Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Friday, August 5, 2011

முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)


டிஸ்கி : சாரி மக்கா..கொஞ்சம் பிஸி..அதனால ஒரு மீள் பதிவு..வெளில கிளம்புறேன்..யாராவது திரட்டிகள்ல இணைச்சுடுங்கப்பா.

ந்த முறை போட்டி கடுமைதான். 

மூச்சு வாங்கியதால் நீச்சலின் வேகத்தைக் குறைத்தேன். சுற்றிலும் பார்த்தேன். 

இன்னும் சிலர் தான் எனக்கு முன் இருந்தனர். எப்படியும் இந்த முறை ஜெயித்துவிடவேண்டும். இல்லையென்றால், நினைக்கவே கஷ்டமாக இருந்தது. பல கொடுமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.

‘டேய் நாயே, ஓரமாகப் போக முடியாதா” என்றொரு குரல் கேட்டது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் நீந்திக்கொண்டிருந்தாள்.

“என்னை ஏற்கனவே தெரியுமா உனக்கு?” என்றேன்.

இல்லையெனத் தலையசைத்தவாறே “ ஏன் கேட்கிறே?” என்றாள்.

“நீ பேசியவிதம் என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அதனால்தான்” என்றேன்.

“கண்டார ஓளி..உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” எனக் கூறியபடியே என் அம்மாவின் வாயில் மிதித்தேன். உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

“அய்யய்யோ..கொல்றானே” என்று அலறினாள் அம்மா. வழக்கம்போல் பக்கத்துவீட்டு மாமா ஓடி வந்தார்.

“விடுப்பா..குடிச்சாலே உனக்கு புத்தி கெட்டுப் போகுது..எந்திரிம்மா. நீயும் கொஞ்சம் வாயைக் குறைக்கணும் தாயி” என இருபக்கமும் சமாதானப் படுத்துவதில் இறங்கினார். 

இது வழக்கமான நிகழ்வு என்பதால் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.

“அப்புறம்?” என நீந்தியவாறே கேட்டாள் அவள். “கொஞ்ச நாளில் அம்மாவை விட்டுவிட்டு, வேறு ஊருக்குப் போய்விட்டேன்”

“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்” என்றாள்.

“அப்படி ஒரு எண்ணமே இல்லை” என்றேன்.

“அப்படிச் சொல்லாதே. நீ ஏன் இந்தப் போட்டியில் இறங்கினாய். இது உனக்குச் சரியான இடமல்ல. இதில் நீ ஜெயித்தால் உடனே தாயில்லாப் பிள்ளை ஆவாய். தெரியாதா?” என்றாள்.

“தெரியும்..செத்து ஒழியட்டும். நிம்மதி.. பெண்கள் இல்லாத வாழ்க்கையை நோக்கியே என் பயணம் போகிறது. பெண்கள் இருந்த இடங்களில் மட்டுமே நான் தவறு செய்திருக்கிறேன். பெண்களிடம் எப்போதும் நான் கருணையுடன் நடந்துகொண்டதில்லை, இப்போதும்” என்று சொல்லியவாறே அவளின் இடுப்பில் எட்டி உதைத்தேன்.

‘வீல்’ என அலறியபடியே மூழ்கினாள்.

இந்தப் பெண்களால் எத்தனை தவறுகள்..அதனால் எவ்வளவு வலி..தூங்க  விடாமல் துரத்தும் நினைவுகள்..அப்பப்பா..நகக் கணுவில் குத்தியிருக்கும் மரத் துணுக்கு போல பழைய நினைவுகள் என்னைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றன, அதை மறப்பதற்கே இந்தப் போட்டியில் குதித்தேன்.

எல்லையை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். திரும்பிப்பார்த்தேன். வெகுதொலைவில்தான் சிலர் களைப்புடன் வந்துகொண்டிருந்தனர். 

முன்னால் பார்த்தேன். ஒரே ஒரு ஆள். அவன் இடுப்பையும் ஒடித்தால், வெற்றிதான். சர சர வென அந்த ஆளை நெருங்கினேன். அருகில் போனதும் அது ஒரு பெண் எனப் புரிந்தது. கோபத்துடன் நெருங்கினேன்.

எல்லைக்கோட்டின் மிக அருகில் இருந்தோம். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவுடன் இருவரும் ஒருசேர அதிர்ந்தோம்.

“கலைக்கிறதுன்னா சீக்கிரம் சொல்லுங்க..ஏற்கனவே ரெண்டு மாசம் முடியப்போகுது” டாக்டர் அக்கறையுடனும் கடுப்புடனும் சொன்னார்.

“யோசிச்சுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அவளுடன் வெளியே வந்தேன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு..எதுக்குக் கலைக்கணும்.நாம எங்காவது ஓடிப்போயிடலாம். என் வீட்டில் ஏற்கனவே ஒத்துக்க மாட்டாங்க. இப்போ கர்ப்பம்னு வேற சொன்னா..அவ்வளவு தான்.” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே நின்றிருந்தேன்.

“இன்னைக்கு நைட் கொஞ்சம் துணிமணியோட வர்றேன். எங்காவது போய்ப் பிழைச்சுக்கலாம்” என்றாள்.

“சரி, ஆனால் நைட் வேண்டாம். நாளைக்குக் காலையில் வெறும் கையோட வா. அப்போதான் உன் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராது. பஸ் ஸ்டாண்டில் இருக்கிற லாலாக் கடை முன்னாடி காலையில் 9 மணிக்கு வந்து நில். நாம் மெட்ராஸ் போயிடலாம்” என்றேன்.

அவளுக்கு முகமெல்லாம் சிரிப்பு பொங்கியது. சந்தோசத்துடன் கிளம்பினாள். 

‘இனியும் இங்கு இருந்தால் சரிப்படாது’ என்பதால் அன்று இரவே நான் மட்டும் ஊரைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

அதன்பின் இப்போதுதான் அவளைப் பார்க்கிறேன். ’இவள் எப்படி இங்கே? அதன்பின் என்ன நடந்தது, அந்தக் குழந்தை என்ன ஆனது? என நான் யோசிக்கும்போதே அவள் திடீரென பின்னோக்கி நீந்த ஆரம்பித்தாள்.

”நில்” எனக் கத்தினேன்.

என்னைப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை. நான் நீந்துவதை நிறுத்தினேன். ஆனாலும் நீரோட்டம் என்னை எல்லைக் கோட்டில் கொண்டு சேர்த்தது.

நான் திரும்பி அவளிடம் போக வேண்டுமென விரும்பினேன். 

ஆனால் வந்த வேகத்தில் அண்ட அணுவின் மீது மோதினேன். 

அது என்னைச் சூழ்ந்துகொண்டு என் பழைய நினைவுகளை அழிக்க ஆரம்பித்தது. “வேண்டாம்...வேண்டாம்...என் குழந்தை..என் குழந்தை.”என நான் கதறக் கதற என்னைச் சித்திரவதை செய்த நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

கருப்பையில் பேரமைதி சூழ்ந்தது. விந்துவாக இருந்த நான் கரு ஆனேன்..

மேலும் வாசிக்க... "முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)"