---------------------------
//தேவை ஏற்பட்டால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்..- லாரன்ஸ் பேட்டி
!//
இலவசம்னா பின்னாலே போற
ஏமாளிக்கூட்டம் தானே..காசை விட்டெறிஞ்சா தன்
பின்னாலயும் வருவாங்கன்னு நினைக்கறது பெரிய
தப்பில்லை தான்..
ஆனால்
ஒரு
கோடி
தர்றேன்னு சொல்லிட்டு வெறும்
ஒரு
லட்சம்
கொடுத்திட்டு பில்டப்பை மெயிண்டெய்ன் பண்றதும்,
இளைஞர்
போராட்டத்துக்கு ஆதரவு
தர
உள்ளே
போய்ட்டு, தான்
தான்
தலைமை
என்று
படம்
காட்டுவதும் நல்லதுக்கில்லை.
இவ்வளவு பெரிய
புரட்சியைச் செய்த
இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்
தான்..ஆனால் அவங்க உழைப்பை இந்த
மாதிரி
ஆட்கள்
திருடிக்கொள்ள நினைப்பது அசிங்கம்!
----------------
சென்ற
வருடம்
நான்
தவறவிட்ட அருமையான படம்,
கிடாரி.
அதிலும் இந்த
தாத்தா
கேரக்டர், சான்ஸே
இல்லை!
சாமானியனுக்கு எட்டாக்கனியாக இருந்த ஃபிலிம் மேக்கிங், எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக மாறியது தான் டிஜிட்டல் யுகத்தின் பெரும் புரட்சி.
பெரிய பின்புலமும் பணபலமும் இல்லாத எத்தனையோ இளைஞர்கள்கூட, கொஞ்சம் முயன்றால் தங்கள் கனவை நனவாக்கிக்கொள்ள டிஜிட்டல் சினிமா கைகொடுக்கிறது.
அப்படிப்பட்ட திறமையான இளைஞர்களில் ஒருவர், பல வருடங்களாக நான் கவனித்து வருபவர் மதி.சுதா.
வலைப்பூ காலத்தில் பழக்கமான ஈழத்து நண்பர். நிறைய சுவாரஸ்யமாக எழுதினார். திடீரென ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போகிறேன் என்று கிளம்பினார். இப்போது முழுநீள படத்திற்கான ட்ரெய்லருடன் வந்து நிற்கிறார்.
வங்கியிலும் வெளியிலும் கடன் வாங்கி, எல்லாவகையான கஷ்டங்களையும் சந்தித்தும் விடாமுயற்சியுடன் போராடும் மதி.சுதாவைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. வெகுசிலரைத் தான் ‘இவன் ஜெயிக்கணும்யா’ என்று நினைப்போம்.
நான் அப்படி நினைக்கும் கடும் உழைப்பாளி அவர். உம்மாண்டி எனும் அவரது புதிய படத்தின் முன்னோட்டம், ஒரு விறுவிறுப்பான த்ரில்லருக்கான அடையாளங்களுடன் வந்திருக்கிறது.
வாழ்த்துகள் மதி.சுதா!
https://www.facebook.com/mathisutha/videos/1398650996846033/?__mref=message_bubble
--------------
ஜனநாயகம்
என்பதே Limited சர்வாதிகாரம் தான்!
-------------------------
அவள்
விகடனின் ஃபேஸ்புக் பேஜில்
வெளியாகிருக்கும் இந்த
ஃபோட்டோவைப் பார்த்தபோது...
தமிழ்நாட்டு குலதெய்வங்களில் ஓட்டக்காரன் என்ற
தெய்வமும் உண்டு.
முதல்வர் ஓபிஎஸ்ஸின் பெயரில் வரும்
ஓ
என்பது
ஓட்டக்காரன் தான்.
என்னுடைய நண்பன்
ஒருவனுக்கும் இந்த
பெயர்
உண்டு.
‘ஏன்
இப்படி
ஒரு
பெயர்?
