பல வருடங்களுக்கு முன் நான் ஒரு தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டு பொறியாளனாக வேலை பார்த்த நேரம். திடீரென்று உற்பத்திப் பொருட்கள் அதிகளவு ரிஜெக்ட் ஆகத்தொடங்கின. அதனால் ஏற்பட்ட நஷ்டமும் லட்சங்களைத் தாண்டியது. அது எதனால் ஏற்படுகிறதென கண்டுபிடித்து நிறுத்தும் பொறுப்பை என் மேனேஜர் என் தலையில் போட்டார்.
பொதுவாக பொறியியலில் நடக்கும் தவறுகளுக்கு நான்கு Mகள் தான் காரணமாக அமையும். அவை Man, Machine, Method, Material. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொன்றாக்க் கண்காணித்ததில் Material தான் இவ்வளவுக்கும் காரணம் எனக் கண்டுகொண்டேன்.
ஃபெர்ரோசிலிக்கான் (Fe-Si) என்ற மெட்டீரியல் கடந்த சில மாதங்களாக புது சப்ளையரிடமிருந்து வாங்குவதையும் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ போன்று எந்த விதமான விதிமுறைகளும் பின்பற்றப்படாததையும் கண்டுபிடித்தேன். பழைய சப்ளையரின் Fe-Siஐ மீண்டும் உபயோகப் படுத்திப் பார்த்து என் சந்தேகத்தை உறுதிப்படுத்தினேன்.
அதற்கான முழுக்காரணமும் என் மேனேஜர்தான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரிந்த்து. எனவே கோபத்துடன் அவரது அறைக்குள் நுழைந்து என் ரிப்போர்ட்ஸைக் காட்டினேன்.
“இதை நீங்கள் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்” என்றேன்.
அவரோ கூலாக “ தம்பி..திருவள்ளுவர்.. திருவள்ளுவர்னு ஒருத்தர் முன்னாடி இருந்தார். தெரியுமா?” என்றார்.
“தெரியும்”
“அவர் சொல்லியிருக்கார்:
சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”(664) என்றார் என் மேனேஜர்.
தன் தவறுக்கு திருக்குறளைத் துணைக்கு இழுக்கவும் என் கோபம் கூடியது.
“அதே திருவள்ளுவர்தான் சொல்லியிருக்கார் :
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(517)
உங்களை வேலைக்கு எடுக்கும்போதே இந்த வேலையை நீங்க சரியா செய்வீங்களான்னு ஆராய்ந்து எடுத்திருக்கணும். அப்படிச் செய்யாதது தான் நம்ம GM பண்ண தப்பு “என்றேன்.
அப்புறம்..என்னாச்சுன்னா..
அந்த வருசம் பெர்மனெண்ட் ஆகவேண்டிய நான் வேலை இழந்து வீட்டுக்குப் போனேன். அப்புறம்தான் எனக்கு இந்த திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(127)
டிஸ்கி : இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!
டிஸ்கி : இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!



