Saturday, July 2, 2016

சினிமா மாணவர்களுக்கு : சில நல்ல வெப்சைட்கள்



சக சினிமா மாணவர்களுக்கு...

நமது தலைமுறையின் வரப்பிரசாதம், இண்டர்நெட். சமையலில் ஆரம்பித்து சினிமா வரை, நீங்கள் எதை கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு இண்டர்நெட் உங்களுக்கு உதவும். 

நான் அடிக்கடி சொல்வது, எனக்கு நானே சொல்லிக்கொள்வது ‘இண்டர்நெட் போன்ற விஷயங்களை நாம யூஸ் பண்ணனும்..இல்லேன்னா, அது நம்மளை யூஸ் பண்ணிடும்!’. நிறைய வெட்டி அரட்டைகள், பாலியல் தேடல்கள், போராளிச் சீற்றங்கள் என நமது நேரத்தை விழுங்கும் விஷயங்கள் பல இங்கே உண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால், இண்டர்நெட் போன்ற வரப்பிரசாதம் வேறில்லை.


அந்தவகையில் சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய சில வெப்சைட்கள் இங்கே. தினமும் இந்த வெப்சைட்களை படித்து வருகின்றேன். நண்பர்களுக்கும் இவற்றை பரிந்துரைக்கிறேன்.

1. No Film School :
சினிமா கற்றுக்கொள்ள ஃபிலிம் ஸ்கூல் தேவயில்லை எனும் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட தளம், http://nofilmschool.com/. திரைக்கதையில் ஆரம்பித்து சவுண்ட் மிக்ஸிங் வரை
ஆர்டிக்கிள்ஸ் கொட்டிக்கிடக்கும் வெப்சைட் இது. தேடல் பொறியை சரியாக உபயோகித்தால், பல அற்புதமான லின்க்ஸ் கிடைக்கும்.

2. Jamuura:
இதுவொரு இந்திய வெப்சைட் என்பதால், இந்தியாவில் இருக்கும் டெக்னிஷியன்களின் பேட்டி, இந்தியப் படங்கள் என்று லோக்கல் ஃபீல் கொடுக்கும் ஆங்கில தளம்,
http://www.jamuura.com/blog/
மணிரத்னம் படங்கள் முதல் அனுராக் காஷ்யப் வரை அவ்வப்போது அலசுவார்கள். சில நேரங்களில் முத்தான அறிவுரைகள் சிக்கும்.

3. Film Maker IQ:
வெவ்வேறு வெப்சைட்களில் வெளிவரும் நல்ல சினிமா கட்டுரைகளை, பாடங்களை வெளியிடும் தளம், http://filmmakeriq.com/
இங்கேயும் தேடினால், பல நல்ல விஷயங்கள் சிக்கும். ஃபிலிம் நுஆர் பற்றி எழுதியபோது, இந்த வெப்சைட்டின் லின்க்கை ஏற்கனவே நான் கொடுத்திருக்கிறேன்.

4. Rain Dance:
இன்னொரு முத்தான தளம். அவ்வப்போது செம இண்டரஸ்டிங்கான டாபிஸ் சிக்கும். பலரின் ஃபிலிம் மேக்கிங் அனுபவங்கள் நமக்கு உபயோகமாக இருக்கும். லின்க்:
http://www.raindance.org/articles/

5.Cinephilia Beyond: கொஞ்சம் கடினமான, கரடுமுரடான, ஆழமான கட்டுரைகளை விரும்புவோருக்கான தளம், http://www.cinephiliabeyond.org/
பல நல்ல பேட்டிகள், படங்களைப் பற்றிய தீவிர அனலைஸிஸ் என சீரியஸான தளம்.

6. Youtube:
ஆமாம் பாஸ், நம் ரேஷ்மா புகழ் யூடியூப் தான். ஆக்ட்டிங் கோர்ஸில் ஆரம்பித்து எடிட்டிங் வரை புட்டுப்புட்டு வைக்கிறார்கள். தமிழில் BOFTA மாஸ்டர்கிளாஸ் மட்டும் கிடைக்கிறது. ஆனால்
ஆங்கிலேயக் கனவான்கள் நம் ஆட்கள் போல் கஞ்சர்கள் அல்ல, தினமும் தங்கள் அனுபவத்தை, அறிவை பகிர்ந்து தள்ளுகிறார்கள். கூகுள் போன்றே இங்கும் சரியாகத் தேடினால், சரியானது சிக்கும்.

