Monday, March 21, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....4



// பெங்களூர் வழக்கில் விரைவில் தீர்ப்பு - செய்தி //
வாழ்க்கையில் நான் பின்பற்றும், எனக்கு வழிகாட்டியாகக் கருதும் நபர்களில் ஒருவர், நம் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். அது எப்படீன்னா...
நமக்கு ஜோசியத்தில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதுக்காக டெய்லி நல்ல நேரம் பார்க்கிற அளவுக்கு முற்றிய ஸ்டேஜும் இல்லை. ஜோசியரைத் தேடிப் போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பொறுமையும் இல்லை. இதுக்கு என்ன செய்யலாம்ன்னு குறுக்குவழி தேடியபோது தான் தெரிந்தது, அம்மையாருக்கும் நமக்கும் ஒரே நட்சத்திரம்ன்னு. (ஜாதகத்தில் வேறு சில ஒற்றுமைகளும் உண்டு!!)
அதில் இருந்து கொஞ்ச நாட்கள் உற்றுக் கவனித்தபோது....நான் வேலைகிடைக்காமல் அலைஞ்ச காலத்தில் அம்மையாரும் ஆட்சி பறிபோய் இருந்திருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும் நேரத்தில் எல்லாம் நமக்கும் நல்லது நடந்திருக்கிறது. அதனால், இப்போ நமக்கு எப்படி நேரம்ன்னு தெரியணும்ன்னா, அம்மையார் நிலைமையை ரெஃபரன்ஸுக்கு பார்த்துக்கிடறது வழக்கம்.
போன மாதம் ஆபீஸ்ல ஒரு ஃபாரின் டூர் போற ஏற்பாடு நடந்தது. அதில் என்னை கழட்டிவிட முயற்சி நடப்பதாகவும் தெரிந்தது. நண்பர்கள் என்னிடம் 'பாஸ்கிட்டே போய் சண்டை போடு'ன்னு சொன்னாங்க. நான் அம்மையார் என்ன செய்றாங்கன்னு பார்த்தேன்....ஆத்தீ!!
ஒரு வடிவேலு ஜோக்கில் ஒரு பொடியன் என்ன திட்டுனாலும் கம்முன்னு ஒரு பெரிசு இருப்பாரே..அது தான் இப்போ நம்ம நிலைமைன்னு தெரிந்தது; வாயைத் திறந்தால் கிட்னியை எடுத்திருவாங்கன்னும் புரிந்தது. ஏற்கனவே இங்கே நிறைய அரபி பன்னீர்செல்வங்கள் உண்டு. அதனால் நான் பாஸ்கிட்ட குட்மார்னிங் தவிர வேற ஏதும் சொல்லவில்லை. இப்போது அந்த ஃபாரின் ட்ரிப்பே கேன்சல் ஆகிவிட்டது. அம்மையாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டது, எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது பார்த்தீர்களா??
அம்மையார் விடுதலைக்காக அதிமுக அமைச்சர்கள் கோவில் கோவிலாகப் போய் செய்யும் சேட்டைகள், ஹூசைனியின் சிலுவைக்கூத்து எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் அதைப் பார்க்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிடும். 'நல்லா வேண்டிக்கோங்கய்யா..தேவைப்பட்டால் நாக்கையும் வெட்டிக்கோங்கய்யா' என்று நினைத்துக்கொள்வேன்.
இப்போது பெங்களூர் ஜட்ஜ் ஐயாவிற்கு ஒரு சிறிய விண்ணப்பம்...தீர்ப்பு சொல்லும்போது, இந்த ஏழையையும் மனசுல வச்சிக்கோங்க சாமீ!!!!!!
------------------------------------------------------------------------
//வீடு வாங்கினால் மனைவி இலவசம் //
இப்படி ஒரு நியூஸைப் படிச்சதும் நம்மாட்களுக்கு உற்சாகம் தாங்கலை. அட புத்திசாலிகளா...
வீட்டு ஓனர் தான் அந்தப் பெண்மணியாம்...அதாவது வீட்டுக்கு காசையும் கொடுத்து, வீட்லயும் பாதிப்பங்கு மனைவி ஆவதால் அந்தப் பெண்ணுக்கே போயிடும். முழுசும் போகலாம்!
வீட்டு விலை 75000 யு.எஸ்.டாலராம்.
அந்தப் பெண்மணிக்கு வயசு 40.
