Sunday, February 19, 2017

Facebook Posts - November 2016



கோவில்பட்டில மூர்த்தி தியேட்டர்னு ஒன்னு இருக்கு. காலை 11 மணி காட்சிக்குப் போனால்விநாயகனே வினை தீர்ப்பவனேபாட்டு முழுசா போட்டுட்டுத்தான் படமே ஆரம்பிக்கும்.
படம் பார்க்க வந்தவன்லாம் அந்த பாட்டைக் கேட்டு பீதியாகிடுவான். ஏன்னா, அங்கே காலைக்காட்சியா பிட்டுப்படம் தான் ஓடும்.
ஷகீலாவை எதிர்பார்த்து வந்தவன்கிட்டே, உச்சஸ்தாயில சீர்காழி கோவிந்தராஜன்குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்ன்னு மிரட்டுவது சத்திய சோதனை.
தியேட்டர் ஓனரு தீவிர பிள்ளையார் பக்தர் போல..ஊருக்கே பக்தியை அப்படி ஊட்டுனாரு..ஆனாலும் இந்த விஷயம் டெல்லி நாட்டாமைவரைக்கும் எப்படி லீக் ஆச்சுன்னு தெரியலை.
பிரைவேட் ஸ்கூல்ல, காலேஜ்ல, கவர்மெண்ட் ஆபீஸ்ல எல்லாம் டெய்லி தேசியகீதம் பாடறதில்லை..அதெல்லாம் விட்டுட்டு சினிமா தியேட்டருக்குள்ள தான் தேசபக்தியை ஊட்டணுமா?
என்னமோய்யா..இன்னும் என்னெல்லாம் செய்ய நினைக்கிறீங்களோ செய்யுங்க!
----------------------
இரண்டு நாட்கள் முன்பு சன் டிவியில்எழுத்தாளர்களை வஞ்சிக்கிறதா தமிழ் சினிமா?’ என்று விவாதம்..
விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கும்போது நம்ம கேபிள் சங்கர் Cable B Sankar இப்படி ஒரு குண்டு போட்டார் : ‘ஏங்க..ஒரு பத்திரிக்கைக்கு எழுத்து தான் முக்கியம்..எழுத்தை வச்சு பொழைக்கிற பத்திரிக்கைகளே எழுதறவனுக்கு காசு தர்றதில்லை..இதுல சினிமாக்காரனை குறை சொல்ல என்ன இருக்கு
செம பாயிண்ட்..விவாதம் நடத்துன அம்மணியே அதைக் கேட்டு ஒரு செகண்ட் ஃப்ரீஸ் ஆகிடுச்சு.
கேபிளுக்கு ஏதோ ஒரு பத்திரிக்கை வசமா அல்வா கொடுத்திருக்கும்போல..அந்த ஆத்திரத்தை அங்கே கொட்டிட்டாரு.
ஆனால் அந்தம்மா என்ன நினைச்சிருக்கும்னா, நாமளே விவாதம் பண்றதுக்கு காசு தர்றதில்லையே..ஓசில தானே மங்களம் பாடுறோம்..நம்மளைத் தான் குத்தறாரோன்னு நினைச்சு அப்படியே ஷாக் ஆகிடிச்சு!
ஆக மொத்தத்தில், எல்லாருமே ரொம்ப்ப்ப நல்லவங்க தான் சாமீயோவ்!!

-------------------------
//அரக்கோணத்தில் 40 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை - செய்தி //

அட நாசமாப் போறவனுகளா...நகையை திருடுனது ஓகே..அந்த பத்தாயிரத்தை ஏண்டா எடுத்தீங்க?