7. தமிழில் :
உலக சினிமா ரசிகன், கீதப்ரியன், கருந்தேள், முரளிக்கண்ணன், சுரேஷ்கண்ணன், செங்கோவி(!) போன்ற வலைப்பதிவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வப்போது நாங்கள் வனவாசம் போனாலும், மன்னித்து தொடருங்கள்.

ஆனந்த விகடனில் இரண்டு அருமையான தொடர்கள் வருகின்றன. பஞ்சு அருணாச்சலம் மற்றும் வெற்றிமாறன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். பஞ்சு ஐயாவின் ஆரம்ப காலம், கொடுமையானது. ஆரம்பித்த படங்கள் எல்லாம் பாதியில் நிற்க, ‘பாதிப்பட பஞ்சு’ என்று கேலிசெய்யப்பட்டதில் ஆரம்பித்து இளையராஜாவை கண்டுபிடித்துக் கொண்டுவந்தது வரை பல சுவாரஸ்யமான விஷயங்களை கொடுக்கிறார். தவற விடக்கூடாத தொடர் இது.

தமிழ் ஹிந்துவில் எஸ்.பி.முத்துராமன் ஐயாவின் அனுபவத்தொடர் வருகிறது. நான் எதிர்பார்த்த அளவிற்கு டெக்னிகலாக இல்லையென்றாலும் படிக்க வேண்டிய தொடர். கூடவே, என் பிரியத்திற்கு உரிய பிரபுதேவாவின் கதையும் வருகிறது. ஒரு திறமை எப்படி சுற்றியுள்ளோரால் கண்டுணரப்பட்டு, வளர்க்கப்பட்டது என்று எளிமையாக விவரிக்கிறார்.
இவற்றைத் தவிர நண்பர்கள் கமெண்ட்டில் சொன்ன சில நல்ல வெப்சைட்ஸ்:
1.        https://www.criterion.com/
5.        http://www.filmcomment.com/
6.        http://theplaylist.net/
மேலும் வாசிக்க... "சினிமா மாணவர்களுக்கு : சில நல்ல வெப்சைட்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - July 2016 - 1

 

விபரீத கேள்வியுடன் என் பையன் பேச்சை ஆரம்பித்தான்.
’அப்பா, பொண்ணு எங்க கிடைக்கும்?’
‘பொ..பொண்ணா? எந்தப் பொண்ணுடா?’
‘அதாம்ப்பா..கல்யாணம்லாம் பண்றாங்கள்ல..அந்த பொண்ணு’
‘அது... ஊருல இருப்பாங்க’
‘ஓ..ஊருல நிறைய பொண்ணுங்க இருப்பாங்க..நாம போய் ஒன்னை கல்யாணம் பண்ணிக்கலாமோ?’
‘டேய்..இப்போத்தாண்டா ஒண்ணாப்பே போயிருக்கறே..அதுக்குள்ள’ நாம’ங்கிறே?’
‘ப்ச்..சொல்லுங்கப்பா’
‘அப்படி இல்லைப்பா..பொம்பளைப்பிள்ளை இருக்கிற வீட்டில் பொண்ணும், ஆம்பிளைப்பிள்ளை இருக்கிற வீட்டில மாப்பிளையும் இருப்பாங்க. மாப்பிளளை வீட்டுக்காரங்க போய் பொண்ணு வீட்ல கேட்பாங்க’
‘ஓ..கேட்டவுடனே கொடுத்துடுவாங்களோ?’
‘அதெப்படிடா கொடுப்பாங்க. உன் அம்மாவை நிறைய பேர் பொண்ணு கேட்டாங்க. உங்க தாத்தா கொடுக்கலியே..அப்பாக்குத்தானே கொடுத்தார்’
‘ஏன் அப்படி?’
‘ஏன்னா அப்பா படிச்சிருக்கேனா, நல்ல வேலைல, ஃபாரின்ல இருக்கிறேனா? அதனால தான் கொடுத்தார். அதனால நல்லா படிச்சாத்தான் நல்ல பொண்ணு கிடைக்கும்’.
‘ஓ..அப்போச் சரி’
‘என்ன சரி?’
‘சரி..நான் நல்லாப் படிக்கிறேன்னு சொன்னேன்’.
உலகத்திலேயே நல்ல பொண்ணு வேணும்னு படிக்கப்போறது என் புள்ளையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுசரி, விதை ஒண்ணு போட்டால் சுரை ஒண்ணா முளைக்கும்!
-------------------

