Friday, March 18, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...2



//சமந்தாவுக்கு நான் மட்டும் குறைச்சலா? பிகினி போட்டியில் குதித்த கமலா காமேஷ்//

ஆல்ரெடி முழுப் படமே ரிலீஸ் ஆகிடுச்சே..இப்போ எதுக்கு டீஸர் ரெடி பண்றாங்க?

-------------------------------------
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - ஒரு பார்வை:

பார்த்திபன் ஒரு நல்ல சீன் ரைட்டர். அதாவது, நல்லநல்ல சீன்ரைட்டர். அவர் படங்களில் எப்போதுமே தனித் தனிக் காட்சிகள் நன்றாக இருக்கும். வார்த்தை விளையாட்டுகளுடன் கூடிய வசனங்கள், கிண்டல் நிறைந்த ஹீரோ என ஒரு தனிப்பட்ட காட்சியை சுவாரஸ்யமாக ஆக்கிவிடுவதில் வல்லவர் அவர்.

அவரது இவன் படத்தில் நிறையக் காட்சிகளை அப்படி ரசிக்க முடியும். அப்படி பார்த்து ரசித்த காட்சிகளை ஒட்டுமொத்தமாகத் திரைக்கதையாகப் பார்க்கும்போது
ஏதோவொன்று குறைவது போல் இருக்கும். அந்த குறையை உணர்ந்தோ, என்னவோ ஒரு நான் -லீனியர், பின்னவீனத்துவ ஜிம்பலக்கடி ஜிம்பா வடிவில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இந்தப் படத்தில். உண்மையில் அதை ரசிக்க முடிகிறது.

ஒரு கதை விவாதம், அதில் விரியும் காட்சிகள், கதாநாயகனின் வாழ்க்கை என மூன்று அடுக்கில் கதை.போகும்போது, சட்டென்று படத்தின் இயக்குநரும் பார்த்திபனாகவே தோன்றி திகைப்பூட்டுகிறார். இந்த திரைக்கதை வடிவில் எல்லாக் காட்சிகளுமே துண்டு துண்டாக நின்றாலும், பிரச்சினையில்லை என்பதால், பார்த்திபன் புகுந்து விளையாடியிருக்கிறார். அந்த புரடியூசர் கதை சொல்லும் காட்சி தான் உண்மையான மரண மாஸ். அந்த நடிகரின் நடிப்பும், கேமிராக் கோணங்களும், பார்த்திபனின் வசனங்களும் இணைந்து பட்டையைக் கிளப்பிவிட்டன.

இந்தப் படம் செண்டரைத் தாண்டி கல்லா கட்டுகிறதா என்று தெரியவில்லை. படம் முழுக்க நிறைந்திருக்கும் நக்கலுக்கும், உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை தம்பி ராமையா கேரக்டர் மூலம் காட்டியதற்குமே படத்தைப் பார்க்கலாம். அப்புறம் திரைக்கதை மாணவர்களுக்கும் போகிற போக்கில், சில விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார். 
சிக்கலான திரைக்கதை வடிவம் என்றாலும், பார்ப்பவர் குழம்பிவிடாமல் கொண்டு சென்றிருப்பது தான் பார்த்திபனின் உண்மையான வெற்றி. அந்த வகையில், இந்தப் படத்தின் திரைக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. 

மொத்தத்தில்.....படத்தின் ஹீரோயினைப் போலவே படத்தையும் நச் என்றும் சொல்ல முடியவில்லை, டொச்சு என்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் பார்க்கிற மாதிரி இருக்கு, பாஸ்!

இன்று இருவேறு எல்லைகளில் இருந்து மதுவுக்கு எதிராக குரல் கிளம்பியிருக்கிறது. ஒன்று, ஜெயமோகனின் பதிவு, மற்றொன்று, விஜயகாந்தின் பேச்சு. 

மது விற்பனை தனியாரிடம் இருந்தபோது, என் அண்ணன் ஒருவர் ஏலத்தில் எடுத்து கடைகளையும் பார்களையும் நடத்தி வந்தார். ஒருநாளும் அவர் தன் ஊழியர்களுக்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நொடியும் மக்கள் நலனையே சிந்திக்கும் இந்த அரசு, அதைச் செய்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவனை விடவும் மோசமாக, அதிமுக மற்றும் திமுக அரசுகள் நடந்துகொள்கின்றன. 

மக்களை இருபெரும் கட்சிகளுமே கைவிட்டுவிட்ட சூழலில், மதுவுக்கு எதிரான எல்லாக் குரல்களையும் நாம் ஆதரிப்பதே நியாயம். அந்த வகையில் விஜயகாந்த்தைக் கிண்டல் செய்யாமல், வரவேற்போம். ஜெயமோகனுக்கும் எமது நன்றிகள்.

http://www.jeyamohan.in/?p=60704

எனது பழைய குமுறல்:

http://sengovi.blogspot.com/2011/03/blog-post_07.html

நல்லவேளையாக பார்த்திபன் தன் படத்தை அஞ்சானுடன் வெளியிட்டார். இல்லையென்றால், அந்தப் படத்தில் வரும் ஒரு காமெடி புரடியூசர் சொல்லும் கதை, அஞ்சான் கதையின் காப்பி அல்லது நக்கல் என்று சொல்லியிருப்பார்கள். பார்த்திபன் அந்த காமெடி சீனுக்கு எழுதியிருக்கும் அந்த நக்கல் கதைக்கும் லிங்குசாமியின் சீரியஸ் கதைக்கும் இடையே எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியலை..உங்களுக்குத் தெரியுதுங்களா?