எத்தனை நாள் கால்கடுக்க நின்னு வாங்குன காசுன்னு தெரியுமாடா? அதையெல்லாம் எடுத்தால், விளங்குவீங்களாடா????
------------------------
லோ பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து எடுக்கும்போது உள்ள எதிர்பார்ப்பு வேறு. டபுள் மீனிங் டயலாக், ஆரம்ப மொக்கையான சீன்களையும் தாண்டி நல்லபி-கிரேட்படம் என்ற பெயர் வந்தாலே போதும்..படம் தப்பிவிடும்.
பெரிய டீம் & பட்ஜெட் கிடைத்தபின்னும் அதே பி-கிரேடு ரேஞ்சில் படத்தை எடுத்தால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது கடினம்.
யாமிருக்க பயமே மூலம் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் டீகே இப்போதுகவலை வேண்டாம்!’ படம் மூலம் சறுக்கியிருக்கிறார்.
டபுள் மீனிங் டயலாக்கில் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் படம் முழுக்கதம்பி, கைஎன யாராவது தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதும், சில கலீஜான வசனங்களும் நம்மை நெளிய வைக்கின்றன.
ஜீவா பாவம்...பாபி சிம்ஹாவும் பாவம்!
ஆனாலும் போலீஸ் ஸ்டேசன் சீன் போன்ற சில சீன்களில் சிரித்து வயிறுவலித்துவிட்டது.
கொஞ்சம் பட்டி டிங்கரில் பார்த்து ஹிந்தியில் மஸ்தி ரேஞ்சில் எடுத்தால், ஜெயிக்க வாய்ப்புண்டு.

--------------------------
லவ் பேர்ட்ஸ், மிஸ்டர்.ரோமியோ, மின்சார கனவு போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் பிரபுதேவாவிற்கு ஊத்திக்கொண்ட நேரம்...திடீரென வந்தநினைவிருக்கும்வரைஎனும் லோ-பட்ஜெட் படம், பிரபுதேவாவிற்கு மறுவாழ்வு கொடுத்தது.
ஜேம்ஸ்பாண்டுபோன்ற சூரமொக்கைப் படத்தைக்கூட மூன்றுமுறை பார்க்கும் அளவிற்கு பிரபுதேவா டான்ஸிற்கு நான் வெறித்தனமான ரசிகன்.
எனவேகாத்தடிக்குது..காத்தடிக்குதுஎன்று பிரபுதேவா தன் இரண்டாவது இன்னிங்ஸை கொலைக்குத்தாக ஆரம்பித்ததில் எனக்கு பரம சந்தோசம். எங்கள் கல்லூரிக்கால இனிய நினைவுகளில்காத்தடிக்குதுபாடலுக்கு முக்கிய இடம் உண்டு. அது இல்லாமல் காலேஜ் டே, ஹாஸ்டல் டே இருந்ததில்லை.
தொடர்ந்து ஏழையின் சிரிப்பில், சுயம்வரம், 123 போன்ற படங்களைப் பார்த்தபோது தான் கே.சுபாஷ் என் விருப்பத்துக்குரிய இயக்குநர் ஆனார்.
அதன்பிறகு தான் அவர்கலியுகம்திரைப்பட இயக்குநர் என்று தெரியவந்தது. மேக்கிங்கில் மிரட்டிய படம் கலியுகம். ஒரு சிறைச்சாலை சுரங்கப்பாதையில் நடக்கும் சண்டைக்காட்சி இப்போதும் நினைவில் நிற்கிறது.
சத்ரியன், சபாஷ், அபிமன்யு போன்ற படங்களிலும்கலியுகசுபாஷை பார்க்க முடியும். ஆனாலும் கமர்சியல் வெற்றி என்பது அவருக்கு எளிதில் வாய்க்காத ஒன்றாகவே இருந்தது.
இருப்பினும், முடிந்தவரை வித்தியாசமான படங்களைக் கொடுக்க முயன்றவர் அவர். 123க்குப் பின் காணாமல் போனார். இன்று அவரது மரணச் செய்தியுடன் திரும்பிவந்திருக்கிறார்.
ஏனோ அவர் எழுதியகாத்தடிக்குதுபாடலை இன்று மீண்டும் பார்க்கத்தோன்றியது. தொடர்ந்து ஏழையின் சிரிப்பில், சுயம்வரம், 123 பாடல்களையும் பார்த்தேன்.
கட்டுக்கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு?’..’பாவம் அந்த வயித்துக்கு பசிக்கச் சொல்லிக் கொடுத்ததாரு?’ ஆகிய இரண்டுவரிகள், இத்தனை வருடங்கள் கழிந்தும் அர்த்தமுள்ள புன்னகையை வரவழைக்கின்றன.
எல்லாவற்றுக்கும் நன்றி சார்!

------------

நான் இப்போது இருக்கும் பில்டிங்கிற்கு வந்த புதிதில்...

காலையில் ஆபீஸ் கிளம்பி காருக்கு போனால், காரின் வைப்பர் இரண்டும் நட்டுக்குத்தாக நின்றுகொண்டிருந்தது. என்னடா இதுன்னு கன்ஃபியூஸ் ஆகிட்டு, சரி பண்ணிட்டுக் கிளம்பிட்டேன்.

