Tuesday, December 31, 2013

2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2013ம் ஆண்டு வெளியான படங்கள் பற்றிய அலசலில் கடைசிப்பதிவை, ஆண்டின் கடைசிநாளான இன்று பார்த்துவிடுவோம். ராஜா ராணி, எதிர்நீச்சல், இவன் வேற மாதிரி என்று சில படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், எல்லா சென்டர்களிலும் சூப்பர் ஹிட் ஆன படங்களின் லிஸ்ட் கீழே:
 
சூப்பர் ஹிட்#5: பாண்டிய நாடு:

தீபாவளி ரேஸில் மூன்றாவது அணியாய் களமிறங்கிய படம். ஒரு நல்ல தரமான ஆக்சன் மூவியாக இருந்ததால், விஷாலுக்கு உண்மையான ஹிட்டாக அமைந்தது. படம் வெளிவரும் முன்பே கலாய்ச்சிஃபை பாடல் ஹிட்டாகி, படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
 
ஓவர் பில்டப் இல்லாத ஹீரோயிசம், பழிவாங்க முயலும் அப்பா கேரக்டர், அதில் பாரதிராஜாவின் நடிப்பு, பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர் என எல்லா விஷயங்களுமே அருமையாக அமைந்த படம். சுசீந்திரனின் 'நான் மகான் அல்ல' சாயல் இருந்தாலும், உதவியாளர் கதையை சுட்டுவிட்டதாக புகார் கிளம்பினாலும், விஷால் ஹாப்பி அண்ணாச்சி!
 
சூப்பர் ஹிட்#4: சிங்கம்-2:
 
தமிழ்சினிமாவில் பார்ட்-1, பார்ட்-2 என சீரீஸ் படங்கள் வெற்றி பெறாது எனும் சென்ட்டிமென்ட்டை அடித்து நொறுக்கிய படம். முதல் பாகத்தைவிட, அதிக விறுவிறுப்பான படம். ஹரியின் மசாலா ட் ரீட் என்பதால், எல்லா ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்பியது சிங்கம்-2.
 
முதல் பாகத்தை புத்திசாலித்தனமாக, உறுத்தாமல் இதில் இணைத்தது, அந்த ஆப்பிரிக்க வில்லன் கேரக்டர், சிங்கம் போன்றே சூர்யாவை தாவி ஓட வைத்து புது எஃபக்ட்டைப் பார்ப்போருக்கு கொடுத்தது என ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களுடன் எடுத்திருந்தார்கள். பாடல்கள்தான் முதல் பாகம் அளவிற்கு இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சூர்யாவை தலை நிமிர வைத்த படம்.

சூப்பர் ஹிட் # 3: ஆரம்பம்
 
ஆவரேஜாக இருந்தாலே போதும், மாஸ் ஹீரோக்களின் படம் தப்பிவிடும் என்று நிரூபித்த படம். பில்லா-2 இயக்கியிருக்க வேண்டிய விஷ்ணுவர்த்தன், அதிலிருந்து விலகிக்கொண்டு இந்த படத்திற்கான கதையை ரெடி பண்ணினார். ஹேமந்த் கர்கரேவின் கதையை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பதை அண்ணன் உண்மைத்தமிழன் கண்டுபிடித்துச் சொன்னார். படத்தில் ஸ்ட் ராங்கான அரசியல் இருந்தும், எந்த பிரச்சினையும் இல்லாமல் கமுக்கமாக வெளியான படம். பாம்பாகவே இருந்தாலும், இது மாதிரி பரமசிவன் கழுத்தில் இருக்க வேண்டும்!
 
ஸ்டைலிஷான மேக்கிங், அஜித்தின் ஹாலிவுட் ஹீரோ லுக், வயதுக்குப் பொருத்தமான கேரக்டர், ஜோடி இல்லாத ஹீரோ கேரக்டர், ஆர்யாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என பல பாசிடிவ் விஷயங்கள் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின. லாஜிக் பற்றி இயக்குநர் அதிகம் அலட்டிக்கொள்ளாதது தான் படத்தின் குறை. அஜித் எனும் மேஜிக்கினால் அந்த குறையும் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

சூப்பர் ஹிட் #2 : விஸ்வரூபம்

தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய படம். அரசியல் காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தடுக்கப்பட, கமல் சாமர்த்தியமாக அதை மீடியாவிடம் கொண்டு சென்றார். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை அதன்மூலம் வென்றார். வழக்கமாக கமல் படம் பார்க்காதவர்கூட, இந்தப்படத்தை பார்த்தே தீருவது என்று களமிறங்கினார்கள். விளைவு, படம் சூப்பர் டூப்பர்ஹிட்.
 
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் கமலின் பங்களிப்பை மறுக்க முடியாது. இதிலும் ஹாலிவுட் தரத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். குறிப்பாக ஆப்கான் காட்சிகளும், விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் கமலின் திறமையை பறைசாற்றின. படம் இரு பாகங்களாக பிரிக்கப்பட்டதால், பல கேள்விகளுக்கும் விடை இல்லாமல் படம் முடிந்தது. கிளைமாக்ஸே இல்லாமல் தமிழில் வந்த படம் என்றும் சொல்லலாம். 24 அமைப்புகள் மட்டும் கமலுக்கு "ஆதரவாக" களம் இறங்கியிருக்கவில்லை என்றால், வசூல்ரீதியாக படம் இந்தளவுக்கு வெற்றி அடைந்திருக்காது. அடுத்த பாகத்திற்கும் இதே மாதிரி பொங்கி, கமலுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வோம்.

சூப்பர் ஹிட் #1: சூது கவ்வும்
 
இந்த வருடத்தின் ஆச்சரியங்களில் ஒன்று இந்தப் படம். வித்தியாசமான கான்செப்ட்டில் வெளியாகி, கமர்சியலாகவும் வெற்றி பெற்றது தான் ஆச்சரியத்திற்குக் காரணம். பொதுவாக இத்தகைய படங்கள் இணையத்திலும், ஏ சென்டர்லும் மட்டுமே வெற்றியடையும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக சூப்பர் ஹிட்டான நுவோ நுஆர்  படமாக சூது கவ்வும் அமைந்தது. இறுதியில் தீமையே வெல்லும் என்பதுபோல் காட்டியது ஒன்று தான் படத்தின் குறை.
 
விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பு, அவர் சொல்லும் கொள்கைகள், மாய ஹீரோயின் கேரக்டர், மந்திரி மகனே கடத்தலுக்கு உதவும் ட்விஸ்ட், அந்த பேசாத இன்ஸ்பெக்டர் கேரக்டர், முக்கியமாக அந்த கிளைமாக்ஸ் டுமீல் என படத்தில் பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு சீனிலும், கேரக்டர்களிலும் பெர்பெக்சனை மெயின்டெய்ன் செய்திருந்தார்கள். தரத்தையும் பொழுதுபோக்கு அம்சன்களையும் ஒன்றுபோல் மெயின்டெய்ன் செய்துகொண்டு, திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக அமைந்ததால், நம்மைப் பொறுத்தவரை இவ்வாண்டின் நம்பர் ஒன் மூவி சூது கவ்வும் தான்.
 
மேலும் வாசிக்க... "2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 29, 2013

2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் திடீரென ஒரு ட்ரென்ட் ஸ்டார்ட் ஆகி, அதே ஜெனரில் படங்களாக வந்து குவியும். அந்தவகையில், இந்த ஆண்டு காமெடிப்படங்கள் வரிசைகட்டி வந்தன. ஜனவரியில் வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தது. 'காமெடிப்படம் தான் ஓடுது' என்று நல்ல படைப்பாளிகளே சலித்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது. நல்லவேளையாக தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற மொக்கைப் படங்களால், இந்த ட்ரென்ட் ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது இந்த ஆன்ட்டின் டாப் 5 காமெடிப்படங்களைப் பார்ப்போம் வாருங்கள்.

டாப் 5 : கேடி பில்லா கில்லாடி ரங்கா
 பசங்க, வம்சம், மெரீனா போன்ற தரமான படங்களைக் கொடுத்த பாண்டிராஜ், இனி இப்படி இருந்தால் பொழைக்க முடியாது என்று உணர்ந்து இறங்கி அடித்த படம். மிகவும் சுமாரான மேக்கிங்குடன் 'கந்தா கடம்பா கதிர்வேலா' ரேஞ்சில் எடுக்கப்பட்ட படம்.
 
ஆனாலும் பாக்ஸ்  ஆபீஸில் படம் பட்டையைக் கிளப்பியது. சிவ கார்த்திகேயனின் டைமிங் காமெடியும், பிந்து மாதவியும், கிளைமாக்ஸில் வந்த உருக்கமான காட்சியும் படத்தைக் காப்பாற்றியது எனலாம். அதிசயமாக இதில் சூரியின் நகைச்சுவையை ரசிக்க முடிந்தது.
 
டாப் 4 : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
விஜய் சேதுபதி கொடுத்த இரன்டாவது ஹிட் இந்தப் படம். முதல்பாதியில் வந்த அஸ்வின் சமந்தப்பட்ட காட்சிகள் நம் பொறுமையைச் சோதித்தாலும், விஜய் சேதுபதி ப்ளாஷ்பேக் சொல்லும் காட்சிகளும், இரன்டாம்பாதியிலும் கிளைமாக்ஸிலும் வந்த காமெடிக்காட்சிகளால் படம் தப்பித்தது.
 
வெறுமனே காமெடிப்படம் என்று ஒதுக்க முடியாதபடி, மதுவுக்கு எதிராக தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது இந்தப் படம். ரொம்ப நாளைக்குப்பிறகு பசுபதி என்ற மகாநடிகனுக்கு நல்ல தீனி போட்ட படம். நாயே..நாயே போன்ற வித்தியாசமான பாடல்களும் நம் மனதைக் கவர்ந்தன.
 
டாப் 3: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
 
சிவகார்த்திகேயனை ஸ்டார் நடிகராக உயர்த்திய படம்.  'உங்க அக்கா அழகாயிருப்பாளா?'போன்ற சிவகார்த்திகேயனின் டைமிங் பஞ்ச்களுடன் கலக்கிய படம். வடிவேலு சொன்ன 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா' டயலாக்கை உண்மையாக்குவதுபோல் புதுமுகம் ஸ்ரீதிவ்யா அறிமுகம் ஆனதாக ஒரு பேஸ்புக் நண்பர்(பேர் மறந்துடுச்சு) எழுதியிருந்தார்.
 
பொதுவாக தாவணியே 50% அழகைக் கொடுத்துவிடும். சதா என்ற சாதா நடிகையும் ஜெயம்மில் நம்மை ஏமாற்றியிருக்கிறார். எனவே ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தில்தான் தெரியும் அம்மணி எப்படியென்று.ஆனாலும் இந்த ஆண்டு ஏக வரவேற்புப் பெற்ற அறிமுகநாயகி என்று ஸ்ரீதிவ்யாவைச் சொல்லலாம்.
 
சத்தியராஜ் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட படம். சூப்பர் ஹிட்டான அட்டகாசமான பாடல்களுடன், ராஜேஷின் காமெடி டயலாக்களும் சேர படம் சூப்பர் ஹிட்.
 
டாப் 2: கண்ணா லட்டு தின்ன ஆசையா?
 
திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா-வின் ரீமேக்காக வந்த படம். வருட ஆரம்பத்திலேயே சூப்பர் ஹிட் ஆகி, சந்தானத்தை இந்த ஆண்டின் பிஸியான/பெஸ்ட் காமெடியனாக ஆக்கியது. ஆல் இன் ஆல் புண்ணியத்தில் இந்த ஆண்டின் ஒர்ஸ்ட் காமெடியனாகவும் அவர் ஆனது துரதிர்ஷ்டமே.
 
