Tuesday, December 10, 2013

ஹன்சிகா..என் இண்டர்வியூ...ரிசல்ட் என்னாச்ச்சூ?

நான் டெல்லில வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ, எங்க எம்.டி, ஆபீஸ் மத்தில வந்து நின்னுக்கிட்டு எல்லாரும் வாங்கோன்னு கூப்பிட்டாரு. வழக்கமா குலோப் ஜாமூன், ரசகுல்லான்னு ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு, அப்படிக் கூப்பிட்டு ஏதாவது நல்ல செய்தி சொல்வாரு. இன்னைக்கு என்ன நல்ல செய்திங்கறதைவிட, இன்னைக்கு என்ன ஸ்வீட்டா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டே போய் நின்னேன். ‘கண்ணுகளா..கம்பெனிக்கு புரோஜெக்ட்டே இல்லை. அதனால தற்காலிகமா கம்பெனியை பூட்டுறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். அடுத்த மாசத்துல இருந்து யாரும் ஆபீஸ்க்கு வர வேண்டாம். சம்பளமும் கிடையாது...ஆல் தி பெஸ்ட்’ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாரு. 

நம்ம ஹன்சிகாவும் சிம்புவைப் பார்த்துச்சு. அவரு வழக்கம்போல பத்த வச்சாரு, இங்கயும் பத்திக்கிச்சு. உடனே ட்வீட்டர்ல ‘இஹி..இஹி..நான் சிம்புவை லவ் பண்றேன்’ன்னு சொல்லிடுச்சு ஹன்சி. ஏன்யா, கெட்ட செய்தியைச் சொல்றவங்க மெதுவா ‘நிலைமை சரியில்லை...நிலைமை மோசமாகிக்கிட்டே இருக்கு..மோசம் ஆகுது...நாசமாப் போச்சு’-ன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா சொன்னாத்தானே நம்மால அதிர்ச்சியைத் தாங்க முடியும்? கெட்ட செய்தியைச் சொல்றதுல என்னய்யா அவசரம் உங்களுக்கு?

இப்போ நாலு மாசம் முன்னாடி ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன். ரொம்ப பிடிச்சமாதிரி வேலை. அதனால எப்படியும் செலக்ட் ஆகியிரணும்னு முக்கி முக்கி பிரிபேர் பண்ணிட்டுப் போனேன். உள்ளே போனா 5 பேரு. கதறக் கதற அடிச்சாங்க. பல வருசமா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி ஒரு விஷயம் கத்துக்கிட்டேன். அடி வாங்காம தப்பிக்கிறவனுக்கு மட்டுமில்ல, அடி விழுந்தாலும் அசால்ட்டா அவ்ளோ தானான்னு கேட்கிறவனுக்கும் வேலை கன்ஃபார்ம். அதனால நானும் அசராம வாங்கிக்கிட்டேன். ரோசிச்சுச் சொல்லுதோம், போய்ட்டு வான்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நாலு மாசமா யோசிக்கிறாங்க. அந்த நல்ல செய்தியைக் காணோம். கேட்டா ‘அண்டர் பிராசசஸ்”.
இடையில நண்பர் ஒருத்தரு என் சிவியைக் கேட்டாரு. அந்த வேலை எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, அங்க போனா வேலை செய்யணும்..மை காட்..முடியவே முடியாதுன்னேன். ‘இல்லை மச்சி, சும்மா உன் சிவியைக் கொடு..கிளையண்ட் தொல்லை தாங்கலை’ன்னாரு. சரிய்யா, இந்தான்னு கொடுத்துட்டேன். போன வாரம் ஃபோன் பண்ணி, ‘நாளைக்கு இண்டர்வியூ..நீ போகலேன்னா பிரச்சினை ஆயிடும். சும்மா போய்ட்டு வா’ன்னு சொல்லிட்டாரு.

‘என்னய்யா இது வம்பாப் போச்சு..சரி, போறேன். ஆனா எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். எங்கயிருந்துய்யா பிடிச்ச இந்த ஆளைன்னு உன்னைத்தான் திட்டுவாங்க’ன்னேன். அவரு அதுக்கெல்லாம் ரெடி. சரின்னு போனேன்.

வழக்கமா 3-5 பேரு உட்கார்ந்து கும்முவாங்க. இத்தனை வருசமா வாங்குன கும்முக்கு இன்னைக்கு பழி வாங்கிட வேண்டியது தான்னு உள்ளே போனா, ஒரே ஒரு ஆளு. அடப்பாவமே..ன்னுட்டு உட்கார்ந்தேன். வழக்கமா ஆரம்பிச்சு டெக்னிகல்ஸுக்குள்ள வந்தாரு. 'வாய்யா, வா..இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துட வேண்டியது தான்’ன்னு முடிவு பண்ணேன்.
அவர் : ஸ்டீம் பைப்பிங்ல ஒர்க் பண்ணியிருக்கயா?

நான்: ஓ..பண்ணியிருக்கனே.