அப்புறம் இரண்டுநாளைக்கு ஒரு தடவை இதே கதை. காலங்கார்த்தால இப்படி நட்டுக்குத்தா வைப்பர் நிக்குதே...இது ஏதும் அரபிக் குறியீடான்னு நமக்கு ஒரே குழப்பம்.

பில்டிங்கை பார்த்துக்க ஒரு ஆள் இங்கே உண்டு. காரை க்ளீன் பண்றதும் அவன் வேலை தான்.

அவனைக் கூப்பிட்டு மேட்டரைச் சொன்னேன்.

அவன்நான் தான் சார் அப்படி நட்டுக்க நிப்பாட்டுறேன்னான்.

ஏன்யா இப்படின்னு கேட்டால் பெருமையாச் சொல்றான் :

அப்போத் தானே பாஸ், துடைச்ச காருக்கும் துடைக்காத காருக்கும் வித்தியாசம் தெரியும்!”

விளங்கிரும்டா, விளங்கிரும்!
------------
November 19 :
செய்தியைப் பார்த்ததும் என் கண்ணையே நான் நம்பவில்லை. இப்படி ஒரு பிரதமரா நமக்கு!
நவம்பர் 8 & நவம்பர் 18 - இரண்டு நாளிற்கும் பொருந்தும் ஸ்டேடஸ்....ஃபீலிங் தான் வித்தியாசம்!!
எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்னு அப்பவே ஒரு ஞானி சொன்னானேய்யா...கேட்டீங்களா!!

November 15 :


நல்ல ஒரு திட்டத்தைக்கூட எப்படி நாராசமாய் நிறைவேற்றுவது என்று நம்ம ஆட்கள்கிட்ட தான் கத்துக்கணும். https://www.facebook.com/images/emoji.php/v7/fcb/1/16/1f641.png
November 8:

//ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது! - மோடி //
வச்சான் பாருங்கய்யா ஆப்பு.
கறுப்பு பணத்திற்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கையாக பிரதமர் மோடி, இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சொந்தக்கட்சி எம்.எல்.ஏவில் ஆரம்பித்து அம்பானி வரை எல்லோருக்குமே ஆப்படிக்கும் நடிவடிக்கை இது. ‘இப்படி செய்யலாமா?’என்று சிறு விவாதம் எழுந்திருந்தால்கூட, முளையிலேயே நசுக்கி இருப்பார்கள்.
நாளை வங்கிகளும் .டி.எம்மும் செயல்படாது என்பதை இப்போது சொல்கிறார்களே என்று சிலர் எதிர்க்கிறார்கள். சிறு இடம் கொடுத்தாலும், இந்த திட்டத்தை கறுப்புப்பண முதலைகள் காலி செய்துவிடுவார்கள் என்பதால் இந்த அதிரடியை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் கண்களாலேயே இந்த செய்தியை நம்பமுடியவில்லை. வழக்கமான வாட்சப் வதந்தியோ என்று தான் நினைத்துவிட்டேன்.
நிச்சயம், குறுகிய காலத்திற்கு மக்களுக்கு இது சங்கடத்தை கொடுக்கும். இந்த நாட்டு சுதந்திரத்திற்காக எவ்வளவோ பேர் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள், உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒப்பிடும்போது, இது உருவாக்கும் தற்காலிக கஷ்டம் ஒன்றுமேயில்லை.
ஒரு இந்தியக்குடிமகனாக மோடிக்கு தார்மீக ஆதரவை நாம் கொடுக்க வேண்டிய நேரம் இது.
உண்மையிலேயே 52” மார்பளவு கொண்ட ஆண்மகன் தான் மோடி.
அய்யோ...இன்னும் என்னால் நம்ப முடியலியே..அடிச்சான்யா கவர்மெண்ட் ஆர்டரு...ஹய்யோ, ஹய்யோ!