இது என்னய்யா டீலிங்கு?
மனைவி வாங்கினால் வீடு இலவசம்ன்னு வாழ்ந்த பரம்பரைல வந்துட்டு, இப்படி யோசிக்காம குஷி ஆகுறானுகளே....!!
------------------------------------------------------------------------
சின்னத்தம்பி........தமிழ் சினிமாவில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. இன்றைய விஐபி போலவே, அன்றும் இந்தப் படம் ஏன் ஓடுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. குறிப்பாக...அறிவுஜீவிகளுக்கு!
ஆனால் இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க திரைக்கதை டெக்னிக் ஒன்று உண்டு. ஆடியன்ஸை படத்துடன் பிணைத்து வைத்திருப்பது தான் ஒரு திரைக்கதையின் முக்கியப்பணி. சின்னத்தம்பி படத்தின் ஆரம்பக்காட்சி இப்படி வரும்..
பெரிய வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
சின்னத்தம்பி போய் பாடுகிறார்.
அண்ணன்கள் ரசிக்கிறார்கள். குழந்தையும் ரசிக்கிறது.
ஜோசியரிடம் அண்ணன்கள் ஜோதிடம் கேட்கிறார்கள்.
அவள் கல்யாணம் அண்ணன்களின் விருப்பம் இல்லாமல் நடக்கும் என்று சொல்கிறார்.
அண்ணன்கள்-குஷ்பூ-பிரபு ஆகிய மூன்று கேரக்டர்களும், படத்தின் கதையும் டைட்டில் முடியும் முன்பே தெளிவாக விளக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நான் சொல்ல வருவது அது அல்ல.
மேலே சொன்ன காட்சிகளில் எங்கேயுமே குழந்தையின் அப்பா காட்டப்படவில்லை. ஒருவேளை அம்மா கருவுற்றிருக்கும்போது அப்பா இறந்திருக்கலாம். சரி, அப்போ அம்மாவாவது குழந்தை பிறக்கும்போது உயிரோடு இருந்திருக்க வேண்டும் அல்லவா?
ஒருவேளை பிரசவத்தின்போது இறந்திருந்தால், அங்கே சந்தோசமாகதூளியிலேஎன்று சின்னத்தம்பி பாடமுடியாது, ஒப்பாரி தான் பாடியிருக்க வேண்டும். நம் மக்கள் முதல்வர் மாதிரியே இந்த அம்மாவும் மறைந்திருக்கும் ரகசியம் என்ன??
அண்ணன்கள் பாசமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவள் அந்தப் பாசத்திற்கு கட்டுப்படப்போவதில்லை. (உண்மையில் அந்தப் பாசமே விலங்காக ஆகிறது.)
இங்கே அண்ணன்களுடன் அம்மா கேரக்டரும் இருந்தால், முதலில் அண்ணன்களின் பாசத்தில் வீரியம் குறையும். அந்தப் பாசம் விலங்காக மாறுவதாகச் சொல்ல முடியாது.
ஆடியன்ஸின் கவனம், அண்ணன்கள்-குஷ்பூ-பிரபு ஆகிய மூன்று கேரக்டர்களின்மீதே இருக்க வைத்தது தான் இந்தத் திரைக்கதையின் வெற்றியின் சூட்சுமம். (அண்ணன்களில் ராதாரவி மட்டும் தான் மையப்படுத்தப்பட்டிருப்பார்!)
யோசித்துப்பார்த்தால், பாசமலர்-கிழக்குச் சீமையிலே போன்ற அண்ணன் தங்கை கதைகளில் அம்மா கேரக்டர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. நம் தமிழ் சினிமா ஜாம்பவான்களின் நுண்ணறிவைக் கண்டு வியக்கிறேன்!
சின்னத்தம்பி....சென்ற பதிவின் தொடர்ச்சி!
இது குறியீடுகளை விரும்பும் குறியானந்தாக்களுக்கான ஸ்டேடஸ் :
அப்பாவும் இல்லாமல் அம்மாவும் இல்லாமல் குஷ்பூ கேரக்டரைப் படைத்தது ஏன்? அப்பா-அம்மா இல்லாமல் அவதரிப்பது யார்?
ஆம்...தேவதைகள் தான் இப்படி அவதரிப்பார்கள். இந்த கேரக்டரில் நடித்த குஷ்பூ தமிழ் சினிமாவின் தேவதையாக ஆனதையும் கவனித்தீர்கள் என்றால், இதில் பி.வாசு வைத்திருக்கும் குறியீடு உங்களுக்குப் புரியும்.
