ஊரில் தியேட்டரில் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இணையத்திலும் திருட்டு ப்ரிண்ட் வந்துவிட்டது. இந்த் வாரம் தான் குவைத்தில் ரிலீஸ். ஆனாலும் தியேட்டரில் கூட்டம்; குறிப்பாக ஃபேமிலி சீட்ஸ் எல்லாம் ஃபுல் ஆகி, பேச்சிலர் ஏரியாவிலும் ஃபேமிலி ஆடியன்ஸை உட்கார வைக்கும் நிலை.
நல்ல படம் என்றால் நம் மக்கள் ஆதரிக்க ரெடியாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஆண்டவன் கட்டளை.
நமது வாழ்க்கையில் இருந்தே கதையை எடுத்துக்கொண்டு, ஒரு சுவாரஸ்யமான நேரலையைப் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு மிகமிக நல்ல நடிகர்கள் அமைந்ததும் முக்கியக் காரணம்.
சமீபத்தில் கேஸ்ட்டிங் இந்த அளவிற்கு பக்காவாக அமைந்த படம் ஏதுமில்லை. ரித்திகா, யோகிபாபு, நேசனாக வந்த ஈழ நண்பர், வினோதினி, சீனியர் வக்கீல், நீதிபதி என வரும் ஒவ்வொரு நடிகர்களும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.
சமீபத்தில் வந்த இயக்குநர்களில் என் மனம் கவர்ந்தவராக மணிகண்டன் ஆகியிருக்கிறார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என மூன்று வெவ்வேறு பொன்முட்டைகளை கொடுத்திருக்கிறார்.
இந்த மாதிரி படங்கள் வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், ஹீரோ விஜய் சேதுபதி.
இந்த மாதிரி நடிகர் இருந்தால் தான், இத்தகைய ஸ்க்ரிப்ட்களை நம் ஆட்கள் யோசிக்கவே செய்வார்கள். முன்பு ரகுவரனுக்காகவே சில கதைகள் எழுதப்பட்டதுண்டு. அதே போன்று, இப்போது விஜய் சேதுபதி!
‘எல்லா சீனிலும் நானே இருக்கணும். இமேஜ் முக்கியம். ஃபாரின் டூயட் கண்டிப்பா வேணும்’ என்றெல்லாம் கதை கேட்கும் ஹீரோக்கள் செய்யும் அட்டூழியங்களை நான் தொடர்ந்து கேள்விப்படுகிறேன். அப்படியெல்லாம் இல்லாமல் கதையில் தன்னுடைய இடம் என்னவோ, அதற்குள் நின்று விளையாடி, ஜெயிக்கும் விஜய் சேதுபதியை நான் லவ் பண்றேன்!!
// சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை
சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச்
சொல்லுதம்மா //
எனது ஆல்டைம் ஃபேவரிட் இந்த பாடல். சில
பாடல்களைக் கேட்டதும், காலைச் சுற்றிய பாம்பாக
அன்றைய நாள் முழுதும் இனிய
இம்சையாக மனதில் ஓடுமல்லவா? அதில்
இந்த பாடலுக்கு முக்கிய இடம் உண்டு.
சுசீலா, சித்ராவின் தெளிவான குரல்களை விட ‘ஜில்ல்’ என்று
இருக்கும் எஸ்.ஜானகியம்மாளின் குரல்
மேல் எனக்கு பெரும் பிரியம்
உண்டு.
எஸ்.பி.பியும் இவரும்
இணைந்து கொடுத்த நல்ல பாடல்களை லிஸ்
போட ஆரம்பித்தால், இந்த பக்கம் போதாது.
அதே போன்றே ’பாடகர்’ கமலஹாசனுக்கு சரியான இணை இவர்
தான். கண்மணி, சுந்தரி நீயும் என இருவரும்
இணைந்தால், இளையராஜாவின் இசையே இன்னொரு தளத்திற்கு
உயரும்.
தற்போது
திருநாள் படத்தில் பாடியபோது, குரலில் நடுக்கம் தெரிந்தது. அதற்கு முந்தைய வி.ஐ.பி. பாடலில்கூட
அவ்வளவு நடுக்கம் இல்லை. அப்போதே நினைத்தேன்,
இது ஓய்வுக்கான நேரம் என்று.