-- வெரிகுட்..அதைப் பத்திச் சொல்லு.

-- அது ஒர்க் பண்ணி நாலஞ்சு வருசம் ஆச்சு..ஞாபகம் இல்லை.

-- ஓ..பரவாயில்லை..இப்போ ஒரு பைப்பு இப்படிப் போகுதுன்னு வச்சிக்கோ. இதுக்கு சப்போர்ட் எப்படிக் கொடுப்பே?

-- தெரியாது சார்.

-- அப்படியா..இது ஒன்னும் கஷ்டம் இல்லியே..சரி பரவாயில்லை..நாங்க என்ன புராஜெக்ட்டுக்கு இண்டர்வியூ பண்றோம்னு தெரியுமா?

--தெரியாது.

-- ஓகே..*** புராஜெக்ட்டுக்கு எடுக்கிறோம்.

-- ஓ..

-- அந்த புராஜக்ட்டுல ஒர்க் பண்ணியிருக்கயா?

-- கிடையவே கிடையாது.

-- ம்..அப்புறம் எப்படி நீ இந்த பொசிசனுக்கு சூட் ஆவே?

-- அதைத் தான் சார் நானும் யோசிச்சேன்..நீங்க கேட்டுட்டீங்க.

-- வெரிகுட்.(என்னாது?).ஓகே, தியரியாவது படிச்சிருப்பீங்க இல்லியா?

-- சார், எங்க ஊர் காலேஜ் சிலபஸ்ல பைப்பிங்கே கிடையாது. அதெல்லாம் நான் படிக்கவே இல்லை.

-- யு ஆர் வெரி ஓப்பன் டைப். (கிழிஞ்சது!)..நோ பிராப்ளம்..அது ஈஸி தான்..கத்துக்கலாம்.

-- ஓஹோ.

-ஓகே, யூ ஹேவ் டன் அ குட் ஜாப். (யோவ், வாழ்க்கைல நீரு குட் ஜாப்பையே பார்த்ததில்லையா?)..நீங்க போகலாம்.

-- ரைட்டு..தேங்க்ஸு..பார்ப்போம்..பை.
ரூமுக்கு வந்து லேப்டாப்ல ரிலாக்ஸா நியூஸ் பார்க்க ஆரம்பிச்சேன். கொஞ்சநாளாவே ஹன்சிகா-சிம்பு பிரிஞ்சுட்டாங்கன்னு கிசுகிசு. அதை யாராவது கன்ஃபார்ம் பண்ண மாட்டாங்களான்னு டெய்லி நியூஸ் பார்க்கிறேன். ம்ஹூம்..தமிழ்ஸ்.காம், தமிஸ்ஸ்.காம், தமிழ்ஸ்ஸ்ஸ்ஸ்.காம்னு இத்தனை வெப்சைட்டு இருந்து என்ன பிரயோசனம்? அன்னிக்கு ஒரு நியூஸ். எல்லாரும் ஹன்சிகிட்ட ட்விட்டர்ல ‘சிம்பு மேட்டர் என்னாச்சு?’ன்னு கேட்கிறாங்கன்னு ஹன்சி கோவிச்சுக்கிட்டு ட்விட்டர் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணிடுச்சாம். 

என்னய்யா நியூஸ் இது? கட் ஆகிடுச்சுன்னு சொல்றதுல என்னய்யா உங்களுக்கு கஷ்டம். னு யோசிக்கும்போதே நண்பர்கிட்ட இருந்து போன். ‘என்னய்யா?’ன்னேன். ‘மச்சி..திட்டக்கூடாது. நீ இண்டர்வியூல செலக்ட் ஆகிட்ட..உன்கிட்ட சொல்லச்சொன்னாரு அந்த நல்லவரு’.அடச்சண்டாளங்களான்னு நினைக்கும்போதே போன் கட் ஆகிடுச்சு. என்ன உலகம்யா இது? ஒரு கெட்ட செய்தின்னா உடனே சொல்றாங்க..நல்ல செய்தின்னா வாயைவே திறக்க மாட்டேங்கிறாங்க.
நான் என்ன பெருசா கேட்குறேன்? ஹன்சிகா-சிம்பு லவ் டமால்..ஆஃபர் லெட்டர் ரெடி, வாங்கோ-ன்னு சொல்லக்கூடாதா? சரி, லேட் ஆகுறதால நல்ல செய்தி தான்னு நம்பிக்கிட்டிருக்கேன். முருகா, நீ தான் ரெண்டு மேட்டரையும் சால்வ் பண்ணி, என் வாழ்க்கைலயும் ஹன்சி வாழ்க்கைலயும் ஒளியேத்தணும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

 1. ஓஹோ!என்னடா புள்ளையார் பக்தர்,முருகரக் கூப்புடுராறேன்னு ஒரே கன்பியூஷன்(கரீக்டா?).அப்புறம் தான்,அட மர மண்டையே(நாந்தேன்),இது செகண்ட் இன்னிங்க்'ஸ் இல்ல? ன்னு உறைச்சுது!(ஒண்ணும் தெரியாத பாப்பா கண்னால போட்டிச்சாம்,தாப்பா!)