அந்த ஹீரோயின் சாதாரணப் பெண் அல்ல, அவள் ஒரு தேவதை என்று ஆடியன்ஸ் மனதில் வலுவாகவே நிறுவவே இந்தக் குறியீடு!
(இது உண்மையாகவும் இருக்கலாம். smile emoticon )
------------------------------------------------------------------------------
நம்ம தம்பி ஒருத்தன் வேறொரு வளைகுடா நாட்டுல டிரைவர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். திடீர்னு வேலையை விட்டுடு ஒரு வருசம் முன்னே ஊருக்கு வந்துட்டான். ஏன்டான்னு கேட்டால் 'அங்கே வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சுண்ணே..முடியலை..வந்துட்டேன்'ன்னு சொன்னான். அது சரின்னு நானும் கேட்டுக்கிட்டேன்.
இப்போ மறுபடியும் வேலை கேட்டு, அவன் ரெசியூமை என்கிட்டே கொடுத்தான். அதை நண்பர்கள்கிட்டே ரவுண்ட்ஸ்க்கு விட்டதுல, ஒரு டிரைவர் கைக்கு அது போயிருக்கு. அவர் அதைப் பார்த்துட்டு '..இவனை எனக்குத் தெரியுமே..இன்னுமா இவன் கல்ஃப் கன்ட்ரிக்கு வர்றேன்னு சொல்றான்?'ன்னு கேட்டிருக்காரு. என்னய்யான்னு விசாரிச்சா...
அந்த நாட்டுல கார் ஓட்டிக்கிட்டு இருந்த பயலுக்கு, அந்த நாட்டு அம்மணியோட கனெக்சன் ஆகியிருக்கு. அவனோட சேவையை மெச்சின அம்மணி, தன்னோட ஃப்ரெண்ட்ஸ்களுக்கு இவனை இன்றடியூஸ் பண்ணி வச்சிருக்கு. வாடிக்கையாளர் வட்டம் பெருகுனதுனால, அம்மணிகளை சமாளிக்க முடியாமல் பயபுள்ளை நாட்டைவிட்டே ஓடி வந்திருக்கு.
அடப்பாவின்னு அவனுக்கு ஃபோன் பண்ணி 'ஏண்டா இப்படியா?'ன்னு கேட்டால் அவன் சொல்றான் :அதான் அப்பவே சொன்னனேய்யா, வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு.
டேய், அப்போ அந்த வேலையைவா சொன்னே?
அதுசரி, இப்போ எந்த வேலைக்குடா என்கிட்டே ரெசியூம் கொடுத்தே?
‪#‎நானா யோசிச்சேன்

------------------------------------------------------
போற போக்கைப் பார்த்தால் வீடியோ ரிலீஸ் ஆகலேன்னா, பிரபல நடிகையாவே ஒத்துக்க மாட்டாங்க போல...
அதுசரி, ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழறதும், பிரபல நடிகைன்னா வீடியோ லீக் ஆகறதும் சகஜம் தானே!
---------------------------------------------------------------------------------------
//கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.//
யாருடா அவங்க, இவ்ளோ தைரியமா மாமூல் தராமல் கடை போட்டது?
-----------------------------------------------------------------------
//என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் - சன்னி லியோன் வருத்தம் //
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வச்சிருவீங்களோன்னு பயம் தான் அம்மணி!
------------------------------------------------------------------------------------------------------------
//மார்ச் 9ஆம் தேதி நியூஸ் : செல்போன் கதிர்வீச்சால் உடல் நலனுக்குப் பாதிப்பில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. //
//மார்ச் 28ஆம் தேதி நியூஸ் : பத்திரிக்கைகளில் இந்திய தொலைத்தொடர்புத் துறை விளம்பரம் - கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு வழிமுறைகள்//
என்ன தான்டா சொல்ல வர்றீங்க? ஆமாவா? இல்லையா?
கம்யூனிகேசனை டெவலப் பண்றதுக்குன்னு என்னென்னவோ சாட்டிலைட் அனுப்புறீங்களே, இந்த இழவெடுத்த இரண்டு துறைகளின் கம்யூனிகேசன் கேப்பைப் போக்க ஒரு சாட்டிலைட் அனுப்பக்கூடாதா?
மேலும் வாசிக்க... "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....4"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.