முன்பு
கடிதப்பரிமாற்றம்/ஒற்று
வேலை
செய்பவர்களுக்கு ஓட்டம்
என்பது
போக்குவரத்திற்கான வழியாக
இருந்தது. அப்படிப்பட்ட மாவீரர் ஒருவரைத் தான்
குலதெய்வமாக வழிபடுகிறார்களோ என்று
யோசித்திருக்கிறேன்.
நம்முடைய முந்தைய ஐந்தாம் தலைமுறையைத் தான்
ஓட்டன்
என்று
சொல்லியிருக்கிறார்கள் என்பது
புதிய
அர்த்தத்தைக் கொடுக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள் முருகனை சேயோன்
என்று
குறிக்கின்றன. சேவல்
கொடி
உடையவன், சிவந்த
செவ்வாய் கிரகத்தின் அதிபதி
என்றெல்லாம் சேயோனுக்கு அர்த்தம் படித்திருக்கிறோம். ஆனால்
சேயோன்
என்பது
ஆறாம்
தலைமுறையையும் குறிக்கும் என்பது
புதிய
தகவல்.
நமது
‘பெரியாரின் பேரன்’
சீமான்
அவர்கள் முக்தியடைந்தபோது, முருகனை முப்பாட்டன் என்று
கண்டுணர்ந்ததையும் நினைவில் கொள்க!
-----------------
பீட்டா
விவகாரத்தில் என்ன தான் த்ரிஷாவை
கழுவி ஊற்றினாலும், தோழர் சன்னிலியோனை பெரிதாக
ஒருத்தனும் திட்டவில்லை, பார்த்தீர்களா?
--------------
காந்தியப் போராட்டத்தில் 100 சதவீத
வெற்றியை ஒரே
வீச்சில் அடைவது
நடைமுறை சாத்தியம் அல்ல.
ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, நாடே
ஆர்ப்பரித்து எழுந்தபோது, காந்தி
அதை
நிறுத்தினார். வன்முறையை நோக்கி,
அந்த
போராட்டம் நகர்ந்தது தான்
முக்கியக் காரணம்.
வன்முறை ஏதாவது
நடக்காதா என்று
தான்
எதிர்தரப்பான அரசாங்கம் காத்துக்கிடக்கும். அதற்கான வாய்ப்பை காந்தி
கொடுத்ததே இல்லை.
சமரசத்திற்கு அவர்
எப்போதுமே தயாராகவே இருந்தார். கேட்டத்தில் 70% கிடைத்தாலே, போதும்
என்று
போராட்டத்தை நிறுத்திக்கொள்வார். தொடர்ந்த போராட்டம், இருதரப்புக்கும் சலிப்பை உண்டாக்கிவிடும் அபாயம்
உண்டு.
எனவே
கிடைத்த 70%-ஐ
தக்க
வைத்துக்கொண்டு, மீண்டும் அடுத்த
கட்ட
நகர்வை
சிறு
இடைவெளி விட்டு
ஆரம்பிப்பார்.
அதற்காக ‘போராளிகள்’ இன்றுவரை அவரை
திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்
மக்கள்
அவரை
நம்பினார்கள். அவர்
சொன்னால், நிறுத்திவிட்டுக் காத்திருந்தார்கள். அதற்கு
பலன்
இருந்தது.
இன்றைக்கு அவர்
இல்லை.
ஆனால்
அவரின்
வழியில் அறப்போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக நடந்துகொண்டிருக்கிறது.
இந்த
போராட்டத்தில் மூத்தவர்களான ராஜசேகர், அம்பலத்தரசு, சேனாதிபதி போன்றவர்களே, அரசின்
வாக்குறுதியை நம்பி,
மார்ச்
31 வரை
பொறுத்திருக்கலாம் என்று
சொல்கிறார்கள்.
அதை
ஏற்று
நடப்பது தான்
சரியென்று நம்புகிறேன். பீட்டா
மீண்டும் கோர்ட்டுக்குப் போனால்,
நாம்
களத்தில் மீண்டும் குதிக்கலாம்.