இயல்பிலேயே காமெடியான முகபாவம் கொண்ட பவர் ஸ்டாருக்கு ஒரு ரியல் ஹிட் இந்தப் படம். ஆனாலும் மனிதர்க்கு நடிப்பு தான் வரவில்லை. எனவே அடுத்து அவர் நடித்த எந்த படத்திலும்,அவரது நகைச்சுவை எடுபடவிம் இல்லை. ஒரிஜினலை சீன் பை சீன் அப்படியே எடுக்காமல்,  கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு காமெடியில் விளையாடியிருந்தார்கள். எனவே ஒரிஜினலில் இருந்த டச்சிங் மிஸ் ஆனாலும், படம் ஹிட் ஆனது.
 
டாப்1: தீயா வேலை செய்யணும் குமாரு!
கடந்த 18 வருடங்களாகவே காமெடிப்படம் எடுப்பதில் கிங்காக இருந்துவரும் சுந்தர்.சி, தனது 25வது படமான கலகலப்பு எனும் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து கொடுத்த படம். கவுண்டமணிக்கு உள்ளத்தை அள்ளித்தாவையும், வடிவேலுவுக்கு வின்னரையும் கொடுத்தவர், சந்தானத்திற்கு கொடுத்த ஹிட் 'தீயா வேலைசெய்யணும் குமாரு'. இடையில் நடிக்கப்போய் வழிதவறினாலும், காலத்திற்கு ஏற்றாற்போன்று தன்னை புதுப்பித்துக்கொண்டு இந்தப் படத்தில் கலக்கினார் சுந்தர்.சி
 
படத்தின் ஹீரோ என்றால் அது சந்தானம் தான். 'சம்பந்தி தான் அந்த அட்டு பிகரா?' என்று கேட்குமிடத்தில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. படம் முழுக்கவே செமயான பெர்ஃபார்மன்ஸ். ஆச்சரியமாக ஹன்சிகாவிற்கு நடிக்கத் தெரியும் என்று நிரூபித்த படம். வழக்கமான இஹி..இஹித்தனமில்லாமல், ஹன்சி நன்றாகவே நடித்திருந்தார்.
 
காமெடிப்படம் என்றாலும் மேக்கிங்கிலும் தரத்திலும் நம்மை அசத்தியதால், நம்பர் ஒன் இடம் இந்தப் படத்திற்கே! (சூது கவ்வும் இதைவிட பெட்டர்..ஆனால் அது அடுத்த பதிவான சூப்பர் ஹிட் பட வரிசையில் வரும்..அடுத்த பதிவோட2013க்கு கும்பிடு போட்டுடலாம்..டோன்ட் ஒர்ரி!)
 
 
மேலும் வாசிக்க... "2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 20, 2013

பிரியாணி- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
'பிரியாணியை விட ஆல் இன் ஆல் அழகுராஜா நன்றாக வந்திருப்பதால், அதை முதலில்விட முடிவு செய்திருக்கிறார்கள்’ என்று ஒரு செய்தி அழகுராஜா ரிலீஸ் ஆகும் முன்பு மீடியாவில் வந்தது. அதைப் படித்த பின்னும், பிரியாணியை முதல் ஷோ பார்க்க நெஞ்சுரத்துடன் போனேன் என்றால் அது ஹன்சிகாவுக்காகவா? நோ..! உங்களுக்காக மக்களே, உங்களுக்காக!

ஒரு ஊர்ல..:
பெரிய பிசினஸ்மேன் நாசர் காணாமல் போகிறார். (உண்மையில் கொலை செய்யப்படுறார்.) கடத்துன பழி கார்த்தி & பிரேம்ஜி மேல விழுகிறது. அதில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதே கதை.

உரிச்சா....:

படத்தோட ஆரம்பக்காட்சிகள் வெங்கட் பிரபுவின் மத்த படங்கள் மாதிரியே குடி-கூத்திகளோட போகிறது. பார்க்கிற பெண்களை எல்லாம் ரூட் விடும் பிளேபாயாக கார்த்தியும் இன்னும் கன்னிப் பையனாகவே இருக்கும் பிரேம்ஜியும் செய்யும் சில கூத்துகளோடு முதல் அரைமணி நேரம் நகர்கிறது. நாசர் வந்த பிறகு தான் கதை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் முதல் அரைமணியிலேயே கதைக்குத் தேவையான முக்கியமான சம்பவங்கள் நடந்திருப்பதை இரண்டாம்பாதியில் சஸ்பென்ஸ் உடையும்போதுதான் புரிந்து கொள்கிறோம். 

பிளே பாய் ஹீரோ என்று செய்திகளில் படித்தபோது ‘இது எங்க உருப்படப்போகுது’ என்று தான் நம் மனதில் தோன்றியது. ஆனால் ஏற்கனவே காதலியாக இருக்கும் ஹன்சிகாவிடம் நல்லபிள்ளை இமேஜை மெயிண்டெய்ன் செய்துகொண்டே கார்த்தி ஜொள்ளுவதும், மாட்டிக்கொண்டால் பிரேம்ஜி மேல் பழியைப் போடுவதுமாக ஜாலியாகவே சொல்லியிருக்கிறார்கள். மேலும் கதைக்கு அந்த பிளே பாய் கேரக்டர் தேவை என்பதால், நோ ஸ்டொமக் பர்னிங்!
இரண்டாம்பாதியில் போலீஸ் துரத்த, அக்காவையும் வில்லன் குரூப் கடத்திக்கொண்டு போய்விட, நாசரின் பிணத்துடன் கார்த்தி ஓடுவதால் படம் வேகமாகவே நகர்கிறது. எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமை. அதை இடையில் சம்பத் வசனத்தில் சொல்வதை தவிர்த்திருக்கலாம். முதல்பாதியில் சகஜமாக வந்த அந்த கடத்தல் காட்சியே போதுமானது.

மங்காத்தா பாணியில் முதல்பாதி முழுக்க நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் முடிச்சுகள் விழுந்துகொண்டே இருப்பதால், கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கிறது. போலீஸ் துரத்த ஆரம்பித்த பின்பே, படம் வேகம் எடுக்கிறது. அடுத்து உமா ரியாஸ் கேரக்டர் வந்ததும், செம ஸ்பீடு.  பே கில்லர் வேடத்தில் ஆண்களையே பார்த்துச் சலித்த நமக்கு, உமா ரியாஸ் கேரக்டரும், கார்த்தியுடன் அவர் போடும் ஃபைட்டும் பெரிய மாறுதல். மௌன குரு படத்திற்குப் பிறகு இதில் உமா ரியாஸ்க்கு நல்ல ரோல். பின்னி இருக்கிறார்.

நாசரின் மருமகனாக ராம்கி வருகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் மனிதரின் ரீ-எண்ட்ரி. நன்றாகவே நடித்திருக்கிறார். கார்த்தியுடன் ஃபைட் பண்ணும்போது, பழைய ராம்கியை பார்க்க முடிந்தது. ஜெயப்பிரகாஷ் ஒரு அற்புதமான நடிகர். இதில் அல்லக்கையாக வேஸ்ட் செய்துவிட்டார்கள். சம்பத் நிலைமையும் அப்படியே!

ஸ்லோவான முதல்பாதி + மெதுவாக சூடு பிடிக்கும் இரண்டாம்பாது + விறுவிறுப்பான கடைசி அரைமணி நேரம் என்று படம் போவதால், மொக்கை என்றோ சூப்பர் என்றோ ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாத நிலை.

கார்த்தி:
ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோவின் வரலாறும் ஒரு காரணமாகவே இருக்கிறது. சகுனிக்கு முன்புவரை கார்த்திக்கு நல்ல பெயர் இருந்தது. சகுனியின் ஆரம்பித்த சரிவு, அலெக்ஸ் பாண்டியனில் ஆழமாகி, ஆல் இன் ஆல் அழகுராவில் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இப்போது கார்த்தியின் படங்களை சந்தேகக்கண்ணோட்டத்துடனே எல்லோரும் பார்க்கும் அவலநிலை. கார்த்தி இஸ் அண்டர் டெஸ்ட் நவ்! 

தொடர்ந்து ஹிட் கொடுத்த நேரத்தில் வந்திருந்தால், இந்தப் படம்  தப்பியிருக்கலாம். விஷால் மாதிரியே கார்த்திக்கும் வந்திருப்பது பெரும் வீழ்ச்சி. பாண்டிய நாடு மூலம் விஷால் உஷார் ஆனது போல், கார்த்தியும் ஆக வேண்டியது கட்டாயம். வழக்கம்போல் நடிப்பிலும், காமெடியிலும், ஆக்சனிலும் கார்த்தி இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். இந்த டான்ஸ் தான் வர மாட்டேங்குது. 

ஹன்சிகா:
கதைப்படியே இது ஒரு துணைக் கேரக்டர் தான்.  பாடல்களுக்கு ஆடுவது, ஹீரோவுடன் ஊடல் கொள்வது, பின்பாதியில் ஹீரோவைக் காப்பாற்ற தன் மீடியா பவரை யூஸ் பண்ணுவது என கொடுத்த வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார். சோக சீன், கண்ணீரைப் பிதுக்கி விடுவது போன்ற வேலைகள் எல்லாம் இல்லாதது நமக்கு ஆறுதல். இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறது. கார்த்தியை கொலைக்கேஸில் மாட்டி விடுவது அந்த ஹீரோயின் தான். பெயர் மாண்டி தாக்கர்..பிடிங்க ஸ்டில்லை...

பிரேம்ஜி:
இவரை காமெடியன் என்று வெங்கட் பிரபு எதை வைத்து கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. முதல் படத்தில் இருந்து ஒரே மாதிரி டயலாக்ஸ் பேசிக்கொண்டு இவர் காலம் போகிறது. ஆனால் கதைப்படி அல்லது இயக்குநரின் விருப்பப்படி ஹீரோவுடன் படம் முழுக்க வரும் கேரக்டர். ஏதாவது ஃபிகரை தேத்த இவர் நினைப்பதும், கார்த்திக்கே அது செட்டாவதும் சுமார் காமெடி தான். 

அதைவிட கார்த்தி தான் செய்த தப்பையெல்லாம் பிரேம்ஜி செய்வதாக மாட்டிவிடுவதும், ஹன்சிகா பிரேம்ஜியை பின்னி எடுப்பதும் அருமை. பாத்ரூமில் ஒரு ஃபிகருடன் இருக்கும் கார்த்தியைக் காப்பாற்ற, அதே பாத்ரூமுக்குள் போக நினைக்கும் ஹன்சிகாவைத் தடுக்க இவர் பேசும் டயலாக்ஸ் அட்டகாசம். 