பார்த்திபன்: என் கதைல வர்ற ஹீரோ ஒரு இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டர்ன்னா.....................அப்படி ஒரு இன்ஸ்பெக்டர்!

லிங்குசாமி: என் கதைல வர்ற ஹீரோ ஒரு தாதா...தாதான்னா..................அப்படி ஒரு தாதா.

பார்த்தி: அந்த ஊருல ஒரு வில்லன் இருந்தான்..அவனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு.

லிங்குசாமி: அந்த ஊருல ஒரு வில்லன் இருந்தான்..அவனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு.

பார்த்தி: அந்த பைட்ல என் ஹீரோ ஜெயிக்கிறான். ஆனால் அவனை வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபெர் பண்ணிடறாங்க.

லிங்கு: அந்த பைட்ல என் ஹீரோ ஜெயிக்கிறான். ஆனால் சந்த்ரு பாயை போட்டுடறாங்க

பார்த்தி: ரெண்டாவது ஊர்ல ஒரு வில்லன்..வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அவரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க.

லிங்கு: மும்பைல ஒரு துரோகி...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.

பார்த்தி: மூணாவது ஊர்ல ஒரு ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றார்.

லிங்கு: மும்பைல...ஒரு ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றார்.

பார்த்தி: நாலாவது ஊர்ல ஒரு வில்லன்..வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அவரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க.

லிங்கு: மும்பைல ஒரு துரோகி(No.2)...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.

பார்த்தி: அஞ்சாவது ஊர்ல................கிளைமாக்ஸ்ல படம் முடியுது.

லிங்கு: அதுக்குள்ளே ஆடியன்ஸை விட்டா எப்படி? அதனால

மும்பைல ஒரு துரோகி(No.3)...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.

மும்பைல வில்லனோட அடியாட்களுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அடியாட்களை ஹீரோ கொன்னுடறார்.

மும்பைல ஒரு மெயின் வில்லன்...வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். வில்லனை ஹீரோ கொன்னுடறார்.

கிளைமாக்ஸ்ல படத்தையும் ஆடியன்ஸையும் முடிக்கிறோம்!


// ஆண்மை சோதனை செய்ய ஏன் பயப்படுகிறீர்கள்? - நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி //

அவனை அன்னைக்கே பிடிச்சு அறுத்துப் போடறதை விட்டுட்டு, அது வேலை செய்யுதான்னு நோண்டிக்கிட்டு இருக்கீங்களே..ஜட்ஜ் ஐயா, நீங்க பெரிய பெரிய படிப்பு படிச்சதெல்லாம் இதுக்குத் தானா?

-------------------------------------------------
 
ஒரு வாரம் முன்னாடி என் தங்கமணியோட தோழி லோக்கல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க.

அண்ணா, தங்கமணி பர்த் டே என்னிக்கு?’ன்னு கேட்டாங்க.

நான் ரொம்பக் கேஷுவலாஅது இப்போ வராதே..ஆகஸ்ட் மாசம் தானே வரும்?’ன்னு கேட்டுட்டேன்.

..அப்படியா? ரைட்..ரைட்’-ன்னு சொன்னாங்க. அந்த ரைட், ரொம்ப ராங்காத் தெரிஞ்சதால காலண்டரைப் பார்த்தால்....ஆத்தீ...ஆகஸ்ட் வந்து ஆறு நாள் ஆச்சா?

ஹலோ..ஹலோ’-ன்னு நான் கதறக் கதற, போனை கட் பண்ணிட்டாங்க. அடுத்து ஒரு நிமிசம் தான். இந்தியால இருந்து போன் வருது.

தங்கமணி தான்.

யோவ், இதுவரைக்கும் பிறந்த தேதியைத் தான்யா மறப்பீரு..இப்போ பிறந்த மாசத்தையே மறக்க ஆரம்பிச்சுட்டீரா? இரும்யா..உம்மை வந்து...’

அய்யோ..அப்படி இல்லை தங்கம்..’ன்னு ஆரம்பிக்கவுமே, இந்த ஃபோனும் கட் ஆகிடுச்சு.

விவேக் சொன்ன மாதிரி, இந்த லேடீஸ் போன் வச்சிருக்கிறதே நம்மளை போட்டுக்கொடுக்கத் தான் போல..நல்லாயிருங்க தாயிகளா!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. ஹி!ஹி!!ஹீ!!!!...........பர்த் டே.......////என்ன கொடுமை சரவணன்,இது????????

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.