----------------------------------------------------
ஷார்ட் ஃபிலிம்..அதுவும் 26 நிமிடமா? என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன்.
ஆனால் நேரம் போவதே தெரியாதபடி ஜாலியாக நகர்கிறது. அதிலும் ஷார்ட் ஃபிலிமின் தலைப்பான ‘250’ என்றால் என்னவென்று தெரியும்போது சரவெடி.
ரகளையான மியூசிக், ஷார்ட் ஃபிலிமுக்கே கிரேன், ஃபாஸ்ட்கட் எடிட்டிங் என கதை சிம்பிளாக இருந்தாலும் டெக்னிகலாக நிறைய செலவளித்து உழைத்திருப்பது தெரிகிறது. ஹீரோவாக நடித்திருப்பவரும், ஹீரோயினும் கேமிரா மறந்து சகஜமாக நடித்திருப்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
கிளைமாக்ஸில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
மொத்தத்தில் பார்க்கக்கூடிய டைம்பாஸ் ஷார்ட் ஃபிலிம்..வெல்டன் Gopi Ds.
https://www.youtube.com/watch?v=ulY8pZ_9XL4&feature=youtu.be
------------
நிச்சயமான பெண்ணை ஹீரோ கவிழ்ப்பது தான் காதல் மன்னன் & ரெமோ படத்தின் கதை. அஜித் செய்ததை ஏற்றுக்கொண்ட நீங்கள், சிவா செய்தால் மட்டும் குதிப்பது ஏன்?’ என்று ஒரு நண்பர் டீசண்டாக(!) கேட்டார்.
இரண்டு படத்தின் கதையும் ஒன்று போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல. அது தான் திரைக்கதையின் மேஜிக்.
காதல் மன்னன் படத்தின் ஓப்பனிங் சீனில் ஹீரோ ஒரு குழந்தையை ரிஸ்க் எடுத்து காப்பாற்றுகிறார். (அப்போ, ஹீரோயினுக்காகவும் ரிஸ்க் எடுப்பார்)
ஹீரோயின் இண்ட்ரோ சீனே நிச்சயதார்த்தம் தான். ஹீரோ ஃபோட்டோகிராபர். ஃபோட்டோ எடுக்க, ஹீரோயின் ஆர்வமாக போஸ் கொடுக்கும்போது, ஹீரோயினின் அப்பா வந்துஅதெல்லாம் வேண்டாம்..போஎன்று சின்ன ஆசையைக்கூட நிறைவேற்றாமல் செய்கிறார். (ஹீரோயின் பாவம்)
நிச்சயமான மாப்பிள்ளையோ, தனக்குத்தானே டைம்பாம் வைத்துக்கொண்டு ரேஸில் கலந்துகொண்டபடி அடுத்த சீனில் அறிமுகம் ஆகிறார். (அவர் ஒரு சைக்கோ.)
ஹீரோயினின் அப்பாவுக்கு காதல் என்றாலே பிடிக்காது. காரணம், ஹீரோயினின் அக்கா ஏற்கனவே யாருடனோ ஓடிப்போனது என்பதை அதற்கு அடுத்த சீன் சொல்கிறது.(எனவே, ஹீரோ காதலித்தாலும் சிக்கல் தான்.)
இவ்வளவும் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் நடக்கின்றன. எனவே, பத்து நிமிடங்களில் நம் மனநிலை என்ன? :
ஹீரோயின் பாவம்...கண்டிப்பான, புரிந்துகொள்ளாத அப்பா. சைக்கோ வில்லனுடன் நிச்சயதார்த்தம். அவள் அதில் இருந்து தப்பிக்க வேண்டும். ஹீரோ லவ் பண்ணுகிறான். ஆனால் ஹீரோயினின் அப்பாவுக்கு லவ்வே பிடிக்காது. ஹீரோயினும் அப்பாவுக்கு அடங்கிய பிள்ளை. இவ்வளவையும் மீறி, அந்த பெண்ணின் வாழ்க்கை நன்றாக அமையுமா?
ரெமோவில் முக்கால்வாசிப்படம் வரை நடப்பது என்ன?
ஹீரோயின் படித்து வேலையில் இருக்கும் ஒரு நல்ல டாக்டர். அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம். ஹீரொயினுக்கும் அதில் சம்மதம். இந்த நேரத்தில் வெட்டியாக சுற்றித்திரியும் ஒரு பொறுக்கி, ஹீரோயினின் மனதைக் கெடுத்து திருமணத்தை நிறுத்துகிறானா இல்லையா?
திரைக்கதையில் இரு முக்கியமான விஷயங்கள், சர்ப்ரைஸ் & சஸ்பென்ஸ் என்று ஹிட்ச்காக் சொல்வார். ஒரு விஷயத்தை ஆடியன்ஸுக்கு முன்பே சொல்லிவிட்டால், அது சஸ்பென்ஸ்.(குண்டு இருக்கிறது. அது வெடிக்குமா, வெடிக்காதா?). சொல்லாமல் திடீரென காட்டுவது சர்ப்ரைஸ்.(சட்டென்று ஒரு குண்டு வெடித்து, நம்மை அதிர்ச்சி ஆக்குவது).
இது வெடிகுண்டுக்கு மட்டும் அல்ல..படத்தில் நாம் சொல்லப்போகும் ஒவ்வொரு இன்ஃபர்மேசனுக்கும் முக்கியம். அதை சர்ப்ரைஸ் ஆக சொல்ல வேண்டுமா அல்லது சஸ்பென்ஸாக சொல்ல வேண்டுமா எனும் முடிவு தான் பல படங்களை வெற்றி அல்லது தோல்வி ஆக்குவது.
திரைக்கதை எழுதுவது என்பது சீன் பிடிப்பது மட்டுமல்ல..அதை எந்த ஆர்டரில் சொன்னால், மக்களின் மனநிலை எப்படி ஆகும் என்று சைக்காலஜிக்கலாக முடிவு எடுப்பது முக்கியம்.
நிச்சயம் செய்த மாப்பிள்ளை கெட்டவன் என்பதை அழுத்தமாக முதலிலேயே காதல் மன்னன் சொன்னது. ரெமோ முக்கால்வாசிப்படம் முடிந்தபின் சொன்னது.
அதனால் இரண்டு படங்களின் கதையும் இப்படி ஆனது:
ஒரு சைக்கோவிடம் இருந்து ஹீரோயின், ஹீரோ உதவியுடன் தப்பிக்கிறாளா, இல்லையா? - காதல் மன்னன்
ஒரு பொறுக்கி, நிச்சயமான பெண்ணை மடக்குகிறானா, இல்லையா? - ரெமோ