யுவன் ஷங்கர் ராஜா:

யுவனிற்கு இது நூறாவது படமாம். வாழ்த்துகள். வெங்கட் பிரபு படம் என்றாலே ஸ்பெஷல் மியூசிக் தான். இதிலும் அப்படியே. வழக்கமான பல்லவி-சரணம் என்று போகாமல், சரணத்தில் புதிதாக சில விஷயங்களை ட்ரை பண்ணி இருக்கிறார். முதல் தடவை கேட்கும்போது ஒரு மாதிரி இருந்தாலும், படத்தில் பார்க்க நன்றாகவே இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- கார்த்தியின் முந்தைய மொக்கைப்படங்கள்.
- ஸ்லோவான முதல்பாதி திரைக்கதை. முதல் பாயிண்ட்டின் காரணமாக, அய்யய்யோ சிக்கிட்டமா எனும் ஃபீல் வருவதை தடுக்க முடியவில்லை.
- நாசர் வேடத்தில் பிரேம்ஜி வரும் அரதப்பழசான ஐடியா. (அதில் நாசர் பிரேம்ஜியின் பாடி லாங்குவேஜுடன் நடித்திருப்பது சூப்பர்.)\
- சப்பையான சிபிஐ கேரக்டரைசேசன்....சம்பத் ’அந்த’ லவ் மேட்டரை விசாரிக்காமல் இருப்பதில் லாஜிக் இல்லை. (இன்னொரு விஷயம்..படத்தில் கமிசனராக வரும் ஜெயப்பிரகாஷின் பெயர் சம்பத்..சிபிஐ ஆபீசராக வருபவரின் உண்மைப்பெயரும் சம்பத்..இது படம் பார்க்கும்போதே டிஸ்டர்ப் செய்தது. இதை அவாய்ட் பண்ணுங்க பாஸ்!)
- தேவையில்லாத சீனிலும் குடித்துக் கொண்டே திரிவது. படத்திற்கு யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தது சரி தான்.
- மொக்கையான டான்ஸ்
- அந்த குஜிலியின் கில்மா பாட்டை கட் செய்தது.(இது குவைத் சோகக்கதை பாஸ்..நீங்க எஞ்சாய் பண்ணுங்க!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் செய்த திரைக்கதை. 
- உமா ரியாஸ் கேரக்டர்
- ஃபைட் சீன்ஸ்
- பரபரப்பான கிளைமாக்ஸ்.
- ஹி..ஹி..ஹன்சிகா 

பார்க்கலாமா? :
இது வெங்கட் பிரபுவின் மங்காத்தா அல்ல..சரோஜா. உங்களுக்கு சரோஜா பிடிக்கும்னா.................சாமான் நிக்காலோ!


மேலும் வாசிக்க... "பிரியாணி- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, December 16, 2013

2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள்

சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகும் அம்சங்களை கதையிலோ மேக்கிங்கிலோ கொண்டிருக்கும். ஆனாலும் வெற்றி என்பது ஜஸ்ட் மிஸ் ஆகிவிடும். அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி, வெற்றியை கோட்டை விட்ட டாப் 5 படங்கள் பற்றிப் பார்ப்போம்.

மிஸ் # 5: குட்டிப்புலி

தென்மாவட்ட குலதெய்வங்களைப் பற்றிச் சொல்ல வந்த படம். சில குலதெய்வங்களுக்கு வித்தியாசமான ஒரு கதை இருக்கும். அவர்கள் அந்த குலத்திற்கோ, குடும்பத்திற்கோ நன்மை செய்வதற்காக தன் உயிரை மாய்த்திருப்பார்கள், சிலநேரங்களில் மானம் காக்க உயிரை விட்டிருப்பார்கள். அந்த மாதிரி குலதெய்வம் ஆன இரு பெண்களைப் பற்றிப் பேச வந்த படம்.

ஆனால் சசிகுமாரை மையப்படுத்தியே படம் நகர்ந்ததால், சசிகுமாரை பி&சி செண்டரில் நிலைநிறுத்த சில டகால்ட்டி வேலைகளைச் செய்ததால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது. சசிக்குமாரிடம் எப்போதும் இயல்பான நடிப்புத்திறமை உண்டு. ஆனால் இதில் அவர் கிராமத்து ஹீரோயிசத்தில் இறங்கியதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. கும்கியில் நம் மனம் கவர்ந்த லட்சுமி மேனன், மூன்றாவது படமான இதிலேயே சாதாரண ஃபிகராக மாறிப்போன சோகமும் அரங்கேறியது. அதீத வன்முறை, ஓவர் பில்டப் ஹீரோயிசம், மெயின் கேரக்டர்களான அம்மாமாரை ஓரம் கட்டியது போன்ற காரணங்களால் நமக்கு முழு திருப்தி இல்லாமல் போனது. ஆனாலும் சசிக்குமாருக்கு இருந்த ஓப்பனிங்கால் நஷ்டமின்றி படம் தப்பித்தது. இதே பாதையில் போனால் சசிக்குமாரை அவரது குலதெய்வத்தால்கூட காப்பாற்ற முடியாது என்பது நிச்சயம்.

மிஸ் # 4: சேட்டை
Real Miss # 1
ஹிந்தியில் வெற்றி பெற்ற டெல்லி பெல்லியின் தமிழாக்கம். தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுப்பதாக இயக்குநர் ஷூட்டிங்கின்போது சொல்லியிருந்தார். ஹிந்தி ஒரிஜினலைப் பார்த்தவன் என்பதால், நல்ல செக்ஸுவல் காமெடிப்படமாக, நியூ போன்று வரும் என்று நம்பியிருந்தேன். டூ பீஸ் ட்ரெஸ்ஸே சாதாரணமாகிவிட்ட பாலிவுட்டுக்கும் நம் கோலிவுட்டுக்கும் ரசனையில் நிறையவே வித்தியாசம் உண்டு. நம் மக்களுக்கு பப்பரப்பா என்று வந்தால் புஸ்ஸ் ஆகிவிடும். இலைமறை காயாக இருப்பதில் தான் கிக் அதிகம் என்று நம்பும் அப்பாவிகள் நம் மக்கள். 

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அணுகுண்டு ரேஞ்சுக்கு அப்படியே ஹிந்தியில் இருந்து ரீமேக்கியிருந்தார்கள். நம் மக்களுக்கு அது ஓவரோ ஓவர் டோஸ். நம்மை மாதிரி யோக்கியர்களே ‘அடப்பாவிகளா..இப்படியாடா பப்ளிக்கா எடுப்பீங்க’ என்று பதறும் அளவுக்கு காட்சிகள் இருந்தது தான் படத்தை காலி செய்தது. ஆனாலும் நாசர் துணியை விரித்து, தூசு இல்லாமல் ஊதிவிட்டு, அதை ஊற்றும் காட்சியில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. தொடர்ந்து சந்தானம் படம் முழுக்க, கக்கா போனதில் தான் நம் ஆட்கள் டர்ர் ஆகிப்போனார்கள். ஹோட்டல் அறையில் அஞ்சலி செய்த அந்த ஆக்டிங்கை ரசிக்க, நம் தமிழ்ச்சமூகத்திற்கு இன்னும் ஐம்பது வருசம் தேவைப்படலாம். கொஞ்சம் ஆபாசத்தையும் நாற்றத்தையும் கண்ட்ரோல் செய்திருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது.

மிஸ் # 3: வத்திக்குச்சி

ஒரு ஹீரோ..அவனைக் கொல்ல முயலும் மூன்று வில்லன் கும்பல் என பரபரவென ஆரம்பித்த படம். செம ஸ்டைலான மேக்கிங்கில் புது இயக்குநர் கின்ஸ்லின் அசத்தியிருந்தார். அஞ்சலியின் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கிளாஸ் காமெடியும் அலட்டலான நடிப்பும் நம் மனதைக் கவர்ந்தன. ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். ஆனால்..

படத்தின் முதல் குறை ஹீரோவாக நடித்த மனிதர் தான். ஹீரோவுக்கான முகவெட்டு இல்லாததுகூடப் பர்வாயில்லை, நடிப்பு என்பதே சுத்தமாக் வரவில்லை. முருகதாஸ் தம்பி என்று அறிமுகப்படுத்தினார்கள். பாவம் இயக்குநர் கின்ஸ்லின்..மனதிற்குள் எப்படியெல்லாம் திட்டினாரோ! படத்தில் இருந்த லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும், ஹீரோ பெரிதாக ஏதோ செய்கிறார் என்று நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, இட்லி சாப்பிட்டு ஹீரோ ஃபைட் செய்யும் கிளைமாக்ஸ் தான் படத்தை பப்படம் ஆக்கியது. ஒரு நல்ல கதை இப்படி வீணாகிவிட்டதே என்று படம் பார்த்து பலநாட்களுக்கு வருத்தமாக இருந்தது. கின்ஸ்லின் அடுத்த படம் செய்கிறாரா என்று தெரியவில்லை. நல்ல நடிகர் அமைந்தால், தன்னை அதில் நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.

மிஸ் # 2: சமர்

தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்த விஷாலின் படம் தானே என்று சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்த படம். ஆனால் காட்சிக்குக் காட்சி சஸ்பென்ஸை ஏற்றி, மிரட்டினார்கள். இயக்குநர் ஆங்கிலப்படங்களை அதிகம் பார்ப்பவர் போலிருக்கிறது. நல்ல ஸ்டைலிஷான மேக்கிங். ஆங்கிலப்பட ஸ்டைலில் காட்சிகள், ஹீரோவைப் போலவே நமக்கும் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ். அடடா..சூப்பர் படம் என்று நாம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போன நேரத்தில், சப்பையாக ஒரு கிளைமேக்ஸ். 

முடிச்சு மேல் முடிச்சாக போட்டு சுவாரஸ்யத்தை ஏற்றியவர்கள், எப்படி முடிச்சை அவிழ்ப்பது என்று தெரியாமல் ஏனோதானோவென்று சஸ்பென்சை உடைத்திருப்பார்கள். (அதற்குத் தான் முடிச்சை அவிழ்க்க, ஆங்கிலப்படங்களை மட்டும் பார்த்தால் போதாது, நம் மல்லுப்படங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்வது!).  படத்தில் இன்னொரு அதிசயம், கமலா காமேஸின் பெர்ஃபார்மன்ஸ். தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்திருந்தார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில்கூட இப்படி ஒரு நடிப்பை நாம் பார்க்கவில்லை. ஏற்கனவே விஷாலின் முந்தைய தோல்விப்படங்களின் எஃபக்ட்டும் சேர்ந்து, இந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆகாமல் தடுத்துவிட்டது தான் சோகம்.

மிஸ் # 1: 555

தமிழ் சினிமாவில் வந்த நல்ல த்ரில்லர்களில் ஒன்று 555. ஏற்கனவே பூ போன்ற தரமான படங்களைக் கொடுத்து, நம் மனதில் இடம்பிடித்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வந்த படம் இது. நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் திரைக்கதையில் கலக்கியிருந்தார். சந்தானம் குணச்சித்திர வேடத்திற்கும் பொருந்திப்போவார் என்று நமக்கு உணர்த்திய படம். ஹீரோ-ஹீரோயினின் காதல் காட்சிகள், செம ஜாலியாக இருந்தது. பரத் இந்த படத்திற்காக தன் உடலையே உருமாற்றி 6 பேக்குடன் வந்தார்.

எல்லாம் சரியாக இருந்தும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. முந்தைய பரத் படங்களைப் போன்றே இதுவும் இருக்கும் என்று மக்கள் நினைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. மற்ற இயக்குநர்கள் அளவிற்கு தடால் புடால் என்று பேசி, மீடியா வெளிச்சத்திலேயே வலம் வரும் நபரல்ல சசி. சில இயக்குநர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பத்தைப் பார்த்தால், அவர்களது குப்பைப் படத்தைக்கூட குறை சொல்ல பயமாயிருக்கிறது. அறிவுக்கொழுந்துகள் பாய்ந்து வந்து பிராண்டுகிறார்கள். ஆனால் தமிழில் உள்ள நல்ல இயக்குநர்களில் ஒருவரான சசியைக் காப்பாற்ற இங்கே ஆளில்லை. ‘தமிழன் ஒரு மடையன்..இங்கே எவனுக்கும் படம் பார்க்கத் தெரியாது..என்னை ஜப்பான்ல கூப்ட்டாங்கோ’ ரேஞ்சில் அள்ளி விட்டால்தான் இங்கே பிழைக்க முடியும்போல் உள்ளது. 

சசி எடுத்த ஐந்து படங்களுமே வெவ்வேறு ஜெனர்களைச் சேர்ந்தவை. ஆனால் அத்தனை படங்களையும் மனிதர் பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருப்பார். அவரது இந்த நல்ல படமும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போனது, தமிழ் சினிமாவிற்குத் தான் இழப்பு.

மேலும் வாசிக்க... "2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
முதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி.

ஒரு ஊர்ல..:
சென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே கதை.