மத்திய
அரசிற்கும், மாநில
அரசிற்கும் கொஞ்சம் நேரம்
கொடுப்போம். முதல்வர் தன்னால் முடிந்தவரை இறங்கி
வந்துவிட்டார். நம்பிக்கை வைப்போம். தொடர்ந்து விழிப்புடன் கண்காணிப்போம்.
இது
சமாதானத்திற்கான நேரம்!
------------------------------
தமிழன்
என்றால் யார்
தெரியுமா?
‘ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்பவன்...தலைமையின் கார்
டயரை
நக்கிப் பிழைப்பவன்..பதவிக்காக மானரோசமின்றி யார்
காலிலும் விழுபவன்..டாஸ்மாக், மணல்கொள்ளை, காவிரிப்பிரச்சினை என
என்ன
நடந்தாலும் சொரணை
கெட்டுக்கிடப்பவன்..தொடர்ந்து மூணு
ஹிட்
கொடுத்திட்டாலே, சினிமாக்காரனை ‘நாளைய
முதல்வர்’ என
சோப்பு
போடுபவன்’ - என்பது
தான்
ஒரு
வாரத்திற்கு முன்புவரை இந்தியா மட்டுமல்லாது உலகம்
முழுக்க இருந்த
பெயர்.
எங்களைப் போல்
தமிழ்நாட்டுக்கு/இந்தியாவிற்கு வெளியே
இருப்பவர்களுக்குத் தான்
தெரியும், மற்ற
மாநிலத்தவர் நம்மைப் பற்றி
எவ்வளவு கேவலமாகப் பேசிச்
சிரிக்கிறார்கள் என்று!
ஆனால்
கடந்த
ஆறு
நாட்களில் எல்லாம் மாறிவிட்டது. இன்றைய
இளைய
சமுதாயம், தமிழன்
இழந்த
பெருமையை மீட்டுக்கொண்டுவந்துவிட்டது. இதற்காக மெரீனாவிலும் அலங்காநல்லூரிலும் கூடிய
எம்
சொந்தங்களின் பாதங்களை நன்றியுடன் முத்தமிடுகிறேன்.
இப்போது தான்
கொஞ்சம் தலைநிமிர்ந்து நடக்கிறோம். அதற்குள் அதைக்
கெடுப்பதற்கான வேலைகளில் சில
விஷமிகள் இறங்கிவிட்டது தெரிகிறது.
மறுபடியும் அடுத்த
தலைவர்
யார்
என்று
சினிமாக்காரன் காலை
முகர்ந்து பார்க்க சிலர்
ஆரம்பித்திருக்கிறார்கள். 2006ஆம்
ஆண்டில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக நீதிமன்றத்துடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் ராஜசேகர் ஐயா
சும்மா
இருக்கிறார், சேனாதுபதி ஐயா
சும்மா
இருக்கிறார். இரண்டு
நாள்
மெரீனா
பீச்சை
எட்டிப்பார்த்த சினிமாக்காரன் தான்
சில
சில்வண்டுகள் கண்ணுக்குத் தெரிகிறார்களோ?
தமிழ்நாடு முழுக்க ஜல்லிக்கட்டிற்காக கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்
சக்திகளை விட,
இந்த
சினிமாக்காரர்கள் எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்ல.
நமக்கான தலைமை,
அந்த
இளைஞர்
சக்தியிடமிருந்து தான்
கிளம்பிவர வேண்டும்.
ஆதரவு
தர்றியா..தா.
காசு
கொடுக்கிறியா..சந்தோசம். அதோட
கிளம்பு. சில
சின்னப்பசங்க ஏதோ
உளறினாலும் இந்த
சினிமாக்காரன் ஒருத்தனாவது ‘என்னை
ஏன்
சொல்றீங்க..நீங்களே உங்களை
ஆட்சி
செய்யுங்கள்’ன்னு
சொல்றானான்னு பார்த்தால்..ம்ஹும்.