ஈகோ என்பதே இல்லாத, கனிந்த
மனம் கொண்டவர் அவர். இப்போது ஓய்வு
பெறுவதாக அறிவித்திருக்கிறார். தொடர்ந்து 59 வருடங்கள் தொடர்ந்த கலைப்பணியில் இருந்து ஓய்வெடுக்கும் நேரம் இது.
இன்பத்திலும் துன்பத்திலும் குழந்தைப் பருவம் முதல் தற்போது
வரை என்னைத் தொடர்ந்து வரும் இசைக்குரல் அது.
காற்றுப் போல, என் சுவாசத்தில்
கலந்த பாடல்களைக் கொடுத்ததற்கு நன்றி அம்மா!
----------------
'ஃப்ளைட்ல ஒரு படம் பார்த்தேன்ப்பா..நல்லா இருந்துச்சு. ஒரு
ராபிட்டும் ஃபாக்ஸும் நடிச்ச படம். பேர்கூட
ZOO-ன்னு வரும். உங்களுக்குப் பிடிக்கும்.
தேடிப் பாருங்க’ என்று ரெகமண்ட் செய்தான்
என் மகன் பாலா.
கூகுளில் தேடி, Zootopia-ஐ எடுத்து ‘இதுவா?’
என்றேன். இதே தான் என்று
துள்ளிக்குதித்தான்.
ஹெவி ரெகமண்டேசனாக இருக்கிறதே என்று படத்தைப் பார்த்தால்,
உண்மையிலேயே சூப்பர் மூவி.
அனிமேசன் என்பதையே மறந்து, நல்லவொரு ஆக்சன் படம் பார்ப்பது
போல் உணர்ந்தேன். Fool Triumph கேட்டகிரியில் எடுக்கப்பட்டிருக்கும் படம்.
ஒரு சிம்பிள் ஸ்டோரியை எமோசனுடன் விறுவிறுப்பாக சொல்லி அசத்திவிட்டார்கள்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய, ஜாலியான படம்!
----------------
நண்பர்களே,
எனது ஷார்ட் ஃபிலிம் ‘ஜீபூம்பா’
HeroTalkies நிறுவனத்தால் Fantasy செக்சனில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அவர்களின் இணையதளத்திலும்
எங்களது ஷார்ட் ஃபிலிமைப் பார்க்கலாம்!
லின்க்:
----------------------------
ஜீபூம்பா - எனது
ஷார்ட்
ஃபிலிம்
நானும்
கடைசியில் அந்த
பாவ
காரியத்தைச் செய்துவிட்டேன். ஆமாம்
பாஸ்,
நானும்
ஒரு
ஷார்ட்
ஃபிலிம் எடுத்துவிட்டேன்!
சினிமா
கற்றுக்கொள்வது பற்றி
ஹிட்ச்காக் இரண்டு
விஷயங்களைச் சொல்வார் :
”ஃபிலிம் ஸ்கூலில் சேரும்
மாணவர்கள், குறைந்தது இரண்டு
வருடங்களுக்கு கேமிராவைத் தொடக்கூடாது.
வசனம்
வந்து
தான்
சினிமாவைக் கெடுத்துவிட்டது. ப்யூர்
சினிமா
என்பது
ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம், நடிப்பு & இசை மூலம்
உருவாவது. வசனம்,
இந்த
வேலைகளை எளிதாக்கிவிட்டது; படைப்பாளிகளை சோம்பேறியாக்கிவிட்டது.”
குருநாதர் ஹிட்ச்காக்கின் படங்களை மட்டுமல்ல, பேட்டிகளையும் வேதவாக்காக எடுத்துக்கொள்பவன் நான்.
எனவே
வசனமே
இல்லாமல் கதை
சொல்ல
விரும்பினேன்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றிய
அனுபவம் வேண்டும் என்பதால் அதையும் நானே
செய்தேன். நீங்கள் எல்லாம் பாவம்
என்பதால் நடிப்பையும் இசையையும் மட்டும் விட்டு
வைத்திருக்கிறேன்!
’குவைத் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் நாம்
என்ன
செய்ய
முடியும்?’ என்று
நான்
சோர்ந்திருந்தபோது, இருக்கிற ரிசோர்ஸை வைத்து
ஏதாவது
செய்யுங்கள், உங்களால் முடியும் என்று
என்னை
தொடர்ந்து ஊக்கப்படுத்திய நண்பர்
Selvakumar Ramachandran (வினையூக்கி)க்கும்
நண்பர்
Vijay Subramanian-க்கும் நன்றி.