உரிச்சா....:
படத்தின் முதல் காட்சியே சட்டக்கல்லூரி கலவரம் தான். போலீஸ் வேடிக்கை பார்த்தது முதற்கொண்டு அப்படியே தத்ரூபமாக நடந்ததை மீண்டும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் படம் நுழைவதே நமக்கு ஆச்சரியமாக இருக்க்கிறது. தொடர்ந்து அமைச்சருக்கு ஒரு ரவுடி தம்பி, ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் வந்திருப்பவன். அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பது அமைச்சர். எனவே அமைச்சரின் தம்பியை கடத்தி, மீதமிருக்கும் ஆறுநாள் உள்ளே வைத்தால், சட்ட அமைச்சர் உள்ளே போவார். பதவியும் பறிபோகும் என்று பிளான் பண்ணித் தூக்குகிறார் விக்ரம் பிரபு. 

கொஞ்சம் அசந்தாலும் ஷங்கர் படம் மாதிரி ஆகிவிடும் அபாயம் உள்ள கதை. ஆனால் வித்தியாசமான திரைக்கதை மற்றும் சம்பவங்களால் முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார் எம்.சரவணன். ஒரு பக்கம் ஆக்சன் காட்சிகள் நகர, இன்னொரு பக்கம் ஹீரோயின் உடனான காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர்கள் முதல் சந்திப்பில் ஆரம்பித்து, தற்செயலாக மீண்டும் பஸ்ஸில் சந்திப்பது, பஸ்ஸில் விக்ரம் பிரபு தரும் மீன்களை ஹீரோயின் வளப்பது என ‘எங்கேயும் எப்போதும்’ அனன்யா போர்சன் மாதிரியே இதிலேயும் இளமை துள்ளும் ஒரு காதல் கதை. இதுவரை வராத காதல் காட்சிகளாக இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனாலும் எங்கேயும் எப்போதும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இண்டர்வெல்லில் அமைச்சருக்கு பதவி போக, அமைச்சரின் தம்பி திரும்பி வருகிறார். இரண்டாம்பாதியில் வில்லன் கோஷ்டியின் திருப்பி அடிக்கும் படலம் ஆரம்பமாகிறது. கூடவே நம்மை சீட்டின் நுனிக்குத்தள்ளும் ஆக்சன் காட்சிகளும். எப்பா...ரொம்ப நாளாகிவிட்டது, இப்படி ஒரு பரபர கிளைமாக்ஸ் பார்த்து. பிரித்து மேய்ந்துவிட்டார்கள். பஞ்ச் டயலாக், வெட்டி சவால் என்றெல்லாம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாகவே த்ரில்லைக் கூட்டியிருக்கிறார்கள். ஒரு பில்டிங்கில் ஹீரோயினை ஒளித்து வைக்கும் அந்த டெக்னிக்கிற்கு ஒரு சல்யூட். சஸ்பென்ஸ் வைப்பது எப்படி என்பதற்கு அந்த டெக்னிக்கும் அதைத் தொடரும் காட்சிகளும் நல்ல உதாரணம்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் முதல் ஃபைட்டில் வரும் ஸ்டெப் எல்லாமே புதிதாக இருந்தது. கிளைமாக்ஸ் வரை அது தொடர்ந்தது. மாஸ்டர் ராஜசேகருக்கு பாராட்டுகள். கொஞ்சம் பழைய கதைக்கரு தான் என்றாலும், பாத்திரப் படைப்பிலும் திரைக்கதை உத்தியிலும் ஒரு தரமான ஆக்சன் த்ரில்லராக ஆக்கிவிட்டார்கள்.

விக்ரம் பிரபு:

கும்கி பட வாய்ப்பை வலியக்கேட்டு நடித்தவர் என்பதால், இவரது கதைத்தேர்வில் நம்பிக்கை இருந்தது. இதிலும் நம் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார். ஆஜானுபாகுவான உயரமும் இறுக்கமான முகமும் ஆக்சன் காட்சிகளுக்கு பொருந்திப்போகிறது. அந்த உயரத்தாலேயே அவர் உயிர் தப்பிக்கும் ‘கம்பி’ காட்சி அட்டகாசம். காதல் காட்சிகளில் அவரது குறும்பான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. இப்படியே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், அன்னை இல்லம் பெயரைக் காப்பாற்றி விடலாம். ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக இந்தப் படம் மூலம் தன்னை நிலைநிறுத்தி விட்டார். அடுத்து பஞ்ச் டயலாக்கில் இறங்கி நம்மை பஞ்சராக்காமல் இருக்க, தாத்தா அருள் புரியட்டும்.

வம்சி கிருஷ்ணா:
ஒரு ஆக்சன் படத்திற்கு முதல் தேவை ஒரு பவர்ஃபுல் வில்லன். விக்ரம் பிரபுவுக்கு ஈழுவலான வேடம், அமைச்சரின் தம்பியாக வரும் வம்சி கிருஷ்ணாவிற்கு. பல நேரங்களில் இரண்டு ஹீரோக்கள் மோதுவது போன்றே தோன்றிவிடுகிறது. மனிதர் பின்னியிருக்கிறார். நய்யாண்டி படத்தில் இவரை வேஸ்ட் செய்திருந்தார்கள். முதல் பாதி முழுக்க, ஒரே ரூமில் அடைபட்டுக்கிடந்தாலும், தொடர்ந்து தப்பிக்க முயலும்போதும், கடைசிவரை ஹீரோவை பழி வாங்கியே தீருவேன் என்று திரியும்போதும் மிரட்டுகிறார். செம கேரக்டடைசேசன் மற்றும் நடிப்பு.

சுரபி:

ஹீரோயின் சுரபி கொஞ்சம் சுரத்தே இல்லாமல் தான் இருக்கிறார். ஆனாலும் ரகளையான கேரக்டர். 19 அரியர்ஸ் வைத்துக்கொண்டு, ஹீரோ தந்த மீன்களை திருப்பித் தர வார் எடுக்கும் முயற்சிகளில் அசத்துகிறார். ஆனாலும் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள ஏதோவொன்று குறைகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்கினாலும், அவரை மையப்படுத்தியே காட்சிகள் நகர்வதாலும் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். எப்படித் தான் பயப்படாமல் அப்படி நின்றாரோ..ஹேட்ஸ் ஆஃப்.

சொந்த பந்தங்கள்:

‘செல்வராகவன் பட இரண்டாம் ஹீரோ’ போல் இருப்பதாக சந்தானத்தால் பாராட்டப்பட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு இதில் போலீஸ் ஆபீசர் வேடம். பாதிப்படத்திற்கு மேல் தான் வருகிறார். கிளைமாக்ஸில் மட்டும் விறுவிறுப்பான நடிப்பு. மற்ற காட்சிகளில் அவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமைச்சராக நடித்திருப்பவரும் ரியல் அரசியல்வதி மாதிரியே இருக்கிறார்.


நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- பெரிதாக ஒன்றும் இல்லை. (நான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- திரைக்கதை, திரைக்கதை, செம நீட்டான திரைக்கதை. 
- நல்ல பாடல்கள், அதை தனி டூயட்டாக ஆக்காமல் கதையோட்டத்தோடே கொடுத்தது. (லவ்வுல விழுந்துட்டேன்னைத் தவிர்த்து.)
- சத்யாவின் பிண்ணனி இசை
- வம்சி மற்றும் ஹீரோயின் கேரக்டர்
- சண்டைக் காட்சிகள்
- பரபரப்பான கிளைமாக்ஸ்.

பார்க்கலாமா? :

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆக்சன்+த்ரில்லர் படம்.

மேலும் வாசிக்க... " இவன் வேற மாதிரி- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 10, 2013

ஹன்சிகா..என் இண்டர்வியூ...ரிசல்ட் என்னாச்ச்சூ?

நான் டெல்லில வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ, எங்க எம்.டி, ஆபீஸ் மத்தில வந்து நின்னுக்கிட்டு எல்லாரும் வாங்கோன்னு கூப்பிட்டாரு. வழக்கமா குலோப் ஜாமூன், ரசகுல்லான்னு ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு, அப்படிக் கூப்பிட்டு ஏதாவது நல்ல செய்தி சொல்வாரு. இன்னைக்கு என்ன நல்ல செய்திங்கறதைவிட, இன்னைக்கு என்ன ஸ்வீட்டா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டே போய் நின்னேன். ‘கண்ணுகளா..கம்பெனிக்கு புரோஜெக்ட்டே இல்லை. அதனால தற்காலிகமா கம்பெனியை பூட்டுறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். அடுத்த மாசத்துல இருந்து யாரும் ஆபீஸ்க்கு வர வேண்டாம். சம்பளமும் கிடையாது...ஆல் தி பெஸ்ட்’ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாரு. 

நம்ம ஹன்சிகாவும் சிம்புவைப் பார்த்துச்சு. அவரு வழக்கம்போல பத்த வச்சாரு, இங்கயும் பத்திக்கிச்சு. உடனே ட்வீட்டர்ல ‘இஹி..இஹி..நான் சிம்புவை லவ் பண்றேன்’ன்னு சொல்லிடுச்சு ஹன்சி. ஏன்யா, கெட்ட செய்தியைச் சொல்றவங்க மெதுவா ‘நிலைமை சரியில்லை...நிலைமை மோசமாகிக்கிட்டே இருக்கு..மோசம் ஆகுது...நாசமாப் போச்சு’-ன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா சொன்னாத்தானே நம்மால அதிர்ச்சியைத் தாங்க முடியும்? கெட்ட செய்தியைச் சொல்றதுல என்னய்யா அவசரம் உங்களுக்கு?

இப்போ நாலு மாசம் முன்னாடி ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். ரொம்ப பிடிச்சமாதிரி வேலை. அதனால எப்படியும் செலக்ட் ஆகியிரணும்னு முக்கி முக்கி பிரிபேர் பண்ணிட்டுப் போனேன். உள்ளே போனா 5 பேரு. கதறக் கதற அடிச்சாங்க. பல வருசமா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி ஒரு விஷயம் கத்துக்கிட்டேன். அடி வாங்காம தப்பிக்கிறவனுக்கு மட்டுமில்ல, அடி விழுந்தாலும் அசால்ட்டா அவ்ளோ தானான்னு கேட்கிறவனுக்கும் வேலை கன்ஃபார்ம். அதனால நானும் அசராம வாங்கிக்கிட்டேன். ரோசிச்சுச் சொல்லுதோம், போய்ட்டு வான்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நாலு மாசமா யோசிக்கிறாங்க. அந்த நல்ல செய்தியைக் காணோம். கேட்டா ‘அண்டர் பிராசசஸ்”.
இடையில நண்பர் ஒருத்தரு என் சிவியைக் கேட்டாரு. அந்த வேலை எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, அங்க போனா வேலை செய்யணும்..மை காட்..முடியவே முடியாதுன்னேன். ‘இல்லை மச்சி, சும்மா உன் சிவியைக் கொடு..கிளையண்ட் தொல்லை தாங்கலை’ன்னாரு. சரிய்யா, இந்தான்னு கொடுத்துட்டேன். போன வாரம் ஃபோன் பண்ணி, ‘நாளைக்கு இண்டர்வியூ..நீ போகலேன்னா பிரச்சினை ஆயிடும். சும்மா போய்ட்டு வா’ன்னு சொல்லிட்டாரு.

‘என்னய்யா இது வம்பாப் போச்சு..சரி, போறேன். ஆனா எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். எங்கயிருந்துய்யா பிடிச்ச இந்த ஆளைன்னு உன்னைத்தான் திட்டுவாங்க’ன்னேன். அவரு அதுக்கெல்லாம் ரெடி. சரின்னு போனேன்.

