்து வைத்தவன், எதற்காக பிச்சைக்காரனைப் போல வாழ்ந்தான்?’ என்பது புரியாமல் திகைத்தார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.