  ReplyDelete
 2. @Subramaniam Yogarasa செகண்ட் இன்னிங்ஸா..அடேங்கப்பா, டபுள் மீனிங்கால்ல இருக்கு!

  ReplyDelete
 3. ஹன்சி சிம்பு பிரியிறதுல இந்தப்புள்ளைக்கு எம்புட்டு சந்தோசம்...

  ReplyDelete
 4. சே. குமார் said... ஹன்சி சிம்பு பிரியிறதுல இந்தப்புள்ளைக்கு எம்புட்டு சந்தோசம்.../////என்னது?ஹன்சி-சிம்பு பிரிஞ்சிட்டாங்களா?சொல்லவேயில்ல?ஒரு அப்பிளிக்கேஷன் போட்டு வச்சுடுவோம்,ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 5. மிகவும் முக்கியம் இது தேவையா ஐயா சாமி??? பாவம் அந்தச்சின்னஞ்சிறுசுகள் எத்தனை கனவு காணுங்கள் கொஞ்சம் பிரியா விடுங்க !கான்சிஹா பாட்டியை:)) (குண்டுப்பூசனி போய்த்தொலையட்டும்)

  ReplyDelete
 6. வேலை முக்கியம் அது வந்தாள் முருகனுக்கு அரோகரா அரோகரா.....!

  ReplyDelete
 7. ம்ஹூம்..தமிழ்ஸ்.காம், தமிஸ்ஸ்.காம், தமிழ்ஸ்ஸ்ஸ்ஸ்.காம்னு இத்தனை வெப்சைட்டு இருந்து//எனக்கு இது இன்றுதான் தெரியும் ஐயா!:))

  ReplyDelete
 8. ஹன்சிகா வுக்கு பிரியுதோ இல்லையோ உமக்கு நல்லா பிரியுதுய்யா!! ;-)

  ReplyDelete
 9. ரெண்டு கதையையும் இணைத்த விதம் ரொம்ப அருமைண்ணே.. 4 பாக்யராஜ், 5 மணிரத்னம், அப்புறம் 2 தெலுங்கு கிரிஷ் கலந்த திரைக்கதையாசிரியர் அண்ணே நீங்க.. ஆமா, நீங்க ஏன் "பிரபுதேவா" மாதிரி ஒரு சினிமா டைரக்டர் வேலைக்கு ஆப்ளிகேஷன் போடகூடாதுங்குறேன்?
  ரெண்டு பேர் பிரச்சினையும் தீர்ந்த மாதிரி இருக்கும்!

  ReplyDelete
 10. //சே. குமார்said...
  ஹன்சி சிம்பு பிரியிறதுல இந்தப்புள்ளைக்கு எம்புட்டு சந்தோசம்...// நான் சந்தோசப்படாம வேற யாருய்யா சந்தோசப்படுவாங்க..

  ReplyDelete
 11. //Subramaniam Yogarasa said...
  என்னது?ஹன்சி-சிம்பு பிரிஞ்சிட்டாங்களா?சொல்லவேயில்ல?ஒரு அப்பிளிக்கேஷன் போட்டு வச்சுடுவோம்,ஹி!ஹி!!ஹீ!!!// நமக்கு எதிரி வெளில இல்லை.

  ReplyDelete
 12. //தனிமரம்said...
  (குண்டுப்பூசனி போய்த்தொலையட்டும்) //

  ஆ...என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்..நேசரே, ஐரோப்பா நமீதா மன்ற பொறுப்பாளர் பேசும் பேச்சா இது?

  ReplyDelete
 13. //கோவை ஆவிsaid...
  ஹன்சிகா வுக்கு பிரியுதோ இல்லையோ உமக்கு நல்லா பிரியுதுய்யா!! ;-)//

  யோவ், டீசன்ட்டா பேசும்யா.

  ReplyDelete
 14. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  4 பாக்யராஜ், 5 மணிரத்னம், அப்புறம் 2 தெலுங்கு கிரிஷ் கலந்த திரைக்கதையாசிரியர் அண்ணே நீங்க.. //


  உஸ்ஸ்..உசுப்பேத்தி உசுப்பேத்தியே.............!

  //நீங்க ஏன் "பிரபுதேவா" மாதிரி ஒரு சினிமா டைரக்டர் வேலைக்கு ஆப்ளிகேஷன் போடகூடாதுங்குறேன்?
  ரெண்டு பேர் பிரச்சினையும் தீர்ந்த மாதிரி இருக்கும்! //

  ஆமாம்யா..நல்ல ஐடியா..ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

  ReplyDelete
 15. இப்போதைக்கு ஹன்சி 'ப்ரீயா 'இருக்கிறதால மீண்டும் ஹன்சி ரசிகர்மன்றத்தை ஆரம்பிக்கும்படி தலைக்கு பரிந்துரை செய்கிறேன்....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.