வழக்கமா 3-5 பேரு உட்கார்ந்து கும்முவாங்க. இத்தனை வருசமா வாங்குன கும்முக்கு இன்னைக்கு பழி வாங்கிட வேண்டியது தான்னு உள்ளே போனா, ஒரே ஒரு ஆளு. அடப்பாவமே..ன்னுட்டு உட்கார்ந்தேன். வழக்கமா ஆரம்பிச்சு டெக்னிகல்ஸுக்குள்ள வந்தாரு. 'வாய்யா, வா..இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துட வேண்டியது தான்’ன்னு முடிவு பண்ணேன்.
அவர் : ஸ்டீம் பைப்பிங்ல ஒர்க் பண்ணியிருக்கயா?

நான்: ஓ..பண்ணியிருக்கனே.

-- வெரிகுட்..அதைப் பத்திச் சொல்லு.

-- அது ஒர்க் பண்ணி நாலஞ்சு வருசம் ஆச்சு..ஞாபகம் இல்லை.

-- ஓ..பரவாயில்லை..இப்போ ஒரு பைப்பு இப்படிப் போகுதுன்னு வச்சிக்கோ. இதுக்கு சப்போர்ட் எப்படிக் கொடுப்பே?

-- தெரியாது சார்.

-- அப்படியா..இது ஒன்னும் கஷ்டம் இல்லியே..சரி பரவாயில்லை..நாங்க என்ன புராஜெக்ட்டுக்கு இண்டர்வியூ பண்றோம்னு தெரியுமா?

--தெரியாது.

-- ஓகே..*** புராஜெக்ட்டுக்கு எடுக்கிறோம்.

-- ஓ..

-- அந்த புராஜக்ட்டுல ஒர்க் பண்ணியிருக்கயா?

-- கிடையவே கிடையாது.

-- ம்..அப்புறம் எப்படி நீ இந்த பொசிசனுக்கு சூட் ஆவே?

-- அதைத் தான் சார் நானும் யோசிச்சேன்..நீங்க கேட்டுட்டீங்க.

-- வெரிகுட்.(என்னாது?).ஓகே, தியரியாவது படிச்சிருப்பீங்க இல்லியா?

-- சார், எங்க ஊர் காலேஜ் சிலபஸ்ல பைப்பிங்கே கிடையாது. அதெல்லாம் நான் படிக்கவே இல்லை.

-- யு ஆர் வெரி ஓப்பன் டைப். (கிழிஞ்சது!)..நோ பிராப்ளம்..அது ஈஸி தான்..கத்துக்கலாம்.

-- ஓஹோ.

-ஓகே, யூ ஹேவ் டன் அ குட் ஜாப். (யோவ், வாழ்க்கைல நீரு குட் ஜாப்பையே பார்த்ததில்லையா?)..நீங்க போகலாம்.

-- ரைட்டு..தேங்க்ஸு..பார்ப்போம்..பை.
ரூமுக்கு வந்து லேப்டாப்ல ரிலாக்ஸா நியூஸ் பார்க்க ஆரம்பிச்சேன். கொஞ்சநாளாவே ஹன்சிகா-சிம்பு பிரிஞ்சுட்டாங்கன்னு கிசுகிசு. அதை யாராவது கன்ஃபார்ம் பண்ண மாட்டாங்களான்னு டெய்லி நியூஸ் பார்க்கிறேன். ம்ஹூம்..தமிழ்ஸ்.காம், தமிஸ்ஸ்.காம், தமிழ்ஸ்ஸ்ஸ்ஸ்.காம்னு இத்தனை வெப்சைட்டு இருந்து என்ன பிரயோசனம்? அன்னிக்கு ஒரு நியூஸ். எல்லாரும் ஹன்சிகிட்ட ட்விட்டர்ல ‘சிம்பு மேட்டர் என்னாச்சு?’ன்னு கேட்கிறாங்கன்னு ஹன்சி கோவிச்சுக்கிட்டு ட்விட்டர் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணிடுச்சாம். 

என்னய்யா நியூஸ் இது? கட் ஆகிடுச்சுன்னு சொல்றதுல என்னய்யா உங்களுக்கு கஷ்டம். னு யோசிக்கும்போதே நண்பர்கிட்ட இருந்து போன். ‘என்னய்யா?’ன்னேன். ‘மச்சி..திட்டக்கூடாது. நீ இண்டர்வியூல செலக்ட் ஆகிட்ட..உன்கிட்ட சொல்லச்சொன்னாரு அந்த நல்லவரு’.அடச்சண்டாளங்களான்னு நினைக்கும்போதே போன் கட் ஆகிடுச்சு. என்ன உலகம்யா இது? ஒரு கெட்ட செய்தின்னா உடனே சொல்றாங்க..நல்ல செய்தின்னா வாயைவே திறக்க மாட்டேங்கிறாங்க.
நான் என்ன பெருசா கேட்குறேன்? ஹன்சிகா-சிம்பு லவ் டமால்..ஆஃபர் லெட்டர் ரெடி, வாங்கோ-ன்னு சொல்லக்கூடாதா? சரி, லேட் ஆகுறதால நல்ல செய்தி தான்னு நம்பிக்கிட்டிருக்கேன். முருகா, நீ தான் ரெண்டு மேட்டரையும் சால்வ் பண்ணி, என் வாழ்க்கைலயும் ஹன்சி வாழ்க்கைலயும் ஒளியேத்தணும்.

மேலும் வாசிக்க... "ஹன்சிகா..என் இண்டர்வியூ...ரிசல்ட் என்னாச்ச்சூ?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, December 7, 2013

2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவிற்கு ஒருவகையில் இந்த ஆண்டு நல்லபடியாக அமைந்தது என்று சொல்லலாம். மசாலாப் படங்களுக்கு நடுவே பல வித்தியாசமான புதிய முயற்சிகளும் செய்யப்பட்டன. அதில் முக்கியமானது நேரம் மற்றும் சென்னையில் ஒருநாள். இரண்டுமே மலையாளத்தில் இருந்து வந்தவை என்பதால் நமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இந்த லிஸ்ட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.

அதே போன்றே மூடர் கூடம் மற்றும் விடியும் முன் ஆகிய படங்கள், முற்றிலும் புதிய களத்தில் கதை சொல்லி நம்மை அசத்தின. துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே காப்பி என்பதால், அதே போன்ற தரத்தில் அந்த இயக்குநர்கள் அடுத்த படத்தை சுடாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவற்றையும் தள்ளி வைக்கிறோம். மிஞ்சிய ஐந்து படங்கள் பற்றிய பார்வை இங்கே:
நல்ல படம் #5: தங்க மீன்கள்
கற்றது தமிழிற்குப் பிறகு ராம் எடுத்த படம் என்பதால், நல்ல சினிமாவை விரும்புவோர் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு. தியேட்டர் வேறு கிடைக்காமல் பிரச்சினையாக, படத்திற்கு ஆதரவு நம் மனதில் பெருகியது. ஆனால் படம் வெளியானபின் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

தந்தையை மையப்படுத்தி சில படங்களே வந்திருக்கின்றன. அந்த கேட்டகிரியில் வந்த படம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. தேவையற்ற சைக்கோத்தனம் நிரம்பிய கேரக்டர், தந்தை-மகள் பாசத்தைப் பேச ஆரம்பித்து தனியார் பள்ளிகளே எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று முடித்து நம்மை சோதனைக்குள்ளாக்கினார் ராம்.

இன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம் என்பதே படம் பார்த்த பலரின் அபிப்ராயமாக இருந்தது. அதற்குக் காரணம், ராம் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்த படத்திலாவது காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம். (இந்த இடத்தில் நேரம் படம் வருவது தான் நியாயம் என்று நினைக்கிறேன்!)

நல்ல படம் #4: ஹரிதாஸ்
ஆட்டிசம் குறைபாடு பற்றி அருமையாகப் பேசிய படம். இது பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை நீக்குவதாக, இந்தப் படம் அமைந்தது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பையனாக நடித்த ப்ரித்விராஜும், சிநேகாவும் நடிப்பில் கலக்கியிருந்தார்கள். கல்யாணமான பிறகும், சிநேகா தான் அந்த கேரக்டர் செய்யவேன்டும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்து நடிக்க வைத்தார். படம் பார்த்தபோது, அவரை விடவும் அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை யாரும் இல்லை என்றே தோன்றியது.
ஆனாலும் கமர்சியலாக படம் தோல்வியைத் தழுவியது. பிரபலமான ஹீரோ நடிக்காமல் நல்ல நடிகரான கிஷோர் நடித்தது பி&சி ஏரியாவில் எடுபடவில்லை. மேலும் படம் சில குறைகளோடு தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆட்டிசம் குறைபாடு கொன்டவர்களை சரியான முறையில் நடத்த வேன்டும் என்று ஒரு பக்கம் வாதிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் கிஷோர், தன் டிரைவர் சூரியை நடத்தியவிதம் மட்டமாக இருந்தது. 

காமெடிக்கு என்று செய்தது, அந்த கிஷோர் கேரக்டரின் மீதான பரிதாபத்தைக் குறைத்தது. மேலும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும் கிஷோரின் வேடமும் தர்க்கரீதியில் தவறானது. மாற்று சிந்தனையாளர்களுக்கு என்கவுன்ட்டரும், ஆட்டிசம் உள்ளவரை இழிவாக நடத்துவதும், டிரைவரை மரியாதையின்றி நடத்துவதும் ஒன்று தான். இரு தவறுகளை நியாயப்படுத்திக்கொண்டே, ஒரு தவறைப்பற்றி மட்டும் பேசியதில் படத்தின் தரம் குறைந்து போனது.

எனினும் கமர்சியல் குப்பைகளுக்கு நடுவே, இதுவொரு நல்ல முயற்சி. அந்தவகையில் இயக்குநர் குமாரவேல் பாராட்டப்பட வேண்டியவர்.

நல்ல படம் #3:ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தனக்கென்று தனித்த திரைமொழியை உருவாக்கிக்கொண்ட லோன்லி வுல்ஃப் மிஷ்கின் தயாரித்து, இயக்கிய படம். குண்டடி பட்டுக்கிடக்கும் ஓநாயை, மருத்துவக் கல்லூரி ஆட்டுக்குட்டி ஒன்று காப்பாற்ற, அதனைத் தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது.

மிஷ்கினின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்ன காரணத்திற்காக இந்த ஓட்டம் என்று இறுதியில் கண் இமைக்காமல் மிஷ்கின் கதை சொன்னாலும், அது நம்மை திருப்திப்படுத்தவில்லை.
வில்லனிடம் வேலை செய்யும் மிஷ்கின், தவறுதலாக ஒரு ஆளைக் கொன்றுவிடுகிறார். இறந்தவரின் குடும்பத்தில் எல்லாருமே கண் பார்வையற்றவர்கள். எனவே மிஷ்கின், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, வில்லனிடம் பார்த்த பே-கில்லர் வேலையை விடுகிறார். அதனால் கடுப்பாகும் வில்லன் மிஷ்கினை அழைக்க, மிஷ்கின் மறுக்க அந்த குடும்பத்தின்மீது வில்லன் பாய்கிறான். அதை மிஷ்கின் தடுத்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே விரிவான கதை. இதில் ஒரு குழந்தையைத் தவிர அனைவருமே கொல்லப்படுகிறார்கள். மிஷ்கின், இந்த குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலே போதும். நல்லது செய்கிறேன் என்று போய், மொத்தக் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டியது தான் மிச்சம். இப்படி ஒரு லாஜிக் இல்லாத கதையால், நாம் ஏமாற்றமே அடைந்தோம்.

ஆனால் இந்தக் கதை கிளைமாக்ஸில் தான் சொல்லப்படுகிறது. அதுவரை மிஷ்கின் அதகளம் பண்ணியிருந்தார். செம மேக்கிங். ஒவ்வொரு சீனிலும் பெர்பக்சன் தெரிந்தது.(குறியீடும் தெரிந்ததாகக் கேள்வி.) படம் ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பாகச் சென்றது. 