பெரும்பாலான சினிமாக்காரர்களை இதே
இளைஞர்கள் விரட்டிவிட்டார்கள். இந்த
ஒரு
சிலரை
அனுமதித்தற்குக் காரணம்,
ஜல்லிக்கட்டை முன்பே
ஆதரித்தார்கள் என்பதால் தான்.
அந்த
லிமிட்டை எல்லோருமே புரிந்துகொள்வது அவசியம்.
ஏனென்றால் சேலத்தில் ஒருநாள் கூடிய
கூட்டத்தைப் பார்த்து நயந்தாராவிற்கே சபலம்
தட்டியிருக்கிறது. சுராஜை
கண்டித்து அறிக்கை விட்டதும், ஜல்லிக்கட்டிற்கு அறிக்கை விட்டதும், மெரீனாவிற்கு ரகசியமாக வந்து
போனதோடு நில்லாமல் தன்
பி.ஆர்.ஓ மூலம்
பத்திரிக்கைகளுக்கு அந்த
ஃபோட்டோக்களை ரிலீஸ்
செய்திருப்பதையும் பார்க்கும்போது...த்ரிஷாவிற்கு மாதிரியே இவருக்கும் சீக்கிரமே ஒரு
பாயாசத்தை போட
வேண்டிவரும் என்றே
நினைக்கிறேன்.
எனவே
தான்
சொல்கிறேன். மெரீனாவிற்குள் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு சினிமாக்காரனும் சக
போராட்டக்காரனாக மட்டுமே நடந்துகொள்வதும், நடத்தப்படுவதும் நல்லது.
அவர்களின் ஆசையை
யாரும்
தூண்ட
அனுமதிக்காதீர்கள்.
ஒரு
தலைவன்
இல்லாமல், இணையத்தின் மூலமே
பெரும்
இளைஞர்
பட்டாளம் இந்த
போராட்டத்தில் சாதித்துக்காட்டியிருக்கிறது. இந்தப்
பெருமை
உங்களுக்கு மட்டுமே உரித்ததாக இருக்கட்டும். மீண்டும் சினிமாக்காரன் காலில்
தமிழகத்தை அடகுவைத்துவிடாதீர்கள்.
நன்றி.
-----------------
உண்மையில் ஸ்டாலினைப் பார்க்க பாவமாகத் தான்
இருக்கிறது.
இந்த
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அலங்காநல்லூரில் ஜனவரி
3ஆம்
தேதி
ஆரம்பித்தவர் அவர்
தான்.
இன்றைக்கு ஓபிஎஸ்
ஓடிஓடி
தயாரித்துக்கொண்டிருக்கும் அவசர
சட்டத்தை அன்றே
கொண்டுவரும்படி சொன்னார்.
பிறகு
போராட்டம் மெரீனாவில் மாணவர்கள் கைக்கு
மாறியதும், ‘இந்த
போராட்டத்தின் பெருமை
மாணவர்களுக்கே’ என்றும் சொன்னார்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. யார்
கொடுத்த ஐடியாவோ, ரயிலை
மறிக்கப்போறேன் என்று
அரதப்பழசான டெக்னிக்குடன் களமிறங்கி கிண்டலுக்கு ஆளாகி
நிற்கிறார்.
இணைய
உ.பிக்களின் ஸ்டேடஸும் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகிற வேலையைச் செய்கின்றன. அரசியல்வியாதிகளை எல்லாம் தாண்டி
பிரச்சினை எப்போதோ இளைஞர்
கூட்டத்தின் கையில்
போய்விட்டது.
தற்போதைக்கு எல்லா
அரசியல்வாதிகளுமே அமைதியாக வேடிக்கை பார்ப்பது உத்தமம்!
ஸ்டாலினோட ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, ஆனால்
ஃபினிஷிங் சரியில்லையேப்பா!!