ஒரு படத்தின் ஆயுளே ஒரு வாரம் தான் என்று ஆகிவிட்ட காலம் இது. புதிதாக வரும் ஹிரோயின்களின் பெயரே நம் மனதில் நிற்பதில்லை எனும்போது, கேரக்டர் ஆர்டிஸ்டுகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.

எங்கேயும் எப்போதும் பார்த்தபோது பெரிதாக இவரை நான் கண்டுகொள்ளவில்லை. பிறகு அடிக்கடி படங்களில் தென்பட ஆரம்பித்தார். கொஞ்சம் முதிர்ச்சியான பெர்ஃபார்மன்ஸ் தெரிந்தது. ’அனன்யா சிஸ்டர்’ என்று ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டேன். பிசாசு படத்தில் இன்னும் கவனிக்க வைத்தார்.

அழகு குட்டி செல்லம் பார்த்தபிறகு, கண்டிப்பாக இவர் பெயரைத் தெரிந்துகொள்வோம் என்று தேடினேன். அவர் பெயர், வினோதினி வைத்யநாதன். அழகு குட்டி செல்லத்தில் குழந்தையற்ற தாயாக அவர் கொடுத்திருந்த நடிப்பு, நம்மைக் கலங்க வைத்தது.

சிம்பிளான அழகும் முதிர்ச்சியான, அளவான நடிப்பும் தான், தனித்துவமான குரலும் இவரது ப்ளஸ் பாயிண்ட். இப்படி கலக்குகிறாரே, யார் என்று கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன்.

பத்து வருடங்களுக்கு மேல் நாடக அனுபவம், கூத்துப்பட்டறையில் மட்டுமே மூன்று வருடங்கள், நாடக திரைக்கதை ஆசிரியர், நடிகை, நாடக இயக்குநர் என்று அவரது புரஃபைல் பார்த்து மிரண்டுவிட்டேன். அப்புறம் ஏன் நல்லா நடிக்க மாட்டாங்க!!

இவருடைய பேட்டி எதையும் ஆங்கில ஹிந்து தவிர்த்து நான் கண்டதில்ல. ஜனனி ஐயரை எல்லாம் பேட்டி காணும் புண்ணியவான்கள்,இவரையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

----------------------------


கண்ணாம்பாள் : மனோகரா...லக்ஸ் சோப் வாங்க, நீ வீறு கொண்டு எழுந்து வீர காவியம் தீட்டும்போதெல்லாம் காசினை ஒளித்து வைத்து தடுத்து நின்ற பாவி நான் தான்..தாயின் ஆணையைத் தலைமேல் கொண்ட என் தங்கமே..‘லக்ஸ் சோப் வாங்கி வாஎன்று நான் இப்போது உத்தரவிட்டாலும், அசைய முடியாத நிலை பெற்றுவிட்டாயே. நாறுகிறது..எல்லாம் நாறுகிறது.

மனோகரன் : இல்லை தாயே, லக்ஸ் சோப் வாங்கி வா என்று இப்போதாவது கட்டளையிடுங்கள்..கடைசி நேரம், கடைசி சோப்...வாள் வேண்டாம், வாய் மொழி போதும். படை வேண்டாம், தாயின் தடை நீங்கினால் போதும். எங்கே தாயே உத்தரவு? உத்தரவு கொடுங்கள் தாயே.

கண்ணாம்பாள் : என் அருமைச் செல்வமே..உன் தந்தையின் நன்மைக்காகத்தான் நான் லக்ஸ் சோப்பில் குளித்து வந்தேன். மனோகரா, பொறுத்தது போதும், பொங்கி எழு. என் புதல்வனே, தாயின் ஆணை கிடைத்துவிட்டது. புறப்படு.

ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே..கத்ரினா கைஃப் மட்டும் தான் லக்ஸ் போட வேண்டுமா? இந்த கண்ணாம்பாள் போடக் கூடாதா?

லக்ஸ் சோப் சாதித்ததை கத்தி முனையும் சாதித்ததில்லை என்பதை மறந்துவிட்டுச் சிரிக்காதீர்.

சோழ மண்டலத்துக் கொழு மண்டபமே..என் அழகின் ரகசியத்தை இன்னும் எவ்வளவு நேரம் எனக்கு கிடைக்காமல் செய்யப் போகிறாய்?
பூமிமாதா, நீ நன்றியுள்ளவள் என்பது உண்மையானால், மாசில்லாத லக்ஸ் சோப்புக்கு பெருமை உண்டு என்பது உண்மையானால், இந்த சங்கிலி பொடிப்பொடியாகட்டும்.

கடை பூட்டும் முன், லக்ஸ் சோப் எனக்குக் கிடைக்கட்டும். லக்ஸ் சோப் கிடைக்கட்டும்!



தமிழ் சினிமா ஏன் உருப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிய வேண்டுமென்றால், இந்த ’மாற்றான்’ மேக்கிங் வீடியோவைப் பாருங்கள்:

மாற்றானில் வந்த சூர்யா - காஜல் லிப்லாக் காட்சி மேக்கிங். க்ரீன் மேட் பிண்ணனியில் காஜல் தனியாக கிஸ் பண்ண, சூர்யா தனியாக கிஸ் பண்ண இரண்டு கண்றாவியையும் இணைத்து லிப்-லாக் ஆக்கியதை பெருமையுடன் விவரிக்கிறது இந்த வீடியோ.

காஜல் ஷூட்டிங் ஒருநாள், சூர்யா ஷூட்டிங் ஒருநாள், அப்புறம் இரண்டையும் இணைக்கும் சிஜி வேலைகள் என இந்த கண்றாவிக்காக இவர்கள் குறைந்தது ஐந்து லட்சமாவது செலவளித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நம்மிடம் உள்ள பிரச்சினையே, சிஜியை எதற்கு யூஸ் பண்ணுவது என்ற தெளிவு இல்லாதது தான். சிஜிக்காரன் இருக்கிறான், இளிச்சவாய் புரடியூசர் இருக்கிறான், அப்போ சிஜி செய்வோம் என்று தான் நடைமுறை இருக்கிறது.
இந்த சீனை எடுக்க காஜலிடம் பேசி கன்வின்ஸ் செய்து ஒரிஜினல் கிஸ்ஸிங் சீனாகவே எடுத்திருக்கலாம். அவர் ஒத்துக்கொள்ளவில்லையென்றால், ஒரு நல்ல இயக்குநர் இந்த சீன் அவசியம் தேவையா என்று தான் யோசித்திருக்க வேண்டும்.


இந்த முத்தக் காட்சி, கதையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்குகிறதா, இது இல்லையென்றால் கதையே எடுபடாதா என்று யோசித்தால், இதுவொரு வேண்டாத வெட்டி சீன் என்று புரியும். தமிழ் இளைஞனுக்கு தவறுதலாக கன்னத்தில் முத்தமிட்டாலே பெரிய சாதனை தானே!

இந்த மாதிரி காசை கரியாக்கும் விஷயங்களைக் கண்டால், நமக்கு பற்றிக்கொண்டு வருகிறது. 50 கோடி, 100 கோடி பட்ஜெட்டில் இந்த வேலையைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த மேக்கிங் வீடியோவை இவர்கள் வெளியில் விட்டிருப்பது தான் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது. 