இளையராஜாவின் முன்னணி இசை என்று பிரபலப்படுத்தியதே நமக்கு தொந்தரவாக அமைந்தது. நந்தலாலாவை ஒப்பிடும்போது, இதில் இசையின் வீச்சு, குறைவு தான். நம்மை படம் முழுக்க திருப்திப்படுத்தாவிட்டாலும், ஒரு முறை பார்க்கும்படியே இருந்தது. ஆனாலும் கமர்சியலாக ஓடவில்லை, ஓடாது!

நல்ல படம் #2: ஆறு மெழுகுவர்த்திகள் (6)
மிகவும் பதைபதைத்துப் போய் பார்த்த படம். காணாமல்போன மகனைத் தேடி கிளம்பும் தந்தையின் பயணமும், அந்த பயணத்தில் ஹீரோ சந்திக்கும் பயங்கர உலகமுமே படம். நடிகர் ஷாம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
ஹீரோயின் கேரக்டரும் கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே வந்தது. ஒரு தரமான படத்தைக் கொடுக்கவேண்டும்  எனும் இயக்குநர் துரையின் ஆர்வம், ஒவ்வொரு சீனிலும்  தெரிந்தது. கமர்சியல் அம்சமும் வேன்டும் என்பதால், ஹீரோவை பத்து பேர் வந்தாலும் அடித்துத் தள்ளும் வீரனாக காட்டியது தான் ஒரே குறை. அதைத் தவிர்த்து படத்தில் பெரிதாக  குறை இல்லை.

நடிகர் ஷாம் இந்த படத்திற்காக சேது விக்ரம் ரேஞ்சிற்கு கஷ்டப்பட்டிருந்தார். ஆனாலும் பெரிய அளவில் படம் வெற்றியடையாமல் போனது. இறுதிக்காட்சியில் தந்தையை அடையாளம் தெரியாமல் மகனும், மகனை அடையாளம் தெரியாமல் தந்தையும் நிற்கும் இடத்தில் அசத்தியிருந்தார்கள். உண்மையான தங்கமீன்கள் என்று பாராட்டப்பட்ட, அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.

நல்ல படம் #1: ஆதலால் காதல் செய்வீர்

அருமையான கதைக்கருவுடன், சுசீந்திரன் இயக்கத்தில் வந்த படம். விடலைப் பருவக் காதலின் விபரீதத்தை பொட்டில் அடித்தாற்போன்று சொல்லியது. தலைப்பு காதல் செய்யத் தூண்டினாலும், படம் நேரெதிர் கருத்தைச் சொன்னது. உண்மையாக காதல் செய்யுங்கள் என்பதைத் தான்  இயக்குநர், அப்படி தலைப்பில் சொல்கிறார் என்றும் சிலரால் விளக்கப்பட்டது.
இந்த தலைமுறை எவ்வளவு கேஷுவலாக உடல் கவர்ச்சியில் விழுகிறது, அதனால் சமூகத்தில் உண்டாகும் விளைவு என்ன என்று அதிக சினிமாத்தனம் இல்லாமல் பேசிய படம். பெண் கர்ப்பமானது தெரிந்து பதறும் தந்தையின் வேதனையும், பேரம் பேசும் காட்சிகளும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. 

படத்தில் நம்மை நிலைகுலைய வைத்தது, கடைசி ஐந்து நிமிடம் தான். இவ்வளவு அழுத்தமான கிளைமாக்ஸை நாம் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பாடலுடன், நம்மை உருக்கியபடி படம் முடிந்தது. இந்த ஆண்டின் சிறந்த படம் ஆதலால் காதல் செய்வீர் தான்.
மேலும் வாசிக்க... "2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 6, 2013

தகராறு - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தயாநிதி அழகிரியின் தயாரிப்பில், மௌனகுரு படத்திற்குப் பின் அருள்நிதி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தகராறு. மதுரைக்கதை, அருள்நிதியின் புதிய பரிமாணம் என்றெல்லாம் எதிர்பார்ப்பைக் கிளப்பினார்கள். படம் எப்படின்னு பார்ப்போம், வாங்க!
ஒரு ஊர்ல..:
அருள்நிதி, பவன் உள்ளிட்ட நான்குபேர் நண்பர்கள். பகலிலேயே வீடு புகுந்து திருடுவது அவர்களின் தொழில். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே திருடிவிட, இன்ஸ்பெக்டருடன் இவர்களுக்கு தகராறு. ஒரு லோக்கல் தாதாவிடம் மோதியதால் அவருடனும் தகராறு. கந்துவட்டி தாதாவின் பெண்ணான பூர்ணா-அருள்நிதி காதலால், கந்துவட்டி தாதாவுடனும் தகராறு. திடீரென அருள்நிதியின் நண்பர்கள் மேல் நடக்கும் கொலை முயற்சியில், ஒரு நண்பன் கொல்லப்படுகிறார். அதைச் செய்தது யார்? அதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடித்து...? 

உரிச்சா....:
மதுரையைக் களமாகக் கொண்டு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதே ஒரு ஆச்சரியம் தான். படத்தின் முதல் காட்சியிலேயே கொலை விழுகிறது. அடுத்த காட்சியில் ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்து, நான்கு நண்பர்களின் கதையைச் சொல்கிறார்கள். புதுப்புது டெக்னிக்களுடன் திருடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும், இப்படி திருட்டை நியாயப்படுத்தலாமா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. லாரியில் அடிபட்டுக்கிடக்கும் பூர்ணாவை அருள்நிதி காப்பாற்றும் (அதாவது கத்தி ஊரைக்கூட்டும்) காட்சி அருமை. அடுத்து இருவருமே அடுத்தவர் முகத்தை மறந்துவிட, உன்னை எங்கேயே பார்த்திருக்கேனே என்று படம் முழுக்க யோசித்துக்கொண்டே இருப்பது யதார்த்தம் + செம ரகளை. 

மூன்று (ஆக்சுவலா 4..சஸ்பென்ஸு!) தகராறுகளில் சிக்குவதை இடைவேளைக்கு முன்பே சொல்லிவிட்டு, இடைவேளைக்குப் பின் சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்று கொண்டுபோகிறார்கள். இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று நாமும் யூகித்தபடியே இருக்கிறோம். கொலையாளி ஒரு லெப்ட் ஹேண்ட் என்று க்ளூ கிடைத்த பின் பார்த்தால், இன்னொரு நண்பன், தாதா, கொலைகாரன், கொலைகாரனை ஏவிய ஆள் நான்கு பேருமே லெஃப்ட் ஹேண்டாக இருக்கிறார்கள். இவரில்லை, இவரில்லை என கண்டுபிடித்துக்கொண்டே போகும் காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு. ஆனால்...
த்ரில்லர் கதையில் சஸ்பென்ஸை உடைப்பது ஒரு கலை. அதை சமர் படத்தை அடுத்து இதிலும் கோட்டை விடுகிறார்கள். நண்பர்களே கொலையாளியை புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே கொலையாளியே நேராக வந்து நின்று கொண்டு ‘ஆமாண்டா..நாந்தான் கொன்னேன்’ என்று சொல்லும்போது சப்பென்று ஆகிறது. அதையடுத்து கிளைமாக்ஸ் ஃபைட்டைப் போட்டு படத்தை முடிக்கிறார்கள். அவர் தான் கொலையாளி என்பதற்கு படத்தில் முதலில் இருந்தே நிறைய க்ளூ இருக்கிறது. (நான் முக்கால்வாசிப் படத்திலேயே கண்டுபிடிச்சுட்டேன்..மூளை, மூளை!). அந்த க்ளூவை வைத்து, ஹீரோ கொலையாளியை கண்டுபிடிப்பதாக வந்திருந்தால், ஒரு திருப்தி வந்திருக்கும். இப்போது ஃபுல் மீல்ஸில் சாம்பார் மிஸ்ஸிங் என்பது போல் ஆகிவிட்டது. கொலையாளி யார் என்பதிலேயே ஆடியன்ஸ் ஷாக் ஆகி, திருப்தி ஆகிவிடுவார்கள் என்று திரைக்கதையாசிரியர் நினைத்திருக்கலாம். நமக்கு அது பத்தலை!..பி&சி ஏரியாவில் அது எடுபடலாம்.

அருள்நிதி:
அருள்நிதி எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேடி தேர்ந்தெடுப்பவர். இதிலும் அப்படியே. வழக்கமான கதை/படம் என்று ஒதுக்கிவிட முடியாது இதை. எப்போதும் சொங்கி போல் வரும் அருள்நிதி, இதில் கலகல பார்ட்டியாக வருகிறார். பூர்ணாவை விரட்டி விரட்டி லவ் பண்ணும்போது, செம கலகலப்பு. ஆக்ரோசம்கூட ஓரளவு வருகிறது. என்ன ஒன்னு, கழுதை இந்த நடிப்பு தான் இன்னும் வர மாட்டேங்குது. ஆனாலும் மனிதர் முந்தைய படங்களைவிட ஒருபடி மேலாகவே நடித்திருக்கிறார். தொடர்ந்து இப்படி நல்ல கதை, கேரக்டர் என்று நடித்தால் என்னிக்காவது ஒருநாள் நடிப்பு வந்துவிடலாம். 
பூர்ணா:
பூர்ணாவுக்கு இது முக்கியமான படம். வெறுமனே டூயட் ஆடும் ஹீரோயினாக இல்லாமல், மதுரைப் பெண்ணை கண்முன்னே கொண்டுவருகிறார். ஒரு கந்துவட்டி பார்ட்டியின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரராக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக என நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர். கலக்கியிருக்கிறார். திருட்டுப் பய மவளே பாடலில் அழகோ அழகு. 

நண்பர்கள்:
கதையே நான்கு நண்பர்களைப் பற்றியது தான் என்பதால், நான்கு பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். அருள்நிதிக்கு ரொமான்ஸ் என்றால், பவன் (பொல்லாதவன் ‘அவுட்’) மற்றும் கொலையாகும் நண்பர்களுக்கு ஆக்சன், தனி ஃபைட் என்று ஈகுவலாக வாய்ப்பு கொடுத்தே எடுத்திருக்கிறார்கள். அருள்நிதியும் அண்ணாச்சி தயாரிப்பு தானே என்று அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளாமல், கதைக்கு ஏற்றபடி விட்டுக்கொடுத்து நடித்திருக்கிறார். ஆடுகளம் ஒத்தச்சொல்லாலே பாடலில் தனுஷுடன் வரும் காமெடியன் முருகதாஸ் தான் இதில் இன்னொரு நண்பர். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். 

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- தகராறினால் தான் கொலை என்று படம் நகர்கிறது. ஆனால் மூன்று தகராறுமே இவர்களே வலிய இழுத்ததாகவே இருக்கிறது. கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டரையே அடித்து, கட்டிப்போட்டு கேவலப்படுத்துகிறார்கள். ஜெயிலுக்குப் போவது புதிதில்லை எனும்போது, இன்ஸ்பெக்டரின் கொலைவெறியை இவர்களே தூண்டவேண்டிய அவசியம் இல்லை. மற்ற தகராறுகளிலும் நிதானமற்ற, முட்டாள்தனமான இவர்களின் நடத்தையே காரணாமாக இருக்கிறது. பின்னர் அதனாலெயே கொலை எனும்போது, இவர்கள் மேல் பரிதாபம் வருவதற்குப் பதில் கொஞ்சம் எரிச்சலே வருகிறது. தகராறு இவர்கள்மேல் திணிக்கப்பட்டதாக காட்டியிருக்க வேண்டும்.

- கிளைமாக்ஸில் கொலையாளியே வந்து சொல்லும்படி காட்சி வைத்தது. 