----------------
ஏலே
போராட்டம் பண்ற
மக்கா,
2000 வருசமா
இந்த
இழவைத்
தான்
சொல்லிக்கிட்டு இருக்கேன்..இப்போ
மறுபடி
சொல்லுதேன், கேளு..
நாடு
உருப்படணும்னா இரண்டே
இரண்டு
வேலை
பண்ணு..
1. தேர்தல் அன்னிக்கு ஓட்டு
போடு..’வரிசையில நிக்கணுமா..நானெல்லாம் டீஜண்டு’ன்னு நீ வீட்ல
படுத்துக்கிட்டதால தானே
இன்னைக்கு மெரீனால படுத்திருக்கே..
2. அப்பன், ஆயிகிட்டே ஓட்டுக்கு காசு
வாங்க
வேண்டாம்னு சொல்லு..நல்லவன் யாருன்னு எடுத்துச் சொல்லு. நல்லவனே இல்லைன்னா நோட்டாக்கு போடச்சொல்லு.
தும்பை
விட்டு
வாலைப்
பிடிக்காதீங்கலே..
39+18 எருமைகளை எம்.பியா அனுப்பினதுக்குத் தாம்லே
இப்போ
அனுபவிக்கிறோம்!
---------------
// இலவச உடலுறவு என்றால் 50 ஆயிரம்
பேர்
கூட
கூடுவார்கள் - ராதாராஜன், பீட்டா
//
ஏம்மா,
எங்களுக்குன்னு ஒரு
டேஸ்ட்
இல்லையா? நீ
கூப்பிட்டா ஒருத்தன் கூட
வரமாட்டான்மா..அதான்
ஃபேக்ட்டு!
----------------------
வரலாறு
எப்போதாவது தான்
நல்ல
வாய்ப்புகளை கொடுக்கும். அதை
சரியாகப் பயன்படுத்துபவர்கள் தான்
மேலே
வருகிறார்கள்.
மக்களிடம் நல்ல
பெயர்
எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சசிகலாவும் ஓ.பி.எஸ்ஸும் அரிய
வாய்ப்பை நழுவ
விட்டிருக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கு,
ஆட்சியைக் கலைப்போம் என்ற
மிரட்டலையும் தாண்டி,
ஜல்லிக்கட்டை நடத்தியிருந்தால் தலைமைப்பண்பு இருக்கிறது என்று
பெயர்
வாங்கியிருக்கலாம்.
வேஸ்ட்டு..வேஸ்ட்டு!
------
சிங்கத்தை அடக்குவீர்களா என்று கேட்ட புத்திசாலிகளே...இதோ ஜல்லிக்கட்டுக்காக எம் தமிழ் சிங்கங்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. உங்களால் அடக்க முடிந்ததா?
ஏதோ
நாலு
இடத்தில் மட்டும் நடந்த
ஜல்லிக்கட்டை நாப்பது இடத்துக்கு மேல்
நடத்த
வைத்தது தான்
பீ-ட்டாவின் சாதனை!
--------------------
இதய தெய்வம்
தமிழகத்தின் காவல் தெய்வம்
பொன்மனம் கொண்ட செம்மல்
மாண்புமிகு சின்னம்மா அவர்களின்
உடன்பிறவா சகோதரியின் வாத்தியார்க்கு இனிய
நூற்றாண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தமிழகத்தின் காவல் தெய்வம்
பொன்மனம் கொண்ட செம்மல்
மாண்புமிகு சின்னம்மா அவர்களின்
உடன்பிறவா சகோதரியின் வாத்தியார்க்கு இனிய
நூற்றாண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
-------------------------
2008-2009களில் தான் இணையத்தின் வீரியம்,
கோடம்பாக்கத்திற்கு உறைக்கத் தொடங்கியிருந்தது. அமீர் நடித்த யோகி
படம் ரிலீஸ் ஆகும் முன்பே,
அது Tsotsi படத்தின் காப்பி என்று நம்
ஆட்கள் புட்டுப் புட்டு வைத்தார்கள்.மீடியாக்களுக்கு ஒருவகையில் நாம் வரப்பிரசாதம் தான். பிரபலங்களிடம் நேரடியாக கேட்கமுடியாத கேள்வியை எல்லாம் இணையத்தில் (இப்போது, சோஷியல் மீடியாவில்) இப்படி பேசுறாங்களே என்று கேட்க முடிகிறது. அப்படி அமீரிடம் யோகி பற்றி கேட்ட செய்தி, இப்படி வந்தது :
//2005 ல் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்ற படம் டூட்சி. தென் ஆப்பிரிக்க மொழி திரைப்படம். அதன்பின் கடந்த நான்கு வருடங்களாக எல்லா திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு கல்லா கட்டியும் வருகிறது. இந்த படத்தைதான் அப்படியே சுட்டிருக்கிறார் அமீர் என்ற பேச்சு கோடம்பாக்கம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. க்ளைமாக்ஸ் தவிர மற்ற காட்சிகள் எல்லாமே அப்படியே காப்பியடிக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு.