நாளை(செவ்வாய்கிழமை)
காலை
எனது
ஷார்ட்
ஃபிலிமை உங்கள்
பார்வைக்கு வைக்கிறேன். உங்கள்
பொன்னான நேரத்தில் ஆறு
நிமிடத்தை எனக்கு
ஒதுக்குங்கள்; நன்றி.
Posted Here:
---------------
திருட்டு விசிடியில் படம்
பார்க்காதீர்கள் என்று
சமீபத்தில் ஒரு
பேட்டியில் விக்ரம் பிரபு
சொன்னார். அவரைப்
பார்க்க, ரொம்ப
பாவமாக
இருந்தது. கோடம்பாக்க ஆசாமிகளுக்கு உலக
நடப்பே
தெரியாது போல்
இருக்கிறது.
திருட்டு விசிடியை ஆதரிப்போர் இந்த
வாதத்தை முன்வைக்கிறார்கள் : தியேட்டரில் மினிமம் 120 ரூபாய்
டிக்கெட், இண்டர்வெல்லில் பாப்கார்ன் வாங்கினால் 100 ரூபாய்,
அப்புறம் மாலில்
பார்க்கிங் கட்டணம், 150 ரூபாய்..இப்படி கொள்ளை அடித்தால் ஃபேமிலி மேன்
எப்படி
தியேட்டருக்கு வருவான்?
நியாயமான கேள்வி
தான்.
ஆனால்
இது
சென்னை
போன்ற
சிட்டிகளுக்குத்தானே பொருந்தும்? கோவில்பட்டியில் இவ்வளவு கொள்ளை
இல்லையே? ராஜபாளையத்தில் போஸ்டரிலேயே 50ரூபாய்
டிக்கெட் என்று
போடுகிறார்கள். இருந்தும், அங்கெல்லாம் ஏன்
திருட்டு விசிடி
சக்கைப்போடு போடுகிறது?
உண்மையைச் சொல்வதென்றால், டிக்கெட் விலை
30 ரூபாய்
ஆக்கினாலும் திருட்டு சிடியை
வாங்கவே செய்வார்கள். ஏன்?
ஏனென்றால், அவர்கள் தியேட்டர் ஆடியன்ஸே கிடையாது. ரஜினி-விஜய்-அஜித் மட்டும் தான்
பெரும்
கூட்டத்தை தியேட்டருக்கு கொண்டுவருகிறார்கள். மற்றவர்கள் படம்
நன்றாக
இருந்தால் மட்டுமே, தியேட்டருக்கு போவதைப் பற்றி
யோசிக்கிறார்கள்.
அதற்காக, அவர்கள் அந்த
படங்களைப் பார்க்காமல் இருப்பதில்லை. ஆன்லைனிலோ அல்லது
திருட்டு விசிடி
வாங்கியோ படத்தைப் பார்த்துவிடுகிறார்கள். ஆன்லைனில் டவுன்லோடு பண்ணினாலும், டேட்டா
காசு
செலவாகவே செய்கிறது. திருட்டு சிடியையும் காசு
கொடுத்தே வாங்குகிறார்கள். அதாவது,
அவர்கள் படங்களைப் பார்க்க தயாராகவே இருக்கிறார்கள்; ஆனால்
தியேட்டரில் அல்ல.
ஒரு
லீவ்
நாளில்
சிக்கன் எடுத்து சமைத்துவிட்டு, மதியம்
லுங்கியும் பனியனுமாக அக்கடா
என்று
அமர்ந்து மனைவி-குழந்தைகளுடனோ
அல்லது
பேச்சிலர் ஃப்ரெண்ட்ஸுடனோ படம்
பார்ப்பது ஒரு
சுகானுபவம். மிக
நல்ல
படங்களைத் தவிர்த்து, நல்ல-ஆவரேஜ்-மொக்கைப் படங்களை இப்படிப் பார்க்கவே நம்
மக்கள்
விரும்புகிறார்கள். பிள்ளை
குட்டிகளை இழுத்துக்கொண்டு, தியேட்டருக்குப் போய்
அநியாய விலையில் விற்கப்படும் டிக்கெட்/திண்பண்டங்களை வாங்கி வயிறெரிவதைவிட, இப்படி ஹாயாக வீட்டில் பார்ப்பது எவ்வளோ பெட்டர் என்று நினைக்கிறார்கள்.