- முதல்பாதி ஜாலி என்றாலும் நீளமாகத் தெரிந்தது. நான்கு தகராறையும் விளக்க வேண்டிய கட்டாயத்தால் இருக்கலாம்.

- சண்டைக்காட்சிகளில் தெரியும் ஓவர் வன்முறை. சாதாரண சண்டையில்கூட கை அல்லது கழுத்தை முறிப்பது அவசியமா?

- கொலையைக் கண்டுபிடிக்க புத்திசாலித்தனமாக ஏதும் செய்யாமல், தகராறு1,2.. என வரிசையாக சண்டை போட்டு அவர்கள் தான் இல்லையென்று சொன்னதும் ’ஓகே..அடுத்த ஆளைப் பார்ப்போம்’ ரேஞ்சில் திரும்புவது. அவர்கள் இல்லையென்பதற்கு ஆதாரங்களையும் வைத்திருக்கலாம்.

- கொலையாளி ஒத்துக்கொண்டதில் இருந்து இறுதிவரையான காட்சிகள் ஏமாற்றத்தையே அளித்தன. என்ன தான் சொல்ல வர்றாங்க என்று தோன்றிவிட்டது. 

- இன்ஸ்பெக்டர் கேரக்டரை வடிவமைத்த விதம். நல்லவரென்றால் கொலையாளியை கண்டுபிடிக்க உதவியிருக்கலாம். கெட்டவரென்றால் கொலையாளியாக அவரே இருக்கலாம். கிளைமாக்ஸை முடித்துவைப்பதற்கென்றே உருவானவர் மாதிரித் தெரிந்தது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வித்தியாசமான, நல்ல முயற்சி. கிளைமாக்ஸில் சொதப்பினாலும் சரக்கு உள்ள ஆளாகத் தெரிகிறார் புதிய இயக்குநர் கணேஷ் விநாயக். 

- தருண்குமார் என்பவரின் திருட்டுப் பயமகளே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருந்தது

- சத்யா என்பவரின் பிண்ணனி இசை.

- பவன் மற்றும் பூர்ணா கேரக்டர்

- நட்பின் அருமையை சொல்லும் கதை+காட்சிகள்

-முதல்பாதி ஜாலியாக நகர்ந்தாலும், கொலையாளி யாராக இருக்கும் என்று நம்மை யோசித்தபடியே படம் பார்க்க வைத்திருக்கும் திரைக்கதை அமைப்பு சூப்பர். கொலையை முதலில் காட்டுவது என்று முடிவெடுத்த திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு சபாஷ். 

பார்க்கலாமா? :

ஒருமுறை பார்க்கலாம்.


மேலும் வாசிக்க... "தகராறு - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 3, 2013

2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்

நல்ல கமர்சியல் படம் தருபவர்கள், நல்ல சினிமா தருபவர்கள் என்று நாம் நம்பும் பலர் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் சிலரின் திரைப்படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியது. அதில் கமலஹாசனைத் தவிர மற்ற எல்லாருமே கடும் தோல்வியைத் தழுவினார்கள்.(இப்போ உங்களுக்கு விஸ்வரூபம் பற்றி என்ன தோணுதுன்னு எனக்குத் தெரியும்!). பாரதிராஜாவின் அன்னக்கொடியை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டதால், மீதிப் படங்கள் கீழே :

காவியம் # 5: கடல்

மணிரத்னம்...தமிழ் சினிமாவின் கதை சொல்லும் உத்தியை மாற்றிக்காட்டியவர். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்று புரிந்து படம் எடுப்பவர்களில் ஒருவர். அதன்மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதனாலேயே தமிழுக்கும் ஹிந்திக்கும் ஒத்துவரும் (என்று நினைத்து) படங்களை எடுத்து, ஏற்கனவே தோல்வியைக் கண்டார். இந்தமுறை தமிழுக்கு மட்டுமே என்று கடல் படம் எடுக்க ஆரம்பித்தபோது, நமக்கு நம்பிக்கை இருந்தது. மேலும் கார்த்திக்-ராதா ஜோடியின் மகன் - மகள் இணையும் படம் என்று வேறு பரபரப்பைக் கிளப்பினார்கள். அப்போ அவங்க அண்ணன் - தங்கை முறை தானே என்றெல்லாம் நாம் குதர்க்கமாக யோசிக்காமல், இன்னொரு அலைபாயுதே வரும் என்று ஆசையுடன் இருந்தோம். படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக, அந்த விளம்பரமே அமைந்தது.

நாம் எதிர்பார்த்தது போல் காதலைப் பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ பேசாமல் படம் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு பேசியது. கிறிஸ்துவத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆங்கிலப்படங்கள் வந்திருந்தாலும், உவமை வடிவில் கடல் படம் ஆன்மீகம் பேசியது. தமிழில் இது ஒரு முக்கியமான முயற்சி என்று சொல்லலாம். ஆனால் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு, இது பெரும் கசப்பாக அமைந்தது. குறிப்பாக கதாநாயகியின் கேரக்டரைசேசன், படுமோசமாக அமைந்தது. முதல் பாதியில் இருந்த நேர்த்தி, இறுதிக்காட்சிகளில் இல்லாமல் போய் படம் பப்படம் ஆனது. மணிரத்னம் அடுத்த படத்திலாவது வெற்றிக்கனியைப் பறிப்பார் என்று நம்புவோம்.

காவியம் # 4: ஆதி பகவன்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என மூன்று வித்தியாசமான ஜெனர்களில் அசத்திய இயக்குநர் அமீர். குரு பாலாவையே அந்த விஷயத்தில் மிஞ்சியவர். என்றைக்கு அரசியல், சங்கம், பதவி என்று போனாரோ அப்போதே நமக்கு பாதி நம்பிக்கை போனது. அடுத்து யோகி என்று அப்பட்டமான காப்பி படத்தை எடுத்து, சுத்தமாக தன் மரியாதையைக் கெடுத்துக்கொண்டார். ஆனாலும் நான்கு வருடங்களாக(!) இந்தப் படத்தை எடுத்தபோது, மீண்டும் பழைய அமீராக வருகிறார் என்று நினைத்தோம். படம் பார்த்தபோது, எப்படி இருந்த அமீர் இப்படி ஆகிட்டாரே என்று தான் தோன்றியது.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அம்மா கேரக்டரைசேசனை பார்க்க முடியாது. வறுமை காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் பாங்காக் சென்ற உத்தமத் தாய் அவர். பாங்காங் என்ன தொழிலுக்கு ஃபேமஸ் என்று எல்லாருக்கும் தெரியும். பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் வெளிநாடு போவதே ஓவர், அதிலும் பாங்காங் என்றால்..உஸ்ஸ்! ஏன்யா இப்படி என்று கேட்டதுக்கு ‘நிறைய சேஸிங் சீன் வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கு பாங்காங் ரோடு தான் கரீக்டா இருக்கும்னு தோணுச்சு. அதான் அங்க போனோம்’ என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். இதில் சேஸிங் சீன் என்பது அம்மா கேரக்டருக்குமா, சென்சாரில் அதெல்லாம் போச்சா என்று தகவல் இல்லை.

பாலிடிக்ஸ்களில் இருந்து மீண்டு, அமீர் மீண்டும் ஒரு படைப்பாளியாக திரும்ப வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ராம் படத்தின் மேக்கிங், இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பருத்திவீரன் முத்தழகு இன்னும் நம் நெஞ்சுக்குள் நிற்கிறார். அந்த மாதிரிப் படங்களைத்தான் அமீரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் அமையும்வரை, சசிகுமார் போல் இயக்கத்தை விட்டு ஒதுங்கியே இருக்கலாம், தப்பில்லை!

காவியம் # 3: இரண்டாம் உலகம்

‘ஆய்..ஊய்’ என்று கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் ஒரே ஜண்டை!..ஒன்னுமில்லை, நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...ராஸ்கல்ஸ். ஒரு பூலோக வாசி..அதாவது பூமியில் இருக்கும் ஒருவன் (இப்போல்லாம் சுத்த தமிழ்ல எழுதுனா, கெட்ட வார்த்தையான்னு கேட்காங்க பாஸ்)..சரி, பூமியில் இருக்கும் ஒரு ஹீரோ, இரண்டாம் உலகத்திற்கு பயணித்து அங்கு செய்யும் சாகசமே கதை. சாகசம் என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம், அங்கே பூ பூப்பதில்லை. எனவே எல்லா செடிக்கும் தண்ணி ஊத்துறது அல்லது அனுஷ்காவுக்கு பன்னும் டீயும் வாங்கிக் கொடுத்து காதல் வரவைப்பது தான் அந்த சாகசம். இதில் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் ஆர்யா. அங்கே தான் படம், ப்பூ..என்று ஆனது.
முதல் பாதியில் இரண்டு உலகத்தையும் மாற்றி, மாற்றி காட்டியவரைக்கும் நன்றாகவே கொண்டுபோயிருந்தார் செல்வா. இரண்டாம் உலகத்தில் ஆர்யா நுழையவும் தான் பிரச்சினை ஆரம்பித்தது. அங்கே கடவுள் என்று ஒரு...ச்சே, கடவுளா நடிச்சவரை அந்த வார்த்தைல விவரிக்கலாமா, தப்பாச்சே..சரி, ஒரு ஃபாரின் குட்டியை காட்டியபோதே புஸ்ஸென்று ஆனது. அதிலும் அவரைக் கடத்துவதாக வசனத்தில் சொன்னதால் புரிந்தது, இல்லையென்றால் ‘லெட்ஸ் கோ’ என்று அந்த கடவுளே கடத்த வந்தவனின் மடியில் தொத்திக்கொண்டார் என்றே நினைத்திருப்போம். கடவுளின் சக்தி என்ன, ஏன் அந்த உலகத்தில் மொத்தமே 50 பேர் தான் இருக்கிறார்கள்? கடவுளையே கடத்துனாலும் ‘கரண்ட் போச்சா’ங்கிற தமிழர்கள் மாதிரி ஏன் அப்படி ஒரு சவசவ ரியாக்சன் என்று கேள்வி மேல் கேள்விகளை எழுப்பிய படம்.

படத்தின் கதையே ஆர்யா இரண்டாம் உலகத்தில் பயணம் செய்வது தான் எனும்போது, அங்கே போனபின் அவர் என்னென்னவோ செய்திருக்கலாம். பூமி அனுஷ்காவின் ஃபோட்டோவை இன்னொரு அனுஷ்காவிடம் காட்டியதையும், அனுஷ்காவுக்கு சாப்பாடு கொண்டுவந்து தந்ததையும் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இருக்கிற கடுப்பு போதாதென்று, அனுஷ்கா ட்ரெஸ் மாற்றும்போது திரும்பிக்கொள்ள வேறு செய்கிறார்.(சீன் போச்சே!). கடவுளின் நோக்கம் என்ன என்று ஆர்யாவுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆர்யா அதன் நியாயத்தை உணர்ந்து, அதற்காக முழு ஈடுபாட்டுடன் அனுஷ்கா-ஆர்யா2 ஜோடியை சேர்க்க முயன்றிருக்க வேண்டும். அப்படி சேர்த்துவைத்தால், செத்துப்போன அனுஷ்கா திரும்பக் கிடைப்பார் என்று ஒரு நல்ல ஆஃபரைக்கூட கொடுத்திருக்கலாம்.

இப்படி அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு, குறியீடினால் மட்டும் படத்தின் தரத்தை உயர்த்திவிடலாம் என்று நினைத்தால்..சாரி பாஸ்!...செல்வராகவனுக்கு இந்தப் படம் பெரும் அடி தான். 67 கோடியில் 6 கோடி தான் தேறியதாகச் சொல்கிறார்கள். செல்வா தன் வீடு ஒன்றையும் தயாரிப்பாளருக்கே எழுதிக்கொடுத்துவிட்டதாக கிசுகிசு. ஒரு நல்ல இயக்குநர் இப்படியெல்லாம் சீரழிவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இனியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம்.