மேய்க்கிறது எருமை, அதில என்னய்யா பெருமை?
மேலும் வாசிக்க... "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - July 2016 - 1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 32

விஜய்யின் நடிப்பை(!) சிலாகித்து, இயக்குநர் மகேந்திரன் விகடனில் கொடுத்த பேட்டி தான் சென்ற வார பரபரப்பு

இதனால் சிலர் மகேந்திரனை செமயாக ஓட்டுவதைப் பார்க்க முடிந்தது. இன்னும் சிலரோ அவரைவாய்ப்புக்காக...’எனும் ரீதியில் தாக்கியும் எழுதினர்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற காவியங்களைப் படைத்தவர், விஜய் ரசிகரா எனும் அதிர்ச்சி தான் இதற்கெல்லாம் அடிப்படை.

ஆனால் மனித மனம் அப்படித்தான் செயல்படும். ஜி.கிருஷ்ணமூர்த்தி மாபெரும் தத்துவமேதை. ஓஷோவாவது கொஞ்சம் ஜோக் அடித்து நம்மை ரிலாக்ஸ் செய்வார். இவர் படு சீரியஸ். அப்படிப்பட்டவர் படிப்பது, காமிக்ஸ் புத்தகங்களை!

ஒரு பக்கம் மிகத்தீவிரமாக இயங்குபோது, இன்னொரு பக்கம் நேரெதிரான பொழுதுபோக்கினை வைத்துக்கொள்வது பலவகைகளில் மனநலத்திற்கு நல்லது. எக்ஸாம் முடிந்ததும் தியேட்டரை நோக்கி நாம் ஓடுவதில்லையா, அது போல!

எனவே, உண்மையிலேயே மகேந்திரன் விஜய்யைஆரம்ப காலத்தில்இருந்தே ரசித்து வந்திருந்தால், அதில் வியப்பேதும் இல்லை!


------------------
இரண்டு நாட்களாக நல்ல காய்ச்சல். இருந்தாலும், இரவில் தூங்கும் முன் பையனுக்கு ராமாயணம் கதை சொன்னேன். ராமர் பிறந்ததில் ஆரம்பித்து, வில்லை உடைத்து சீதையை மணந்தது வரை சொல்லி நிறுத்தினேன்.

மீதியை நாளைக்குச் சொல்றேண்டா
 
ஏன்?’
 
கல்யாணம் ஆகிடிச்சுன்னா, அவங்களை கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யக்கூடாது..அதான்!’
 
..அப்படீன்னா இப்போ என்ன செய்ய?”
 
இப்போ என்ன செய்யறோம்னா, அந்த இடத்துல கட் பண்ணி ராமருக்கும் சீதைக்கும் ஒரு ஃபாரின் டூயட் வைக்கிறோம்..தூங்கறோம்!’.
என்று சொல்லிவிட்டு தூங்கினால், கனவு மேல் கனவு.

எத்தனையோ காஷ்மீர் தீவிரவாதிகளின் வில்லை உடைத்தவர் எங்கள் கேப்டன்என்று பிரேமலதா மிரட்ட, என் பாஸ் வந்துஷட் டவுன் முடியறதுக்குள்ள வில்லை உடைக்கணும்என்று என்னிடம் கெஞ்ச, வைகோ ஏதோ மேடையில் சொன்னதும் மேடையில் இருந்தவர்களேஅய்யய்யோஎன்று தெறித்து ஓட, நமக்கு நாமே பேனருக்குக்கீழே இருக்கும் ஸ்டாலின்எல்லோரும் வாங்க, வில்லை உடைப்போம்என்று பேச, கேப்டன் வந்து லவோசுவாஹி மொழியில் பேசியதைக்கேட்ட கூட்டம்அவர் வில்லைப் பற்றித்தான் பேசுகிறார்என்று புரிந்துகொண்டு கைதட்ட, ‘ராமர் தான் ஏற்கனவே வில்லை உடைச்சுட்டாரேஎன குழம்பியபடியே நான் படுத்து உருள, ஃபாரின் லொகேசனில் சோகமாய் அமர்ந்திருந்த ராமரிடம் வந்த அசிஸ்டெண்ட் டைரக்டர்சார், சீதைக்கு விசா கிடைக்கலை. விந்தியாவை வச்சு டூயட் எடுத்திடலாமா?’ என்று கேட்டபோது...

அம்மேஎன்று அலறி எழுந்தேன். விடிந்திருந்தது. தேர்தல் நேரத்தில், ராமாயணத்தில் ஃபாரின் டூயட் வச்சது ஒரு குத்தமாய்யா?