அநியாய விலையில் விற்கப்படும் டிக்கெட்/திண்பண்டங்களை வாங்கி வயிறெரிவதைவிட, இப்படி ஹாயாக வீட்டில் பார்ப்பது எவ்வளோ பெட்டர் என்று நினைக்கிறார்கள்.
வீட்டில் ஆங்கில
மூவி
சேனல்கள் முதல்
மலையாள
சேனல்கள்வரை நல்ல
படங்களை வழங்கிக்கொண்டிருக்கும்போது, அதை
விட்டுவிட்டு தியேட்டருக்கு போவதை
முட்டாள்தனமான ஆடம்பரம் என்றே
பலர்
நினைக்கிறார்கள்.
ஹாலிவுட்டில் ஒரு
ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. ‘ஆன்லைன் பைரஸியால் தியேட்டர் வருமானம் எவ்வளவு குறைகிறது?’என்று
ஆராந்தார்கள். முடிவு,
பைரஸியால் பாதிப்பே இல்லை
என்று
தான்
வந்தது.
அந்த
ஆடியன்ஸ் வேறு,
இந்த
ஆடியன்ஸ் வேறு
என்று
கண்டுகொண்டார்கள். டிவிடி
விற்பனையிலேயே நல்ல
லாபத்தை பார்க்கிறார்கள். ’shawshank redemption’ போன்ற படங்கள் தியேட்டரில் தோல்வியடைந்து, டிவிடியில் வெற்றியடைந்திருக்கின்றன.
’தியேட்டருக்கு ஒர்த்
இல்லை..ஆனால் பார்ப்பதற்கு ஒர்த்’
என்று
ஒரு
புது
கேட்டகிரியை நம்
மக்கள்
இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். இதை
எப்படி
காசாக்குவது என்று
தான்
கோடம்பாக்கம் யோசிக்க வேண்டும்.
உங்களுக்குத் தான்
அது
திருட்டு சிடி..மக்கள் கடையில் இருந்து திருடவில்லை. காசு
கொடுத்தே வாங்குகிறார்கள். நல்ல
ப்ரிண்ட்டை நீங்கள் கொடுக்காததால், கிடைப்பதை வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
இனியும் ‘என்
படத்தை
தியேட்டருக்கு வந்து
தான்
பார்க்கணும்’ என்று
சொல்வது குழந்தைத்தனம். ஒரு
பெரிய
மார்க்கெட்டை யூஸ்
பண்ணத்
தெரியாமல் கோடம்பாக்கம் மிஸ்
பண்ணியதால் தான்,
திருட்டு சிடி
கும்பல் களமிறங்கி, வலுவாக
காலூன்றி விட்டது.
டிவிடியிலும் ஆன்லைனிலும் டிவியிலும் தியேட்டரிலும் படத்தை
ரிலீஸ்
பண்ணுங்கள். உங்கள்
படங்களின் யோக்கியதைக்கு ஏற்ப,
எங்கே
படத்தைப் பார்ப்பது என்று
மக்கள்
முடிவு
செய்யட்டும்.
பின்குறிப்பு: விக்ரம் பிரபு
வேண்டுகோள் விடுத்த ‘வாகா’
படத்தைப் பார்க்க, தியேட்டருக்குப் போக
முடியவில்லை. அதற்காக அவர்
என்னை
மன்னிப்பாராக!
பின்குறிப்பு-2: ஆன்லைன் திருட்டு டிவிடி
ப்ரிண்ட்டில் வாகா
பார்த்தேன். படம்
ஆரம்பித்த அரைமணி
நேரத்தில், தாங்க
முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்த
அற்புதமான படத்தில் நடித்த
விக்ரம் பிரபுவை நான்
மன்னிப்பதாக இல்லை!!
------------------------
வெட்டு கொத்து - ஷார்ட் ஃபிலிம்
சமீபத்தில் பார்த்த நல்ல ஷார்ட் ஃபிலிம்.
பார்த்து இரண்டு, மூன்று நாட்கள் ஆனாலும்
கிளைமாக்ஸை நினைக்கும்போதெல்லாம் ஒரு புன்சிரிப்பு வருவதைத்
தவிர்க்க முடியவில்லை.