----------------------------
ஊருக்கு ஒன்றிரண்டு வெட்டி ஆட்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வேலையே, எந்த படம் வந்தாலும் பார்த்துவிடுவது. நானும் அந்த மாதிரி ஒரு ஆள் தான். எனவே எனது கிராமத்தில் அல்லது பள்ளியில், யாராவது ஒரு படத்திற்குப் போக நினைத்தால், என்னிடம் தான் கருத்து கேட்பார்கள். எங்கள் ஊரில் ஒரு பெண்மனியும் இத்தகைய சமூக சேவகராக இருந்தார். நல்ல படம் என்றால்நல்லாயிருக்குஎன்போம். இல்லையென்றால்கொன்னுட்டாங்கய்யாஎன்போம். இதைத் தான் சினிமாவுலகில் மவுத் டாக் என்பார்கள்.
இயக்குநர், தயாரிப்பாளர் போன்றே இத்தகைய கருத்து கந்தசாமிகளும் சினிமாவின் ஒரு அங்கம் தான். இவர்களின் மவுத்டாக் தான் பலரை தியேட்டருக்கு கொண்டுவந்தது. (அதுவரை படங்களும் அப்போது தியேட்டரில் இருந்தது)’ஏன் படம் எடுக்கிறாய்?’ என்று ஒரு டைரக்டரிடம் கேட்பது எப்படி அபத்தமோ, அப்படித்தான் எங்களிடம்ஏன் கருத்து சொல்கிறாய்?’ என்பதும். அதுவொரு இயல்பு. கருத்து கேட்பவர்களும் முட்டாள்கள் அல்ல. நல்லாயிருக்கு என்று நாம் சொன்ன படத்தைப் பார்த்துவிட்டு வந்துஏன்ப்பா...அதையா நல்ல படம்னு சொன்னே? உன்னால காசு வேஸ்ட்என்று திட்டிவிட்டுப் போவார்கள். பெரும்பாலும் யாரும் ஒரே ஒரு கருத்து கந்தசாமியின் பேச்சை நம்பி தியேட்டருக்குப் போவதில்லை; இரண்டு மூன்று பேரிடம் கேட்டுவிட்டே செல்வார்கள்/செல்கிறார்கள்.
நான் மேலே சொன்னது எல்லாம் இணையம் வரும் முன் நடந்தது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பேசுவது சினிமா அல்லது அரசியல் தான். தியேட்டருக்குப் போய் பல வருடம் ஆனவர்கள்கூடஇந்த வாரம் தனுஷ் படம் வந்துச்சே...எப்படி இருக்கு?’ என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு நாம் சினிமாப்பைத்தியங்கள் தான்.
இணையம் வந்தபின், கருத்து கந்தசாமிகள்விமர்சகர்எனும் பட்டத்துடன் ஆன்லைனுக்கு வந்தார்கள். மீடியாக்கள் போல் பூசி மெழுகாமல், தன் நண்பனிடம் பேசுவது போல் உடைத்துப் பேசினார்கள். சின்ன பட்ஜெட் படமா..பிடிச்ச நடிகரா என்றெல்லாம் யோசிக்காமல்நல்லாயிருக்கு..நல்லாயில்லைஎன்று உண்மையைச் சொன்னார்கள். விகடன் போன்ற பாராம்பரிய பத்திரிக்கைகளே நாயகன்/சின்னத்தம்பி விமர்சனங்களில் சறுக்கியது போல், இவர்களும் சில நேரங்களில் சறுக்கினாலும் மனதில் தோன்றுவதை மறைக்காமல் சொல்கிறார்கள். உறியடி போன்ற படங்களை மக்களிடம் கொண்டுசென்றதில் இணைய விமர்சனங்களுக்கும் முக்கியபங்கு உண்டு.