------------------
சினிமா மாணவர்களுக்கு, மிஷ்கினின் ஒவ்வொரு பேட்டியிலும் கற்றுக்கொள்ள ஒரு விஷயமாவது இருக்கும். வெறுமனே ஹீரோ துதி என்று இல்லாமல், பார்க்க வேண்டிய படங்களில் ஆரம்பித்து ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்கள்வரை பல தகவல்களை கொட்டிக்கொண்டே இருப்பவர் அவர்.

அந்த வரிசையில் தமிழ் ஹிந்துவிற்கு அவர் அளித்திருக்கும் இந்த பேட்டி, மிக முக்கியமானது:

//நான் உதவி இயக்குநராக சேர்ந்த உடனே மொட்டை அடித்துக் கொண்டேன். நான்கு வருடங்களாக முடியே வளர்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன். அதை ஓர் இலக்காக வைத்து கொண்டேன். எந்த ஓர் இடத்திலும் எனது கவனம் சிதறக் கூடாது, சாலையில் போகும்போது கூட யாருமே என் பக்கத்தில் வரக்கூடாது என்று நினைத்தேன். என் வேலை, என் படிப்பு, என் சினிமா என்று இருந்தேன். அந்த நான்கு வருடக் காலங்களில், பாலைவனத்தில் தாகத்தில் தவிக்கும் ஒருவனுக்கு தண்ணீர் கிடைத்தால் எப்படிக் குடிப்பானோ அப்படித்தான் சினிமாவைக் குடித்தேன்.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 'தேவர் மகன்' படம் பார்த்து இடைவேளை முடிந்ததும், தியேட்டரிலே உட்கார்ந்து முதல் 40 காட்சிகளுக்கான ஒன்லைனை எழுதினேன். படம் முடிந்த பிறகு திரையரங்க வளாகத்திலேயே உட்கார்ந்து எஞ்சிய 35 காட்சிகளை ஒன்லைனை எழுதி முடித்தேன். ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதே முறையைப் பின்பற்றுவேன்.//
முழுதும் படிக்க:

--------------------------------
அது ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பெரும் பிரச்சினை. அந்த ஊரில் வாழும் இளைஞர்கள் எல்லாம் சரோஜாதேவி புத்தகம் என்று அந்த ஊர் முன்னோர்களால் அழைக்கப்பட்ட ஆபாசப் புத்தகங்களைத் தான் படிக்கிறார்கள்

பிரபல சினிமாப்பாடல்களை ஆபாச வார்த்தைகளுடன் எழுதி, பாடிப் பரப்புகிறார்கள். வண்ணத்திரை, சினிக்கூத்து, டைம் பாஸ் போன்ற புத்தகங்களை சில நல்லவர்கள் மட்டும் அவ்வப்போது படிப்பது உண்டு. மற்றபடி தி.ஜா, ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி போன்ற பெயர்களை விடுங்கள், ஆனந்த விகடன், குமுதத்தைக்கூட அந்த கிராமத்தில் யாருக்கும் தெரியாது.
பெரிசுகள் முதல் இளைஞர்கள்வரை எல்லோரிடமும் இதே பிரச்சினை தான். சமீபகாலமாக, சின்னப் பசங்களுக்கும் இதே போன்ற புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்த, கிராமம் நாட்டாமையிடம் முறையிட்டது.

எல்லாத் தரப்பையும் ஆராய்ந்த நாட்டாமை, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு தீர்ப்பினைக் கூறினார். அது: ”இவங்க பள்ளிக்கூடம் போய் படிக்கிறதால தான் எழுதப் படிக்கத் தெரியுது; கண்டதையும் படிக்கிறாங்க. அதனால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடுங்கள். குழந்தைகளை இனிமேல் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.”

- ‘நான் சினிமாவே பார்க்கிறதில்லீங்க..சமூகம் கெட்டுப்போறதுக்குக் காரணமே சினிமா தான்என்று வாதிட்ட நண்பருக்குச் சொன்ன குட்டுக்கதை!
மேலும் வாசிக்க... "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 32"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.