மூன்றே நிமிஷத்தில்... கலக்கிட்டாங்களேய்யா!!
---------------------------
எனக்கு
வ.உ.சி.யின்
வரலாற்றை ‘சினிமா’வாக எடுக்க வேண்டும் எனும்
ஆவல்
உண்டு.
வெள்ளையனுக்கு எங்கே
வலிக்கும் என்று
தெரிந்து அடித்த
போராளி.
இன்று
அவரது
பிறந்தநாள்.
Aazhi Senthil Nathan பதிவில் இருந்து:
பிள்ளை
விளையாட்டு அல்ல...
வ.உ.சியின் "கப்பல் ஓட்டிய
கதை"
நமக்கெல்லாம் வெறும்
சாகசமாகத்ததான் தெரியும்.
ஆனால்
தமிழ்நாட்டின் சகல
சாதி,
மதத்தவர்களின் பங்கேற்போடு, இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு இனத்தவரின் கூட்டுறவோடு, ஆசியக்
கண்டத்திலுள்ள யாரும்
பங்கேற்கும் வகையிலான ஒரு
தொழில்
நிறுவனத் திட்டத்தை அவர்
முன்மொழிந்த கதையும் அதன்
முக்கியத்துவமும் யாருக்குத் தெரியும்? அதற்குப் பின்னால் உள்ள
பொருளாதாரச் சிந்தனை யாருக்குத் புரியும்?
தொழில்
வணிக்ம் என்றாலே தீட்டு
போல
பார்க்கும் பார்ப்பனீயப் பார்வை
இங்கே
நூற்றுக்கு 99 அறிவுஜீவிகளின் மண்டையில் உறைந்திருக்கிறது. நமது
அறிவுஜீவிகள் வ.உ.சி.யின்
பொருளாதார எதிர்வினையைப் பற்றி
பேசவே
மாட்டார்கள் (ஆனால்
காந்தியின் உப்பு
சத்தியாகிரகத்தை சிலாகித்து எழுதுவார்கள்).
இன்னொரு பக்கம்
வ.உ.சியைக் கொண்டாடுபவர்களில் அவரை
ஒரு
சுதேசிப் போராளியாக மட்டுமே நினைத்துக்கொண்டாடுகிறார்கள். ஆனால்
இப்படிப் பார்ப்பதில் ஒரு
சிக்கல் இருக்கிறது.. அவர்
சுதேசி
மட்டுமல்ல. அதாவது,
இந்துத்துவ சக்திகளில் சிலர்
முன்மொழியும் சுதேசி
அல்ல
அவரது
சுதேசி.
அது
சாதி
காக்கும் சுதேசி
அல்ல.
உலக
வணிகத்தில் இந்தியாவின் பங்கேற்பை உறுதிசெய்கிற வியூகத்தைக் கையிலெடுத்த உலக
வணிகரும்கூட. ஆங்கிலேயர் சார்பு
நிலை
என்பதை
மறுப்பதால் அவர்
சுதேசி
ஆகிவிடவில்லை. ஒருவிதத்தில் இன்று
பேசப்படும் globalization from bottom என்பது போன்ற
கருத்துகளுக்கு அவர்
முன்னோடி.
யாரெல்லாம் அவரை
ஆதரித்தார்கள் என்ற
வரலாற்றைப் பாருங்கள். புல்லரிக்கும். அவரது
நீிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் - வள்ளல்
பாண்டித்துரை தேவரும் சேலம்
விஜயராகாவாச்சாரியும் ஜனாப்
ஹாஜி
முஹம்மது பக்கீர் சேட்டும் என
அவரது
வியூகப்படை மிகவும் விசாலமானது. பிள்ளையவர்கள் செய்த
செயல்
"பிள்ளை்" செயல் அல்ல.
அது
பிள்ளை
விளையாடுமல்ல. சாதி
மதம்
கடக்காமல் தமிழரை
இணைக்கமுடியாது. அதனால்தான் அவரது
வாழ்வின் இறுதிக் கட்டம்
அவரை
சுயமரியாீதை இயக்கத்தோடு நெருங்கவைத்தது.