அமீரிடமே இது குறித்து கேட்கப்பட்டது. “துபாய் பிலிம் ஃபெஸ்டிவலுக்கு இந்த படத்தை அனுப்பியிருக்கிறோம். காப்பியடிக்கப்பட்ட படத்தை எப்படி பிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்ப முடியும்? அவர்களுக்கு தெரிந்துவிடாதா? அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் சொல்கிற டூட்சி படத்தை நான் பார்த்தது கூட இல்லை” என்றார்.//
படம் ரிலீஸ் ஆனதும் நம் ஆட்கள் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு அமீரின் டவுசரை அவிழ்த்துவிட்டார்கள். ( உதாரணம்: http://www.cablesankaronline.com/2009/11/tsosti.html)
சரி, இப்போது எதற்கு இந்த பழைய கதை என்றால்...
நேற்று அமீரின் புதுப்பட துவக்கவிழாவில் அவர் பேசியது :
//யோகி...முதலில் நான் நடிக்கவிருந்த கதையே வேறு. ஆனால் பின்னர் ஒரு கொரியப் பட டிவிடியைக் கொடுத்து, அந்தக் கதையை ரீமேக் பண்ணலாம் என்றார்கள். நமக்கு இது செட் ஆகாது என்று கூறினேன். ஆனால் நடிக்க வைத்தனர். அந்தப் படம்தான் யோகி.//
அப்போ தெரிஞ்சே காப்பியடிச்சு, கூச்சப்படாமல் துபாய் ஃபெஸ்டிவலுக்கு வேற அனுப்பியிருக்கிறீங்க? அறிவு இல்லாதவன் இந்த வேலையைச் செய்யலாம்..பருத்திவீரன் எனும் உலக சினிமாவின் இயக்குநர் இதைச் செய்யலாமா?
பி.கு: Tsosti, கொரியன் படமல்ல, சௌத் ஆப்ரிகன் படம்.
-------------
குழந்தைகள் மீதான
பாலியல் வன்முறைகளைப் பற்றி
தமிழில் அரிதாகவே படங்கள் வந்திருக்கின்றன.
அந்தவகையில், முத்துராமலிங்கம் ஒரு
முக்கியமான படமாக
இருக்கும் என்று
நினைக்கிறேன்.
நெப்போலியன் கண்ணில் தெரியும் வெறியும், ஹீரோவின் கண்ணில் தெரியும் வேதனையுமே படத்தின் முழுக்கதையைச் சொல்லிவிடுகின்றன!!!
’இணையத்தில்’ என்பதை
‘இனணயத்தில்’ என்று
எழுதியிருப்பது தமிழ்சினிமா கண்டிராத குறியீடு. இணைவதில் உள்ள
பிரச்சினைகளை அலசுவதையே இயக்குநர் குறிப்பால் உணர்த்துவாகத் தெரிகிறது.
பொங்கலை இனிதாக்கிய படக்குழுவிற்கு நன்றி!
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.