கமலஹாசன் சமீபத்தில் இதுபற்றி அருமையாகச் சொன்னார், ‘விமர்சனம் என்பது படத்தைப் பற்றி மட்டும் தெரியப்படுத்துவது இல்லை..விமர்சகனைப் பற்றியும் தெரியப்படுத்துகிறதுஎன்று. எனவே நீண்டநாள் ஒருவன் பொய்யான விமர்சனம் செய்து ஏமாற்ற முடியாது. தொடர்ந்து நான்கு நல்லபடங்களைமொக்கைஎன்றால் கமெண்டிலேயே கழுவியூற்றி, அவனை மக்கள் கைகழுவி விடுவார்கள். இது இருவழிப்பாதை. ஒரு நல்ல படத்தை ஒருவன் மொக்கை என்று சொல்லி, இங்கே தப்பிக்க முடியாது.
தியேட்டருக்குப் போவதா வேண்டாமா என்று முடிவு செய்யும் காரணிகளில் ஒன்றாக இணைய விமர்சனமும் ஆகியிருக்கிறது. எனவே முன்பு டிவியைக் கண்டு பயந்தது போல், இணைய விமர்சனத்தை கண்டு சினிமாவுலகம் பயப்படுகிறது.
சமீபத்தில் ரெமோ விநியோகஸ்தர் ஒருவர், இணைய விமர்சகர்கள்ப்ளூசட்டைஇளமாறன் மற்றும் பிரசாந்த் மேல் வழக்கு தொடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அதிகார பலமிக்க அரசியல்வாதிகளே இணைய விமர்சனத்தை அடக்க 66 சட்டம் கொண்டுவந்து, உச்சநீதிமன்றத்தில் அசிங்கப்பட்டார்கள். கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அப்போது வழங்கியது. அப்படியிருக்கும்போதுரெமோபோன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை எதிர்த்துப் பேசியதற்காக வழக்கு என்றால், எதால் சிரிப்பது என்று தெரியவில்லை.
தனிப்பட்ட விரோதம் அல்லது ஆதாயம் எதிர்பார்த்து விமர்சனங்கள் யாராவது செய்தால், அதை ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பதில் நமக்குப் பிரச்சினை இல்லை. அப்படியில்லாமல், ‘என் படத்தைப் பற்றிப் பேசினாலே வழக்குஎன்பது காலமாற்றத்தைப் புரிந்துகொள்ளாத அறியாமையின் வெளிப்பாடு.
எவ்வளவோ படங்களைப் பாராட்டினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, சில படங்களை குறை சொன்னதும்எப்படி நல்லா இல்லே?’ன்னு சொல்லலாம் என்று சீறுகிறார்கள். அதாவது பாராட்டி மட்டும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது சோஷியல் மீடியா..அதாவது மக்களே மக்களுக்காக நடத்தும் மீடியா இது. இன்றைய நிலையில் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் அனைவருமே விமர்சகர்கள் தான். எத்தனை பேர் மேல் வழக்குப் போடுவீர்கள்? எனவே இவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மையிருக்கிறதா என்று ஆராய்ந்து, தன் தவறுகளைக் களைவதே கோடம்பாக்கத்திற்கு இருக்கும் ஒரே வழி.
வாழ்க வளமுடன்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.