சுயமரியாதை இயக்கத்தின் வரவு
சுப்பிரமணிய பாரதியைப் புலம்பவைத்தது. சிதம்பரனாரை ஈர்த்தது. ஒருவேளை அந்த
இயக்கத்தில் சிதம்பரனார்களின் (சாதி
அடிப்படையில் சொல்லவில்லை, சிந்தனைப் போக்கில் அடிப்படையில் சொல்கிறேன்) பங்கேற்பு தொடர்ந்து இருந்திருந்தால், சுயமரியாதை இயக்கத்தின் திசைவழியும் வேறுமாதிரி இருந்திருக்கும்.
சிதம்பரனார் பூர்ஷ்வாதான் தோழர்களே! ஆனால்
அவர்
தொழிற்சங்க வரலாற்றிலும் முக்கியமானவர். எந்தத்
தூத்துக்குடியை சுதேசி
கப்பல்
வணிகத்தின் தலைமையிடமாக ஆக்கவேண்டும் என்று
நினைத்தாரோ அதே
தூத்துக்குடியில் கூலி
உயர்வுக்காகவும் வாரம்
ஒரு
நாளை
விடுமுறை வேண்டியும் தொழிலாளர்களைப் போராடத்தூண்டியவர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெளிப்டையாக ஆதரவாக
இருந்தவர், அதைத்
தூண்டியவர். பின்பு
அதனாலேயே ஆங்கிலேயர்களின் எதிர்ப்பை பல
மடங்கு
எதிர்கொண்டவர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்
சொந்த
நிதியை
வாரியளித்து செல்வம் இழந்தவர்.
நிறைய
சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த
அற்புதமான மனிதனை
யார்
கொண்டாடியிருக்கவேண்டும்?
தமிழ்
அடையாளத்தைப் பேசுபவர்கள், சுயமரியாதை இயக்க
வழிவந்தவர்கள், இடதுசாரிகள், ஏன்
இந்திய
தேசியவாதிகளும்கூட இவரை
கொண்டாடியிருக்கவேண்டும்.
ஆனால்,
இவர்
மறக்கப்பட்டுவிட்டார். இவர்
பெயரைக்கூட பலர்
வ.ஊ.சி என்றுதான் எழுதுவார்கள்!
யார்
யார்
பேரன்மார்களோ நாட்டை
ஆளுகையில் ஆளத்துடிக்கையில், சிதம்பரனாரின் வழித்தோன்றல்கள்????
சிதம்பரனார் ஒரு
நிஜமான
தலைவர்.
விடுதலைப் போராளி.
இரண்டாயிரம் தமிழர்
வணிகச்
சிந்தனையின் தொடர்ச்சி.
அதனால்தான் அவரை
புரிந்துகொள்வது தமிழர்களுக்குச் சிரமமாக இருக்கிறதோ என்னவோ?
கடந்த
ஆண்டு
ஒரு
பகற்பொழுதில் சிங்கப்பூர் சென்றபோது, நக்கவரத் தீவுகளைத் தாண்டி
சுமத்ரா தீவினை
ஓட்டி
விமானம் சென்றபோது, கீழே
பல
கப்பல்களைப் பார்த்தேன். ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வலம்வந்த அந்த
நீர்ப்பகுதியில், நீரிணையில், சிதம்பரனாரின் சுதேசி
நாவாய்ச் சங்கத்தின் கப்பல்களும் கலந்து
நீரில்
செல்வதுபோல ஒரு
மனிச்சித்திரத்தை எனக்கு
நானே
எழுப்பிக்கொண்டு பெருமூச்சுவிட்டேன்.
வ.உ.சிகள் மீண்டும் எழுவார்கள்.
நளியிரு முந்நீர் நாவாய்
ஓட்டி
வளிதொழில் ஆள்வார்கள்.
--------------------------------
//எனக்கு வேறு எங்கும் கிளைகள்
இல்லை //
ஏண்டா நாயே சிரிக்கிறே?
இல்லே, இந்த படத்துல நீங்க
நடிக்காமல் வேற யாராவது நடிச்சிருந்தா,
நீங்க என்ன பேச்சு பேசியிருப்பீங்கன்னு
நினைச்சுப் பார்த்தேன், சிரிச்சேன்!!
--------------------
கத்தி சண்டை படத்தில் தமன்னா
டபுள் ஆக்ட்டா என்று ஒரு நண்பர்
கேட்கிறார்.
ஹவ் டூ ஐ நோ
சார்?
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.