காவியம் # 2: தலைவா

இயக்குநர் விஜய் எப்போது ஜாம்பவான் ஆனார் என்று யோசிக்காதீர்கள். நடிகர் விஜய் படம் என்பதால், இந்த லிஸ்ட்டில் தலைவா. (அதுக்கும் கடுப்பானீங்கன்னா, சாரி பாஸ்!)

விஜய்யிடம் ரொம்ப வருசமாகவே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தொடர்ந்து 2-3 படம் ஹிட் ஆகிவிட்டால், அடுத்த முதல்வர் ஆவதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கிவிடுவார். ‘அண்ணா’ எஸ்.ஏ.சி அறிவுரைபடி, அரசியலில் இறங்குவதற்கான பில்டப்பை ஏற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். நாமும் தெளிவாக அதை ஃப்ளாப் ஆக்குவோம். ஆனாலும் அவர் திருந்துவதில்லை. நாம் தியேட்டருக்குப் போவது பொழுதுபோக்கிற்குத் தானே ஒழிய, விஜய் கட்சியில் சேருவதா வேண்டாமா என்று கொள்கை முடிவு எடுக்க அல்ல. இது விஜய்&கோவிற்குப் புரிவதேயில்லை.

டைம் டூ லீட் என்று பில்டப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டபோதே, இது வழக்கம்போல் புஸ்ஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தது. ஆனால் இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, படம் ரிலீஸ் ஆனபின் அசிங்கப்படாமல், ரிலீஸ் ஆகும் முன்பே அசிங்கப்பட்டார்கள். அதிலேயே படத்தின் இமேஜும் அடிவாங்கிவிட, இனி குப்பையிலா போட முடியும் என்று தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். 
பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பார். அதையும் மிஞ்சும்விதமாக பாட்ஷா-தேவர் மகன் - நாயகன் என மானாவாரியாக பல தமிழ்ப்படங்களை மிக்ஸியில் போட்டு அடித்து இந்த படத்தைக் கொடுத்து நம் வயிற்றைக் கலக்கினார்கள். ’ஹாலிவுட் படத்தைச் சுடும் இயக்குநர்’ என்று நாம் திட்டியதற்கு இப்படி கொடூரமாக பழி தீர்த்துக்கொண்டார் இயக்குநர் விஜய்.

"Give me the same thing...........in different way' என்று திரைக்கதை பற்றிய பால பாடத்தில் சொல்வார்கள். பழைய அரதப்பழசான கதையைக்கூட புதிய கோணத்தில், புதுமையான காட்சிகளுடன் சொன்னால் ரசிக்கப்படும். ஆனால் இங்கே கதையும் பழசு, திரைக்கதையும் காட்சிகளும் பல படங்களில் பார்த்துச் சலித்த அரதப்பழசு. பழைய படங்கள் அளவிற்காவது இருந்ததா என்றால், அதுவும் இல்லை. தேவர் மகனில் கமல் கெட்டப் மாற்றி வந்த காட்சியில் புல்லரித்தது. இங்கே விஜய் டீ-சர்ட் மாற்றிவிட்டு வந்து நிற்கவும் ’ங்கொய்யால..’ என்று தான் தோன்றியது. 

அதுகூடப் பரவாயில்லை, மக்கள் அந்த கெட்டப்பில் விஜய்யைப் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தபடி கூடியதைத்தான் தாங்க முடியவில்லை.  தேவர்மகனில் ’அப்படி’ தான் ஆக முடியாது என கமல் சிவாஜியிடம் வாதாடியிருப்பார். ஆனால் இங்கே விஜய் நான் அப்படித்தான் ஆவேன் என்று ஃபோட்டொவுக்கு முண்டிக்கிட்டு போஸ் கொடுக்கும் தயாநிதி மாறன் மாதிரி ஆரம்பத்தில் இருந்தே முண்டிக்கொண்டு நிற்பார். கமலைப் பார்த்து நாம் வியந்தது கெட்டப் சேஞ்சிற்கு மட்டும் அல்ல, அந்த மனமாற்றத்திற்கும் சேர்த்துத் தான். 

அதே போன்ற இன்னொரு கொடுமை ‘டமுக் டுமுக்’ போலீஸ் அமலா பாலூ. (அவர் போலீஸ் கெட்டப்பில் நடக்கும்போது நாம் போட்ட பிண்ணனி இசையே அந்த டமுக் டுமுக் ஆகும்!). ஒரு பெரிய படத்தில் நடிக்கும் அளவிற்கு அமலா பாலூவிடம் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒன்றும் இல்லை. அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றர்கள். அதுக்குப் பதிலா அஞ்சு ரூபாய்க்கு ரெண்டு எலுமிச்சைம்பழம் வாங்கி, டைரக்டரு தலையில தேச்சு குளிச்சிருக்கலாம். 

கிளைமாக்ஸில் விஜய் வில்லன் கோஷ்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார். ’முடிஞ்சதா..அப்பாடா தப்பிச்சோம்டா’ என்று நாம் ஓட எத்தனிக்கும்போது, நம் டமுக் டுமுக் போலீஸ் வந்து அந்த டெட் பாடி வில்லன் கோஷ்டியை சுட்டு வழக்கில் இருந்து விஜய்யைக் காப்பாற்றுகிறார். என்னங்கடா இது..போஸ்ட் மார்ட்டத்துல கத்திக்குத்து தெரியாதா கேட்டா ‘சுட்டேன் சார்..ஆனாலும் நம்ம டிபார்ட்மெண்ட் குண்டை நம்ப முடியுமா? அதான் கத்தியை எடுத்து வரிசையா சொருகிட்டேன்’னு அமலா பாலூ சொல்லுமோ என்னவோ! சீன் படத்துலகூட இதைவிட பெட்டரா சீன் யோசிக்கிறாங்க மக்கா.

‘சார்..ஒயிட் டீசர்ட் கூலிங்கிளாஸ் போட்டு வெளில வர்றீங்க..ஜனங்கள்லாம் தலைவான்னு உங்களைப் பார்த்து ஓடி வர்றாங்க..தியேட்டர்ல உள்ளவன்லாம் ஃபீல் ஆகுறான்’ என்று இந்த ஒருவரியை மட்டும் தான் டைரக்டர், விஜய்யிடம் சொல்லியிருப்பார் போல. இது போதுமே, அடுத்த சி.எம் நாம் தான் என்று அணில் தாவிக்குதித்து, அடுப்பில் விழுந்துவிட்டது. ஒரு கெட்டதிலும் நல்லது இருக்கும்னு சொல்வாங்க. அது மம்மி, விஜய்க்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்க்கு சரியாப் பொருந்தும். ஜெயலலிதா செய்தது ஒருவகை அராஜம் என்றால், விஜய் செய்து வந்ததும் அதற்கு இணையான இன்னொரு அராஜகம் தான். எப்படியோ நெகடிவ்வும் நெகடிவ்வும் சேர்ந்து, நமக்கு பாசிடிவ் ஆகிவிட்டது.

மொத்தத்தில் Time to Lead என்பது Time to Hide ஆகிவிட்டது.

காவியம் # 1: பரதேசி

பாலாவைக் குறை சொல்லலாமா, அப்படி குறை சொல்லிட்டு முழுசா ஒருத்தன் பதிவுலகத்துல நடமாட முடியுமா? இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கே நியாயமாரே! 

எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் தான் மினிபஸ் வந்தது. எனவே அதுபற்றி சன் டிவியில் இருந்து மக்களிடம் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். ஒரு ஆளிடம் மைக்கை நீட்டி ‘மினிபஸ் உங்க ஊருக்கு வந்திருக்கே..அதைப் பத்தி சொல்லுங்க’ என்றார்.  ‘ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருந்தோம்யா..யாருமே கண்டுக்கலை. இப்போ தான் ஒருவழியா பஸ்ஸை விட்ருக்காங்க..ரொம்ப சந்தோசமா இருக்கு. இனிமே எங்க புள்ளைங்க..’ என்று அவர் சொல்லும்போதே, மைக் பார்ட்டி ‘நிப்பாட்டுங்க..நிப்பாட்டுங்க..இந்த திமுக ஆட்சியில பஸ் விட்ருக்காங்க..நன்றின்னு சொல்லணும் சரியா?’ என்றார். நம் ஆளும் சரிங்க என்ற் சொல்லிவிட்டு ரொம்ப வருசமா...-ன்னு ஆரம்பித்து கடைசியில் திமுக ஆட்சிக்கு நன்றி சொன்னார். ஆனாலும் மைக் பார்ட்டிக்கு திருப்தி இல்லை. ‘நீங்க என்ன பண்றீங்க..மினிபஸ் விட்ட ஐயா கலைஞர் அவர்களுக்கும் திமுக ஆட்சிக்கும் நன்றின்னு சொல்லுங்க..எங்க, முதல்ல இருந்து சொல்லுங்க பார்ப்போம்’ என்றார்.

நம்ம ஆளு அடுத்து அதைச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே..அவருக்கு கலைஞர்மீதோ திமுகமீதோ கோபம் ஏதும் இல்லை. உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும் என்றால், நீங்கள் அவசியம் பரதேசி படத்தின் முதல் பகுதியைப் பார்க்க வேண்டும்.

சகிக்க முடியாத செயற்கைத்தனத்துடன் நடிகர்கள் நடித்த ஒரே படம் பரதேசி தான். அதிலும் அந்த கதாநாயகி இருக்கிறாரே..அடடா!. சாக்கடைக்குள் தவறி விழுந்த மனநிலை தவறிய சேட்டு பெண் என்று தான் அந்த கேரக்டரைச் சொல்லவேண்டும். இடலாக்குடி ராசா எனும் அழகான இலக்கியத்தை ஒடித்து, நெளித்து தன் திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார் பாலா. ராசாவை ஏன் எல்லாரும், குறிப்பாக ஹீரோயின் அப்படி நடத்துகிறார்கள்? எல்லாருமே ஏர்வாடி கேஸ் தானா? என்று நாம் எரிச்சல் அடையும்வண்ணம் முதல் பாதி எடுக்கப்பட்டிருந்தது.
சினிமா என்பது கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்-ஒளிப்பதிவு-நடிப்பு-இசை என பல விஷயங்களின் சங்கமம். ஆனால் இங்கே புதிதாக ஒரு கதையையோ, கதைச்சூழலையோ எடுத்துக்கொண்டாலே போதும். உலக சினிமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். சேது-நந்தாவில் பாலா வாங்கிய நடிப்பிற்கும், பரதேசியில் பாலா வாங்கிய நடிப்பிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். பிதா மகனில் ஆரம்பித்த பித்து, பரதேசியில் முற்றி நிற்கிறது. பாலாவை உசுப்பேற்றியே, உண்மையை உணர விடாமல் செய்து, ஊர்வலம் போன அம்மண ராஜா போல் ஆக்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். 

சேதுவில் வந்த ஏர்வாடி காட்சியில்கூட ஒரு நேர்த்தி இருக்கும், அந்த துணைநடிகர்களின் நடிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கும். இங்கே ஹீரோ-ஹீரோயின் கூட அந்த துணை நடிகர்களைவிட மோசமாக நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதைச்சூழலும், கதையும், கிளைமாக்ஸும் மட்டுமே படத்தில் உருப்படி. மற்றபடி, இந்தப் படம் ஒரு குப்பை தான். அதனாலேயே நம்மை அதிகம் ஏமாற்றிய பாலாவின் இந்தப் படம், காவியம் # 1 ஆகிறது.

டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!

மேலும் வாசிக்க... "2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.